அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று தேர்தல்! காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தி, அப்பதவியில் தொடர விரும்பாததால் தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. தேர்தலில், மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வாக்குகள் எதிர்வரும் 19ஆம் திகதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை. எனவே…
-
- 2 replies
- 230 views
- 1 follower
-
-
புதிய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம்! புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அவரது நியமனம் உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ஓய்வு பெற்றதை அடுத்து தேர்தல் ஆணையர் பதவி வெற்றிடமானது. தற்போது அந்த இடத்திற்கு அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரியில் பதவி வகிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1221412
-
- 0 replies
- 230 views
-
-
பட மூலாதாரம்,RAFALE படக்குறிப்பு, இந்தியா பிரான்சுடன் 26 ரஃபேல்-எம் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே பதவி, பிபிசி செய்தியாளர் 29 ஏப்ரல் 2025, 13:30 GMT இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் திங்கள்கிழமையன்று கையெழுத்திட்டன. இந்த விமானங்களின் மொத்த விலை சுமார் ரூ.64,000 கோடியாக இருக்கும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானங்களை இந்தியா பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷனிடமிருந்து வாங்குகிறது. இந்த ரஃபேல் விமானங்களை ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் நிறுத்தி பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியாவிற்கும், பாக…
-
-
- 3 replies
- 230 views
- 1 follower
-
-
தென்காசியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கை மீறி வெள்ளிக்கிழமை தொழுகை செய்ய முயன்ற 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளனர். தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் நேற்று (வெள்ளிக்கிழமை) அனுமதியின்றி ஏராளமானோர் தொழுகைக்காக கூடினர். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் நடுப்பேட்டையில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்றனர். பின்னர் ஐமாத் தலைவரை அழைத்து, அனைவரும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதால், அங்கு வந்திருந்த இஸ்லாமியர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கூட்டத்தை கலைக்கவும், தாக்கு…
-
- 0 replies
- 230 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நாம்தேவ் கட்கர் பதவி, பிபிசி மராத்தி 5 மே 2024 ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கில் தெலங்கானா காவல்துறை தாக்கல் செய்த இறுதி விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையின்படி, "ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை” என்றும் ”ரோஹித் வெமுலா ஒரு தலித் அல்ல” என்றும் கூறப்பட்டுள்ளது. தெலங்கானா காவல்துறை தாக்கல் செய்த இந்த விசாரணை அறிக்கையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் உள்ள 'ரோஹித் வெமுலா தலித் அல்ல', 'ரோஹித் தற்கொலை வழக்கில் யாரும் குற்றவாளிகள் அல்ல' என்ற முடிவுகள் அரசியல் களம் மற்றும…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை! முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியது. இதற்கான உத்தரவை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பிறப்பித்துள்ளார். சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேற்படி பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1221330
-
- 0 replies
- 229 views
-
-
தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் இறுதி சடங்கு இன்று! மறைந்த தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் இறுதி சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதன்படி இன்று காலை 9.15 மணியளிவில் பரிகேடியர் லக்வீந்தர் சிங் லிடரின் இறுதி சடங்கு கன்டோன்மென்டில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து டெல்லி கராஜ்மார்க்கில் உள்ள பிபின் ராவத்தின் இல்லத்தில் அவரது உடலும், மனைவி மதுலிகா ராவத்தின் உடலும் காலை 11 மணி முதல் 12.30 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றன. இதனையடுத்து மதியம் 12.30 மணி முதல் 1.30 மணிவரை இராணுவத்தினர் அஞ்சலி செலுத்தவுள்ளனர். அதன் பின் அலங்கிரிக்கப்பட்ட பீரங்கி வண்டியில் பிபின்ராவத்தின் உடல் டெல்லி கன்டோன்மென்டிற்கு கொண்டு செல்லப்பட்டு முழு இராணுவ மரிய…
-
- 0 replies
- 229 views
-
-
08 JUL, 2024 | 11:14 AM மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மிமீ அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 😎 காலை முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகாலை 1 மணி முதல் 7 மணி வரையிலான காலகட்டத்தில் 300 மில்லிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மும்பை தானே பகுதியில்…
-
- 1 reply
- 229 views
- 1 follower
-
-
உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இந்தியக் குடிமக்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவிப்பு போர் தீவிரமடைந்து வருவதால் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள மாணவர்கள் மற்றும் இந்தியக் குடிமக்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றஞ்சாட்டிய ரஷ்யா அந்தநாட்டின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தநிலையில், உக்ரைனில் நிலைமை மோசமடைந்து வருவதால், இந்திய குடிமக்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அத்தோடு, மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் கிடை…
