Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் - ட்ரம்ப் 04 Feb, 2026 | 04:22 PM நாங்கள் ஈரானுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விடயத்தில் அவர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அரபிக் கடலின் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க கப்பலை வேகமாக நெருங்கிய ஈரான் நாட்டின் ட்ரோனை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், அவர், சிறிது காலத்துக்கு முன்பு அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது…

  2. உலக அளவில் அதிகரிக்கும் போர் சூழல், மாறிவரும் புவியியல் அரசியல் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு நாடுகள் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாக அதிகரித்துள்ளன. உக்ரைன்- ரஷ்யா போர், காசா- இஸ்ரேல் போர், தென் கொரியாவுக்கு வடகொரிய மிரட்டல், தாய்வாணுக்கு சீனா மிரட்டல், இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் என உலகின் பல்வேறு பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் ராணுவ ஒதுக்கீட்டிற்கான நிதியை அதிகரித்துள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில், 2023- ஆம் ஆண்டை விட 2024- ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக ராணுவ நிதி 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இது 2023- ஆம் ஆண்டை 9 புள்ளி 4 சதவிகி…

  3. காலநிலை நெருக்கடி வெப்ப அலைகளை தீவிரப்படுத்துகிறது : ஐ .நா. எச்சரிக்கை By T. SARANYA 11 OCT, 2022 | 01:13 PM காலநிலை நெருக்கடியால் தீவிரமடைந்து வரும் பேரழிவுகரமான வெப்ப அலைகள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க சிறந்த நடவடிக்கை தேவை என ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவைச் சங்க அறிக்கை எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் நிறுவனமான (OCHA )மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (IFRC) திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் பேரழிவுகளைத் தூண்டும் வகையில் அதிக வெப்பநிலை பதிவானது. இது ஆபத்தான, அடிக்கடி மற்றும் மிகவும் தீவிரமான வெப்பம் தொடர்ப…

  4. ஈரான்- அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்: உடன்பாடு இல்லாமல் நிறைவுக்கு வந்தது! வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்காக ஈரான், அமெரிக்காவுடன் முன்னெடுத்துவந்த மறைமுகப் பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் ஏற்படாமல் முடிவடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் கட்டாரில் நடைபெற்ற மறைமுகப் பேச்சுவார்த்தையில், ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கல் குறித்த எந்த உத்தரவாதத்தையும் அமெரிக்க பிரதிநிதி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஆகையால், நீண்ட இழுபறி மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் இல்லாமல் நிறைவுக்கு வந்தது. எனினும், இந்தத் தகவலை அமெரிக்கா மற்று…

  5. துருக்கி சம்பவத்தை நேரில் பதிவு செய்த புகைப்பட நிருபரின் பதற்றமான நிமிடங்கள் ரஷ்ய தூதரை கொலைச் செய்யும் காட்சி | படம்:ஏபி துருக்கியின் தலைநகர் அங்காராவில் துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவ் அந்நாட்டு போலீஸ் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை தனது கேமராவில் பதிவு செய்த அசோசியேடட் பிரஸ்ஸின் புகைப்பட நிருபர் புர்கான் ஒஸ்பிலிக் தனது ஆபத்தான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதோ புர்கானே பதற்றமான தனது நிமிடங்களை விவரிக்கிறார்: "ரஷ்யாவைப் பற்றிய புகைப்பட கண்காட்சி அது. ரஷ்யாவின் கலின்ங் கிராட் நகர் முதல் கம்சாட்கா நகர் வரை தொடர்பான புகைப்படங்கள் அந்தக் கண்காட்சியில் இடம்பெற…

    • 1 reply
    • 231 views
  6. ஜப்பானில் வேகமாக பரவும் காட்டுத்தீ – 1200 பேர் வெளியேற்றம் ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே சுமார் 100 வீடுகள் காட்டுத்தீயில் சேதமடைந்தன. இதில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. அதேபோல் 5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி 1,200 பேர் அங்கிருந்து வெளியேறினர். இதனையடுத்து ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். https://athav…

  7. சீனாவில் விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை! சீனாவில் விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உயர் சட்டமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸினால் கொரோனா வைரஸ் காரணமாக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் கடந்த ஜனவரி மாத ஆரம்ப காலப்பகுதியில் இருந்து விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்வு நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது சீனாவில் உத்தியோகபூர்வமாக விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இதுவரையில் இரண்டாயிரத்து 715 பேர் உயிரிழந…

