யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
94 topics in this forum
-
சுற்றுலா, வேலை, நண்பர்கள் சந்திப்பு, கொண்டாட்டம் என்று வெளியே சில நாட்கள் நாம் போய் இருந்து விட்டு வந்தாலும், வீட்டுக்கு திரும்ப வந்து சொந்தக் கட்டிலில் நித்திரை கொள்வது எப்போதும் மகிழ்ச்சியையும், அமைதியையும் நிம்மதியையும் தரும். அது தான் வீட்டின் தனித்துவமான தன்மை. ஆனால் தனது வீட்டில், தனது கட்டிலில் படுத்திருக்கும் காஞ்சனாவுக்கு மட்டும் நித்திரையும் வரவில்லை. அமைதியும் கிடைக்கவில்லை. இருட்டில் விழித்தபடி இருந்தாள். “நல்ல பெடியன், எங்கடை ஊர். ஓரளவு தூரத்துச் சொந்தம். நல்ல குடும்பம் எண்டு என்ரை அம்மா சொல்லுறா. இந்தக் கலியாணத்தைக் கட்டு. நல்ல வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்” அவளது தந்தை சொன்ன போது அவள் பதில் சொல்லவில்லை. யேர்மனியில் பிறந்து வேறு ஒரு கலாச்சாரத்துக்குள் வாழும…
-
-
- 16 replies
- 516 views
-
-
"தைமகளே வருக" [அந்தாதிக் கவிதை] "தைமகளே வருக பொங்கலோ பொங்கல் பொங்கல் தமிழர் புத்தாண்டு ஆகட்டும் ஆகும் எல்லாம் பெருமை பேசட்டும் பேசும் பேச்சில் பண்பாடு தெரியட்டுமே! தெரியும் உண்மைகள் தையை வாழ்த்தட்டும் வாழ்த்தும் திருநாளே பொங்கல் விழாவாகட்டும் விழாவெடுத்து மங்கையர் கொண்டாடும் தையே தைத்திங்கள் பிறந்தால் வழி பிறக்குமே! பிறக்கும் தையில் திருமணம் வேண்டி வேண்டிய வரத்திற்கு முன்பனி நீராடி நீராடி தவம் முடித்து வணங்கினாளே வணங்கி அழைத்தாள், தைமகளே வருக!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 193 views
-
-
"பணம் படுத்தும் பாடு", "தைப்பொங்கல்” [ஹைக்கூ கவிதை] & "மரியாதை" [அந்தாதிக் கவிதை] "பணம் படுத்தும் பாடு" "பகட்டு வாழ்வில் பற்றுக் கொண்டு படித்த அறிவை மூடி வைத்து பண்பு மறந்த செயல்கள் மூலம் பணம் படுத்தும் பாடு தெரியுமா?" "நாணயம் கொடுத்தாலே ஆண்டவனுக்கும் பூசை நாணும் கோதையும் பாய் விரிப்பாள்! நாக்கு கூட பொய் உரைக்கும் நாடகமும் ஆடும் பதவிகள் சேர்க்கவே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. ஹைக்கூ கவிதை / "தைப்பொங்கல்” "தைத்திங்கள் பிறந்தால் எமக்கு வழி காட்டும் பொங்கலே புத்தாண்டு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................…
-
- 0 replies
- 265 views
-
-
"மூன்றும் உடையது", குறள் 1085 & "பனிப்பொழிவு" "மூன்றும் உடையது", குறள் 1085 தாய், மனைவி, மகள் என தான் கொள்ளும் மூன்று நிலையில் தனயனை வருத்துவது இளம் பெண்ணே! வஞ்சனிக் கண்கள் கூற்றவன் வலையோ வனிதை விழிகள் காதல் பேசுமோ வஞ்சிப் பார்வை பெண்மான் மருட்சியோ வதைக்குது என்னை, மீட்சி தாராயோ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................................. "பனிப்பொழிவு" "பனிப்பொழிவு பெய்கிறது பாலாய்ப் படர்கிறது பகலோன் வெப்பம் குளிரால் மூடுகிறது பச்சை மரமோ வெண்ணிற ஆடையில் பசும்புல் தரையோ வழுக்கி வீழ்த்துகிறது!" "பருவப் பெண் கனவு காண்கிறாள் படுக்கையை விட்டு எழும்ப மறுக்கிறாள் பஞ்சு பஞ்சாய் குளிர்த்துளி வி…
