நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
தமிழகத்தின் தொழில் நகரமாக விளங்கும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள கோவை மெடிக்கல் சென்டர் ஹொஸ்பிட்டல் மருத்துவமனையில், பற்சிகிச்சை முதல் மிகுந்த சிக்கல் வாய்ந்த இருதய, கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் வரை அனைத்து சிகிச்சைகளும் உன்னத தரத்தில் வழங்கப்பட்டுவருகிறது. இங்கு, உயிராபத்து விளைவிக்கக் கூடிய புற்றுநோயை குணப்படுத்துவதற்கென்றே 800 படுக்கைகள் கொண்ட தனி சிகிச்சைப் பிரிவு ஒன்று அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, தமிழகத்திலேயே முதன்முறையாக பெட் சிடி ஸ்கேன் (PET CT Scan) பரிசோதனையையும் அறிமுகப்படுத்தியுள்ளது கே.எம்.சி.எச். இம்மருத்துவமனையின் தரத்தை முன்வைத்து, தென்னிந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக கே.எம்.சி.எச். தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இம்மருத்து…
-
- 0 replies
- 914 views
-
-
கடந்த சில வருடங்களாக சூரியாசிஸ் என்கிற நோயினால் அதிக உபாதைகளை எதிர்கொண்டு வருகிறேன். நோர்வேயில் பல மருத்துவர்களிடமும், இந்த நோய் சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களிடமும் ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் கேட்டுவிட்டேன். சகலரும் இது ஆயுட்காலமும் அனுபவிக்க வேண்டிய நோய் என்று கூறிவிட்டார்கள். இது ஒரு தொற்று நோயல்ல ஆனால் இது ஒரு பரம்பரை நோயென்று அனைவரும் கூறினார்கள். என் குடும்பப் பின்னணி குறித்த விளக்கங்களை ஆழமாக கேட்டுத்தெரிந்துகொண்டார்கள்... பெற்றோருக்கு இந்த நோய் இருந்தால் 50வீத வாயப்பிருப்பதாக சகல மருத்துவர்களும் தெரிவித்தர்கள். அதாவது இது ஒரு பரம்பரை நோய் என்கிறார்கள். நான் இது குறித்து வாசித்து அறிந்த ஆய்வுகளும் அதையே ஒப்புவிக்கின்றன. இந்த நோய் என் தகப்பனாருக்கு …
-
- 0 replies
- 457 views
-
-
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள், அதில் ஒன்றுதான் Polycystic Ovary Syndrome. Polycystic Ovary Syndrome என்பது ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் பெண்களின் கருப்பையில் ஏற்படும் கட்டி ஆகும். ஹார்மோன்களின் சமநிலையின்மையால், மாதவிடாய் பிரச்சனைகள், கருத்தரித்தல் போன்ற பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கின்றனர். நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள், பல வேதியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் உடல் வளர்ச்சி, ஆற்றல் உற்பத்தி போன்ற பணிகளை ஹார்மோன்கள் செய்கின்றன. ஆனால், ஒழுங்கற்ற உடல் பராமரிப்பு, ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொள்ளாமை போன்ற காரணங்களால் இந்த ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுகின்றன. இந்த ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும்போது, ப…
-
- 0 replies
- 740 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 6 மார்ச் 2024, 02:40 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் 'எங்கள் நிறுவனத்தின் பிஸ்கட்டில் அதிக பால் உள்ளது, எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பை பாலில் கலந்து குடித்தால் உங்கள் பிள்ளைகள் பல சாதனைகளைப் புரிவார்கள்' போன்ற பால் தொடர்பான பல விதமான விளம்பரங்களை பல வருடங்களாக தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். உலகிலேயே அதிகமாக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா தான். 2022-23ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் மொத்த பால் உற்பத்தி 230.58 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 916 views
- 1 follower
-
-
உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில், உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளில், மருத்துவ பெட்டகம் என்று கிவி பழத்தைப் போற்றுகின்றனர். எம்முடைய நாட்டில் சீனாவிலிருந்து இறக்குமதிச் செய் யப்படும் இந்த பழம் தற்போது மூன்று வண்ணங்களிலும் கிடைக்கிறது. கிவியா? அப்படியென்றால்? அதன் மருத்துவ குணம் என்ன? என அறிய ஆவலாக இருந்தால் தொடர்ந்து வாசிக்கவும். கிவி கனியில் கொழுப்புச் சத்து குறைவான அளவில் இருக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை உண்ணலாம். அத்துடன் இதில் விற்றமின் சி கூடுதலாக இருக்கிறது. அதனால் நோயை தடுக்கும் ஆற்றலை வழங்குகிறது, அத்துடன் எம்முடைய உடலில் கட்டுப்பாடின்றித் திரியும் ரேடிக்கிள் தான் பலவ…
-
- 0 replies
- 320 views
-
-
Courtesy: Raman, kalakad வெற்றிலை போடுவது ஒரு அநாகரீகச் செயல் என்றும், பழுப்பு நிறப் பற்களைப் பார்த்து கேலி செய்வதும் வழக்கமாக உள்ளது. உண்மையில் வெற்றிலை போடுவது ஒரு நல்ல பழக்கம் ஆகும். அது அருவெருக்கத் தக்கதாகவும், அபாயகரமானதாகவும் ஆனது, அதை நாம் கையாண்ட விதத்தினால் தான்! அளவுக்கு மீறினால் அமுதமும் விஷமாகும்; (அளவோடு குடித்தாலும் கோலாக்கள் கடும் விஷமாகும்) அதுவும் நல்லது என்று ஒரு பழக்கத்தை ஆரம்பித்தால், அதை கேடு விளைவிக்கக் கூடியதாக மாற்றுவது நமக்குக் கைவந்த கலை! மருத்துவரைக் கேளுங்கள்: “வெற்றிலை போடாதீர்கள்! அது கெடுதல் தரும் கேன்சரைக் கொண்டு வரும்” என்பார். கிறிஸ்தவத்தை தனது மதமாகக் கொண்ட ஆங்கிலேயனாகட்டும்; அவன் இந்தியாவில் பரப்பிய (பக்கவிளைவு தரும்)…
-
- 0 replies
- 481 views
-
-
1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது. 2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம். 3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வித்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு …
-
- 0 replies
- 633 views
-
-
(அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன், அக்குபஞ்சர் & மருந்தில்லா மருத்துவ நிபுணர்) உனக்கு பி.பி (Blood pressure) இருக்கா? பார்த்துப்பா..! ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்... நேரம் தவறாம மாத்திரை போட்டுக்கோ.. இல்லேன்னா ஆளையே தூக்கிடும். அங்க இங்க அலையாதே.. டென்சன் ஆகாதே.. என்று மேலும் மேலும் டென்சனாக்குபவர்கள் தான் இன்று அதிகம். அதைக் கேட்பவருக்கோ பி.பி. மேலும் எகிறும். படபடப்புடன் தலைசுற்றுவது போலவும் இருக்கும். உடனே ஓடிப் போய் பி.பி செக் செய்துகொள்வார்... நாலு கலர் மாத்திரையை எடுத்துப் போட்டுக்கொள்வார். உடனே நார்மலாகி விடுவார். இதுதான் இன்றைய பி.பி. நோயாளிகளின் பரிதாப நிலை. வாழ்நாள் நோய்க்கு பாலிசி எடுத்துக்கொண்ட பி.பி நோயாளிகளே, முதலில் பி.பி என்றால் என்ன? ஏன் வந்தது? என்பதைத் த…
-
- 0 replies
- 3.5k views
-
-
மருத்துவரை அடிக்கடி மாற்றினால் மரணிக்க வாய்ப்புகள் அதிகம் - ஆய்வு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒரே மருத்துவரிடம் தொடர்ந்து சென்று சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளிள் இறப்பு விகிதம் மிகவும் குறைவு என்று ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இவ்வாறு செய்வதால் கிடைக்கின்ற நன்மைகள் பொது மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்கு பொருந்துகின்றன.…
-
- 0 replies
- 302 views
-
-
மக்கள் ஏன் 'வாயு'வை வெளியேற்றுகிறார்கள்? அதை தடுக்க முடியுமா? பரத் ஷர்மா பிபிசி 23 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 1 ஏப்ரல் 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES 2018இல் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமானப் பயணி ஒருவர் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய வாயு (விட்ட தொடர் குசுக்கள்), அவரசகதியில் விமானத்தை தரையிறக்கச் செய்தது என்ற செய்திதான் அது. துபையில் இருந்து நெதர்லாந்து சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் ஆஸ்த்திரியாவை சேர்ந்த பயணியின் இந்த செயல், முதலில் அனைவரின் மூக்கையும் பொத்திக் கொள்ள வைத்தது. பிறகு துர்…
