உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26623 topics in this forum
-
77 ஆண்டுகளுக்கு முன்னரான நோர்மண்டித் தரையிறங்கல் தினமான D-Day 38 Views 77 ஆண்டுகளுக்கு முன்னர் 06.06.1944 இல் பிரான்சின் நோர்மண்டிக் கடற்கரை நகரில் கடல்வழியாக நேசப் படைகள் இங்கிலாந்துப் படைகளின் தரையிறங்கி 2வது உலகப்போரில் கிட்லரின் மத்திய படைகளுக்கு எதிரான தாக்குதலை தொடங்கின. இப்போரில் உயிர்த்தியாகம் செய்த 27000 நேசப்படையினரை நினைவு கூறும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை டீ-டே (D- Day) நாளாகத் தங்கள் மாவீர்களுக்கு 11 மணி 11 நிமிடத்திற்கு எழுந்து நின்று அமைதி காத்து வீரவணக்கம் செய்வர். இம்முறை கோவிட் தொற்றுக்கு மத்தியிலும் நேசநாடுகளின் இராணுவ மரியாதை நோர்மண்டியில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் இட…
-
- 1 reply
- 621 views
-
-
புர்க்கினா பாசோ கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்வு மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்க்கினா பாசோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் மீது ஒரே இரவில் துப்பாக்கி ஏந்தியவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளது. நைஜருடனான கிழக்கு எல்லைக்கு அருகிலுள்ள யாகா மாகாணத்தில் உள்ள சோல்ஹான் கிராமத்திலேயே வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் எரித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் ஜிஹாதி தாக்குதல்கள் வெடித்ததில் இருந்து பதிவான மோசமான தாக்குதல் இதுவாகும். இந் நிலையில் இத் …
-
- 0 replies
- 261 views
-
-
சீன பல்கலைக்கழக வளாகத்தைத் திறக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹங்கேரியில் போராட்டம் ஹங்கேரிய தலைநகரில் ஒரு சீன பல்கலைக்கழக வளாகத்தைத் திறக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த திட்டம் நாட்டின் உயர்கல்வியைக் குறைத்து சீனாவின் கம்யூனிஸ்ட் அதிகாரிகளின் செல்வாக்கை அதிகரிக்கும் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரதமர் விக்டர் ஆர்பனின் வலதுசாரி அரசாங்கம் பெய்ஜிங்குடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று சனிக்கிழமை, புடாபெஸ்டில் சீனாவின் ஃபுடான் பல்கலைக்கழக வளாகத்தை கட்டும் திட்டத்தை எதிர்த்து பாராளுமன்றம் வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புடாபெஸ்டில்…
-
- 0 replies
- 222 views
-
-
தடுப்பூசி செலுத்திக் கொள்ள வெளிநாட்டினருக்கு ரஷ்சியா அழைப்பு 23 Views வெளிநாட்டினர் ரஷ்யாவுக்கு வந்து தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பொருளாதாரக் கூட்டம் ஒன்றில் ரஷ்ய அதிபர் புதின் பேசும்போது, “ரஷ்யாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. வைரஸிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக அனைத்து ரஷ்யர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.கொரோனாதடுப்பூசி செலுத்திக்கொண்ட எவரும் உயிரிழக்கவில்லை. ரஷ்யாவின்கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி, 68 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளி…
-
- 0 replies
- 549 views
-
-
இளம்வயது மக்கள் தொகை கடும் சரிவு: மூன்று குழந்தைக் கொள்கையை அறிவித்தது சீனா! சீனாவில் இளம்வயது மக்கள் தொகையின் சரிவை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என சீனா அரசாங்கம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பின்னர் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகளைப் பெற அனுமதித்து சீனா தனது குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையைத் தளர்த்தியுள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், ஏறக்குறைய 40 ஆண்டுகளாக, ‘தம்பதிக்கு ஒரு குழந்தை’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இது உலகெங்கிலும் உள்ள கடுமையான …
-
- 7 replies
- 793 views
-
-
