யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
யாழ் கருத்து களத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
-
- 10 replies
- 926 views
-
-
வணக்கம் நான் காந்தரூபி பழையவள் புதிதாய் பிறந்துள்ளேன்.
-
- 29 replies
- 2.5k views
-
-
-
-
வணக்கம் என் இனிய சகோதர சகோதரங்களே ! நான் உங்கள் வீட்டுபிள்ளை திவ்யா வந்திருக்கிறேன். உள்ளே வரலாமா.?
-
- 22 replies
- 3.7k views
-
-
-
அரிச்சுவடியில ஒழுங்கா கருத்து எழுதினாத்தானாம் .....அங்கால போக விடுவினமாம்....! என்னத்தை எழுதுறது என்டு யோசிக்கிறன். நான் லூசுத்தனமா "அனைவருக்கும் வணக்கம்" என்டு அடிச்சுப் போட்டன். இல்லாட்டி... ஒவ்வொருத்தருக்கும்..... அண்ண வணக்கம்! அக்கா வணக்கம்! தம்பி வணக்கம்! தங்கச்சி வணக்கம்! என்டு.... தனித்தனியா ஸ்பெஷல் வணக்கம் போட்டுட்டு கம்பீரமா உள்ளுக்குள்ள போயிருக்கலாம். என்ர அவசரப்புத்தியை என்னென்டு திட்டுறதென்டு எனக்கு விளங்கேல!
-
- 56 replies
- 3.9k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! யாழுக்குள்ள வாறதுக்கு அனுமதி கிடைக்குமோ இல்லையோ என்டு தெரியேல...?! இருந்தாலும்....... என்னையும் ஏத்துக்கொள்ளுவீங்கள் என்டு ஒரு நம்பிக்கையில வாறன்! சீனியர் எல்லாருக்கும் வணக்கம்! யூனியர் எல்லாருக்கும் வணக்கம்! முக்கியமா... மட்டுறுத்துநர்கள் எல்லாருக்கும் வணக்கம்! தயவுசெய்து என்னை கொஞ்சம் உள்ள வர விடுவியளோ!??? அன்புடன்...பணிவுடன்... -பார்த்தீபன்-
-
- 8 replies
- 962 views
-
-
அனைவருக்கும் வணக்கம்.என்னை உருவாக்கியவர் எனக்கு வைத்த பெயர் றோபோ1.எனக்கு உணர்ச்சிகள் இல்லை அவ் உணர்ச்சிகளை பெறுவதிற்காக உங்களிடம் வந்துள்ளேன் என்னை ஒரு எந்திரம் என்று நினைக்காது வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி
-
- 12 replies
- 1.2k views
-
-
யாழ் உறவுகளுக்கு என் இனிய வணக்கங்கள் உங்களுடன் யாழ் கருத்து களத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை பற்றி சொல்வதற்க்கு பெரிதாக ஒன்றுமில்லை ஏதோ சுமாராக கவிதை எழுதுவேன் அமைதியான இசை பாடல்கள் எம்மவர் பாடல்கள் படங்கள் கவிதைகள் விருப்பி படிப்பேன் அவ்வளவுதான் நன்றி எஸ்வீஆர்.பாமினி
-
- 16 replies
- 1.2k views
-
-
-
வணக்கம். எனது பெயர் பாபு. சுருக்கமாக பெற்றோரிட்ட பெயர் கணேஷ் பாபு. மற்றோரும் உற்றோரும் என்னை விரிவாக விளித்தலே எனக்கு விருப்பம். எனது அடையாளமாக நம் தமிழைத் தவிர எனது சிந்தனைகளும், வார்த்தைகளுமே இருக்கவேண்டும் என்பது எனது விருப்பம். என்னை, என் பணியை வைத்தோ, கல்வியை வைத்தோ அல்லது வயதை வைத்தோ எடைபோடவேண்டாம் என்பதற்காக அவற்றைத் தவிர்க்கின்றேன். எனக்கென்று ஓர் இடம், என் நாடு, என் மக்கள் என்றிருந்தாலும், உங்கள் மனதையும் வெற்றி கொள்ள தனித்து வந்துள்ளேன். வரவேற்பீரா...?
-
- 18 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்திற்கும் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் லார்ட்ஸில் நேற்று தொடங்கியது. தொடங்கும் முன்னரே 150,000 பவுண்டுகள் தொகைக்கு சூதாட்டம் நடப்பதாக ' நியூஸ் ஆப் தி வேர்ல்டு ' என்ற செய்தித் தாளில் செய்தி வெளியிடப்பட்டது. இது குறித்த விசாரணையில் இறங்கிய ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறை சூதாட்டத்தில் ஈடுபட்ட 35 வயது மதிக்கத்தக்க ஒருவரை சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்தனர். இருப்பினும் நேற்று தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன. மேலும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் , உதவி கேப்டன் உட்பட நான்கு பேர் ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறையால் விசாரிக்கப்பட்டதில் முதல் மூன்று நோ-பால் களுக்காகவே இந்த சூதாட்டம் நடைபெற்றதும் முன்பே பாகிஸ்தான்…
-
- 1 reply
- 593 views
-
-
வணக்கம் உறவுகளே நான் ரூபன், தற்போது நாடோடியாக மலேசியாவில்...