-
- 0 replies
- 143 views
-
-
காலை நேரக் குளிர் ஊசியாய்க் குத்த எழும்பவே மனமின்றி தடித்த போர்வையால் முகம் தவிர்ந்த அனைத்துப் பாகங்களையும் குளிர் புகா வண்ணம் போர்த்து மூடியபடி படுத்துக் கிடக்கிறேன் நான். லண்டனில் சினோ விழுவதில்லை. குளிர் குறைவு என்ற பேர்தான். ஐந்து பாகை குளிர்கூட மைனஸ் பத்துப்பாகை போல் குளிரும். அத்துடன் ஊசிக்காற்றும் சேர்ந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். வெளியே செல்லக்கூட மனமின்றிப் போகும். முன்னர் பதினெட்டு ஆண்டுகள் ஜெர்மனியில் இருந்தபோது நான்கு மாதங்களாவது பனி கொட்டும். பார்க்குமிடமெல்லாம் வெண்பனித்துகள்கள் வந்து அள்ளி விளையாடு என்று அழைக்கும். வெளியே சென்றால் கூட லண்டனில் குளிர்வதுபோல் குளிர் இருக்காது. ஆனால் இங்கு.............நினைத்துப் பார்த்தவளுக்குச் சிரிப்பும் வந்தது. அங்கு இளமை…
-
- 4 replies
- 321 views
-
-
"மன்னிப்பாயா என்னை", தாய்மை & "தாத்தா" "மன்னிப்பாயா என்னை" மன்னிப்பாயா என்னை அழகு சுந்தரியே அன்பைப் புரியாத பாவி நானே இன்பம் ஒன்றுக்கே பெண்ணென நினைத்தேனே துன்பம் தந்து கண்ணீரை வரவழைத்தேனே! பெண்ணில் பிறந்தவன் அவளையே தேடுகிறான் கண்ணை நம்பி எங்கேயோ அலைகிறான் மண்ணில் மனிதம் காக்கத் தவறி கண்ணியம் தாண்டியவனைப் பொறுத்தால் என்ன? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................. தாய்மை [கைக்கூ] தாய்மை என்பது தாயாக இருக்கும் நிலையோ தாலியின் பாக்கியமோ கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................. "தாத்தா" [தன்முன…
-
-
- 4 replies
- 248 views
-
-
"நீயில்லை நிழலில்லை" சுட்டெரிக்கும் கதிரவன் யாழ்ப்பாணத்தின் மேல் உயர்ந்து, வறண்ட பூமியில் கூர்மையான நிழல்களைப் போட்டது. ஒரு காலத்தில் செழித்தோங்கிய நகரம் பல ஆண்டுகளாக மோதலை சகித்துக் கொண்டு, அதன் தெருக்களை சண்டைகள் மற்றும் உயிர்வாழ்வின் நினைவுகளால் பொறித்தது. இந்த நகரத்தின் மையத்தில் ஒரு பழமையான ஆலமரம் நின்றது, அதன் பரந்த கிளைகள் நிழல் தேடுபவர்களுக்கு ஓய்வு அளித்தன. நெகிழ்ச்சியின் சின்னமான அந்த மரம் யாழ்ப்பாணத்தின் மாறிவரும் அலைகளுக்கு மௌன சாட்சியாகவும் இருந்தது. அதன் நிழலில் ராகவன் என்ற முதியவர் அமர்ந்திருந்தார், அவருடைய இருப்பு மரத்தைப் போலவே உறுதியானது. ஒவ்வொரு நாளும், அவர் அங்கும் இங்கும் கிழிந்த, ஒரு பழைய நாட்குறிப்பு மற்றும் ஒரு பேனாவைக் கொண்டு வருவார். அவருக்கு …
-
- 0 replies
