நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
809 topics in this forum
-
நேரம் ஆர். அபிலாஷ் நண்பர் விநாயக முருகன் ஒருமுறை என்னிடம் முழுநேர எழுத்தாளனாகும் தன் விருப்பத்தை கூறினார். அவர் இப்போது மென்பொருள் துறையில் இருக்கிறார். தினமும் எழுதும் பொருட்டு இரவெல்லாம் விழிக்க வேண்டி இருக்கிறது. அந்தளவுக்கு அவரது பகல் நேரத்தை முழுக்க வேலை உறிஞ்சிக் கொள்கிறது. இரவுத்தூக்கத்தை கடன் வாங்கி இருநாவல்களை எழுதி விட்டார். ஆனால் தனது ஒரு நாளின் முழுநேரத்தையும் எழுத்துக்கு செலவழிக்க ஆசை என்றவர் அதற்காய் எதிர்காலத்தை திட்டமிடுவதாய் கூறினார். எனக்கு அப்படி ஒருவர் முழுநேர எழுத்தாளனாவது உண்மையில் பயன் தருமா என ஐயம் தோன்றியது. மேற்கில் எழுத்தாளர்கள், குறிப்பாய் வெற்றி பெற்ற வணிக மற்றும் இலக்கிய எழுத்தாளர்கள், முழுநேர எழுத்தாளர்களாய் தான் இருக்கிறார்கள். அவர்களுக்…
-
- 1 reply
- 1.7k views
-
-
போராளியின் காதலி எமது இறுக்கமான சமூகத்திற்குள்ளிலிருந்து, தன்னையும் ஒருவித குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிக்கொண்ட ஒரு பெண்ணின் வாழ்வு எப்படி போராட்டத்தினூடு விரிகின்றது என்பதை இப்புனைவு பேச முனைக்கின்றது. பெற்றோர்/உறவுகளோடு அவ்வளவு ஒன்றமுடியாத, சாதியத்தை ஏதோ ஒருவகையில் எதிர்க்கின்ற இப்பெண், தன்னோடு வைத்தியசாலையில் இணைந்து பணியாற்றிய போராளிக் காதலனைத் தேடி புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த வன்னிக்குள் செல்கின்றார். பல சாதாரண மக்களுக்கு, போராளிகள் மீது ஒருவகை வெறுப்பும், அந்நியத்தன்மையும் இருப்பதை மட்டுமின்றி எமக்கிடையேயிருக்கும் சாதியமும் இப்புனைவின் தொடக்கப்பகுதிகளில் விரிவாகச் சொல்லப்படுவதை முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். போராட்டத்தை ஒருவகை வீரதீர சாகசமாக மட்டும் …
-
- 0 replies
- 622 views
-
-
ஒருநாள் சென்னைப் புத்தகக் கண்காட்சியிற்கு வெளியில் புல்வெளியில் இருந்து நண்பர்களோடு கதைத்துக்கொண்டிருந்தபோது, சாரு நிவேதிதா நடந்துபோய்க்கொண்டிருந்தார். நண்பரொருவர் ஸ்பானிய எழுத்தாளர் (சாருவின் நடையில் சொல்வதென்றால் எஸ்பஞோல்) போகின்றார், கவனிக்கவில்லையா எனக் கேட்டார். எனக்கு முதலில் விளங்கவில்லை. தனியே போய்க்கொண்டிருந்த சாருவை முன்னரே சுட்டிக்காட்டியிருந்தால் போய் அவரோடு கதைத்திருக்கலாம் எனச் சொன்னேன். ஆகக்குறைந்தது எப்போதும் படை, பரிவட்டம், பல்லக்குச் சூழச்செல்கின்றவர் என எண்ணியிருந்த எனக்கு இப்படித் தனித்துப்போனதை ஒரு படமாவது எடுத்திருக்கலாமெனத் தோன்றியது. பிறகு சாரு பற்றியே நிறையக் கதைத்துக்கொண்டிருந்தோம். அந்தப் பொழுதில் அருகில் நிறுத்தியிருந்த காருக்குள் ஒருவர் ஏறியது…
-
- 0 replies
- 647 views
-
-