-
- 0 replies
- 464 views
- 1 follower
-
-
தினமும் ஊறுகாய் சாப்பிடுவது உடல்நலத்திற்கு கேடு! [Monday 2015-01-05 12:00] நாம் உணவு உண்ணும் போது முக்கியமாக உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படும் பிரபலமான உணவுப் பொருள் ஊறுகாய். பல வகையான ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர். ஊறுகாய் சுவை மிகுந்ததாக இருந்தாலும் அன்றாடம் இதை உட்கொள்ளும் போது பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அன்றாடம் சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே தேவைப்பட்டால் ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள். செரிமான பிரச்சனைகள்: ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள …
-
- 0 replies
- 645 views
-
-
சுவையான காய்கறிகளில் ஒன்றான புடலங்காயை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். புடலங்காயை மெல்லியதாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும். மேலும் புடலங்காயை கறியாக சமைத்து உண்ணும் போது அதன் விதைகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும். ஏனெனில் விதைகள் வயிற்றுக்கு உபாதைகளை ஏற்படுத்தும். முற்றிய புடலங்காயோ அதன் விதைகளோ வயிற்றுப் போக்கை உண்டாக்கக் கூடியவை. புடலங்காயில், புரோட்டின் 0.5 கிராமும், கொழுப்புசத்து 0.3 கிராமும், ஓரளவு விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன. புடலங்காய் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற வ…
-
- 0 replies
- 419 views
-
-
கண் கடியுடன் கண்கள்; சிவந்து கண்களால் நீர் வடிதல் கவலை இல்லாமலும் கண்ணீர் வரும் கண்கடியுடன் கண்கள்; சிவந்து கண்களால் நீர் வடிதல் கண்ணைக் கசக்கிக் கொண்டுவந்த பையனைக் கூட்டிக் கொண்டு வந்த அம்மாவின் முகத்தில் சலிப்பு. பையனின் முகத்திலும் சோர்வு தட்டியிருந்தது. 'எவ்வளவு சொன்னாலும் கேக்கிறானே? எந்த நேரம் பார்த்தாலும் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கிறான். கண் வீங்கிப் போச்சு. போதாக்குறைக்கு மூக்கையும் குடையிறான். வெளியிலை கூட்டிக் கொண்டு போகவே வெக்கமாகக் கிடக்கு' உண்மைதான் அந்த அழகான பையனின் கண்மடல்கள் வீங்கிக் கிடந்தன. கண்களின் கீழே கருவளையம் தெரிந்தது. முகமும் கண்களும் செம்மை பூத்துக் கிடந்தன. மூக்கு வீங்கி அதன் துவாரங்கள் மேல்நோக்கிப் பார்த்தன. மூக்கை உள்ளங்கையா…
-
- 0 replies
- 2.1k views
-
-
மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் வித்தியாசமான செல்கள் அதாவது கலங்கள் மிதப்பதை தாம் கண்டு பிடித்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். 111 பேரிடம் நடத்தப்பட்ட சோதனைகளை மையமாகக் கொண்ட இந்த ஆய்வு அறிக்கை உயிரியல் பௌதீகம் குறித்த சஞ்சிகை ஒன்றில் வெளியாகியிருந்தது. இது மாரடைப்பு நோயாளிகளுக்கும், நோயற்றவர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை காட்டக்கூடியதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவரது இரத்தத்தில் இந்த பிரத்யேக செல்கள் இருக்கின்றனவா என்பதை அறியும் இந்த பரிசோதனையை வைத்து, ஒருவருக்கு மாரடைப்பு வரக்கூடுமா என்பதை முன்கூட்டியே அறியமுடியுமா என்றும் அவர்கள் தற்போது ஆராய்கிறார்கள். கலிபோர்னியாவின் ஸ்கிரிப்ஸ் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இந்த ஆய்…
-
- 0 replies
- 427 views
-
-