இந்தியக் கொவிட் மாறுபாடால், பிரித்தானியாவுக்கு கடும் நெருக்கடி! இந்தியாவில் முதல்முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை (பி1.617.2) கொரோனா வைரஸ் தொற்றால், பிரித்தானியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய இந்தியக் கொவிட் மாறுபாட்டினால் பிரித்தானியாவில் 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பொதுசுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், ‘டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் பிரித்தானியா முழுவதும் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் தீவிர பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸிடமிருந்து பாதுகாக்க, அனைவரும் அதிகபட்ச பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் தலைமை செயலதிகாரி ஜென்னி ஹாரீஸ் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 385 views
-
-
ட்ரம்பின்... ஃபேஸ்புக்- இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கம்! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க கேப்பிடோல் அலுவலகத்தில் நடந்த வன்முறை குறித்து அவர் பதிவுசெய்த பதிவுகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘ட்ரம்பின் செயல் ஒரு தீவிர விதிமுறை மீறல்’ என்று ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து கருத்துதெரிவித்த ட்ரம்ப், ‘எனக்கு வாக்களித்த இலட்சக்கணக்கான மக்களை இது அவமானப்படுத்தும் செயல்’ என கூறியுள்ளார். ஃபேஸ்புக்கின் புதிய விதிமுறை படி வன்முறை அல்லது அமைதியின்மையை ஏற்படுத்துவது…
-
- 0 replies
- 221 views
-
-
ஜேர்மனியில் வயது வந்த அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி பரிந்துரை ஜேர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒக்ஸ்ஃபோர்ட்- அஸ்ட்ராசெனேகா கொவிட் – 19 தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 12 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியை ஏற்றுவதில் இருந்த முன்னைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த முடிவுக்கு அந்நாட்டின் 16 பிராந்தியங்களின் சுகாதார அமைச்சர்களும், தலைமை சுகாதார அமைச்சருடன் இணங்கியுள்ளனர். இதனால், அஸ்ட்ராசெனேக…
-
- 17 replies
- 1.9k views
-
-
பேரழிவை ஏற்படுத்திய சீனா, உலகநாடுகளுக்கு 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும்: ட்ரம்ப்! கொரோனா வைரஸை உலகுக்கு ஏற்படுத்தி பேரழிவை ஏற்படுத்திய சீனா உலகநாடுகளுக்கு 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தோற்றம் எங்கே என்பதைக் கண்டறிய, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில், ‘சீன வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் இருந்தே பரவியது என ட்ரம்ப் கூறியது சரியே என தற்போது அனைத்து தரப்பினரும் குறிப்பாக எதிரி என்று சொல்லப்படுபவர்களும் கூறத்தொடங்கியுள்ளனர்.…
-
- 0 replies
- 400 views
-
-
28 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை! அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், மேலும் 28 சீன நிறுவனங்கள் மீது தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட்ட சீன நிறுவனங்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பு அல்லது ஜனநாயக மதிப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அடக்குமுறை அல்லது கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு பயன்படுத்தப்படும் சீன கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே சீன இராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாக கருதப்படும், 31 சீன பெருநிறுவனத்தின் பங்குகளை அமெரிக்க தொழிலதிபர்கள் வாங்…
-
- 0 replies
- 536 views
-
-
