உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26655 topics in this forum
-
உலகின் கவனத்தை ஈர்க்கத்தவறிய சோமாலியாவின் நிலை 1045 by : Yuganthini உலகளாவிய ரீதியில் கொரோனா பெருந்தொற்று பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் ஆபிரிக்காவின் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் ஒற்றை மருத்துமனை மாத்திரமே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பலவிதமான தொற்றுநோய்கள் காலம் காலமாக ஏற்பட்டுக்கொண்டிருந்தாலும் மருத்துவ வசதிகள் ஆபிரிக்க நாடுகளை இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. இந்நிலை இவ்வருடம் கொரோனா வைரஸால் முழு உலகமும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் காலப்பகுதியிலும் மாற்றம் பெறவில்லை. அமெரிக்கா இத்தாலி பிரித்தானியா உள்ளிட்ட உலகின் செல்வந்த நாடுகள் போதுமான மருத்…
-
- 1 reply
- 890 views
-
-
துருக்கியை புரட்டி போடும் கொரோனா: ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! 9 by : Anojkiyan உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாகுபாடின்றி அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது. இதன்படி அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு நிகராக ஆசிய நாடுகளிலும் பல மனித அழிவுகளை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆசியாவை பொறுத்தவரை துருக்கியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 101,790பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். 5481பேர் உயிரிழந்துள்ளதோடு, 80,808பேர் குணமடைந்துள்ளனர். 1,816 பேர் கவலைக்கிடமான நிலைய…
-
- 0 replies
- 356 views
-
-
அடடே... இப்படியொரு சிகிச்சையா..? கொரோனாவை விரட்ட மாற்றி யோசித்த ட்ரம்ப்... உற்று நோக்கும் உலக மருத்துவர்கள்.? கிருமி நாசினியை பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் செலுத்தி சுத்தம் செய்வதன் மூலம், கொரோனாவை அழிக்க முடியுமா என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என அமரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய யுக்தியை கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சூரிய ஒளியின் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவை வைரஸ் பரவலை குறைப்பதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்க கூடுமென்று கூறப்பட்டுள்ளது. அதிக வெப்பமும், அதிக ஈரப்பதமும் கொரோனா நோய் பரவல் சங்கிலியை பலவீனப்படுத்தும் என்…
-
- 0 replies
- 481 views
-
-
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர்! இங்கிலாந்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில், கொரோனா வைரஸ் இறப்பு நிகழ்ந்த மருத்துவமனையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், 19 சதவீதம் பேர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த கணக்கு மொத்த மக்கள் தொகையை கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து தேசிய சுகாதார இயக்குநர், ஹபீப் நக்வி கூறுகையில், இதுபோன்று கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் அதிகம்பேர் உயிரிழந்தது கவலையை அளித்துள்ளது. இது மிகவும், கடினமான சூ…
-
- 0 replies
- 272 views
-
-
கொரோனா வைரஸ் எதிரொலி: ஐந்து வாரங்களில் 26 மில்லியன் மக்கள் வேலையின்மையால் திண்டாட்டம்! கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவை கடுமையாக பாதித்துள்ள நிலையில், கடந்த ஐந்து வாரங்களில் 26 மில்லியன் மக்கள் வேலையின்மையால் அவதிப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1930ஆம் ஆண்டுகளில் பெரும் மந்தநிலைக்குப் பின்னர் மிக மோசமான பணிநீக்கங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகின்றது. குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கியதில் இருந்து ஆறு அமெரிக்க தொழிலாளர்களில் ஒருவர் வேலை இழந்துவிட்டதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபை வணிகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு உதவ கிட்டத்தட்ட 500 பில்லியன் டொலர் செலவு தொகுப்பை அனுப்பியுள்ளது. உலகையே அச்சுறுத்தி…
