Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கட்டுரை தகவல் எழுதியவர்,யோகிதா லிமாயே பதவி,ஆப்கானிஸ்தான் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிறந்து மூன்று மாதமே ஆன தயாபுல்லாவின் உடல் அமைதியாக அசையாமல் இருக்கிறது. அவனது மூக்கில் வைக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜன் குழாயை எடுத்துவிட்டு, கொஞ்சமாவது அவன் மூச்சு விடுகிறானா என அவனது தாய் சோதித்துப் பார்க்கிறார். குழந்தையின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததை உணர்ந்து அந்த தாய் கதறி அழத் தொடங்குகிறாள் ஆஃப்கானிஸ்தானில் உள்ள இந்த மருத்துவமனையில் நன்றாக வேலை செய்யும் ஒரு வென்டிலேட்டர் கூட இல்லை. வென்டிலேட்டர்களைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு மூச்சு விட உதவலாம் என்றால், அவர்களின் சிறிய முகங்களுக்குப் பொரு…

  2. துருக்கி மாநாட்டில் ரஷ்ய, உக்ரேனிய எம்.பிகள் கைகலப்பு Published By: Sethu 05 May, 2023 | 11:04 AM துருக்கியில் நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (PABSEC) பாராளுமன்றப் பிரதிநிதிகள் மாநாட்டில் இச்சம்பவம் இச்சம்பவம் இடம்பெற்றது. இம்மாநாட்டின் ஆரம்ப நாளான நேற்று, ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினரான ஒல்கா திமோபீவா நேர்காணல் ஒன்றில் பங்குபற்றியபோது, அவருக்குப் பின்னால் உக்ரேனிய பாராளுமன்ற உறுப்பினர் ஒலெக்ஸாண்டர் மரிகோவிஸ்கி, உக்ரேனிய தேசியக் கொடியை விரித்துப் பிடித்தார். …

  3. Published By: SETHU 04 MAY, 2023 | 04:43 PM தெற்கு ஆசியாவில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற போதிலும், இதே வேகத்தில் சென்றால் தெற்கு ஆசியாவில் சிறுவர் திருமணத்தை ஒழிப்பதற்கு மேலும் 55 ஆண்டுகள் செல்லும் என யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் தற்போதைய வேகத்தில் சிறுவர் திருமணத்தை ஒழிப்பதற்கு மேலும் 300 ஆண்டுகள் செல்லும் என யுனிசெப் தெரிவித்துள்ளது. அதேவேளை, தெற்காசியாவில் இதற்கு 55 ஆண்டுகள் செல்லும் எனவும் யுனிசெப்பின் தெற்காசிய பிரிவு தெரிவித்துள்ளது. யுனிசெப்பின் தெற்கு ஆசியப் பிரிவு இது தொடர்பாக நேற்று (03) விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: …

  4. Published By: NANTHINI 04 MAY, 2023 | 02:48 PM (ஏ.என்.ஐ) ஐக்கிய இராஜ்ஜியத்தில் நடத்தப்படுகின்ற 'அஜெய வாரியர் 2023' எனும் இந்திய - பிரிட்டிஷ் இராணுவ பயிற்சி, இம்முறை கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் மே 11ஆம் திகதி வரை ஐக்கிய இராச்சியத்தின் சாலிஸ்பரி சமவெளியில் நடைபெற்று வருகிறது. இதன்போது இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ஆகிய இரு தரப்பு இராணுவ வீரர்களுக்கான பல்வேறு தந்திரோபாய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சியின் நோக்கம் நேர்மறையான இராணுவ உறவுகளை உருவாக்குதல், ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளை உள்வாங்குதல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையின் கீழ் விசேட சூழல்களில் நிறுவன அளவி…

  5. Published By: RAJEEBAN 04 MAY, 2023 | 01:17 PM காலனித்துவ நடவடிக்கைகளிற்காக மன்னர் சார்ல்ஸ் மன்னிப்பு கோரவேண்டும் என அவுஸ்திரேலிய செனெட்டர் லிடியா தோர்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவுஸ்திரேலியா கனடா நியுசிலாந்து உட்பட 12 நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியேற்றங்களிற்காக மன்னர் சார்ல்ஸ் மன்னிப்பு கோரவேண்டும் என கோரும் கடும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்விற்கு முன்னதாக அவர்கள் இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளனர். புதிய மன்னர் இழப்பீட்டினை வழங்கவேண்டும்,அடிமைத்தனத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் பழங்குடியினரின் எச்சங்கள் மற்றும் கலைப்பொருட்களை …