தினமும் காலையில் வெந்நீரை குடிப்பதால் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் கிடைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக மிதமான நீரை அதிகம் பருகினால் அது உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மிதமான நீரை விட வெந்நீரை தினமும் பருகும் போது அது உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவுகிறது. இளமையை தக்க வைக்கும் உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும். முகப்பருக்களை விரட்டும் வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தொண்டை பிரச்சனைகள் தீரும். டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்கள…
-
- 0 replies
- 558 views
-
-
எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற கத்தரிக்காயில் குறைந்த கலோரியும், அதிக சத்துக்களும் அடங்கியுள்ளது. கத்தரிக்காயில் ஃபோலேட், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி3, வைட்டமின் பி6, ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் பீட்டா கரோட்டீன்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் கத்தரிக்காய் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது, 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. கத்தரிக்காயில் வைட்டமின் சி குறைவாக இருப்பதால், அது ஒரு சிறந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பானாக செயல்படுகிறது. கத்தரிக்காயில் ஃபைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைத்து இரத்த ஓட்டம் இதயத்தில் சீராகப் பாய உதவுகின்றன. மேலும் இந்த நியூட்ரியண்ட்டுகள் மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களைப் பாதுகாப்ப…
-
- 0 replies
- 469 views
-
-
உளுந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் [ புதன்கிழமை, 03 யூன் 2015, 08:35.30 மு.ப GMT ] உளுந்தில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து ஆகியவற்றோடு, கரையும் தன்மை உள்ள நார்ச்சத்துகள் போன்றவை அடங்கியுள்ளன. உளுந்து சாப்பிடுவதால் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்பது நிச்சயம். நோயின் பாதிப்பு நீங்கும் கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்றைய உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இல்லை. அதை பற்றி சொன்னாலே நம் உள்ளத்தில் உற்சாகம் ஊறும், நாவிலும் எச்சில் ஊறும். அசைவ உணவுகளை அனைவரும் விரும்பிச் சாப்பிட்டாலும் கூட மாட்டுக் கறி குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. மாட்டுக் கறியை சாப்பிடுவது நல்லது என்று ஒரு தரப்பினரும், இல்லை, அது கெடுதலானது என்று இன்னொரு பாதி மக்களும் கருதுகின்றனர். மாட்டுக் கறியில், புரோட்டீன் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளன. அதேசமயம், கொலஸ்டிராலும் நிறைய உள்ளது. இந்த நிலையில், மாட்டுக்கறியை அதிகமாக உண்பதால் நமது வாழ்நாள் குறையும் என்றும், கோழிக் கறியை அதிகமாக உண்டால் வாழ்நாள் நீடிக்கும் என்றும் புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு மாட்டுக்கறியை உண்பதா…
-
- 0 replies
- 495 views
-
-
சொல்கிறார்கள் [size=4] அழகுக்கு மட்டுமல்ல நகை...[/size]அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர்: நாம் அணியும் ஒவ்வொரு அணிகலன்களும், உடலில், உயிர் சக்திப் புள்ளிகளைத் தூண்டி, நம்மை சீராக இயங்க வைக்கின்றன. அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த அணிகலன்கள், ஆரோக்கியத்தையும் தருகின்றன. உதாரணமாக, பொட்டு வைக்கும் ஒரு பெண்ணை சீக்கிரத்தில், "மெஸ்மரிசம்' பண்ண முடியாது. பெண்ணின் இரு கண்களை உற்று நோக்கி வசியப்படுத்த முயற்சிக்கும் போது, மூன்றாவது கண்ணாக உள்ள பொட்டு, அந்த நபரை திசை திருப்பி விடும். தைராய்டு சிக்கல் உள்ளவர்களுக்கு, சரியான புள்ளிகளைப் பார்த்து காது குத்தினால், அந்த சிக்கலே தீர்ந்து விடும். கழுத்தில் செயின் அணியும் போது, அங்குள்ள புள்ளிகள் தூண்டப்படும். இதன் மூலம…