-
- 0 replies
- 207 views
-
-
சீனாவின் வுஹான் நகரிலிருந்து காணாமல் போன பத்திரிகையாளர் - புதிய காணொளி வெளியீடு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து செய்தி சேகரித்து வெளியிட்ட பிறகு காணாமல் போன செய்தியாளர் ஒருவர், சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் காணொளி வாயிலாக தனது இருப்பை உறுதி செய்துள்ளார். கடைசியாக கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி, லி ஸிஹுவா வெளியிட்ட காணொளியில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்படுவது பதிவாகி இருந்தது. இந்நிலையில், தற்போது புதிதாக யூடியூபில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தான் இடைப்பட்ட காலத்தில் வுஹான் நகரத்திலும், தனது சொந்த ஊரிலும் என இருமுறை “சுய தனிமைப்படுத்தலில்” இருந்ததாக தெரிவித்துள்ளார். கொரோன…
-
- 1 reply
- 879 views
-
-
அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கிய ஏந்திய ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்த கடற்படைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி இருந்தாலும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையேயான பதற்றம் தனிந்தபாடில்லை. அணு ஆயுத சோதனை தொடங்கி பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், பாரசீக வளைகுடா பகுதியின் சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், பாரசீக வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை ஈரானிய படையினர் சுற்…
-
- 2 replies
- 527 views
-
-
கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சீனா தொடர்ந்து குறைத்துக் காட்டிவருவதாக அமெரிக்க மற்றும் பிரிட்டன் பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகிறார்கள். எனினும், இது குறித்து சீனாவிடம் நேரடியாகக் கேள்வி கேட்க ஐரோப்பிய நாடுகள் தயங்குவதாக பிபிசிக்கு தகவல் கிடைத்துள்ளது. தாங்கள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் எதையும் மூடி மறைக்கவில்லை என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. ஏப்ரல் 17 அன்று, வைரஸ் பரவல் தொடங்கிய வுஹான் நகரில் நடந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையை, முதலில் தெரிவித்த அளவைவிட சுமார் 50% அளவுக்கு உயர்த்திக்காட்டியது சீன அரசு. முக்கியமான மருத்துவக் கருவிகளுக்காக பல நாடுகள் சீனாவையே சார்ந்துள்ளதாலும், தற்போதைய பரவலின்போது என…
-
- 0 replies
- 736 views
-
-
நியூயார்க்: 5 ஜி அலைக்கற்றையால் கொரோனா பரவாது என ஐ.நா. விளக்கியுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு காரணம் 5 ஜி அலைக்கற்றை என பிரிட்டனில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி பரவியதால் மக்கள் 5 ஜி கோபுரத்திற்கு தீ வைத்தனர். இந்நிலையில் ஐ.நா.,வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில், அதிவிரைவு இணையதள தொழில்நுட்பமான '5 ஜி' அலைக்கற்றையால், கொரோனா வைரஸ் பரவாது 'இது வெறும் புரளி தான்; அதற்கு எந்தத்தொழில்நுட்ப ஆதாரமும் இல்லை' என, ஐ.நா., கூறியுள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2526939
-
- 0 replies
- 295 views
-
-
கொரோனா வைரஸ் நீண்ட நாட்கள் எங்களுடனேயே இருக்கப்போகிறது;எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் நீண்ட நாட்கள் நம்முடன் இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நீண்ட காலத்திற்கு இந்த கிரகத்தில் இருக்கும். பெரும்பாலான நாடுகள் இன்னும் தொற்றுநோயைக் கையாள்வதற்கான ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்த சில நாடுகள் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் ஆபிரிக்காவிலும், அமெரிக்காவிலும் சிக்கலான போக்குகள் உள்ளன. பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், ஆபிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐ…