  8. சீன அரசாங்கம் அறிவித்துள்ள, முடக்க கட்டுப்பாடுகள் கொடூரமானவை – தாய்வான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் அறிவித்துள்ள முடக்க கட்டுப்பாடுகள் கொடூரமானவை என தாய்வான் அறிவித்துள்ளது. மேலும் குறித்த கட்டுப்பாடுகளை தாய்வான் பின்பற்றாது என்றும் பிரதமர் சு செங்-சாங் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தல்களுடன் கொரோனா தொற்றினை முன்னர் தாய்வான் கட்டுப்படுத்தியிருந்தது. இருப்பினும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உள்நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாட்டால் சுமார் 75,000 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் சில கட்டுப்பாடுகளை தாய்வான் தளர்த்திவரும் நிலையில் அண்டை நாடான சீனா, இதற்க…

  9. இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார் இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், இஸ்ரேலில் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேலில் 2009, மார்ச் 31 ஆம் திகதி பெஞ்சமின்-நெடன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்றத் தேர்தல் நடந்தும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மைப் பலம் கிடைக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின்- நெடன்யாகு கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்த போதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது. இதற்கிடையே, அங்கு 8 எத…

  10. தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்களை அனுப்ப வட கொரியா ஒப்புதல்; யேமென் முன்னாள் அதிபர் படுகொலைக்கு முந்தைய தாக்குதலின் பிரத்யேக காட்சிகள்; நூற்றாண்டைக் கொண்டாடும் பிரிட்டிஷ் கடற்படை பெண்கள் பிரிவு உள்ளிட்டவை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.

  11. ரஷ்யாவிற்கு, அமெரிக்கா... மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது – புடின் ரஷ்யாவிற்கு அமெரிக்கா மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய கடற்படை தினத்தை முன்னிட்டு புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற போர்க்கப்பல்களின் அணிவகுப்பு மரியாதையை புடின் ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அங்கு கருத்து வெளியிடும் போதே விளாடிமிர் புடின் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலகில் உள்ள அனைத்து பெருங்கடல்களிலும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த நினைப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நேட்டோ படைகளின் கூட்டமைப்பில் ரஷ்ய எல்லையில் உள்ள நாடுகள் இணைவது நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒலிய…

  12. வங்கதேச ரோஹிஞ்சா முகாம்களில் மழைக்காலத்தை எதிர்கொள்ள அவசர கதியில் கட்டுமானப் பணிகள், வியட்நாமில் சிறுபான்மையாகி வரும் ஹிந்து சமூகம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  13. தலிபான்கள் மீது... தடை விதிப்பது குறித்து, பரிசீலிக்கலாம்: கனேடிய பிரதமர்! தலிபான்கள் மீது தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். காணொளி மூலம் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டதற்கு பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள் குழு தீவிரவாத குழு என்பதில் ஐயமில்லை. கனடா எப்போதோ தலிபான்களை தீவிரவாதிகளை அறிவித்துவிட்டது. அவர்கள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர். அதனால் அவர்கள் மீது பல்வேறு தடைகளை விதிப்பது குறித்து நிச்சயமாக பரிசீலிக்கலாம்’ என கூறினார…

  14. Published By: RAJEEBAN 15 JUL, 2023 | 12:08 PM அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் இடம்பெற்ற சம்பவமொன்றில் இரு பொலிஸார் கத்திக்குத்திற்குள்ளாகியுள்ள அதேவேளை நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மிகவும் ஆபத்தான சம்பவம் ஒன்று குறித்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்டின் வடகிழக்கில் மிகவும் ஆபத்தான சம்பவமொன்றை தொடர்ந்து ஆயுதமேந்திய பொலிஸார் அந்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர் Campbelltown, பகுதியை சுற்றிவளைத்துள்ள பொலிஸார் பொதுமக்களை அந்த பகுதியை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/160072