- 138 views
-
-
"பாலியல் வன்கொடுமை" பாலியல் வன்கொடுமை பெண்களுக்கு வஞ்சகமே பாவச் செயல்களின் பிறப்பிடமும் அதுவே! பாவை பிருந்தாவின் பாலியல் வல்லுறவுத் தெரியுமா பாதக நடத்தையை திருவிளையாடல் என்கிறதே! விண்ணில் இருப்பவன் உதாரணம் தரவேண்டாமா மண்ணில் இருப்பவன் அதைத் தொடர! எண்ணத்தில் அதை நன்கு பதித்தவன் கண்ணை மூடி வல்லுறவு செய்கிறானே! காமம் கூத்தாடும் கதைகளைத் தவிர்த்து காதல் பேசும் புராணம் பரவட்டும்! காலம் அறிந்து பழையதை எறியுங்கள் காந்தையை மதித்து அவளை வாழவிடுங்கள்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 152 views
-
-
இவ்வளவு பெரிய நாயா? திடுக்கிட்டுப் போனேன். அது ரொம்ப சாது, சொன்னார்கள் உறவினர்கள், நண்பர்கள், பெரியவர்கள். எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. உது தற்செயலாய் மிதிச்சாலே ஆபத்து அல்லவா? சாச்சாய், அப்பிடி நடக்கவே நடக்காது அரசியல் வல்லுநர்கள் ராஜதந்திரிகள் பாடம் எடுத்தனர். அதற்கு ஒரு மணம் இருந்தது. அது எங்கு போனாலும் அதன் மணம் முன் தோன்றியது பிறகு அதன் பின்தொடர்ந்தது... ஒரு நாள் அதன் எசமான் சூக்காட்டியதும் பாய்ந்து விறாண்டியது கடித்துக் குதறியது மற்றும் பல சொல்ல முடியாத அவலங்களையும் அரங்கேற்றியது. அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது... இப்போதெல்லாம் அது உலா வரும்போது, ஊரடங்குது, கதவடைக்குது, மூச்சும் அடைக்குது. இது நடந்து 38 வருசமாச்சு ஆனா அந்த மணம் இருக்கே இப்பவும் ம…
-
-
- 7 replies
- 521 views
- 1 follower
-
-
காற்றாடி - அத்தியாயம் ஒன்று ---------------------------------------------- மழை இன்னும் விட்டுவிடவில்லை, ஆனால் முன்பிருந்ததை விட நன்றாகக் குறைந்து விட்டது போன்று தோன்றியது. மழையின் சத்தம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. கூரையில் இருக்கும் ஓட்டைகளினூடாக வீட்டுக்குள் விழுந்து ஓடும் மழை நீர் முற்று முழுதாக அவனைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. அவன் படுத்திருக்கும் இடத்திற்கு சரி மேலாக கூரையில் எந்த ஓட்டைகளும் இல்லாதபடியால், மழைநீர் அவன் மேல் இன்றும் விழுந்திருக்கவில்லை. வீட்டிலிருந்த ஒரு அகலமான மா பலகையை தரையின் மேல் போட்டு அதன் நடுவிலேயே அவன் படுத்திருந்தான். தரையில் விழுந்து தெறிக்கும் சில மழை ஒழுக்குகள் தன்னில் விழுவதை தவிர்க்க, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தபடி, இரண்டு கைகளையு…
-
-
- 50 replies
- 2.8k views
-
-
