உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26606 topics in this forum
-
கடலூர்: கல்யாண விருந்தில் இட்லிக்குப் பதில் பொங்கல் பரிமாறப்பட்டதால், பெரும் ரகளை ஏற்பட்டு, அடிதடியில் முடிந்தது. கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திராடன். இவரது மகன் முத்துலிங்கத்திற்கும், பண்ருட்டி அருகே உள்ள கரும்பூரைச் சேர்ந்த பத்மநாபன் மகள் கஸ்தூரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் மண்டபத்தில் குழுமியிருந்தனர். முத்துலிங்கம், கஸ்தூரியின் கழுத்தில் தாலி கட்டிய பிறகு கல்யாண விருந்து தொடங்கியது. அப்போது இட்லி, பொங்கல், வடை ஆகியவை ப>மாறப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் இட்லி, வடை ஆகியவை காலியாகி …
-
- 5 replies
- 1.5k views
-
-
திருச்சி: என்னால் எல்லாம் முடியும், ஆட்சியைக் கொடுத்துப் பாருங்கள் சாதித்துக் காட்டுகிறேன் என்று கூறி மக்களை ஏமாற்றும் பித்தலாட்டக்காரர்களை மக்கள் அடையாளம் கண்டு அவர்களை நெஞ்சுரத்தோடு எதிர்க்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். திருச்சி மாநகராட்சி மாமன்ற வளாகத்தில், முன்னாள் நகராட்சித் தலைவர் ரத்தினவேல்தேவரின் சிலையை கருணாநிதி திறந்து வைத்துப் பேசுகையில், அப்போது, ஆட்சி மாறி, நம்மிடம் ஆட்சி வந்தபோது, எங்கள் முன் 2,000 கோப்புகள் தேங்கிக் கிடந்தன. அதில் தேவர் சிலைக்கான அனுமதி கோரி வந்த கோப்பும் ஒன்று. அதை கோப்புகளில் தேடிக் கண்டுபிடித்தோம். உடனடியாக ஆணை பிறப்பிக்கப்பட்டு சிலை திறப்புக்கு அனுமதி தரப்பட்டது. தேவர் என்றால் தமிழகத்தில் இரண்டு பேர்தான…
-
- 2 replies
- 1.3k views
-
-
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே ராமர் பாலத்தை உடைக்க முயன்று உடைந்து கடலுக்குள் மூழ்கி விட்ட கருவியை மீட்க வந்த கிரேனும் உடைந்தது. இதனால் சேது சமுத்திரத் திட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சேது சமுத்திரத் திட்ட கடலை ஆழப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பாக் ஜலசந்தியில் தற்போது ஆழப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் எனப்படும் ஆதாம் பாலத்தை (தீவுத் திட்டுக்களால் ஆன நீண்ட பாறை) உடைக்கும் முயற்சிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. பாலத்தை உடைப்பதற்காக அதி நவீன சிஎஸ்டி அக்வாரிஸ் என்ற கப்பல் பயன்படுத்தப்பட்டது. அந்தக் கப்பலில் உள்ள தோண்டும் கருவி 50 டன் எடை கொண்டது. இதை வைத்துத்த…
-
- 0 replies
- 722 views
-
-
இந்தியின் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி. சல்மான் கான் உள்பட பல ஸ்டார்களின் முன்னாள் காதலியான இவர் சினிமாவிலிருந்து டி.வி.க்கு வந்திருக்கிறார். இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சேட்டிலைட் சேனல் 'சேனல் 4.' இதன் பிரதான நிகழ்ச்சி 'பிக் பிரதர்.' பிரபலமான நபரின் ஒருமாத வாழ்க்கையை அப்படியே லைவ்வாக காண்பிக்கும் இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதன்முறையாக இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவைச் சேர்ந்த ஷில்பா ஷெட்டியை 'சேனல் 4' தேர்ந்தெடுத்திருக்கிறது. ஒருமாதம் வேறு சில பிரபலங்களுடன் தங்கியிருக்கும் ஷில்பாவை லைவ்வாக காண்பிக்கப் போகிறார்கள். எழுத்தாளர்கள், பாப் இசைக்கலைஞர்கள் கொண்ட இந்த குழுவில் அனைவரையும் கவர்ந்தவர் ஷில்பா ஷெட்டிதான் என்கிறார்கள். ஒருமாத…
-
- 71 replies
- 9.2k views
-
-
