Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 3 ட்ரில்லயன் டொலர்கள் கடன் வாங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவிப்பு! இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அமெரிக்கா 3 ட்ரில்லயன் டொலர்கள் கடன் வாங்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்ய, அமெரிக்க அரசு அறிவித்துள்ள நிதியுதவிகள் வரவு செலவு திட்டத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில், வாங்கப்பட்ட ஒரே காலாண்டில் அமெரிக்க அரசு வாங்கிய கடனைவிட இது ஐந்து மடங்கு அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்துடன் அமெரிக்க அரசின் மொத்தக் கடன் தொகை, சுமார் 25 லட்சம் கோடி டொலர்களாக உள்ளது. அமெர…

  2. கொவிட்-19 சிறப்பு குழுவை கலைக்க உள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ள அமெரிக்கா, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக அமைத்திருந்த சிறப்பு குழுவை கலைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கவனம், பொருளாதாரத்தைத் மீள கட்டமைப்பதை நோக்கி நகர்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முகமூடிகள் உட்பட தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை உருவாக்கும் தொழிற்சாலைக்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் மேற்கொண்டிந்தபோதே, ட்ரம்ப் இந்த முடிவினை அறிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘துணை ஜனாதிபதி மற்றும் சிறப்பு நடவடிக்கை குழுவினர் மிகவும் சிறப்பாக செயற்பட்டனர். ஆனால் தற்போது நாம் வேறு …

  3. சோமாலியாவில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து! சோமாலியாவில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்கள் மற்றும் மருந்துகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக சோமாலியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ‘ஆப்ரிக்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான இ.எம்.பி- 120 (EMB-120) என்ற விமானமே நேற்று (திங்கட்கிழமை) மாலை இவ்வாறு விபத்துக்குள்ளானது. தலைநகர் மொகடிஷூவில் இருந்து பார்தேல் நகருக்குச் சென்ற குறித்த விமானம், பார்தேல் விமான நிலையத்துக்கு சற்று தொலைவில் விபத்துக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விமானி, துணை விமானி, விமான பொறியாளர் மற்றும் ஒரு பயிற்சி விமானி, அதே போல் விமான நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு பே…

  4. கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்: ஜேர்மனி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என ஜேர்மனி தெரிவித்துள்ளது. மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் முழு வீச்சுடன் களமிறங்கியுள்ளன. இந்தநிலையில் சோதனை நடவடிக்கையில் ஐரோப்பிய நாடான ஜேர்மனியும் தனது பெயரை இணைத்துக் கொண்டுள்ளது. இதற்கமைய, ஜேர்மனிய மருந்து நிறுவனமான பயோ என்டெக் தன்னார்வலர்களுக்கு புதிய கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என சுகாதார அமைச்சர் ஜென…

  5. மருந்துகள், உபகரணங்களைப் பதுக்கவே சீனா அபாயத்தை மறைத்தது – அமெரிக்கா கொறோனாவைரஸ் வெகு தீவிரமாகப் பரவுகிறது என்பது தெரிந்திருந்தும் போதுமான மருந்துகள், உபகரணங்கள் பதுக்கப்படும்வரை அவ்வபாயத்தை வெளிநாடுகளுக்கு மறைத்துவிட்டது என அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதமே சீனாவுக்கு இந் நோயின் கொடூரம் பற்றித் தெரிந்திருந்தது எனவும், போதுமான மருந்துகளும், பாதுகாப்பு உபகரணங்களும் சேமிக்கப்படும்வரை அவ் விடயத்தை வெளியில் தெரிவிக்கவில்லை எனவும் அமெரிக்க உளவு நிறுவனங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவின் உள்ளகப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட நான்கு பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொருட்களுக்கு அதிக தேவைகள் இருக்கிறது எனத் தெரியவரும்போது உலகின் …