ராணுவ ரகசியம் --------------------------- நாய்கள் குலைத்து குலைத்து அடங்கிக் கொண்டிருந்தன. பொழுது இன்னும் விடிந்திருக்கவில்லை, நேரம் அதிகாலை நாலு அல்லது ஐந்து மணி ஆகியிருக்கும் போல. வெளியில் இருட்டு இன்னும் கும்மிக் கொண்டிருந்தது. இந்த நாய்கள் இவர்களுக்கு ஏன் அடங்கிப் போகின்றன என்பது கொஞ்சம் ஆச்சரியம் தான். ஒரு வேளை குலைக்கும் நாய்களை எப்படி குலைக்காமல் அடக்குவதென்று இந்திய ராணுவத்தில் ஒரு பயிற்சியும் இருக்கின்றதாக்கும். இதுவே இலங்கை ராணுவம் எவ்வளவு தான் பதுங்கிப் பதுங்கி வந்தாலும், எங்கள் ஊர் நாய்கள் விடாமல் குலைத்து, சில வேளைகளில் இலங்கை இராணுவத்திடம் அடிவாங்கி இழுபட்டு ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டே ஓடியும் இருக்கின்றன. இலங்கை இராணுவத்திற்கும், இந்திய இராணுவத்திற்கும் இ…
-
-
- 32 replies
- 1.7k views
- 1 follower
-
-
பூனைகளின் பேச்சுவார்த்தை ----------------------------------------------- எவ்வளவு பெரிய பூனையாலும் எவ்வளவு சின்ன சுண்டெலியையும் அடித்துப் பறிக்க இயலாத ஒரு காலம் பூமியில் வந்திருந்தது அந்த ஒரு நாளில் ஒரு சுண்டெலியை சில பூனைகள் கூப்பிட்டன வரச் சொல்லி சமாதான காலம் தானே என்று கூட்டமும் சுற்றி நிற்கும் தானேயும் என்று துணிந்து உள்ளே வந்தது சுண்டெலி சுண்டெலியின் வீரம் தீரம் போற்றி ஆரம்பித்த பூனைகள் அடுத்ததாக அடித்துப் பறிக்க முடியாததை எழுதிப் பறிக்க ஆயத்தமாகின கேட்கிறதை கொடுக்கின்றேன் ஆனால் இன்னொரு அநியாயப் பூனை அது அங்கே என் வேலியில் எந்நேரமும் நிற்கின்றது அதை பதிலுக்கு தடுங்கள் என்றது பேச வந்த சுண்டெலி 'ராஜதந்திரமாக அணுக வேண்டும்.....' என்றது பெரிய பூனையின் உதவிப் பூன…
-
-
- 22 replies
- 963 views
-
-
"எது தான் சரி...?" [அந்தாதிக் கவிதை] & "மாங்கல்ய கனவுடன்" "எது தான் சரி...?" [அந்தாதிக் கவிதை] "எது தான் சரி புரிகிறதா புரிந்து தான் என்ன பயன்? பயன் அற்ற உலக வாழ்வில் வாழ்வது ஒரு கேடு இல்லையா? இல்லாத ஒன்றுக்கு தேடி அலையும் அலை மோதும் நெஞ்சு உனக்கா? உனக்காக முதலில் வாழப் பழகி பழகிய உறவை அலசிப் பார்ப்பாயா? பார்க்கும் பார்வையில் எதைக் கண்டாய் கண்டத்தில் எது தான் சரி?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................. "மாங்கல்ய கனவுடன்" "மாங்கல்ய கனவுடன் தையை எதிர்பார்த்தேன் பொங்கலோ பொங்கல் கடிமணம் தராதோ? அங்கங்கள் எல்லாம் பூரித்து மகிழ்கிறதே தங்கத் தாலியை கழுத்து ஏற்காதோ? ஏங்காத எவரும் வெற்றி கண்…
-
- 0 replies
- 178 views
-
-
"பனியில் நனையலாமா? .. நிலவிலே காயலாமா?" & "என்றுமே முதலாளி" "பனியில் நனையலாமா? .. நிலவிலே காயலாமா?" "பனியில் நனையலாமா? படியிறங்கி வாராயா இனிய காதலை இன்பமாக கழிப்போமா? தனிமை வாட்டும் தணியாத வெப்பத்தை கனியும் அன்பால் கடந்து போவோமா?" "மின்னும் இடையை தொட்டுப் பார்க்கவா சின்ன இதழை கொஞ்ச விடுவாயா? மன்னன் இவனை கட்டி அணைத்து அன்ன நடையில் இன்பம் கொட்டுவாயா?" "கண்ணில் நுழைந்த அழகு வனிதையே விண்ணில் வாழும் தேவதை நீயா? மண்டியிட்டு மலர் ஏந்தி வேண்டுகிறேன் வண்ண மயிலே நிலவிலே காயலாமா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................................... "என்றுமே முதலாளி" "என்றுமே முதலாளி உழுதுண்டு வாழ்பவரே எல்ல…
