உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26593 topics in this forum
-
உலகின் அதிக வயது முதியவர் மரணம் 26 - January - 2007 போர்ட்டோ ரிகோவில் இஸ்பெல்லா நகரத்தில் உலகின் அதிக வயதுடைய நபர் என்ற சாதனை படைத்த முதியவர் எமிலியானோ மெர்காடோ டெல் டோரா, தனது 115 ஆவது வயதில் மரணம் அடைந்தார். சில நாட்களுக்கு முன் உலகின் அதிக வயதுடைய பெண் எலிசபெத், தனது 116 ஆம் வயதில் மரணம் அடைந்ததை அடுத்து எமிலியானோ மெர்காடோ தான் 115 வயதுடைய சாதனையாளராக கருதப்பட்டார். இந் நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் இறந்து விட்டார். அவர் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற பின் போர்டோரிகோவில் கரும்புற தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது எம்மா பாஸ்ட் தில்மா என்ற பெண்மணி 114 வயதை கடந்து அதிக வயதுடையோர் என்ற சாதனையாளராக கருதப்படுகிறார்.
-
- 1 reply
- 1k views
-
-
அமெரிக்கா கண்டுபிடித்த புதிய கதிர் வீச்சு ஆயுதம் வாஷிங்டன், ஜன.26- ஏராளமான உயிர்களை கொன்று குவிக்கவும், பேரழி வுகளையும் ஏற்படுத்தும் நவீன ஆயதங்களை கண்டு பிடித்துள்ள அமெரிக்க ராணுவம் இப்பொழுது புதிய ரக ஆயுதம்' ஒன்றை கண்டு பிடித்துள்ளது. இந்த கதிர் வீச்சு ஆயுதம் எதிரிகளை கொல்லாது. பீரங்கி வண்டிகள் மற்றும் ஜீப்புகளில் பொருத்திக் கொள்ளும் இந்த கதிர் வீச்சு ஆயுதத்தில் இருந்து எதிரிகளை நோக்கி கதிர்கள் செலுத்தப்படும். அவர்களின் உடலில் கதிர்கள் பாய்ந்து உடல் தீப்பற்றி எரிவது போன்ற உணர்வு ஏற்படுத்தும். அதிக வெப்பத்துடன் மெல்லிய கதிர்கள் உடலில் ஊடுருவும் பொழுது எதிரிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடிப்பார்கள். அப்பொழுது எதிரிகள் நிலை குலைந்து விடுவார்…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஜெர்மன் பெரியார்! செக்கச் செவேல் பிள்ளையார் சிலைக்கு அருகே பார்த்திபன். பக்கத்தில்... அட, நம்ம பெரியார்! ‘‘போன வாரம் சுவாமிமலைக்குப் போயிருந்தபோது இவரைப் பார்த்தேன். ஜெர்மனியைச் சேர்ந்தவராம். பெயர் ‘ஓல்டன்புரூச் கன்தர்’. அருகில் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘எங்கள் ஊரில் தத்ரூபமாக உங்களைப் போலவே ஒரு பெரியவர் இருந்தார். அந்த ஆச்சர்யத்தில்தான் உங்களைச் சந்திக்க வந்தேன்’ என்றேன். ‘சந்தோஷம்! ஆனால், நான் ஒன்றும் வயதானவன் கிடையாது. எனக்கு ஜஸ்ட்... 70 வயசு தான் ஆகுது!’ என்று உரிமையோடு கடிந்து கொண்டார். இந்தியக் கலாசாரம் பற்றியும், தமிழகக் கட்டடக் கலை பற்றியும் தெரிந்துகொள்வதற்காகச் சுற்றுப் பயணம் வந்திருக்கிறாராம். அவரிடம் பெரியாரைப் …
-
- 0 replies
- 1.2k views
-
-
டெல்லி: இந்தியர்களிடம் கடவுள் நம்பிக்கை மிக அதிகமாக இருப்பதும், படிக்காதவர்களை விட படித்தவர்கள் மத்தியில்தான் கடவுள் நம்பிக்கை அதிகம் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது. சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி, இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் சிஎஸ்டிஎஸ் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 7,670 பேரிடம் கடவுள் நம்பிக்கை குறித்து கேட்கப்பட்டது. இந்த கணிப்பில் தெரிய வந்த முடிவுகள்: கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அதிலும் படித்தவர்களும், நகரங்களில் வசிப்பவர்களும்தான் அதிக அளவில் கடவுள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். பெண்களும், வயதானவர்களும் …
-
- 0 replies
- 815 views
-
-
