Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதிய ‘ஹைப்பர்சொனிக் ஏவுகணையை’ ஏவியதாக வட கொரியா அறிவிப்பு Hwasong-8 என்ற புதிய ஹைப்பர்சொனிக் ஏவுகணையை நேற்று செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது. குறித்த புதிய ஏவுகணை அதன் ஐந்து ஆண்டு இராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில் ஒன்றாகும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அணுசக்தி திறன்களைக் கொண்டுள்ள புதிய ஏவுகணையை மூலோபாய ஆயுதம் என அழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனையுடன் இந்த மாதம் மட்டும் வட கொரியா நடத்திய மூன்றாவது சோதனை இது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241773

  2. அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா விரைவான பதிலடி! சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு விரைவான பதிலடியாக, பீஜிங் செவ்வாயன்று (04) அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்தது. இதன் மூலம், உலகின் முதல் இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே வர்த்தகப் போரை இரு நாடுகளும் மீண்டும் புதுப்பித்தது. ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பின் கூடுதல் 10% வரி அமெரிக்காவிற்குள் அனைத்து சீன இறக்குமதிகள் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:01 (0501 GMT) மணிக்கு அமுலுக்கு வந்தது. இது அமுலுக்கு வந்த சில நிமிடங்களில் சீனாவின் நிதி அமைச்சகம், அமெரிக்க நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுக்கு (LNG) 15% மற்றும் மசகு எண்ணெய், விவசாய உபகரணங்கள் மற்றும் மேலும் சில பொருட்களுக்கு 10% …

  3. 15 ஆண்டுகளுக்கு பின் துருக்கிக்கு விமான சேவையை தொடங்கும் இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீன விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் நிலவி வருகிறது. இதற்கிடையே, இஸ்ரேல் – துருக்கி இடையேயான விமான சேவையில் பல ஆண்டுகளாக அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. துருக்கியில் இருந்து இஸ்ரேலுக்கு 2 விமான நிறுவனங்களின் சேவை செயல்பாட்டில் உள்ளது. துருக்கிஸ் ஏர்லைன்ஸ் மற்றும் பிகஸ்அஸ் ஏர்லைன்ஸ் ஆகிய 2 துருக்கி விமான நிறுவனங்கள் மட்டுமே இருநாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேல் நாட்டின் எந்த விமா…

    • 0 replies
    • 197 views
  4. பாலிவுட் நடிகர் சல்மான் கான் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் வரும் மே 6-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மும்பை விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது. மதுபோதையில் கார் ஓட்டி, ஒருவர் இறக்கவும், நான்கு பேர் காயமடையவும் காரணமாக இருந்தார் என்று சல்மான் கான் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு மும்பை விசாரணை நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் நேற்றுடன் (திங்கள்கிழமை) வாதங்கள் முடிவடைந்தன. எனினும், ‘இந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சியாக இருக்கும் ரவீந்தர் பாட்டீலின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது. காரணம் அவர் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை' என்று சல்மானின் வழக்கறிஞர் கூறினார். ஆனால் குறுக்கு விசாரணை செய்வதற்க…

    • 0 replies
    • 197 views
  5. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். வெளிநாட்டவர் தெத்தெடுக்க தடை: எத்தியோப்பியா படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஏஞ்சலினா ஜோலியின் வளர்ப்பு மகள் எத்தியோப்பியாவில் தத்தெடுக்கப்பட்டவர். வெளி நாடுகளில் அச்சறுத்தலுக்கும், கவ…

  6. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பான நிர்வாக உத்தரவில் நேற்று கையெழுத்திட்டுள்ளதுடன், பாலஸ்தீனியர்களுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண அமைப்பு நிதியையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அத்தோடு, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செய்லபாடுகள் குறித்த மறுஆய்வுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார் ஐக்கிய நாடுகள் அமைப்புகளுக்குள் “அமெரிக்க எதிர்ப்பு” இருப்பதாக கருதப்படுவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செயலாளர் தெரிவித்து…

  7. Published By: DIGITAL DESK 3 06 MAR, 2024 | 02:55 PM செங்கடலில் கடலுக்கடியில் உள்ள பல தகவல் தொடர்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே இணைய சேவை 25 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் அமெரிக்க அதிகாரியொருவரும் தெரிவித்துள்ளார். ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முக்கிய வழங்குனர்களின் கடலுக்கடியில் கேபிள்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து இணையச் சேவை தடைபட்டுள்ளது. 15 கேபிள்களில் நான்கு சமீபத்தில் துண்டிக்கப்பட்டதையடுத்து, போக்குவரத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட எச்.ஜி.சி குளோபல் கம்யூனிகேஷன்ஸ் தொலை தொடர்பு ந…