  6. நியூயோர்க்கின், புரூக்ளினிலுள்ள மலர்ச்சாலைக்கு வெளியே நான்கு லொறிகளில் 60 சடலங்கள் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறிகளிலிருந்து ஒரு வித திரவம் வடிவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகளினால் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவ்வாறு சடலங்கள் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புரூக்ளினிலுள்ள ஆண்ட்ரூ கிளெக்லி மலர்ச்சாலைக்கு வெளியிலேயே இவ்வாறு குளிரூட்டப்பட்ட லொறிகளில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமுலாக்க வட்டாரம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட சட்ட அமுலாக்க அதிகாரிகள், குறித்த உடல்கள் ஒரு வாரத்திற்கும்…

  7. தென்னாபிரிக்காவில் உணவுப் பொதிக்காக 4 கிலோ மீட்டர் தூரம் நின்ற மக்கள்.! உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 34 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ் வைரஸால் இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு பல்வேறு நாடுகளில் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் தங்கள் தொழில்களையும், வருமானத்தையும் இழந்துள்ளனர். இதனால் வறுமையின் காரணமாக போதிய உணவு கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் சூழலும் உருவாகியுள்ளது. தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸின் பரவல் தீவிரமடைந்து வருவதால் March மாதம் 27ம் திகதி முதல் ஊரடங்…

  8. ஜேர்மனி மண்ணில் அமெரிக்க அணு ஆயுதங்கள் இருப்பது ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது! ஜேர்மனி மண்ணில் அமெரிக்க அணு ஆயுதங்கள் இருப்பது ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்பதால் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) நாடாளுமன்றத் தலைவர் ரோல்ஃப் மெட்ஸெனிச் (Rolf Mützenich) கோரிக்கை விடுத்துள்ளார். அத்தகைய நடவடிக்கை நேட்டோவில் ஜேர்மனியின் உறுப்பினர் பதவியை கேள்விக்குள்ளாக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்க அணுசக்தி மூலோபாயத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிப்பிடுவதன் மூலம் அவர் தனது கோரிக்கையை நியாயப்படுத்தினார். ட்ரம்பின் நிர்வாகத்தினர், அணு ஆயுதங்களை முற்றிலும் தடுப்பதாக அல்லாமல் ப…

  9. உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத 33 நாடுகள். சல் மூலம் பகிரவும்அச்சிடுக உலகளவில் 33 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் , 33 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா , பாதிப்பு கூட பதிவாகவில்லை. ஐ.நா அங்கீகரித்துள்ள 247 நாடுகளில் 214 நாடுகளில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது . அதில் 190 நாடுகள் உள்ளுாரில் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ளன . 214 நாடுகளில் குறைந்தபட்சம் 166 நாடுகள் கொரோனாவால் உயிரிழப்பை சந்தித்துள்ளன . வடகொரியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு குறித்த தகவல் இல்லை.கொரோனா தொடர்பான தகவல்களை வடகொரியா ரகசியமாக வைத்திருக்கலாமென கருதப்படுகிறது. இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத ந…

    • 3 replies
    • 751 views
  10. கிம் ஜாங் உன் வதந்தி: வட கொரிய வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? மைக்கேல் மேடன் வடகொரிய வல்லுநர் Reuters கடந்த வாரம் சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்தான் இடம் பெற்றிருந்தார். கிம்மின் உடல்நிலை மோசமாக இருக்கிறது, கிம் இறந்துவிட்டார் என்ற பல வதந்திகள் பரவின. அதையெல்லாம் பொய்யாக்கி மிகுந்த உற்சாகத்தோடு உரத் தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார் கிம் ஜாங் உன். மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. இப்படி இவர் திடீரென காணாமல் போய் திரும்பி வந்தது இது முதல் முறையல்ல. இப்படி பல முறை நடந்திருக்கிறது. கடந்த கால நிகழ்வுகளில் இருந்து நாம் என்ன…