-
- 1 reply
- 229 views
-
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! முப்படைகளின் தலைமைத் தளபதியை நியமிக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும், அஜித் தோவல் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளையும் ஏற்பதென இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இராணுவ விவகாரங்களுக்கான துறை அமைக்கப்பட்டு அதன் தலைவராகவும் தலைமைத் தளபதி செயற்படுவார் எனவும் அவர் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவார் எனவும் தெரியவந்துள்ளது. எனினும் முதலாவது தலைமைத் தளபதி யார் என அறிவிக்கப்படவில்லை. தற்போதைய இராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்…
-
- 0 replies
- 228 views
-
-
26 நர்சுகள், 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மும்பையிலுள்ள பிரபல மருத்துவமனை மூடப்பட்டு உள்ளது. பதிவு: ஏப்ரல் 06, 2020 16:10 PM மும்பை, நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே அதிக அளவாக மராட்டியத்தில் 781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 45 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், மும்பை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், மும்பையில் உள்ள பிரபல ஒக்கார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் 26 நர்சுகள், 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள…
-
- 0 replies
- 228 views
-
-
இந்திய 'உளவாளிகள்': பாகிஸ்தானில் வேவு பார்த்தவர் இன்று ரிக்ஷா தொழிலாளரி நியாஸ் ஃபரூக்கி பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்திய உளவாளி என்று தன்னை கூறிக்கொள்ளும் டேனியல் மசிஹ் இப்போது சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வாழ்க்கை நடத்துகிறார். தான் ஓர் இந்திய உளவாளி என்று டேனியல் மசிஹ் கூறுகிறார். பாகிஸ்தானில் உளவு வேலை பார்த்ததற்காக கைது செய்யப்பட்டு, பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளானபோதிலும், இந்திய அரசால் அவரது சேவைகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை, கூடவே அவரது சேவைகள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவும் இல்லை என்பது அவரது கூற்று. தான் எட்டு …
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
மத்திய பிரதேசத்தில் 16 அமைச்சர்கள் இராஜினாமா மத்திய பிரதேசத்தில் முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட 16 அமைச்சர்கள் இராஜினாமா செய்தனர். மத்திய பிரதேசத்தில் அரசியல் குழப்பம் உச்சத்தை எட்டியுள்ளது. முதல்வர் கமல்நாத்திற்கு எதிராக ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு பெற்ற 17 சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்ளூருக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் கமல்நாத் தனது இல்லத்தில் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் திக்விஜய்சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட 16 அமைச்சர்களும் இராஜினாமா செய்தனர். இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்…
-
- 0 replies
- 228 views
-
-
பாகிஸ்தானுக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் இந்திய வான் பரப்பிற்குள் நுழையத் தடை ! 01 May, 2025 | 08:46 AM பாகிஸ்தானுக்கு சொந்தமான மற்றும் பாகிஸ்தான் நிறுவனங்களால் இயக்கப்படும் அனைத்து விமானங்களும் தனது வான் பரப்பிற்குள் நுழைய இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய நடவடிக்கையாக பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வழியை மூடியது. பாகிஸ்தானில் பதிவுச…
-
- 2 replies
- 228 views
- 1 follower
-
-
இந்து ராஷ்டிரா: இந்தியா இந்து தேசமாக மாறுகிறதா? அதில் சிறுபான்மையினரின் நிலை என்ன? ஜுபைர் அஹ்மத் பிபிசி செய்தியாளர் 1 ஆகஸ்ட் 2022, 03:29 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு, கி.பி.712ஆம் ஆண்டில் நடந்த ஒரு கடுமையான போரில், பதின்பருவ முஸ்லிம் ஜெனரல் ஒருவர், அப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த சிந்தை கைப்பற்றினார். இழந்த பிரதேசம் சிறியது, ஆனால் பின்விளைவுகள் பெரிதாக இருந்தன. இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றில் இதுவொரு பெரிய திருப்புமுனை என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். அவரது…
-
- 1 reply
- 228 views
- 1 follower
-
-
ஒசாமா பின்லேடன் போன்றவர்கள் தான் பாகிஸ்தானின் ஹீரோக்கள் என, அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த ஃபர்ஹதுல்லா பாபர் என்ற அரசியல் பிரமுகர் முஷரபின் பேட்டி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேதி குறிப்பிடப்படாத அந்த வீடியோவில், காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானிற்கு வந்தவர்களை வரவேற்று, இந்திய ராணுவத்திற்கு எதிராக சண்டையிட அவர்களுக்கு பயிற்சி அளித்ததாக பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார். மேலும், ஒசாமா பின்லேடன் மற்றும் ஜலாலுதின் ஹக்கானி ஆகியோர் தான் பாகிஸ்தானின் ஹீரோக்கள் எனவும் முஷரப் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். https://www.polimernews.com/dnews/88736/ஒசாமா-பின்லேடன்-போன்றோர்தான்-பாகிஸ்தானின்ஹீரோக்கள்-…
-
- 0 replies
- 228 views
-
-
