உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து சிலி நாட்டில் போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில் துறைமுகத்தில் இருந்த கடை ஒன்று சூறையாடப்பட்டது. லத்தின் அமெரிக்காவின் வளமிக்க நாடான சிலியில் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு மக்களிடையே எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. கடந்த வாரம் ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டம் நடத்தப்பட்டதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்நிலையில், வால்பரைசோ நகரில் உள்ள துறைமுகத்தில் திரண்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்த கடை ஒன்றில் இருந்த பொருட்களை அள்ளி சென்றனர். https://www.polimernews.com/dnews/86352/சிலி-நாட்டில்-போக்குவரத்துகட்டண-உயர்வை-கண்டித்துதொடரும்-போராட்டம்
-
- 2 replies
- 636 views
-
-
ஸ்பெயினில் தனி நாடு கேட்டுப் போராடிய கேட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து, ஏறத்தாழ 3,50,000 மக்கள் பார்சிலோனாவில் வீதியில் இறங்கி போராடினர். கேட்டலோனியா சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இவர்கள் அமைதியான ஒரு பேரணியையும் மேற்கொண்டனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சனிக்கிழமை சில பிரிவினைவாத குழுக்கள் மேற்கொண்ட போராட்டம் வன்முறையில் முடிந்தது. 2017ஆம் ஆண்டு கேட்டலோனியா எனும் தனி நாட்டை வலியுறுத்தி சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு சட்டத்திற்குப் புறம்பாக ஸ்பெயினில் நடந்தது. இதுவரை 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக ஒரு பிரகடனத்தை கேட்ட…
-
- 0 replies
- 465 views
-
-
பிரித்தானியாவில் லொறியொன்றின் கொள்கலனிலிருந்து 39 சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். எசெக்சில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வோர்ட்டர் கிளேட் கைத்தொழில் பூங்காவில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றின் கொள்கலனிலிருந்தே 39 சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். பல்கேரியாவிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த லொறியிலிருந்தே சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். வட அயர்லாந்தை சேர்ந்த லொறிச்சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://yarl.com/forum3/forum/34-உலக-நடப்பு/?do=add
-
- 7 replies
- 1.5k views
-
-
லண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை எவ்வளவு காலம் தாமதப்படுத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். ஐரோப்பிய யூனியனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வரும் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பிரக்சிட் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 322 பேரும், எதிராக 306 பேரும் வாக்களித்தனர்.இதனால், பிரதமர் போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்த புதிய ஒப்பந்தமும் நிராகரிக்கப்பட்டது. மேலும், பிரக்சிட்…
-
- 0 replies
- 512 views
-
-
கலிபோர்னியாவில் காட்டு தீ – 36 மாவட்டங்களில் மின்சாரம் துண்டிப்பு அமெரிக்காவின் வடக்கு மற்றும் மத்திய கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டு தீ காரணமாக 2 மில்லியனிற்கும் அதிகமான மக்கள் மின்சாரமின்றி அவதியுறுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. காட்டுத் தீ ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வைத்துள்ளதோடு பல வீடுகள் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. குறித்த பகுதியில் பலத்த காற்று வீசுவதனால், காட்டுத் தீ மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கதிற்காக, 36 மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று சனிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை மதியம் வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். …
-
- 0 replies
- 384 views
-
-
படத்தின் காப்புரிமை Lisa Maree Williams / getty images Image caption உளுருவில் மலையேற்றம் தடை செய்யப்படவுள்ளதால் அங்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஆஸ்திரேலியாவில் ஏயர்ஸ் ராக் என பரவலாக அறியப்பட்ட உளுரு எனும் ஒரு குன்று சனிக்கிழமை முதல் வெளியாட்கள் செல்லவே தடை செய்யபட்ட இடமாக மாறிவிடும். நீண்ட காலமாக இந்த மலைக் குன்றின் மீது ஏற வேண்டாம் என அனான்கு பூர்வகுடி இன மக்கள் சுற்றுலா பயணிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த மலையை புனிதமாக கருதி பாதுகாத்தும் வந்தனர். கடந்த 2017ம் ஆண்டு, உளுரு பகுதிக்கு வருகை தந்தவர்களி…
-
- 14 replies
- 1.9k views
-
-