[29 - January - 2007] [Font Size - A - A - A] ஈராக்கில் மறைமுகமாக செயல்பட்டு வரும் ஈரான் புரட்சிகர படையினர் மற்றும் அந்நாட்டு உளவுத் துறையினரை சுட்டுக் கொல்லலாம் அல்லது உயிருடன் பிடிக்கலாம் என அமெரிக்கப் படையினருக்கு ஜனாதிபதி புஷ் அனுமதி வழங்கியுள்ளார். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை அமெரிக்கப் படையினருக்கு கடந்த ஆண்டு இறுதியில் ஜோர்ஜ் புஷ் வழங்கியதாக "வாஷிங்டன் போஸ்ட்" நாளிதழ் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானின் பலம் ஓங்கி வருவதைக் கட்டுப்படுத்தவே இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே ஈரான் உளவாளிகளை சந்தேகத்தின் பேரில் அமெரிக்கப் படையினர் பிடித்து விசாரித்துப் பின்ன…
-
- 0 replies
- 717 views
-
-
பெங்களூரு: புகழ் பெற்ற விஞ்ஞானியான விஸ்வேரய்யா பெயரில் பெங்களூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரியில் 800 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் பாடம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. புகழ் பெற்ற விஞ்ஞானி விஸ்வேரய்யா. கட்டிடக் கலையில் வல்லுனரான அவர் இந்தியாவின் பல புகழ் பெற்ற கட்டடங்களை வடிவமைத்தவர். மைசூர் அருகே உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையையும் அவர்தான் வடிவமைத்தார். அவரது பெயரில் பெங்களூரில் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறை மிகக் கொடுமையாக உள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் 800 மாணவர்களுக்கும் ஒரே ஒரு ஆசிரியர்தான் பாடம் நடத்தி வருகிறார். கம்ப்யூட்டர் அறிவியல் துறைத் தலைவராக உள்ள டாக்டர் கே.ஆர்.வேணுகோபால்தான் 800 மாணவர்களுக்கும் பாடம் எ…
-
- 2 replies
- 1k views
-
-
சென்னை: சென்னை புறநகர்ப் பகுதி மக்களை கடந்த 6 ஆண்டுகளாக கலக்கி வந்த கிரில் கொளளையர்கள் கூண்டோடு பிடிபட்டுள்ளனர். சென்னை புறநகர்ப் பகுதிகளில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கி வந்தவர்கள் கிரில் கொள்ளையர்கள். வீடுகளின் ஜன்னல் கிரில் கம்பிகளை வளைத்து உள்ளே நுழைந்து திருடிச் செல்வது இவர்களது பாணி. நகை, பணத்தை மட்டுமே கொள்ளையடிப்பார்கள், ஆள் இல்லாத வீடுகளைத்தான் நோட்டமிட்டுக் கொண்டு நுழைந்து கொள்ளை அடிப்பார்கள். புறநகர்ப் பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த கிரில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சென்னை தவிர மதுரையில் 11 வீடுகள், வேலூரில் 7 வீடுகள் சென்னைக்கு வெளியிலும் துணிகரத் திருட்டை நடத்தியுள்ளனர். தாங்கள் நுழையப் போகும் வீட்டை முன்கூட்டி…
-
- 0 replies
- 943 views
-
-
-வெளிநாட்டு செய்திச் சேவை- நேட்டோவின் தாக்குதலில் சேர்பிய படைகள் தோற்கடிக்கப்பட்டு 8 வருடங்களுக்குப் பின்னர் கொசோவோ முழுமையாக சுதந்திர நாடாக மிளிர்வதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொசோவோ இதன் மூலம் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கும் சர்வதேச அமைப்புகளான ஐக்கிய நாடுகள், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றவற்றில் உறுப்புரிமை பெறுவதற்குமான உரிமையை பெற்றுள்ளது. மேலும், முன்னாள் யுகொஸ்லாவியா, சேர்பியா போன்றவற்றிற்கு உரிய பொருளாதார சொத்துகள் மற்றும் கடன்கள் மீதான தனது உரிமையையும் கொசோவோ பெறுகின்றது. எனினும் ஐக்கிய நாடுகளின் இந்த திட்டம் சேர்பியாவை சீற்றமடையச் செய்யலாம் என சுட்டிக் காட்டப்படுகின்றது. வியன்னாவில் இது குறித்து யோசனைகள் ஆராயப்பட்…
-
- 0 replies
- 927 views
-
-
