உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26594 topics in this forum
-
30 APR, 2025 | 10:35 AM நியூசிலாந்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. https://www.virakesari.lk/article/213309
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
உலக அளவில் அதிகரிக்கும் போர் சூழல், மாறிவரும் புவியியல் அரசியல் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு நாடுகள் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாக அதிகரித்துள்ளன. உக்ரைன்- ரஷ்யா போர், காசா- இஸ்ரேல் போர், தென் கொரியாவுக்கு வடகொரிய மிரட்டல், தாய்வாணுக்கு சீனா மிரட்டல், இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் என உலகின் பல்வேறு பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் ராணுவ ஒதுக்கீட்டிற்கான நிதியை அதிகரித்துள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில், 2023- ஆம் ஆண்டை விட 2024- ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக ராணுவ நிதி 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இது 2023- ஆம் ஆண்டை 9 புள்ளி 4 சதவிகி…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் FBI கண்டுபிடிப்பை நிராகரித்தால் அமெரிக்கா எதிர்வினையாற்றும் – ரணில் எச்சரிக்கை. 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் (FBI) கண்டுபிடிப்புகளை இலங்கை நிராகரித்தால் வொஷிங்டன் எதிர்மறையாக பதிலளிக்கக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். இசைக்கலைஞர் இராஜ் வீரரத்ன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதி மிலிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் ஒரு நேர்காணலின் போது பேசிய ரணில் விக்கிரமசிங்க, தாக்குதல்களுக்குப் பின்னால் சஹ்ரான் ஹாஷிம் தான் மூளையாக செயல்பட்டார் என்று FBI விசாரணையில் முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார். இந்த நிலையில், தாக்குதல் குறித்து இலங்கை வேறுபட்ட கதையை ஊக்குவிக்க முயன்றால்,…
-
-
- 4 replies
- 438 views
- 1 follower
-
-
தென் சீனக் கடலில் சீனா கைப்பற்றிய புதிய பகுதி! பிலிப்பைன்ஸுடனான பிராந்திய தகராறு அதிகரித்து வரும் நிலையில், தென் சீனக் கடலில் ஒரு சிறிய மணல் திட்டை சீன கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளதாக பீஜிங் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ப்ராட்லி தீவுகளில் உள்ள சர்ச்சைக்குரிய சாண்டி கே மணல் திட்டுப் பகுதியில் நான்கு அதிகாரிகள் கருப்பு நிற உடை அணிந்து சீனக் கொடியை ஏந்தியபடி நிற்பதைக் காட்டும் படங்களை சீன அரச ஒளிபரப்பு சேவையான CCTV வெளியிட்டது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் சீனா அந்தப் மணல் திட்டுப் பகுதி மீது “கடல்சார் கட்டுப்பாட்டையும் இறையாண்மை அதிகார வரம்பையும் செயல்படுத்தியதாக” CCTV கூறியது. சீனாவும் பிலிப்பைன்ஸும் பல்வேறு தீவுகளுக்கு உரிமை கோரியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பின்னர் பிலிப…
-
-
- 1 reply
- 322 views
-
-
ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸில் வரலாறு காணாத மின் தடை ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு மின் தடையைச் சந்தித்துள்ளன. அவற்றின் தலைநகரங்கள் உட்பட பல பகுதிகள் இதனால் கடுமையாகப் பாதித்துள்ளன. ஸ்பெயினின் தேசிய மின்சார கட்ட ஆபரேட்டரான ரெட் எலக்ட்ரிகா, இதை உறுதிப்படுத்தியுள்ளது. அந்நாட்டு நேரப்படி மதியம் 12.30 மணி முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த இடையூறு காரணமாக மக்கள் பெரும் அவஸ்தையை எதிர்கொண்டுள்ளனர். தவிர, போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து சமிக்ஜைகள் செயல்படாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், ஐரோப்பிய மின் அமைப்பில் ஏற்பட்டிருக்…
-
- 1 reply
- 304 views
- 1 follower
-
-
ஜேர்மனி ஜெர்மனியில் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆட்சியில் இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில், கூட்டணிக் கட்சியை சேர்ந்தவரான நிதி அமைச்சரை சான்சலர் ஒலாப் ஸ்கால்ஸ் திடீர் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வியுற்றதை தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், ஒலாப் ஸ்கால்ஸின் சமூக ஜனநாயகக் கட்சிக்கும், முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்துவ ஜனநாயக யூனியனுக்கும் கடும் போட்டி இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி, கட்சியும் கடும் போட்டியை அளித்து வருகிறது. ஆளும் கட்சி சார்பில் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU-CSU) சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி சார்பில் ஆலீஸ…
-
-
- 56 replies
- 2.4k views
- 2 followers
-
-
