Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும், உக்ரேன் ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கியும் சந்தித்த பின்னர் கிழக்கு உக்ரேனில் முழுமையான யுத்தநிறுத்தத்தை அமுல்படுத்த ரஷ்யாவும் உக்ரேனும் இணங்கியுள்ளன. பிரான்ஸ் தலைநகர் பரிஸில், ஜனாதிபதி புட்டினும், ஜனாதிபதி ஸிலென்ஸ்கியும் நேற்று சந்தித்திருந்தனர். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ஜேர்மனி சான்செலர் அங்கெலா மேர்க்கலின் அனுசரணையில் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இந்நிலையிலேயே, மோதலுடன் தொடர்புபட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை இவ்வாண்டு இறுதிக்குள் விடுதலை செய்து பரிமாறுவதற்கு ரஷ்யாவும், உக்ரேனும் இணங்கியுள்ளன. இதுதவிர, அடுத்தாண்டு மார்ச் மாத முடிவுக்குள், உக்ரேனின் மூன்று மேலதிக பிராந்தியங்களிலிருந்து இராணுவத்தை அகற்று…

  2. தி ஹேக்: ஆசிய நாடான மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது இனப் படுகொலை செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மர் அரசின் ஆலோசகரான ஆன் சான் சூகி நேரில் ஆஜராகியுள்ளார். மியான்மரில் வசித்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக அறிவித்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின்போது ரோஹிங்யா முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டனர். அதைத் தவிர 7.40 லட்சம் பேர் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டதாக மியான்மர் மீது புகார் கூறப்பட்டது. ஐ.நா. குழுவும் 'இது இனப் படுகொலை' என அறிவித்தது. ஆப்பிரிக்க நாடான …

    • 0 replies
    • 439 views
  3. சர்வதேச அளவில் ஆயுத விற்பனை 5 சதவீதம் அதிகரிப்பு : சுவீடன் ஆராய்ச்சி நிறுவனம் தகவல்! சர்வதேச அளவில் ஆயுத விற்பனை கடந்த ஆண்டு 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக, சுவீடனை சேர்ந்த ஸ்ரொக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (திங்கள்கிழமை) குறித்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘உலகம் முழுவதும் நாடுகளுக்கிடையிலான ஆயுத விற்பனை, கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2018ஆம் ஆண்டில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய 100 ஆயுதத் தளவாட உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டில் ஆயுத விற்பனை மூலம் 42,000 கோடி டொலர்கள் வருவாய் ஈட்டியுள்ளனர். இந்…

  4. வெள்ளை வான்களில் கடத்தப்படும் பெண்கள் பாலியல் வன்கொடுமையின் பின்னர் கொலை? அமெரிக்காவில் பெண்கள் வெள்ளை வான்களில் கடத்தப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தினை தோற்றுவித்துள்ளது. வெள்ளை வான்களில் வரும் மர்மநபர்கள் பெண்களை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவர்களை கொலை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கொலை செய்ததன் பின்னர் அவர்களது உடல் உறுப்புகளை விற்பனை செய்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதுகுறித்த தகவல்கள் கடந்த சில தினங்களாகவே அமெரிக்காவில் பேஸ்புக் பக்கங்களில் வேகமாக பரப்பட்டுவருகின்றன. இதேவேளை, இதுகுறித்து எந்தவித அதிகாரபூர்வ முறைப்பாடுகளும் தங்களுக்கு இதவரையில் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். …

  5. செக் குடியரசின் ஓஸ்ட்ராவா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு செக் குடியரசின் ஓஸ்ட்ராவாவில் உள்ள மருத்துவமனையின் நோயாளிகள் காத்திருப்பு அறையில் 6 பேரை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் தன்னைத் தானே சுட்டு இறந்து கிடப்பதை மூன்று மணி நேரத்தின் பின்னர் பொலிஸார் கண்டுபிடித்தனர். 6 பேரைச் சுட்டுக் கொன்ற நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. எனினும் அவரது நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை. இன்று காலை 7:19 க்கு ஓஸ்ட்ராவாவில் உள்ள மருத்துவமனைக்கு பொலிஸார் அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் அதிர்ச்சிப் பாதிப்பு சிகிச்சைப் பிரிவி…