  6. Published By: SETHU 03 MAY, 2023 | 04:34 PM ருவாண்டாவில் வெள்ளம் காரணமாக குறைந்தபட்சம் 109 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்க நாடான ருவாண்டாவின் மேற்குப் பிராந்தியத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, வட பிராந்தியத்தில் 14 பேர் உயிரழந்துள்ளனர். பல வீடுகளும் வெள்ளத்தினால் அழிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பெய்த கடும் மழை காரணமாக. சேபேயா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியதாகவும் மண்சரிவுகளும் ஏற்பட்டதாகவும் ருவாண்டாவின் மேற்கு மாகாண ஆளுநர் பிராங்சுவா ஹபிட்டேகெகோ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/154426

  7. Published By: SETHU 03 MAY, 2023 | 03:40 PM பனாமாவின் கொடி தாங்கிய எண்ணெய்க் கப்பலொன்றை ஈரான் நேற்று கைப்பற்றியுள்ளதாக அமெரிகக் கடற்படை தெரிவித்துள்ளது. நியோவி எனும் இந்த எண்ணெய் தாங்கி கப்பல், துபாயிலிருந்து, ஐக்கிய அரபு இராச்சியத்தின் மற்றொரு நகரான ஃபுஜெய்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. இக்கப்பல் ஹோர்முஸ் நீரிணையில் வைத்து, ஈரானிய கடற் படையினால் நிறுத்தப்பட்டது என அமெரிகக் கடற்படை தெரிவித்துள்ளது. ஒரு வார காலத்தில் நடந்த இத்தகைய இரண்டாவது சம்பவம் இதுவாகும். மார்ஷல் தீவுகளின் கொடி தாங்கிய எண்ணெய் தாங்கி கப்பலெனர்றை ஓமான் வளைகுடாவில் வைத்து, 6 நாட்களுக்கு முனு;னர் ஈரானிய கடற்படை கைப்பற்றியமை கு…

  8. Published By: RAJEEBAN 03 MAY, 2023 | 08:14 AM அமெரிக்காவில் காணாமல்போன பதின்மவயதினரை தேடிச்சென்ற பொலிஸார் காணியொன்றிற்குள் 7 சடலங்களை கண்டுபிடித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர்களில் தாங்கள் தேடிவந்த இவி வெப்ஸ்டர் 14 பிரிட்டனி பிரூவர் ஆகியோரின் உடல்களும் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதின்ம வயது சிறுமிகளுடன் பயணித்த பாலியல் குற்றவாளி ஜெசே மக்படனின் சடலத்தையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரணத்திற்கான காரணம் என்னவென பொலிஸார் தெரிவிக்கவில்லை. ஏனைய நான்கு உடல்கள் குறித்து அதிகாரிகள் தகவல்கள் எவற்றையும் வெளியிடவில்லை. திங்கட்கிழமை பதின்மவயது சிறுமிகள் இருவரும் காணாமல்போயுள்ளதாக ஒக்லஹோமாவின் பொலிஸார் அற…

  9. சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று(03) அனுஷ்டிக்கப்படுகிறது. இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தை(03) சர்வதேச ஊடக சுதந்திர தினமாக அனுஷ்டிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்தது. ”உரிமைகளுக்கான எதிர்காலத்தை வடிவமைத்தல், ஏனைய அனைத்து வகையான மனித உரிமைகளுக்கும் ஒரு இயக்கியாக கருத்து சுதந்திரம் காணப்படல் வேண்டும்” என்பதே இம்முறை ஊடக சுதந்திர தினத்திற்கான தொனிப்பொருளாக காணப்படுகிறது. 1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி தமது ஊடக நிறுவனத்திற்கு முன்பாக கொடூரமாக கொலை செய்யப்பட்ட கொலம்பிய ஊடகவியலாளர் Guillermo Cano-ஐ நினைவுகூரும் வகையில் இந்த நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. 180 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச ஊடகச்சுட்டியில் கடந்த வருடம் நோர்வே முதல் இடத…

  10. நியூயார்க்: உக்ரைன் போரில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கெர்பி கூறும்போது, “உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ராணுவம் சார்ந்து பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதத்தில் மட்டும் உக்ரைன் போரில் 20,000-க்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்துள்ள ராணுவ வீரர்களில் பெரும்பாலானவர்கள் பெஞ்னர் என்ற தனியார் ராணுவ கம்பெனியைச் சேர்ந்தவர்கள். இந்தப் பெரும் உயிரிழப்பு பஹ்மத் என்ற சிறு நகரை ரஷ்யா கைப்பற்றும்போதுதான் நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “ப்ஹ்மத் நகரின் ப…