விஜயகாந்த் வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்: அக்காமச்சான் வீடுஅலுவலகங்களிலும் சோதனை ஜனவரி 23, 2007 சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்துக்கு சொந்தமான சென்னை வீடுகள், கட்டடங்கள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை சென்ட்ரல் தியேட்டர் எதிரே உள்ள விஜய்காந்தின் வீடு, அவரது அக்காவின் வீடு, அக்காவிற்கு சொந்தமான மருத்துவமனையிலும் ரெய்டு நடந்து வருகிறது. மேலும் விஜய்காந்துக்கு நெருக்கமானவர்கள், பினாமிகள் என்று கருதப்படு÷õர் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. வருமானத்தை மீறி விஜய்காந்த் சொத்து குவித்துள்ளதாலும், வரி ஏய்ப்பு செய்துள்ளதாலும் இந்த சோதனைகள் நடப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சென்னை சாலிகிராம…
-
- 8 replies
- 2.3k views
-
-
Rheinland pfalz மானிலத்தின் வானொலியான rpr1radio வினோதமான போட்டிகளை நடாத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள். நூறாயிரம்யூரோ உங்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்பதுதான் அது. ஆனால் சொல்லப்படும் விடையானது படு முட்டாள்தனமானதாக இருக்க வேண்டும்......... இச்செய்தியை முழுமையாக வாசிக்க - http://tamilnews24.com//index.php?option=c...64&Itemid=2
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்னும் 20 ஆண்டுகள் நாட்டுக்கு, மொழிக்கு சேவை செய்வேன்: முதலமைச்சர் கருணாநிதி பேச்சு சென்னை, ஜன.25-: இன்னும் 20 ஆண்டுகள் நாட்டுக்கும், மொழிக்கும் சேவை செய்வேன் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார். முத்தமிழ்ப் பேரவை 31ஆம் ஆண்டு இசை விழா சென்னையில் நேற்று நடந்தது. விருதுகள் வழங்கி முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:- தமிழின் பெயரால், தமிழர்களின் பெயரால் எந்தவொரு அமைபஞபை உருவாக்கினாலும், அதன் ஆயுட்காலம் குறைவாகத்தான் இருக்கும் என்பது நாம் கண்ட வரலாற்று நிகழ்ச்சி. ஆனால், அதற்கெல்லாம் முற்றிலும் விதிவிலக்காக, மாற்றாக, இந்த மாமன்றம் 30 ஆண்டுகளைக் கடந்து 31ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது என்றால், இதற்காகப் பாடுபட்ட, உழைத்த, இன்னமும் …
-
- 6 replies
- 1.2k views
-
-
[24 - January - 2007] [Font Size - A - A - A] - பின்னணியில் மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சிறுநீரக தரகர்களை தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பின்னணியில் இருந்து இயக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் குறி வைத்துள்ளனர். சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மல்லிகா (35). இவரது கணவர் சிவா (37) மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். காசிமேடு ஒய்.எம்.சி.ஏ., குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜி. இவர் இரும்பு பட்டறையில் வேலை செய்து வந்தார். இவரது முதல் மனைவி லட்சுமி. வறுமையில் வாடிய ராஜியின் கையில் பணப் புழக்கம் அதிகமானது. ராஜியின் குடும்பத்துக்…
-
- 0 replies
- 941 views
-
-
கடந்த சனியன்று எனது வீட்டு அருகில் இருக்கும் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான தலைமுடி வெட்டும் கடைக்கு தலையை மேலால எடுக்க சென்றிருந்தேன். அங்கு சில பெண்கள் உட்பட பத்து வட இந்தியர்கள் இருந்திருப்பார்கள். போனது தொடக்கம் முடியும் வரை கட்டிப்பிடித்து அழாத குறையாக விம்மிக் கொண்டிருந்தார்கள். என்ன???? "பிரித்தானியாவில் சில்பா செட்டி இனவாதத்தால் பாதிப்பாம்". அரை மணி நேரம் தலையை குடுத்துக் கொண்டிருந்த எனக்கோ பொறுமை இழந்து "இந்தியர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய பாடம்" என்றேன். "ஏன்?" என்றார் ஒருவர். நானோ "இந்தியாவில் இல்லாத இனவாதமா??, மொழி வாதாமா? சாதியமா? ... " என்று ஒரு பட்டியல் போட்டேன்.எப்படி இந்தியாவில் சாதி என்ற மிருகம் தலை விரித்தாடுகின்றதை மெல்லமாக விட்டு விட்டு, வீடு வந்தேன். ஒ…