அழிவைப் பற்றிய மக்களின் குரல் / கிருஷ்ணமூர்த்தி 2013 ஆம் ஆண்டு ஈழத் தமிழ் பிரச்சினைல் படுகொலை செய்யப்பட சிறுவனுக்காக தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். எல்லா கல்லூரிகளிலிருந்தும் பெருவாரியாக மாணவர்கள் தர்ணாவிற்காக கல்லூரியின் வாசலிலும் அல்லது இரண்டு மூன்று கல்லூரிகளுக்கு பொதுவான இடங்களிலும் மறியலில் ஈடுபட்டனர். வெயில் தணியாத சூட்டுடன் இருக்கும் சாலைகளில் அமர்ந்தபடியே தங்களின் எதிர்ப்பை காட்டியது மாணவர் குழுமம். நான் அதில் பங்கு கொள்ளவில்லை. ஒரு வாரம் விடுமுறை என வீட்டிற்கே விரைந்து கொண்டிருந்தேன். அந்நேரம் என்வசம் அபத்தமான நியாயவாதம் இருந்தது. அது இரண்டு அடிப்படை விஷயங்களை தர்க்கத்திற்கு கொண்டுவருவதற்கான கேள்விகள். 1. இந்த போராட்டத்தால் என்ன விளையப் …
-
- 1 reply
- 2.8k views
-
-
அனைவரும் படித்து அறிய வேண்டிய நூல்களை கள உறவுகள் இங்கு இணைக்கலாம் நூல்களை பற்றி சிறிது விளக்கங்களுடன் இணைத்தால் நலம். இணையத்தில் இலவசமாக கிடக்கும் நூல்களை முதலில் இணைக்கவும் கோப்பி ரைட் தேவை படும் நூல்களுக்கு பிறகு தகுந்த ஏற்பாட்டுடன் இணைக்கலாம்(நிர்வாகம் நூலக பகுதியை ஆரம்பித்து தனி தனி அணைத்து வகையான தலைப்புகளின் கீழும் கள உறவுகள் தங்களுக்கு தெரிந்த நூல்களை இணைக்கும்படி ஒரு பொறிமுறை உருவாக்கி தந்தால் வரவேற்கிறேன் ) 1.திருக்குறள் முதல் நூல் திருக்குறள் இதை விட சிறந்த நூல் வேறெந்த மொழியிலும் இல்லாததால் இதற்கு முதலிடம். link: https://books.google.ae/books?id=5OzOBwAAQBAJ&printsec=frontcover&dq=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%…
-
- 7 replies
- 19k views
-
-
எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளைப் புரிந்து கொள்ளவும் அவர்களைக் கையாளவும் பெற்றோர்களுக்குப் பயன் படக்கூடிய ஒரு நடைமுறைக் கையேடாக வந்துள்ளது இந்த நூல். எளிமையும் ஆழமும் குழந்தை வளர்ப்பில் எழக்கூடிய பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள், நோய்கள், அவற்றுக்கான தடுப்பு முறைகள், முதலுதவிகள், அந்த வயதுக்குரிய குழந்தைகளின் கல்வி, உளவியல், கற்றல் முறைகள் எனப் பல்வேறுபட்ட விஷயங்கள் எளிமையான முறையில் விளக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் உடல்,மனம், சமூகப் பண்பு, கற்றல் திறன்கள், ஆளுமை என அனைத்திலும் பெற்றோர்கள் கவனம் செலுத்த உதவும் வகையில் இந்தக் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. முரண்டுபிடித்தல், தாக்கும் குணம் உள்ளிட்ட நடத்தைகளுக்கான காரணங்களையும் விவாதித்துள்ளார். கு…
-
- 0 replies
- 1.7k views
-
-
வினோதினியின் 'முகமூடி செய்பவள்' எப்போது தத்தளிக்கும், எப்போது நிதானமாகும் என்று அறியா மனது எனக்கு உரித்து. என்றும் போல விளிம்பில் சிதறத்துடிக்கும் கணங்களை வாசிப்புடன் தாண்டிச் செல்லவே இம்முறையும் முயற்சித்திருந்தேன். அண்மைக்காலமாய் கவிதைகளை நிதானமாய் இரசித்து முழுமையாய் வாசிக்கும் மனதையும் தொலைத்தே விட்டதாகவே உணர்ந்திருந்தேன். தமிழில்தான் இப்படித் தோன்றுகின்றதோ என யோசித்து, ஆங்கிலத்தில் வந்த தொகுப்புக்களையோ அல்லது சஞ்சிகைகளான American poetry review போன்றவற்றையோ வாசித்தாலும் அவற்றை வார்த்தைகளாய் மட்டும் இயந்திரத்தனமாய் வாசித்துக்கொண்டுபோகின்றேன் போன்ற நினைப்பே வந்தது. தற்செயலாய் இன்று சென்னைப்புத்தகக்கண்காட்சியில் வாங்கியிருந்த வினோதினியின் 'முகமூடி செய்பவள்' ஐ எடுத…
