உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
அவுஸ்ரேலியாவில்... தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு, சில கட்டுப்பாடுகள்! அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் முடக்க நிலை முடிவுக்கு வரும்போது தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத நடுப்பகுதியிலிருந்து சிட்னியில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் சமூக ஒன்றுகூடல்கள் சிலவற்றில் கலந்துகொள்ள முடியாது என நியூ சவுத் வேல்ஸ் மாநில முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் டிசம்பரிலிருந்து கடைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றவற்றில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். https://athavanne…
-
- 0 replies
- 331 views
-
-
ஜப்பானின் புதிய பிரதமராகிறார் ஃபுமியோ கிஷிடா ஜப்பானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கிஷிடா ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (எல்.டி.பி) தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் அடுத்த பிரதமராக உள்ளார். 2020 செப்டம்பரில் பதவியேற்று ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய பின்னர் பதவி விலகும் கட்சித் தலைவர் பிரதமர் யோஷிஹிட் சுகாவை கிஷிடா இந்த வெற்றியின் மூலம் மாற்றுவார். முன்னதாக பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர் பதவிகளை வகித்த பிரபல தடுப்பூசி அமைச்சரான டாரோ கோனோவை தோற்கடிக்க கிஷிடா புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் 257 வாக்குகளை பெற்றார். புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 4 ம் திகதி நடைபெற உள்ளது. …
-
- 0 replies
- 388 views
-
-
பிரான்ஸ் ஜனாதிபதி மீது... முட்டை வீச்சு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் லியோன் நகரில் நடைபெற்ற சர்வதேச உணவு கண்காட்சியில் ஜனாதிபதி நேற்று கலந்துகொண்டார். கூட்டத்தின் நடுவே அவர் நடந்துசென்றபோது அவர்மீது முட்டை வீசப்பட்டதாகவும் அதன்பின்னர் அங்கிருந்த மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாப்பை பலப்படுத்தி குறித்த நபரை மடக்கி பிடித்தனர். இதேவேளை, முன்னதாக கடந்த ஜூனில் ஜனாதிபதியை ஒருவர் எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241797
-
- 0 replies
- 349 views
-
-
புதிய ‘ஹைப்பர்சொனிக் ஏவுகணையை’ ஏவியதாக வட கொரியா அறிவிப்பு Hwasong-8 என்ற புதிய ஹைப்பர்சொனிக் ஏவுகணையை நேற்று செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது. குறித்த புதிய ஏவுகணை அதன் ஐந்து ஆண்டு இராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில் ஒன்றாகும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அணுசக்தி திறன்களைக் கொண்டுள்ள புதிய ஏவுகணையை மூலோபாய ஆயுதம் என அழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனையுடன் இந்த மாதம் மட்டும் வட கொரியா நடத்திய மூன்றாவது சோதனை இது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241773
-
- 0 replies
- 197 views
-
-
நைஜீரியாவில் மர்ம நபர்களின் துப்பாக்கி சூட்டில் 40 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு நைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த படையினர், சம்பவ பிரதேசத்திற்கு சென்று பதில் தாக்குதல் நடத்தி அக்குழுவினரை விரட்டியுள்ளனர். இதன் பின்னர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த 3 வீடுகளில் தீயணைக்கப்பட்டதுடன், அவ்வீடுகளிலிருந்து 6 பேர் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட…
-
- 0 replies
- 218 views
-
-
