Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோசி குற்றவாளி என நிரூபிப்பு! பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி ஒரு முக்கிய ஊழல் விசாரணையில் குற்றவியல் சதித்திட்டத்தில் குற்றவாளி என வியாழக்கிழமை (25) நிரூபிக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிப்பதற்காக லிபிய சர்வாதிகாரி முஅம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களே நிரூபிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை பிற்பகுதியில் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதேநேரம், பாரிஸ் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், 2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த வலதுசாரி அரசியல்வாதி…

  2. பாகிஸ்தானில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு ஆறு வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் தீவிரம், ஐ.எஸ் குழுவுக்கு எதிரான மோதலால் நிர்மூலமான இராக்கின் மொசூல் நகரம் உள்ளிட்ட செய்திகளை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.

  3. ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை! சவுதி அரேபியாவில் நேற்றைய தினம் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வளைகுடா நாடுகளில் மரண தண்டனை அளிக்கப்படுவது வழக்கம். கடந்த 2019 ஆம் ஆண்டு போதை பொருள் குற்றங்களுக்கான மரண தண்டனையை சவூதி அரசு நிறுத்தி வைத்திருந்தது. பின்னர், மீண்டும் 2022ம் ஆண்டு இறுதியில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனையை அமுல்படுத்தியது 2022ம் ஆண்டு 19 பேரும், 2023ம் ஆண்டு 2 பேரும், 2024ம் ஆண்டு 117 பேரும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டுள்ளனர். அதே போன்று கடந்த 2024ம் ஆண்டு 338 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. 2025ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து சவுதி அரேபியாவில் இதுவரை 230 பேருக்கு மரணதண்டனை ந…

  4. பிரிட்டனில் யூதர்களின் தேவாலய வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்! October 3, 2025 பிரிட்டனில் யூதர்களின் தேவாலயம் ஒன்றிற்குக்கு அருகில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். பிரிட்டன், வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத தேவாலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர். உள்ளுர் நேரப்படி காலை 9.30 மணியளவில் அப்பகுதி வழியே நபர் ஒருவர் காரை ஓட்டி வந்து ஆலயம் அருகே சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார். மேலும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 ப…

  5. மீண்டும் வெடித்த போர்: இஸ்ரேல் தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் பலி 29 October 2025 அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினரை ஹமாஸ் தாக்கியதாகவும், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அளிப்பதற்கான ஒப்பந்த விதிகளை ஹமாஸ் மீறியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "சக்திவாய்ந்த தாக்குதல்களை" நடத்த உத்தரவிட்டதால், காசா நகரம், கான் யூனிஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள், பாடசாலைகள் மற்றும் கு…

  6. அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி கைது 2023 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதியை, ஈரானிய பாதுகாப்புப் படையினர் நேற்று கைது செய்தனர். அண்மையில் காலமான ஒரு வழக்கறிஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு நர்கெஸ் முகமதிசென்றபோது, இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிகாரிகள் நர்கெஸ் முகமதியை பலவந்தமாகப் பிடித்துச் சென்றதாக அவருடைய ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. நர்கெஸ் முகமதி, ஈரான் நாட்டில் பல ஆண்டுகளாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வருபவர். குறிப்பாக, ஈரானில் பெண்கள…

  7. பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை! பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் ஆபத்தான சுனாமி அலைகள் உருவாகக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். இந்த நிலநடுக்கம், தீவின் தலைநகர் டாவோவிலிருந்து சுமார் 123 கிலோமீட்டர் (79 மைல்) தொலைவில் உள்ள மின்டானாவ் தீவின் கிழக்குப் பகுதியில், 58.1 கிலோமீட்டர் (36 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது. சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (Phivolcs), உயிருக்கு ஆபத்தான அலை உயரத்துடன் பேரழிவு தரும் சுனாமி எதிர்பார்க்கப்படு…

  8. பட மூலாதாரம், Getty Images 21 அக்டோபர் 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் (2021-ஆம் ஆண்டு உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை 'வரலாற்றுப் பதிவுகள்' என்ற பெயரில் ஞாயிறுதோறும் பிபிசி தமிழ் வெளியிட்டது. அந்த வரிசையில் வெளியான மூன்றாம் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.) மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் போனபார்ட் (1769-1821) கருதப்படுகிறார். பிரெஞ்சுப் புரட்சி (1787-1799) நடந்த காலத்தில் முக்கியத்துவம் பெறும் நிலைக்கு உயர்ந்த நெப்போலியன், 1804 முதல் 1814 வரை பிரான்சின் பேரரசராக இருந்தார். 1814இல் ஆட்சியை இழந்த பின் மீண்டும் 1815இல் பிரான்சின் பேரரசராக அ…