  6. அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லை பிரச்சினை: ட்ரம்பின் 3.6 பில்லியன் ஒதுக்கீட்டுக்கு தடை! அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லையில் சுவரைக் கட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒதுக்கீடு செய்த 3.6 பில்லியன் டொலர் நிதிக்கு நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸின் எல் பாஸோவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி டேவிட் பிரையன்ஸ் 21 பக்க தீர்ப்பில் தடை உத்தரவை பிறப்பித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டார். இந்நிலையில் குறித்த தடை உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த நீதித்துறை செய்தித் தொடர்பாளர், ட்ரம்ப் நிர்வாகம் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் எனக் கூறினார். இந்த தீர்ப்பு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகின்றது. ஏனெனில் 2…

  7. அண்டார்டிகாவுக்கு 38 பேருடன் சென்றபோது காணாமல் போன சிலி நாட்டு சரக்கு விமானத்தை தேடும் பணி நடைபெறுகிறது. பன்டா ஏரேனாஸில் இருந்து மாலை 4. 55 மணிக்கு ஹெர்குலிஸ் சி 130 விமானம், அண்டார்டிகாவில் உள்ள சிலி தளத்துக்கு தளவாட பொருள்களை ஏற்றிக் கொண்டு சென்றது. அதில் 17 சிப்பந்திகள் உள்ளிட்ட 38 பேர் பயணித்தனர். இந்நிலையில், சுமார் 1 மணி நேரத்தில் விமானத்துடன் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு அதிலிருந்து எந்த தகவலும் வரவில்லை. இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் சிலி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். https://www.polimernews.com/dnews/92141/அண்டார்டிகாவுக்கு-38பேருடன்-சென்ற-சிலி-விமானம்மாயம்

    • 0 replies
    • 380 views
  8. சௌதியில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடு: உலகநாடுகள் வரவேற்பு சௌதி அரேபியாவில் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த, ஆண்கள் – பெண்களுக்கான தனித் தனி நுழைவாயில் கட்டுப்பாடை தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்கள் குடும்பங்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழை வாயிலும் தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று இருந்தது. இந்நிலையில், இனி இந்த, தனித் தனி நுழைவாயில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே சௌதி அரேபியாவில் இருந்த பல கட்டுபாடுகளையும், குறிப்பாக பெண்களுக்கான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்தி வருகின்ற நிலையில், அரசின் இந்த ம…

  9. பிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி தெரிவு பிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி (Zozibini Tunzi) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் அட்லாண்டாவில் நேற்று இடம்பெற்றது. இதில் இறுதி சுற்றில் தெரிவு செய்யப்பட்ட 7 பெண்களில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 26 வயதான சோசிபினி துன்சி பிரபஞ்ச அழகியாக தெரிவு செய்யப்பட்டார். பிலிப்பைன்சின் முன்னாள் உலக அழகியான கேட்ரினா கிரே துன்சிக்கு பிரபஞ்ச அழகிக்கான கீரிடத்தை சூட்டினார். பிரபஞ்ச அழகியாக துன்சி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்னர் மேடையில் அவரது பேச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது. ‘என்னை போன்ற நிறத்தையும், முடியையும் உடைய பெண்கள் அழகானவர்கள்…

  10. வாஷிங்டன்: காஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமிளா ஜெயபால் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு, விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பெரும்பாலும் விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளன. எனினும் இணையத் தள சேவை இன்னும் வழங்கப்படாததுடன், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இத்தகைய கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இந்திய-அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஜனநாயக கட்சி எம்.பியான பிரமிளா, குடியரசு கட்சியை ச…

    • 2 replies
    • 602 views
  11. சவூதி அரேபியா உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள உணவகங்களில் நீடித்து வந்த ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி நுழைவாயில் முறை முடிவுக்கு வந்துள்ளது. இளவரசர் முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு பெண்களுக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உணவகங்களில் தனித்தனி நுழைவாயில் முறை கட்டாயமில்லை என அந்நாட்டு நகராட்சிகள் மற்றும் ஊரக விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்களில் குடும்பத்துடன் வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழைவாயிலும், தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத…

