Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. முன்னாள் துணை அதிபரை அவதூறாகப் பேசிய வழக்கில் அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதையடுத்து அவரை பதவி நீக்கக் கோரும் தொலைக்காட்சி விவாதம் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இவரது மகன் ஹன்டர் பிடென் உக்ரைனில் உள்ள இயற்கை எரிவாயு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். இந்த எரிவாயு நிறுவனத்தில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரித்த அரசு வழக்கறிஞரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என அந்நாட்டு அதிபரிடம் ஜோ பிடன் வலியுறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்ட…

    • 0 replies
    • 352 views
  2. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionரோஜர் ஸ்டோன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை காக்கும் வகையில் அவரது ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் அந்நாட்டு நாடாளுமன்ற குழு விசாரணையின்போது பொய் சொன்னார் என்றும் சாட்சியங்களை அளித்தார் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாட்சியங்களை அழித்ததற்கு 20 ஆண்டுகள் வர சிறை தண்டனை விதிக்கப்படும். பிற குற்றங்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்று அவர் கூறியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் மீதான நன்மதிப்பை சேதப்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் பதிப்பிப்பதற்கு முன்னதாக, அதுகுறித்த மேலதிக தகவல்களை தெரிந்துகொள்வதற்கு தான் எடுத்த…

  3. சிலி நாட்டில் போலீஸாரால் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா டிரோன் குட்டி விமானத்தை லேசர் வெளிச்சத்தை செலுத்தி போராட்டக்காரர்கள் கீழே விழச் செய்தனர். சான்டியாகோவில் மெட்ரோ கட்டணத்தை சிலி அரசு உயர்த்தியதைக் கண்டித்து, அக்டோபர் மாதம் முதல் போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், போராட்டக்காரர்களை ஆளில்லா டிரோன் குட்டி விமானம் சிலி போலீஸார் கண்காணித்தனர். இதை கண்ட போராட்டக்காரர்கள், தங்களிடம் இருந்த 50 கையடக்க லேசர் சாதனங்களில் இருந்து வெளிச்சத்தை டிரோனை நோக்கி இயக்கினர். லேசர் சாதனங்களில் இருந்து ஒரே நேரத்தில் வெளிச்சம் பாய்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்து டிரோன் கீழே விழுந்தது. இந்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாக பரவி வருகிறது. https://www.polim…

    • 0 replies
    • 417 views
  4. அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர், வெறிநாய் போல் அடித்து கொள்ளபட வேண்டுமென வடகொரிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா-அமெரிக்கா இடையேயான உறவு தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங்கை கொலைகார சர்வாதிகாரி என, அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள வடகொரிய அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம், அதிகாரத்தின் மீது ஆசைகொண்ட ஜோ பிடன் போன்ற வெறிநாயை விட்டுவைப்பது பலருக்கும் ஆபத்தானது, தாமதிக்காமல் அவரை அடித்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. https://www.polimernews.com/dnews/88830/அமெரிக்காவின்-முன்னாள்துணை-அதிபரை-வெறிநாய்-போல்அடி…

  5. அம்புகளும் வில்லுகளும் பண்டைய புராண கால மோதல்களின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் என்பது பலரதும் கருத்தாகவுள்ளது. ஆனால் ஹொங்கொங் நகரில் நேற்று புதன்கிழமை சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவினர் அந்தக் கருத்து தவறு என்பதை நிரூபிக்கும் வகையில் புதுவித தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். அவர்கள் தீப்பந்தமாக கொழுந்து விட்டு எரியச்செய்யப்பட்ட அம்புகளை வில்லுகள் மூலம் ஏவி அந்நகரிலிருந்த சீனப் பல்கலைக்கழகமொன்றின் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அருகி லிருந்த புகையிரதமொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. https://www.virakesari.lk/article/68945

    • 0 replies
    • 453 views
  6. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உயர்தரப்பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். லொஸ்ஏஞ்சல்சிற்கு வடக்கே உள்ள சன்டா கிளரிட்டாவின் சவுகஸ் உயர் தரப்பாடசாலையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை ஆரம்பமாவதற்கு சற்று முன்னர் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. கறுப்பு உடையணிந்த ஆசிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 15 வயது மாணவனே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டான் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகள் உடனடியாக பாடசாலைக்குள் நுழைவதையும் காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் மூலம் வெளியேற்றப்படுவதையும் காண்பிக்கும் வீ…