  8. தனது சொந்தக்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கின்றார் பொறிஸ்ஜோன்சன் - இன்றுவாக்கெடுப்பு பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சனை பதவியிலிருந்து நீக்குவதா என்பது குறித்த அவரது கட்சியினர் இன்று தீர்மானிக்கவுள்ளனர் இது தொடர்பான இரகசிய வாக்கெடுப்பில் கென்சவேர்ட்டிவ் கட்சியினர் இன்று வாக்களிக்கவுள்ளனர். பார்ட்டிகேட் விவகாரத்தை தொடர்ந்தே பொறிஸ்ஜோன்சனின் தலைமைத்துவத்தின் மீது கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கொரோன வைரஸ் முடக்கல் கால களியாட்ட நிகழ்வுகள் குறித்து சூ கிரே தனது அறிக்கையை வெளியிட்டதை தொடர்ந்து அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்து வந்துள்ள நிலையில் பொறிஸ்ஜோன்சனை பதவி விலக்கவேண்ட…

  9. மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல விஷ மோதிரம்: சௌதியின் பட்டத்து இளவரசர் மீது குற்றச்சாட்டு! மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் விஷ மோதிரத்தை பயன்படுத்த பரிந்துரைத்தார் என அந்நாட்டின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி சாத் அல் ஜாப்ரி கூறியுள்ளார். தற்போது கனடாவில் வசித்து வரும் சாத் அல் ஜாப்ரி, சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த 60 நிமிட நேர்காணலில் இதுகுறித்து பல அதிர்ச்சி தரும் விடயங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார். இதன்போது அவர் கூறுகையில், ‘தனது தந்தையை மன்னராக்குவதற்காக அவ்வாறு செய்ய விரும்புவதாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது உறவினரிடம் கூறினார். அடுத்த வாரிசு யார் என்பது தொடர்பாக அப்போது ஆளும் குடும்பத்திற்குள் பதற்றம் ஏ…

  10. Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 12:28 PM ரஸ்ய, இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் எச்சரித்துள்ளார். மோதல்களில் நடைபெறும் பகுதிகளில் பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தரப்பினர் பட்டியலில் ரஸ்ய, இஸ்ரேலிய படையினரும் சேர்க்கப்படலாம் என அவர் எச்சரித்துள்ளார். ஐக்கிய நாடுகளால் தொடர்ந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ள சிலவகையான பாலியல் வன்முறைகளின் வடிவங்கள் குறித்த குறிப்பிடத்தக்க கவலையின் விளைவு இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மோதல்களின் போது இடம்பெறும் பாலியல் வன்முறைகள் குறித்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கான தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர், பாலியல் வன்முறை மற்றும் ஏனைய பாலியல் ன்வன்முறை வட…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி, இந்தியா செய்தியாளர் 24 அக்டோபர் 2024, 06:16 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் இரு பெரும் பணக்காரர்களான ஈலோன் மஸ்க் மற்றும் முகேஷ் அம்பானிக்கு இடையே ஒரு கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தியாவின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சந்தையை யார் கைப்பற்றுவது என்பதுதான் அந்தப் போட்டி. இந்தப் போட்டி ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக இருந்து வந்தது. ஆனால், பிராட்பேண்ட் சேவைக்கான செயற்கைக்கோள் அலைக்கற்றை, ஏலத்தின் மூலமாக இல்லாமல் நிர்வாக ரீதியாக ஒதுக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் கடந்த வாரம் அறிவ…

