யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
94 topics in this forum
-
இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்? இதை அடிக்கடி சொல்லிக் கொள்வது வேறு யாருமல்ல.என்னைப் பெற்ற தாய் தான்.சில இடங்களில் எனக்கு முன்னாலேயே சொல்ல கொஞ்சம் சங்கடமாகவே இருக்கும். அப்பா பெரிய வாத்தியார்.அம்மா ஆசிரியை.ஒரே ஒரு அண்ணன்.எனக்கு இரண்டு வயது மூத்தவன்.அண்ணனுடன் இப்போதும் வா போ என்று தான் பேசுவேன்.என்னடா அண்ணனை ஒருமையில் பேசுகிறானே என்று எண்ணினால் அதற்கு விடை சொல்லத் தெரியவில்லை.இப்போதும் பிள்ளைகள் பேரப் பிள்ளைகளை ஒருமையில்த் தான் அழைப்பேன். கிராமப் புறங்களில் எந்த கொண்டாட்டமாக இருந்தாலென்ன துக்க வீடாக இருந்தாலென்ன இப்போது போல மண்டபத்துடன் குசலம் விசாரித்துவிட்டுப் போவதில்லை. கொண்டாட்டம் என்றால் 4-5 நாட்களுக்கு முத…
-
-
- 14 replies
- 543 views
- 2 followers
-
-
"தைமகளே வருக" [அந்தாதிக் கவிதை] "தைமகளே வருக பொங்கலோ பொங்கல் பொங்கல் தமிழர் புத்தாண்டு ஆகட்டும் ஆகும் எல்லாம் பெருமை பேசட்டும் பேசும் பேச்சில் பண்பாடு தெரியட்டுமே! தெரியும் உண்மைகள் தையை வாழ்த்தட்டும் வாழ்த்தும் திருநாளே பொங்கல் விழாவாகட்டும் விழாவெடுத்து மங்கையர் கொண்டாடும் தையே தைத்திங்கள் பிறந்தால் வழி பிறக்குமே! பிறக்கும் தையில் திருமணம் வேண்டி வேண்டிய வரத்திற்கு முன்பனி நீராடி நீராடி தவம் முடித்து வணங்கினாளே வணங்கி அழைத்தாள், தைமகளே வருக!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 194 views
-
-
அவள் லண்டன் வந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டதுதான். போர் முடிந்தும் பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் வதனி வந்ததுக்கு இன்னும் இலங்கை போகவில்லை. ஆறு வயதிலும் நான்கு வயதிலும் கொண்டுவந்த பிள்ளைகள் இருவருமே படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் அவள் இலங்கைக்குப் போகும் ஆசையை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறாள். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. கணவன் நோயில் இறந்தபின் கணவனின்றி எங்குமே அவள் செல்வதை நிறுத்திவிட்டிருந்தாள். வாரம் ஒருதடவை மகனை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்தால் பிறகு அடுத்த வாரம்தான். பிள்ளைகளும் ஆண் பிள்ளைகள் என்பதால் அவர்களைக் கூட்டிக்கொண்டு செல்லவேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. ஆறு மா…
-
-
- 17 replies
- 927 views
- 1 follower
-
-
கண் கண்ட தெய்வம் ---------------------------------- வரிசை நீண்டு உள் வாசலைத் தாண்டி வெளிவரை வந்திருந்தது. நான் வருவதற்கு கொஞ்சம் சுணங்கிவிட்டது. வேறு வழி இல்லை, இவ்வளவு தூரம் வந்தாகி விட்டது, வரிசையில் நின்று கடமையை முடித்து விட்டே போவோம் என்று வரிசையின் முடிவில் நின்றேன். வீட்டுக்கு போய் செய்வதற்கும் வேலைகள் என்றும் ஏதும் இல்லை. தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு அலைவரிசையில் முன்னரே பார்த்த, பிடித்த படம் ஏதாவது ஓடினால், அதை மீண்டும் பார்க்கலாம், அவ்வளவுதான். இப்பொழுது எல்லாம் புதிதாக எந்தப் படத்தையும் பார்ப்பதற்கு பொறுமை இல்லை. மனைவி இருந்திருந்தால் சிவராத்திரிக்கு எப்போதோ கோவிலுக்கு வந்திருப்பார். பின்னர் 'நீங்கள் இப்ப வரலாம்...........' என்று ஒரு செய்தியை கோவிலில் இருந்து …
