அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
பிரதமர் இல்லம், 80 கார்கள், 524 ஊழியர்கள் வேண்டாம்: ஆடம்பரங்களை மறுக்கும் இம்ரான் கான் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராகப் பதவி ஏற்றுள்ள இம்ரான் கான் அந்நாட்டில் பிரதமருக்காக ஒதுக்கப்படும் ஆடம்பரமான இல்லத்தில் தங்க மறுத்திவிட்டார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் 116 இடங்களைக் கைப்பற்றிய பிடிஐ கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவானது. நவாஸ் ஷெரீப் கட்சியின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 96 இடங்களைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வென்றது. இதையடுத்து 342 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 172 உறுப்பினர்கள் …
-
- 0 replies
- 497 views
-
-
பட மூலாதாரம்,TWITTER/NARENDRA MODI கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிரோஷிமா.... 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி இரண்டாம் உலகப்போரின் இறுதியில் அமெரிக்காவால் அணுகுண்டு வீச்சுக்கு இலக்கான நகரம். அந்தப் போரில் எதிரிகளாக இருந்த அமெரிக்காவும் ஜப்பானும் தற்போது உலக அரங்கில் கூட்டாளிகளாக வலம் வருகின்றன. அவற்றுடன், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகியவை ஓரணியில் இணைந்த குவாட் அமைப்பின் மாநாட்டால் அதே ஹிரோஷிமா நகரில் மீண்டும் உற்று நோக்கப்படுகிறது. குவாட் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை, சீனா மீது பெயரை மட்டும் குறிப்பிடாமல் கிட்டத்தட்ட நே…
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
01 SEP, 2023 | 12:19 PM புதுடெல்லி: அதானி குழும நிறுவன பங்குகளில் குடும்பத்தினரே ரகசியமாக முதலீடு செய்ததாக ஓசிசிஆர்பி அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. இதை அதானி குழுமம் மறுத்துள்ளது. கவுதம் அதானி தலைமையிலான அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில ஆண்டுகளாக மளமவென உயர்ந்தன. இதன்மூலம் கவுதம் அதானி உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3-ம் இடத்துக்கு முன்னேறினார். அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமம், தனது நிறுவனங்களின் பங்கு விலையை செயற்கையாக உயர்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. நிறுவன கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்துள்ளதாகவு…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, உலகளாவிய பட்டினி குறியீட்டு அறிக்கை குறித்து ஸ்மிதி இரானி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 22 அக்டோபர் 2023, 06:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகளாவிய பட்டினி குறியீட்டின் அண்மைய அறிக்கை குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அக்டோபர் 12ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் பட்டினியின் நிலைமை தீவிரமாக உள்ளது. 125 நாடுகளின் பட்டியலில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 107வது இடத்தில் இருந்தது. வெள்ளிக்கிழமையன்று,…
-
- 0 replies
- 287 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் க்ரிகரி பதவி, பிபிசி செய்திகள் 12 டிசம்பர் 2023 பிபிசி தனது இந்தியச் சேவைகளை மறுசீரமைப்பு செய்கிறது. இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளுக்கு இணங்கும் வகையில் பிபிசியின் இந்த மறுசீரமைப்பு அமையும். இதன்படி, பிபிசியின் நான்கு ஊழியர்கள் இந்நிறுவனத்திலிருந்து வெளியேறி, பிபிசியின் ஆறு இந்திய மொழிச் சேவைகளைக் கொண்ட, ‘கலெக்டிவ் நியூஸ்ரூம்’ என்ற இந்திய நிறுவனத்தை உருவாக்குவார்கள். பிபிசி இந்தியாவின் ஆங்கில மொழிச் செய்தி சேகரிப்பு நடவடிக்கைகள் பிபிசியிடமே இருக்கும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதுதில்லியில் இருக்கும் பிபிச…
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