  12. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தல்; எண்ணெய் விலை உயர்வு! ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் புதன்கிழமை (21) எண்ணெய் விலைகள் 1% க்கும் அதிகமாக உயர்ந்தன. இது மத்திய கிழக்கு உற்பத்தி செய்யும் முக்கிய பிராந்தியத்தில் விநியோக கிடைப்பைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 00.03 GMT மணியளவில் 86 காசுகள் அல்லது 1.32% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு $66.24 ஆக இருந்தது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெய் 90 காசுகள் அல்லது 1.45% உயர்ந்து $62.93 ஆக இருந்தது. அமெரிக்காவிற்கு கிடைத்த புதிய உளவுத்துறை தகவல்கள், இ…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் எழுதியவர், மேட்லைன் ஹால்பர்ட் பதவி, பிபிசி செய்தி, நியூயார்க் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, டொனால்ட் டிரம்பைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக ஆஃப்கானிஸ்தான் நாட்டவர் மீது அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது இரானில் உருவான சதித்திட்டம் என்றும் அமெரிக்கா கூறுகிறது. ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த, 51 வயதான ஃபர்ஹாத் ஷகேரி என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது. டிரம்பைக் கொல்ல 'திட்டமிட்டதாக’ ஃபர்ஹாத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஷகேரி இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் இரானில் இரு…

  14. குண்டுவீச்சுகளால் சின்னாபின்னமாகும் கிழக்கு கூட்டா, நைல் நதிக்காக ஆப்ரிக்க கண்டத்தில் மூன்று நாடுகளுக்கிடையே போர் உருவாகுமா, பிப்ரவரியில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிராமம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  15. ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகளை கண்டித்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை!ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகளை கண்டித்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை! உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தங்களில் புடின் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் வகையில் சுய பாணியிலான வாக்கெடுப்பை நடத்தியதற்காக ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 278பேர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும் அதன் பாதுகாப்புத் துறையோடு தொடர்புடைய 14 பேரையும் குறி வைத்துள்ளது. ரஷ்யாவிற்க…

  16. சீனாவின் மெக்னீசியம் கிடைப்பதில் நெருக்கடி – ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கவலை கார்கள், விமானங்கள் மற்றும் இலத்திரனியல் உள்ளிட்ட உற்பத்திகளுக்கு முக்கியமான மூலப்பொருட்களில் ஒன்றான மெக்னீசியத்தினை ஐரோப்பிய நாடுகளுக்கு சீனாவே வழங்கி வருகின்றது. தற்போது சீனாவின் மெக்னீசிய விநியோகப் பற்றாக்குறையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழில்துறைகள் ஆபயகரமான கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, கொரோனா தொற்றுநோயினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழில்துறை மீட்சியைக் வெகுவாக பாதிக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழிற்துறைக்கு தேவையான மெக்னீசியததில் 95சதவீதமானவற்றை …

  17. Published By: RAJEEBAN 26 MAR, 2024 | 10:54 AM அமெரிக்காவைசேர்ந்த மில்லியன் கணக்கானவர்கள் சீனாவின் இணைய வழி ஹக்கிங் நடவடிக்கைகளில் சிக்குண்டமை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் இணையவழி கணக்குகள் ஹக்கிங்கில் சிக்குண்டுள்ளதாக எவ்பிஐயும் அமெரிக்க நீதி திணைக்களமும் தெரிவித்துள்ளன. ஏழு சீன பிரஜைகளிற்கு எதிராக அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். குற்றச்சாட்டப்பட்டுள்ள ஏழு சீன பிரஜைகளும் 14 வருடங்களிற்கு மேல் இவ்வாறான குற்றசெயலில் ஈடுபட்டனர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஏழு நபர்கள் குறித்த விபரங்களைதருபவர்…

  18. மியான்மரில் ரோஹிஞ்சா பிரச்சனையை அந்நாட்டு அரசு சமாளித்த விதம் குறித்து அதிகரித்துள்ள சர்வதேச கண்காணிப்பு குறித்து தனக்கு அச்சமில்லை என்று மியான்மரின் நடைமுறை தலைவி ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார், எர்மா சூறாவளியிலிருந்து மீண்டு தற்போது மரியா சூறாவளிக்கு தயாராகிவரும் ப்யூட்டோ ரெக்கோ மக்கள் மற்றும் சமோ தீவில் மட்டுமே வாழும் அபூர்வ பறவை ஒன்றுக்கான தீவிர தேடுதல் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  19. உக்ரைனுக்கு.. 270 மில்லியன் அமெரிக்க டொலர்கள், பாதுகாப்பு உதவியை வழங்கும் அமெரிக்கா! உக்ரைனுக்கு கூடுதல் 270 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பாதுகாப்பு உதவியை, அமெரிக்கா அனுப்பும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதில், நடுத்தர தூர ரொக்கெட் அமைப்புகள் மற்றும் தந்திரோபாய ஆளில்லா விமானங்கள் உள்ளடங்கும். நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியான இந்த அறிவிப்பு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தால் உக்ரைனுக்கு அளிக்கப்பட்ட மொத்த அமெரிக்க பாதுகாப்பு உதவியை 8.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் கொண்டு வருகின்றது. மேலும், மே மாதம் காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனுக்கான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவியாக 40 பில்லியன் அமெரிக்க டொலர்களாக செலுத்தப்படுகிறது…

