Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. செர்பிய நாடாளுமன்றத்தில் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு! செர்பிய நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று (04) எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புகை குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து மிகப்பெரிய பதற்றமான நிலை ஏற்பட்டது. இந்தக் குழப்பத்திற்கு மத்தியில், ஒரு சட்டமன்ற உறுப்பினர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் செர்பியாவின் கடுமையான அரசியல் நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது. அங்கு ஒரு ஜனநாயக அரசாங்கம் பல மாதங்களாக ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் செர்பியாவின் நோவி சாட் நகர ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்ததையடுத்து,…

  2. பணயக் கைதிகளாகயிருந்த 4 இஸ்ரேலிய இராணு வீராங்கனைகளை விடுதலை செய்தது ஹமாஸ் 25 JAN, 2025 | 05:34 PM ஹமாசின் பிடியில் பணயக்கைதிகளாகயிருந்த நான்கு இஸ்ரேலிய இராணுவவீராங்கனைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் தற்போது இஸ்ரேல் சென்றுள்ளனர். காசாவின் பாலஸ்தீன சதுக்கத்தில் இவர்கள் விடுதலைசெய்யப்பட்டவேளை ஆயுதமேந்தியவர்களும் பொதுமக்களும் அப்பகுதியில் பெருமளவில் காணப்பட்டனர் என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/204874

  3. Published By: RAJEEBAN 26 FEB, 2025 | 11:38 AM பாலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என கார்டியன் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது. பாலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என நம்பப்படுகின்றது உலக சுகாதார ஸ்தாபனம் இவர்களின் நலன்கள் பாதுகாப்பு குறித்து கரிசனை வெளியிட்டுள்ளது. 162 மருத்துவ பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தன்னால் உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக பாலஸ்தீன மரு…

  4. Published By: VISHNU 02 MAY, 2025 | 07:59 PM சிலி மற்றும் ஆர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (2) மாலை 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேப் ஹார்ன் மற்றும் அந்தாட்டிக்காவிற்கு இடையில் 10 கிலோமீற்றர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிலி அதிகாரிகள் நாட்டின் தெற்குப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர். சிலியின் தெற்கு முனையில் உள்ள மாகல்லன்ஸ் பகுதியின் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணியில் சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர்.…

  5. உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நேற்றைய லண்டன் தாக்குதலில், தாக்குதலாளி பிரட்டனில் பிறந்தவர் என்று பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். தாக்குதலாளி உட்பட இதுவரை 4 பேர் கொல்லப்பட்டு நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பான புலன்விசாரணையில் இதுவரை எட்டுப்பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் மேலதிக விவரங்களையும் நேயர்கள் இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் காணலாம்.

  6. ஜி.எஸ்.டியின் தாக்கம் நடுத்தர மக்களை எப்படி பாதிப்படைய வைக்கிறது. Positive and Negative impact of GST | Socio Talk

  7. இங்கிலாந்தில் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவர் கைது இங்கிலாந்தில் தீவிரவாதத்துடன் தொடர்புடைய செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இன்று மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மூவரும் பெண்கள் எனவும் அவர்களில் இருவர் 18 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் மற்றையவர் 19 வயது மதிக்கத்தக்கவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது பெண் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தை தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தடுப்புக்காவலில் உள…

  8. ஒஸ்கார் விருதுபெற்ற பாலஸ்தீனியர்கள் பற்றிய திரைப்படத்தை உருவாக்குவதற்கு உதவிய பாலஸ்தீனியர் யூதகுடியேற்றவாசியால் சுட்டுக்கொலை - இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது - ஒவ்வொருவராக - நண்பர் கருத்து Published By: RAJEEBAN 29 JUL, 2025 | 10:41 AM ஒஸ்கார் விருது பெற்ற பாலஸ்தீனியர்களை பற்றிய குறுந்திரைப்படத்தை உருவாக்குவதில் இணைந்து பணியாற்றிய பாலஸ்தீனர் ஒருவர் மேற்கு கரையில் யூதகுடியேற்றவாசிகளால் கொல்லப்பட்டுள்ளார். பாலஸ்தீன செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ஒடே முகமத் ஹடாலின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் உள்ள கிராமமொன்றில் இஸ்ரேலிய குடியேற்றவாசியொருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் ஹடாலின் தனது செயற்பாடுகளால் மிகவும் பிரசித்தமானவர். மசெவெர் யட்டாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீ…

