உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
கோவிட் பெருந்தொற்றின் பரவல் காரணமாக சீனாவில் தீவிரமான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை மக்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். உலகமுழுவதும் கோவிட் பெருந்தொற்றின் பரவல் தற்போது குறைந்துள்ளது. ஆனால் சீனாவில் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சீனாவில் உள்ள ஷாங்காய் (Shanghai) நகரில் தீவிர கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது சீன அரசு. அண்மையில் கூட ஷாங்காய் நகரின் தெருக்களில் ரோபோட்களைப் பயன்படுத்தி ஊடங்கு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தீவிரமான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால் ஷாங்காய் நகர மக்கள் வெளியில் வராமல் வீட்டிலையே தங்களை…
-
- 3 replies
- 502 views
-
-
யுக்ரேன் மீது படையெடுத்து பேரளவு, திட்டமிட்ட மனித உரிமை மீறல்களை ரஷ்யப் படைகள் நிகழ்த்தியதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் ரஷ்யாவை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து இன்று ஏப்ரல் 7ம் தேதி இடை நீக்கம் செய்துள்ளது ஐ.நா. பொதுச் சபை என்கிறது ராய்டர்ஸ் செய்தி முகமை. "ரஷ்யாவை மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா முன்னெடுத்த இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் விழுந்தன. இந்தியா உட்பட 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஐ.நா. பொதுச் சபையில் 193 நாடுகள் உள்ளன. இதில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தால்தான் மனித உரிமை கவுன்சிலில் இருந்து …
-
- 1 reply
- 341 views
-
-
புச்சா படுகொலைகள் தொடர்பாக... ரஷ்யா மீது, கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு! உக்ரைனின் புச்சா நகரில் இடம்பெற்றதாக கூறப்படும் படுகொலைகள் தொடர்பாக ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ளன. முதற்கட்டமாக, இந்தப் படுகொலைகளுக்கான எதிரப்பை பதிவு செய்யும் வகையில், தங்கள் நாடுகளிலிருந்து ரஷ்யத் தூதரக அதிகாரிகள் சிலரை வெளியேறுமாறு பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உத்தவிட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையத்தின் 27 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸிலுள்ள தலைமையகத்தில் கூடி, ரஷ்யா மீது ஐந்தாவது கட்ட பொருளாதாரத் தடைகளுக்கான பரிந்துரைகளுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தனர். இந்தப் …
-
- 2 replies
- 267 views
-
-
ரஷ்யாவை... ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருந்து, நீக்க வேண்டும் என உக்ரைன் கோரிக்கை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் நேற்றைய தினம், காணொளி மூலம் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, உக்ரைனில் ரஷ்ய படைகளினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து, பாதுகாப்புச் சபைக்கு அவர் விளக்கமளித்துள்ளார். இதன்போது, ரஷ்ய படையினால், உக்ரைனியர்கள் கொல்லப்பட்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்ற நிலையில், ரஷ்யா பொறுப்புக் கூரலுக்கு உள்ளாக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதேநேர…
-
- 2 replies
- 263 views
-
-
தலைமை வாத்தியாரின் அக்கிரமம். மரண தண்டனை. * இது கொசிப்புக்காக பகிரப்படவில்லை* ஆசிரியர்கள் என்றால், எழுத்தறிவிக்கும் தெய்வம் ஆக, முக்கியமாக ஆசியாவில் கருத்தப்படுகின்றது. அதே ஆசிரியர்கள், வரம்பு மீறும் செயல்களும் அவ்வப்போதும் நடக்கும். இந்தோனேசியாவில் நடந்துள்ள இந்த சம்பவம், ஆசிரியர்கள் மேலுள்ள நம்பிக்கையையே தகர்த்துள்ளதுடன், நாட் டையே அதிர வைத்துள்ளதுடன், பெத்தவர்களை கதி கலங்க வைத்துள்ளது. இஸ்லாமிய தனியார் போர்டிங் பள்ளி தலைமை ஆசிரியர், பயமுறுத்தி, 11 வயதுக்கும் 14 வயதுக்கும் இடையேயான 13 பெண் பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது 2016 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில் நடந்துள்ளது. மிக மோசமான நிலை என்னவெனில், இந்த செய்கையினால், படிக்…
