Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகளை ஏவிய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது. ஜெருசலேம் உள்பட நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். போருக்கான தயார் நிலையை இஸ்ரெல் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவைச் சேர்ந்த டஜன் கணக்கான ஆயுதக்குழுவினர் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து தற்போது தலைமறைவாக உள்ளனர். காஸா பகுதியில் உள்ள …

  2. வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது! 03 Jan, 2026 | 03:36 PM வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று சனிக்கிழமை (3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்து வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது Xதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் குறிப்பிடப்படுவதாகவது, வெனிசுலா நாட்டிற்கும் அதன் ஜனாதிபதி மதுரோவிற்கும் எதிராக அமெரிக்கா பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது. வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வ…

  3. சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி! சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அத்துடன் விரைவில் சீனாவுடன் தாய்வான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சூளுரை விடுத்துள்ளார். கடந்த வாரம் சீனா மற்றும் தாய்வான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை சீன இராணுவம் முன்னெடுத்துள்ளது. அத்துடன் தாய்வானுடன் வேறு எந்த நாடும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றது. இதேவேளை சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் கடந்த 1949ஆம் ஆண்டு தனி நாடாக பிரிந்து சென்றிருந்தது. எனினும் தாய்வான…

  4. வெனிசுலா ஜனாதிபதி மற்றும் மனைவியை விடுவிக்குமாறு அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது Published By: Vishnu 04 Jan, 2026 | 06:48 PM வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்து உடனடியாக அவர்களை விடுவிக்குமாறு சீனா அமெரிக்காவை வலியுறுத்துகிறது. குறித்த சம்பவத்தை சீனா கடுமையாக எதிர்க்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்து பிரேசில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இராணுவ இலக்குகள் உட்பட பல இடங்களில் அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் 3ஆம் திகதி சனிக்கிழ…

  5. வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கா நாட்டால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான நிலையில், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லி அமெரிக்கா அவரை சிறைபிடித்து…

  6. வெனிசுலா தலைநகரில் வெடிப்புச் சம்பவங்கள் செய்திகள் வெனிசுலாவின் தலைநகரான கெரகஸில் அந்நாட்டு நேரப்படி இன்று (3) அதிகாலை பல வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகப் பாரிய சத்தத்துடன் அப்பகுதி புகை மண்டலத்தால் சூழப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த வெடிப்புச் சம்பவங்களுடன் நகரின் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முதலாவது வெடிப்புச் சம்பவம் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjxzfirb03gzo29ndt385qql

  7. அமெரிக்காவின் டெஸ்லாவை முந்தியது சீனாவின் BYD! Published By: Digital Desk 1 03 Jan, 2026 | 11:05 AM சீனாவின் BYD நிறுவனம் 2025ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளராக மாறியுள்ளது. இதுவரை, அமெரிக்க நிறுவனமான டெஸ்லா முன்னனி நிறுவனமாக திகழ்ந்தது. டெஸ்லாவின் வாகன விற்பனை தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக சரிந்துள்ள நிலையில், BYD நிறுவனம் வலுவான போட்டியாளராக மாறியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/235099

  8. டேனிஷ் அஞ்சல் சேவை டிசம்பர் 30 அன்று தனது கடைசி கடிதத்தை விநியோகிக்கிறது, இதன் மூலம் 400 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பாரம்பரியம் முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடித விநியோகத்தை நிறுத்துவது குறித்த முடிவை அறிவித்த, ஸ்வீடிஷ் மற்றும் டேனிஷ் அஞ்சல் சேவைகள் 2009-ல் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட போஸ்ட்நார்ட் நிறுவனம், டேனிஷ் சமூகத்தில் அதிகரித்து வரும் டிஜிட்டல்மயமாக்கலுக்கு மத்தியில் டென்மார்க்கில் 1,500 வேலைகளைக் குறைத்து, 1,500 சிவப்பு அஞ்சல் பெட்டிகளை அகற்றப்போவதாகக் கூறியது. டென்மார்க்கை "உலகின் மிகவும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்று" என்று விவரித்த அந்த நிறுவனம், ஆன்லைன் ஷாப்பிங் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடிதங்களுக்கான தேவை "கடுமையாகக் குறை…