  11. Published By: RAJEEBAN 02 MAY, 2023 | 12:31 PM வாத்துக்கள் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுட்டுக்கொல்லப்பட்ட வாத்துக்களுடன் விக்டோரியா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றம் சென்ற சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. வேட்டைகாலம் ஆரம்பமான வாரத்தில் வாத்துக்கள் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நீதிக்கட்சியின் சிட்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஜியோர்ஜி பேர்செல் கொல்லப்பட்ட வாத்துக்களுடன் நாடாளுமன்றம் சென்றுள்ளார். இன்று என்னிடம் சிறுவாத்தொன்று உள்ளது இது நாட்டிலேயே மிகவும் அரிதான நீர்ப்பறவை இதனை சட்டவிரோதமாக சுட்ட நபர்கள் பின்னர் கைவிட்டுச்சென்றனர் விக்டோரியா வனவிலங்கு துறை அதிகாரிகள் …

  12. Published By: SETHU 02 MAY, 2023 | 03:28 PM இஸ்ரேலியப் படையினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், உண்ணாவிரதமிருந்த பலஸ்தீனியர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். 45 வயதான காதேர் அட்னன் எனும் இவர், இஸ்லாமிய ஜிஹாத் எனும் ஆயுதக்குழுவுடன் தொடர்புடையக் குற்றச்சாட்டுகள் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 86 நாட்களாக இவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை காதேர் அட்னன் எ உணர்விழந்து காணப்பட்டார் என இஸ்ரேலிய சிறைச்சாலைகள் சேவை தெரிவித்துள்ளது. உண்ணாவிரதம் இருந்தன் நேரடி விளைவாக மரணித்த முதல் பலஸ்தீனியர் அட்னன் என பலஸ்தீன கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. …

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES 38 நிமிடங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்தியாவில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாடுக்கு சட்டவிரோத தடை உள்ளது) தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில், வெளிநாட்டினர் மிக அதிக அளவில் பயன்படுத்தும் சுகும்விட் சாலையில் காண்போரைக் கவரும் வகையில் இந்த கஞ்சா விற்பனை நிலையம் அமைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் கஞ்சாவைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதியளித்த நிலையில், கஞ்சா இலைகள், பூக்கள், விதைகள் மற்றும் சாக்லேட் வடிவில் போதை தரும் கஞ்சா உணவுகள் என பலவித தயாரிப்புக்கள் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளன. பாங்காக்கில் பிபிசி அலுவலகத்திலிருந்து கிழக்கில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்குச் சென்றால் 4…

  14. அவுஸ்திரேலியாவின் விருதுபெற்ற சமையல்கலை நிபுணர் ஜொக் சோன்ஃப்ரில்லோ, 46 வயதில் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரபல சமையல்கலை நிபுணரான ஜொக் சோன்ஃப்ரில்லோ, உலகின் தலைசிறந்த உணவகங்களில் உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற சமையல்கலை நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலியாவின் மாஸ்டர் செவ் நிகழ்ச்சியிலும் தோன்றியிருந்தார். ஜொக் சோன்ஃப்ரில்லோ,பிரித்தாயாவின் பிரபல சமையல்கலை நிபுணர் ஜேமி ஒலிவருடன் இணைந்து தோன்றும் மாஸ்டர் செவ் நிகழ்ச்சியின் பீரிமீயர் வெளியாகவிருந்த தருணத்தில் ஜக்சோன்;ப்ரிலின் மரணம் நிகழ்ந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது மரணத்தை உறுதி செய்துள்ள அவுஸ்திரேலியாவின் நெட்வேர்க…

  15. புடின் விரைவில் கொல்லப்படுவார் சிதறும் ரஷ்யா – அமெரிக்கா உளவுத்துறை..! உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள புடின் கொல்லப்படுவார் என்றும், ரஷ்யா மீண்டும் உடைந்து சிதறும் என்றும் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். உக்ரைனை எளிதாக வென்றுவிடலாம் என்று எண்ணி புடின் உக்ரைன் மீது போர் தொடுத்தார். ஆனால், உக்ரைன் இன்னமும் எதிர்த்து நிற்கிறது. ரஷ்ய தரப்பிலோ, சுமார் 200,000 படைவீரர்கள் பலியாகிவிட்டார்கள். 17 பில்லியன் டொலர்கள் அளவில் வாகனங்கள் முதலானவற்றை ரஷ்யா இழந்துவிட்டது என்கிறது உக்ரைன் தரப்பு. ஆக, இனி என்ன நடக்கும், ரஷ்யாவுக்கு என்ன ஆகும், புடின் என்ன ஆவார் என்பது குறித்து மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், புடின் …