  9. ஜப்பானை தாக்கியது சுனாமி 2025 ஜூலை 30 , மு.ப. 08:37 ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வின் காரணமாக, ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியை சுனாமி தாக்கியுள்ளது. அந்நாட்டு நேரப்படி, முற்பகல் 10.30 மணிக்கு சுனாமி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 04 மீற்றர் உயரத்துக்கு அலைகள் மேலெழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானின் டோகைடோ, ஜோபன் உள்ளிட்ட தொடருந்து மார்க்கத்தில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஜப்பானை-தாக்கியது-சுனாமி/50-362017

  10. அமெரிக்காவால் எண்ணெய் கப்பல் கொள்ளை - வெனிசுலா குற்றச்சாட்டு Dec 11, 2025 - 08:14 AM வெனிசுலாவின் கடற்கரையில் இருந்து அமெரிக்கப் படைகள் ஒரு எண்ணெய்க் கப்பலைப் பறிமுதல் செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிரான அமெரிக்காவின் அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. வெனிசுலாவின் கடற்கரையில் பாரிய எண்ணெய்க் கப்பலை பறிமுதல் செய்துள்ளதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த நடவடிக்கையை வெனிசுலா உடனடியாகக் கண்டித்துள்ளது. இதை "சர்வதேச கடற்கொள்ளை" நடவடிக்கை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக, வெனிசுலா ஒருபோதும் "எண்ணெய் காலனியாக மாறாது என்றும் மதுரோ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https:/…

  11. 01 JUL, 2025 | 12:53 PM முகமது நபியையும் மோயீசனையும் சித்தரிக்கும் கருத்தோவியங்களை வரைந்த நான்கு கருத்தோவியக் கலைஞர்களை துருக்கி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கருத்தோவியங்களிற்கு எதிராக கடும் ஆர்ப்பாட்டங்கள் மூண்டதையடுத்தே துருக்கி பொலிஸார் கருத்தோவிய கலைஞர்களை கைதுசெய்துள்ளனர். அரசியல் சஞ்சிகையொன்றில் வெளியான இந்த கருத்தோவியத்தில் குண்டுகள் விழும்போது, இறக்கைகள் மற்றும் ஒளிவட்டங்களுடன் காணப்படும் இஸ்லாமியர் ஒருவரும் யூதரும் கைகுலுக்கிக்கொள்வதை காணமுடிகின்றது. வெளியாகி நான்கு நாட்களின் பின்னர் இந்த கருத்தோவியம் சமூக ஊடகங்களில் பரவலானது.இதனை தொடர்ந்து இஸ்தான்புலில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என கோஷ…

  12. அணுசக்தி ஒப்பந்த உடன்பாட்டில்... அமெரிக்க அளிக்கும் வாக்குறுதிகளை, நம்ப முடியாது: ஐ.நா. பொதுச் சபையில் ஈரான் தெரிவிப்பு! வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பது தொடர்பான உடன்பாட்டில் அமெரிக்கா அளிக்கும் வாக்குறுதிகளை நம்ப முடியாது என ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதில் முழு உறுதியுடன் இருப்பதாக கூறியுள்ளது. இது குறித்து ஐ.நா. பொதுச் சபையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சி ஆற்றிய உரையில், ‘அணுசக்தி ஒப்பந்தத்துக்கு புத்துயிர் அளிப்பதில் நாங்கள் முழு உறுதியுடன் உள்ளோம். இதற்கான பேச்சுவார்த்தை, இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. ஆனால…

  13. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே என்று இந்திய உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மூன்று பேர் தண்டனையை குறைக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை வியாழக்கிழமை (30) இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. தங்களது கருணை மனு மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகளுக்கு மேல் தாமதம் செய்ததால் மரண தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும் என்பது இந்த வழக்கின் குற்றவாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கோரிக்கையாகும். இந்த மனு மீது தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணை நடந்தபோது,…