-
- 5 replies
- 534 views
-
-
கிழக்கு நகரங்கள் மீது... மிகப்பெரிய தாக்குதல் நடத்த, ரஷ்யா திட்டம்: உக்ரைன்! கிழக்கு பகுதியில் உள்ள நகரங்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த, ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கிழக்கு நகரங்களான கார்கீவ், நிப்ரோவ், டொனெட்ஸ்-மகிவ்கா, ஷப்ரிஷிஷியா, மரியுபோல், லுஹன்ஸ், ஹர்லிவ்கா, கமின்ஸ்கி ஆகிய நகரங்கள் மீது ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக உக்ரைன் எச்சரித்துள்ளது. ஏற்கனவே கைப்பற்றிய சில பகுதிகளில் இருந்து ரஷ்ய படையினர் பின்வாங்கி வருகின்ற நிலையில், இந்த செய்தி வெளிவந்துள்ளது. இந்தநிலையில், உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த 18,300 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக…
-
- 0 replies
- 298 views
-
-
புட்டினை... போர்க் குற்றங்களுக்காக, விசாரிக்க வேண்டும்: ஜோ பைடன் வலியுறுத்தல்! உக்ரைனில் ரஷ்யப் படைகள் செய்ததாகக் கூறப்படும் அட்டூழியங்கள் பற்றிய ஆதாரங்கள் வெளிவருவதால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை போர்க் குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், சர்வதேச கோபத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், புடின் ஒரு மிருகத்தனமானவர் என்றும் புடின் ஒரு போர்க் குற்றவாளி என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார். ரஷ்யப் படைகள் அதன் ஆக்கிரமிப்பிற்கு பிறகு புச்சாவின் வீதிகளில் மணிக்கட்டு கட்டப்பட்ட நிலையில் குறைந்தது 11 இறந்த உடல்களை காட்ட…
-
- 0 replies
- 161 views
-
-
ரஷ்யா – யுக்ரேன் மோதல்: எரிந்துபோன பீரங்கிகளின் மிச்சமும் பிணங்களும் - யுக்ரேன் நகர வீதிகளில் அழிவின் சாட்சிகள் ஜெர்மி போவன் பிபிசி செய்திகள், புச்சா 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BBC/LEE DURANT படக்குறிப்பு, ரஷ்ய படையின் வாகனங்கள் சிதைந்து கிடக்கும் புச்சா நகரத்தின் புறநகர் தெரு ரஷ்யா கீயவை சுற்றி வளைத்து, அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியின் அரசைக் கைப்பற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சியில் உருவான முதல் கல்லறைகளில் ஒன்றாக, புச்சாவின் புறநகர் பகுதியிலுள்ள ஒரு மரங்களடர்ந்த சாலை மாறியது. பிப்ரவரி 24-ஆம் தேதியன்று ரஷ்ய படைகள் யுக்ரேனுக்குள் நுழைந்த …
-
- 39 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஹங்கேரி- செர்பியா ஆகிய நாடுகளில்... நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற, தலைவர்களுக்கு புட்டின் வாழ்த்து! ரஷ்யாவின் நட்பு நாடுகளான ஹங்கேரி மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹங்கேரியின் தேசியவாத பிரதமர் விக்டர் ஓர்பன், நாட்டின் பொதுத் தேர்தலில் அமோகமாக வெற்றிபெற்று நான்காவது முறையாக பிரதமராகியுள்ளார். இந்தநிலையில் விக்டர் ஓர்பனுக்கு புடின் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சர்வதேச அரசியலில் கடினமான சூழ்நிலை இருந்தபோதிலும், இருதரப்பு நட்புறவை மேலும் மேம்படுத்துவது இரு நாடுகளின் மக்களுக்கு நன்மை பயக்கும் என கூறியுள்ளார். இதேபோல் செர்பிய…
-
- 1 reply
- 269 views
-
-
ஒடெசாவில்... உள்ள எரிபொருள் கிடங்குகள் மீது, ரஷ்யா படையினர் தாக்குதல்! உக்ரைனின் கருங்கடல் கடற்கரையோரம் அமைந்துள்ள துறைமுக நகரமான ஒடெசாவில் உள்ள எரிபொருள் கிடங்குகள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன. சில இடங்களில் தீப்பற்றி எரிந்ததாகவும், சில ஏவுகணைகளை விமானப்படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைனின் உட்துறை அமைச்சரின் ஆலோசகர் ஆண்டன் ஹெராஷ்செங்கோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஷ்ய இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும், 3 எண்ணெய் கிடங்குகளையும் ரஷ்ய படைகள் தாக்கி அழித்தன. இவற்றில் இருந்துதான் மைக்கோலெய்வ் நகரில் உள்ள உக்ரைன் இராணுவத்துக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது’ என தெரிவிக்கப்…
