யாழ் முரசம்
கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்
யாழ் முரசம் பகுதி நிர்வாகத்தினரைச் சேர்ந்தவர்களுக்கானது. இப்பகுதியில் கள விதிமுறைகள், அறிவித்தல்கள், உதவிக்குறிப்புகள் போன்றன நிர்வாகத்தினரால் இணைக்கப்படும்..
80 topics in this forum
-
நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத் தளம் ஒன்றில் இருந்து இணைக்கப்பட்ட காணொளி நீக்கப்பட்டது.
-
-
- 5 replies
- 1.1k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 26ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2025) 27ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்த யாழ் இணையம், உலகத் தமிழர்களின் எண்ணங்களையும், உள்ளங்களையும் இணைக்கும் தருணங்களை உருவாக்கி வருகிறது. பல கருத்தாளர்கள், படைப்பாளிகள், தொழில்நுட்பவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து தமிழ் மொழியின் வளத்தையும், கருத்துச்சுதந்திரத்தையும் பறைசாற்றும் தளமாக இது திகழ்கிறது. இவ்வாண்டும், முன்னைய ஆண்டுகள்போலவே யாழ் இணைய உறவுகள் தங்கள் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து, தனிப்பட்ட ஆக்கங்களை பகிர்ந்து, விவாதங்களைப் …
-
- 0 replies
- 757 views
-
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன். எனும் திரியில் இருந்து பல தனிமனித தாக்குதல் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன. களவிதிகளை மீறும் கருத்துக்களை உறுப்பினர்கள் நிர்வாகத்திற்கு முறைப்பாட்டு முறை மூலம் அறியத்தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து யாழ் களத்தின் தரத்தைப் பேணமுடியும். இதற்கு கள உறுப்பினர்களின் ஒத்துழைப்பைக் கோருகின்றோம்.
-
-
- 9 replies
- 11.1k views
-
-
யாழ் கருத்துக்களத்தில் எவ்வாறு இணைந்து கொள்வது என்பது பற்றிய விளக்கத்துடன் இணைந்தபின் கருத்தினை / பதிவினை எவ்வாறு வைப்பது என்பது பற்றிய விளக்கம்.
-
- 0 replies
- 5.2k views
- 1 follower
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம். இன்று விரிந்து வரும் தமிழ் இணைய ஊடகப் பரப்பில் பல்வேறுபட்ட போக்குகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது செய்தி/கட்டுரை/எழுத்தாக்க திருட்டு. உரிமையாளர் வேறொருவராக இருக்க, அதை பிரதியெடுத்து தமதாகக் காட்டிக்கொள்ளும் மிகக் கீழ்த்தரமான செயல் இன்று பரவலாக இடம்பெறுகிறது. ஆக்கங்களைத் திருடி, உரிய மூலத்தைக் குறிப்பிடாது தமது இணையத்தளங்களில் இணைப்பதும் - அதனூடாக தமது இணையத்தளங்களுக்கு விளம்பரம் தேடுவதும் இவர்களின் வேலை. இதன் விளைவாக அதிக வாசகர்களை தமது தளத்துக்கு திருப்பி - கூகிள் போன்ற விளம்பர சேவைகளினூடாக பணம் சம்பாதிப்பதும் நடைபெறுகிறது. ஒரு செய்தியைப் பெறுவதற்கு பின்னால் உள்ள உழைப்பு அல்லது ஒரு கட்டுரையை எழுதுவதற்கு பின்னால் உள்ள உழைப்பு - இவை…
-
-
- 7 replies
- 11.1k views
-
-