நெதன்யாகுவை பதவியிலிருந்து நீக்கி அரசாங்கத்தை உருவாக்க முடியும் - இஸ்ரேலிய ஜனாதிபதியிடம் லாப்பிட் உறுதி பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டுகால பிரதமர் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான உடன்பாட்டை இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் எட்டியுள்ளன. அதற்கு அமைவாக எட்டு பிரிவுகளின் கூட்டணி அமைக்கப்பட்டதாக மய்ய கட்சித் தலைவர் யெய்ர் லாப்பிட் அறிவித்துள்ளார். எனினும் கூட்டணி அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்னர் பாராளுமன்றமான கெனெசெட்டின் வாக்கெடுப்பு இடம்பெறும். இந்த உடன்பாட்டை பதவியில் உள்ள தற்போதைய ஜனாதிபதி ருவன் ரிவ்லினுக்கு அறிவித்ததாக லாப்பிட் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். "கூட்டணி அரசாங்கம் அனைத்து இஸ்ரேலிய குடிமக்கள், அரசாங்கத்து…
-
- 1 reply
- 319 views
-
-
கொரோனா வைரஸ் வகைகளில்... "டெல்டா" மட்டுமே கவலையளிக்கும் வகையில் உள்ளது – WHO இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா மட்டுமே கவலையளிக்கும் வகையில் இருப்பதாக உலக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட பி.1.617 என்ற உருமாறிய கொரோனா, தொற்று, பரவல் அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வகை கொரோனா வைரஸ் மக்களின் நலுனுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக கூறியுள்ள குறித்த நிறுவனம் மற்ற இரு வகைகளும் வீரியம் குறைந்தவை எனவும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2021/1219911
-
- 0 replies
- 248 views
-
-
ஈரானின்... மிகப் பெரிய போர்க்கப்பல் தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியது! ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றான ‘கார்க்’ போர்க்கப்பல், ஓமன் வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியுள்ளது. ஈரானின் ஜாஸ்க் துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த இந்த கப்பலில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 2:25 மணியளவில் திடீரென தீ பிடித்தது. இந்த தீயிணை கட்டுப்படுத்த 20 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், இறுதியில் தோல்வியில் முடிந்தது. கப்பல் கடலில் அப்படியே மூழ்கி கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் உயிர் காக்கும் ஆடைகளை அணிந்து கப்பலிலிருந்து கடலில் குதித்து உயிர் தப்பினர். கப்பலில் தீ பிடித்ததற்கான காரணம் என்ன என்பத…
-
- 0 replies
- 504 views
-
-
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் ‘காப்பா’, ‘டெல்டா’ - உலக சுகாதார நிறுவனம் சூட்டியது இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்களுக்கு ‘காப்பா’, ‘டெல்டா’ என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டி உள்ளது. பதிவு: ஜூன் 02, 2021 09:52 AM ஜெனீவா, கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவின் உகான் நகரத்தில் தோன்றியது. இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இந்த வைரஸ்களை அந்தந்த நாட்டின் பெயரால் அழைப்பதற்கு ஆட்சேபங்கள் எழுந்தன. இந்த நிலையில் இத்தகைய வைரஸ்களுக்கு உலக சுகாதார நிறுவனம் புதிய பெய…
-
- 3 replies
- 291 views
-
-
"எச் 10 என் 3" பறவைக் காய்ச்சலினால்... பாதிக்கப் பட்ட, முதலாவது நபர் சீனாவில் அடையாளம் சீனாவில் பறவைகளிடம் இருந்து H10N3 வைரஸ் மூலம் பறவை காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நபரின் விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜென்ஜியாங்க் நகரில் 41 வயதான ஆண் ஒருவருக்கு பறவையிடம் இருந்து இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதற்கு முன் வேறு எந்த நாட்டிலும் இது போன்ற வைரஸ் பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக தகவல் வெளியாகவில்லை இந்நிலையில் இது அதிக எண்ணிக்கையில் மனிதர்களிடம் தொற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் சீனா தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நபரிடம் பரவிய வைரஸின் மரபியல் கூறுகளை ஆராய்ந்த சீன மருத்துவர்கள் பறவை காய்ச்ல் எ…
-
- 1 reply
- 318 views
-
-