கிளாயர் ப்ரெஸ் பிபிசி உலக சேவை ஆஃப்கானிஸ்தானில் பெண்ணுரிமையின் முன்னோடிகள் அவர்கள். நீதியின் காவலர்களாக, மிகவும் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் நியாயம் தேடித்தந்தவர்கள். ஆனால் இப்போது ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 200 பெண் நீதிபதிகள் தாலிபன் ஆட்சியின்கீழ் தண்டனைக்கு பயந்து தலைமறைவாகியிருக்கிறார்கள். ஆஃப்கானிஸ்தானில் ஆறு இரகசிய இடங்களிலிருந்து பெண் நீதிபதிகள் பிபிசியிடம் பேசினார்கள். பாதுகாப்புக் கருதி அவர்களது பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. பாலியல் வன்புணர்வு, கொலை, சித்ரவதை போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களுக்காக் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு எதிராகக் குற்றத்தீர்ப்பு வழங்கியிருக்கிறார் நீதிபதி மசூமா. ஆனால் அவர் வாழும் நகரம் த…
-
- 0 replies
- 456 views
-
-
ஜேர்மனியில்... மேர்க்கலுக்குப் பின்னர், யார் ஜனாதிபதி – தீர்மானம்மிக்க தேர்தல் இன்று அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர் யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தல் இன்று ஜேர்மனியில் நடைபெறவுள்ளது. இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வருகின்ற நிலையில், பிரசாரத்திற்கான இறுதித் தினமான நேற்று, ஜனாதிபதி பதவிக்காகப் போட்டியிடும் அரசியல்வாதிகள் நாடு முழுவதும் பாரிய பிரசாரங்களில் ஈடுபட்டனர். பதவியிலிருந்து நீங்கிச்செல்லும் ஜனாதிபதி அங்கெலா மேர்க்கெலின் வலதுசாரி கட்சிக்கும், சமூக ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் வழமைக்கு மாறாக கடும் போட்டி நிலவுமென கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் சமூக ஜனநாய…
-
- 6 replies
- 531 views
-
-
ஜோ பைடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார். பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அனுமதியளித்துள்ளது. இதனை தொடர்ந்து பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய் தொற்று அபாயம் உள்ள இளைஞர்கள் 3-வது தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்றும் முதல் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 மாதத்துக்கு பின் 3-வது டோசை போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் நேற்று திங்கட்கிழமை செலுத்திக்கொண்டார்…
-
- 0 replies
- 315 views
-
-
ஆப்கானில்... பயங்கரவாத நிலைகள் மீது, தாக்குதல் நடத்த தலிபான்களின் அனுமதி தேவையில்லை: அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நிலைகள் மீது தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு தலிபான்களின் அனுமதி தேவையில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கான் போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தலிபான்கள் வலியுறுத்தியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பீ கூறுகையில்,’பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு உள்ளது. அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதுவரை, ஆப்கானிஸ்தானி…
-
- 0 replies
- 345 views
-
-
நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாலிபன்கள் 2001இல் ஆட்சியை இழந்தபின் முடிதிருத்தும் நிலையங்கள் ஆப்கனில் பிரபலமாகின. சிகை திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச் சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் கலைஞர்களுக்கு தாலிபன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் தாலிபன் தெரிவித்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தாலிபன் அரசின் மத காவல்துறை தெரிவித்துள்ளது. இதே மாதிரியான உத்தரவுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தலைநகர் கா…
-
- 0 replies
- 318 views
-
-
ஜேர்மனியில் ஆட்சியை கைப்பற்றும் மத்திய - இடதுசாரி ஜனநாயக கட்சி ஜேர்மனி தேர்தலின் முதன்மை பெறுபேறுகளின்படி அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மேர்கலின் கட்சியை மத்திய-இடதுசாரி ஜனநாயக கட்சி தோற்கடித்துள்ளது. ஜேர்மனியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கிறது. அங்கு மத்திய இடதுசாரி கொள்கை கொண்ட சோஷியல் ஜனநாயக கட்சி வெற்றிபெற்றுள்ளது. மத்திய இடதுசாரி கொள்கை கொண்ட சோஷியல் ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் நிதி அமைச்சர் ஒல்ஃப் ஸ்கால்ஸ் போட்டியிட்டார். ஜேர்மனி பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை மத்திய வலதுசாரி கொள்கை கொண்ட கட்சியான சிடியூ சிஎஸ்யு கட்சியின் அரசியல் தலைவர் ஏஞ்சலா மேர்கல் போட்டியிடவில்லை. நாட்டின் தலைவராக அதாவது சான்ஸ…