வணக்கம், கால மாற்றங்களுக்கு ஏற்ப இதுவரை இருந்த யாழ் கருத்துக்கள விதிகள் மீளாய்வு செய்யப்பட்டு தெளிவற்றவை சிலவற்றில் மாற்றங்களும், புதிய விதிகளும் புகுத்தப்பட்டு கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 4.0 கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் 01 நவம்பர் 2020 ஞாயிறு (01.11.2020 - 00:00 மணி) முதல் நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆகவே யாழ் கள உறுப்பினர்கள் விதிமுறைகளை உள்வாங்கி யாழின் வளர்ச்சிக்குத் துணைபுரியுமாறு வேண்டிக்கொள்கின்றோம். மேலும் கருத்துக்கள விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீது மட்டுறுத்துதலும், பயனர்கள்/கள உறுப்பினர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். 1. கர…
-
- 0 replies
- 1.4k views
-
-
இணைய வழங்கியினை மாற்ற வேண்டியிருப்பதால் வரும் 15ம் திகதியில் இருந்து 17ம் திகதி வரையான காலப் பகுதியில் யாழ் இணைய சேவைகளில் தடங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளது. தடங்கலுக்கான நேரம் சில மணி நேரங்களாகத் தான் இருக்கும் எனக் கணிப்பிட்டாலும் எதிர்பாராது வரும் சிக்கல்களைப் பொறுத்து தடங்கலுக்கான காலப்பகுதி நீளலாம் என்பதால் 15ம் திகதியில் இருந்து 17ம் திகதி வரை என்று காலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
-
- 5 replies
- 1.3k views
-
-
நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
-
- 0 replies
- 436 views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 25ஆவது ஆண்டினை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2024) 26ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. கருத்தாளர்களே யாழ் இணையத்தின் மிகப் பெரும் பலம். அந்த வகையில் யாழ் இணையத்தின் கருத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பு மற்றும் சகிப்புத் தன்மை இன்னும் மேலதிகமாக இருக்க வேண்டும் என்றும் யாழ் இணையம் விரும்புகின்றது. கருத்தாளர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருத்தாட வேண்டும் என்றும் அவ்வாறு நிபந்தனைக்கு உட்படும் போது கருத்தாடல்கள் ஆரோக்கியமாக அமையும் என்பதுடன் தேவையற்ற கசப்புணர்வுகள் தவிர்க்கப்படும் என்பது உங்களுக்கு சொல்லித் தெரியத் தேவையில…
-
- 0 replies
- 472 views
-
-
வணக்கம், கருத்துக்கள மென்பொருள் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவையுள்ளதால் இன்று (18 Oct 2022) பின்னேரம் 5 மணியளவில் இருந்து சில மணி நேரங்களுக்கு யாழ் இணையம் இயங்க மாட்டாது. நன்றி நிர்வாகம்
-
-
- 8 replies
- 2.3k views
-
-
வணக்கம், ஆரோக்கியமான உரையாடல்களுக்காகவும் யாழ் கள உறவுகளுக்கிடையேயான இலகுவான மற்றும் சுமூகமான கருத்தாடல்களுக்கான மேடையாகவும் அமைக்கப்பட்டு இருந்த திண்ணை, பல முறை விதி மீறல்களை பற்றி குறிப்பிட்டும் அவற்றை அலட்சியம் செய்து யாழ் கள விதிகளுக்கு முற்றிலும் எதிராகவும், களத்தில் நீக்கப்படுகின்ற விதி மீறல்களுக்குரிய கருத்துகளை வைப்பதற்கான தளமாகவும்,குழுவாதத்தை தூண்டுவதற்கான வெளியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தமையால் யாழில் இருந்து நீக்கப்படுகின்றது. நன்றி நிர்வாகம்
-
-
- 2 replies
- 1.2k views
-
-
சீனாவில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கோவிட் உயிரிழப்புகள்! மயானங்களில் குவியும் சடலங்கள் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. வேறு திரிகளில் இருந்து காவுவதும், தலைப்புக்கு சம்பந்தமற்று கருத்தாடல் புரிவதும் களவிதிகளுக்கு முரணானவை. தொடர்ச்சியாக மீறுபவர்கள் காலவரையின்றி மட்டுறுத்துனர் பார்வையில் வைக்கப்படுவர்.