-
- 0 replies
- 2.2k views
-
-
இரண்டு வகை வாசிப்பு மற்றும் எழுத்து வாசிப்பை செயலூக்கமுள்ளது (active) மற்றும் செயலற்றது (passive) என பிரிக்கலாம். இன்று மீடியா ஆதிக்கம் காரணமாய் செயலற்ற வாசிப்பு அதிகரித்துள்ளது. அல்லது இப்படியும் பார்க்கலாம். புதிதாய் இணையம் மற்றும் பத்திரிகை மூலமாய் வாசிக்க துவங்கி உள்ளவர்களின் வாசிப்பு செயலற்றதாய் உள்ளது. ஐ.டியில் பணிபுரிந்து பின்னர் ஒரு முக்கிய சினிமாவில் வில்லனாய் நடித்த ஒரு இளைஞரை சந்தித்தேன். அவர் தான் இயக்குநராக விரும்புவதாய் தெரிவித்தார். எப்படி அதற்காய் தயாரிக்கிறீர்கள் எனக் கேட்டேன். அவர் சொன்னார் “நான் யாரிடமும் உதவி இயக்குநராய் பணி புரியவில்லை. நானாகவே கற்றுக் கொள்கிறேன்” “எப்படி? சினிமா பற்றின புத்தகங்கள் படிக்கிறீர்களா?” “நான் புத்தகங்கள் அ…
-
- 1 reply
- 1.7k views
-
-
குணா கவியழகனின் 'விடமேறிய கனவு' நூல் வெளியீட்டுக்கு சென்றிருந்தேன்
-
- 0 replies
- 712 views
-
-
புத்தக அறிமுகம் நூலாசிரியர்: காசியபன் நாவல் யாரைப் பற்றியது? வெற்றிகரமாகவும் சாமர்த்தியமா கவும் சமூகத்தில் கவுரவமாகவும் வாழ்வதுகுறித்துப் பல அறிவுரைகளும் முன்னுதாரணங்களும் எப்போதும் சொல்லப்பட்டுவருபவைதான். பெரும் பாலான மனிதர்கள், சமூகத்தில் நிலவும் பொதுநடை முறைகளுக்கு உட்பட்டு வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள். வாழ்நாள் முழுக்கத் திட்டமோ உத்தியோ சாமர்த்தியமோ இல்லாமல் விதிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து வாழ்ந்து மறைபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வெற்றிபெற்றால் அதிர்ஷ்டசாலி என்றும், தோல்வியடைந்தால் அசடு என்றும் அழைக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட அசடு எனக் கருதப்படும் கணேசன் என்ற மனிதனின் கதை இது. வாழ்நாள் முழுவதும் ஓட்டல் பரிசாரகனாகவே வேலைபார்த்தவன். ஆனால், சாம்பா…
-
- 0 replies
- 449 views
-
-
நாஞ்சில் நாடன், கே.ஆர்.மீரா, ஹனிஃப் குரியேஷி உணவுக் கலாச்சாரம் நாஞ்சில் நாடன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். சாகித்திய அகாடமி விருது, இயல் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். இவரது நாவலான 'தலைகீழ் விகிதங்கள்', 'சொல்ல மறந்த கதை' என்னும் பெயரில் திரைப்படமாகவும் வந்துள்ளது. ஆனந்த விகடன், குங்குமம் போன்ற முன்னணி இதழ்களில் கட்டுரைகள் எழுதிவருபவர். புனைவு மட்டுமல்லாது கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார். 'நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை'அவற்றுள் முக்கியமான ஒன்று. இப்போது நாஞ்சில் நாட்டு உணவு குறித்த கட்டுரை நூலைக் கொண்டுவர உள்ளார். 400 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்நூல் அவரது பல்லாண்டுகால உழைப்பு. உணவுக் குறிப்பாக அல்லாமல் கலாச்சாரப் பின்னணியுடன் இந்த நூலை அவர் தரவுள்ள…
-
- 0 replies
- 451 views
-
-