பொருளாதார பிரச்சனை மற்றும் ஊழலை கண்டித்து ஈராக்கில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கண்ணீர்புகைக் குண்டுகளையும், கையெறி குண்டுகளையும் வீசி கலவரக்காரர்களை ராணுவத்தினர் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் அதிகரித்து வரும் வேளையில் அரசு அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி இம்மாதம் தொடக்கத்தில் தலைநகர் பாக்தாத்தில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 150 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று மீண்டும் போராட்டம் நடத்தப்பட்டதில் வன்முறை வெடித்தது. இது குறித்து பேசிய அந்நாட்டு பிரதமர் அடெல் அப்துல் மஹதி, மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட சுதந்திரம் உண்டு என்றும், அதற்காக வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது …
-
- 1 reply
- 368 views
-
-
லெபனான் நாட்டில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கலந்து கொண்டனர். லெபனானில் அரசு கொண்டு வந்துள்ள பொருளாதார சீர்த்திருத்தங்கள், புதிய வரி விதிப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அங்கு கனமழை பெய்தபோதும், ரெயின் கோட் அணிந்தும், குடைகள் மற்றும் கொடிகளை பிடித்தபடி Jal el Dib நகர் சாலையில் திரண்ட போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் அமைதியாக போராடி வருவதால், அவர்களை தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். https://www.p…
-
- 0 replies
- 298 views
-
-
திடீர் திருப்பம்: குர்திஷ் போராளிகள் மீதான தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது துருக்கி வடக்கு சிரியாவில் குர்திஷ் மீதான எல்லை தாண்டிய தாக்குதலை நிறுத்துவதற்கு துருக்கி ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க துணைத் தலைவர் மைக் பென்ஸ் அறிவித்துள்ளார். பென்ஸ் மற்றும் துருக்கியின் ஜனாதிபதி தயிப் எர்டோகனுக்கு இடையே அங்காராவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் ஐந்து நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் எனவும், துருக்கியின் எல்லையில் இருந்து குர்திஷ் போராளிகள் பின்வாங்க வேண்டும் எனவும் துருக்கி வலியுறுத்தியது. இந்த நிலையில் குர்திஷ் தலைமையிலான போராளிகளை பின்வாங்கச் செய்வதற்கு அமெரிக்கா உதவும் என தெரிவிக்க…
-
- 3 replies
- 1.2k views
-
-
முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கையில் ரஷ்ய – துருக்கி ஜனாதிபதிகள் கைச்சாத்து குர்திஷ் படையினரை துருக்கியினுடனான சிரிய எல்லையிலிருந்து வெளியேற்றுவதை நோக்காகக் கொண்ட உடன்படிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் துருக்கி ஜனாதிபதி தாயிப் எர்டோகனும் கைச்சாத்திட்டுள்ளனர். மேற்படி உடன்படிக்கையை வரலாற்று முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கையாக அந்நாடுகள் குறிப்பிட்டுள்ளன. இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக் குமிடையே இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளையடுத்தே மேற்படி உடன்படிக்கை எட்டப்பட்டுள் ளது. துருக்கி இந்த மாத ஆரம்பத்தில் தனது நாட்டின் தெற்கேயுள்ள சிரிய பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள குர்திஷ் …
-
- 0 replies
- 460 views
-
-
பிரக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றத்தை ஜனவரி வரை ஒத்திவைக்க தீர்மானம் 'பிரெக்சிட்' எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக புதிதாக செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் நிராகரித்தது. இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தீர்மானத்துக்கு எதிராக அதிக எம்.பி.க்கள் வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவு செய்துள்ளது. பிரெக்சிட் என்று அழைக்கப்படும் இதற்கான நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இம் மாதம் 31 ஆம் திகதிக்குள் வெளியேறுவதற்கு பிரிட்டனுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 27 நாடுகளின் தலைவர்களுடன் பிரிட்டன…
-
- 11 replies
- 1.3k views
-
-
தென் கொரியா நிர்மாணித்த உல்லாசத் தளத்தை தகர்க்க வட கொரியத் தலைவர் உத்தரவு! தென் கொரியாவுடன் இணைந்து நிர்மாணித்த உல்லாசத் தளத்தை தகர்ப்பதற்கு, வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார். மவுண்ட் கும்காங் (Mount Kumgang) பகுதியில் உள்ள குறித்த சுற்றுலாப் பயணிகள் வளாகம், பயனற்றுப் போய் இருப்பதாகத் தெரிவித்து அதை தகர்க்குமாறு கிம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில்மிக்க மலைப்பாங்கான இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த உல்லாசத் தளத்துக்கு, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான தென்கொரியர்கள் சுற்றுலா சென்று வந்தனர். ஆனால், அங்கீகரிக்கப்பட்ட பாதையைத் தாண்டிச் சென்ற தென் கொரியப் பயணி ஒருவரை, வட கொரிய ராணுவ வீரர் சுட்டுக் கொன்றதால், கடந்த 2008…
