உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
சிரியாவில் பாடசாலை படிப்பை பாதியில் கைவிடும் சிறுவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிப்பு! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/b3a54ecc0915f9347c3f53fa31d161fe_XL-720x450.jpg கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, சிரியாவில் பாடசாலை படிப்பை பாதியில் கைவிடும் சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக Save the Children தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஆசியர்களிடம் நாங்கள் நடத்திய கருத்து கணிப்பை முன்னிறுத்தி, இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சிரிய உள்நாட்டுப் போர் காரணமாக பல குழந்தைகள் தங்கள் பாடசாலை படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனார். …
-
- 0 replies
- 345 views
-
-
இங்கிலாந்தின் சில பகுதிகளில், கொரோனா வைரஸின் புதிய உரு மாறுபாடு அடையாம் காணப்பட்டது! கொரோனா வைரஸின் புதிய உரு மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது இங்கிலாந்தின் சில பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது எனவும் பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். “இந்தப் புதிய மாறுபாட்டால் ஏற்படும் கோவிட் தொற்று நோய்கள், குறைந்தது 60 அளவிலான வெவ்வேறு உள்ளூர் அதிகாரப் பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.. இது குறித்து உலக சுகாதார அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இங்கிலாந்து விஞ்ஞானிகள் விரிவான ஆய்வுகளை செய்து வருகின்றனர்,” என பிரித்தானியாவின் சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக் (Health Secretary Matt Hancock) தெரிவித்துள்ளார். இதேவேளை இது மோசமா…
-
- 0 replies
- 517 views
-
-
636 அமெரிக்க ஆஸ்பத்திரிகளுக்கு ‘பைசர்’ கொரோனா தடுப்பூசிகளை அனுப்பும் பணி தொடங்கியது வாஷிங்டன், அமெரிக்காவை சேர்ந்த ‘பைசர்‘ நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த ‘பயோன்டெக்‘ நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. அமெரிக்காவில் இதன் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் துறை கடந்த 11-ந் தேதி ஒப்புதல் அளித்தது. அமெரிக்காவில், 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு இதை போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் தடுப்பூசி போடும் மையங்களாக 636 ஆஸ்பத்திரிகள் மற்றும் கிளினிக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், மிச்சிகனில் உள்ள ‘…
-
- 0 replies
- 489 views
-
-
பயங்கரவாத பட்டியலில் இருந்து, அமெரிக்கா சூடானை நீக்கியது! கார்ட்டூமில் உள்ள தூதரக தகவலின் படி, அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் பட்டியலில் இருந்து சூடானை அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஒக்டோபர் மாதம் பயங்கரவாத பட்டியலிருந்து சூடான் நீக்கப்படுமென உறுதியளித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1998ஆம் ஆண்டில் கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் நடந்த அல்-கொய்தா, பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 335 மில்லியன் டொலர்களை, சூடான் வழங்கினால் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகளின் கருப்புப் பட்டியலிருந்து சூடானை நீக்க முடியும் என டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் கூறியிர…
-
- 0 replies
- 625 views
-
-
இரான் அரசுக்கு எதிரான இளம் ஊடகவியலாளர் ஒருவர் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரான் தலைநகர் டெஹ்ரானில் நடக்க இருந்த இணையவழி வர்த்தக சம்மேளனம் ஒன்றிலிருந்து நான்கு ஐரோப்பிய நாடுகள் விலகியுள்ளன. ரூஹுல்லா ஜாம் எனும் செய்தியாளர் செய்திகள் அனுப்பும் செயலி மூலம் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருந்தார். அவர் சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டார். ஜாமின் மரணம் ஐரோப்பிய நாடுகள் மற்றும் இரான் இடையே வெளியுறவு விவகாரம் மோதலை ஏற்படுத்தியுள்ளது. ரூஹுல்லா தூக்கிலிடப்பட்ட பின்பு இந்த இணையவழி சம்மேளனத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவித்துள்ளன. இ…