புகலிடத்து வாழ்வுக் கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின் அனந்தியின் டயறி. Friday, 19 June 2015 23:18 - முருகபூபதி ஒருவர் மற்றும் ஒருவருக்கு எழுதிய கடிதம், ஒருவரின் நாட்குறிப்பு ஆகியனவற்றை மற்றவர்கள் பார்ப்பது அநாகரீகம் எனச்சொல்பவர்களுக்கு மத்தியில், சிலரது கடிதங்களும் நாட்குறிப்புகளும் உலகப்பிரசித்தம் பெற்றவை என்பதையும் அறிந்து வைத்திருக்கின்றோம். காந்தியடிகளின் நாட்குறிப்பு, நேரு சிறையிலிருந்து தமது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் என்பன உலகப்பிரசித்தம். தினமும் நிகழும் சம்பவங்களை குறித்து வைப்பதற்காக அறிமுகமான Diary ( Daily record of event) தமிழில் மட்டுமன்றி பிறமொழிகளிலும் அ…
-
- 1 reply
- 529 views
-
-
யாழில் ஆயுத எழுத்து, கோமகனின் தனிக்கதை, நிலவு குளிர்ச்சியாக இல்லை ஆகிய நாவல்கள் அறிமுகமும் கலந்துரையாடலும்.காலம் 23/05/15 .. இடம் திருமலை கலாமன்றம் அறிவியல் கல்லூரி
-
- 16 replies
- 1.5k views
-
-
‘ஓல்டுமேன் அண்ட் தி சீ’ படப்பிடிப்பில் ஹெமிங்வேயுடன் ஸ்பென்சர் ட்ரேசி ஆசிரியர்: எர்னஸ்ட் ஹெமிங்வே மொழிபெயர்ப்பு : ச.து.சு. யோகியார் நாவலின் கதை வயதில் முதிய மீன்பிடிக் கிழவர் சாண்டியாகோவுக்கு 84 நாட்கள் தொடர்ந்து கடலுக்குச் சென்றும் மீன் சிக்காத துரதிர்ஷ்டம் நேர்கிறது. அந்த துரதிர்ஷ்டம் பிடித்த கிழவருக்கு உதவியா ளனாக இருப்பதற்குக்கூட யாரும் விரும்பாத நிலையில், மீனைத் தேடி ஆழ்கடலுக்குள் செல்கிறார். 18 அடி நீள மீன் ஒன்று சிக்குகிறது. அந்த மீன் சாண்டியாகோவையும் படகையும் நிலைகுலைய வைக்கும் போராட்டம்தான் இக்கதை. கடைசியில் சாண்டியாகோ வெல்கிறார். ஆனால், அவரால் மீனைக் கரைக்குக் கொண்டுவர முடிந்ததா என்பதுதான் கதை. நாவலின் சிறப்பம்சம் ஒரு தீவிரமான சூழ்நிலையில், எதிர்மறை யான நி…
-
- 1 reply
- 505 views
-
-
எழுத்துச் சீரமைப்பையும், மொழி உருவாக்கத்தையும் ஒரு சில புத்தகங்கள் வெகு இயல்பாக நம் முன்னே எடுத்து வைக்கும். அப்படியான புத்தகங்களில் ஒன்றாகத்தான் டாக்டர் வா.செ. குழந்தைசாமி எழுதிய ‘தாய்மொழி பெறாததைச் சமுதாயம் பெறாது’ என்ற புத்தகத்தைப் பார்க்கிறேன். மொழியின் வழியே சமுதாய வளர்ச்சியை எந்த அளவுக்குப் பிரதிபலிக்கவைக்க முடியும் என்பதற்குச் சிறந்த அடையாளம் இப்புத்தகம். அதேபோல தமிழில் வர வேண்டும் என்று நான் விரும்பும் புத்தகம் மால்ட்டா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எட்வர்ட் டி போனோ எழுதிய ‘சில்ட்ரன் சால்வ் பிராப்ளம்ஸ்’. ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு நூலகத்தில் இந்நூலைப் படித்தேன். குழந்தைகளிடம் இருக்கக்கூடிய கற்பனைத்திறன் பற்றிய புத்தகம் இது. குழந்தைகள் வளர வளர பெரியவர்களால் அளிக்கப்படும…
-
- 0 replies
- 412 views
-
-
-
- 7 replies
- 1.5k views
-
-
இந் நிகழ்வு ஜூன் 6 ஆம் திகதி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கனடா கந்தசாமிக் கோவிலில் இடம்பெறும். இங்கு விடமேறிய கனவு நாவலும், நஞ்சுண்ட காடு நாவலும் விற்பனைக்கு வரும் என்பதை அறிய முடிகின்றது.