திப்பு சுல்தான்: கொல்லப்பட்ட இறுதி நாளில் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டதன் முழு பின்னணி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்டு, ஆங்கிலேயர்களுடனான போரில் வீழ்ச்சியடைந்த திப்பு சுல்தான், போர்க்களத்தில் மரணமடைந்த நாள் இன்று. திப்பு சுல்தானின் கடைசித் தருணத்தில் என்ன நடந்தது? பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மைசூர் நாட்டை ஆட்சிசெய்த திப்பு சுல்தான், தான் ஆட்சியில் இருந்த 17 ஆண்டுகளிலும் தொடர்ந்து ஆங்கிலப் படைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1799இல் நடந்த நான்காவ…
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
இந்த ஊரடங்கு பற்றி பொதுச் சுகாதார வல்லுநர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், ஒன்று மட்டும் தெளிவு: இந்த ஊரடங்கானது பணக்காரர்களிடையேயும் நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் மட்டுமே சாத்தியம். அவர்களுக்குத்தான் உத்தரவாதமான வருவாய், இடைவெளி விடுவதற்கு ஏற்ற வீடுகள், மருத்துவக் காப்பீடு, தண்ணீர் வசதி போன்றவையெல்லாம் இருக்கின்றன. மேற்கூறிய ஏதும் அற்றவர்களைப் பசி, தொற்று ஆகியவற்றுக்கு ஆளாகும்படி தூக்கியெறியும் ஒரு உத்தியைத் தேர்ந்தெடுத்ததை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்? ஊரடங்குக்கு உத்தரவிடும்போது கோடிக்கணக்கான முறைசாராப் பணியாளர்களையும் நிராதரவான மக்களையும் அரசு நினைத்துப் பார்த்ததா? இவர்களில் பலர் பல்வேறு இடங்களுக்குச் சுற்றிச் சுற்றிப் புலம்பெயர்பவர்கள். இந…
-
- 0 replies
- 488 views
-
-
இந்திய குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா தனியுரிமைக்கு எதிரானதா? ஓர் அலசல் ஜோயா மடீன் மற்றும் மெரில் செபாஸ்டியன் பிபிசி நியூஸ், டெல்லி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குற்றம்சாட்டப்பட்டோரின் பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்ய காவல்துறைக்கு இந்தச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது இந்தியாவில் கொண்டு வரப்படும் ஒரு புதிய சட்டம், பயோமெட்ரிக் தரவைச் சேகரிக்க, சட்ட அமலாக்க துறைகளுக்கு பெரும் அதிகாரங்களை வழங்குகிறது - இது தனியுரிமை குறித்த கவலையை எழுப்பியுள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறை (அ…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
மாலைத்தீவில் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். மாலைத்தீவில் உள்ள இந்திய இராணுவ வீரர்ள் வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மாலைத்தீவில் இந்திய இராணுவ வீரர்கள் 70-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும் கடலோர ரோந்து பணிகளை மேற்கொள்ள டோர்னியர் ஹெலிகாப்டர் மற்றும் மருத்துவ வசதிக்காக துருவ் ஹெலிகாப்டர் ஆகியவற்றை மாலைத்தீவுக்கு இந்தியா வழங்கி உள்ளது. இராணுவம் வெளியேறுவது தொடர்பாக இரு நாடுகள் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மாலைத்தீவில் உள்ள இந்திய இராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. மார்ச் 10 ஆம் திகதிக்குள் ஒரு விமானப்படைத் தளத்த…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
வீதியில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – 5 பேர் உயிரிழப்பு. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நாட்டிகை பகுதியில் நெடுஞ்சாலைசாலை பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. விதி புணரமைப்பு பணி நடைபெறும் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், வீதியோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்த பகுதியில் தமிழகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த லொறி, தடுப்புகளை உடைத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறி விபத்தை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ம…
-
