உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
ரஷ்யாவை... ஜி20 அமைப்பில் இருந்து விலக்க, அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் திட்டம் ! ரஷ்யாவை ஜி20 அமைப்பில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கையை அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை ரஷ்யாவை மாற்றவேண்டும் என்ற பரிந்துரையை போலந்து, அமெரிக்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதை நோக்கமாகக் கொண்டு குறித்த அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த அமைப்பில் இருந்து ரஷியாவை நீக்க கோருவது மேற்கிலிருந்து ரஷ்யாவிற்கு எதிராக இருக்கும் பொருளாதாரத் தடைகளை அதி…
-
- 0 replies
- 151 views
-
-
உக்ரைனுக்கு... ஆம்புலன்ஸ்கள் அனுப்பவுள்ளதாக, பிரித்தானியா அறிவிப்பு! பாரிய உயிரிழப்புகளை தடுக்க பிரித்தானியா ஆம்புலன்ஸ்கள் மற்றும் கூடுதல் நிதியை வழங்கவுள்ளதாக, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ரஷ்யா முதன்முதலில் படையெடுத்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிப்பதன் ஒரு பகுதியாக, உக்ரைனுக்கு அதிக தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, கூடுதலாக 22 புதிய ஆம்புலன்ஸ்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என்று பிரதமர் அறிவித்தார். மூன்று வாரங்களுக்கு முன்பு தேசிய சுகாதார சேவை அறக்கட்டளைகளால் 20 ஆம்புலன்ஸ்கள் அனுப்…
-
- 0 replies
- 151 views
-
-
ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் இன்று பேச்சு : கெய்ரோவில் முக்கிய சந்திப்பு 06 Oct, 2025 | 11:24 AM பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீடித்து வரும் இரண்டு ஆண்டு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கியப் பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை( 6) எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்த 20 அம்ச அமைதித் திட்டத்தை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்தே இந்த அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த 20 அம்சத் திட்டம், காசாவை ஒரு பயங்கரவாதமற்ற, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாத அமைதிப் பூங்காவாக மாற்றுவதை முக்கிய அம்சமாக கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி …
-
- 0 replies
- 151 views
-
-
காசாவில் ‘பைரன்’ புயல் தாக்கம் ; 14 பேர் பலி 13 Dec, 2025 | 09:47 AM காசா பகுதியில் தாக்கிய ‘பைரன்’ புயலால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பகுதியில் கடும் காற்று, கனமழை மற்றும் முன்பு இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு வாழும் மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளதால் சுமார் 8.5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிட வசதிகள் மற்றும் நிவாரணங்களை வழங்க அனுமதி வழங்க வேண்டும் என காசா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. மழை மற்றும் குளிர் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பது அதி…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
மெக்ஸிக்கோவில் ஹெலி வீழ்ந்ததால் ஐவர் பலி By DIGITAL DESK 3 18 NOV, 2022 | 01:30 PM மெக்ஸிக்கோவில் ஹெலிகொப்டர் ஒன்று வீழ்ந்ததால் ஐவர் உயிரிழந்துள்ளனர். அகுவாஸ்கலியென்டிஸ் மாநிலத்தில் வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அம்மாநில ஆளுநர் தெரேசா ஜிமேனெஸ் தெரிவித்துள்ளார். அகுவாஸ்கலியென்டிஸ் மாநில பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி போர்பிரியோ சான்செஸ் மென்டோஸாவும் அடங்கியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு விபத்தாக இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆளுநர் தெரேசா ஜிமேனெஸ் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/140444
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Fenamad கட்டுரை தகவல் ஸ்டெஃபானி ஹெகார்ட்டி உலக மக்கள் தொகை செய்தியாளர் 3 நவம்பர் 2025, 03:18 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நவம்பர் 2025, 05:26 GMT பெருவின் அமேசான் பகுதியில் உள்ள ஒரு சிறிய திறந்த வெளியில் தாமஸ் அனெஸ் டோஸ் சான்டோஸ் வேலை செய்து கொண்டிருந்தபோது, காட்டில் காலடிச் சத்தம் நெருங்குவதைக் கேட்டார். அவர் தான் சூழப்பட்டுவிட்டதை அறிந்து உறைந்து போனார். "ஒருவர் நின்று, அம்புடன் குறிவைத்துக் கொண்டிருந்தார்," என்று அவர் கூறுகிறார். "எப்படியோ நான் இங்கு இருப்பதை அவர் கவனித்துவிட்டார், நான் ஓடத் தொடங்கினேன்." அவர் மாஷ்கோ பைரோ (Mashco Piro) பழங்குடியினரை நேருக்கு நேர் எதிகொண்டார். பல தசாப்தங்களாக, நுவேவா ஓசியானியா (Nueva Oceania) என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் …