-
- 0 replies
- 798 views
-
-
எஸ்வடினி பிரதமர் கொரோனாத் தொற்றினால் மரணம் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான எஸ்வடினி (Eswatini) பிரதமர் அம்ப்ரோஸ் டிலாமினி (Ambrose Dlamini), கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் தனது 52 ஆவது வயதில் காலமானார். நான்கு வாரங்களுக்கு முன்னர் கொரோனாத் தொற்றினால் ல் பாதிக்கப்பட்ட அவர், உயர் சிகிச்சைக்காக தென் ஆபிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, நாளடைவில் அவரது உடல்நிலை மோசமான நிலையில், அம்ப்ரோஸ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது. எஸ்வடினி பிரதமர் கொரோனாத் தொற்றினால் மரணம்! – Thinakkural
-
- 0 replies
- 690 views
-
-
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்தது ரஷ்யா! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ரஷ்யா சோதனை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை விடுத்துள்ள அறிக்கையில், விலாடிமிர் மோனோமாக் (Vladimir Monomakh )என்ற நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை செய்ததாகத் தெரிவித்துள்ளது. பசிபிக் கடலில் புலாவா என்று என்று பெயரிடப்பட்ட ஏவுகணைகளை சோதனை செய்ததாகவும், இவை குறிப்பிட்ட இலக்கை குறிதவறாமல் தாக்கியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் வல்லமை கொண்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் இன்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் இன்று (திங்கட்கிழமை) முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த வார இறுதிக்குள் 30 இலட்சம் தடுப்பூசிகள் அனைத்து மாகாணங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என கொரோனா தடுப்பூ…
-
- 0 replies
- 325 views
-
-
இரானின் அடுத்த அதி உயர் தலைவர் யார்? ஆயத்துல்லா அலி காமனெயிக்கு என்ன ஆனது? ராணா ரஹிம்பூர் பிபிசி பெர்ஷியா பட மூலாதாரம், EPA இரானின் அதிஉயர் தலைவரான ஆயத்துல்லா அலி காமனெயியின் உடல்நிலை குறித்து வெளிவரும் சமீபத்திய வதந்திகள், அவர் ஆட்சி செய்ய முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டாலோ இறந்துவிட்டாலோ என்ன நடக்கும் என்பது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. 81 வயதான ஆயலா அலி காமனெயி ,மத்திய கிழக்கின் மிக சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான இரானின் மிக அதிக அரசியல் அதிகாரம் கொண்டவர். அதனால் அவருக்குப் பின் அவரது பதவிக்கு யார் வருவார் என்பது இரானுக்கு மட்டுமின்றி அந்த பிராந்தியம் மற்ற…
-
- 1 reply
- 510 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் துருக்கி மீது ஒருபோதும் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை: எர்டோகன் சாடல்! ஐரோப்பிய ஒன்றியம் தனது நாட்டை நோக்கி ஒருபோதும் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். ஆனால், தம் மீது சுமத்தக்கூடிய எந்தவொரு பொருளாதாரத் தடைகளிலும் அங்காரா கவலைப்படவில்லை என்றும் கூறினார். கிழக்கு மத்தியதரைக் கடலில் எரிவாயு வளங்கள் தொடர்பாக கிரேக்கம் மற்றும் சைப்ரஸுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர துருக்கி தவறிவிட்டது என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் தெரிவித்தனர். இதன் பின்னணியில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘ஐரோப்பிய ஒன்றியம் ஒருபோதும் நேர்மையாக செயற்படவில்லை. அது …
-
- 2 replies
- 507 views
-
-