  14. பதற்றங்களுக்கு மத்தியில்... ரஷ்யா- உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரான்ஸ்- ஜேர்மனி தலைவர்கள்! பிரான்ஸ் ஜனாதிபதியும் ஜேர்மனி அதிபரும் எதிர்வரும் வாரங்களில், மாஸ்கோவிற்கும் கெய்விற்கும் பயணம் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை உக்ரைன் மீது படையெடுப்பதில் இருந்து தடுக்கவும் மற்றும் வளர்ந்து வரும் பதற்றங்களில் இருந்து ஒரு வழியைக் கண்டறியவும் இந்த இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், எதிர்வரும் திங்கள்கிழமை மாஸ்கோவிற்கும், செவ்வாய்கிழமை கியேவிற்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், எதிர்வரும் பிப்ரவரி …

  15. காபூல் விமான நிலையத்தை... கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் தலிபான்கள் காபூலில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர தயாராகி வருவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் தலிபான்களுக்கு எதிராக போர் நடத்தி வந்த நிலையில், தற்போது அங்கிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறிவருகிறது. இது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மேலும் ஆயிரம் பேர் காபூல் விமான நிலையத்தில் மீட்கப்படாமல் உள்ளனர் என மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையிலேயே, காபூல் விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர தயாராக…

  16. தென்னாப்பிரிக்காவில் புதிய ஜுலு மன்னர் பதவியேற்பு - யார் இவர்? மக்கள் ஏன் இவரை நேசிக்கிறார்கள்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, புதிய ஜுலு மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினி பொதுவாக தென்னாப்பிரிக்கர்கள் அரியணையின் ரசிகர்கள் அல்ல. ஆனால், நேற்று நடந்த புதிய ஜுலு சாம்ராஜ்ஜிய அரசரின் முடிசூட்டு விழா மொத்த நாட்டையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தென்னாப்பிரிக்க வரலாற்றில் மிக முக்கிய தருணம். அந்நாட்டு வரலாற்றில் பல விஷயங்களுக்கு இந்த விழா தொடக்கமாக அமையவுள்ளது. ஜனாதிபதி சிரில் ரமபோசாவினால் 49 வயதான மிசுசுலு கா ஸ்வெலிதினி, முறைப்படி மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். கறுப்பின ஜனாதிபத…

  17. 05 Aug, 2025 | 10:31 AM காலத்தை வென்ற சிங்கப்பூர் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’ கலைக்களஞ்சியத்தை சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரில் தேசிய நூலக சபை கட்டிடத்தில் உள்ள டிராமா சென்டரில் சனிக்கிழமை (02) நடைபெற்ற விழாவில், 'சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை அந்நாட்டு ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டுள்ளார். 200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’, சமூகம், கலை, பண்பாடு, கல்வி, அரசியல் என சிங்கப்பூர் தமிழ் மக்களின் வாழ்வியல் களம் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் தமிழர்க் கலைக் களஞ்சியம் எடுத்துரைக்கும் பல தகவல்களில் தமிழ்ச் சமூகம் கண்டுவந்த சமூகச் சீர்திருத்தங்கள…

  18. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உணவு, எரிசக்தி மற்றும் உரம் ஆகியவற்றின் விலை உயர்வால் உலகளாவிய மந்த நிலையை ஏற்படுத்தும் என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் புதன்கிழமை அமெரிக்க வணிக நிகழ்வில் தெரிவித்ததாவது, வப்போகும் நாங்கள் மந்தநிலையை எவ்வாறு தவிர்க்கப்போகின்றோம் என்பதைப் பார்ப்பது கடினம் என்று கூறினார். சீனாவில் தொடர்ச்சியான கொரோனா வைரஸ் பூட்டுதல்கள் இந்த மந்தநிலை குறித்த கவலைகளை அதிகரிப்பதாகவும் அவர் கூறினார். அவரது கருத்துக்கள், உலகப் பொருளாதாரம் சுருங்கக் கூடும் அபாயம் குறித்து எச்சரிக்கையை தோற்றுவித்துள்ளது. எரிசக்தி விலைகளை இரட்டிப்பாக்கும் யோசனையே மந்தநிலையைத் தூண்டுவதற்கு போதுமானது என்றும் அ…