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பாலியல் குற்றவாளிக்கு சிறை படத்தின் காப்புரிமைREUTERS Image captionலாரி நாசர் ஒலிம்பிக் வீராங்கனைகள் உள்பட பல பெண்களுக்கு எதிராக பாலியல் தாக்குதல் நடத்திய அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் முன்னாள் மர…
-
- 0 replies
- 151 views
-
-
'பிரஸ்ஸல்ஸ் அமைதிக்கு அல்ல, நீண்ட போருக்குத் தயாராகிறது' என்று கூறி, உக்ரைன் உதவி தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தை ஹங்கேரி கடுமையாக சாடியுள்ளது. உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான ஐரோப்பிய ஒன்றிய இராணுவ உதவி மற்றும் ரஷ்யா மீதான தடைகளை ஹங்கேரி எதிர்க்கிறது, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் மீதான தாக்கத்தை காரணம் காட்டி. ஐசு பைசர் |30.08.2025 - புதுப்பிப்பு : 30.08.2025 லண்டன் உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஆதரவை ஹங்கேரி எதிர்த்துள்ளது, பிரஸ்ஸல்ஸ் "சமாதானத்திற்கு அல்ல, நீண்ட போருக்கு" தயாராகி வருவதாகக் கூறி, ஹங்கேரிய வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜ்ஜார்டோ சனிக்கிழமை தெரிவித்தார். டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகனில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் …
-
-
- 2 replies
- 151 views
-
-
ஹொங்கொங், தெற்கு சீனாவை நோக்கி நகரும் ரகசா புயல்! வடக்கு பிலிப்பைன்ஸ் கிராமங்களில் மூவரின் இறப்புக்கு காரணமாகவும், ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றிய ஒரு சூப்பர் சூறாவளி இப்போது ஹொங்கொங், சீனாவின் தெற்குப் பகுதிகள் மற்றும் தாய்வானை நோக்கி நகர்கிறது. அங்கு மக்கள் மிகவும் கடுமையான வானிலையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். ரகசா புயல் ஹொங்கொங்கிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2017 இல் ஹடோ மற்றும் 2018 இல் மங்குட் ஆகிய புயல்களின் அளவை எட்டக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஹொங்கொங்கின் அதிகாரிகள் மூன்றாவது மிக உயர்ந்த புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். மேலும், குறைந்தது 700 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை மிக…
-
- 2 replies
- 150 views
-
-
01 AUG, 2024 | 10:21 AM காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் இரு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அல்ஜசீராவின் பத்திரிகையாளர் இஸ்மாயில் அல் கௌலும் கமரா ஊடகவியலாளர் ரமி அல் ரைவும் கொல்லப்பட்டுள்ளனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. மேற்குகாசாவின் சட்டி அகதிமுகாம் பகுதியில் இவர்கள் பயணித்துக்கொண்டிருந்த காரின் மீது தாக்குதல் இடம்பெற்றது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டஹமாசின் தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் வீட்டிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/189956
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் மீது குற்றச்சதி அரசு ஊழியர் என்ற வகையில் செயல்பட்டு நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாக இந்திய தண்டனைச்சட்ட பிரிவுகளின் கீழும் ஊழலில் ஈடுபட்டதாக ஊழல் தடுப்பு குற்றச்சாட்டுகள் பிரிவுகளின் கீழும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=128128&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 150 views
-
-
உக்ரேனில் கொலரா பரவும் ஆபத்து பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காத நிலையில், உக்ரேனின் மரியுபோல் நகரில் கொலரா நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உக்ரேன் போரால், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் போய் விட்ட துறைமுக நகரமான மரியுபோலில் தற்போது ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் உள்ளனர். அங்குள்ள பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் அங்கு கொலரா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கையில், “ரஷ்யா தான் ஆக்கிரமித்துள்ள மரியுபோலில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர போராடுகிறது. பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. தொலைபேசி மற்றும் இணைய சேவைகளில் பெரும் இடையூறு தொடர்கிறது.…
-
- 0 replies
- 150 views
-
-