புதிய பாப்பாண்டவரை தெரிவு செய்வதற்கான பணிகள் 7 ஆம் திகதி ஆரம்பம்! போப் பிரான்சிஸ்ஸின் மறைவைத் தொடர்ந்து புதிய போப்பைத் தெரிவு செய்வதற்கான பணிகள் எதிர் வரும் மே மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் பிரான்சிஸ், உடல் நலக்குறைவால் தனது 88 ஆவது வயதில் கடந்த 21 ஆம் திகதி மரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் கடந்த 26ஆம் திகதி ரோமில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 88 வயதான போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இதற்கு விடை காணும் முயற்சியில் வத்திக்கான் ஈடுபட்டு வருகின்றது. அதன்படி கார்டினல் எனப்படும் கர்தினால்கள் நேற்று கூடி இது குறித்து ஆலோசனை நடத்தினர்…
-
- 0 replies
- 230 views
-
-
உக்ரைனில் மூன்று நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புடின் உத்தரவு! இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன், 80வது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறவுள்ள நிலையில் 8-10 திகதிளில் மூன்று நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். மனிதாபிமானக் கருத்தாய்வுகளின் அடிப்படையில் இந்த போர்நிறுத்தம் மே 8 ஆம் திகதி நள்ளிரவில் ஆரம்பித்து 72 மணித்தியாலங்கள் தொடரும் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. இந்த போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க ரஷ்யாவும், உக்ரைனை வலியுறுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில், அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். போர் நிறுத்தத்தை மீறி உக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ர…
-
- 0 replies
- 207 views
-
-
ஈரானில் பாரிய வெடிப்புச் சம்பவம்! 500க்கும் மேற்பட்டோர் காயம். தெற்கு ஈரானின் பன்டார் அப்பாஸில்(Bandar Abbas) உள்ள ஷாஹீன் ராஜீ துறைமுகத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச் சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானில் உள்ள ஷாஹித் ராஜீ தெற்கு துறைமுகத்தில் பல கொள்கலன்கள் வெடித்தது இந்த சம்பவம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்த துறைமுகம் முக்கியமாக கொள்கலன் போக்குவரத்தை கையாளுவதுடன், எண்ணெய் தாங்கிகள் மற்றும் பிற கனிய இரசாயன வசதிகளை வழங்கும் துறைமுகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வெடிப்பு சம்பவம் துறைமுகத்தை கடுமையாக சேதப்பட…
-
-
- 5 replies
- 383 views
- 1 follower
-
-
ஏமன் மீதான அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழப்பு! ஹவுத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு ஏமனில் உள்ள தடுப்பு மையத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரழந்துள்ளதாக ஆயுதக் குழுவின் தொலைக்காட்சி அலைவரிசை தெரிவித்துள்ளது. சாதா மாகாணத்தில் உள்ள மையத்தில் தாக்குதல் நடந்தபோது மேலும் 47 புலம்பெயர்ந்தோர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக ஹவுத்திகளின் அல் மசிரா அலைவரிசை தெரிவித்துள்ளது. அழிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளில் பல உடல்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து அமெரிக்க இராணுவத்திடமிருந்து உடனடி கரு…
-
- 0 replies
- 193 views
-
-
கனடாவில் கூட்டத்திற்குள் கார் மோதி விபத்து; பலர் உயிரிழப்பு! கனடாவின் மேற்கு நகரமான வான்கூவரில் நடந்த ஒரு திறந்த வெளி நிகழ்வின் போது, நபரொருவர் தான் பயணித்த வாகனத்தை கூட்டத்திற்குள் வேகமாக செலுத்தி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் சாட்சியங்களை மேற்கொள்காட்டு குளோபல் நியூஸ் தெரிவித்துள்ளது. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை இன்னும் உறுதிப்படுத்தாத வான்கூவர் பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் கூட்டத்தின் வழியாக ஒரு கருப்பு SUV வாகனம் வேகமாக பயணித்து விபத்தை ஏற்படுத்த…
-
- 4 replies
- 867 views
- 1 follower
-
-
இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்; காசாவில் ‘முழு அளவில் பஞ்ச’ அபாயம் - போர் நிறுத்த பேச்சில் தொடர்ந்தும் இழுபறி damithApril 28, 2025 இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் காசாவில் மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் ‘முழு அளவில் பஞ்சம் ஒன்று ஏற்படும்’ சூழல் தொடர்பில் தொண்டு அமைப்புகள் எச்சரித்துள்ளன. காசாவுக்கான உதவிகள் செல்வதை இஸ்ரேல் கடந்த இரண்டு மாதங்களாக முடக்கி இருக்கும் நிலையில் அங்கு உணவு, மருந்து, எரிபொருள் உட்பட அனைத்து அடிப்படை தேவைகளும் தீர்ந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ‘காசாவில் எதிர்வரும் நாட்கள் தீர்க்கமானதாக அமையவுள்ளன. குண்டுகள் மற்றும் ரவைகளால் கொல்லப்படாதவர்கள் மெதுவாக உயிரிழந்து வருகின்றனர்’ என்று ஐ.நாவின் மன…
-
- 0 replies
- 307 views
-
-