    • 0 replies
    • 379 views
  7. சிரியாவின் வடக்கு பகுதியிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அப்பகுதியில் ஹெலிகாப்டர் தளத்தை அமைக்கும் பணியில் ரஷியா ஈடுபட்டுள்ளது. சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பை ஒடுக்கிய பிறகு, அங்கிருந்து அமெரிக்க ராணுவத்தினரை அதிபர் டிரம்ப் திரும்ப அழைத்தார். இதையடுத்து அங்குள்ள குவாமிஸ்லி (Qamishli) பகுதியில் ரஷியா ஹெலிகாப்டர் தளத்தை அமைத்து வருகிறது. ரஷியா பாதுகாப்பு அமைச்சக தொலைக்காட்சியான வேஸ்தா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் ரஷிய ஹெலிகாப்டர்கள் வருகை தொடர்பான வீடியோ காட்சியையும் அத்தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. https://www.polimernews.com/dnews/88793/சிரியாவின்-வடபகுதியில்ஹெலிகாப்டர்-தளம்அமைக்கிறது-ரஷியா

  8. பிரெக்ஸிட் நடவடிக்கைக்குப் பிறகு, உலகில் பிரிட்டன் 2ம் தர நாடாகி விடும் என்று ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை, பிரெக்ஸிட் என பரவலாக அழைக்கப்படுகிறது. இதுகுறித்து பெல்ஜியத்தில் புருக்ஸ் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் பேசினார். அப்போது அவர், பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு பிறகு பிரிட்டன் உலகில் 2ம் தர நாடாக ஆகி விடும் என்றும், சர்வதேச விவகாரங்களில் செலுத்தும் ஆளுமையை பிரிட்டன் இழந்து விடும் என்றும் தெரிவித்தார். பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் சீனாவை ஒன்றுபட்ட ஐ…

  9. ஐ.எஸ் தீவிரவாதிகளின் புதிய தலைவர் இருக்குமிடம் தெரியும் என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி! அமெரிக்கா உள்ளிட்ட பல வல்லரசு நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவன் அபுபக்கர் அல் பக்தாதி (வயது 48) கடந்த மாதம் உயிரிழந்த நிலையில், அந்த அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடத்தை கண்காணித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பக்தாதி உயிரிழந்ததை அடுத்து அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி என்பவர் ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்தது. மேலும் பக்தாதி உயிரிழந்தமைக்கு உரிய பதிலடி வழங்கப்படவுள்ளதாகவும் ஐ.எஸ் அமைப்பு அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில், ஐ.எஸ் அமைப்பி…

  10. ஐக்கிய அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சவாலுக்குட்படுத்துமாறு மிகுந்த அழுத்தத்துக்குள் உள்ளதாக, ஐக்கிய அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். யாரிடமிருந்து அழுத்தத்தை எதிர்கொள்வதாக ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் முதற்பெண்மணியுமான ஹிலாரி கிளின்டன் வெளிப்படுத்தியிருக்கவில்லை. அந்தவகையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளரான ஹிலாரி கிளின்டன் மறுக்கவில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைத் தான் வென்றி…

    • 0 replies
    • 433 views
  11. இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், செயின்ட் சதுக்கத்தில் உள்ள பேராலயத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வெனிஸ் நகரில் அண்மையில் பெய்த கனமழையால், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வெனிஸ் நகரத்தின் 85 சதவீதம் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அதிகபட்சமாக, 187 சென்டிமீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதற்கு முன்பு 1966ம் ஆண்டு 194 சென்டிமீட்டர் அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இந்தநிலையில், செயின்ட் மார்க் சதுக்கத்தில் உள்ள செயின்ட் பேராலயத்தில், ஒரு மீட்டருக்கு அதிகமான உயரத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அங்குள்ள பொருட்களை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழை-வெள்ளம் காரணமாக, வ…

    • 2 replies
    • 966 views
  12. இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடலில் கொட்டும் குப்பைகள் அமெரிக்க நகரங்களுக்கு கரை ஒதுங்குவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளில் பருவநிலை மாறுபாடும், கழிவுகள் மேலாண்மையும் முக்கிய பங்கை வகிக்கின்றன. குறிப்பாக Electronics கழிவுகளை அப்புறப்படுத்துவது என்பது வளர்ந்த நாடுகளுக்கே பெரும் சவாலாக இருக்கிறது. இதனால், பெரிய நாடுகள் அவற்றின் மின்னணு கழிவுகளை அவ்வப்போது கடலில் கொட்டி விடுவதாக செய்திகள் அவ்வப்போது வருவதை பார்க்கலாம். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நியூயார்க்கில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது- இந…

