உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
உக்ரேனியர்களுக்கு உதவ... பொதுமக்களிடம், நன்கொடை அளிக்குமாறு வேண்டுகோள்! தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் நூறாயிரக்கணக்கான உக்ரேனியர்களுக்கு உதவ பிரித்தானியாவின் பேரிடர் அவசரக் குழுவால் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கம், ஆக்ஸ்பாம் மற்றும் சேவ் தி சில்ட்ரன் உள்ளிட்ட பதினைந்து பிரித்தானிய உதவி நிறுவனங்கள், பொதுமக்களிடம் நன்கொடை அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றன. உக்ரைனில் வீடுகள் அழிக்கப்பட்டு, தண்ணீர் விநியோகம், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்களுக்கு அவசரமாக உணவு, தண்ணீர், தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவி தேவை என்று தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், மொத்தம் 20 மில்லியன…
-
- 5 replies
- 439 views
-
-
இலங்கைக்கு மேலும் கடன் வழங்குவதைத் தவிர்ப்பது குறித்து சீன அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தற்போது கொழும்பில் இருக்கும் சீன அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று, அரசாங்கத்தின் சில உயர்மட்ட அதிகாரிகளுக்கு இந்தத் தீர்மானத்தை தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு காரணங்களுக்காக கொழும்பிற்கு கடன்கள் அல்லது உதவிகளை வழங்குவதிலிருந்து விலகியிருக்க பெய்ஜிங் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக கூறப்படுகிறது. இரண்டாவது காரணம், சர்ச்சைக்குரிய சீன…
-
- 6 replies
- 556 views
-
-
ஐரோப்பாவின்... மிகப்பெரிய அணுமின் நிலையத்தில், தீ விபத்து! தீயணைப்பு வீரர்களை அனுமதிக்க உக்ரைன் கோரிக்கை! ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள எனர்ஹோடர் நகரின் மேயர் டிமிட்ரோ ஓர்லோ ‘(அணு உலையின்) கட்டடங்கள் மற்றும் உலைகளின் மீது எதிரியின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களால்’ இது ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். அணுமின் நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரி டூஸ், ரஷ்ய படைகள், ‘கடுமையான தாக்குதலை நிறுத்த வேண்டும்,’ என்று சமூக ஊடகங்களில் கேட்டுக் கொண்டார். மேலும், ‘ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையத்தில், அணு ஆற்றல் அபாயத்தின் உண்மையான அச…
-
- 11 replies
- 752 views
-
-
இந்தாள் ஒரு பெரிய நாட்டுப்பற்றுள்ள மனிதந்தானப்பா. தனது உக்ரேன் மீதான வலுத்தாக்குதலுக்கான (offense) மெய்யான மிகச் சிறந்த ஏரண விளக்கத்தை அந்த ஊடகவியலாளர்க்கு கொடுக்கின்றார். தனது வீட்டின் வாசலில் எவனேனும் பாரிய ஆயுதங்களைக் கொண்டு வந்து குவித்து விட்டு நான் உன்வீட்டின் மீது படையெடுப்பேன் என்றால் 'முந்துபவன் வெல்வான்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் முந்திச் செயல்பட்டு தன் நாட்டைக் காத்துள்ளதான தொனியில் விளக்கம் அளிக்கின்றார். அவர்தம் மேலும் பல விளக்கங்களைக் காண கீழுள்ள நிகழ்படத்தை சொடுக்குக. 👌
-
- 0 replies
- 426 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 697 views
-
-
உக்ரைன்- ரஷ்யா இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி: புடினை நேரில் சந்திக்கிறார் ஜெலென்ஸ்கி! உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையில் நடைபெறும் போரை நிறுத்துவதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்தையில் துரதிர்ஷ்டவசமாக, உக்ரைனுக்குத் தேவையான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகள் நான்கு நாட்களில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்காக பெலாரஸின் பிரெஸ்ட் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) கூடினர். உக்ரைன் தரப்பில் போர்நிறுத்தம் மற்றும் பொதுமக்களை வெளியேற்றுவதற்கான மனிதாபிமான நடவடிக்கைகள் என இரு விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. ஆனால், பல மணிநேர பேச்சுவார்த்தையின் போது, பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ம…
-
- 0 replies
- 224 views
-
-