-
- 0 replies
- 133 views
-
-
“ஏனடி இந்த வேதனை..?” மாலைக் கதிரவன் பனை மரங்களுக்குப் பின்னால் தன் கதிர்களை இழுத்து மூடிக்கொண்டு, நீலக்கடலில் குளிக்கும் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள மகிழ்மதியின் வீட்டிலும் நீண்ட நிழல்களை வீசியது. மகிழ்மதி இடைகழியில் [முன்னறையில்] அப்பொழுது அமர்ந்திருந்தாள். அவளது மெல்லிய விரல்கள் தூசி நிறைந்த அறையின் தரையில் எதோ வடிவங்களைத் தேடிக்கொண்டிருந்தது. கண்ணீரால் கனத்த அவள் கண்கள், வெளியே உற்றுப் பார்த்தன. அங்கு அடிவானம், அடைய முடியாத வாக்குறுதிகளால், அவளைக் கேலி செய்வதாகத் அவளுக்குத் தோன்றியது. அவளது குழந்தைப் பருவத்தோழிசங்கவி, அவ்வேளை அங்கே வந்தாள். மகிழ்மதியின் முகத்தில் படிந்திருந்த வாட்டத்தைக் கண்டு, அவளின் மகிழ்ச்சியான வருகை தடுமாறியது. மகிழ்மதியும் சங்கவியும் ஒன்றாகப…
-
- 0 replies
- 272 views
-
-
"நீயில்லா வாழ்வு" நீயில்லா வாழ்வு பாலைவனம் ஆகுமே நீரற்ற உலகு வெறிச்சோடி இருக்குமே நீதியிழந்த நாடு சமாதானம் காணாதே நீலக் கருங்குயிலே என்னைத் தழுவாயோ? காதல் இல்லையேல் குடும்பம் அழியுமே காமம் ஒழிந்தால் பரம்பரை மறையுமே காதணி அணிந்த அழகு வஞ்சியே காலம் தாழ்த்தாமல் அருகில் வருவாயோ? உன்னைக் காணாத கண்ணும் விழியல்ல உள்ளம் சேராத இல்லமும் வீடல்ல உவகை கொண்டு உயிர்கள் நிலைக்க உண்மை உணர்ந்து அன்பு பொழியாயோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 2 replies
- 259 views
-
-
"தனிமையை இனிமையாக்கிய கனிமொழியே" வண்ணக் கோலத்தில் அழகு சொல்லி கண்கள் இரண்டாலும் காதல் பேசி மண்ணின் வாசனையை ஆடையில் காட்டி ஆண்மையை இயக்கும் பெண்மையை வாழ்த்துகிறேன்! மாலைக் கதிரவன் அடிவானம் தொட சேலை ஒப்பனையில் அடிமனதைக் கிளறி சோலை வனப்பில் ஆசை தெளித்து அலையாய் என்னை முட்டி மோதுகிறாயே! கன்னத்தில் கைவைத்து சோர்ந்து இருந்தவனுக்கு புன்னகை பொழிந்து அருகில் நெருங்கியிருந்து அன்பான வார்த்தைகளால் ஊக்கம் கொடுத்து என் தனிமையை இனிமையாக்கிய கனிமொழியே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 188 views
-
-
"கரை கடந்த புயல்" நவம்பர் 27, 2024 அன்று காலை கடற்கரை நகரமான திருகோணமலை அபாய எச்சரிக்கையுடன் விழ்த்தெழுந்தது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் புயலாக வலுப்பெற்ற, பெஞ்சல் புயலாக [Fengal Cyclone] வலுவடைந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. செல்வராஜா குடும்பத்தினருக்கு இந்தப் புயல் இயற்கைப் பேரிடரை விட அதிகம்; இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளை சீர்குலைக்கும் அச்சுறுத்தலாக இருந்தது. மீன்பிடி தொழிலாளியான செல்வராஜாவுக்கும், மீனா என்ற அவரின் மனைவிக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூத்தவரான 18 வயது கவிதா, தனது குழந்தைப் பருவ காதலியான அரவிந்துடன் நவம்பர் 29ஆம் தேதி திருமணத்தை பதிவு …