-
-
- 34 replies
- 1.4k views
-
-
"வாடகை வீடு..!" இலங்கையின் துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில் கவி என்ற இளைஞன் இருந்தான். அவன் உயரமானவன், வசீகரிக்கும் புன்னகை மற்றும் சாகச மனப்பான்மையுடன் மக்களை சிரமமின்றி தன்னிடம் ஈர்த்தான். கவி, தனது உயர் படிப்பைத் பேராதனை பல்கலைக்கழகத்தில் தொடரும் போது தங்குவதற்கு ஒரு இடத்தைத் கண்டியில் தேடி, அமைதியான சுற்றுப்புறத்தில் அமைந்திருந்த ஒரு விசித்திரமான வீட்டைக் கண்டான். உரிமையாளர் திரு ராஜன் அவனை அன்புடன் வரவேற்று வாடகைக்கு தனது வீட்டில் ஒரு அறை கொடுத்தார். திருவாளர் ராஜன் கண்டியில் பெரும் வர்த்தகராகும். அவர் நுவரெலியாவில் தேயிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்த பெற்றோருக்கு ஒரே மகனாக இரு சகோதரிகளுடன் பிறந்து, லைன் அறை குடிசையில் [வரிசை வீடு ஒன்றில்] தனது வாழ்வை ஆரம்பித்தவர். …
-
- 0 replies
- 224 views
-
-
"பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்" "பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை" செயற்கைக் கால்களைப் பெற வரிசையில் நின்ற ஒரு இளம் தாய், கால் கருகிய தன் சேயை இடுப்பில் காவி வந்திருந்தாள். 'என்ரை பிள்ளைக்கும் ஒரு கால் தாங்கோ’ என்று கைகளை நீட்டிய படி அவள் அங்கு கெஞ்சினாள். அந்தச் சிறுவன் வளர வளர, தன் வாழ்க்கையில் எத்தனை பொய்க் கால்களுக்காக அலைய வேண்டும்?’ - 'கிளிநொச்சி - போர் தின்ற நகரம்’ என்னும் நூலில் தீபச்செல்வன் ஈழ மக்களைப் பற்றி எழுதிய வரிகள் இவை. ''யுத்தம் தின்றது போக எஞ்சியிருப்பவற்றை ராணுவத்திடம் இருந்து காப்பாற்றிக்கொள்வதே போருக்குப் பிந்தைய பெரும் போராக மக்கள் மீது கவிந்திருக்கிறது'' என்ற தீபச்செல்வனின் கவலைக்கு ஒரு அத்தாட்சியாகக், கிளிநொச்சியின…
-
- 0 replies
- 195 views
-
-
உடைக்கிறாரா கொத்தனார்? தமிழ்கூறு நல்லுகம் தன் இயற்கை வாழிடங்களை தாண்டி, உலகெங் பரந்து விட்ட இந்த காலத்திலும் கூட, அது தனக்கென சில விழுமியங்களை, கூட்டு கொள்கைகளை இறுக பற்றி பிடித்துத் கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒன்றுதான் கலைப்படைப்புகளில் “கெட்டவார்த்தை” அல்லது “தூசணம்” என அழைக்கப்படும் அவமரியாதை வழக்கை தவிர்த்தல். ஆங்கிலபடங்களில் சர்வசாதராணமாக வரும் இவை தமிழ்படங்களில் மிக அரிதாகவே வரும். துள்ளிசை பாடல்களிலும் இதுதான் நிலமை. இதற்கு இதுவரை ஒரே விதிவிலக்காக இருந்தது என்றால் அது திண்டுகல் ரீட்டா வகையறாக்கள் மேடையில் ஆடும், “ஆடல் பாடல் நிகழ்வு” என அழைக்கபடும் “ரெக்கோர்ட் டான்ஸ்” மட்டுமே. அங்கேயும் பாடல்களில் ஆபாசம் இராது, நகர்வுகளிலும், வசனங்களிலும்தான். அதுவும் கூட பெரும் ப…
-
-
- 9 replies
- 691 views
- 1 follower
-
-