ஒருபுறம் பேச்சுவார்த்தை,மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கோரிக்கை! அதிபர் ஜெலன்ஸ்கி திட்டம்தான் என்ன? கீவ்: போர் தொடர்பாக பெலராஸ் நாட்டில் உக்ரைன்- ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், அதிபர் ஜெலன்ஸ்கி இப்போது தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுத்தது. இந்தப் போர் 4 நாட்களைக் கடந்த 5ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். போர் காரணமாக அங்கு வான்வழி மூடப்பட்டுள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்தி வெளிநாட்டினரைத் தாயகம் அழைத்து வரும் நடவடிக்கையில் பல்வேறு நாடுகளும் தீவிர…
-
- 15 replies
- 1.1k views
-
-
படைவிலக்கல் மற்றும் நடுநிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் யுக்ரேனில் மேற்கொள்ளப்படும் ரஷ்ய ராணுவ நடவடிக்கையின் நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என்று பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கிடம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரூங் இன்று தொலைப்பேசியில் உரையாடியபோது அவர் இதனை தெரிவித்தார். இந்த உரையாடல் சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது. ரஷ்ய படையெடுப்பு: “ராணுவ நடவடிக்கையின் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்” – புதின் - தமிழில் செய்திகள் (bbc.com)
-
- 0 replies
- 236 views
-
-
உதவ யாருமில்லை, தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் வேதனை உக்ரைனில் ரஷ்யா தாக்குதலில் 137 பேர் பலியாகி உள்ளதாகவும் ரஷியாவுக்கு எதிராக தனிந்தனியாக போராடி வருகிறோம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் 18 – 6- வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது.ரஷ்ய படையை எதிர்த்து உக்ரைன் ராணுவத்துக்கு துணையாக நிற்க 10 ஆயிரம் தானியங்கி இயந்திர துப்பாக்கிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. ரஷியாவிடம் இருந்து உக்ரைனைக் காக்கத் அதற்கு முன், அந்நாட்டு ராணுவ அதிகாரி தனது மகள் மற்றும் மனைவியிடம் விடைபெறும்போது கண்ணீர் விட்டு கதறி அழுதது ப…
-
- 22 replies
- 1.4k views
-
-
உக்ரேன் போருக்கு எதிராக ரஷ்யாவில் தொடர்ந்து போராட்டம் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர். உக்ரேன் மீது ரஷ்ய படைகள் 8 ஆவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரேன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரேன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து ரஷ்யாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான சென் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்று நடைபெற்ற ப…
-
- 0 replies
- 243 views
-
-
ரஷ்யாவிற்கு.... கண்டனம் தெரிவித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம், ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றம்! உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பொது சபையின் சிறப்பு அவசரக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.பொதுச் சபையில், மூன்றாவது நாளாக நேற்று (புதன்கிழமை) பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பேசிய பிறகு, உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்தி, அங்கிருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா தாக்குதலுக்கு இந்த தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலை அரசி…
-
- 0 replies
- 177 views
-
-
உக்ரைனில் 13 குழந்தைகள் உட்பட 136 பேர் உயிரிழந்துள்ளனர் – ஐக்கிய நாடுகள் சபை உக்ரைனில் கடந்த வியாழக்கிழமை முதல் இடம்பெற்றுவரும் போரில் இருந்து குறைந்தது 136 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 13 குழந்தைகளும் இருக்கலாம் என்றும் ஆனால், உண்மையான இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. இருப்பினும், உக்ரைன் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் 352 பொதுமக்கள் இறந்ததாகவும், 1,684 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1269969
-
- 0 replies
- 215 views
-
-
கார்கிவ் மீது ஷெல் தாக்குதல்: 21 பேர் உயிரிழப்பு – ரஷ்யாவிற்கும் குறிப்பிடத்தக்க இழப்பு! உக்ரைனின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான கார்கிவ் மீது ஷெல் தாக்குதலை ரஷ்ய படைகள் மேற்கொண்டுள்ளன. குறித்த தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 112 பேர் காயமடைந்துள்ளனர் என்று நகர முதலவர் தெரிவித்துள்ளார். செவ்வாய் முதல் இரவோடு இரவாக கார்கிவ் மீது கடுமையான குண்டுவீச்சுகள் நடத்தப்பட்ட போதிலும், அனைத்து ரஷ்ய தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார். மேலும் குறித்த தாக்குதலில் ரஷ்யாவும் குறிப்பிடத்தக்க இழப்புகளை சந்தித்தது என்றும் கார்கிவ் முதலவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1269965