-
- 0 replies
- 280 views
-
-
உலகநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் நடவடிக்கைகளிற்கு தற்காலிக தடையை விதிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியேறுவதற்கான நடவடிக்கைகளிற்கு தற்காலிக தடையை விதிப்பதற்கான உத்தரவில் கைச்சாத்திடவுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். கண்ணிற்கு தென்படாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும்,அமெரிக்காவின் வேலைவாய்ப்பினை பாதுகாப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கண்ணிற்கு தெரியாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும்,அமெரிக்காவின் மிகப்பெரும் பிரஜைகளின் வேலைவாய்ப்பை காப்பாற்றுவதற்காகவும் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தற்காலிக தடையை விதிக்கும் உத்தரவில் கைச்சாத்திடவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ள…
-
- 21 replies
- 1.5k views
-
-
கொரோனா வைரஸ் மருந்தினை மனிதர்களில் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் பிரிட்டனில் இன்று ஆரம்பமாகியுள்ளன. ஒக்ஸ்போர்ட்டில் இரு தொண்டர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் 800 பேரிற்கு பரிசோதனை மருந்துகளை வழங்கவுள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு வகையான மருந்துகளை இரு குழுக்களை சேர்ந்தவர்களிற்கு வழங்கவுள்ளதாகவும் ஒரு குழுவினரிற்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கவுள்ளதாகவும் மற்றைய குழுவினரிற்கு மூளைக்காய்ச்சல் வருவதை தடுக்கும் ஆனால் கொரோனா வைரசினை தடுக்காத மருந்தொன்றினை வழங்கவுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தொண்டர்களிற்கு எந்த மருந்து வழங்கப்படுகின்றது என்பது தெரியாத விதத்திலேயே இந்த பரிசோதனைகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன…
-
- 0 replies
- 303 views
-
-
ஜெர்மன் பயோடெக் நிறுவனமான பயோ என் டெக் (BioNTech) கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் சோதித்துப் பார்க்க ஜெர்மன் அரசு அனுமதி அளித்துள்ளது. BNT 162 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை பயோ என் டெக்கும், உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான ஃபைசரும் (Pfizer) இணைந்து உருவாக்கியுள்ளன. வெக்டர் மற்றும் ஆர்என்ஏ அடிப்படையில் தலா 2 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 18க்கும் 55 வயதுக்கும் இடையிலான நல்ல திடகாத்திரமான 200 பேரிடம் முதலில் இவை சோதித்துப் பார்க்கப்படும். அதைத் தொடர்ந்து தொற்று வாய்ப்பு அதிகம் உள்ள நபர்களிடம் இரண்டாம் கட்டமாக சோதனை நடக்கும் என ஜெர்மன் மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகளை கொண்டு அமெரிக்காவிலும் கிளின…
-
- 5 replies
- 667 views
-
-
கொரோனா வைரஸ் வழக்கு விவகாரம்: அமெரிக்க நீதிமன்ற அதிகார எல்லைக்குள் சீன அரசு வராது! by : Anojkiyan கொரோனா வைரஸ் நோய் பற்றிய உண்மைகளை மறைத்ததாக, சீனா மீது அமெரிக்கா வழக்கு தொடுத்துள்ள நிலையில், இந்த தொற்று நோய் விவகாரத்தில், அமெரிக்க நீதிமன்ற அதிகார எல்லைக்குள் சீன அரசு வராது என சீன செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய் பற்றிய உண்மைத் தகவல்களை வெளியிடாமல் மறைத்தும், எச்சரிக்கை விடுத்தவர்களை கைது செய்தும், தொற்றுநோய் என்பதை முதலில் மறுத்தும், உலகளவில் ஈடு செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகளை சீனா ஏற்படுத்தி உள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சுமத்தியுள்ளது. அத்துடன் அமெரிக்க நீதிமன்றத்தில் மிசவுரி ம…
-
- 4 replies
- 788 views
-
-