-
- 5 replies
- 1.6k views
-
-
பாம்பன் கடலில் அதிசய நட்சத்திர மீன் * மீனவர்கள் வலையில் சிக்கியது ராமேஸ்வரம்: பாம்பன் கடலில் மீனவர் வலையில் அதிசய நட்சத்திர மீன் சிக்கியது. ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியநாதன். இவர் தனது படகில் மீனவர்கள் ஸ்டாலின், பாக்கியராஜ் ஆகியோருடன் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அரியவகை கடல் தாமரை ( சீ அனிமூன் )மற்றும் நட்சத்திர மீன் (ஸ்டார் பிஷ் )ஒன்றும் உயிருடன் வலையில் சிக்கியது. மீன்களுடன் சிக்கிய நட்சத்திர மீன் மற்றும் கடல் தாமரையை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் மத்திய கடல்வாழ் உயிரின அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக தெரிவித்தனர். நட்சத்திர மீனுக்கு ஐந்து வால்கள் இருக்கு…
-
- 1 reply
- 1.6k views
-
-
புதிய அரசியலமைப்பு குறித்த தமிழக அரசின் கோரிக்கை [24 - January - 2007] [Font Size - A - A - A] இந்திய அரசியலமைப்பை புதியதாக மீள வரையவேண்டுமென்று தமிழக மாநில அரசாங்கத்திடமிருந்து கோரிக்கை எழுந்திருக்கிறது. தமிழக சட்டசபையின் புதிய சட்டத்தொடரை கடந்த சனிக்கிழமை ஆரம்பித்துவைத்து சம்பிரதாய பூர்வமான உரையை நிகழ்த்திய மாநில ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, காலத்தின் தேவைக்கேற்ப இந்திய அரசியலமைப்பை திருத்தியெழுதுவதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். `மாநிலங்களுக்கான அதிகாரப்பரவலையும் மத்திய அரசாங்கத்துக்கும் மாநிலங்களுக்கும் இடையேயான அதிகாரப்பகிர்வுப் பட்டியலையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறத…
-
- 0 replies
- 967 views
-
-
[24 - January - 2007] [Font Size - A - A - A] - பின்னணியில் மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சிறுநீரக தரகர்களை தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பின்னணியில் இருந்து இயக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் குறி வைத்துள்ளனர். சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மல்லிகா (35). இவரது கணவர் சிவா (37) மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். காசிமேடு ஒய்.எம்.சி.ஏ., குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜி. இவர் இரும்பு பட்டறையில் வேலை செய்து வந்தார். இவரது முதல் மனைவி லட்சுமி. வறுமையில் வாடிய ராஜியின் கையில் பணப் புழக்கம் அதிகமானது. ராஜியின் குடும்பத்துக்…
-
- 0 replies
- 853 views
-
-
ஷில்பா ஷெட்டியை இனவெறியுடன் திட்டியதாக சர்ச்சையில் சிக்கி பிக் பிரதர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட இங்கிலாந்து டிவி நடிகை ஜேட் கூடியின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பயந்து போன அவர் வீட்டை விட்டு ஹோட்டலில்÷ பாய்த் தங்கியுள்ளார். தனது குந்தைகளுக்குப் பாதுகாப்பு தேவை என்றும் கோரியுள்ளார். லண்டனைச் சேர்ந்த சேனல் 4 என்ற டிவி நிறுவனம் ஒளிபரப்பி வரும் பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கண்டு கொண்டனர். இதில் ஷில்பாவை இனவெறியுடன் திட்டியதாக சர்ச்சையில் சிக்கினார் ஜேட் கூடியும் அவரது தாயார் ஜேக்கி கூடியும். இதையடுத்து முதலில் ஜேக்கியும் பின்னர் நேயர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி ஜேட் கூடியும…