  9. உயிரிழந்த மேலும் 4 பணயக்கைதிகளின் உடல்களை விடுவித்துள்ள ஹமாஸ்! உயிரிழந்த மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் திருப்பி அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் IDF கூறியுள்ளது. அந்த தகவலின்படி, செஞ்சிலுவைச் சங்கம் சவப்பெட்டிகளில் இருந்த உடல்களை மீட்டு செவ்வாய்க்கிழமை (14) இரவு இஸ்ரேலிய இராணுவத்திடம் ஒப்படைத்தது. ஹமாஸ் இறந்த 28 பணயக்கைதிகளின் உடல்களையும் திருப்பி அனுப்பும் வரை காசாவிற்கு உதவி செய்வதை கட்டுப்படுத்துவதாக இஸ்ரேல் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. பாலஸ்தீன ஆயுதக் குழு திங்களன்று (13) 20 உயிருள்ள மற்றும் நான்கு இறந்த பணயக்கைதிகளை திருப்பி அனுப்பியது. இஸ்ரேலில் …

  10. 30 NOV, 2024 | 08:39 PM நைஜீரியாவில் இடம்பெற்ற படகுவிபத்தில் 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். வடநைஜீரியாவில் இடம்பெற்ற படகுவிபத்தில் சிக்கிய 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொகி மாநிலத்திலிருந்து நைஜரை நோக்கி 200க்கும் அதிகமானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த படகே விபத்திற்குள்ளாகியது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 27 பேரின் உடல்களை மீட்டுள்ளோம் சுழியோடிகள் ஏனையவர்களின் உடல்களை மீட்க முயல்கின்றனர் என நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனினும் விபத்து இடம்பெற்று 12 மணித்தியாலத்தின் பின்னரும் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.…

  11. அமெரிக்க ஜனாதிபதியின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வீட்டில் சோதனை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் (John Bolton), இந்தியா மீதான ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கையைக் கடுமையாக விமர்சித்திருந்தா நிலையில் அவரது வீட்டில் அந்நாட்டு மத்தியப் புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை, ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதார அழுத்தத்தை உருவாக்க இந்தியாவுக்கு ட்ரம்ப், 50 சதவீத வரி விதித்தமை அமெரிக்காவுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் “ட்ரம்பின் இத்தகைய செயல்கள் நம் நாட்டை ஆபத்தில் ஆழ்த்துகின்றன” என்றும் ஜோன் போல்டன் கூறியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்கள், மத்தியப் புலனாய்வு அமைப்…

  12. காசா போர்; பணயக் கைதிகளை ஒரே நேரத்தில் விடுவிப்பது தொடர்பாக கவனம் செலுத்தும் இஸ்ரேல்! காசாவின் போர் நிறுத்த பேச்சுவார்தையின்போது, எஞ்சியுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, கவனம் செலுத்தவுள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு தெரிவித்துள்ளார். இதேவேளை இது தொடர்பான எகிப்திய அதிகாரிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளுக்காக, தமது குழு கெய்ரோவுக்கு சென்றுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகள் முறிந்த பின்னர், இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதலை விரிவு படுத்தியதுடன், காசா பகுதியைக் கைப்பற்றுவதற்கான சர்ச்சைக்குரிய திட்டத்தையும் இஸ்ரேல் அறிவித்தது. இருப்பினும், காசாவை …

  13. பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக குழிதோண்டிபுதைப்பதற்காக புதிய யூதகுடியேற்றங்கள் - இஸ்ரேலிய அமைச்சர் அறிவிப்பு Published By: Rajeeban 15 Aug, 2025 | 11:28 AM ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றவாசிகளிற்கான 3000க்கும் வீடுகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலின் தீவிரவலதுசாரி நிதியமைச்சர் பெசெலெல் ஸ்மோட்டிரிச் இதன் மூலம் பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக புதைத்துவிடமுடியும் என தெரிவித்துள்ளார். சர்வதேசத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக பல வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஜெரூசலேம் மற்றும் மாலே அடுமின் பகுதிகளிற்கு இடையிலான குடியேற்ற திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேலின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் வீடுகளை அமைப்பது மேற்கு கர…