    • 3 replies
    • 1.4k views
  11. பீஜிங், ( சின்ஹுவா ) ; சிறுமைத்தனமான வழக்குகளை தாக்கல் செய்து சீனாவைப் பழிவாங்கவும் களங்கப்படுத்தவும் முயற்சிக்கும் சில அமெரிக்க அரசியல்வாதிகள் கொவிட் -- 19 தொற்றுநோயை அரசியல்மயப்படுத்துகிறார்கள் என்று சீனாவின் ' மக்கள் தினசரி' ஞாயிறன்று அரசியல் வர்ணனையொன்றில் சாடியிருக்கிறது. அமெரிக்க அரசியல்வாதிகளின் அத்தகைய செயல்கள் சர்வதேச சட்டங்களையும் விதிகளையும் சவாலுக்குட்படுத்துவதாக ஷொங் ஷெங் என்ற பத்திரிகையாளர் அந்த வர்ணனையில் குறிப்பிட்டிருக்கிறார். " வைரஸ் தொற்றுநோய் சர்வதேச அக்கறைக்குரிய ஒரு பொதுச்சுகாதார அவசரகால நிலையாகும்.அது சட்டரீதியாகவும் கூட தவிர்க்கமுடியாத ஒரு வலுக்கட்டாய நிலையாகும்.அமெரிக்காவில் கொவிட் --19 பெருமளவில் பரவியதற்கு அந்த தொற்றுநோயை தோற்கடி…

    • 0 replies
    • 498 views
  12. 'எனது மரணத்தை அறிவிக்கும் திட்டத்தையும் வைத்திர்கள் தயார் செய்திருந்தனர்': இறுதித் தருணங்கள் குறித்து போரிஸ் ஜோன்சன் தெரிவிப்பு கொரோனா பாதிக்கப்பட்டு தான் சிகிச்சையில் இருந்தபோது என் இறப்பை அறிவிக்க வைத்தியர்கள் திட்டத்தை தயார் செய்து வைத்திருந்தனர் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், கடந்த மார்ச் மாதம், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின்னர், மீண்டு வந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நாட்கள் குறித்து ‛தி சன்' ஊடகத்திற்கு போரிஸ் ஜோன்சன் அளித்துள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் போரிஸ் ஜோன்சன் மேலும் குறிப்பிடுகையில், “நான் கொரோனாவால் பா…

  13. கிம் ஜொங்-உன்னுடன் பேசவுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு! by : Litharsan வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் உள்ளிட்ட தலைவர்களுடன் நாளையதினம் (ஞாயிற்றுக்கிழமை) பேசவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வொஷிங்ரனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், நாளை கேம்ப் டேவிட் ஓய்வு இல்லத்துக்குச் செல்லவிருப்பதாகவும், அப்போது கிம் ஜொங் உன் உட்பட உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உடல்நலக்குறைவால் பாதிப்பட்டதாகவும், சில ஊடகங்களில் மரணித்துவிட்டதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கிம் ஜொங் உன் நலமுடன் இருப…

  14. கொரோனவுக்கு சிகிச்சையளிக்க சோதனை செய்த மருந்தை உபயோகிக்க அமெரிக்கா அனுமதி கொரோனாவை குணப்படுத்த மருத்துவ சோதனை செய்யப்பட்ட ரெம்டிசிவிர் (Remdesivir) என்ற புதிய மருந்தை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு, வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டிசிவர் பலனளிப்பதால், அவற்றை அவசர சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நவம்பர் மாதம் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், கடந்த 5 மாதங்களில் உலகம் முழுக்க பரவி இதுவரை 34 இலட்சம் பேரை பாதித்துள்ளது. அதில் 10 லட்சத்து 81 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 2 இலட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர…

    • 1 reply
    • 953 views
  15. 1, 500 வகையான துப்பாக்கிகளுக்கு அதிரடித் தடை விதித்தது கனடா கனடாவில் தாக்குதல் பாணி துப்பாக்கிப் பாவனைக்கு அந் நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தடை விதித்துள்ளார். கனடாவில் தாக்குதல் பாணி துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று முன்னதாகவே கூறப்பட்டிருந்தது. இந் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அங்கு இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களையடுத்தே இந்த தடை உத்தரவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1,500 தாக்குதல் பாணி துப்பாக்கிகளை விற்பனை செய்வதற்கும், கொண்டு செல்வதற்கும், இறக்குமதி செய்வதற்கும் மற்றும் வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு ஈடுபட்டால் அது சட்டவிரோதமாகும் என அந்நாடு தெரிவித்துள்ளத…