Published By: DIGITAL DESK 3 20 JUL, 2025 | 05:24 PM அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸின் போயிங் 767-400 ரக பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்பட்ட பின் அதன் இடதுப்புற இயந்திரத்தில் தீப்பிடித்ததால் அவ்விமானம் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸிலேயே அவசரமாகத் தரையிறங்கியது. விமானி அவசரநிலையை அறிவித்ததையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறை, விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்ப வழிகாட்டியது. தரையிறங்கியதும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வா…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
நெதர்லாந்தில் பொது மக்கள் மீது மோதியது கார்; 9 பேர் காயம் Published By: Digital Desk 3 23 Dec, 2025 | 09:17 AM நெதர்லாந்தில் பொது மக்கள் மீது கார் ஒன்று மோதியதில் 09 பேர் காயமடைந்துள்ளனர். நெதர்லாந்து நாட்டின் ஹெல்டர்லாந்து மாகாணம் நன்ஸ்பெட் பகுதியில் உள்ள வீதியில் திங்கட்கிழமை இரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பு நடைபெறவிருந்தது. இந்த அணிவகுப்பை காண ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது, வீதியில் வேகமாக வந்த கார் அங்கு கூடியிருந்த மக்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார், காயமடைந்த 9 பேரையும் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதேவேளை, காரை ஓட்டிய நன்ஸ்பெட் பகுதியை சேர்ந்த 56 வயது மூதாட்ட…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
உக்ரேனின் மகப்பேறு வைத்தியசாலை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் உக்ரேனின் தெற்கு நகரமான மரியுபோலில் அமைந்துள்ள சிறுவர்கள் மற்றும் மகப்பேறு வைத்தியசாலை மீது ரஷ்ய படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரேன் குற்றம்சாட்டியுள்ளது. இதனால் வைத்தியசாலையின் கட்டிம் முழுமையாக சேதடைந்துள்ளதுள்ள நிலையில் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் ரஷ்ய தாக்குதலின் விளைவாக, தாய்மார்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட குறைந்தது 17 பேர் காயமடைந்ததாக டொனெட்ஸ்க் பிராந்திய பொஸார் கூறியுள்ளனர். இந் நிலையில் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மரியுபோலில் உள்ள வைத்தியசாலை மீதான வான்வழித் தாக்குதலைக் கண்டித்துள்ளார். https://www.virakesari.lk/ar…
-
- 0 replies
- 150 views
-
-
சீனாவில் கடும் வெள்ளம்: 1.76 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு- 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! சீனாவின் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 1.76 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் 70க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. ஹெனான் மாகாணத்தில் தீவிர மழை பெய்து மூன்று மாதங்களுக்குள் வெள்ளம் வந்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கனமழை மற்றும் நீடித்த மழை மற்றும் புயல்கள், மீட்புப் பணிகளுக்கு இடையூறாக உள்ளதாக சீனாவின் வானிலை நிர்வாகம் உள்ளூர் ஊடகங்களிடம் கூறியுள்ளது. 120,000க்கும் அ…
-
- 0 replies
- 150 views
-
-
உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்கும் அமெரிக்கா! தீவிரமடையும் போர் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னபின்னமாகியுள்ளன. பல நகரங்களை ரஷ்யா தன்வசப்படுத்தியுள்ளது. ஆனாலும் உக்ரைன் இராணுவம் துணிச்சலுடன் தொடர்ந்து ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன.உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இராணுவம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 40…
-
- 0 replies
- 150 views
-
-
அமெரிக்காவுடன் இணையுமாறு கனடாவுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கும் ட்ரம்ப்! கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ இராஜினாமா செய்து பதவி விலகிய போது அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா ஏன் மாறக்கூடாது என ட்ரம்ப் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் கனடா பிரதமர் பதவி விலகல் குறித்து கருத்து பதிவிட்ட ட்ரம்ப், கனடாவில் உள்ள பலர் தங்கள் நாடு அமெரிக்காவின் 51வது மாகாணமாக இருப்பதை விரும்புகிறார்கள். கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம்.இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், ராஜினாமா செய்தார். கனடா அமெரிக்…
-
- 0 replies
- 150 views
-
-