-
- 0 replies
- 559 views
-
-
போட்ஸ்வானாவில் 100 யானைகள் உயிரிழப்பு – ஆந்த்ராக்ஸ் தொற்று சந்தேகம்! தென் ஆபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் நூற்றுக்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைகளின் உயிரிழப்புக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று ஒரு காரணமாக இருக்கலாம் என்று போட்ஸ்வானா அரசாங்கம் சந்தேகம் வௌியிட்டுள்ளது. கடந்த 7 நாட்களில் மாத்திரம் 14 யானைகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து ஆரம்பகட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், சில யானைகள் உயிரிழந்தமைக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று காரணமென விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதேவேளை, வேறு சில யானைகள் வறட்சி காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது. 2…
-
- 0 replies
- 362 views
-
-
டென்மார்க்கில் ஆச்சரியம்: நகர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம் டென்மார்க்கில் கலங்கரை விளக்கம் ஒன்று நகர்த்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பதிவு: அக்டோபர் 24, 2019 03:45 AM கோபன்ஹேகன், டென்மார்க் நாட்டின் வடக்கு ஜட்லேண்ட் பிராந்தியத்தில் உள்ள கடற்கரை நகரில் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் உள்ளது. ‘ரப்ஜெர்க் நியூடு’ என்று அழைக்கப்படும் இந்த கலங்கரை விளக்கம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆண்டு தோறும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் ‘ரப்ஜெர்க் நியூடு’ கலங்கரை விளக்கத்தை பார்த்து செல்கின்றனர். இந்த நிலை…
-
- 1 reply
- 645 views
-
-
கனடா பிரதமர் தேர்தலுக்கு இரண்டாவது முறையாக போட்டியிடும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. நிலப்பரப்பில் உலகின் 2வது பெரிய நாடாக, 338 மக்களவை தொகுதிகளுடன் இருக்கும் கனடாவில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் செல்வாக்கும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு பெற்றவருமான ஜஸ்டின் ட்ரூடோ 2வது முறையாக போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் ஜஸ்டின் பெரும்பான்மை இழப்பார் என அண்மையில் வெளியான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. குயூபெக் என்ற நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கை விசாரிக்க ஜஸ்டின் தடை விதித்தை முன்வைத்து, எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் பார்ட்டி தீவிர பிரச்சாரம் செய்து வருவதால் இந்த பின்னடைவு எனவு…
-
- 17 replies
- 1.9k views
-
-
நாடாளுமன்றத் தேர்தல் : லிபரல் கட்சி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது! கனேடிய பொதுத்தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, இரண்டாவது தடவையாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ஜஸ்டின் ட்ரூடோ சிறுபான்மை ஆட்சியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. உலகளவில், முற்போக்கு சிந்தனையுள்ள தலைவர்களில் ஒருவராக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பார்க்கப்படுகிறார். இருப்பினும், ஆளும் லிபரல் கட்சிக்கு எதிராக அரசியல் செய்துவரும், வலதுசாரி சிந்தனையுடைய பழமைவாத கட்சிக்கு, முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்கள் கிடைத்திருக்கின்றன. மொத்தமுள்ள 338 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், …
-
- 2 replies
- 459 views
-
-
அமெரிக்கா அதிபர் பதவியிலிருந்து தன்னை நீக்க கோரி கொண்டுவரப்படும், நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஒரு கும்பல் தாக்குதலை போன்றது என, டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அடுத்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிடும், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனின் மகன் மீதான புகாரை விசாரிக்க உக்ரைன் உதவியை டிரம்ப் நாடினார் என்பது குற்றச்சாட்டாகும். இதனை அடிப்படையாக கொண்டு, ஜனநாயக கட்சியின் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை, தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் கடுமையாக விமர்சித்திருக்கிறார். தனக்கு எதிராக, எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஒரு கும்பல் தாக்குதலைப் போன்றது என டிரம்ப் கூறியிருக்கிறார். poli…
-
- 0 replies
- 244 views
-
-