-
- 0 replies
- 219 views
-
-
ஞாயிற்றுக்கிழமை காலை டவுன்டவுனில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு பேரைக் கொன்றவர்களைக் கண்டுபிடிப்பதற்கு சாக்ரமென்டோ காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோருகிறது. 10வது மற்றும் கே தெருக்களுக்கு அருகே ஏற்பட்ட கைகலப்பில் மேலும் 10 பேர் காயமடைந்ததாக சாக்ரமென்டோ காவல்துறை தலைவர் கேத்தரின் லெஸ்டர் தெரிவித்தார். "பல பாதிக்கப்பட்டவர்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அதிகாரிகள் விசாரணை செய்வதால், 9வது ஸ்டம்ப் முதல் 13வது செயின்ட் வரை L St & J St இடையே மூடப்பட்டுள்ளது" என்று சேக்ரமெண்டோ காவல்துறை ட்வீட் செய்தது. "இந்த நேரத்தில் தெரியாத நிலைமைகள். பெரிய போலீஸ் என்பதால் அந்த பகுதியை தவிர்க்கவும் CNN)Sacramento police are asking the public's help in findin…
-
- 6 replies
- 530 views
- 1 follower
-
-
பேரழிவை... தவிர்க்க வேண்டுமென விரும்பினால், தென் கொரியா தன்னை ஒழுங்குபடுத்த வேண்டும்: வடகொரியா எச்சரிக்கை! பேரழிவை தவிர்க்க வேண்டும் என்று விரும்பினால் தென் கொரியா தன்னை ஒழுங்குபடுத்த வேண்டும் என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னிற்கு அடுத்தப்படியாக நாட்டின் அதிகாரத்துவம் மிக்க தலைவராக விளங்கும் அவரது சகோதரி கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளார். அண்மையில் தென்கொரியாவில் உள்ள ஏவுகணை செலுத்தும் மையத்துக்கு சென்ற இராணுவ அமைச்சர் சூ ஊக், ‘தென்கொரியா மீது வடகொரியா ஏவுகணைகளை ஏவுவதற்கு திட்டம் எதுவும் வைத்திருந்தால், அந்த நாட்டின் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்துவதற்கான திறனும், தயார் நிலையும் தென் கொரியாவுக்கு இருக்கிறது’ என்று கூறியிருந்தார். இந்தநிலையில…
-
- 0 replies
- 242 views
-
-
கனடாவில்... பழங்குடி மாணவர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவம்: மன்னிப்பு கோரினார் போப் பிரான்சிஸ்! கனடாவில் பழங்குடி மாணவர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். ‘நான் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கிறேன் என்பதை என் இதயத்தில் இருந்து உங்களுக்கு கூற விரும்புகிறேன்’ என அவர் கூறினார். மேலும், கனடா பேராயர்களுடன் இணைந்து தான் மன்னிப்பு கோருவதாகவும் விரைவில் கனடா செல்ல உள்ளதாகவும் அவர் அறிவித்தார். கனடாவில் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி, 1970ஆம் ஆண்டுகள் வரை பூர்வகுடி குழந்தைகள் மற்ற சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தேவாலயப் பாட்சாலைகளில் கல்வி பயில கட்டாயப்படுத்தப்பட…
-
- 8 replies
- 562 views
-
-
உலக ஆட்டிசம் தினம்: குறைபாட்டை கையாள எளிய மருத்துவ ஆலோசனைகள் சௌமியா குணசேகரன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆட்டிசம் ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு. இதை மருத்துவத்துறையில் "ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்" என அழைக்கின்றனர். இந்தியாவில் 125 சிறாரில் ஒருவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல் 2ஆம் தேதி உலக ஆட்டிசம் தினமாக சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உலக அளவில் ஆட்டிசம் உள்ளவர்களின் வாழ்வை மேம்படுத்தும…
-
- 2 replies
- 718 views
- 1 follower
-
-
“உங்களிடம் எல்லாம் இருக்கிறது; ஒன்றை தவிர” – இம்ரான் கான் மீது முன்னாள் மனைவி விமர்சனம் தன்னிடம் அனைத்தும் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதை அவரது முன்னாள் மனைவி ரேஹாம் கான் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளதாார சரிவுக்கும், பண வீக்கத்துக்கும் பிரதமர் இம்ரான் கான் தான் காரணம் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சிகள், அவரது அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நாளை மறுதினம் (ஏப்.3) வாக்க…
-
- 0 replies
- 497 views
-
-