"உன்னைச் செதுக்கு" உலகைப் புரிந்து உன்னைச் செதுக்கு உண்மை அறிந்து உளியைப் பிடி உங்கள் மதிப்புகளை கவனமாகப் பதித்து உயிராகப் பண்பாட்டை வார்த்து எடு! ஞாழல் மணமாய் பண்பு கமழ ஞாயமான வழியைத் தேடி அமைத்து ஞானம் கொண்டு அலசிப் பார்த்து ஞாலத்தை சரிப்படுத்த ஆன்மாவை வடிவமை! பூமி ஒரு சுழலும் சூறாவளி நவீன வாழ்க்கையின் தாளம் அது மாற்றம் அலை போல நிலைக்காது சமூகத்தை இணைத்தாலும் இதயங்கள் விலகிவிடும்! வெறுப்பை மூழ்கடித்து பயத்தை அமைதிப்படுத்தி ஒற்றுமை நிலைநாட்டி பிரிவை அகற்றி கருணை பாசம் இரண்டுடனும் வளர்த்து மனிதத்தை சீராக்கு மானிடம் உயரவே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 1 reply
- 150 views
-
-
"ஏனிந்தக் கோலம்" "ஏனிந்தக் கோலம் வாலைக் குமரியே ஏமாற்றிப் பிழைப்பதும் ஒரு வாழ்க்கையா ஏராளம் வேடம் ஏன் உனக்கு ஏக்கத்தில் இனியும் தவறு செய்யலாமா?" "பெண்ணியம் சொல்லுவது எல்லோரும் சமம் கண்ணியம் காக்கும் செயல் பாடுகளே மண்ணும் பெண்ணும் இயல்பில் ஒன்றே எண்ணமும் கருத்தும் ஒன்றாய் இருக்கட்டும்!" "அன்பும் நீதியும் ஒருங்கே நின்றால் அழகு பெண்ணும் மகிழ்ச்சி அடைவாள் அடிமைச் சங்கிலியை உடைத்து எறிந்து அச்சம் மடம் நாணம் ஒழியட்டும்!" "உண்மையை உணர்ந்து உலகை அறிந்து பண்பாட்டு நிலையில் சமநிலை போற்றி கண்கள் போகும் வழிகளில் போகாமல் பெண்ணே உங்கள் கைகள் சேரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்ப…
-
-
- 3 replies
- 285 views
-
-
ஒரு முட்டை ஆயிரம் டாலர் ------------------------------------------ இப்ப இங்கே பல கடைகளில் முட்டை இல்லை சில கடைகளில் இருக்கின்றது ஆனால் எண்ணி எண்ணித்தான் வாங்கலாம் பலத்த கட்டுப்பாடு தட்டுப்பாட்டால் விலையும் பல மடங்காகிவிட்டது கோழிகளுக்கு காய்ச்சல் வந்தது என்று சும்மா சுகமாக நின்றவைகளையும் அழித்துப் போட்டார்கள் இப்ப புதுதாகக் குஞ்சுகளும் வேண்டாம் என்று அங்கே குடும்பக் கட்டுப்பாடு திட்டமும் வந்துள்ளது இது என்ன கலிகாலம் அமெரிக்காவில் முட்டைப் பொரியல் கூடக் கிடையாதா...... ஊரில் வீட்டில் கோழிகள் இருந்தன அப்பா முதன் முதல் ஒரு கோழி வாங்கித் தந்தார் ஒரு விதமான மஞ்சள் கலரில் வெள்ளைப் புள்ளிகள் போட்ட கோழி அது அது வீட்டுக்கு வரும் போது அதன் வயது நாலு மாதங்கள் இருக்கும் ஒரு நாள் முழ…
-
-
- 8 replies
- 509 views
-
-
ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே!" & "வாசிப்பு" [அந்தாதிக் கவிதை] "ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே!" "ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே ஈரத்தாவணியிலே இடுப்புக் காட்டி வதைப்பவளே பரந்த பண்பொழுகும் செம்பவள திருமேனியே! எந்தை பூவையே தேன்சிந்தும் வஞ்சியே தீந்தை விழியால் மயக்கும் சுந்தரியே சிந்தை சிவக்க மகிழ்கிறேன் உன்னழகில்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................... "வாசிப்பு" [அந்தாதிக் கவிதை] "வாசிப்பு உங்கள் அறிவை வளர்க்கட்டும் வளர்க்கும் அறிவு பண்பு கொடுக்கட்டும் கொடுக்கும் பண்பு மனிதம் நேசிக்கட்டும் நேசிக்கும் மனிதர்கள் தர்மம் காக்கட்டும் காக்கும் தலைவர்கள் நீத…
-
- 0 replies
- 199 views
-
-