பொருளாதாரத்திற்கான நோபல் இந்தியாவில் பிறந்தவர் உள்ளிட்ட மூன்று பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு அபிஜித் பேனர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு கொல்கத்தாவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற அபிஜித் பேனர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு நோபல் பரிசு உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காக அபிஜித் பேனர்ஜி உள்ளிட்டோருக்கு நோபல் பரிசு அபிஜித் பேனர்ஜி, எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரமெர் உள்ளிட்ட மூன்று பேர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர் https://www.polimernews.com/dnews/84703/இந்தியாவில்-பிறந்தவர்உள்ளிட்ட-மூன்று-பேருக்குபொருளாதாரத்திற்கான-நோபல்பரிசு-அறிவிப்ப…
-
- 3 replies
- 419 views
-
-
கருணைக்கொலை செய்து கொண்ட பாராலிம்பிக் வீராங்கனையின் நெகிழ்ச்சி கதை மற்றும் பிற செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMICHAEL STEELE/GETTY IMAGES Image caption2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றியை கொண்டாடும் மாரீகே வெர்வோர்ட் கருணைக்கொலை மூலம் தனது உயிரை மாய்த்துள்ளார் பெல்ஜிய …
-
- 0 replies
- 367 views
- 1 follower
-
-
மகாராணியாக முயற்சிக்கும் பெண் தளபதி – அரச தகுதியை நீக்கிய தாய்லாந்து மன்னர்! தாய்லாந்தில் மன்னருக்கு எதிராகவும், அரச நம்பிக்கைக்கு எதிராகவும் செயல்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட தாய்லாந்தின் அரசப் படையைச் சேர்ந்த பெண் தளபதி ஒருவரின் அதிகாரத்தை அந்த நாட்டு மன்னர் மகா வஜ்ரலாங்கோர்ன் பறித்துள்ளார். சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக் என்ற குறித்த பெண் தளபதிக்கு வழங்கப்பட்டிருந்த அரச தகுதியை தாய்லாந்து மன்னர் நீக்கியுள்ளார். பெண் தளபதியான சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக் பேராசையோடு செயல்பட்டதாகவும், அரசிக்கு இணையான நிலைக்கு தன்னை உயர்த்திக்கொள்ள முயன்றதாகவும் தாய்லாந்து அரசவை வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் மன்னர் வஜ்ரலா…
-
- 0 replies
- 359 views
-
-
முஸ்லீம்களை சீற்றப்படுத்தும் விதத்தில் வெளியான முகநூல் பதிவினால் ஏற்பட்ட கலவரத்தினால் பங்களாதேசில் நால்வர் பலியாகியுள்ளனர். முகமது நபியை விமர்சிக்கும் விதத்தில் வெளியான முகநூல் பதிவே கலவரத்தை தூண்டியுள்ளது. இந்த பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாதேசின் போலாமாவட்டத்தில் உள்ள பொர்கானுடின் நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதை தவிர எங்களிற்கு வேறு வழியிருக்கவில்லை என காவல்துறையை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த இந்து ஒருவரின் முகநூல் பதிவின் காரணம…
-
- 2 replies
- 543 views
-
-
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நபர் ஒருவர் அம்புலன்சை கடத்தி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குடும்பமொன்றின் மீது மோதியதில் இரட்டை குழந்தைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு அந்த நபரை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட அம்புலன்சினால் குடும்பமொன்றின் மீது நபர் ஒருவர் தாக்கியதில் ஏழு மாத குழந்தைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அம்புலன்ஸ் ஒன்று செல்வதையும் அதன் மீது துப்பாக்கிபிரயோகம் இடம்பெறுவதையும் தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன. இந்த சம்பவத்தில் இரு அம்புலன்ஸ்கள் தொடர்புபட்டுள்ள ஒரு அம்புலன்சை நபர் ஒருவர் கடத்…
-
- 0 replies
- 371 views
-
-
மலேசியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – பிரதமர் எச்சரிக்கை! மலேசியா மீது வல்லரசு நாடுகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என்று அந்த நாட்டுப் பிரதமர் மஹாதீர் முகமது எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரால் சுய பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி சார்ந்த மலேசியப் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று கோலாலம்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கருத்தரங்கில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மலேசியா மீது எந்த நாடு வர்த்தகத் தடைகளை விதிக்கும் என்று பிரதமர் குறிப்பிடவில்லை. எனினும், பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகளால் தடையற்ற வர்த்தகம் பாதிக்கப்படுவது தமக்கு ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 703 views
-
-
வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் நிலைப்பாடும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் வெளிச்சம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் இதில் பங்கு பற்றி அவர்கள் அரசியல் ஆய்வாளர்கள் திரு கருணாகரன் திரு யதிந்திரா மற்றும் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள்
-
- 3 replies
- 812 views
-
-
-
- 0 replies
- 360 views
-