  16. இந்துக்களை அவமதித்த உக்ரைன் : கலைப்படைப்பு பெயரில் அத்துமீறல்…! உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் டிவிட்டர் பக்கத்தில், கலைப்படைப்பு என்ற பெயரில், மர்லின் மன்றோ போஸ் கொடுப்பது போன்று காளி தேவி உருவத்தை ஒத்த உருவத்தை வரைந்த சம்பவம், இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நேட்டோ அமைப்பில் இடம்பெற எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது கடந்தாண்டு ரஷ்யா போர் தொடுத்தது. ஓராண்டு கடந்த நிலையில்,உக்ரைனில் முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா, தற்போது ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் டிவிட்டர் பக்கத்தில், ‘வெடிகுண்டு வெடித்ததில் இருந்து எழும் புகை, ஒரு பெரிய மேகத்தை முட…

  17. பட மூலாதாரம்,ANTJE STEINFURTH படக்குறிப்பு, காஃப் தீவில் லூசி, ரெபேக்கா கட்டுரை தகவல் எழுதியவர்,அன்டோனெட் ராட்ஃபோர்ட் பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரு வருடத்திற்கு தேவையான காய்கறி, பழம், மளிகை பொருள் எல்லாம் கொடுத்து, தங்க வசதியும் செய்து கொடுத்து வருடத்திற்கு இந்திய மதிப்பில் 25 லட்சம் முதல் 27 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இந்த வேலைக்கு ஆள் தேவை என சமீபத்தில் விளம்பரம் வெளியாகி இருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த வனவிலங்கு குழு, உலகின் தொலைதூரத்தீவில் 13 மாதங்கள் தங்கி வேலை செய்ய பொருத்தமான நபரைத் தேடுகிறது. தெ…

  18. Published By: RAJEEBAN 30 APR, 2023 | 11:50 AM உக்ரைன் ஜனாதிபதி வொலெடிமிர் ஜெலென்ஸ்கி தான் எப்போதும் கைத்துப்பாக்கியொன்றை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளதுடன் உயிருடன் பிடிபடுவதை விட போராடிசாவேன் என தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகரிற்குள் நுழைந்து ஜனாதிபதியை இலக்குவைப்பதற்கு ரஸ்ய புலனாய்வாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 2022 பெப்ரவரியில் ரஸ்ய படையினர் உக்ரைனிற்கு எதிராக போரை ஆரம்பித்த பின்னர் ரஸ்ய புலனாய்வு பிரிவினர் உக்ரைன் தலைநகரிற்குள் ஊடுருவி ஜனாதிபதி அலுவலகங்கள் அமைந்து…

  19. வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்கொட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக, ஸ்கொட்லாந்தில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்கொட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது. விதியின் கல் என அழைக்கப்படும் இந்த கல் பண்டைய ஸ்கொட்லாந்தின் இறையாண்மையின் சின்னமாக பார்க்கப்படுகிறது. 152 கிலோ எடையுள்ள இந்தக் கல், 1296ம் ஆண்டு அப்போதைய மன்னராக இருந்த முதலாம் எட்வர்ட் ஸ்கொட்லாந்திடமிருந்து கைப்பற்றினார். மே 6ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது. எடின்பெர்க் கோட்டையில் வைக்கப்பட்டிருந்த இந்தக் கல், கடந்த 27 ஆண்டுகளி…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1990 ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாலையில், சுமார் ஒரு லட்சம் இராக் வீரர்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரக்குகளுடன் குவைத் எல்லைக்குள் நுழைந்தனர். அந்த நேரத்தில் இராக் ராணுவம் உலகின் நான்காவது பெரிய ராணுவமாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்குள் அவர்கள் குவைத் நகரத்தை அடைந்தனர். நண்பகலுக்குள் இராக்கிய பீரங்கிகள் குவைத்தின் தஸ்மான் அரண்மனையைச் சுற்றி வளைத்தன. அதற்குள் குவைத்தின் அமீர் செளதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவர் தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் ஃபஹத் அல் அஹ்ம…