  14. ஈராக்கில்... கொரோனா வைரஸ் மருத்துவமனையில், தீவிபத்து: 60பேர் உயிரிழப்பு- 70க்கும் மேற்பட்டோர் காயம்! ஈராக்கின் தெற்கு நகரமான நாசீரியாவில் உள்ள கொரோனா வைரஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில், குறைந்தது 60பேர் உயிரிழந்துள்ளதோடு 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட தீவிபத்தில் பல நோயாளிகளைக் காணவில்லை என்பதால் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என்று சுகாதார வட்டாரங்கள் தெரிவித்தன. இறந்தவர்களில் இரண்டு சுகாதார ஊழியர்களும் அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர். கோபமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு முன்னால் கூடி பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் இரண்டு பொலிஸ் வாகனங்கள…

  15. சூடான்: துணை இராணுவ தாக்குதலில் 57 போ் உயிரிழப்பு! வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் துணை இராணுவப் படையான ஆா்.எஸ்.எஃப் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 17 குழந்தைகள் உட்பட 57 போ் உயிரிழந்துள்ளனர். இதனை அந்த நாட்டு உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆா்.எஸ்.எஃப் படையால் முற்றுகையிடப்பட்டுள்ள வடக்கு டாா்ஃபா் மாகாணத் தலைநகரான அல்-பஷீரில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் உயிரிழந்தவா்களில் 17 சிறுவா்கள், 22 பெண்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, தாக்குதலில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஏழு பெண்கள் உட்பட 21 பேர் காயமடைந்ததாக சூடான் உள்நாட்டுப் போரைக் கண்காணிக்க…

  16. அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ட்ரம்பின் திட்டத்தை தடுத்த அமெரிக்க நீதிமன்றம்! கலிபோர்னியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிபதி புதன்கிழமை (15) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு, பகுதி அரசாங்க முடக்கத்தின் போது கூட்டாட்சி ஊழியர்களின் பெருமளவிலான பணிநீக்கங்களை நிறுத்துவதற்கு உத்தரவிட்டார். அதே நேரத்தில் பணி நீக்கங்கள் சட்டவிரோதமானது என்ற தொழிற்சங்கங்களின் கூற்றுக்களை அவர் பரிசீலித்துள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் நடந்த விசாரணையின் போது, வழக்கு தொடரும் வரை 30க்கும் மேற்பட்ட கூட்டாட்சி நிறுவனங்களில் பணிநீக்கங்களைத் தடுக்க இரண்டு தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கையை அமெரிக்க மாவட்ட நீதிபதி சூசன் இல்ஸ்டன் ஏற்றுக்கொண்டார். இந்த முடிவு விரைவில் மேல்முறையீடு செய்யப்படலாம். …

  17. போராட்டக்காரர்களை கொல்ல உத்தரவிட்ட ஷேக் ஹசீனா – வெளியான ஆடியோ பதிவு கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி, வங்கதேசத்தில் மாணவர்கள் சூரையாடியதாகக் கூறப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்தை ஷேக் ஹசீனா பார்வையிட்டபோது... கட்டுரை தகவல் கிறிஸ்டோபர் கில்ஸ், ரித்தி ஜா, ரஃபித் ஹுசைன் & தாரேகுஸ்ஸமன் ஷிமுல் பிபிசி ஐ புலனாய்வு பிரிவு & பிபிசி வங்க மொழி சேவை 10 ஜூலை 2025, 05:27 GMT கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு எதிராக கொடிய அடக்குமுறையைக் கையாள அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா அனுமதி அளித்ததாக, அவரது தொலைபேசி அழைப்புகளில் ஒன்றின் ஆடியோ பதிவு காட்டுகிறது. இந்த ஆடியோ பதிவு பிபிசி ஐ குழுவினரால் சரிபார்க்கப்பட்டது. கடந்த …

  18. நைஜீரியாவில் 25 பாடசாலை மாணவிகள் கடத்தல். நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு எதிரான தாக்குதல்கள், கடத்தல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இதில், சில குழுக்கள் அங்குள்ள வெளிநாட்டினரையும், பாடசாலைப் பிள்ளைகளையும் கடத்தி பணப்பறிப்பிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கெப்பி மாநிலத்தின் உயர்நிலை பாடசாலை விடுதியில் இருந்து (17) அதிகாலையில் சுமார் 25 மாணவிகளை ஆயுதம் ஏந்திய குழுவொன்று கடத்தி சென்றுள்ளது. இச்சமயம் பாடசாலை மீது தாக்குதல் நடத்திய கடத்தல்காரர்கள் அங…

  19. Published By: DIGITAL DESK 3 11 MAY, 2023 | 10:01 AM கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக ஐக்கி நாடுகள் சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம், ஐக்கி நாடுகள் சபை குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு (பிஎம்என்சிஎச்) ஆகியவை இணைந்து 'குறை பிரசவ குழந்தைகள்' என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தின. அதில் கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.9 சதவீதம் குழந்தைகள் குறை பிரசவத்தில் (37 வாரத்துக…