தாலிபனில் வலுப்பெறுகிறதா ஐ.எஸ். குழு? ஆப்கன் சிறையில் உள்ள முன்னாள் உறுப்பினர் பிபிசிக்கு பேட்டி, சிரியாவின் இட்லிப் நகரில் ரசாயன வெடிகுண்டு வீசப்பட்டதா?, குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் கனடா குழந்தை உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 150 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஷ்லே டெல்லிஸ் 2001 ஆம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றத் தொடங்கினார் (கோப்புப் படம்) 4 மணி நேரங்களுக்கு முன்னர் வெர்ஜீனியாவின் வியன்னாவைச் சேர்ந்த 64 வயதான ஆஷ்லே டெல்லிஸ் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாகத் சேகரித்ததாக கிரிமினல் குற்றம்சாட்டப்பட்டு வார இறுதியில் கைது செய்யப்பட்டதாக அமெரிக்காவின் வெர்ஜீனியாவின் கிழக்குப் பகுதிக்கான அமெரிக்க அட்டர்னி லிண்ட்சே ஹாலிகன் கூறியுள்ளார். வெர்ஜீனியாவின் கிழக்கு மாவட்ட அமெரிக்க அட்டர்னி அலுவலகம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. லிண்ட்சே ஹாலிகன், "நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து வகையான அச்சுறுத்தல்களிலிருந்தும் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இரு…
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள ஜேர்மன் விமான நிறுவனம்! ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa), 2030 ஆம் ஆண்டுக்குள் 4,000 வேலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது. நிறுவனம் செலவுகளைக் குறைத்து புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைக்க முயற்சிப்பதன் விளைாவக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக AFP செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் தற்போது உலகளவில் சுமார் 103,000 பேரைப் பணியமர்த்துகிறது. அதன் வலையமைப்பில் யூரோவிங்ஸ், ஆஸ்திரிய ஏர்லைன்ஸ், சுவிஸ், பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் இத்தாலியின் புதிய முதன்மை விமான நிறுவனமாக அண்மையில் கையகப்படுத்திய ஐடிஏ ஏர்வேஸ் ஆகியவை அடங்கும். ஜேர்மனி இரண்டாவது வருட மந்தநிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்…
-
- 1 reply
- 149 views
-
-
உக்ரைன் மீதான... ரஷ்யாவின் படையெடுப்பு, உலக உணவு நெருக்கடியை... விரைவில் ஏற்படுத்தக்கூடும்: ஐ.நா. எச்சரிக்கை! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உலக உணவு நெருக்கடியை விரைவில் ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. நியூயோர்க்கில் நேற்று (புதன்கிழமை) பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில், “விலைவாசி உயர்வு காரணமாக ஏழை நாடுகளில் உணவுப் பாதுகாப்பின்மையை போர் மோசமாக்கியுள்ளது. உக்ரைனின் ஏற்றுமதிகள் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை என்றால், சில நாடுகள் நீண்டகாலப் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும்” என கூறினார். போரால் உக்ரைனின் துறைமுகங்களில் இருந்து விநியோகம் நிறுத்தப்பட்டது. இது ஒரு காலத்தில் அதிக அளவு…
-
- 0 replies
- 149 views
-
-
ரஷ்யா- உக்ரைனுக்கிடையிலான மூன்றாவது கட்ட அமைதிப் பேச்சுவார்தையும் தோல்வியில் முடிந்தது! ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது கட்டப் அமைதிப் பேச்சுவார்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவுக்கும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுக்கும் இடையே துருக்கியின் துறைமுக நகரான ஆன்டால்யாவில் நேற்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற்றது. உக்ரைனில் போர் நடைபெற்று வரும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது, அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக விவாதிப்பதற்காக அந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும், முக்கிய விவகாரங்க…
-
- 0 replies
- 149 views
-
-
சீனாவில் வறுமை விவாதத்தை மீண்டும் தூண்டிய "பனிச் சிறுவன்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சீனாவில் வலைதள பயன்பாட்டாளர்களால் "பனிச் சிறுவன்" என்று வருணிக்கப்படும் 8 வயது சீன மாணவன், குழந்தை பருவத்தில் வறுமை பற்றிய விவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளார். படத்தின் காப்புரிமைPEOPLE'S DAILY குளிரால் வீங்கிய கைகளாலும், தலை முடியிலும். புருவங்களிலும் பனி உறைந்திருந்த ந…
-
- 0 replies
- 149 views
-
-
உக்ரைனுக்கு... அதிக தற்காப்பு இராணுவ உதவியை, வழங்குகிறது பிரித்தானியா உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவியை பிரித்தானியா வழங்கும் என உக்ரேனிய பிரதமருடன் தொலைபேசி அழைப்பில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்துள்ளார். அதன்படி பாதுகாப்பு வாகனங்கள், ட்ரோன்கள் மற்றும் டாங்கிகளை அளிக்கும் ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த வாரம் கியூவ்வில் உள்ள தனது தூதரகத்தை பிரித்தானியா மீண்டும் திறக்கும் என்றும் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். மேலும் இதன்போது உக்ரேனிய இராணுவ வீரர்கள் பிரித்தானியாவில் பெறும் பயிற்சிக்காக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஜோன்சனுக்கு நன்றி தெரிவித்தார். https://athavannews.com/2022/1278199
-
- 0 replies
- 149 views
-