-
- 13 replies
- 2.8k views
-
-
வணக்கம் உறவுகளே, மிகவும் நீண்ட ஓர் இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் களத்திலே தவழுகின்றேன்... என்னை முன்னர் அரவணைத்த கரங்களுக்கும், இனி அரவணைக்கப்போகும் கரங்களுக்கும் என் நன்றிகள், அரவணைக்காது அறுக்கப்போகும் கைகளுக்கும் என் ஆதரவுகள், என் உளமார்ந்த நன்றிகள்... சோகம், கவலை, சோம்பேறித்தனம், இவற்றைக்கடந்த அன்பு, ஆதரவு என்பதுதான் யாழ்க்கள உறவுகள் என்று மீண்டும் ஓர்முறை நிரூபியுங்கள். தமிழினம் மீண்டும் உயிர்ப்பெறும்... நாம் மனதுவைத்தால்...
-
- 52 replies
- 5.5k views
-
-
வணக்கம் நான் யாழ் வந்திருக்கின்றேன். என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். சேர்த்துக்கொள்வீர்களா?
-
- 17 replies
- 1.7k views
-
-
ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் காலங்காலமாக தமது காதுகளை அலங்கரிப்பதற்காக காதணிகளை அணிந்ததாக நாம் அறிகிறோம். இக்கருத்தை இலக்கியங்களும் வலுப்படுத்துகின்றன. இன்றைய காலங்களில் காதுகளில் அணிகின்ற பொன் ஆபரணங்கள், வெள்ளி ஆபரணங்கள், கல் வைத்த ஆபரணங்கள் என அனைத்தையும் 'தோடு' என்ற சொல்லால் நாம் பொதுவாக அழைக்கிறோம். தற்போது fashion தோடுகளும் சந்தையில் தாராளமாகக் கிடைக்கின்றன. இன்று நாம் 'தோடு' அழைக்கின்ற காதணிக்கு ஆரம்ப காலங்களில் 'ஓலை' என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஓலை எனக்கூறப்படுவது பலை ஒலையை ஆகும். அதாவது சுருளாக மடிக்கப்பட்ட பனை ஓலையை காதுகளில் அணிந்த காரணத்தால் காதணிக்கு பழங்காலத்தில் ஓலை என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. தாலி என்பது கூட 'தாலம்' என்ற சொல்லில் …
-
- 2 replies
- 895 views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள அழகிய ஊர்தான் சரசாலை. சரசாலைக் கிராமம் அரசாங்க நிர்வாகக் கட்டமைப்பு ரீதியில் ஜே/316 சரசாலை தெற்கு எனவும் ஜே/ 317 சரசாலை வடக்கு எனவும் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலப் பாரம்பரியமுள்ள இந்த ஊரில் விவசாயப் பெருங்குடி மக்கள் அநேகர் வாழ்ந்து வருகின்றனர். வானுயர்ந்த தென்னை மரங்கள் மூலம் வருமானமீட்டுவோருமுள்ளனர். சரம் + சாலை என்பதே சரசாலை என ஆகியதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பான கன்ன பரம்பரைக் கதையொன்றும் ஊரவர்களால் கூறப்படுகின்றது. சீதையைச் சிறைமீட்க இலங்கை வந்த இராமன் மாதகலில் உள்ள திருவடிநிலைக் கடற்கரையில் இறங்கினார். அங்கிருந்து முன்னேறி இராவணனுடன் போர்புரிவதற்குத் தேவையான ஆயுதங்கள…
-
- 15 replies
- 1.8k views
-
-
ஊடகத்துறையில் இருந்தாலும் யாழ் இணையத்தோடு பார்வையாளனாக மட்டுமே இருந்து இன்று உங்கள் அனைவருடனும் சங்கமிக்க கால் பதித்திருக்கிறேன். நன்றி குஞ்சு
-
- 17 replies
- 1.9k views
-
-
வணக்கம் யாழ்.... நேற்றுதான் முதன் முதலில் இந்த இணையத்தை பார்த்தேன், எனக்கு பிடித்தது. உடனே பதிவு செய்து விட்டேன். அனைவருக்கும் என் வணக்கம்....
-
- 14 replies
- 1.7k views
-
-
http://www.youtube.com/watch?v=nYcNnGQMYV4 http://www.youtube.com/watch?v=77g3-axKdq0 http://www.youtube.com/watch?v=OTHCVOaenDI http://www.youtube.com/watch?v=UhdO2QFyqJ8
-
- 12 replies
- 1.6k views
-
-
அன்பு யாழ் இணைய தோழர்,தோழிகளே நான் சில காலமாகத்தான் எழுதி கொண்டிருக்கிறேன்...என் பதிவுகளை இங்கு வந்து படிக்கலாம்....உங்கள் கருத்துகளை அன்புடன் எதிர்பார்கிறேன்... அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
-
- 14 replies
- 1.8k views
-
-
கடைசி யுத்த காலத்தில் முள்ளிவாய்க்காலின் கொடுமையான அனுபவங்களைப் பெற்ற நான். ஒரு புதியவனாய் இக்களத்திற்கு வந்திருக்கின்றேன். என்னையும் ஒரு உறுப்பினனாக அங்கீகரித்து வரவேற்கும் படி அன்புடன் கோருகின்றேன்.
-
- 15 replies
- 1.4k views
-
-
-
ஐயா சாமி என்னை இன்னும் மற்ற "இடங்களில்" எழுத விடவில்லை என்றால், யாழில் எழுதுவதை விட்டுவிடுவேன். இன்னும் அரிச்சுவடியில்தான் பாப்பா மாதிரி எழுத வேண்டுமா?
-
- 5 replies
- 901 views
-