  20. Published By: Digital Desk 1 28 Sep, 2025 | 03:28 PM 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு பெரிய ரஷ்ய வான்வழித் தாக்குதலில் உக்ரேனில் சுமார் நால்வர் பேர் உயிரிழந்துள்ளதுடன், 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரேனின் தலைநகர் கீவ் மீது குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 12 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா, யுக்ரைனின் ஏழு பகுதிகளை நோக்கி சுமார் 600 ட்ரோன்கள் மற்றும் பல ஏவுகணைகளை ஏவியதாக அதன் விமானப்படை தெரிவித்துள்ளது. மோசமான இந்த தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட சபோரிஜியா பகுதியில் குறைந்தது 16 பேர் காயமடைந்ததாகவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்…

  21. Published By: Digital Desk 1 18 Sep, 2025 | 08:01 AM கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான "Sikhs for Justice" (SFJ)இ வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை வியாழக்கிழமை (செப்டம்பர் 18) முற்றுகையிடப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. SFJ அமைப்பின் அறிவிப்பின்படி இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரைஇ 12 மணி நேரத்திற்கு இந்தியத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய-கனடா வம்சாவளியினர் தூதரகத்திலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள்இ காலிஸ்தான் ஆதரவாளர்களைக் குறிவைத்து ஒரு உளவு வலையமைப்பை நடத்தி வருவதாக SJF குற்றம் சாட்டியுள்ளது. 2023-ல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய உளவு அமைப்பின் பங்கு …

  22. சிட்னியில் பாலஸ்தீன ஆதரவு பேராட்டம் - பாலத்தின் ஊடாக பேரணியாக சென்ற ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் - அவுஸ்திரேலியா ஏன் இதுவரை இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவில்லை என கேள்வி? Published By: Rajeeban 04 Aug, 2025 | 12:04 PM அவுஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் போது ஆயிரக்கணக்கானவர்கள் சிட்னி துறைமுகத்தின் பாலத்தின் ஊடாக பேரணியாக சென்றனர். அவுஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. .இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வர்ணித்துள்ளனர். காசா யுத்தத்தை நிறுத்துமாறு அரசியல்வாதிகளை கோரும் செய்திகளுடன் ஆயிரக்கணக்கானவர்…

  23. இந்த ஆண்டில்... 14வது சோதனை : பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது வடகொரியா வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளது என தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. பியோங்யாங்கின் சுனான் பகுதியில் இருந்து மதியம் 12:03 மணிக்கு (03:03 GMT) ஏவப்பட்டதை சியோலின் கூட்டுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை 780 கிமீ உயரத்திலும், மாக் 11 வேகத்திலும் 470 கிலோமீட்டர் தூரம் சென்றதாகவும் சியோலின் கூட்டுத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இந்த ஏவுகணை சோதனை இந்த ஆண்டு வட கொரியா நடத்திய 14 வது ஆயுத சோதனை என அறிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியா 2017 ஆம் ஆண்டிலிருந்து கடந்த மாதம் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் …

  24. ஆசிய - பசுபிக் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது எமது தோள்களில் சுமக்கப்படுகின்ற பொறுப்பாக உள்ளது என்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். பொருளாதார தலைவர்கள் பங்கேற்புடன் நடைபெற்ற 31ஆவது ஆசிய - பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அழகிய தோட்ட நகரமான லிமாவுக்கு மீண்டும் வருகை தந்து ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பைப் பற்றி விவாதிப்பதில் உங்களுடன் கலந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக ஜனாதிபதி போலுவார்டே மற்றும் பெருவியன் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். …

  25. காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார் ரிச்சர்ட் கில்சீன் சனி, ஜூலை 19, 2025 காலை 8:01 IDF வீரர்கள் வேண்டுமென்றே காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார் காசாவில் உள்ள ஒரு பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ ஊழியர்கள் "தெளிவான காய வடிவங்களைக்" காண்கிறார்கள் என்றும், IDF வீரர்கள் வாரத்தின் நாளைப் பொறுத்து காசாவில் உள்ள குழந்தைகளை வெவ்வேறு உடல் பாகங்களில் வேண்டுமென்றே சுட்டுக் கொன்று வருவதாகவும் கூறுகிறார். பேராசிரியர் நிக் மேனார்ட் பிபிசி ரேடியோ 4 இடம், தானும் தனது சகாக்களும் உதவி விநியோக தளங்களை - முக்கியமாக டீனேஜ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.