- 0 replies
- 216 views
-
-
ஆஸி. பிரதமருடன் மோடி இன்று பேச்சு: தமிழக சிலைகளை ஒப்படைக்க வாய்ப்பு புதுடெல்லி கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் சோக்ட் மோரிஸன்இந்திய பயணம் மேற்கொள்ள இருந்தார். கரோனா வைரஸ் பரவலால் அவரது வருகை ரத்தானது. இதையடுத்து, மோரிஸன் - பிரதமர் மோடி இருவரும் இன்று காணொலியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது, மரியாதை நிமித்தமாக இந்தியாவில் திருடப்பட்டு தற்போது ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பில் உள்ள பழங்கால சிலைகளை ஒப்படைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றில் வெளிர் சிகப்பு நிற மணற்கல்லால் ஆன நாகராஜா சிலையும் உள்ளது. இது, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளை 6 முதல் 8-ம் நூற்றாண்டு வரை ஆண்ட பிரத்திஹாரா வம்சத்தை சேர்ந்ததாகக…
-
- 0 replies
- 235 views
-
-
அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுரா ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுராவில் ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு ஒன்று உள்ளூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது. பதிவு: செப்டம்பர் 26, 2020 15:42 PM மதுரா, உத்தரபிரதேசம்: அயோத்தியின் ராமர் கோவிலுக்கான வரலாற்றுத் தீர்ப்பை இந்திய சுப்ரீம் கோர்ட் வழங்கிய ஒரு வருடம் கழித்து, மதுராவில் உள்ள கிருஷ்ண ஜன்மபூமியையும் "மீட்க" ஒரு புதிய வழக்கு இப்போது மதுரா சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. "நிலத்தின் ஒவ்வொரு அங்குலமும் ... ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் இந்து சமூகத்தின் பக்தர்களுக்கு புனிதமானது". வக்கீல…
-
- 0 replies
- 705 views
-
-
குஜராத் கலவர வழக்குகளின் சாட்சிகள் நிலை என்ன? "எங்களுக்கு பயமாக இருக்கிறது" ராக்ஸி காக்டேகர் சாரா பிபிசி நிருபர், அகமதாபாத் 28 ஆகஸ்ட் 2022, 01:24 GMT நரோதா பாட்டியா வழக்கில் சலீம் ஷேக் என்பவர் முக்கிய சாட்சி. அவரது சாட்சியத்தின் உதவியுடன், அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் அப்போதைய பாஜக எம்எல்ஏ மாயா கோட்னானிக்கும், மற்ற நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. அடையாள அணிவகுப்பில் நீதிமன்றத்தில் ஷேக், கோட்னானியை அடையாளம் காட்டினார். இந்த வழக்கில் முந்நூறுக்கும் மேற்பட்ட சாட்சிகள் இருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் சாட்சியங்கள் பத…
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
முலாயம் சிங் யாதவ் காலமானார் - பல அரசுகளை ஆக்கவும் அழிக்கவும் செய்த அரசியல் தலைவர் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. உடல்நலக் குறைவு காரணமாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் கடந்த சில நாட்களாகவே சிகிச்சை பெற்று வந்தார். 1989-1991, 1993-1995, 2003-2007 காலகட்டத்தில் உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்த அவர், 1996-1998ஆம் ஆண்டுகளில் தேவ …
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
144 தடை உத்தரவுடன் சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோயிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி உத்தரவிட்டது. குறித்த உத்தரவை பெண்கள் அமைப்புகள் சில வரவேற்றாலும், ஐய்யப்ப பக்தர்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகளும் எதிர்த்தன. ஐப்பசி வழிபாட்டுக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடை திறந்திருந்தபோது பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. இந் நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் அளவு நிலைமை மோசமானது. பதற்றம் நிலவியது. பெண் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல இளம்பெண்கள் ஐய்யப்பன் சன்னிதானத்…
-
- 0 replies
- 303 views
-
-