-
- 2 replies
- 751 views
-
-
அகாலம் முதல் ஊழிக்காலம் வரை – உம்மத் (மக்கள் கூட்டம்) மூன்று காலங்கள் – மூன்று பெண்கள் – மூன்று படைப்புகள் – ஒரு பார்வை. மீராபாரதி காலையில் வேலைக்குப் போகும் பொழுதும் மாலையில் வரும் பொழுதும் ஆகக் குறைந்தது ஒரு வழியில் ஒன்றரை மணித்தியாலங்கள் பயணம் செய்ய வேண்டும். வழமையாக இந்த நேரங்களில் குட்டித் தூக்கம் கொள்வது அல்லது சுற்றியிருக்கும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது என்பதாக இருக்கும். அல்லது வாசிப்பதற்கு எதாவது ஒரு புத்தகம் வைத்திருப்பேன். பல நேரங்களில் வாசிக்கும் மனநிலை இருக்காது. சில நூல்களை கட்டாயம் வாசிக்க வேண்டும் என்ற அவசியத்தால் வாசிக்க முயற்சி செய்வேன். சிலவற்றை அலுப்பாக ஆரம்பித்து பின் மூடி வைக்க முடியாமல் வாசிப்பேன். சிலவற்றை ஆர்வமாகத் தேடி விருப்பத…
-
- 0 replies
- 2.3k views
-
-
கோமகனின் தனிக்கதை - மதிப்பீடு அனோஜன் பாலகிருஷ்ணன் கோமகனின் தனிக்கதை சிறுகதைத்தொகுப்பில் பதினாறு சிறுகதைகள் அடங்குகின்றன. ஈழத்து வட்டார வழக்குடன் வழமையான ஈழத்து எழுத்தாளர்களின் கற்பனை நுட்பத்துடன் கோமகனின் தனிக்கதைகள் இடம் பிடித்துள்ளது. பெரும்பாலும் எழுத்தென்பது வாழ்வின் சிக்கலானபோக்கை, அதன் தடுமாற்றங்களை இயல்பான போக்குடன் வாசகனுக்கு கொண்டு செல்வதினை அடிப்படையாக கொண்டிருக்கவேண்டும். வாசகனின் வழமையான எதிர்பார்ப்புக்களை தகர்த்து நுட்பமாக பயணிக்கவேண்டும். நல்ல கதையென்பது படித்துமுடித்த பிற்பாடு வாசகனை அக்கதை சிறிதுநேரம் யோசிக்கவைக்கும். அதன் பாதிப்புக்கள் வாசகனைவிட்டு நீங்காமல் சிலநேரம் தொந்தரவு கொடுக்கவேண்டும். கோமகனின் இத் தொகுப்பில் சிலசிறுகதைகள் அதற்கான தன்மைய…
-
- 3 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு அறிமுக விழா: [Tuesday 2015-05-26 20:00] ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான சௌந்தரி கணேசன் எழுதிய கவிதைத் தொகுதி 'நீர்த்திரை'யும் ஆசி கந்தராஜா எழுதிய 'கறுத்தக் கொழும்பான்', 'கீதையடி நீயெனக்கு' ஆகிய நூல்களின் அறிமுகமும் மே மாதம் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹோம்புஸ் ஆரம்பப் பாடசாலையில் மாலை 5 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பாக்கினர். அகவணக்கத்துடனும் கலாநிதி கார்த்திகா கணேசர் மங்கல விளக்கேற்றவும் திரு திருநந்தகுமாரின் தலைமையில் விழா ஆரம்பமானது. திருநந்தகுமார் இலக்கிய உலகில் நூல் ஆசிரியர்களுடன் தனது நட்பின் சிறப்பைப் பற்றி கூறினார். வானொலி மாமா நா…
-
- 1 reply
- 957 views
-
-
குணா கவியழகனின் 'விடமேறிய கனவு' நூல் வெளியீடு! http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2717:2015-05-22-04-04-09&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29
-
- 0 replies
- 1.4k views
-
-