-
- 0 replies
- 974 views
-
-
சென்னை: நியூயார்க்கிலிருந்து சென்னை வந்த தன்னை வரவேற்க காத்திருந்த தாயையும், தாய் மாமாவையும் விட்டு விட்டு காத்திருந்த காதலருடன் இளம்பெண் ஆட்டோவில் பறந்தார். அவரைக் கடத்துவதாக பெண்ணின் மாமா கூறியதால் ஆட்டோவை ஓட்டிய காதலரை பொதுமக்கள் சேர்ந்து நையப் புடைத்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விசாகப்பட்டனத்தைச் சேர்ந்தவர் அனில்குமார். சாப்ட்வேர் என்ஜீனியராக இருந்து வந்த அவர் அதை விட்டு விட்டு இப்போது ஷேர் மார்க்கெட் பிசினஸில் ஈடுபட்டுள்ளார். ராயப்பேட்டையில் தங்கியுள்ளார். இவரது எதிர்வீட்டில் வசிப்பவர் ராஜ்லிண்டா கவுர். பஞ்சாபைச் சேர்ந்த ராஜ்லிண்டா கவுர், தனது மாமா வீட்டில் தங்கியிருந்தார். இவருக்கு தந்தை கிடையாது. தாயார் பஞ்சாபில் இருந்தார். பி.எஸ்.சி. வரை ப…
-
- 0 replies
- 926 views
-
-
சென்னை: மனைவியின் தங்கையுடன் கள்ளத் தொடர்பு வைத்ததற்கு மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால், 2 மகன்களுக்கு விஷம் கொடுத்துக் கொன் கணவன் தானும் தற்கொலை செய்து கொண்டார். அவர்களுடன் சேர்ந்து விஷம் சாப்பிட்ட மைத்துனி உயிர் பிழைத்துக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தை அடுத்த சின்னநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 29). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு கார்த்திக் (5), அருண்குமார் (2) என இரு மகன்கள். சசிகலாவின் தங்கை சரிதா (வயது 19). அடிக்கடி அக்கா வீட்டுக்கு வருவாராம். அப்போது மாமா சந்திரசேகருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இது சசிகலாவுக்க…
-
- 0 replies
- 2.5k views
-
-
ராமேஸ்வரம்: சேது சமுத்திரத் திட்ட கடல் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த கப்பல், ராமர் பாலம் தீவித் திட்டுகளை உடைத்துக் கொண்டிருந்தபோது அதன் கருவி உடைந்ததால் கடலை ஆழப்படுத்தும் பணியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கி, கடலை ஆழப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பாக் ஜலசந்தியில் 167 கிலோமீட்டர் தொலைவுக்கு கடலை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது வேதாரண்யம், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதியில் அகழ்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அதி நவீன சிஎஸ்டி அக்வாரியஸ் மற்றும் டிரஜ் 6 என்ற இரு கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் 10ம் தேதி முதல் இப்பகுதியில் ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. முக்கியப் பகுதியா…
-
- 1 reply
- 907 views
-
-
மதுரை: சென்னை பெண்களிடம் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட சிறுநீரகங்கள் சில நடிகர், நடிகைகளுக்கும் பொருத்தப்பட்டுள்ளது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை எண்ணூ>ல் உள்ள சுனாமி தற்காலிகக் குடியிருப்பில் வசிக்கும் மீனவப் பெண்களின் அறியாமை மற்றும் ஏழ்மையைப் பயன்படுத்தி ஒரு கும்பல் சொற்ப விலைக்கு சிறுநீரகங்களை பெற்று அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் கொடுத்த புகாரை வைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரையில் 4 மருத்துவமனைகளில் வைத்துத் தான் இந்த சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு, பிறருக்கு பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சிபிசிஐடி குழு…