அமெரிக்கா தலைமையில் மற்றுமொரு அரபு நாடு இஸ்ரேலுடன் ஐக்கியம்! அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேலுடன் உறவகளை மேம்படுத்தும் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட மற்றொரு அரபு நாடான மொராக்கோ இன்று ஒப்புக் கொண்டுள்ளது. இந்நலையில், கடந்த நான்கு மாதங்களில் இஸ்ரேலுடன் விரோதப் போக்கை விலக்கிக் கொண்ட நான்காவது அரபு நாடாக மொராக்கோ வரலாற்றில் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர், ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் அமெரிக்கா தலைமையில் நட்புறவை ஏற்படுத்தியிருந்தன. இதேவேளை, மேற்கு சஹாரா பகுதி குறித்து மொராக்கோவுடன் பல தசாப்தங்களாக பிராந்திய சர்ச்சை நிலவி வருகின்றது. இந்நிலையில், மொராக்கோவுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க ஜனாதிபதி …
-
- 0 replies
- 455 views
-
-
கனடாவிற்கு பைசர் தடுப்பு மருந்து விரைவில் வந்து சேரும் - ஜஸ்டின் ட்ரூடோ தகவல் அட்டோவா, கனடாவில் இதுவரை 4,35,330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை 12,983 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் 2-வது அலையை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை கனடா மக்களுக்கு செலுத்த கனடா அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இங்கிலாந்து, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கனடாவிற்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து விரைவில் வந்து சேரும் என்று அ…
-
- 0 replies
- 452 views
-
-
அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான உயிரிழப்பு பதிவானது! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/07/82954_USA200626USA_HEalthCoronavirusAP_1593945829327-720x450.jpg அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான அதிகப்பட்ச உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 25ஆயிரத்து 441பேர் பாதிக்கப்பட்டதோடு, மூவாயிரத்து 243பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்…
-
- 2 replies
- 833 views
-
-
பிரான்ஸ் நாட்டில் அடுத்தடுத்து நடந்த தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, தீவிர இஸ்லாமியவாத குழுக்களை எதிர்கொள்ளும் வகையில் கொண்டுவரப்படும் மசோதாவுக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் மதச்சார்பின்மை மதிப்பீடுகளை காப்பாற்றவும், வெறுப்புரைகளை கட்டுப்படுத்தவும், வீட்டுமுறைப் பள்ளிகள் மீது கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் அதிபர் இமானுவேல் மக்ரோங் நீண்டகாலமாக வைத்திருந்த திட்டங்களில் ஒன்று இது. இந்த சட்டத்தின் மூலம் பிரான்ஸ் அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைப்பதாக, பிரான்ஸிலும் வெளிநாட்டில் இருந்தும், விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், இதனை 'பாதுகாக்கும் சட்டம்' என்று கூறும் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், இது தீவிர முஸ்லிம் குழுக்களி…
-
- 0 replies
- 582 views
-
-
டிக்ரே விவகாரம்: சர்வதேச விசாரணையை மறுக்கும் எத்தியோப்பியா! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/09tigray-refugees-articleLarge-720x450.jpg எத்தியோப்பியாவில் மத்திய அரசாங்கத்துக்கும் அந்த நாட்டின் டிக்ரே மாகாணத்துக்கும் இடையிலான மோதல் குறித்த சர்வதேச விசாரணையை அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டு அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எத்தியோப்பியா மூத்த அரச அதிகாரி ரெட்வான் ஹூசைன் கூறுகையில், ‘டிக்ரே விவகாரம் குறித்து எத்தியோப்பிய அரசாங்கத்தால் விசாரணை நடத்த முடியாத சூழலில்தான் சர்வதேச விசாரணை தேவை. ஆனால், எங்களது அரசாங்கத்தால் விசாரணை நடத்த முடியாது என முடிவுக்கு வருவது அரசாங்கத்த…
-
- 0 replies
- 327 views
-
-