3-ம் அலை அச்சம், பயமுறுத்தும் டெல்டா வேரியன்ட்; என்ன நடக்கிறது பிரிட்டனில்? தமிழர் பகிரும் தகவல்கள் ஜெனி ஃப்ரீடா England ( Danny Lawson/PA via AP ) இந்தியாவில் உருவான கொரோனா வைரஸ் வகைதான் (டெல்டா வேரியன்ட்) தற்போது பிரிட்டனில் வேகமாகப் பரவிவருகிறது. மூன்றாம் அலையின் தாக்கம் பிரிட்டனில் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்துகொள்ள அங்கு வசிக்கும் தமிழரும் செவிலியருமான அருள் நீதிதேவன் தமிழ்குமரனிடம் பேசினோம். பிரிட்டன் தற்போது மூன்றாம் அலையின் தொடக்க நிலையில் உள்ளது. இரண்டாம் அலையைத் திருப்திகரமாக சமாளித்ததால் அங்கு பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் அ…
-
- 0 replies
- 458 views
-
-
கொரோனா வைரஸ்: சீன வுஹான் ஆய்வக கசிவு கோட்பாட்டை ஏன் இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள்? பட மூலாதாரம், GETTY IMAGES சீனாவின் வுஹான் நகரில் கோவிட் -19 முதன்முதலில் கண்டறியப்பட்டு ஒன்றரை வருடங்களுக்குப் பிறகும், ஒரு விஷயம் மர்மமாகவே உள்ளது. இந்த வைரஸ் முதலில் எங்கே, எப்படி தோன்றியது? இந்த வைரஸ் சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாக முன்னர் கூறப்பட்டது. பலரும் இதை ஒரு சதி என்றும் இதில் ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறினர். ஆனால் சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்துள்ளது என்ற இந்த சர்ச்சைக்குரிய கூற்று இப்போது மீண்டும் வலு பெற்றுள்ளது. இந்த வைரஸ் …
-
- 0 replies
- 512 views
-
-
ஆப்கான் தலைநகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு ; 10 பேர் பலி ஆப்கானிய தலைநகர் காபூபில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் குறைந்தது 10 பேரின் உயிரை காவு கொண்டதுடன், நகரத்தை இருளில் மூழ்கடித்தாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் மேற்கு காபூல் சுற்றுப்புறத்தின் தனித்தனி இடங்களில் இரண்டு குண்டுகள் வெடித்தன, அதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர் என்று அந் நாட்டு உள்துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் சையத் ஹமீத் ருஷன் உறுதிபடுத்தினார். மூன்றாவது குண்டு வெடிப்பு வடக்கு காபூலின் ஒரு மின்சார நிலையத்தை பெரிதும் சேதப்படுத்தியது என்று அரசாங்க மின்சாரம் துறையின் செய்தித் தொடர்பாளர் சங்கர் நயாசாய் தெரி…
-
- 0 replies
- 321 views
-
-
நேட்டோ படைகளின் ஆபத்தை எதிர்கொள்ள 20 இராணுவப் பிரிவுகளை ஆரம்பிக்க ரஷ்யா திட்டம்! நேட்டோவின் வளர்ந்து வரும் அச்சுறுத்தல் காரணமாக, ரஷ்யா தனது நாட்டின் மேற்கு பகுதியில் புதிதாக 20 இராணுவப் பிரிவுகளைத் தொடங்கவுள்ளது. உயர் இராணுவ அதிகாரிகளுடன் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டத்தின்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொய்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்ய எல்லைகள் அருகே அமெரிக்காவின் போர் விமானங்கள் பறப்பதும், நேட்டோவின் போர்க் கப்பல்கள் நிறுத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. நேட்டோ கூட்டணி படைகள் அடிக்கடி போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் சர்வதேச பாதுகாப்பு நடைமுறையை தகர்க்கின்றன. மேலும், பொருத்…
-
- 0 replies
- 292 views
-
-
பிரித்தானிய படைகளுடன் இணைந்து.... பணிபுரிந்த, ஆப்கானியர்களுக்கு குடியுரிமை: பிரித்தானியா அறிவிப்பு! ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 1,400 மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களது உறவினர்களும் பிரித்தானியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த விதிமுறைகளில் தளர்வுகளைக் கொண்டுவந்து மேலும் மூவாயிரம் பேர் பிரித்தானியாவில் குடியமர்த்தப்படுவார்கள் என பிரித்தானியா அறிவ…
-
- 0 replies
- 213 views
-
-