வட கொரியாவின்... பேரழிவு ஆயுதங்களுக்கு, ஆதரவளித்த... ஐந்து நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை! வட கொரியாவின் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. சமீபத்திய தொடர் ஏவுகணை ஏவுகணைகளைத் தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள், வடகொரியா மீதான அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்குவதுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள வட கொரிய பேரழிவு ஆயுதம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு என ரொக்கெட் தொழில் அமைச்சகத்தை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள…
-
- 0 replies
- 257 views
-
-
உக்ரைன் இன்று ரஷ்யாமீது ஏவுகணைத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது.. இதை ரஷ்யாவும் உறுதி செய்துள்ளது.. உக்ரைன் ரஷ்யா எல்லையில் இருந்து 40கிலோமீற்றர் உள்ளே ரஷ்யாவில் இருக்கும் எண்ணெய்க்கிடங்கின் மீது உக்ரைன் ஏவுகணைத்தாக்குதலை நிகழ்த்தி உள்ளது.. ஏவுகணை எண்ணெய் சேமிப்பு நிலையத்தை தாக்கும் வீடியோவையும் ரஷ்யா வெளியிட்டுள்ளது.. இதை அடுத்து உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்த போவதகா ரஷ்யா அறிவித்துள்ளது.. அநேகமாக அண்மையில் நடந்ததுதான் இரண்டு நாளுகளுக்கும் இடையிலான கடைசி பேச்சுவார்த்தையாக இருக்கும்போல..
-
- 9 replies
- 1.4k views
-
-
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு... யேமனில், இரண்டு மாத போர்நிறுத்தம்! முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு யேமனில் இரண்டு மாத போர்நிறுத்தம் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு தழுவிய அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் ஒப்பந்தம் இதுவாகும். பல இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முதல் நாள் இன்று (சனிக்கிழமை) ஆகும். சவுதி தலைமையிலான கூட்டணிக்கும் ஈரான் ஆதரவு ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் இன்று (சனிக்கிழமை) 16:00 மணிக்கு நடைமுறைக்கு வருகின்றது. மேலும், இருவரும் ஒப்புக்கொண்டால் நீடிக்கப்படலாம் போர்நிறுத்தம் நீண்டகாலமாக எதிர்…
-
- 0 replies
- 180 views
-
-
மேற்கத்திய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம்: இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய சட்டம்! ரூபிள்களில் செலுத்த மறுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தும் அச்சுறுத்தலை ரஷ்யா இரட்டிப்பாக்கியுள்ளது. ஏற்கனவே தங்களிடம் ரஷ்ய நாணயமான ரூபிள்களை கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கூறியிருந்தார். ஆனால், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விதி இருப்பதால், அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என புடின் எச்சரித்துள்ளார். இதற்காக ரஷ்ய வங்கிகளில் சிறப்பு கணக்கு தொடங்கப்படும், அவற்றின்மூலம் வெளிநாட்டு பணம், ரூபிள்களாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப…
-
- 0 replies
- 276 views
-
-
துனிசியாவில்... நாடாளுமன்றத்தைக் கலைக்க, ஜனாதிபதி உத்தரவு! வடமேற்கு ஆபிரிக்க நாடான துனிசியாவில் நாடாளுமன்றத்தைக் கலைக்க, ஜனாதிபதி காய்ஸ் சயீது உத்தரவிட்டுள்ளார். அவருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தை அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை செல்லாததாக அறிவிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்ததைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். துனீசியாவில் பொதுமக்களின் கடுமையான போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டில் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்ட ஜனநாயக அரசாங்கம் அமைக்கப்பட்டது. எனினும், பொருளாதார நெருக்கடியையும் போராட்டங்களையும் காரணம் காட்டி, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி காய்ஸ் சயீது முடக்கினார். மேலும், அவருக்கு கூடுதல் அதிகாரம் அளிக…
-
- 0 replies
- 170 views
-
-