  9. ஜெர்மன் மின் கட்டக் கட்டணங்கள் 2026 ஆம் ஆண்டில் பாதிக்கும் மேல் குறைய உள்ளன. ராய்ட்டர்ஸ் மூலம் அக்டோபர் 1, 2025 7:52 PM GMT+10 அக்டோபர் 1, 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 31, 2025 அன்று ஜெர்மனியின் லுயெட்டோ-வல்லுன் அருகே A24 மோட்டார் பாதைக்கு அருகில் உயர் மின்னழுத்த மின் இணைப்புகள் மற்றும் மின்சார தூண்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. REUTERS/Annegret Hilse/கோப்பு புகைப்படம் உரிமம் வாங்கும் உரிமைகள், புதிய தாவலைத் திறக்கிறது நிறுவனங்கள் 50ஹெர்ட்ஸ் டிரான்ஸ்மிஷன் GmbH ஆம்ப்ரியன் ஜிஎம்பிஹெச் டென்னெட் ஹோல்டிங் பிவி பெர்லின், அக்டோபர் 1 (ராய்ட்டர்ஸ்) - ஜெர்மனியின் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் ஆபரேட்டர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட மின்சார கட்டக் கட்டணங்களை அறிவித்தனர், இது அரச…

  10. 2025இல் உலகளவில் 128 ஊடகவியலாளர்கள் கொலை! - பட்டியல் வெளியிட்டது சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு 02 Jan, 2026 | 05:02 PM 2025ஆம் ஆண்டில் உலகளவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு (International Federation of Journalists - IFJ) வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 128 ஊடகவியலாளர்கள் ஊடக சேவையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டதாக IFJ குறிப்பிட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட 128 ஊடகவியலாளர்களில் 119 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவர். கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் 74 பேர் மேற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் 56 பேர் காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர்க்காலச் சூழலில் கொல்லப்பட்டவர்கள் என்று…

  11. 🚨 சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் வெடிப்பு: 10 பேர் பலி! adminJanuary 1, 2026 சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற கிராஸ்-மொன்டானா (Crans-Montana) பனிச்சறுக்கு விடுதியில் (Ski Resort) இன்று (ஜனவரி 1, 2026) அதிகாலை நடந்த பயங்கர வெடிப்புச் சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்த வேளையில், அங்குள்ள ஒரு பாரில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை உள்ளூர் நேரம்).சுமார் 01:30 மணியளவில் கிராஸ்-மொன்டானாவில் உள்ள ‘லெ கான்ஸ்டலேஷன்’ (Le Constellation) என்ற பிரபல பார் மற்றும் உணவகத்தில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10-க்கும் மேற்பட…

  12. ஈரானில் அதிகரிக்கும் வன்முறை; பலர் உயிரிழப்பு! அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான போராட்டங்களில் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை (01) ஈரானில் தொடர்ந்த அமைதியின்மையால் அதிக உயிர்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. தென்மேற்கு ஈரானில் உள்ள லார்டேகன் நகரில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு பேர் இறந்ததாக ஈரானிய ஊடக நிறுவனமான Fars news நிறுவனமும் மனித உரிமைகள் குழுவான ஹெங்காவும் தெரிவித்தன. மேலும், நாட்டின் மேற்கில் உள்ள அஸ்னாவில் மூன்று பேரும், கோஹ்தாஷ்டில் ஒருவரும் உயிரிழந்தாக Fars news குறிப்பிட்டுள்ளது. வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோ…

  13. ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதியில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் - குழந்தை உட்பட 24 பேர் பலி 02 Jan, 2026 | 12:56 PM ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் வியாழக்கிழமை (1) புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஹோட்டல் ஒன்றை நோக்கி உக்ரைன் படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடலோர கிராமமான கோர்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்ற இடத்தில் 3 உக்ரைன் நாட்டு ட்ரோன்கள் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 24 பேர் உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. “இது பொதுமக்களுக்கு எதிராக வேண்டுமென்றே உக்ரைன் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்” ரஷ…

  14. 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் Published By: Digital Desk 3 01 Jan, 2026 | 01:56 PM 2026 ஆம் ஆண்டில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய பிரான்ஸ் இரண்டாவது முறையாக முயற்சிக்கும் என அந்நாட்டு ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டன. இளம் வயதினர் கல்வி கற்கும் பாடசாலைகளில் கையடக்க தொலைபேசிகளுக்கு ஏற்கனவே கட்டுப்படுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை எப்போதும் கட்டாயமாக்கப்படவில்லை. 2023 ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசாங்கம் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு டிஜிட்டல் பயன்பாடு வயது தொடர்பான சட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சித்தது. இந்த சட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்தத…