  15. Published By: RAJEEBAN 11 AUG, 2025 | 12:07 PM ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன அரசின் நிர்வாகத்தில் பங்கேற்ககூடாது என்ற நிபந்தனையுடன் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் எதிர்கால அமர்வில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இதனை உறுதி செய்துள்ளதுடன் இரண்டு தேசக்கொள்கை மத்திய கிழக்கில் வன்முறையை நிறுத்துவதற்கு மனித குலத்திற்கான சிறந்த நம்பிக்கை என தெரிவித்துள்ளார். பாலஸ்தீன இஸ்ரேலிய தேசங்களை உருவாக்குவதற்கான 181 வது தீர்மானத்திற்கு ஆதரவாக முதலில் கையை உயர்த்திய நாடு அவுஸ்திரேலியா என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். 77வருடங்களின் பின்னர் இந்த தீர்மானம் குறித்து சில தரப்பினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக உலகத்தினால் …

  16. இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஐநா கடும் கண்டனம் August 12, 2025 10:28 am காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஆறு பத்திரிகையாளர்கள் படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் கொலைகள் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் அல் ஜசீரா நிருபர் ஒருவர் மற்றும் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். முக்கிய இலக்கான அல் ஜசீரா நிருபர் அனஸ் அல்-ஷெரிப், ஹமாஸ் பயங்கரவாதப் பிரிவின் தலைவர் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. ஊடக உரிமைக் குழுக்களும் கத்தார் உட்பட பல நாடுகளும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளன. இந்தத் தாக்குதலால் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக பிரி…

  17. Published By: RAJEEBAN 19 MAY, 2024 | 10:28 AM இனப்படுகொலையை நிராகரிக்கும் இலங்கை அரசாங்கம் சர்வதேச தலையீடுகளில் ஈடுபடுவதுடன் திட்டமிட்டு பிழையான தகவல்களை வெளியிடுதல் பரப்புதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது என கனடா பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை தினம் என குறிப்பிடப்படும் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 வருடத்தை இன்றைய தினம் குறிக்கின்றது என பட்ரிக் பிரவுண் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு ஆயுதமோதலின் இறுதி தருணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்ற இனப்படுகொலையில் ப…

  18. சுவீடன் பிரதமர்... மாக்டலேனா ஆண்டர்சன், பதவி விலகப் போவதாக அறிவிப்பு! கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் தனது அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, தான் பதவி விலகப் போவதாக சுவீடன் பிரதமர் தெரிவித்துள்ளார். 55 வயதான மாக்டலேனா ஆண்டர்சன் இன்று (வியாழக்கிழமை) அதிகாரப்பூர்வமாக இராஜினாமா செய்வதாக கூறினார். மிதவாதக் கட்சியின் தலைவர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் இப்போது அரசாங்கத்தை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்கள், அவரது கட்சியான மிதவாதிகள், சுவீடன் ஜனநாயகக் கட்சியினர், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் மற்றும் லிபரல் கட்சிகளுடன் இணைந்து 349 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 176 இடங்களைப் பிடிக்கு…

  19. தம்மாம்: சவுதி அரேபியாவில் உள்ள தம்மாம் நகரில் இருக்கும் ஷியா பள்ளிவாசலுக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் பலியாகினர், 5 பேர் காயம் அடைந்தனர். சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் உள்ள ஷியா மசூதியான அல் அனௌத் மசூதியில் இன்று மதியம் ஜும்மா தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு காரில் வந்த நபர் ஒருவர் பெண்கள் அணியும் பர்தா அணிந்து வந்தார். அவர் பெண்கள் மசூதிக்குள் நுழையும் வாயிலுக்கு சென்றார். அந்த வாயில் பூட்டியிருந்ததால் ஆண்கள் செல்லும் வழியாக மசூதிக்குள் நுழைய முயன்றார். அப்போது புர்காவில் இருந்த அந்த நபரை பாதுகாவலர்கள் இருவர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் தனது உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் அவர், பாதுகாவலர்கள் இருவர் மற்ற…

    • 0 replies
    • 230 views
  20. ஜனா­தி­பதியாவ­தற்கு ட்ரம்­பிடம் அடிப்­ப­டை பண்­பு­களே இல்லை; அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டறிக்கையில் தெரிவிப்பு டொனால்ட் ட்ரம்­புக்கு ஜனா­தி­ப­தி­யாக இருப்­ப­தற்­கான அடிப்­படை பண்­பு­களே இல்லை எனவும் அவர் ஜனா­தி­ப­தி­யானால் அமெ­ரிக்­காவின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­கு­மென்றும் பாது­காப்பு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளது. தேர்­தலில் ஜன­நா­யக கட்சி சார்பில் ஹிலாாரி கிளிண்­டனும் குடி­ய­ர­சுக்­கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்­டி­யி­டு­கின்­றனர். இந்நி­லையில் சி.ஐ.ஐ.ஏ. முன்னாள் இயக்­குநர் மைக்கல் மோரல…