முடக்கநிலை விதிகளை மீறியதாக,,, இரண்டாவது அமைச்சர், ஒப்புக்கொண்டார்! டவுனிங் ஸ்ட்ரீட் மற்றும் வைட்ஹாலில் நடந்ததாக கூறப்படும் விருந்துகளில் கலந்துக்கொண்டு முடக்கநிலை விதிகளை மீறியதாக இரண்டாவது அமைச்சரும் ஒப்புக்கொண்டுள்ளார். துணைப் பிரதமரும் நீதித்துறை செயலாளருமான டொமினிக் ராப் இந்த குற்றச்சாட்டை ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த நிலையில், தற்போது சர்வதேச வர்த்தக செயலாளர் ஆன்-மேரி ட்ரெவெலியன் ஒப்புக்கொண்டார். எனினும், பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். இந்த வார தொடக்கத்தில், 2020ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கட்சிகள் மீதான விசாரணையின் விளைவாக விருந்துகளில் கலந்து கொண்டவர்களுக்கு 20 அபராதங்களை பெருநகர பொலிஸ்துறை …
-
- 0 replies
- 253 views
-
-
உளவு செயற்கைக்கோளை... வெற்றிகரமாக ஏவி, தென்கொரியா சாதனை! திட எரிபொருளில் இயங்கும் ரொக்கட்டில் உளவு செயற்கைக்கோளை ஏவி தென் கொரியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன் மூலம் விண்வெளி கண்காணிப்பில் தென் கொரியா முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளதாக தென்கொரியா பெருமைக் கொண்டுள்ளது. இந்தச் சோதனை தென் கொரிய இராணுவ அமைச்சர் சூ வூக் முன்னிலையில் தலைநகர் சீயோலில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டேன் என் எனும் பகுதியில் நடத்தப்பட்டது. இது குறித்து தென் கொரிய இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இது நமது இராணுவத்தில் ஒரு மைல்கல். அதுமட்டுமல் விண்வெளி ஆராய்ச்சிகளில் சுதந்திரமான முயற்சி. இதனால் நமது கண்காணிப்பு திறனும் அதிகரிக்கும்’ என த…
-
- 0 replies
- 251 views
-
-
ரஷ்யா, உறுதி அளித்தது போல்.... படைக் குறைப்பில் ஈடுபடவில்லை: உக்ரைன் குற்றச்சாட்டு! இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, ரஷ்யா உறுதி அளித்ததுபோல் படைக் குறைப்பில் ஈடுபடவில்லை என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. துருக்கியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ நடவடிக்கையை குறைத்துக்கொள்வதாக ரஷ்யா உறுதியளித்தது. ஆனால், எந்தப் படை குறைப்பிலும் ரஷ்யா ஈடுப்படவில்லை என்று செர்னிஹிவ் நகர மேயர் வியாசெஸ்லாவ் சாஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வாக்குறுதியை நம்ப தயாராக இல்லை எனவும் ரஷ்யா தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்திவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். உக்ரைனில் ரஷ…
-
- 6 replies
- 365 views
-
-
அணு ஆயுதங்களுடன் மற்றொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்த ரஷிய போர் விமானங்கள்: திடுக்கிட வைக்கும் தகவல் அணு ஆயுதங்களுடன் சுவீடன் நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்த ரஷிய போர் விமானங்கள் குறித்த திடுக்கிடவைக்கும் தகவல் வெளியாகி உள்ளது ஒரு பக்கம் உக்ரைனுடன் போரிட்டுக்கொண்டே, இன்னொரு பக்கம் மற்றொரு நாட்டை மிரட்டுவதற்காக, அந்நாட்டு வான் எல்லைக்குள் அணு ஆயுதங்களுடன் ரஷிய போர் விமானங்கள் நுழைந்துள்ள செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதம் (மார்ச்) 2ஆம் தேதி, நான்கு ரஷிய போர் விமானங்கள் சுவீடன் நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்துள்ளன. உடனடியாக சுவீடன் விமானப்படை இரண்டு போர் விமானங்களை அனுப்ப, அவை செ…
-
- 6 replies
- 496 views
-
-
இஸ்ரேலில் ஒரு வாரத்தில் மூன்று பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள்! இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் புறநகர் பகுதியில், ஒரு வாரத்தில் மூன்று பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்களினால், மொத்தமாக 11பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இஸ்ரேலிய அரேபியர்களின் தாக்குதல்களில் 6பேர் கொல்லப்பட்டதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் இருந்தனர். துப்பாக்கிதாரி, பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக சம்பவ இடத்திலிருந்த மருத்துவ உதவியாளர் தெரிவித்தார். இஸ்ரேலில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் கண்டனம் தெரிவித்த…
-
- 0 replies
- 158 views
-