அமித் ஷா, பிரதமர் மோடியின் கோட்டை எனக் கூறப்படும் குஜராத்தில் இந்த முறையும் 26 மக்களவைத் தொகுதிகளையும் 2-வது முறையாகக் கைப்பற்றுகிறது பாஜக. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 26 இடங்களையும் பாஜக கைப்பற்றிய நிலையில், 2-வது முறையாகவும் 26 இடங்களையும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜகவும், காங்கிரஸ் கட்சிக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டும், அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை நோக்கியுள்ளது. காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவேடாவைக் காட்டிலும் 5 லட்சம் வாக்குகள் முன்னிலையுடன் உள்ளார். இதேபோல பாஜக வேட்பாளர் மன்சு…
-
- 0 replies
- 403 views
-
-
செங்கல்பட்டு: செங்கல்பட்டு டவுன் காவல் நிலையம் எதிரில், பல ஆண்டுகளாக காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. தற்போது, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், உழவர் சந்தை மற்றும் தூய கொலம்பா பள்ளி ஆகிய பகுதகிளில் சமூக இடைவெளியில் காய்கறி கடைகள் அமைக்க கலெக்டர் ஜான்லூயிஸ் உத்தரவிட்டார்.ஆனால், பள்ளி வளாகத்தில் மட்டும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போதிய இடவசதி இல்லாததால், அருகில் உள்ள வேணுகோபால் கிளப்பில் காய்கறி கடை இயக்கப்படுகிறது. அங்கு கொரோனா பற்றி அச்சமில்லாமல் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு காய்கறி வாங்கி செல்கிறார்கள். குறிப்பாக, வியாபாரிகளும், பொதுமக்களும், முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளி விடாமல் உள்ளனர்.அதேபோல், காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் இட நெருக்கடியாக இர…
-
- 0 replies
- 204 views
-
-
பைசர் தடுப்பூசியை சேமித்து வைப்பது சவாலாக இருக்கும் – மத்திய அரசு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அமெரிக்கா தயாரித்துள்ள பைசர் தடுப்பூசியை சேமித்து வைப்பது சவாலாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான தேசிய சிறப்பு குழுவின் தலைவராக ‘நிதி ஆயோக்’ அமைப்பின் உறுப்பினர் டொக்டர் வி.கே.பால் செயற்பட்டு வருகிறார். செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனம் தங்களது கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் பலன் அளித்துள்ளதாக கூறியுள்ளது. அதுபோல் மாடர்னா நிறுவனம் தங்களது தடுப்பூசி 94.5 சதவீதம் செயற்திறன் கொண்டது எனத் தெரிவித்துள்ளது. இவ்விரு தடுப…
-
- 0 replies
- 207 views
-
-
சீன எல்லையின் மலைப் பகுதிகளில் இலகு ரக பீரங்கி வாகனம், ட்ரோன்களை பயன்படுத்த இந்திய ராணுவம் நடவடிக்கை By RAJEEBAN 28 AUG, 2022 | 11:26 AM புதுடெல்லி: இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் தற்போது அச்சுறுத்தல் நிலவுகிறது. எதிர்காலத்தில் இந்த அச்சுறுத்தல் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. கிழக்கு லடாக் பகுதியில் டி-90 மற்றும் டி-72 ரக பீரங்கி வாகனங்களை இந்திய ராணுவம் கொண்டு சென்றுள்ளது. இவை ஒவ்வொன்றும் 40 முதல் 50 டன் எடை உள்ளன. சில பீரங்கி வாகனங்கள் கைலாஷ் மலைப் பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த பீரங்கி வாகனங்கள் குறிப்பாக சமவெளிப் பகுதிகள் மற்றும் பாலைவனப் பகுதிகளின் போர் நடவடிக்கைகளுக்காக தயாரிக்கப் பட்டவை. உயரமான மலைப் பகுதிகள…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 21 MAY, 2023 | 02:05 PM அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால் மிக்-21 ரக போர் விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. ராஜஸ்தானின் சூரத்கார் பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து, கடந்த 8-ஆம் தேதி பயிற்சி மேற்கொண்ட மிக்-21 ரக விமானம், ஒரு வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. எனினும் விமானி பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேறியதால் அவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். அதேநேரத்தில் விமானம் விழுந்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது பயன்பாட்டில் உள்ள சுமார் 50…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