  21. Published By: RAJEEBAN 29 APR, 2023 | 10:47 AM இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் மிகச்சிறந்த பங்களிப்பு குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு முதலாவது கொரிய குடியேற்றவாசிகள் சென்று 120 வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வில் ஜூலி சங் குறித்து இராஜாங்க செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார். சியோலில் இருந்து கலிபோர்னியாவிற்கு ஜூலி சங் 1977ம் ஆண்டு குடிபெயர்ந்தவேளை அவருக்கு 7 வயது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார். அவ்வேளை அவர் ஒரு ஆங்கிலவார்த்தை கூட தெரியாதவராக காணப்பட்டார். அவரது தந்தைக்கு பொறியல் நிறுவனத்தில் வேலை கி…

  22. ரிஷியை இங்கிலாந்து பிரதமராக்கியது எனது மகள்’ – சுதா மூர்த்தி பெருமிதம் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண்தான் இருக்கிறாள் என்று சொல்வது உண்டு. அந்த பெண்- தாயாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, ஆசிரியையாக இருக்கலாம். இது உண்மைதான். இதையொட்டி, பிரபல தொழில் அதிபரும், ‘இன்போசிஸ்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனருமான என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாகப் பரவுகிறது. அதில் சுதா மூர்த்தி கூறி இருப்பதாவது:- இது மனைவியின் மகிமை. ஒரு மனைவியால் கணவரை எப்படி மாற்ற முடியும் என்று பாருங்கள. என் கணவரை (நாராயணமூர்த்தி) நான் தொழில் அதிபர் ஆக்கினேன். என் மகள், அவளது கணவரை (ரிஷி சுனக்) இங்கிலாந்து நாட்டுக்கு பிரதமர் ஆ…

  23. பிரித்தானிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவி வகித்த காலத்தில், 2021 பெப்;ரவரியில் பிபிசியின் தலைவராக நியமிக்கப்பட்டவர் ரிச்சர்ட் ஷார்ப். வங்கியாளரான ரிச்சர்ட் ஷார்ப், ஜேபி மோர்கன், கோல்ட்மேன் சாக்ஸ் வங்கிகளில் நீண்டகாலம் பணியாற்றியவர். பிரிட்டனின் தற்போதைய பிரதமர் ரிஷி சுனாக்கும் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியில் ரிச்சர்ட் ஷார்ப்பின் கீழ் பணியாற்றியிருந்தார். 2020 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு 800,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் கடன் ஏற்பாடு செய்தததில் தனது பங்களிப்பை, பிபிசி தலைவர் பதவிக்கான நியமன நடைமுறைகளின்போது மறைத்ததாக ரிச்சர்ட் ஷார்ப் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இதை மறைத்ததன் மூலம், ரிச்சர்ட் ஷார்ப் விதிமு…

  24. உக்ரேனில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களில் 9 பேர் பலி Published By: Sethu 28 Apr, 2023 | 01:07 PM உக்ரேனில் நேற்றிரவு ரஷ்ய படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தபட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் கியேவ் உட்பட பல இடங்கள் மீது நேற்றிரவு ரஷ்யா வான் வழித் தாக்குதல்களை நட்ததியது. உமான் நகர் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள், குடியிருப்புக் கட்டடங்களைத் தாக்கியுள்ளன. இதனால் 7 பேர் காயமடைந்ததுடன் மேலும் பலர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டினிப்ரோ நகரம் மீது நடத்தப்பட்ட…

  25. ட்ரம்ப் தன்னை வல்லுறவுக்குட்படுத்தினார் என நீதிமன்றத்தில் பெண் சாட்சியம் Published By: Sethu 27 Apr, 2023 | 10:02 AM டொனால்ட் ட்ரம்ப் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் என அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் நீதிமன்றில் வாக்குமூலம் சாட்சியம் அளித்தார். ஈ. ஜீன் கரோல் எனும் இப்பெண், நியூஹோர்க்கின் மென்ஹட்டன் சமஷ்டி நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக நேற்று புதன்கிழமை சாட்சியம் அளித்தார். 1996 ஆம் ஆண்டு, மென்ஹெட்டன் நகரிலுள்ள பேர்க்டோர்க் குட்மேன் வர்த்தக நிலையத்தின் ஆடைமாற்றும் அறையில் வைத்து தன்னை டொனால்ட் ட்ரம்ப் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.