    • 0 replies
    • 454 views
  12. பின்லாந்து நாட்டை சேர்ந்த பெண் உலகின் மிக இளம் வயது பிரதமர் ஆனார். அந்த நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெற்று நான்கு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. அக்கட்சியைச் சேர்ந்த அண்டி ரின்னே, பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் பின்லாந்தில் இரண்டு வாரங்களாக நடைபெற்ற தபால் துறை வேலைநிறுத்த விவகாரத்தை, பிரதமர் அண்டி ரின்னெ சரியாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டி அவருக்கு அளித்த ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கிக் கொண்டன. இதனால் அண்டி ரின்னே பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் அதிக வாக்குகள் பெற்ற சன்னா மரின் பிரதமராக தேர்ந்தெடுக்க…

    • 0 replies
    • 1.2k views
  13. நியூஸிலாந்தில் குமுறத் தொடங்கியுள்ள எரிமலை ; அவசர நிலை பிரகடனம்! நியூஸிலாந்தின் வடக்கே அமைந்துள்ள 'White Island' என்ற தீவிலுள்ள எரிமலையொன்று இன்று அதிகாலை முதல் வெடித்து, குமுறத் தொடங்கியுள்ளமையினால் அப் பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந் நாட்டு பிரதமர் ஜசிந்த ஆர்டெர்ன், எரிமலையானது வெடித்து, குமுற ஆரம்பித்த வேளையில் 'White Island' இல் அல்லது அதனை அண்மித்த பகுதியில் 100 சுற்றுலாப் பயணிகள் இருந்துள்ளதாகவும் மேலும் பலர் கணக்கெடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். எரிமலை வெடித்து, குமுற ஆரம்பித்த நேரத்தில் வேளையில் மேற்படி தீவில் மக்கள் இருந்துள்ளதா…

  14. 500 மில்லியன் பயணங்களை மேற்கொண்ட வெர்ஜின் ரயில்களின் சேவை முடிவுக்கு வந்தது பிரித்தானியாவில் மிக நீண்ட காலமாக இயங்கிவந்த வெர்ஜின் ரயில்களின் சேவை முடிவுக்கு வந்துள்ளது. 1997 ஆம் ஆண்டில் இருந்து 22 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள வந்த குறித்த ரயில் நேற்று (சனிக்கிழமை) சேவையை நிறுத்திக் கொண்டது. எனினும், இந்த வெர்ஜின் ரயில்களின் சேவைகள் அவந்தி மேற்கு கடற்கரைக்கு மாற்றப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேர் ரிச்சார்ட் பிரான்சனின் வெர்ஜின் குழுமம் மற்றும் ஸ்ரேஜ்கோச் (Sir Richard Branson’s Virgin Group and Stagecoach) ஆகியோருக்குச் சொந்தமான குறித்த வெர்ஜின் ரயில்கள் கிட்டத்தட்ட 500 மில்லியன் பயணங்களை மேற்கொண்டுள்ளன. இதன் இறுதிச் சேவை லண்டன்…

  15. அமெரிக்காவின் ஹவாய் பகுதியிலுள்ள பியர்ல் ஹார்பர் (Pearl Harbor) துறைமுகத்தில் ஜப்பான் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் 78ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 1941ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஜப்பான் விமானப்படை, கடற்படை நடத்திய தாக்குதலில், அமெரிக்கர்கள் 2390 பேர் பலியாகினர். அந்நாட்டின் ஏராளமான போர் கப்பல்கள், விமானங்கள் மூழ்கடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் 78ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பியர்ல் ஹார்பரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் தாக்குதலில் உயிர் பிழைத்த அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். https://www.polimernews.com/dnews/91932/பியர்ல்-ஹார்பர்-தாக்குதல்சம்பவத்தின்-78ஆம்-ஆண்டுநினைவு-தினம்-அனுசரிப்பு