-
- 1 reply
- 419 views
-
-
கொவிட்-19 தொற்றால் மனிதர்களது ஆயுட்காலம் பாரிய அளவில் குறைந்தது - ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொவிட்-19 தொற்றுநோய் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 2020 ஆம் ஆண்டில் மனிதர்களது ஆயுட்காலத்தை மிகப்பெரிய அளவில் குறைத்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளால் பகுப்பாய்வு செய்யப்பட்ட 29 நாடுகளின் பெரும்பாலான - ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சிலி ஆகிய நாடுகளின் தரவு கடந்த ஆண்டு ஆயுட்காலம் குறைவடைந்ததை வெளிக்காட்டுகின்றது. ஆயுட்காலத்தின் மிகப்பெரிய சரிவு அமெரிக்காவில் உள்ள ஆண்களிடையே இருந்தது, 2019 ஆம் ஆண்டு நிலைகளுடன் ஒப்பிடும்போது 2020 இல் ஆயுட்கால் 2.2 ஆண்டுகளாகவும், லிதுவேனியன் ஆண்கள் ஆயுட்காலம் 1.7 ஆண்டுகளாகவும் குறை…
-
- 0 replies
- 403 views
-
-
ஆப்கான் மீதான... பொருளாதாரத் தடைகளை, உலக நாடுகள் விலக்கிக் கொள்ள வேண்டும்: சீனா! ஆப்கானிஸ்தான் மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விலக்கிக் கொள்ள வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஜி20 உச்சி மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கானின் அந்நியச் செலாவணி அந்நாட்டின் சொத்து. அது அவர்களுக்கே சேர வேண்டும். ஆப்கான் மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விலக்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகள் ஆப்கான் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டும். ஆப்கானின் வெளிநாட்டு நிதி ஆதாரங்களை முடக்கி வைத்து அந்த நாட்டுக்கு அரசியல் அழுத்தம் தரக்கூடாது. அவர்களின் நிதியை அவர்களுக்கு எதிராகப் பயன்படு…
-
- 1 reply
- 416 views
-
-
மதச் சட்டங்களை மீறுவோருக்கு... கை, கால்களை வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள்: தலிபான்கள்! ஆப்கானிஸ்தானில் மதச் சட்டங்களை மீறுவோருக்கு மரண தண்டனை, கை- கால்களை வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் மீண்டும் நிறைவேற்றப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். தலிபான் அமைப்பை நிறுவியர்களுள் ஒருவரும் தற்போதைய சிறைத் துறை பொறுப்பாளருமான முல்லா நூருதீன் துராபி இதுகுறித்து கூறுகையில், ‘எங்களது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றதைப் போலவே, மதச் சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் நிறைவேற்றப்படும். மரண தண்டனைகள், கைககளை வெட்டுதல் போன்ற தண்டனைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்ய, உறுப்புகளைத் துண்டிக்கும் தண்டனை மிகவும் அத்தி…
-
- 0 replies
- 291 views
-
-
காலம் கடந்தால்... அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்கான, வாய்ப்பு கைநழுவிவிடும்: ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை காலம் கடந்தால் அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு கைநழுவிவிடும் என்றும் ஈரானை அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறுகையில், ‘அணுசக்திப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் திரும்பாமல் இழுத்தடித்து வருவது அமெரிக்காவின் பொறுமையை சோதிப்பதாக உள்ளது. இந்த நிலை நீடித்தால், கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும். வியன்னாவில் நடைபெற்று வந்த அணுசக்திப் பேச்சுவார்த்தையில் ஈரான் மீண்டும் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்த்தோம். அதற்காக தயார் ந…
-
- 0 replies
- 247 views
-
-