  15. 2026 முதல் பிரித்தானியாவில் அமலாகும் புதிய குடிவரவு விதிகள்: முக்கிய விசா மாற்றங்களை தெரிந்துகொள்ளுங்கள் Nishanthan SubramaniyamJanuary 1, 2026 1:15 pm 0 2026ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானிய குடிவரவு அமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின் கீழ், முக்கிய வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் 2026 ஜனவரி 8 முதல் கடுமையாக்கப்படுகின்றன. Skilled Worker, Scale-up மற்றும் High Potential Individual விசாக்களுக்கு முதன்முறையாக விண்ணப்பிப்பவர்கள், தற்போது உள்ள B1 நிலைக்கு பதிலாக, Common European Framework of Reference for Languages (CEFR) அடிப்படையில் B2 நிலை ஆங்கிலத் திறனை நிரூபிக்க வேண்டும். பணியிட…

  16. “நமது அன்னை பூமியை மீண்டும் ஒன்றிணைக்கும் பணி, தடுத்து நிறுத்த முடியாதது” - போர்ப்பயிற்சி நிறைவில், புத்தாண்டு செய்தி வெளியிட்ட சீன ஜனாதிபதி 01 Jan, 2026 | 12:18 PM தாய்வான் நாட்டை தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகக் கூறி, தாய்வானைச் சுற்றியுள்ள பகுதிகளில் போர்ப்பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் சீனா, நேற்று (டிச. 31) பயிற்சிகளை நிறைவு செய்த நிலையில், சீன ஜனாதிபதி “நமது அன்னை பூமியை மீண்டும் ஒன்றிணைக்கும் பணி, தடுத்து நிறுத்த முடியாதது” எனத் தெரிவித்துள்ளார். நேற்றைய போர்ப்பயிற்சி நிறைவு மற்றும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்றிரவு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வெளியிட்ட செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார். ஒரே நாடு, 2 அமைப்புகள் என்ற கொள்கையை நாம் அமுல்படுத்தியே ஆக…

  17. மார்ச் மாதம் தொடங்கிக் கொண்டிருந்த புத்தாண்டை ஜூலியஸ் சீசர் ஜனவரியாக மாற்றியது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜூலியஸ் சீசர் ரோமானிய நாட்காட்டியில் இருந்த குழப்பங்களைத் தீர்க்க சீர்திருத்தங்களை மேற்கொண்டார் கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஜனவரி 1, இன்று உலகம் முழுவதும் மக்கள் புத்தாண்டை வரவேற்கின்றனர். இது இப்போதைய காலகட்டத்தில் இயல்பான ஒன்றாகத் தோன்றினாலும், எப்போதுமே இப்படி இருந்ததில்லை. உண்மையில், நவீன கால நாட்காட்டிகளின் மூலமாக இருக்கக்கூடிய பண்டைய ரோம் அதன் கால அளவுகோல்களில் ஆண்டின் முதல் மாதமாக ஜனவரியை கருதவில்லை. ஆம், அப்போது மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதமாகக் கணக்கிடப்பட்டது. ஆண்டின் தொடக்கம் மார்ச் மாதத்தில் இரு…

  18. கிரிபாட்டி தீவில் முதலாவதாக மலர்ந்தது 2026 புத்தாண்டு! உலகம் முழுவதும் 2026 ஆம் ஆண்டை வரவேற்பதற்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிட்டிமாட்டி தீவு உலகிலேயே முதன்முதலாகப் புத்தாண்டை வரவேற்றுள்ளது. கிரிபாட்டி நாடு பல நேர வலயங்களை கொண்டிருந்தாலும், அதன் கிரிட்டிமாடி தீவு சர்வதேச திகதிக்கோட்டிற்கு மிக அருகில் உள்ளதால், உலகிலேயே முதன் முதலாகப் புத்தாண்டை வரவேற்கும் இடமாகத் திகழ்கிறது. இலங்கை நேரப்படி இன்று மாலை 3:30 அளவில் கிரிபாட்டி தீவில் நள்ளிரவு 12 மணிக்கு 2026 புத்தாண்டு பிறந்தது. ‘கிறிஸ்மஸ் தீவு’ என்றும் அழைக்கப்படும் இந்தத் தீவில் வசிக்கும் மக்கள், வாணவேடிக்கைகள் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் 2026 ஆம் ஆண்டை உற்சாகமாக வ…