  19. பிலிப்பைன்ஸை தாக்கிய 'நால்கே' சூறாவளி : பலி எண்ணிக்கை அதிகரிப்பு By T. SARANYA 31 OCT, 2022 | 01:33 PM கடந்த வாரம் பிலிப்பைன்ஸை தாக்கிய 'நால்கே' சூறாவளியின் போது உயிரிழந்தவர்களின எண்ணிக்கை 100 ஐ நெருங்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை குறிப்பாக இந்த சூறாவளி அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை தாக்கியது. சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீற்றர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சூறாவளியை தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் மகுயிண்டனாவ் மாகாணத்தி…

  20. 27 SEP, 2024 | 12:06 PM ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதேவேளை அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கு முன்னால் யுத்தத்தை எதிர்ப்பவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பாலஸ்தீன பகுதிகளில் யுத்தம் ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் யூத - இஸ்ரேலிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் என தங்களை தெரிவித்துக்கொண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் யூதகொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய ஒருவர் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து…

  21. ஐரோப்பாவில்... பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட, 151 சிறுவர்களுக்கு ‘சல்மோனெல்லா’ வைரஸ்! ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்கள் ‘சல்மோனெல்லா’ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒன்பது சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. இந்த சாக்லேட்டுகள் 113 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சால்மோனெல்லா பெல்ஜிய சாக்லேட் மூலம் பரவுகிறது. ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் இந்த சாக்லேட்டை சாப்பிட்ட 150 குழந்தைகளுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக 11 நாடுகளில்…

  22. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவின் பாதுகாப்புக்காக பிரிட்டனின் காவல் துறை ரூ.100 கோடி செலவிட்டுள்ளது. அமெரிக்க ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அரசு ரகசிய கோப்புகளை தனது விக்கிலீக்ஸ் வலைதளத்தில் அசாஞ்சே வெளியிட்டார். இது தொடர்பாக அமெரிக்கா இவர் மீது நடவடிக்கை எடுக்க முயன்று வருகிறது. இந்நிலையில், அவர் லண்டனிலுள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் கடந்த 2012ம் ஆணஅடு தஞ்சம் புகுந்தார். இதனிடையே, ஸ்வீடனில் 2 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக அவர் மீது அந்நாட்டில் வழக்கு தொடரப்பட்டது. தூதரகத்தைவிட்டு அசாஞ்சே வெளியேறினால், பாலியல் வழக்கை சந்திக்க ஸ்வீடனுக்கு அவர் நாடு கடத்தப்படுவது நிச்சயம் என்ற நிலையில் அவர் தூதரகத்திலேயே தொடர்ந்து வசித்து வருகிறார். இதன் கார…

  23. இன்றைய நிகழ்ச்சியில், * பெர்லின் கிறிஸ்மஸ் சந்தையில் பன்னிரெண்டு பேரை பலிவாங்கிய தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் என்பதில் சந்தேகமில்லையென ஜெர்மனியின் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு. * துருக்கியில் ரஷ்யத் தூதர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள போதிலும் உறவுகளில் பாதிப்பு இல்லை என இருநாடுளும் கூறுகின்றன. * பிரிட்டனில் குட்டிச் சிறார்களின் போலிஸ் படை. புரிந்துணர்வை வளர்க்க மேற்கொள்ளப்படும் முயற்சி.

  24. அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்குமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் உத்தரவு! அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்கம் செய்யுமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளார். அரசு பதவிகளில் நியமிக்கப்பட்ட மகன்கள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களை அதிகாரிகள் மாற்ற வேண்டும் என்றும் எதிர்காலத்தில் உறவினர்களை பணியமர்த்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுபவமில்லாத பணியாளர்கள் தனிப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் 2021இல் ஆட்சிக்கு வந்தபோது சில மூத்த ஊழியர்களை பணி…

  25. Published By: DIGITAL DESK 3 25 MAY, 2024 | 11:31 PM (நா.தனுஜா) முள்ளிவாய்க்காலும், போரிலும் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதும் கடந்தகால மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்தவேண்டும் என்பதை நினைவுறுத்தும் அடையாளங்களாகப் பார்க்கப்படவேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர் வலியுறுத்தியுள்ளார். பிரித்தானிய தமிழர் பேரவையினால் கடந்த 18 ஆம் திகதியன்று லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தொழில் கட்சியின் தலைவர் கியர் ஸ்ராமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.