சீனக் காவலில் இருந்த, இரண்டு கனேடியர்கள்... ஆயிரம் நாட்களுக்கு பிறகு விடுவிப்பு! சீனக் காவலில் இருந்த இரண்டு கனேடிய பிரஜைகள் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதிப்படுத்தியுள்ளார். சீனாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி மெங் வான்சூ அமெரிக்க வழக்கறிஞர்களுடன் ஒரு ஒப்பந்தத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை கனடாவை விட்டு வெளியேறினார். இந்தநிலையில், சீனக் காவலில் இருந்த இரண்டு கனேடிய பிரஜைகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘அவர்கள் நம்பமுடியாத கடினமான சோதனையை சந்தித்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் குடும்பங்களுக்குச் செல்கிறார்கள் என்பது எங்களுக்கு ஒர…
-
- 0 replies
- 223 views
-
-
நரேந்திர மோதியின் அமெரிக்க வருகைக்கு வெளிநாட்டு ஊடகங்கள் முன்னுரிமை கொடுக்காதது ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோதி, அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் நியூயார்கில் நடைபெற்று வரும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசியபோதும், மோதியின் அமெரிக்க பயணம், அந்நாட்டு ஊடகங்களில் பிரதான செய்திகளாக இடம்பெறவில்லை என்பதை அறிய முடிகிறது. மோதியின் அமெரிக்க பயணத்தில் ஐ.நா அவையில் அவர் சனிக்கிழமை ஆற்றிய உரைக்கு முன்னதாக வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் வெள்ளை மாளிகையில் ந…
-
- 0 replies
- 376 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் 'ஆள் கடத்தலில் ஈடுபட்டார்கள்' என்ற குற்றச்சாட்டின்பேரில் 4 பேரைக் கொன்று அவர்கள் உடல்களை சாலை சந்திப்பில் தொங்கவிட்டார்கள் தாலிபன்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் இருந்து வரும் செய்திகள் இதனைக் கூறுவதாக பிபிசி பாரசீக சேவை தெரிவிக்கிறது. முதலில் தாலிபன்களுடன் நடந்த சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் பிறகு அவர்களுடைய உடல்கள் பொது வெளியில் தொங்கவிடப்பட்டதாகவும் ஹெராட்டில் உள்ள தாலிபன் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆப்கன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாஸ்டோஃபிட், கோல்ஹா, டார்ப்-இ-மாலிக், டார்ப்-இ-இராக் ஆகிய இடங்களில் சாலை சந்திப்பில் இவர்களுடைய உடல்கள் தொங்கவிடப்பட்டிருப்பதாக கண்ணால் …
-
- 0 replies
- 384 views
-
-
மாறும் சீனா: ஷி ஜின்பிங் ஏன் மீண்டும் சோஷியலிசம் நோக்கித் திரும்புகிறார்? ஸ்டீஃபன் மெக்டொனல் பிபிசி செய்திகள், பெய்ஜிங் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பல பத்தாண்டுகளாக சீனா உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, அதிவேகமான முதலாளித்துவப் பாதையிலேயே சென்றுகொண்டிருந்தது. சட்ட விதிகளின்படி சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு. ஆனால், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை காட்டுவதன் மூலம், சிலர் மிகப் பெரிய பணக்காரர்களாக அனுமதிப்பதன் மூலம் பரந்த சமூகத்துக்கு அதன் பலன்கள் வழிந்து வந்து சேரும் என்ற கொள்கையின் மீது நம்பிக்கை கொண்டு இயங்கி வருகிறது சீன அரசாங்கம். 'சேர்மேன்' மாவோவ…
-
- 0 replies
- 336 views
- 1 follower
-
-
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின், இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிவு! பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிந்துள்ளதாக, தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் குடியேற தகுதியான ஆப்கானியர்களின் பாதுகாப்பை சிக்கலுக்கு உள்ளாக்கும் விதத்தில், இந்த கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் டசன் கணக்கிலான மக்களுக்கு தவறுதலாக ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டவர்களின் பெயர்கள் எல்லோருக்கும் தெரியும் படி அனுப்பப்பட்டிருந்தது. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் இதற்கு மன்னிப்பு கேட்டு, அவர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகக் கூறியது. இந்தநிலையில் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிவும் ஏற்பட்டுள…