  19. உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா Dec 31, 2025 - 11:10 AM இந்திய அரசாங்கத்தின் ஆண்டிறுதிப் பொருளாதார மீளாய்வுக் கணக்கீடுகளின்படி, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2030 ஆம் ஆண்டளவில் ஜேர்மனியைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தற்போது 4.18 டிரில்லியன் டொலராக உயர்ந்துள்ளதுடன், 2030 ஆம் ஆண்டளவில் அது 7.3 டிரில்லியன் டொலராக உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தற்போதைய பொருளாதார வளர்ச்சிப் போக்குகளின்படி, இந்தியா …

  20. கனடாவின் கடற்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஈரான்! ஒட்டாவாவின் தீவிரவாதக் குழுக்களின் பட்டியலில் ஈரானிய இராணுவக் கிளையைச் சேர்க்கும் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடாவின் கடற்படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சு, கனடாவின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று குற்றாம் சாட்டியுள்ளது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்த பின்னர் நிறைவேற்றப்பட்ட 2019 ஈரானிய சட்டம், வொஷிங்டனின் வழியைப் பின்பற்றும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர நடவடிக்கை எடுக்க அங்கீகாரம் அளிக்கிறது என்பதையும் அந்த அறிக்கை சுட்…

  21. டிரம்பிற்கும் 30 டிரில்லியன் டாலர் அமெரிக்க பத்திர சந்தைக்கும் இடையிலான மெல்லிய அமைதி 12/29/2025 அன்று இரவு 07:02 மணிக்கு AEDT வெளியிடப்பட்டது - 12/29/2025 அன்று இரவு 08:48 மணிக்கு AEDT திருத்தப்பட்டது. ராய்ட்டர்ஸ் பகிர் பிட்காயின் (BTC/USD) -0.09% US 10Y பணம் -0.235 என்பது யூரோ / அமெரிக்க டாலர் (EUR/USD) -0.15% பாங்க் ஆஃப் அமெரிக்கா கார்ப்பரேஷன் -0.13% நியூயார்க், டிசம்பர் 29 (ராய்ட்டர்ஸ்) - ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 'விடுதலை தின' கட்டணங்கள் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க பத்திர சந்தையை கிளர்ச்சியில் தள்ளியதிலிருந்து, அவரது நிர்வாகம் மற்றொரு வெடிப்பைத் தடுக்க அதன் கொள்கைகளையும் செய்திகளையும் கவனமாக வடிவமைத்துள்ளது. ஆனால் போர் நிறுத்தம் பலவீனமாகவே உள்ளது என்று சில முதல…

  22. தாய்லாந்து , கம்போடியா இடையே உடனடி போர்நிறுத்தம் – வெளியான கூட்டு அறிவிப்பு DilukshaDecember 27, 2025 12:34 pm 0 தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் அறிவித்துள்ளனர். இந்த தீர்மானத்தை இரு நாடுகளும் சனிக்கிழமை கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளன. இதன்படி, இன்ற நண்பகல் முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. போர்நிறுத்தம் 72 மணி நேரம் நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த காலத்தில் எல்லைப் பகுதிகளில் அனைத்து துருப்புகளின் நகர்வுகளும் நிறுத்தப்படும். இடம்பெயர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். இதேவேளை, இந்த எல்லை மோதல்களில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். …

  23. 'சோமாலிலாந்துக்கு தனி நாடு அங்கீகாரம்' - இஸ்ரேல் வியூகமும் இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பும் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், சோமாலியர்கள் சோமாலிலாந்து என்ற தனி நாட்டை உருவாக்கக் கோரிப் போராடியபோது எடுக்கப்பட்டது. 28 டிசம்பர் 2025, 07:51 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் சோமாலியாவில் இருந்து பிரிந்த சோமாலிலாந்தை (Somaliland), தனி நாடாக அங்கீகரித்த முதல் நாடாக இஸ்ரேல் உருவெடுத்துள்ளது. விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சோமாலிலாந்துடன் ஒத்துழைப்பை உடனடியாக விரிவுபடுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நடவடிக்கையை ஒரு 'வரலாற்றுத்…

  24. நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி 15 Dec, 2025 | 05:34 PM நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி இதனை குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதன்போது, போர் குறித்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.