"வாழ்ந்து காட்டுவோம்" & "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே..!” "வாழ்ந்து காட்டுவோம்" "மாழ்ந்த நாகரிகங்களை பாடமாய் படித்து ஆழ்ந்த சிந்தனையில் இலக்கியம் படைத்து தாழ்ந்த சமூகத்துக்கு அறிவுரை வழங்கி வீழ்ந்த உறவுக்கு கைகள் கொடுத்து சூழ்ந்த பகையை அறுத்து எறிந்து வாழ்ந்து காட்டுவோம் நாம் யாரென்று!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே..!” "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே உயர்வை நோக்கி கனவு அமையட்டும்! அயர்வை அகற்றி உழைத்து துயர்வைப் போக்குங்கள்!" " பயிர்கள் செழிக்கப் பசளையிட்டு உயிர்கள் தழைக்க விளைச்சலைப் பெருக்குவீர் தயிரைக் கடைந்து வெண்ணை கொடுப்பீர் வயிறார உணவளித்தே மானுடத்தார்க்கு வாழ்வளிப்ப…
-
- 0 replies
- 146 views
-
-
செவ்வந்தியில் செவ்வந்தி --------------------------------------- எங்கள் வீட்டு செவ்வந்தியில் செவ்வந்திப் பூ ஒன்று வந்துள்ளது என்று ஒருவர் இன்னொருவரிடம் சொன்னார் 'செவ்வந்தியில் செவ்வந்திப் பூவா..........' என்று ஆச்சரியப்பட்ட அடுத்தவரிடம் இது பரமரகசியம் எங்கும் பகிரக்கூடாது என்று சத்தியமும் கேட்கப்பட்டது அடுத்த அடுத்த நாளும் இருவரும் செவ்வந்தியும் பூவும் என்று இரகசியமாக பேசிக் கொண்டனர் மூன்றாவது நாளில் மூன்றாவது நபர் ஒருவர் செவ்வந்தி செவ்வந்தி என்றார் இவரைப் பார்த்து இப்படியே பலருக்கும் இது தெரிந்திருந்தது இவருக்கு தெரிய வர அவருடன் உறவு முறிந்தது பூ காய்ந்து செடி காய்ந்து மண்ணோடு மண்ணாக கலந்து போனது எப்போதும் போலவே முறிந்த உறவும் முறிந்தே கிடக்கின்றது ஒரு ரகசியம் என…
-
-
- 3 replies
- 269 views
-
-
மூன்று அல்லது நான்கு நாட்களாக சவரம் செய்யாத முகம், கலைந்த தலை மயிர், அழுக்கான ஜக்கெற், நிறைந்த சோகம்... என பஸ் தரிப்பிடத்தில் அவன் நின்றிருந்தான். விரும்பத்தகாத ஒருவித நெடியும் அவனிடம் இருந்து வந்து கொண்டிருந்தது. அவனது முகத்தைப் பார்த்ததும் தமிழன்தான் என்று புரிந்து கொண்டேன். சனிக்கிழமை காலை நேரம், பஸ் தரிப்பிடத்தில் நானும் அவனும்தான் நின்றிருந்தோம். பஸ் வர இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. அவன் என்னைப் பார்ப்பதைத் தவிர்ப்பது எனக்குத் தெரிந்தது. அவனது பிரச்சினைதான் என்ன என்பதை அறிய விரும்பினேன். கொஞ்சம் நெருங்கிப் போனேன். நான் வருவதை உணர்ந்து ஒரு கணம் என்னைப் பார்த்தான் அந்தக் கணம் எனக்குப் போதுமானதாக இருந்தது. “தமிழோ?” குளிரில் வெடித்த அவனது வறண்ட இதழில் தோன்றிய ஒரு ச…
-
- 4 replies
- 299 views
-
-
"இதுவும் கடந்து போகட்டும்" & "மாற்றங்கள்" [அந்தாதிக் கவிதை] "இதுவும் கடந்து போகட்டும்" "இதுவும் கடந்து போகட்டும் என்கிறாய் இதயம் உடைந்து சிதறுவது தெரியாதோ? இதமாகப் பழகி ஆசையைத் தூண்டி இன்பக் கடலில் என்னை மூழ்கடித்து இப்படிச் சொல்வதின் நோக்கம் என்னவோ?" "காதல் உணர்வை வியாபாரம் செய்கிறாய் காத்து கிடந்தவனைத் தட்டிக் கழிக்கிறாயே? காலம் போக்க ஆடவன் நாடுபவளே காமம் ஊட்டி விளையாடும் ஆடவளே காரணம் தேடி கண்ணீர் கொட்டுதே?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................ "மாற்றங்கள்" [அந்தாதிக் கவிதை] "மாற்றங்கள் வேண்டி வாக்குரிமை செலுத்தியவனே செலுத்திய உனக்கு வேறுபாடு தெரிகிறதா? தெரிவதை உண்மையில்…