-
- 0 replies
- 979 views
-
-
நஜாமெனா: 103 பயணிகளுடன் சூடான் நாட்டு விமானம் கடத்தப்பட்டது. விமானம் சாட் நாட்டின் தலைநகர் நஜாமெனாவில் தரையிறங்கியது. விமானத்தை கடத்தியவர் அங்கு சரணடைந்தார். இன்று காலை சூடானின் கார்டோம் நகரில் அல்பஸர் நகருக்குக்கு ஏர் வெஸ்ட் நிறுவன போயிங் 737 விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது காக் பிட்டுக்குள் நுழைந்த சைப் ஒமர் என்ற நபர் விமானியின் தலையில் துப்பாக்கியை வைத்தார். விமானத்தை அண்டை நாடான சாட் நாட்டுக்குத் திரும்புமாறு உத்தரவிட்டார். இதையடுத்து விமானத்தை சாட் நாட்டின் நஜாமெனா நகருக்கு விமானி திருப்பினார். அங்கு விமானத்தை தரையிறக்க கடத்தல்காரன் அனுமதி தந்தான். இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு இடையே விமானம் அங்கு தரையிறங்கியது. இதையடுத்து சைப் ஒமர் கைது செய்யப…
-
- 0 replies
- 783 views
-
-
இலங்கை சிலிங்கோ நிறுவனத்தின் பண மோசடி.... இலங்கையில் மிகவும் பிரபலமானதும் முன்னனி பங்கு வாத்தக நிறுவனமான சிலிங்கோ நிறுவனத்தில் பணத்தை இழந்து பல மக்கள் தவிப்பதாக அந்த பணத்தை இழந்த பலர் எம்மிடம் தெரிவித்தனர். சிலிங்கோ - சுப்பிறீம் ஆயுள்காப்புறுதி என கூறி அதில் மருத்துவ காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதி அடங்கலாக பல லட்சம் பணத்தை முதலீடு செய்து அதிக வட்டி பணம் தருவதாக கூறி அந்த மக்களின் பணத்தை ஏமாற்றிய நிலையை கேட்கும் போது எமக்கே நெஞ்சு விறைத்தது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் அவர்கள் குறிவைத்தது புலம்பெயர் நாடுகளில் இருந்து போன உறவுகளையே. இவர்கள் தான் தற்போது பெருமளவிலான பணத்தை கொடுத்து விட்டு அல்லல் படுகிறார்கள்... கொடுத் பணத்தை கே…
-
- 24 replies
- 5.1k views
-
-
கேரள மாநிலம் தொடுபுழாவை சேர்ந்தவர் பிரின்ஸ் (வயது 27). இவரது தங்கை ஷீலா (25). நேற்றுமுன்தினம் பிரின்ஸ் தனது தங்கைக்கு புது சுடிதார் வாங்கி வந்தார். சுடிதார் கலர் ஷீலாவுக்கு பிடிக்கவில்லை. அந்த சுடிதாரை பிரின்சின் முகத்தில் அவர் வீசி எறிந்தார். ஆத்திரம் அடைந்த பிரின்ஸ், ஷீலாவை அடித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் தூங்க சென்று விட்டனர். நள்ளிரவு ஷீலா திடீரென விழித்தார். அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த பிரின்சின் முகத்தில் அவர் ஆசிட்டை ஊற்றினார். வலி தாங்க முடியாமல் பிரின்ஸ் துடித்தார். அந்த சமயம் கத்தியை எடுத்து ஷீலா, பயங்கரமாக பிரின்ஸ் மீது குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே பிரின்ஸ் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து …
-
- 15 replies
- 3.3k views
-
-
புளு பிலிமில் நடித்த டிவி நடிகை, நடிகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னை சாலிகிõரமத்தில் சின்மயா நகரில் ஒரு வீட்டில் நடிகர், நடிகைகளை வைத்து ஆபாச படங்கள் எடுக்கப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து விசாரணைக்கு கமிஷ்னர் லத்திகா சரண் உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் தனிப் படை அந்த வீட்டில் அதிகாலையில் நுழைந்து சோதனையிட்டது. அப்போது அந்த வீட்டில் இருந்த போஸ் (வயது 60) என்பவர் மாட்டினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, 5 வருடத்துக்கு முன் ஆபாச படம் எடுக்கும் கேரள சினிமா கும்பலுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. எனக்கும் சினிமா துணை நடிகைகளுடன் தொடர்பு உண்டு. இதையடுத்து 5 நடிகைகளை ஊட்டி, கொடைக்கானலுக்கு ஆபாச படம் எடுக்க அழைத்துச் சென்றேன். ஆனால், அவர்களுட…