ரெய்டு தாக்குதல்... கொதிக்கும் விஜயகாந்த் ‘‘பழிக்குப்பழி அரசியலுக்குள் இழுக்கிறார் கலைஞர்!’’ கல்லூரி, கட்சி அலுவலகம், வீடு என எங்கும் ரெய்டு மயமாகிவிட, அது போதா தென்று தன்னைச் சுற்றியிருப்பவர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் புகுந்து புறப்பட்டதில் கண்சிவந்து போயிருக்கிறார், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். ரெய்டில் ஏராள மான சொத்துக்கள் சிக்கியதாகவும் கணக்கில் காட்டப்படாத பணமும், வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டதாகவும் வெளியில் பரபரப்பாகச் செய்திகள் பரவிக்கொண்டிருக்க, விஜயகாந்தை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தோம்... ‘‘ரெய்டுக்குக் காரணம் அரசியல் பழிவாங் கல்தான் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், முறையான வரி செலுத்தாததினால்தான் உங்கள் வங்கிக் கண…
-
- 2 replies
- 858 views
-
-
ஆச்சே விடுதலையை மூச்சாக கொண்ட ஒரு தேசத்தின் கதை -ச.பா.நிர்மானுசன்- Sunday, 28 January 2007 இந்தோனேசியாவின் விசேட ஆட்புலமாக அமைந்துள்ள ஆச்சே (Aceh) மாநிலத்தின் வடக்குப் பகுதியிலே சுமத்திரா தீவும் தெற்குப் பகுதியிலே இந்து சமுத்திரமும் அமையப்பெற்றுள்ளன. சுயநிர்ணய உரிமைக்காகவும் சுதேச அடையாளத்திற்காகவும் சுமார் 29 வருடங்கள் தொடர்ந்த ஆச்சேயினுடைய விடுதலைக்கான போராட்டம் 1990களின் இறுதியிலும் 2000 இன் ஆரம்ப காலப்பகுதியிலும் உலகளாவிய ரீதியில் முனைப்படைந்திருந்தது. 2004 டிசம்பர் 26 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அழிவுகள் ஆச்சேனியர்களையும் இந்தோனேசியர்களையும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை நோக்கி சிந்திக்க வைத்தது. அதன் விளைவு போரினால் சிந்திய குருதிகளுக்கும்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
தென் கொரிய அதிகாரிகள் நிராகரிப்பு வடகொரிய தலைவர் கிம் ஜொங் இல் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக இராணுவம் சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என வெளியான தகவல்களை தென் கொரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நிராகரித்துள்ளனர். ஜப்பானின் ஜிஜி செய்தி, தென்கொரிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி வடகொரியாவின் வூன்சான் கிராமத்தில் கிம் ஜொங் இல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தது. இதுபற்றி எதுவும் எமக்குத் தெரியாது என தென் கொரிய அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். வழமைக்கு மாறான சூழ்நிலை எதுவும் தென்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிம் ஜொங் இல் குறித்த தகவல்களை நம்பகத்தன்மையுள்ளவை என்றும் தென் கொரிய புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. …
-
- 0 replies
- 702 views
-
-
இலங்கையின் புனிதநகரத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் நடைமுறைப்படுத்த முடியாது? இலங்கையில் பழமையான, புராதனச் சின்னங்களும், கோயில்களும் புனித நகராக அரசால் அறிவிக்கப்படும். அந்தப் புனித நகரத்தின் தொன்மையையும், புனிதத்தையும் குலைக்கும் வகையில் அந்தக் கோயிலைச் சுற்றியும் அதன் அண்மையான பகுதிகளிலும் புதுக் கட்டிடங்களோ, வேற்று மதச் சின்னங்களோ, சிலைகளோ, கோயில்களோ அனுமதிக்கப் படுவதில்லை. தமிழ்நாட்டின் பல நகரங்களில் நான் பார்த்த அசிங்கமான தோற்றம் என்னவென்றால் பழம்பெரும், புராதனக் கட்டிடக் கலையுடன், தமிழ் முன்னோர்களின் சிற்பக் கலையின் சிறப்பையும், பழம் பெருந்தமிழரசர்களின் சரித்திரத்தையும் பறைசாற்றும் வகையில் அமைந்த கோயில்களுக்கு அருகாமையிலேயே, அந்தக் கோயில்களின் பழமையையும், ப…
-
- 4 replies
- 1.4k views
-
-