கொரோனா வைரசினை பயன்படுத்தி அடக்குமுறை நடவடிக்கைகளை உலக நாடுகள் முன்னெடுக்கின்றன- ஐநா செயலாளர் நாயகம் கொரோனா வைரசினை பயன்படுத்தி சில உலகநாடுகள் அடக்குமுறைகளில் ஈடுபடலாம் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசிஸ் ,கொரோனா வைரசுடன் தொடர்புபடாத காரணங்களிற்காக ஒடுக்குமுறை நடைமுறைகளை சில நாடுகள் பின்பற்றக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நெருக்கடி மனித உரிமை நெருக்கடியாக மாறும் ஆபத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். உலகினை தற்போது ஆட்கொண்டுள்ள சுகாதார சமூக பொருளாதார நெருக்கடிகளிற்கான தீர்வுகளை முன்வைக்கும்போது மனித உரிமைகள் எவ்வாறு அவற்றிற்கு வழிகாட்டவேண்டும் என்பது குறித்த ஐநாவின் அறிக்கை…
-
- 2 replies
- 414 views
-
-
ரஷ்யாவில் ஒரே நாளில் 4000இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று! by : Anojkiyan ரஷ்யாவில் மிகவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, ஒரே நாளில் 4774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 62,773ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால், ஒரே நாளில் 42பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 555ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது 57,327பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 4891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். http://athavannews.com/ரஷ்யாவில்-ஒரே-நாளில்-4000இற்/
-
- 0 replies
- 343 views
-
-
‘தியோடர் ரூஸ்வெல்டில்’ விமான தாங்கி கப்பலிலுள்ள 710பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று! by : Anojkiyan அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் 710பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள சிப்பந்திகளில் 94 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 710 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கப்பலில் உள்ள பரிசோதிக்கப்பட்ட மீதமுள்ள 3,872 குழு உறுப்பினர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்பது மாலுமிகள் குவாமில் உள்ள அமெரிக்க கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர, 42 பேர் குணமடைந்த…
-
- 0 replies
- 290 views
-
-
கொரோனாவிற்காக ஹைட்ரோக்ஸிகுளோரோகுயினை பயன்படுத்தியவர்களே அதிகம் இறந்துள்ளனர் : அமெரிக்க ஆய்வில் தகவல் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோக்ஸி குளோரோகுயின் மருந்து எதிர்பார்த்த பலனை தரவில்லை என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 65வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் தான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கொரோனாவை தடுக்க ஹைட்ரோக்ஸி குளோரோகுயின் மருந்து சிறந்ததென நம்பிய ஜனாதிபதி, டிரம்ப் அம்மருந்தை இந்தியாவிடம் பெற்றுக்கொண்டார். அமெரிக்கா வாங்கியதால் இந்த மருந்தை 55 க்கும் மேற்பட்ட நாடு…
-
- 0 replies
- 318 views
-
-
உலகளவில் இறைச்சி சந்தைகளுக்கு புதிய வழிமுறைகள் - வுஹான் பாதிப்பு எதிரொலி? ஹெலன் பிரிக்ஸ் பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் Getty Images உலக அளவில் இறைச்சி சந்தைகளில் மீண்டும் விற்பனை துவங்கும்போது சில பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இறைச்சி சந்தைகளின் சுகாதார தரமும் மேம்படுத்தப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் உலக அளவில் வனவிலங்கு இறைச்சி விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் எனவும் அரசுகளிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப புள்ளியாக சீனாவில் உள்ள வுஹான் வன விலங்குகள் இறைச்சி சந்தையொன்று தொடர்புபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது…
-
- 0 replies
- 320 views
-
-
கொரோனாவால் பெல்ஜியத்தில் ஏன் இத்தனை மரணங்கள்? by : Varothayan உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்புக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் மிக மோசமாக இருக்கின்றது. அதிக தொற்றாளர்கள் உள்ள கண்டமாக ஐரோப்பா விளங்குகின்றது. உயிரிழப்புக்களையும், தொற்றாளர்களையும் பொறுத்தவரையில் அமெரிக்கா ‘எண்ணிக்கை’யின் அடிப்படையில் முதலிடத்தில் இருந்தாலும், சனத்தொகைக்கு ஏற்ப இறப்பு வீதத்தைப் பார்க்கும்போது பெல்ஜியம் முதலிடத்தில் உள்ளது. ஏறக்குறைய 11.5 மில்லியன் மக்கள் வசிக்கும் பெல்ஜியத்தில் ஒரு மில்லியன் மக்களுக்கு 518 பேர் உயிரிழந்துள்ளனர். ஏன…