    • 0 replies
    • 575 views
  16. சீனாவிடம் ஏராளமான பணம் இருக்கிறது – உலக வங்கியிடம் ட்ரம்ப் விடுத்த கோரிக்கை! சீனாவுக்கு கடன் வழங்கும் உலக வங்கியின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் தனது ருவிற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏன் உலக வங்கி சீனாவுக்கு கடன் வழங்குகிறது? இது சாத்தியமா? சீனாவிடம் ஏராளமான பணம் இருக்கிறது. இதனை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார். ஐந்தாண்டுக்கான குறைந்த வட்டியிலான கடன் திட்டத்தில் சீனாவுக்கு நிதி வழங்க உலக வங்கி அண்மையில் ஒப்புக்கொண்டது. இதனைத் தொடர்ந்து உலக வங்கியை ட்ரம்ப் விமர்சித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் வரிப் பணத்தைப் பயன்படுத்தி மனித உரிமைகள் மீறல் மற்றும் பலவீனமான நாடுகளில் இராணுவ ரீதியாகவோ …

  17. அமெரிக்க கடற்படைத்தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். புளோரிடா மாகாணத்தில் உள்ள பென்ஸாகோலா என்ற இடத்தில் கடற்படைத் தளம் அமைந்துள்ளது. பாதுகாப்பு மிகுந்த இந்தத் தளத்திற்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் அங்கிருந்த கடற்படை வீரர்கள் குண்டுபாய்ந்து சுருண்டு விழுந்தனர். கடற்படை வீரர்கள் உடனடியாக அந்த நபரை சுட்டுக் கொன்றனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வீரர்கள் சிலரின் நிலைமை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. https://www.polimernews.com/dnews/91714…

  18. பிரான்ஸ் நாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்நாட்டில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஓய்வூதிய திட்டத்தால், ஏராளமான ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே வேலை பறிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு எதிராக நடந்த போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது பட்டாசுகளை வீச, போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி, பெப்பர் ஸ்பிரே அடித்ததுடன், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். https://www.polimernews.com/dnews/91610/பிரான்சில்-புதிய-ஓய்வூதியதிட்டத்துக்கு-எதிரானபோ…

  19. அட்லாண்டிக் பெருங்கடலில் அகதிகள் படகு விபத்து – 58 பேர் உயிரிழப்பு! மேற்கு ஆபிரிக்க நாடான மொரிட்டானியாவிலிருந்து சென்ற படகு அட்லாண்டிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளானதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த படகில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் 83 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளதாக ஐ.நா.வின் இடம்பெயர்வு நிறுவனம் நேற்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிற்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் இந்த ஆண்டு ஏற்பட்ட மிக மோசமான பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும். மௌரித்தேனியாவை நெருங்கும் போது படகில் எரிபொருள் தீர்ந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஒரு அறிக்கையில்…

  20. ஈரானுக்கு எதிராக படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா? – பென்டகன் தகவல் ஈரானால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள மத்திய கிழக்குப் பகுதிக்கு இராணுவத்தை அனுப்ப முடிவு எடுக்கப்பட்டதாக வெளியான செய்தியை அமெரிக்கா மறுத்துள்ளது. ஈரானால் மத்தியக் கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்காக சுமார் 14 ஆயிரத்துக்கும் அதிகமான படை வீரர்களை அங்கு அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இது முற்றிலும் தவறான செய்தி என அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் அலிசா ஃபரா (Alyssa Farah ) தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015இல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்த…

  21. எதிர்வரும் 2020ஆம் ஆண்டைக் குறிக்கும் நிறம் வெளியீடு! எதிர்வரும் 2020ஆம் ஆண்டைக்குறிக்கும் நிறம் வெளியிடப்பட்டுள்ளது. Pantone நிறுவனத்தினால் இந்த நிறம் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய அடுத்த ஆண்டின் நிறம் ‘Classic Blue’ எனும் ஒரு வகை நீல நிறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே அதிகரிக்கும் பதற்றம், மனஉளைச்சலுக்கு ஒரு தீர்வாக நிறம் இருக்கும் என நம்பப்படுகிறது. நிறத்தின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பாடல் ஒன்று வெளியிடப்படவுள்ளது. அவற்றுடன் நிறத்தைக் கொண்ட துணி வகையும், நிறத்தின் சுவையைக் குறிக்கும் தேநீர் வகையும் வெளியிடப்படவுள்ளன. கடந்த 21 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டைக் குறிக்கும் நிறத்தை Pantone நிறுவனம் வெளியிட்டு வருகி…