'பிரெக்ஸிட்' பேச்சுவார்த்தையை ஞாயிறு வரை நீட்டிக்க ஒப்புதல் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் பிரெக்ஸிட் வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். பிரஸ்ஸல்ஸில் பல மணிநேரம் நீடித்த கலந்துரையாடல்களுக்குப் பிறகு, இரு தரப்பினரும் புதன்கிழமை மாலை தாங்கள் முக்கிய விடயங்களில் வெகு தொலைவில் இருந்ததாகவும், பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்த முடிவு இந்த வார இறுதிக்குள் எடுக்கப்படும் என்றும் கூறினார். ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் டிசம்பர் 31 ஆம் திகதி பிரெக்ஸிட் ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்னர் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பட முயற்சித்து வருகின்றன. இதற…
-
- 0 replies
- 433 views
-
-
கொரோனா தடுப்பூசி பெறுபவர்கள் 56 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது! by : Benitlas http://athavannews.com/wp-content/uploads/2020/12/uk-3-720x450.jpg கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பும், தடுப்பூசி போட்ட 42 நாட்கள் வரையிலும் மதுபானம் அருந்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பொதுசுகாதார கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் தலைவரான அனா போபோவா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்’கை மக்களுக்கு இந்த வாரம் செலுத்த ரஷ்ய அரசாங்கம் தயாராகியுள்ளது. முதல்கட்டமாக, மருத்துவ ஊழியர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …
-
- 4 replies
- 598 views
-
-
அமெரிக்காவில் அதிகரித்த மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள்... காரணம் என்ன தெரியுமா? #FauciEffect சு.கவிதா Coronavirus treatment in the emergency room, Los Angeles ( AP/ Jae C. Hong ) அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 50% அதிகரித்திருப்பதாக அந்தப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 18% கூடுதலாக வந்திருப்பதாகவும், இந்த மாற்றத்துக்கு `ஃபவுச்சி விளைவே (Fauci effect)' காரணம் என்று தெரியவந்துள்ளதாகவும் அந்த நாட்டின் தேசியப் பொது வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. …
-
- 0 replies
- 624 views
-
-
அவுஸ்ரேலிய காட்டுத்தீயில் 60,000 கோலா கரடிகள் உயிரிழப்பு! அவுஸ்ரேலியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஏற்பட்ட காட்டுத் தீயில் 60,000 கோலா கரடிகள் உயிரிழந்துள்ளதாக உலகளாவிய நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலகளாவிய நிதி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அவுஸ்ரேலியாவின் கிழக்குப் பகுதியில் காடுகள் அடர்ந்த 10 மில்லியன் ஹெக்டேர் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீ பரவியது. இதில் 2,000 வீடுகள் எரிந்தன. 28 பேர் இறந்தனர். இந்த காட்டுத் தீயில் அரிய வகை விலங்குகள் உட்பட லட்சக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழந்தன. தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் காட்டுத் தீ பற்றி எரிந்தது. இதில் 3 பில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்தன. கோலா கரடி…
-
- 0 replies
- 374 views
-
-
கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கு அமெரிக்கா தடையாகவுள்ளது – ஈரான் குற்றச்சாட்டு அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கான தங்களின் முயற்சிக்கு பெரும் தடையாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ஈரான் மத்திய வங்கியின் ஆளுநர் அப்தோல்நேசர் ஹேமதி கூறுகையில், ‘உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் கொரோனா தடுப்பூசியை பெறும் எங்கள் முயற்சிகளை அமெரிக்கா தடுக்கிறது. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக எழும் பணப்பரிமாற்ற பிரச்சினைகளால் தடுப்பூசி வாங்கும் எங்கள் முயற்சிகள் தடைப்பட்டுள்ளன’ என தெரிவித்தார். மேலும் அமெரிக்காவின் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக ஈரானுக்கு மனிதாபிமான கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் மறுத்து விட்டதா…