-
- 0 replies
- 185 views
-
-
ரஷ்யா – உக்ரைன் போர் : இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் நேற்று முன்தினம், உக்ரைன் – பெலரஸ் எல்லையில் இடம்பெற்றன. இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையில், முதற்கட்ட பேச்சவார்த்தை நிறைவடைந்திருந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. எவ்வாறிருப்பினும், கிவ் இல் உள்ள தொழில்நுட்ப மையங்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாகவும் ஆகவே பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறும், ரஷ்யா தெரிவித்திருந்தது. இதனை அடுத்து தலைநகரில் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப்பு கோ…
-
- 1 reply
- 273 views
-
-
குருதிவழியும் உக்ரைன் மண்ணில்... அடிக்கடி ஜியோபாலிடிக்ஸ் குறித்து எழுதும் உங்களிடமிருந்து ஏன் ஒன்றுமே காணோமெனக் கேட்டுவிட்டனர். எழுதக்கூடாதென்பதில்லை; தமிழ்ச்சூழலில் காணப்படும் ஃபேக்நியூஸ்களும், ஒருதலைப்பட்சமான அமெரிக்க எதிர்ப்பு மனநிலையும்தான் காரணம், எழுதாமல் இருப்பதற்கு. கடைசியாக இது குறித்து நாம் எழுதியதில் குறிப்பிடப்பட்டது, உக்ரைன் நாட்டு மக்களிடையே இருக்கும் நேசனலிசம்தான் சாய்வுத்தன்மைக்கு வித்திட்டுவிட்டது; அதுவே போர்வரையிலும் இழுத்து வந்துவிட்டதெனக் குறிப்பிட்டு இருந்தோம். அது இன்றளவும் அப்படியே இருக்கின்றது. கூடவே, சர்வாதிகாரி புடினின் மனக்குலைவு என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. புடீனுக்கு வயது 69. வயோதிகத்தின் பொருட்டு, தன் செங்கோலாட்சி ம…
-
- 1 reply
- 365 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 408 views
-
-
நீங்கள் போருக்குப் பயப்படுகிறீர்கள், போலந்துக்கு சென்ற நீங்கள் ஏன் கீவ்-க்கு வரவில்லை – இங்கிலாந்து பிரதமரிடம், கண்ணீருடன் கேள்வியை தொடுத்த ஊடகவியலாளர். ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமை தொடர்பாக விவாதிப்பதற்காக போலாந்து நாட்டிற்குப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது உக்ரைன் எல்லையிலிருந்து தப்பிவந்த பெண் ஊடகவியலாளர் டாரியா கலேனியுக், பொரிஸ் ஜோன்சனிடம் கண்ணீருடன் எழுப்பும் கேள்விகள் மனதை உருகியுள்ளது. ரஷ்யப் போர் விமானங்கள் உக்ரைன் நாட்டில் வசிக்கும் அப்பாவி மக்களைக் கடுமையாக தாக்கி வருகிறது. அதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். நீங்கள் கியூவுக்கு வரவில்லை… ஏனென்றால் நேட்டோ மூன்றாம் உலகப் போரை …
-
- 0 replies
- 257 views
-
-
“அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும்” - ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்தார் ஜோ பைடன் முழுமையான படை பலத்துடன் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலமும் பாதுகாக்கப்படும் என்பதுடன் உக்ரைன் தாக்குதலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் ரஷ்யாவின் அனைத்து விமானங்களும் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடைவிதிக்கப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று செனட் சபையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், ‘‘அமெரிக்கா மற்றும் எங்களுடைய நட்பு நாடுகள் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு …
-
- 0 replies
- 232 views
-
-
ஜனாதிபதியை கொல்ல 400 கூலிப் படையினர்! நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 24 ந் திகதி முதல் அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. 6 வது நாளாக ரஷ்ய ராணுவப் படைகள் தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில் உக்ரைன் ஜனாதிபதி வால்டிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷ்யா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் உள்ள வாக்னர் குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பு 400 பேரை ரஷ்யாவுக்கு அனுப்பி உள்ளது. இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து…