    • 2 replies
    • 597 views
  16. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் சத்திர சிகிச்சையொன்றின் பின்னர் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார் என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. சத்திரசிகிச்சையின் பின்னர் கிம் ஜொங் அன் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார்,அமெரிக்கா வடகொரியாவின் புலனாய்வு தகவல்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது சிஎன்என் தெரிவித்துள்ளது. ஏப்பிரல் 15 ம் திகதி இடம்பெற்ற தனது குடும்பத்தின் முக்கிய நிகழ்வொன்றில் கிம் கலந்துகொள்ளவில்லை,இதன் காரணமாக அவரது உடல்நிலை குறித்து சந்தேகம் எழுந்தது என சிஎன்என் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/80409

  17. பரிஸ் நகர மக்களிற்கு இலவசமாக 22 மில்லியன் முகக்கவசங்களை வழங்க பரிஸ் நகரசபை முடிவு! பிரான்ஸில் உள்ள பரிஸ் நகர மக்களிற்கு, மேலதிகமாக 22 மில்லியன் முகக்கவசங்களை இலவசமாக கொடுக்க பரிஸ் நகர சபை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ கூறுகையில், ‘இந்த முகக்கவசங்கள் மருத்துவர்களுக்கும், பராமரிப்பாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட உள்ளன. இது முக்கியமான பாதுகாப்பு கருவி. அவசியம் தேவையான ஒன்று. பரிஸ் மக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்’ என கூறினார். இதுவரை பரிஸ் நகர மருத்துவமனைகளுக்கு ஆறு மில்லியனுக்கும் மேலான முகக் கவசங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலதிகமாக, 22 மில்லியன் முகக்கவசங்கள் வாங்க …

  18. சீனாவினால் இன்று 184 நாடுகள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றன: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆவேசம் சீனாவின் வூஹானில் தோன்றிய கரோனா வைரஸ் அந்த நாட்டில் தொடங்கி இன்று 190 நாடுகளை ஆட்டிப்படைப்பதில் பாதிப்பு எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து 115 ஆக உள்ளது, இதில் பலியானோர் எண்ணிக்கை 2,17,970 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீனா மீது உலக நாடுகள் அனைத்திற்கும் பெரிய அளவில் கோபாவேசம் கிளம்பியுள்ளது, இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விசாரணை அளவுக்குச் சென்று விட்டார், மேலும் பல நடவடிக்கைகளை சீனா மீது எடுக்குமாறு ட்ரம்புக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்க எம்.பி.க்கள் பலர் சீனாவை நம்பியிருக்கும் உற்பத்தி துறையையும் கனிமவளங்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி …

    • 1 reply
    • 487 views
  19. ரஷ்ய பிரதமர் கரோனாவிலிருந்து விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைவதற்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார் ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் ரஷ்யாவில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமடைந்து அலுவலகப் பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் உலகளவில் 2-வது அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு…

    • 2 replies
    • 1k views
  20. பிரித்தானியாவில் கொரோனா உயிரிழப்பு 26,097 – முதன்முறையாக பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சமூகத்தில் ஏற்பட்ட இறப்புகள் உட்பட்ட புள்ளிவிவரங்கள் வெளியீடு April 29, 2020 பிரித்தானியாவில் இன்றுவரை கொரோனா வைரஸ் காரணமாக 26,097 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதன்முறையாக இன்று வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. முன்னதாக, ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை மட்டுமே அரசாங்கம் வெளியிட்டிருந்தது. முதன்முறையாக பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சமூகத்தில் ஏற்பட்ட இறப்புகள் உட்பட்ட புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று, மருத்துவமனை இறப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 21,678 ஆக இருந்த நில…