கோபாலபுரத்தில் சாய்பாபா... அதிசயம் நிகழ்ந்தது எப்படி? அத்தி பூத்தது போல் எப்போதாவது சில அபூர்வ சந்திப்புகள் நிகழ்வது உண்டு. அப்படி ஓர் அபூர்வ சந்திப்பு கடந்த 20&ம் தேதி, சென்னை கோபாலபுரத்தில் நடந்திருக்கிறது! கொள்கையிலும் நம்பிக்கையிலும் எதிரெதிர் துருவங்களாக இயங்கிவரும் முதல்வர் கருணாநிதியும், புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவும் 20&ம் தேதி ஒருவரையருவர் சந்தித்து சுமார் முக்கால் மணி நேரம் அளவளாவி இருக்கிறார்கள். பகுத்தறிவையே தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கும் கருணாநிதியும், பக்திமார்க்கத்தையே தன் வாழ்வியல் நெறியாகக் கடைப்பிடித்து வரும் சாய்பாபாவும் சந்தித்துக் கொண்டது& தமிழக அரசியல் களத்திலும் சரி, ஆன்மிக தளத்திலும் சரி... வியப்பையும் பர…
-
- 27 replies
- 10.5k views
-
-
உலகின் அதிக வயது முதியவர் மரணம் 26 - January - 2007 போர்ட்டோ ரிகோவில் இஸ்பெல்லா நகரத்தில் உலகின் அதிக வயதுடைய நபர் என்ற சாதனை படைத்த முதியவர் எமிலியானோ மெர்காடோ டெல் டோரா, தனது 115 ஆவது வயதில் மரணம் அடைந்தார். சில நாட்களுக்கு முன் உலகின் அதிக வயதுடைய பெண் எலிசபெத், தனது 116 ஆம் வயதில் மரணம் அடைந்ததை அடுத்து எமிலியானோ மெர்காடோ தான் 115 வயதுடைய சாதனையாளராக கருதப்பட்டார். இந் நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் இறந்து விட்டார். அவர் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற பின் போர்டோரிகோவில் கரும்புற தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது எம்மா பாஸ்ட் தில்மா என்ற பெண்மணி 114 வயதை கடந்து அதிக வயதுடையோர் என்ற சாதனையாளராக கருதப்படுகிறார்.
-
- 1 reply
- 1k views
-
-
அமெரிக்கா கண்டுபிடித்த புதிய கதிர் வீச்சு ஆயுதம் வாஷிங்டன், ஜன.26- ஏராளமான உயிர்களை கொன்று குவிக்கவும், பேரழி வுகளையும் ஏற்படுத்தும் நவீன ஆயதங்களை கண்டு பிடித்துள்ள அமெரிக்க ராணுவம் இப்பொழுது புதிய ரக ஆயுதம்' ஒன்றை கண்டு பிடித்துள்ளது. இந்த கதிர் வீச்சு ஆயுதம் எதிரிகளை கொல்லாது. பீரங்கி வண்டிகள் மற்றும் ஜீப்புகளில் பொருத்திக் கொள்ளும் இந்த கதிர் வீச்சு ஆயுதத்தில் இருந்து எதிரிகளை நோக்கி கதிர்கள் செலுத்தப்படும். அவர்களின் உடலில் கதிர்கள் பாய்ந்து உடல் தீப்பற்றி எரிவது போன்ற உணர்வு ஏற்படுத்தும். அதிக வெப்பத்துடன் மெல்லிய கதிர்கள் உடலில் ஊடுருவும் பொழுது எதிரிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடிப்பார்கள். அப்பொழுது எதிரிகள் நிலை குலைந்து விடுவார்…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஜெர்மன் பெரியார்! செக்கச் செவேல் பிள்ளையார் சிலைக்கு அருகே பார்த்திபன். பக்கத்தில்... அட, நம்ம பெரியார்! ‘‘போன வாரம் சுவாமிமலைக்குப் போயிருந்தபோது இவரைப் பார்த்தேன். ஜெர்மனியைச் சேர்ந்தவராம். பெயர் ‘ஓல்டன்புரூச் கன்தர்’. அருகில் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘எங்கள் ஊரில் தத்ரூபமாக உங்களைப் போலவே ஒரு பெரியவர் இருந்தார். அந்த ஆச்சர்யத்தில்தான் உங்களைச் சந்திக்க வந்தேன்’ என்றேன். ‘சந்தோஷம்! ஆனால், நான் ஒன்றும் வயதானவன் கிடையாது. எனக்கு ஜஸ்ட்... 70 வயசு தான் ஆகுது!’ என்று உரிமையோடு கடிந்து கொண்டார். இந்தியக் கலாசாரம் பற்றியும், தமிழகக் கட்டடக் கலை பற்றியும் தெரிந்துகொள்வதற்காகச் சுற்றுப் பயணம் வந்திருக்கிறாராம். அவரிடம் பெரியாரைப் …
-
- 0 replies
- 1.2k views
-
-