  21. விண்வெளியிலிருந்து திரும்பத் தாமதமாகும் என்பது சம்பந்தப்பட்ட வீரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்குப் பொருட்களைக் கொண்டுசென்ற விண்கலம் தோல்வியைச் சந்தித்ததையடுத்து, அங்கிருக்கும் மூன்று விண்வெளி வீரர்களை பூமிக்குக் கொண்டுவருவதை ரஷ்யா தள்ளிப்போட்டிருக்கிறது. இந்த மூன்று வீரர்களும் வியாழக்கிழமையன்று பூமிக்கு வந்துசேர்ந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது ஜூன் மாதத் துவக்கத்தில் அவர்களை பூமிக்கு அழைத்துவரத் திட்டமிட்டிருப்பதாக விண்வெளித் துறையின் அதிகாரியான விளாதிமிர் சோலோவ்யோவ் தெரிவித்தார். இந்த மூன்று பேருக்குப் பதிலாக வேறு வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் திட்டமும் ஜூலை மாதத்திற்கு ஒத்திப்போட…

    • 0 replies
    • 230 views
  22. இரானில் அரசுக்கு எதிராக நான்காவது நாளாக நீடிக்கும் போராட்டங்கள், அணு ஆயுத ஏவுகணைக்கான பொத்தானை தனது மேஜையில் வைத்திருப்பதாக அமெரிக்காவுக்கு வடகொரிய தலைவர் விடுத்திருக்கும் எச்சரிக்கை, புத்தாண்டில் அறிவியல் உலகம் நிகழ்த்தவிருக்கும் புதிய சாதனைப் பயணங்கள் குறித்த சிறப்புத் தொகுப்பு உள்ளிட்ட செய்திகளை இந்தச் செய்தியறிக்கையில் காணலாம்

  23. கொல்­லப்­பட்ட பாதி­ரி­யா­ருக்­கான தேவா­லய பிரார்த்­த­னையில் முஸ்­லிம்­கள் பிரான்ஸ் தேவா­ல­ய­மொன்றில் பாதிரி­யார் ஒருவர் வெட்­டிக்­கொல்­லப்­பட்­டதையடுத்து, பிரெஞ்சு மக்களின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை தேவா­ல­யத்­தில் நடத்­தப்­பட்ட பிரார்த்­த­னையில் அங்­குள்ள முஸ்­ஸி­ம்கள் கலந்து கொண்­டிருப்­ப­தனை படங்­களில் காணலாம். - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=18346#sthash.vjRVtc4x.dpuf

  24. 31 MAY, 2025 | 11:26 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை, தனது உலகளாவிய வர்த்தகப் போரின் சமீபத்திய தீவிரமாக, இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதி மீதான வரிகளை 25 சதவீதட்டிப்பாக்குவதாக அறிவித்தார். பிட்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள US Steel’s Mon Valley Works–Irvin ஆலையில் பேசிய டிரம்ப், இரும்பு இறக்குமதி மீதான வரி 50 சதவீதமாக இரட்டிப்பாக்கப்படும் என்றும், அலுமினியத்திற்கும் இதேபோன்ற உயர்வு விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. ஜனவரியில் டிரம்ப் மீண்டும் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவில் இரும்பு விலைகள் 16 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு வந்துள்ளது. அமெரிக்க வர்த்தகத் துறையின் புள்ளிவிவரங்களின…

  25. அவுஸ்திரேலியாவின் விர்ஜின் விமான நிறுவனத்தில் இணைந்துள்ள பெண்ணொருவர் தற்போது சமூக ஊடகங்களில் அதிக பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றுவருகிறார். விசேட தேவையுடைய அலே சேயர்ஸ் என்ற குறித்த பெண் தனது திறமையால் விமான நிறுவனத்தில் கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் சீருடையுடன் உள்ள புகைப்படமானது தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. விர்ஜின் விமான நிறுவனம் அலே சேயர்ஸ் பிறப்பிலிருந்தே விசேட தேவை உடைய பெண்ணாக காணப்பட்டுள்ளார். எனினும் தனது தனித்துவ திறமையாலும், அவரது செயற்பாட்டினாலும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். அலே சேயர்ஸின் தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார். தனது மகளின் திறமைகளை வெளிக்கொண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.