  21. பெய்ஜிங் சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் உள்ள பேரசல் தீவுகளுக்கு அருகே, அமெரிக்காவின் யு.எஸ்.எஸ்., பேர்ரி ரக போர்க்கப்பல் ஒன்று சென்றுள்ளது. இந்த பகுதியை சொந்தம் கொண்டாடும் சீனா, தன் கடற்படை கப்பல்கள் மற்றும் போர் விமானம் மூலம், அமெரிக்க கப்பலை விரட்டியடித்துள்ளது.இது குறித்து, சீன இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தென் சீன கடல் பகுதிக்குள், அமெரிக்க போர்க்கப்பல் நுழைந்தது, எங்களை ஆத்திரமடைய செய்துள்ளது. சீன இறையாண்மையை மீறும் வகையில், இந்த செயல் அமைந்துள்ளது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சிகளை கைவிட்டுவிட்டு, அமெரிக்கா, கொரோனா வைரசில் இருந்து, தங்களை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தட்டும் என்று குறிப…

  22. உலகம் முழுதும், கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், கோபத்திலும், விரக்தியிலும் உள்ள இளைஞர்களை, சமூக வலைதளங்கள் வாயிலாக தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில், தீவிரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன' என, ஐ.நா., பொது செயலர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து, ஐ.நா., பொது செயலர், நேற்று கூறியதாவது:ஐந்தில் ஒரு இளைஞனுக்கு, கல்வி, பயிற்சி, வேலைவாய்ப்பு ஆகியவை மறுக்கப்படுகின்றன. நாலில் ஒரு இளைஞர், வன்முறை மற்றும் யுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆண்டுதோறும், 1.2 கோடி சிறுமியர் தாயாகின்றனர். இது போன்ற பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள், தற்போது கொரோனா நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதன் காரணமாக வீடுகளில் முடங்கிக் கிடக்கும் அவர்கள், அதிக நேர…

    • 0 replies
    • 400 views
  23. மீண்டும் சிக்கல்: ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் அதிரித்துள்ளது! ஜேர்மனியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பிறகு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று வீதம் அதிரித்துள்ளது. ஜேர்மனியில் இந்த மாத தொடக்கத்தில் 0.7ஆக இருந்த தொற்று வீதம், தற்போது 1.0 ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதும், மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு தொற்று நோய்கள் நிறுவனத்தின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். ஜேர்மனியின் வைரஸ் மீள்தொற்று வீதம், ‘ஆர்’ வீதம் அல்லது மதிப்பு என அழைக்கப்படுகிறது. ‘ஆர்’ வீதம் என்பது சராசரியாக, வைரஸால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் மற்றொன்றுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வீதத்தை 1.0 இற்க்குக் கீழே வைத்திருப்பது கொரோ…

    • 1 reply
    • 446 views
  24. அமெரிக்காவில் கொரோனாவால் வேலை இழந்த வெளிநாட்டினர் 2 லட்சம் பேர் வெளியேறும் நிலை அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் எச்-1பி விசாவில் பணியாற்றி வருகின்றனர். எச்-1பி விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியும், அதன் பின்பு தாய்நாட்டு திரும்ப வேண்டும் என்பது அங்கு சட்டமாக உள்ளது. அமெரிக்கக் குடியுரிமை கோரும் 2.5 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேர் எ…

  25. காப்பாற்ற முடியாமல் கண்ணெதிரே மரணங்கள்: மனமுடைந்த நியூயார்க் பெண் மருத்துவர் தற்கொலை- குடும்பத்தினர் வேதனை டாக்டர் லோர்னா பிரீன். நியூயார்க் பிரெஸ்பைடீரியன் மருத்துவமனையின் கரோனா அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய டாக்டர் லோர்னா பிரீன் என்ற பெண் மருத்துவர் கண்ணெதிரே கரோனா பாதிப்பினால் காப்பாற்ற முடியாமல் நோயாளிகள் மரணமடைவதைத் தாங்க முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறன்றி அவர் தன் முடிவைத் தானே தேடிக்கொண்டார் என்ரு லோர்னா பிரீனின் தந்தை டாக்டர் திலீப் பிரீன் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார். அமெரிக்க கரோனா பலி எண்ணிக்கை 59,000த்தைக் கடந்துள்ள நிலையில் நியூயா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.