    • 0 replies
    • 498 views
  13. கருணை தினம்: இரக்க குணம் உடையவரா நீங்கள்? நிச்சயம் உங்கள் ஆயுள் அதிகரிக்கலாம் லாரன் டர்னர்பிபிசி நியூஸ், வாஷிங்டன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES நீங்கள் கருணையுடன் நடந்து கொண்டால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? உங்கள் முகம் பிரகாசமாக தோன்றலாம் அல்லது நீங்கள் திருப்தியாக உணரலாம்…ஆனா…

  14. மொசாட்டிற்கு வந்த எச்சரிக்கை.. காஸாவை தாக்கிய 200 இஸ்ரேல் ராக்கெட்டுகள்.. பற்றி எரியும் பாலஸ்தீனம்! இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டு நாடுகளும் மாறி மாறி ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காஸா மீண்டும் போர் பூமியாக மாறியுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே பல வருடங்களாக அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. பாலத்தீனம் மீது இஸ்ரேல் செய்து வரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீன போராளி குழுக்கள் போர் செய்து வருகிறது. காஸாவில்தான் இந்த போர் நடந்து வருகிறது. காஸா பாலஸ்தீனத்திற்கு சொந்தமான மாகாணங்களில் ஒன்றாகும். இங்குதான் பாலஸ்தீன போராளி குழுக்கள் இருக்கிறார்கள்.நேற்று இந்த போர் பெரிதானனது. இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாட்டிற்கு வந்த உளவ…

  15. 2ஆவது அணு உலைக்கான கட்டுமான பணிகளை ஆரம்பித்தது ஈரான். அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் ஈரான் இரண்டாவது அணு உலைக்கான கட்டுமான பணிகளை ஆரம்பித்துள்ளது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த வருடம் விலகிய அமெரிக்கா, ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் அடுத்தடுத்து மீறி வருகிறது. அந்த வகையில் தடை விதிக்கப்பட்ட போர்டோ நகர நிலத்தடி அணுசக்தி மையத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் அண்மையில் ஆரம்பித்தது. இதனை அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் வன்மையாக கண்டித்தன. இந்தநிலையில் அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியில் இரண்டாவது அணு உலைக்கான …

  16. ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கக்கூடாது – பிரான்ஸ் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரொன் இதனைத் தெரிவித்துள்ளார். பிரித்தானிய வாரப்பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நேட்டோ அமைப்பு, மூளைச் சாவடைந்துள்ளதாகவம் அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் செயற்பாடுகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/ஐரோப்பிய-நாடுகள்-தொடர்ந்/

  17. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, பெண் நீதிபதி ஒருவர் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், 'டொனால்ட் டிரம்ப் பவுண்டேஷன்' எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் நிதியை டிரம்ப் தனது சொந்தசெலவுகளுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தைதையடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு அந்த அறக்கட்டளை மூடப்பட்டது. இது தொடர்பாக நடந்து வரும் வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவரக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் தனது அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சும…

    • 0 replies
    • 509 views
  18. ஜெர்மனியின் பிரபல லூப்தான்ஸா விமான நிறுவன ஊழியர்கள் ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்நிறுவனத்தின் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமாக திகழும் லூப்தான்ஸா, பல்வேறு நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில், அந்நிறுவன ஊழியர்கள் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று ஒரே நாளில் 700 விமானங்களை அந்நிறுவனம் ரத்து செய்தது. பிராங்பர்ட் விமான நிலையத்தில் மட்டும் 400 விமானங்களை லூப்தான்ஸா ரத்து செய்தது. முனிச் விமான நிலையத்தில் 250 விமானங்களும், மேலும் சில சிறிய விமான நிலையங்களில் 50 வரையிலான விமானங்களும் லூப்தான்ஸா நிறுவனத்தால் ரத்து ச…

    • 0 replies
    • 807 views
  19. சவூதி அரேபியாவுக்கு உளவு பார்த்ததாக ட்விட்டர் நிறுவன முன்னாள் ஊழியர்கள் 2 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல சமூகவலைதள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் அலி அல்ஜாபாரா, அகமது அபுவாமோ மீதும், சவூதி அரேபியா அரச குடும்ப முன்னாள் ஊழியரான அகமது அல்முதைரி ((Ahmed Almutairi)) மீதும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் இக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் துருக்கியில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தில் முன்பு கொலை செய்யப்பட்ட எழுத்தாளர் கசோக்கி உள்ளிட்டோரின் ட்விட்டர் பக்கங்களை கண்காணித்து, அதிலிருக்கும் தனிப்பட்ட தகவல்களை பணத்துக்கு சவூதி அரேபியா அதிகாரிகளிடம் அளித்ததாக குற்றம்சாட்டப்ப…