கறுப்பின அமெரிக்கர்கள் படுகொலை: வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கை விரைவில் – ஜோ பைடன் 1921 இல் நூற்றுக்கணக்கான கறுப்பின அமெரிக்கர்கள் படுகொலை செய்யப்பட்ட ஓக்லஹோமாவின் துல்சாவில் உள்ள இடத்தை முதல் அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் சென்று பார்வையிட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விஜயத்தை அடுத்து கருத்து தெரிவித்த அவர், இனவெறி வன்முறை மற்றும் வெள்ளை மேலாதிக்க முறை தற்போதும் காணப்படுவதாகவும் கூறினார். துல்சாவின் கிரீன்வுட் மாவட்டத்தின் மீதான தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள் முன்பாக பேசிய ஜனாதிபதி, “நல்லது, கெட்டது, எல்லாவற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் பெரிய நாடுகள் செய்கின்றன” என கூறினார். அதன்படி அமெரிக்க கபிடல் மீதான ஜனவரி 6 ஆம் திகதி…
-
- 0 replies
- 243 views
-
-
கொரோனாவின் தோற்றம், எங்கே என்பதைக் கண்டறிய... உளவு அமைப்புகளுக்கு 90 நாட்கள் காலக்கெடு! மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தோற்றம் எங்கே என்பதைக் கண்டறிய, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உளவு அமைப்புகளுக்கு 90 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸின் தோற்றம் தொடர்பான உறுதியான முடிவுக்கு வரத்தக்க வகையில், தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்வதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குங்கள்’ என கூறியுள்ளார்.’ கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டின் கடைசி பகுதியில் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இந்த வைரஸ் அந்த நகரத்தின் விலங்கு உணவுச்சந்தையில் இருந்து பரவியதாக கூறப்பட்டது. …
-
- 5 replies
- 794 views
-
-
Maggi ( Facebook / Maggi ) நெஸ்ட்லே தயாரிக்கும் பெரும்பாலான உணவுப் பொருள்கள் மற்றும் தின்பண்டங்களுள் 37% உணவுப் பொருள்கள் மட்டுமே ஆஸ்திரேலிய ஹெல்த் ஸ்டார் ரேட்டிங்கில் 3.5-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளதாக, அதாவது ஆரோக்கியமானவை என்ற வரையறைக்குள் அடங்குவதாகத் தெரியவந்துள்ளது. நெஸ்ட்லே நிறுவனத்தின் 60%-க்கும் மேற்பட்ட உணவுத் தயாரிப்புகள் ஆரோக்கியமற்றவை என Financial Times ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தி அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது. இதையடுத்து தங்கள் நிறுவனத்தின் உணவுப் பொருள்களில் மாற்றங்கள் கொண்டுவரவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்காக தயாரிக்கப்பட்ட பிரசென்டேஷன் ஒன்றில்தான் இந…
-
- 1 reply
- 574 views
-
-
டென்மார்க் புலனாய்வு அமைப்பின் உதவியுடன் ஐரோப்பிய தலைவர்களை வேவுபார்த்தது அமெரிக்கா- டென்மார்க் ஊடகம் டென்மார்க்கின் புலனாய்வு பிரிவினர் ஐரோப்பி ஒன்றிய தலைவர்களை வேவு பார்ப்பதற்கு அமெரிக்காவிற்கு உதவினார்கள் என டென்மார்க் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சான்சிலர் அஞ்சலா மேர்கல் உட்பட பல முக்கிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை வேவுபார்ப்பதற்காக டென்மார்க் புலனாய்வு பிரிவினரின் உதவியை அமெரிக்கா பெற்றது என டென்மார்க் ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவர் அமைப்பு ஐரோப்பாவின் தலைவர்…
-
- 0 replies
- 377 views
-
-
பதவியை இழக்கும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்றுள்ளது. 4 முறையும் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகுவின் லிக்குட் கட்சி வெற்றிபெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை. அதேபோல் வேறு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைனையடுத்து அங்கு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு காபந்து பிரதமராக இருந்து வருகிறார். இந்தநிலையில் திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை அரசை அமைக்க முடிவு செய்துள்ளன. இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் வலதுசாரி கட்சி, தீவிர வலதுசாரி கட்சி, மய்ய கட்சி, அரபு ஆதரவு கொண்ட…
-
- 0 replies
- 353 views
-