-
-
- 13 replies
- 2.8k views
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம், உலகத் தமிழரை இணையவெளியில் ஒன்றிணைத்து, தமிழ்மொழியில் தனித்துவமாகக் கருத்தாடுவதை ஓர் உன்னதமான நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ் இணையம் தற்போது அகவை 25 இல் நடைபோடுகின்றது. எனினும்: யாழ் இணையத்தில் கருத்தாடும் கருத்தாளர்களின் எண்ணிக்கையிலும், திரிகளைப் பார்வையிடுவோரின் எண்ணிக்கையிலும் பாரிய சரிவு நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அண்மைய தரவுகள் காட்டுகின்றன. தாயகத்தில் வசிப்போர் அதிகளவு பிற சமூகவலைத் தளங்களைப் பாவித்தபோதிலும், விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே யாழ் கருத்துக்களத்தில் உறுப்பினர்களாக இணைந்து கருத்தாடல்களில் ஈடுபடுகின்றனர். இது யாழ் இணையம் தாயக மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும், யாழ் இணையம் தாய…
-
- 0 replies
- 724 views
-
-
மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு இன்று (30.03.2023) யாழ் இணையம் 24 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 25 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. உலகத் தமிழரை இணையவெளியில் ஒன்றிணைத்து, தமிழ்மொழியில் தனித்துவமாகக் கருத்தாடுவதை ஓர் உன்னதமான நோக்காகக் கொண்டு, 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் மென்பொருள் சிற்பி மோகன் அவர்களால் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது. முதலாவது கருத்துக்களம் பாமினி எழுத்துருவில் அமைந்திருந்தது. அதனால் பாமினி எழுத்துருவில் பரிச்சயமானவர்கள் ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்) பகுதியில் இருந்து ஒரு பதிவு நீக்கப்பட்டுள்ளது
-
- 13 replies
- 4.4k views
-
-
யாழிணைய உறவுகளுக்கு வணக்கம், கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக யாழிணையம் தொழில்நுட்பச் சிக்கல்களால் இயங்கவில்லை. யாழிணையத்தின் சேவைகளை தொடர்ச்சியாகக் கொடுக்கமுடியாமல் போனமைக்காக வருந்துகின்றோம். யாழிணையமானது இயங்குதளம், தரவுத் தளம், கருத்துக்கள மென்பொருள், முகப்பு மென்பொருள் என பல்வேறு சிக்கலான அடுக்குகளைக் கொண்டது. அத்தோடு யாழிணையம் ஆரம்பித்த காலத்திலிருந்து உள்ள கருத்தாடல்களை வெவ்வேறு கருத்துக்கள மென்பொருள் பதிப்புக்களில் வைத்திருக்கவேண்டிய தேவையும் உள்ளது. மேலதிகமாக சேமிக்கப்பட்ட கருத்தாடல்களையும், படிமங்களையும் தொடர்ச்சியாகப் பிரதியெடுக்கவும் வேண்டும். எனினும் கடந்த சில வாரங்களாக கருத்துக்களத் தரவுகளை (data) பிரதியெடுப்பதில் (backup) சிக்கல்கள் தோன்றிய…
-
- 0 replies
- 491 views
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம், உலகத் தமிழரை இணையவெளியில் ஒன்றிணைத்து, தமிழ்மொழியில் தனித்துவமாகக் கருத்தாடுவதை ஓர் உன்னதமான நோக்காகக் கொண்டு யாழ் இணையம் எனும் கருத்துக்களத்தை, கடந்த 24 வருடங்களுக்கு மேலாக பல்லாயிரம் மணித்துளிகளைச் செலவழித்து கட்டியமைத்த சிற்பி மோகன் அவர்கள் யாழ் இணைய நிர்வாகத்தில் இருந்து முழுமையாக ஒதுங்கியுள்ளார். யாழ் இணையத்தை மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்தும் புதுப்பித்து, உலகத் தமிழரின் காலக்கண்ணாடியாக யாழ் இணையம் விளங்க தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த மோகனுக்கு எமது நன்றிகள் என்றென்றும் இருக்கும். கடந்த மாதத்தின் இறுதியுடன் யாழ் கருத்துக்களத்தை முற்றாக மூடி வாசிப்புக்கு மாத்திரம் திறந்து வைத்திருக்க முடிவு எடு…
-
- 0 replies