-
- 0 replies
- 218 views
-
-
"மன்னிப்பாயா என்னை", தாய்மை & "தாத்தா" "மன்னிப்பாயா என்னை" மன்னிப்பாயா என்னை அழகு சுந்தரியே அன்பைப் புரியாத பாவி நானே இன்பம் ஒன்றுக்கே பெண்ணென நினைத்தேனே துன்பம் தந்து கண்ணீரை வரவழைத்தேனே! பெண்ணில் பிறந்தவன் அவளையே தேடுகிறான் கண்ணை நம்பி எங்கேயோ அலைகிறான் மண்ணில் மனிதம் காக்கத் தவறி கண்ணியம் தாண்டியவனைப் பொறுத்தால் என்ன? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................. தாய்மை [கைக்கூ] தாய்மை என்பது தாயாக இருக்கும் நிலையோ தாலியின் பாக்கியமோ கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................. "தாத்தா" [தன்முன…
-
-
- 4 replies
- 248 views
-
-
"வாழ்வில் வசந்தம்" & "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல" "வாழ்வில் வசந்தம்" "வாழ்வில் வசந்தம் கட்டாயம் வரும் தாழ்வில் ஒரு உயர்வு வந்தால்! தோல்வியில் வெற்றி மனதுக்கு அமைதி சொல்லில் அடங்கா மகிழ்ச்சி அது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல" "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல தையல் அருகிலே தாளாத காதலுல தைத்த வண்ணத்துல தாமரை அழகில தைவரல் சுகத்துல தாலாட்டி மகிழ்ந்ததேனோ?" "கற்றாழை முள்ளு குத்தியதோ பாதத்தில் கண்கள் இரண்டும் கலங்கியதோ வேதனையில் கஞ்சி குடிக்கையிலே கதறல் கேட…
-
-
- 2 replies
- 190 views
-
-
"பொறுப்பற்ற ஒரு ஊதாரி கணவன்" இலங்கையின் வடமாகாணத்தில், மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களை எல்லைகளாக கொண்ட , பசுமையான மற்றும் சுறுசுறுப்பான மக்கள் நடமாட்டம் கொண்ட வவுனியா நகரின் மத்தியில், கவிதன் என்ற இளம் குடும்பத்தர் ஒருவர் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு ஊதாரித்தனமான கணவன் மட்டும் அல்ல, சுயநலமி, பொறுப்பற்றவன், அளவு கடந்து பொய் சொல்பவனாகவும் கவலையற்ற இயல்பு உடையவனாகவும் இருந்தான். அவனது மனைவி ஆதிரா, பொறுமை மற்றும் கருணையின் உருவகமாக இருந்ததுடன் எல்லா சூழ்நிலைகளிலும், எவ்வளவு கடினமாக இருந்தாலும் கணவனின் குறையை, குடும்பத்தின் பலவீனத்தை வெளியே காட்டாமல் சமாளித்து வாழ்வை கொண்டு இழுத்தாள். தான் சம்பாதித்த அல்லது சம்பாதிக்காத பணத்தை எவன் ஒருவன் எள…
-
- 0 replies
- 303 views
-
-
பார்த்தீனியம் ---------------------- கள்ளியும் முள்ளும் இருந்த வறண்ட நிலத்தில் பச்சையாக ஒன்று புதிதாக வந்தது பார்க்க அழகாகவும் படபடவென்று வளருதே என்றும் இன்னும் வளர்த்தனர் அதில் இருக்கும் முட்கள் அவை என்ன முட்கள் அவை வளர வளர போய்விடும் என்றனர் அதை வளர்த்தவர்கள் கெட்ட வாடை வருகுதே என்றால் ஆனால் பசுமையாக இருக்குதே இது நிலத்தை காக்கும் ஆடு மாட்டைக் காக்கும் இப்படி ஒன்று முன்னர் இருந்ததேயில்லை என்றனர் நாங்கள் மூக்குகளை பொத்தி விட்டால் அதன் வாடை அண்டாது என்றும் சொன்னவர்கள் வாய்களை அடைத்தனர் கள்ளியும் முள்ளும் காணாமல் போனது பச்சை செடியின் சாதனை ஆனது பரந்து வளர்ந்த பச்சை செடி விஷத்தை கொட்டிக் கொட்டி வறண்ட நிலத்தை இன்னும் கெடுத்து அருகில் வருபவற்றை முள்ளாலும் கிழித்த…
-
-
- 13 replies
- 530 views
-