-
-
- 9 replies
- 529 views
-
-
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம் என் ஆடுகளை வேலியால் எட்டிப்பார்த்த என்னருமைத் தோழனே…. எட்டிப்பார்க்கும் அவசரத்தில் நீ பலதை உன்னிப்பாக கவனிக்கவில்லை. கவனித்தாயா? அந்த ஆடுகளுக்கு குறி சுடப்படவில்லை. இந்த பட்டியில் இதற்கு முன் நின்ற அத்தனை ஆடுகளும் பல குறிகளை தாங்கித்தான் நின்றன - அந்த தாடிக்கார மேய்பனின் புத்தகத்தை படித்த பின் தான், குறிகள் ஏதும் என் ஆடுகளுக்கு இடப்படவே இல்லை. பார்த்தாயா? ஈசான மூலையில் கறுப்பும் பழுப்புமாய் நின்ற குட்டி ஆடு உன் காமாலை கண்ணுக்கு தெரியவில்லையா? அதன் அம்மா அப்பாவை நாந்தான் சேர்த்துவைத்தேன். எங்கள் ஆட்டு மந்தையில் அது ஒரு வரலாறு. பல சம்பவங்களின் பின் நடந்தேறியது. அங்கேயும் பட்டியின் பழைய கதவுகளை நெட்டித்திறக்க எனக்கு உதவியது அந்த கெட்டிக்கார கிழவனி…
-
-
- 12 replies
- 647 views
- 1 follower
-
-
ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே!" & "வாசிப்பு" [அந்தாதிக் கவிதை] "ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே!" "ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே ஈரத்தாவணியிலே இடுப்புக் காட்டி வதைப்பவளே பரந்த பண்பொழுகும் செம்பவள திருமேனியே! எந்தை பூவையே தேன்சிந்தும் வஞ்சியே தீந்தை விழியால் மயக்கும் சுந்தரியே சிந்தை சிவக்க மகிழ்கிறேன் உன்னழகில்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................... "வாசிப்பு" [அந்தாதிக் கவிதை] "வாசிப்பு உங்கள் அறிவை வளர்க்கட்டும் வளர்க்கும் அறிவு பண்பு கொடுக்கட்டும் கொடுக்கும் பண்பு மனிதம் நேசிக்கட்டும் நேசிக்கும் மனிதர்கள் தர்மம் காக்கட்டும் காக்கும் தலைவர்கள் நீத…
-
- 0 replies
- 199 views
-
-
மூன்று கோழிக்குஞ்சுகள் -------------------------------------- 'பாடசாலை நாட்களில் உனக்கு எத்தனை பெண் நண்பிகள் இருந்தார்கள்?' 'அப்படி ஒருவருமே இருக்கவில்லை............' கொஞ்சம் திடுக்கிட்ட அவன் என்னைக் கூர்ந்து பார்த்தான். 'ஏன்.......... உன்னுடைய வகுப்பில் பெண் பிள்ளைகள் எவரும் படிக்கவில்லையா............' 'இல்லை.......நான் ஒரு ஆண்கள் பள்ளியில் படித்தேன்.' 'அது என்ன ஆண்கள் பள்ளி என்றால்...........' 'ஆண்கள் பள்ளி என்றால் அங்கே ஆண்பிள்ளைகள் மட்டுமே படிப்பார்கள். பெண்கள் இருக்கமாட்டார்கள்...........' அப்படியான பாடசாலைகளும் உலகில் இருக்கின்றனவா என்று கேட்டுவிட்டு, அவன் இதுவரை கேட்டிராத ஒரு புது நகைச்சுவைக்கு சிரிப்பது போல சத்தமாகச் சிரித்தான். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த எல்ல…