  22. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக அவர் மீது பதவி நீக்க தீர்மானத்தை பிரதிநிதிகள் அவை கொண்டுவரவுள்ளதாக அந்த அவையின் சபாநாயகரான நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி இது குறித்து கூறுகையில், ''அதிபர் மீதான பதவி நீக்க தீர்மானம் குறித்த நடவடிக்கைகளை தொடங்கிட பிரதிநிதிகள் அவையின் தலைவரை நான் இன்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்தார். பிரதிநிதிகள் அவையின் முக்கிய கமிட்டி அமைப்பு டிரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பது குறித்த பரிசீலனை செய்து கொண்டிருப்பதாக செய்தி வந்த மறுநாளில் இந்த கருத்தை நான்சி பெலோசி வெளியிட்டுள்ளார். தன் மீது பதவிநீக்க தீர்மானம் கொண்டு வருவதாக இருந்தால் அதனை விரைவாக நடத்துமாறு ஜனநாயக…

  23. பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தாம் வென்றால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை (பிரெக்சிற்) அடுத்த மாத முடிவுக்குள் பூர்த்தி செய்வோம் எனவும், வரவு செலவுத் திட்டமொன்றை அடுத்தாண்டு பெப்ரவரி மாதத்தில் சமர்ப்பிப்போன் என பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பழமைவாதக் கட்சி நேற்று தெரிவித்துள்ளது. இம்மாதம் 12ஆம் திகதி நடைபெறவுள்ள பிரெக்சிற், பிரித்தானியாவின் நிலையைத் தீர்மானிக்கவுள்ள தேர்தலுக்கு ஒரு வாரமே இருக்கின்ற நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை விட கருத்துக்கணிப்புகளில் பழமைவாதக் கட்சி முன்னிலையில் காணப்படுகிறது. எனினும், பெரும்பான்மை அரசாங்கமொன்றை அமைக்கக் கூடியளவுக்கு பழமைவாதக் கட்சி முன்னிலையிலுள்ளதா என்பது இன்னும் தெளிவில்லாமலே உ…

    • 0 replies
    • 415 views
  24. இனந்தெரியாத நபர்கள் வெள்ளை வான்களில் இளம்பெண்களை பாலியல் நோக்கங்களிற்காகவும் உடல்பாகங்களை திருடுவதற்காகவும் கடத்துகின்றனர் என்ற முகநூல் தகவல்களால் அமெரிக்காவின் சில பகுதிகளில் அச்சநிலை உருவாகியுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஒருங்கிணைக்கப்பட்ட அளவில் இவ்வாறான குற்றச்செயல் இடம்பெறுகின்றது என்பதற்கான ஆதாரங்கள் இல்லாத போதிலும் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள முகநூல்பதிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன இதன் காரணமாக ஆதாரமற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து அமெரிக்க நகரமொன்றின் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது. வெள்ளை வானிற்கு அருகில் உங்கள் வாகனங்களை நிறுத்தாதீர்கள் உங்களை யாராவது கடத்த முயன்றால் உங்கள் கையடக்க தொலைபேசியை பயன்பட…

    • 0 replies
    • 346 views
  25. சீனாவில், உய்கர்(Uygur)இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வலியுறுத்தியும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், அமெரிக்கா, தனது நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது. இதற்கு சீனா கடும் ஆட்சேபம் தெரிவித்திருப்பதோடு, பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருக்கிறது. சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் ஒன்றான சிஞ்ஜியாங்கில் (Xinjiang), தனித்துவ அடையாளங்களோடு வாழும் உய்கர் இன மக்களில், இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் பெருமளவில் உள்ளனர். சிஞ்ஜியாங் மாகாணத்தில், சில ஆண்டுகளாக, ராணுவ துருப்புகளை குவித்திருக்கும் சீன அரசு, அங்குவாழும் முஸ்லீம் பிரிவினைவாதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என கூறி வருகிறது. மேலும், தடுப்ப…

    • 0 replies
    • 598 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.