-
- 0 replies
- 830 views
-
-
அதிகமான சர்க்கரை ஆரோக்கியத்துக்கு எதிரி நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் ஒரு நாளைக்கு சுமார் 15 கிராமாக குறைக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதனை ஊக்குவிக்க அரசுகள் சர்க்கரை வரி என்கிற புதிய வரியை விதிக்கலாம் என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். உலக சுகாதர நிறுவனமும், இங்கே பிரிட்டனின் சுகாதார நிபுணர்களும் சமீபத்தில் அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள். இன்றைய நிலையில் ஒருவரின் அன்றாட உணவில் இருந்து உடலுக்கு பெறப்படும் சக்தியின் அளவில் அதிகபட்சமாக 10 சதவீதம் வரை உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையில் இருந்து கிடைக்கலாம் என்று மருத்துவர்கள் அ…
-
- 0 replies
- 462 views
-
-
Cancer Disease: பெருங்குடல் புற்றுநோயின் முதல் அறிகுறி என்ன? எப்படி குணப்படுத்துவது?
-
- 0 replies
- 477 views
-
-
அன்றாடம் வாழ்வில் காய்கறிகளை சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம். அவ்வாறு காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளும் நாம் அதன் பயன்களை அறிந்துகொள்வது நல்லது. வாழைக்காய் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது, மலச்சிக்கலை தீர்க்கும். மாங்காய் மாங்காயில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ உள்ளது. சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது சூட்டைக் கிளப்பும். மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். செரிமானத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும், பசியைத் தூண்டும். பாகற்காய் பாக…
-
- 0 replies
- 2.6k views
-
-
தீவிர வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனுக்கு, உலகில் முதன்முறையாக மூளையைக் கட்டுப்படுத்தும் மைக்ரோ சாதனம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சமர்செட்டைச் சேர்ந்த, 13 வயதாகும் குறித்த சிறுவனுக்கு கடந்த ஆண்டு லண்டனில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சோதனை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட இந்த சத்திர சிகிச்சையின் பின்னர், பகல் நேரத்தில் அவருக்கு ஏற்படுகின்ற வலிப்பு நோய்த் தாக்கம் 80 சதவீதத்தினால் குறைவடைந்திருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். மண்டையோட்டில் பொருத்தப்படுகின்ற இந்த மூளைக் கட்டுப்பாட்டுக் கருவி, மின்னலைகளை மூளைக்குச் செலுத்தி, வலிப்பு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk…
-
- 0 replies
- 368 views
- 1 follower
-
-
அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள் தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது. *தோற்றம் :* அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி …
-
- 0 replies
- 9.8k views
-
-
உலக முதுகெலும்பு நாள்: உடல்நலத்தை பாதிக்கும் முதுகெலும்பு சார்ந்த நோய்கள் பெண்களை அதிகம் பாதிக்கின்றனவா? எம்.ஆர்.ஷோபனா பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று உலக முதுகெலும்பு நாள். நம் உடல் இயக்கத்திற்கு பக்கபலமான ஒன்று, முதுகெலும்பு. நம்மில் 10 பேரில் 9 பேருக்கு முதுகு வலி ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், உடல் ஆரோக்கியம் தொடர்பாக இதயம், மூளை போன்ற மற்ற உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நாம் முதுகெலும்புக்கு கொடுப்பதில்லை. நம் கவனக் குறைவு தவிர, இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. முதுகெலும்பின் முக்கி…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-