அவுஸ்திரேலியா வாழ் ஈழத்தமிழரான மு. சின்னத்துரை எழுதிய 'ஈழத்தமிழர் அடையாள அழிப்பும் பின்னணியும்' என்ற நூல் வெளியீடு எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு டேவிற் வீதியில் அமைந்துள்ள கலைக்கோட்டம் அரங்கில் நடைபெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மைய பணிப்பாளர் தே. தேவானந் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சிறப்பு விருந்தினராக வட மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்துகொள்வர். நூல் முதல் பிரதியை உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வி. கானமயில்நாதன் வெளியிட்டுவைக்க தேசமாணி லயன் எஸ்.ஜெ. செல்வராஜா பெற்றுக்கொள்வார். நூலின் ஆய்வுரையை கொழும்பு இதழியல் கல்லூரி விரிவுரையாளர் சி…
-
- 0 replies
- 560 views
-
-
மாற்று வரலாறு பேசுவோம் ஆதவன் தீட்சண்யா இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும் வேளையில் தமிழ்நாட்டில் மற்றுமொரு எழுத்தாளரான புலியூர் முருகேசன் தாக்கப்பட்டிருக்கும் செய்தி வந்தடைந்திருக்கிறது. அவர் எழுதிய கதையில் கவுண்டர் சமூகம் பற்றி இடம் பெற்றிருக்கும் பகுதியின் மீது ஒம்பாமை கொண்ட ஒரு கும்பல் கரூரிலுள்ள அவரது வீட்டிற்குள் புகுந்து அவரைத் தூக்கி காருக்குள் போட்டுக்கொண்டு போய் எங்கோவொரு காட்டுப்பகுதிக்குள் வைத்து கடுமையாகத் தாக்கியிருக்கிறது. பிறகு அந்தக் கும்பலே அவரை கைது செய்யுமாறு காவல்நிலையத்திற்குள் வந்து அட்டகாசம் செய்திருக்கிறது. முருகேசன் இப்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இதற்கு முன்னும் இதேபோல துரை குணா, மா.மு.கண்ணன் போன்றவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பெருமாள்…
-
- 0 replies
- 635 views
-
-
Dr.Ajay Joshi இனுடைய நூல் பல்வேறு நிலைகளில் முக்கியத்துவ முடையதாக இருக்கின்றது" Pen….. People….. Performances எனும் Dr.Ajay Joshi இனுடைய நூல் பல்வேறு நிலைகளில் முக்கியத்துவ முடையதாக இருக்கின்றது. அரங்கு நாடகம் ஆற்றுகைகள் குறித்த பல்வேறு தகவல்கள், குறிப்பாக இந்தியாவின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அரங்க நிகழ்வுகளின் பதிவுகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நிகழ்வுகளின் பதிவுகளோடு பங்குபற்றுனர்களது பகிர்வுகளும் காத்திரமான மதீப்பீடுகள் சிலவுமாக அமைந்துள்ள இந்நூல்இ வழமையான ஆவணப்படுத்தல் அல்லது பதிவு முறைமைகளிலிருந்து விலகி நிகழ்விற்கேற்ப எளிமையாகவும் இயல்பாகவும் சுவாரஷியமாகவும் தகவல்களை பரிமாறி நிற்கின்றது. இந்நூல்இ ஒருபுறம் சமகால உ…
-
- 0 replies
- 811 views
-
-
தொட்டாற்சிணுங்கிகள் அபிலாஷ் சந்திரன் உங்கள் படைப்பை யாராவது கிண்டலடித்தால் தாங்கிக் கொள்வீர்களா? ஜென்ம விரோதியாக பாவிப்பீர்களா அல்லது புறக்கணித்து கூலாக கடந்து விடுவீர்களா? சமீபத்தில் நவீன கவிதை பற்றின நீயா நானாவில் இ.எம்.எஸ் கலைவாணனிடம் கோபிநாத் கேட்டார்: “உங்கள் புத்தகத்தை எடுத்துப் பார்க்கும் நான் இவை வெறும் காகிதங்கள் தானே, வேறு என்ன இருக்கிறது என கேட்டால் என்ன சொல்வீர்கள்?”. அதாவது கோபிநாத் அப்படி கருதி கேட்கவில்லை. ஒரு சாத்தியத்தை பரிசீலிக்கும் நோக்கில் கேட்டார். அதற்கு கலைவாணன் “எனக்கு வலிக்கும்” என தன் கரகர தழுதழுத்த குரலில் சொன்னார். இது ஒரு அணுகுமுறை. இன்னொரு அணுகுமுறை இருக்கிறது. ஒரு படைப்பு வாசகன் வசம் போனபின் அது அவனது பார்வை, புரிதல், கவனம், அக்கற…
-
- 0 replies
- 775 views
-