-
- 4 replies
- 1.1k views
-
-
அமெரிக்கா தனது படையினரை கொரோனா வைரசிலிருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது. ஏனையவர்களை மோதலிற்கு இழுப்பதற்கு பதில் அமெரிக்கா முதலில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள தனது படையினரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என ஈரானின் ஆயுதபடையின் பேச்சாளர் அபொல்பசல் செகராச்சி தெரிவித்துள்ளார். p>அமெரிக்காவின் கப்பல்களிற்கு தொந்தரவு கொடுக்கும் ஈரானியகப்பல்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு அவற்றை அழித்துவிடுமாறு அமெரிக்க கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையிலேயே ஈரானின் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/80530
-
- 0 replies
- 467 views
-
-
அமெரிக்காவின் கப்பல்களிற்கு தொந்தரவு கொடுக்கும் ஈரானியகப்பல்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு அவற்றை அழித்துவிடுமாறு அமெரிக்க கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எங்கள் கப்பல்களிற்கு தொந்தரவு கொடுத்தால் ஈரானின் எந்த பீரங்கிபடகுகளையும் அனைத்து பீரங்கிபடகுகளையும் அழித்துவிடுமாறு உத்தரவிட்டுள்ளேன் அவற்றின் மீது தாக்குதலை மேற்கொள்;ளுமாறு உத்தரவிட்டுள்ளேன் என டிரமப் தெரிவித்துள்ளார். ஈரான் தனது முதலாவது இராணுவசெய்மதியை வெற்றிகரமாக ஏவியுள்ளதாக இன்று அறிவித்துள்ள நிலையில் டிரம்ப் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த மாத ஆரம்பத்தில் வளைகுடாவில் ஈரானின் கடற்படை கப்பல்கள் அமெரிக்க கடற்படை கப்பலை நெருங்கி வ…
-
- 0 replies
- 620 views
-
-
கொரோனாவைரசிற்கு எதிராக எதிர்காலத்தில் உருவாக்கப்படும் மருந்தினை உலக நாடுகள் அனைத்தும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என ஐநா தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ள அதேவேளை இந்த தீர்மானத்தினை தடுப்பதற்கு முயற்சி செய்த அமெரிக்கா தோல்வியடைந்துள்ளது. கொரோனா வைரசிற்கு எதிராக எதிர்காலத்தில் உருவாக்கப்படும் எந்தவொரு தடுப்பு மருந்தினையும் சமமான ,தக்கதருணத்தில், திறமையான முறையில் பெற்றுக்கொள்வதை உறுதி செய்யவேண்டும் என மெக்சிக்கோ கொண்டுவந்த தீர்மானத்தினை ஐநாவின் 193 நாடுகள் ஆதரித்துள்ளன. அதனை தடுப்பதற்கு அமெரிக்கா முயன்றதாகவும் எனினும் அது சாத்தியமாகவில்லை எனவும் ஏஎவ்பி தெரிவித்துள்ளது. ஐநா தீர்மானத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் முக்கிய பணி குறித்து குறிப்பிடப…
-
- 1 reply
- 640 views
-
-
இன்றுமட்டும் ரஷ்யாவில் 5,236 பேருக்கு கொரோனா வைரஸ், 57 பேர் உயிரிழப்பு by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்று (புதன்கிழமை) மட்டும் ரஷ்யாவில் 5,236 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ரஷ்யாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,999 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதுவரை 513 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/இன்றுமட்டும்-ரஷ்யாவில்-5236/
-
- 0 replies
- 390 views
-
-
சிங்கப்பூரில், அதிகப்பட்சமாக, ஒரே நாளில், 1426 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8014 ஆக உயர்ந்தது. இன்று பாதிப்பு உறுதியான 1426 பேரில், 1410 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள். மீதி 16 பேர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் ஆவார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை, தனிமைப் படுத்தி, தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை வழங்கியதில் சுகாதாரத்துறை காட்டிய தீவிரத்தால், சிங்கப்பூர் குடிமக்களிடையே கொரோனா பரவுவது பெருவாரியாக கட்டுப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/107480/சிங்கப்பூரில்,-ஒரே-நாளில்-1426பேருக்கு-க…
-
- 5 replies
- 676 views
-