சபரிமலையில் 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை விழாவுக்காக கோயில் நடை திறக்கப்படுகிறது. இதனைமுன்னிட்டு 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை செல்லும் பக்தா்கள் நவம்பர் 17 ஆம் திகதி மாலை அணிந்து விரதம் தொடங்கவுள்ளனா். சபரிமலை கோயிலில் கார்த்திகை முதல் திகதியில் இருந்து 41 நாள்களுக்கும் தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் இடம்பெறும். அதிகாலையில் நிர்மால்ய பூஜை, சந்தன, நெய் அபிஷேகம் லட்சார்ச்சனை, படிபூஜை உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும். மண்டல பூஜை டிசம்பர் 27 ஆம் திகதி நடைபெறும். மண்டல கால பூஜைக்கு லட்சக்கணக்கான பக்தர…
-
- 0 replies
- 337 views
-
-
பாகிஸ்தான் குண்டு வெடிப்பை 'இந்தியா ஆதரிக்கும் குழு நடத்தியது' - ஷெபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு பட மூலாதாரம், Getty Images 11 நவம்பர் 2025, 13:08 GMT புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 27 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்கொலை குண்டுதாரர் மாவட்ட நீதிமன்றத்தின் உள்ளே நுழையத் திட்டமிட்டதாகவும், ஆனால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை என்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறினார். "நீதிமன்றத்தில் மதியம் 12:39 மணிக்கு தற்கொலை தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதல் கடுமையான பாதிப்புகளை ஏற்பட…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
எல்லை பாதுகாப்பை வலுபடுத்த ரஃபேல் விமானங்களை களமிறக்குகிறது இந்தியா! எல்லைப் பகுதியை வலுப்படுத்தும் நோக்கில் ரஃபேல் போர் விமானங்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி 5 ரஃபேல் விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த விமானங்கள் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்தடையவுள்ளன. இதில் 3 விமானங்கள் இரு விமானிகளை கொண்டதாகவும், இரு விமானங்கள் ஒரு விமானியை கொண்டதாகவும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ரஃபேல் விமானங்கள் வானிலிருந்து தரை இலக்குகளையும் வான் இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டது. இந்தியா வர உள்ள விமானங்கள் 300 கிமீ தூரத்தில் தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவு…
-
- 0 replies
- 180 views
-
-
ஜம்மு காஷ்மீரில் 3 இடங்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்! ஜம்மு காஷ்மீரில் 3 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு- காஷ்மீர்- கரன்நகர் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனாலும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அதேபோன்று, படமலோ பகுதியிலும் நேற்று இரவு 8 மணியளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயம…
-
- 0 replies
- 185 views
-
-
ஸ்ரீகாந்த் பொல்லா: கண் பார்வை இழந்தாலும் ரூ. 480 கோடி மதிப்பு நிறுவனத்தின் சிஇஓ - யார் இவர்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கைக் கதை இந்தியில் சினிமாவாக தயாரிக்கப்பட உள்ளது. இந்த இளம் முதன்மைச் செயல் அதிகாரி 480 கோடி ரூபாய் (48 மில்லியன் பவுண்ட்) மதிப்புள்ள நிறுவனத்தை கட்டியெழுப்பியுள்ளார். ஸ்ரீகாந்துக்கு கண் தெரியாது என்பதால், பதின்ம வயதில் கணிதம் மற்றும் அறிவியல் படிப்பது சட்டவிரோதமானது என்று கூறப்பட்டது. அதை எதிர்த்து ஒரு மாநிலத்தின் மீது வழக்கு தொடுத்து, படித்துக் காட்டினார். ஸ்ரீகாந்த் ஆறு வயதாக இருக்கும் போது, கிராமப்புறத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு தினமும் பல கிலோ மீட…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-