-
-
- 16 replies
- 567 views
- 1 follower
-
-
"யாரொடு நோக" [அந்தாதிக் கவிதை] & "நடை பயிற்சி" "யாரொடு நோக" [அந்தாதிக் கவிதை] "யாரொடு நோக என்னையே கேட்கிறேன் கேட்கிறேன் தினம் வானத்தைப் பார்த்து பார்த்து பார்த்து கண்ணும் கலங்கியது கலங்கிய மனதில் குண்டுகள் வெடிக்குது! வெடித்து சிதறிய உடல்களைக் காண்கிறேன் காண்கிறேன் என்றும் அவைகளின் கண்ணீரை கண்ணீரால் கழுவிய இரத்த உடல்களை உடல்களைத் தாண்டி ஓடும் மனிதர்களை! மனிதர்களை மதியா குண்டு விமானங்களை விமானங்கள் சத்தத்தில் பதுங்கும் குழந்தைகளை குழந்தைகள் பட்டினியில் படும் வேதனைகளை வேதணையிலும் தளராத மண்ணின் மைந்தர்களை! மைந்தர்கள் போற்றிய நீதி தேவதையை தேவதைகள் வாழ்ந்த எங்கள் மண்ணை மண்ணோடு மண்ணாய் மடிவதைப் பார்த்து பார்த்து கலங்குகிறேன் யாரொடு நோக!" [கந்தையா தில்…
-
- 0 replies
- 183 views
-
-
குறள்மொழி இன்பம் / "குறள் 1265" [நீங்குமென் மென்றோள் பசப்பு] "அரிவை என்னுடன் இன்பம் பொழியாமல் பிரிந்து போகும் அன்புக் காதலனே புரிதல் உனக்கு சொற்பமும் இல்லையோ?" "தெரிவை இவளின் வளையல் கழலுதே வரிகளாய் தோலில் பசப்பு வாட்டுதே கரிய உள்ளம் படைத்தவன் நீயோ?" "ஆதவனைக் கண்டு மலர் மலரும் நாதனைப் பார்த்தால் பெண் பூரிக்கும் இதனையும் நான் சொல்ல வேண்டுமோ?" "மதியைக் கண்டால் மனம் குளிரும் மங்கை எனக்கோ நீயே திங்கள் மனையாளனே காதல் ஒளி வீசாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 177 views
-
-
"செருக்கு” [தன்முனைக் கவிதை] "செருக்கு அற்றவர் வாழ்வு என்றும் பெருமிதமே! கர்வம் கொண்டவர் இருப்பு ஒரு கேள்விக்குறியே!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 207 views
-
-
ஓயும் ஊசல் ------------------- என்னைக் கண்டவுடன் அது இப்ப எச்சரிக்கையாவதில்லை மெதுவாக தலையை உயர்த்தி நேராக என் கண்களை பார்க்கின்றது கனிவும் அமைதியும் அதன் கண்களில் காலம் கொடுத்து விட்டிருக்கின்றது தெருப்பூனை ஒன்றின் ஆயுளைத் தாண்டி இன்னும் அது தெருவில் வாழ்கின்றது மெதுவாக வந்து கொஞ்சமாக சாப்பிடுகின்றது 'நீ சாப்பிட்டாயா........... எல்லோரும் நலமா........' என்று உள்ளே மெதுவாக ஒரு தடவை எட்டிப் பார்க்கின்றது ஒரே எட்டில் முருங்கையில் ஏறி கூரைக்கு அது இப்போது பாய்ந்து போவதில்லை முருங்கையையும் கூரையையும் பார்த்து விட்டு நிலத்தில் நடந்து போகின்றது அது இப்ப எந்தப் பறவையையும் பிடிக்க பதுங்குவதும் இல்லை எங்கோ போய் ஓய்ந்து அன்றைய நாளை முடிக்கின்றது நாளை மீண்டும் வரும் அந்த…
-
-
- 9 replies
- 360 views
-