- 1.2k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 23ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2022) 24ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. கோவிட்-19ல் இருந்து உலகம் முற்று முழுதாக மீள முடியாது தொடர்ச்சியாக ஒரு நெருக்கடிக்குள் இன்றும் உள்ள நிலையில் உலகின் ஒரு பகுதியில் நடைபெறும் யுத்தமானது மொத்த உலகத்தினையும் புதியதொரு நெருக்கடியில் தள்ளியுள்ளது. சில நாடுகளின் அவரசமான முடிவுகள் இந்த நெருக்கடியை பொருளாதார ரீதியில் உலக மக்கள் ஒவ்வொரின் மேலும் நேரடியாகவே மறைமுகமாகவே திணிக்கின்றது. குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் இன்னமும் நெருக்கடியினைச் சந்திக்கின்றார்கள் சந்திக்கப் போகின்றார…
-
- 0 replies
- 2.8k views
-
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! யாழ் இணையம் வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியின் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும், தமிழ் சமூகத்தின் தேவைகளுக்கும், சிந்தனைமுறைகளுக்கும் ஏற்ப தன்னை காலத்துக்குக் காலம் புதுப்பித்துக்கொண்டும், பல சவால்களையும் தாண்டியும், தமிழிலே கருத்தாடல்கள் புரியும் தனித்துவமான இணையத்தளமாக விளங்குகின்றது. தமிழ்த் தேசியத்துக்கும், தாயக மக்களுக்கும் தொடர்ந்தும் துணைநிற்பதோடு, அவைசார்ந்த ஆக்கபூர்வமான கருத்தாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரவேற்கிறது. தமிழ் மக்கள் சகல உரிமைகளுடனும், சுயகெளரவத்துடனும் வாழ தனிநாடே தீர்வாகும் என்ற கொள்கையுடன் மக்களின் விடுதலைக்காகப் போராடி விதையான மாவீரர்க்கும், மக்களுக்கும் தனது வீரவணக்கத்தை த…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 22ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2021) 23ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. கடந்த வருட ஆரம்பத்தில் இருந்து முழு உலகமுமே ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. முன்னர் குறிப்பிட்ட விடயத்தினையே மீண்டும் இத்தருணத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம். அதாவது எம் ஒவ்வொருவருக்கும் முன்னுள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இவ்வேளையில் யாழ் கள உறுப்பினர்களும் தம்முன் உள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து முன்மாதிரியாக செயற்பட வேண்டிக் கொள்கின்றோம். குறிப்பாக இணைக்கப்படும் மருத்துவ…
-
- 0 replies
- 858 views
-
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 21ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2020) 22ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. இன்று முழு உலகமுமே ஒரு நெருக்கடியான காலத்திலும் பதட்டத்திலும் இருக்கின்ற இவ்வேளையில் எம் ஒவ்வொருவருக்கும் முன்னுள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இவ்வேளையில் யாழ் கள உறுப்பினர்களும் தம்முன் உள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து முன்மாதிரியாக செயற்பட வேண்டிக் கொள்கின்றோம். குறிப்பாக இணைக்கப்படும் மருத்துவக் குறிப்புகளினைக் கவனத்தில் கொண்டு அவைகள் இணைக்கப்பட வேண்டும். பெரும்பாலான செய்திகள் பணம் உழைக்கும் நோக்கில் பரபரப்பிலேயே வைத்…
-
- 0 replies
- 1.5k views
-
-
COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு என புதிய பகுதி ஒன்றினை ஆரம்பித்துள்ளோம். இங்கு அரசுகளால், உலக சுகாதார சபை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் , நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்களால் மற்றும் உறுதி செய்யப்பட்ட COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் இங்கு பதிந்து கொள்ளுங்கள். COVID-19: Coronavirus செய்திகள் இப்பகுதியில் இணைக்கப்படலாகாது. செய்திகள் அதற்குரிய பகுதிகளில் இணைத்துக்கொள்ளுங்கள். https://yarl.com/forum3/forum/222-covid-19-coronavirus-பாதுகாப்பு-வழிமுறைகள்-மற்றும்-ஆலோசனைகள்/
-
- 0 replies
- 1.6k views
-
-
87 பில்லியனை மீளப்பெற அமெரிக்கா பறக்கிறது இலங்கையின் உயர்மட்டக்குழு! எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமில்லாத சீண்டல்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.
-
- 38 replies
- 12.1k views
-