  20. தாய்லாந்து குழந்தைகள் காப்பகத்தில் துப்பாக்கிச் சூடு – 34 பேர் உயிரிழப்பு 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERSCOPYRIGHT தாய்லாந்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் பகல் நேர குழந்தை பராமரிப்பு மையத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்தின் வட கிழக்கு மாவட்டமான நாங் புவா லம்புவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கிதாரி முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இந்த சம்பவத்தில் இதுவரை இரண்டு வயது குழந்தை உட்பட 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். முதல் முறை …

  21. போர் சூழலில் வாழும் 35.7 கோடி குழந்தைகள் : அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் உலகளவில் போர் நடைபெறும் பகுதிகளில் ஆறுக்கு ஒரு குழந்தை வாழ்ந்து வருவதாக "சேவ் த சில்ரன்" என்ற குழந்தைகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. படத்தின் காப்புரிமைREUTERS போர் சூழலில் வாழுகின்ற குழந்தைகள், இதற்கு முன்னர் 20 ஆண்டுகளில் இல்லா…

  22. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட ரஷ்யா மீண்டும் முயற்சி: புடினுக்கு கடும் கண்டனம்! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட ரஷ்யா மீண்டும் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க் கட்சி வேட்பாளர் பெர்னீ சாண்டர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கலிபோர்னியா மாகாணம், பேக்கர்ஸ்பீல்ட் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையில், “எனது பிரசாரத்துக்கு உதவுவதற்கு ரஷ்யா முயற்சிகள் செய்கிறது என கடந்த மாதம் அமெரிக்க அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். ரஷ்யா எவ்வாறு தலையிட முயற்சி செய்தது என்பது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இப்படிப்பட்ட எந்தவொரு முயற்சியையும் நான்…

  23. உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய பேச்சுவார்த்தை - டிரம்ப் 14 FEB, 2025 | 12:22 PM உக்ரைன்யுத்தத்தினை எவ்வாறு முடிவிற்கு கொண்டுவருவது என்பது குறித்து ஜேர்மனியின் மியுனிச்சில் இடம்பெறும்மாநாட்டில் அமெரிக்க ரஸ்ய உக்ரைன் பிரதிநிதிகள் ஆராயவுள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் பிரதிநிதிகளும் எங்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வார்கள்,உக்ரைனையும் அழைத்துள்ளோம் ஆனால் அந்த நாட்டின் சார்பில் யார் கலந்துகொள்வார்கள் என்பது தெரியவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் மூன்று நாடுகளில் இருந்தும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார…

  24. மயோட்டியில் சூறாவளி: நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்! December 16, 2024 சனிக்கிழமையன்று பிரான்சின் இந்தியப் பெருங்கடல் பகுதியான மயோட்டியைத் (Mayotte) தாக்கிய சூறாவளியில் பல நூறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அப் பகுதிக்கான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சிடோ சூறாவளி மணிக்கு 225 கிலோ மீற்றர் வேகத்தில் கடந்து சென்றதுடன், மயோட்டியை முழுவதுமாக தரைமட்டமாக்கியது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டில் மடகாஸ்கருக்கு வடக்கே பிரெஞ்சு இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தைத் தாக்கிய மிகத் தீவிரமான புயலாக மயோட்டி மீது சூறாவளி வீசியதாக பிரான்ஸ் வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது. பிரெஞ்சு உள்துறை அமைச்சர் புருனோ ரீடெய்லியோ குறைந்தது 11 பேர் சூறாவளி தாக்கம் காரணம…

  25. சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் – உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸைப் பரப்பக்கூடிய நுண்ணிய உமிழ்நீரை தடுக்கும் ஒரு தடையாக முகக்கவசம் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. சில நாடுகள் ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு பரிந்துரைத்துள்ளன அல்லது கட்டாயப்படுத்துகின்றன. ஆரோக்கியமான மக்கள் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் முன்பு தெரிவித்திருந்தது. எவ்வாறா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.