டெல்லி: இந்தியர்களிடம் கடவுள் நம்பிக்கை மிக அதிகமாக இருப்பதும், படிக்காதவர்களை விட படித்தவர்கள் மத்தியில்தான் கடவுள் நம்பிக்கை அதிகம் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது. சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி, இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் சிஎஸ்டிஎஸ் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 7,670 பேரிடம் கடவுள் நம்பிக்கை குறித்து கேட்கப்பட்டது. இந்த கணிப்பில் தெரிய வந்த முடிவுகள்: கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அதிலும் படித்தவர்களும், நகரங்களில் வசிப்பவர்களும்தான் அதிக அளவில் கடவுள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். பெண்களும், வயதானவர்களும் …
-
- 0 replies
- 816 views
-
-
விஜயகாந்த் வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்: அக்காமச்சான் வீடுஅலுவலகங்களிலும் சோதனை ஜனவரி 23, 2007 சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்துக்கு சொந்தமான சென்னை வீடுகள், கட்டடங்கள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை சென்ட்ரல் தியேட்டர் எதிரே உள்ள விஜய்காந்தின் வீடு, அவரது அக்காவின் வீடு, அக்காவிற்கு சொந்தமான மருத்துவமனையிலும் ரெய்டு நடந்து வருகிறது. மேலும் விஜய்காந்துக்கு நெருக்கமானவர்கள், பினாமிகள் என்று கருதப்படு÷õர் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. வருமானத்தை மீறி விஜய்காந்த் சொத்து குவித்துள்ளதாலும், வரி ஏய்ப்பு செய்துள்ளதாலும் இந்த சோதனைகள் நடப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சென்னை சாலிகிராம…
-
- 8 replies
- 2.4k views
-
-
Rheinland pfalz மானிலத்தின் வானொலியான rpr1radio வினோதமான போட்டிகளை நடாத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள். நூறாயிரம்யூரோ உங்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்பதுதான் அது. ஆனால் சொல்லப்படும் விடையானது படு முட்டாள்தனமானதாக இருக்க வேண்டும்......... இச்செய்தியை முழுமையாக வாசிக்க - http://tamilnews24.com//index.php?option=c...64&Itemid=2
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்னும் 20 ஆண்டுகள் நாட்டுக்கு, மொழிக்கு சேவை செய்வேன்: முதலமைச்சர் கருணாநிதி பேச்சு சென்னை, ஜன.25-: இன்னும் 20 ஆண்டுகள் நாட்டுக்கும், மொழிக்கும் சேவை செய்வேன் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார். முத்தமிழ்ப் பேரவை 31ஆம் ஆண்டு இசை விழா சென்னையில் நேற்று நடந்தது. விருதுகள் வழங்கி முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:- தமிழின் பெயரால், தமிழர்களின் பெயரால் எந்தவொரு அமைபஞபை உருவாக்கினாலும், அதன் ஆயுட்காலம் குறைவாகத்தான் இருக்கும் என்பது நாம் கண்ட வரலாற்று நிகழ்ச்சி. ஆனால், அதற்கெல்லாம் முற்றிலும் விதிவிலக்காக, மாற்றாக, இந்த மாமன்றம் 30 ஆண்டுகளைக் கடந்து 31ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது என்றால், இதற்காகப் பாடுபட்ட, உழைத்த, இன்னமும் …
-
- 6 replies
- 1.2k views
-
-
[24 - January - 2007] [Font Size - A - A - A] - பின்னணியில் மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சிறுநீரக தரகர்களை தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பின்னணியில் இருந்து இயக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் குறி வைத்துள்ளனர். சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மல்லிகா (35). இவரது கணவர் சிவா (37) மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். காசிமேடு ஒய்.எம்.சி.ஏ., குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜி. இவர் இரும்பு பட்டறையில் வேலை செய்து வந்தார். இவரது முதல் மனைவி லட்சுமி. வறுமையில் வாடிய ராஜியின் கையில் பணப் புழக்கம் அதிகமானது. ராஜியின் குடும்பத்துக்…