-
- 2 replies
- 3.8k views
-
-
டெல்லி: உ.பி. உள்ளிட்ட வட மாநில தேர்தல் பிரசாரத்தின்போது ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் பொம்மை விமானங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தலைவர்களை கொல்ல தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களும் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இந்த தேர்தல் பிரசாரத்தின்போது பயங்கர நாச வேலைகளில் ஈடுபட்டு தேர்தல் பிரசாரத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சோனியா காந்தி, ராகுல்காந்தி, பாஜக தலைவர்கள் அத்வானி, வாஜ்பாய் ஆகியோரைக் குறி வைத்துத் தாக்குதல் நட…
-
- 0 replies
- 884 views
-
-
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தனியார் நர்சரி பள்ளிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 25 குழந்தைகள் காயமடைந்தனர். திருக்கோகணம் பகுதியில் ஒரு தனியார் நர்சரிப் பள்ளி உள்ளது. எல்.கே.ஜி, யு.கே.ஜி. ஆகிய வகுப்புகள் ஓட்டுக் கொட்டகையின் கீழ் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஓடுகள் நீண்ட காலத்திற்கு முன்பு போடப்பட்டவையாகும். திங்கள்கிழமை திடீரென ஓட்டுக் கொட்டகையை தாங்கி நின்ற மூங்கில் கம்பு உடைந்து விழுந்தது. இதையடுத்து ஓடுகள் சடசடவென சரிந்து விழுந்தன. இதில் 25 மாணவ, மாணவிகள் இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்தனர். இவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்தது அவர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் சீரு, ஆர்.டி.ஓ தமி…
-
- 0 replies
- 892 views
-
-
இலங்கையில் இருந்து அரசியல் தஞ்சம் கோருவோரின் கோரிக்கைளை சாதகமாக பரீசீலிக்க கோரிக்கை இலங்கையில் இருந்து அரசியல் தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்களை சாதகமாக பரிசீலிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலாயம் அனைத்துலக நாடுகளை கோரியுள்ளது இது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்களும் வன்முறைகளும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக வடக்கு கிழக்கு இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழர்களுக்கு மாற்றிடங்களில் வாழ்வதற்கான சூழ்நிலை காணப்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது இதனை கருத்தில் கொண்டு இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் மக்களால் விண்ணப்பிக்கப்படும் வி…
-
- 1 reply
- 1k views
-
-
சென்னை: திருமணம் தங்களைப் பிரித்து விடுமே என வேதனைப்பட்ட சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த அக்காவும், தங்கையும் ஒரே கயிற்றில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். ராயபுரத்தைச் சேர்ந்த கேவசராம் என்பவ>ன் மகள் குமரேஸ்வரி. 22 வயதாகும் இவர் பட்டப் படிப்பு முடித்தவர். அதே பகுதியில் வசிப்பவர் சந்திரமோகன். இவரது மகள் பெயர் மீனு. இவருக்கு வயது 20. இருவரும் ஒன்று விட்ட சகோதரிகள். சிறு வயது முதலே இருவரும் பாசத்துடன் பழகி வந்தனர். ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மாட்டார்களாம். இந் நிலையில் குமரேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகள் தொடங்கின. இதை அறிந்த அக்காவும், தங்கையும் கவலை அடைந்தனர். திருமணமாகி கணவர் வீட்டுக்குச் சென்று விட்டால், மீனுவைப் பிரிய வேண்டுமே என குமரேஸ்வ> …
-
- 3 replies
- 1.9k views
-