-
- 0 replies
- 365 views
-
-
உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தாக கண்டறியப்பட்ட ஃபைசர் தடுப்பூசி, அடுத்த வாரம் 91 வயதை எட்டவிருக்கும் பிரிட்டன் மூதாட்டி மார்கரெட் கீனானுக்கு போடப்பட்டுள்ளது. இது தனக்கு முன்கூட்டியே கிடைத்த பிறந்த நாள் பரிசு போல உள்ளது என்று அவர் தெரிவித்தார். பிரிட்டன் உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியளவில் அவருக்கு வைரஸ் தடுப்பூசி போடப்பட்டது. "இந்த தடுப்பூசியை எல்லோரும் போட்டுக் கொள்ள வேண்டும். 90 வயதி் என்னால் இதை போட்டுக் கொள்ள முடியும் என்றால் இது உங்களாலும் முடியும்," என்று கீனான் தெரிவித்தார். பட மூலாதாரம்,PA MEDIA இவரைத…
-
- 0 replies
- 401 views
-
-
ஈரானின் அணு விஞ்ஞானி செயற்கைக் கோளால் இயக்கப்படும் துப்பாக்கியாலேயே கொல்லப்பட்டார்: ஈரான்! ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானி மோசென் ஃபக்ரிஸாதே, செயற்கைக் கோளால் இயக்கப்படும் துப்பாக்கியால் சுடப்பட்டே கொலைசெய்யப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. ரகசிய அணு ஆயுதத் திட்டத்தின் சூத்திரதாரி என்று மேற்கு மற்றும் இஸ்ரேலிய அரசாங்கத்தால் நீண்டகாலமாக சந்தேகிக்கப்படும் ஃபக்ரிசாதே, கடந்த மாதம் 27ஆம் திகதி தெஹ்ரான் அருகே ஒரு அருகிலுள்ள அப்சார்ட் நகரில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தநிலையில் இந்த தாக்குதலை, ஈரானின் மதகுரு மற்றும் இராணுவ ஆட்சியாளர்கள், இஸ்லாமிய குடியரசின் நீண்டகால எதிரியான இஸ்ரேல் நடத்தியிருக்கலாம் என குற்றஞ்சாட்டுகின்ற போதிலும், இதற்க…
-
- 2 replies
- 531 views
-
-
ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போப் ஆண்டவர்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/12/cq5dam.thumbnail.cropped.750.422-720x450.jpeg போப் ஆண்டவர் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போப்பின் முதல் அமையவுள்ள இந்த பயணம், வத்திக்கான் தனது முன்னோர்களைத் தவிர்த்த ஆபத்தான பயணம் என விபரிக்கப்பட்டுள்ளது. வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி இதுகுறித்து கூறுகையில், ’84 வயதாகும் போப்பாண்டவர், தலைநகரான பாக்தாத் மற்றும் உர், ஆபிரகாமுடன் இணைக்கப்பட்ட ஒரு நகரத்தையும், நினிவே சமவெளிகளில் எர்பில், மொசூல் மற்றும் காராகோஷ் ஆகிய …
-
- 1 reply
- 700 views
-
-
தீவு சிறையில் ஆயிரம் நாட்கள்: அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதி குடும்பம் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டம் 32 Views அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்து பின்னர் விசா காலாவதியாகிய நிலையில் தடுப்பிற்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் ஆயிரம் நாட்களை தடுப்பு முகாமில் கழித்திருக்கிறது. கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன. …
-
- 0 replies
- 489 views
-
-
பாதுகாப்புச் செயலாளராக கருப்பினத்தவரை தேர்வுசெய்தார் பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தனது பாதுகாப்புச் செயலாளராக ஓய்வுபெற்ற (ஜெனரல்) லாயிட் ஆஸ்டினை தேர்வு செய்துள்ளார் நம்கத் தகுந்த வட்டாரங்கள் திங்கட்கிழமை தெரிவித்துள்ளன. லாயிட் ஆஸ்டின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் மத்திய கிழக்கில் அமெரிக்க படைகளை பார்வையிட்டவர் ஆவார். இதன் மூலம் அமெரிக்காவின் முதல் கருப்பின பாதுகாப்புச் செயலாளராக லாயிட் ஆஸ்டின் தேர்ந்தெடுக்கப்பட்டு, முன்னாள் பாதுகாப்புத் துறை அதிகாரியான மைக்கேல் ஃப்ளோர்னாயை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த பதவியில் லாயிட் ஆஸ்டின் அமர்ந்தால் பென்டகன் தலைவராக பொறுப்பு ஏற்கும் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க…
-
- 0 replies
- 549 views
-