-
- 1 reply
- 326 views
-
-
விகாஸ் பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடந்த பல கூட்டங்களைப் போலவே இந்த ஆண்டின் "குவாட்" அமைப்பின் உச்சி மாநாடும் மெய்நிகர் வடிவிலேயே நடந்தது. குவாட் என்பது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு அமைப்பு ஆகும். இந்த 4 நாடுகளின் தலைவர்கள் ஆன்லைன் மூலம் இணைந்தார்கள். நூறு கோடி டோஸ் கோவிட் தடுப்பூசியை ஆசிய நாடுகளுக்கு வழங்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அண்மையில் அறிவிக்கப்பட்ட ஆக்கஸ் என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய உடன்பாடு தொடர்பான தீவிரமான விவாதம் ஏற்பட்டிருக்கும் நிலையில், குவாட் குழு மீண்டும் ஒரு சந்திப்பை வாஷிங்டனில் நடத்துகிறது. …
-
- 0 replies
- 209 views
-
-
ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தினால்... ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ்- அமெரிக்கா விருப்பம்! ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதுதொடர்பாக, அமெரிக்க மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதிகள் இப்போது கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். ஜோ பைடன் மற்றும் இம்மானுவேல் மக்ரோன் நேற்று (புதன்கிழமை) இதுகுறித்து அரை மணி நேரம் தொலைபேசியில் பேசினார்கள். அவர்கள் அடுத்த மாத இறுதியில் ஐரோப்பாவில் சந்திப்பார்கள். இதன்போது, இதுகுறித்து விரிவாக பேசி சுமூகமான தீர்வு எட்டப்படுமென நம்பப்படுகின்றது. முன்னதாக அவுஸ்ரேலியாவுக்கான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உள்ளடக்கிய முத்தர…
-
- 0 replies
- 421 views
-
-
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததுடன், புதிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் உட்பட 17 இந்திய வம்சாவளிகள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த திங்கள் கிழமை வெளியான தேர்தல் முடிவுகளில் லிபரல் கட்சி வென்றிருந்தாலும் தனிப் பெரும்பான்மை பெறத் தவறியது.இந்திய வம்சாவளி அமைச்சர்கள் ஹர்ஜித் சஜ்ஜன், அனிதா ஆனந்த் மற்றும் பார்டிஷ் சாகர் ஆகியோரைப் போல 42 வயது என்டிபி தலைவர் ஜக்மீத் சிங்கம் பர்னாபி தெற்கில் நின்று 40% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 2017-ம் ஆண்டு கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொண்ட அவர் முதல் வெள்ளையர் அல்லாத கட்சித் தலைவராக சாதனை படைத்தார். திங்கள் க…
-
- 0 replies
- 471 views
-
-
குடியேற்றும் அகதிகளின் எண்ணிக்கையை... இரட்டிப்பாக்குவதற்கு, அமெரிக்கா தீர்மானம் அமெரிக்காவின் அடுத்த நிதியாண்டில் மீள் குடியேற்றும் அகதிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் அகதிகளை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கான திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், உலகளவில் இடம்பெயர்வு, மனிதாபிமான நெருக்கடிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் குறித்த திட்டம் மீள செயற்படுத்தப்படவுள்ளதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும் அடுத்த நிதியாண்டில் ஏதிலிகளின் எண்ணிக்கையை…
-
- 1 reply
- 493 views
-
-
மெல்போர்ன் போராட்டம்: மூன்றாவது நாளாக தொடரும் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கட்டாய தடுப்பூசி போடுவதற்கு எதிராக விக்டோரியா மாநிலத்தில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடந்து முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் நோக்கம் சண்டைபோடுவது மட்டுமே என மாநிலத்தின் முதல்வரான டானியல் அண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை முதல் இடம்பெறும் வன்முறை போராட்டங்களுக்குப் பின்னர் கட்டுமான தளங்களை அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலம் மூடியுள்ளது. https://athavannews.com/2021/1240625
-
- 0 replies
- 391 views
-