-
- 0 replies
- 355 views
-
-
ரஷ்ய விமானங்களுக்கு.. ஐரோப்பிய ஒன்றியம் தடை! ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்துள்ளார். ‘ரஷ்யாவிற்கு சொந்தமான, ரஷ்ய பதிவு செய்யப்பட்ட அல்லது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள விமானங்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய வான்வெளியை நாங்கள் மூடுகிறோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார். தன்னலக்குழுக்களின் தனியார் ஜெட் விமானங்கள் உட்பட, அத்தகைய அனைத்து விமானங்களும் இப்போது எந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டிலும் தரையிறங்கவோ, புறப்படவோ அல்லது பறக்கவோ முடியாது. பிரித்தானிய வான்வெளியில் ரஷ்ய விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, ரஷ்யாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான எயிரோ…
-
- 1 reply
- 351 views
-
-
ரஷ்ய பீரங்கித் தாக்குதலில் 70 உக்ரேன் படையினர் உயிரிழப்பு நேற்று முன்தினம் (27), ஞாயிற்றுக்கிழமை, உக்ரேனின் வட-கிழக்கு நகரம் ஓக்டிர்காவில் ரஷ்யாவின் பீரங்கித் தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட உக்ரேன் படையினர் கொல்லப்பட்டதாக, உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில், உக்ரேன் இராணுவ பிரிவு ஒன்று அழிக்கப்பட்டதாகவும், உயிரிழந்தவகளின் சடலங்களை கண்டெடுக்கும் பணியில் மீட்புக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சுமி நகர அரசு நிர்வாக தலைவர் டிமிட்ரோ லெவிட்ஸ்கி தெரிவித்தார். “பல பேர் இறந்துள்ளனர். தற்போது உயிரிழந்த 70 உக்ரேன் படையினரை புதைப்பதற்கான இடங்கள் தயாராகிவருகின்றன” என, அவர் டெலிகிராம் பக்கத்தில் தெர…
-
- 0 replies
- 244 views
-
-
உக்ரைன் - ரஷ்யா முதல் கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் நிறைவு உக்ரைன் - ரஷ்யா முதல் கட்ட பேச்சு வார்த்தை எவ்வித உடன்பாடுளும் எட்டப்படாமல் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை போலாந்து மற்றும் பெலாரஸ் எல்லையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையேயான போர் 6 நாட்களையும் கடந்து நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. உக்ரைனின் தலைநகர் கிவ் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில், போரை முடிக்கு கொண்டு வர உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே நேற்று பெலாரஸ் ந…
-
- 0 replies
- 175 views
-
-
-
- 0 replies
- 525 views
-
-
அணு ஆயுத தடுப்புப் படைகளை... சிறப்பு எச்சரிக்கையில் இருக்குமாறு புடின் உத்தரவு! அணு ஆயுதங்களை உள்ளடக்கிய அதன் தடுப்புப் படைகளை சிறப்பு எச்சரிக்கையில் இருக்குமாறு, ரஷ்யாவின் இராணுவத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் மீதான அவரது படையெடுப்புக்கு பரவலான கண்டனங்களுக்கு மத்தியில், மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்பு அறிக்கைகள் இதற்குக் காரணம் என்று அவர் பாதுகாப்புத் தலைவர்களிடம் கூறினார். இந்த அறிவிப்பு ரஷ்யா ஆயுதங்களைப் பயன்படுத்த விரும்புகிறது என்று அர்த்தமல்ல எனவும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா உடனடியாக புடினின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி கண்டனம் வெளியிட்டுள்ளது. கடந்த வாரம், உக்ரைனில் எங்களுக்கு …
-
- 1 reply
- 242 views
-
-
ரஷ்ய வங்கிகளுக்கு மேற்குலக நாடுகளின் பலத்த அடி ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் பல ரஷ்ய வங்கிகளை முக்கிய சர்வதேச கட்டண முறையான "SWIFT" இல் இருந்து துண்டிக்க ஒப்புக் கொண்டுள்ளன. இதன் மூலம் ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்களும் முடக்கப்படும், இது ரஷ்யாவின் வெளிநாட்டு இருப்புக்களை அணுகும் திறனைக் கட்டுப்படுத்தும். இது குறித்து கருத்து மேற்கண்ட நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையில், சர்வதேச நிதி அமைப்பில் இருந்து ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்துவதே இதன் நோக்கம் என்று கூறியுள்ளன. ரஷ்யா அதன் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு ஸ்விஃப்ட் அமைப்பை பெரிதும் நம்பியுள்ளது. இந் நிலையில் இந்த நடவடிக்கை ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்…
-
- 2 replies
- 402 views
-