படக்குறிப்பு, மூத்த சுதந்திரப் போராட்ட வீரரும் முதுபெரும் இடதுசாரித் தலைவருமான என். சங்கரய்யா சென்னையில் இன்று காலமானார். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மூத்த சுதந்திரப் போராட்ட வீரரும் முதுபெரும் இடதுசாரித் தலைவருமான என். சங்கரய்யா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 102. என். சங்கரய்யா 102 வயதைத் தொட்டபோதிலும் ஆரோக்கியமாகவே இருந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திங்கட்கிழமையன்று ச…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
ஏவுகணை சோதனை: பாகிஸ்தானுக்கு பாராட்டு, இந்தியாவுக்கு சில கேள்விகள் - ஓர் அலசல் சஹர் பலோச் பிபிசி செய்தியாளர், இஸ்லாமாபாத் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "எந்தவொரு நாட்டின் வான் எல்லைக்குள் எது நுழைந்தாலும் அது தாக்குதலாகவே கருதப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏவுகணை போன்ற வடிவத்துடன் ஒரு பொருள் பக்கத்து நாட்டில் விழுந்தால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு விதிகளும் சட்டங்களும் கூறுகின்றன. பாகிஸ்தான் அப்படி செய்யாதது, புத்திசாலித்தனமான முடிவு மட்டுமின்றி ஒரு விவேகமான முடிவாகும்," என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். 2022ஆம் ஆண்டு மார…
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிலாவல் பூட்டோ, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கட்டுரை தகவல் எழுதியவர்,வினீத் கரே பதவி,பிபிசி செய்தியாளர், டெல்லி 2 மணி நேரங்களுக்கு முன்னர் அடுத்த மாதம் கோவாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஸர்தாரி இந்தியா வரவுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. எஸ்சிஓ என்பது பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பாகும். இது ஜூன் 2001இல் ஷாங்காயில் உருவாக்கப்…
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தல் - 155 பேர் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 155 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. #MadhyaPradeshElections #Congress போபால்: மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார். மத்தியப்பிரதேசத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நவம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ண…
-
- 0 replies
- 227 views
-
-
இராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நாளை ஆரம்பம்! அயோத்தியில் இராமர் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் நாளை (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தியில் தற்போதுள்ள இராமர் கோயில் பகுதியில் கடந்த மாதம் 11-ஆம் திகதியில் இருந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் ஜூன் 10-ஆம் திகதி தொடங்கவுள்ளதாக கோபால்தாஸின் செய்தித் தொடர்பாளர் மஹந்த் கமல் நாராயண் தாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ”இராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக சிவபெருமானுக்கு வழிபாடு நடத்தப்படவுள்ளது. சீதையை மீட்க இலங்கை செல்வதற்கு முன்னதாக சிவபெருமா…
-
- 0 replies
- 227 views
-
-
பிபின் ராவத், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள்! மின்னம்பலம்2022-01-26 குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 128 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்காக ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சேவைகளைப் புரிந்தவர்களுக்குப் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. 2022ஆம் ஆண்டுக்கு 128 பேருக்கு இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 227 views
-
-
சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகளின் தனிப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சி: போராட்டம் வெடித்தது 18 Sep, 2022 | 12:40 PM பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் சக மாணவிகளின் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சண்டிகர் பல்கலைக்கழத்தில் பயிலும் மாணவர்கள் மத்தியில், பெண்கள் குளிக்கும் வீடியோ உள்ளிட்ட வீடியோக்கள் வைரலாக பரவி வந்தன. இந்த வீடியோக்கள், சண்டிகர் பல்கலைக்கழத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் எடுக்கப்பட்டவை என்ற விவரம் வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த சம்பவத்தில் அங்கு ப…
-
- 1 reply
- 227 views
- 1 follower
-
-
உக்ரைன்-ரஷ்ய போர் : பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இந்தியர்கள்! கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் குழுவை பிணைக் கைதிகளாக உக்ரைன் படைகள் பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இராணுவ செய்தி தொடர்பாளர், ”இந்திய மாணவர்களின் பெரும் குழுவை உக்ரைன் இராணுவ அதிகாரிகள் கார்கிவ்வில் வலுக்கட்டாயமாக வைத்துள்ளனர். உண்மையில் அவர்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ரஷ்ய இராணுவத்தினர் தயாராக உள்ளன. ரஷ்ய பிரதேசத்தில் இருந்து தனது சொந்த இராணுவ போக்குவரத்து விமானங்கள் அல்லது இந்திய விமானங்கள் மூலம் அவர்களை …
-
- 0 replies
- 227 views
-
-
அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று! உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மேலும் அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமான வழக்கு என்பதால், அயோத்தி மாவட்டத்தில் டிசம்பர் 10 ஆம் திகதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்,14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு மூன்று பேர் கொண்ட சமரச குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தும், தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அரசிய…
-
- 0 replies
- 226 views
-