    • 0 replies
    • 773 views
  20. சீனா தங்கள் நாட்டின் மீது போர் தொடுக்கும் வாய்ப்பு இருப்பதாக தைவான் நாடு தெரிவித்துள்ளது. அண்டை நாடான தைவானை, சீனா அங்கீகரிக்காததுடன், அதை தமது பகுதியாக உரிமை கொண்டாடி வருகிறது. அந்நாட்டுடன் எந்தவொரு வெளிநாடும் ராஜ்ஜீய உறவு வைக்கக் கூடாதெனவும் சீனா வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், தைபேயில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தைவான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் வூ ((Joseph Wu )) பேட்டியளித்தார். அதில் அமெரிக்காவுடனான வர்த்தக போரினால் ஏற்படும் பொருளாதார பிரச்னையால் உள்நாட்டில் சந்திக்கும் நெருக்கடிகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப தைவான் மீது சீனா போர் தொடுக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். https://www.polimernews.com/dnews/87828/தைவான்-மீத…

    • 0 replies
    • 580 views
  21. புதிய ஆடைகளில் விலங்குகளின் உரோமத்திற்கு தடை! தனது புதிய ஆடைகளில் விலங்குகளில் உரோமம் பயன்படுத்துவதற்கு பிரித்தானிய மகாராணி தடை விதித்துள்ளார். விலங்கு நல அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைய அவர் இவ்வாறு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து பிரித்தானிய அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரித்தானிய மகாராணிக்காக புதிதாக வடிவமைக்கப்படும் ஆடைகளில் விலங்குகளின் உரோமம் பயன்படுத்தப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், மகாராணியிடம் தற்போது உள்ள விலங்கு உரோமத்தால் ஆன ஆடைகளை அவர் தொடர்ந்தும் அணிவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகளில் மகாராணி அணிந்து வரும் ஆடைகளில் விலங்குகளின் உரோமங்கள் பயன்படுத்தப்படுவதற்கு விலங்கு நல ஆர்…

  22. யார் இந்த கஞ்சா கன்னியாஸ்திரிகள்? – யேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா அதன் எண்ணற்ற திராட்சைத் தோட்டங்களுக்கும் பழத்தோட்டங்களுக்கும் பெயர் பெற்றது. ஆனால் இவற்றையெல்லாம் விடவும் இப்போது வட கலிபோர்னியாவின் மெர்சிட் கவுண்டியில் உள்ள ஒரு சாதாரண பண்ணை வீடும் சிறிய பண்ணையும் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் பள்ளத்தாக்கின் சகோதரிகள் (sisters of the valley) எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் சிறிய கன்னியாஸ்திரிகள் குழுவொன்று தங்களது மிகச்சிறந்த கலிபோர்னியா கஞ்சா தயாரிப்புப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது இங்கிருந்துதான். கஞ்சா கன்னியாஸ்திரிகள் என அழைக்கப்படும் இவர்கள் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. தாங்கள் எந…

  23. Thursday, November 7, 2019 - 6:00am அமெரிக்காவின் மாநிலத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியனர் வெற்றிகளை பெற்றிருப்பது அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் குடியரசுக் கட்சியினர் செல்வாக்குச் செலுத்தும் கென்டக்கி ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியில் அன்டி பெஷீர் கடும் போட்டிக்குப் பின் வெற்றியீட்டினார். இதேநேரம் கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக விர்ஜினிய சட்டமன்றம் ஜனநாயக கட்சியினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் தீர்க்கமானதாக பார்க்கப்படுக…

    • 0 replies
    • 425 views
  24. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது எடுக்கப்பட்டுவரும் பதவி நீக்க நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று அதை முன்னெடுத்துள்ள, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். முதல் நேரலை ஒளிபரப்பின்போது மூன்று வெளியுறவு அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள். 2020இல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜோ பைடன் மற்றும் அவரது மகன் மீது உக்ரைன் அரசு விசாரணை நடத்த அந்நாட்டு அதிபர் வலாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு, டிரம்ப் அழுத்தம் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. முன்னாள் அமெரிக்க துணை அதிபரான ஜோ பைடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இர…

    • 0 replies
    • 410 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.