-
- 0 replies
- 942 views
-
-
கடந்த சனியன்று எனது வீட்டு அருகில் இருக்கும் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான தலைமுடி வெட்டும் கடைக்கு தலையை மேலால எடுக்க சென்றிருந்தேன். அங்கு சில பெண்கள் உட்பட பத்து வட இந்தியர்கள் இருந்திருப்பார்கள். போனது தொடக்கம் முடியும் வரை கட்டிப்பிடித்து அழாத குறையாக விம்மிக் கொண்டிருந்தார்கள். என்ன???? "பிரித்தானியாவில் சில்பா செட்டி இனவாதத்தால் பாதிப்பாம்". அரை மணி நேரம் தலையை குடுத்துக் கொண்டிருந்த எனக்கோ பொறுமை இழந்து "இந்தியர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய பாடம்" என்றேன். "ஏன்?" என்றார் ஒருவர். நானோ "இந்தியாவில் இல்லாத இனவாதமா??, மொழி வாதாமா? சாதியமா? ... " என்று ஒரு பட்டியல் போட்டேன்.எப்படி இந்தியாவில் சாதி என்ற மிருகம் தலை விரித்தாடுகின்றதை மெல்லமாக விட்டு விட்டு, வீடு வந்தேன். ஒ…
-
- 5 replies
- 1.6k views
-
-
பாம்பன் கடலில் அதிசய நட்சத்திர மீன் * மீனவர்கள் வலையில் சிக்கியது ராமேஸ்வரம்: பாம்பன் கடலில் மீனவர் வலையில் அதிசய நட்சத்திர மீன் சிக்கியது. ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியநாதன். இவர் தனது படகில் மீனவர்கள் ஸ்டாலின், பாக்கியராஜ் ஆகியோருடன் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அரியவகை கடல் தாமரை ( சீ அனிமூன் )மற்றும் நட்சத்திர மீன் (ஸ்டார் பிஷ் )ஒன்றும் உயிருடன் வலையில் சிக்கியது. மீன்களுடன் சிக்கிய நட்சத்திர மீன் மற்றும் கடல் தாமரையை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் மத்திய கடல்வாழ் உயிரின அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக தெரிவித்தனர். நட்சத்திர மீனுக்கு ஐந்து வால்கள் இருக்கு…
-
- 1 reply
- 1.6k views
-
-
புதிய அரசியலமைப்பு குறித்த தமிழக அரசின் கோரிக்கை [24 - January - 2007] [Font Size - A - A - A] இந்திய அரசியலமைப்பை புதியதாக மீள வரையவேண்டுமென்று தமிழக மாநில அரசாங்கத்திடமிருந்து கோரிக்கை எழுந்திருக்கிறது. தமிழக சட்டசபையின் புதிய சட்டத்தொடரை கடந்த சனிக்கிழமை ஆரம்பித்துவைத்து சம்பிரதாய பூர்வமான உரையை நிகழ்த்திய மாநில ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, காலத்தின் தேவைக்கேற்ப இந்திய அரசியலமைப்பை திருத்தியெழுதுவதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். `மாநிலங்களுக்கான அதிகாரப்பரவலையும் மத்திய அரசாங்கத்துக்கும் மாநிலங்களுக்கும் இடையேயான அதிகாரப்பகிர்வுப் பட்டியலையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறத…
-
- 0 replies
- 967 views
-
-
[24 - January - 2007] [Font Size - A - A - A] - பின்னணியில் மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சிறுநீரக தரகர்களை தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பின்னணியில் இருந்து இயக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் குறி வைத்துள்ளனர். சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மல்லிகா (35). இவரது கணவர் சிவா (37) மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். காசிமேடு ஒய்.எம்.சி.ஏ., குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜி. இவர் இரும்பு பட்டறையில் வேலை செய்து வந்தார். இவரது முதல் மனைவி லட்சுமி. வறுமையில் வாடிய ராஜியின் கையில் பணப் புழக்கம் அதிகமானது. ராஜியின் குடும்பத்துக்…
-
- 0 replies
- 853 views
-