ரஷ்யாவுக்காகப் போரிட வீரர்கள் அனுப்பியதை ஒப்புக் கொண்ட வடகொரியா! உக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவுக்காகப் போரிட படைகளை அனுப்பியதை வட கொரியா முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளது. வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான KCNA-வில் வெளியான ஒரு அறிக்கையில், ஜனாதிபதி கிம் ஜாங் உன் பிறப்பித்த உத்தரவின்படி, குர்ஸ்க் எல்லைப் பகுதியை ரஷ்யப் படைகள் “முழுமையாக விடுவிக்க” தங்கள் வீரர்கள் உதவியதாக பியோங்யாங்கின் இராணுவம் கூறியது. வட கொரிய வீரர்களின் “வீரத்தை” ரஷ்ய தலைமைத் தளபதி வலேரி ஜெராசிமோவ் பாராட்டிய சில நாட்களுக்குப் பின்னர் பியோங்யாங்கின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மொஸ்கோ முதல் முறையாக போரில் வடகொரியாவின் ஈடுபாட்டைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது. வட கொரியாவிலிருந்து அனுப்பப்பட்ட 11,000 வீ…
-
- 0 replies
- 198 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்துக் கலந்துரையாடிய செலன்ஸ்கி! நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை நிகழ்வு வத்திக்கானிலுள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்கா தேவாலயத்தின் திறந்தவெளி முற்றத்தில் இன்று இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ், உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி உட்பட பல உலகத் தலைவர்கள் வத்திகானுக்கு வருகை தந்திருந்தனர். இந்நிலையில் பிரான்சிஸ் திருத்தந்தையின் நல்லடக்க ஆராதனைகளைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமர் செலன்ஸ்கியும் இன்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி…
-
-
- 5 replies
- 392 views
- 1 follower
-
-
ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போரிட்ட அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் மகன் படுகொலை! அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் மகன் என அடையாளம் காணப்பட்ட ஒரு அமெரிக்க நபர், 2024 ஆம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கான ஒப்பந்தத்தின் கீழ் சண்டையிட்டபோது கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில் 21 வயதான மைக்கேல் அலெக்சாண்டர் க்ளாஸ், ஏப்ரல் 4, 2024 அன்று கிழக்கு ஐரோப்பாவில் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2024 இல் மத்திய புலனாய்வு அமைப்பில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான துணை இயக்குநராக நியமிக்கப்பட்ட ஜூலியான் கல்லினாவின் மகனாவார் உக்ரைனில் கொல்லப்பட்ட மைக்கேல் க்ளாஸ். அமெரிக்காவின் மீதான உள்நாட்டு கோபமும், ஒன்லைன் தீவிரமயமாக்…
-
- 0 replies
- 285 views
-
-
பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் இறுதி ஆராதனைகள் இன்று! நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் இன்று (26) நடைபெறவுள்ளன. இலங்கை நேரப்படி இன்று மாலை 1.30 மணியளவில் வத்திக்கான் நகரில் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில் இறுதி ஆராதனைகள் நடைபெறவுள்ளன. இறுதித் திருப்பலியை கர்தினால் கல்லூரியின் தலைவர் கர்தினால் ஜியோவானி பெட்டிஸ்டா ரே நடத்தவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாப்பரசரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவ…
-
- 3 replies
- 379 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், சரப்ஜித் சிங் தலிவால் பதவி, பிபிசி நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "எங்களுக்கு வரும் கனவுகளிலும் மன அழுத்தம் எதிரொலிக்கிறது. கடன் தொல்லை, வேலை, மின்சாரக் கட்டணம், வீட்டுக்கடன் தவணை என பிரச்னைகளே இப்போது வாழ்க்கையாகிவிட்டது!" கனடாவில் வசிக்கும் ரமண்தீப் சிங் என்பவரின் கவலை நிறைந்த வார்த்தைகள் இவை. பஞ்சாபின் ஃபரித்கோட்டை சேர்ந்த ரமண்தீப் சிங், ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து தற்போது கனடாவின் குடியுரிமையைப் பெற்றுவிட்டார். கனடாவுக்கு வருவதற்கு முன்பு, பஞ்சாபில் கல்லூரி ஒன்றில் தற்காலிக விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் ரமண்தீப் சிங். "கனடா என்பது போராட்டத்தின் மற்றொரு பெயர், ஆனால் கனடா ஒரு …
-
-
- 14 replies
- 739 views
- 1 follower
-
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்! – ஈரான் அறிவிப்பு. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சயீது அப்பாஸ் அராச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் ”இந்தியாவும், பாகிஸ்தானும…
-
- 0 replies
- 223 views
-
-
25 APR, 2025 | 03:55 PM மொஸ்கோவில் இடம்பெற்ற கார்க்குண்டுவெடிப்பில் இராணுவத்தின் உயர்அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். ரஸ்ய இராணுவத்தின் பிரதான செயற்பாட்டு அலுவலகத்தின் துணை தலைவரான யரோஸ்லாவ் மொஸ்காலிக் ரஸ்ய தலைநகரின் நெஸ்டேரோவ் பவுல்வார்ட்டில் இடம்பெற்ற கார்க்குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளார். காரின் எரிவாயு சிலிண்டருக்கு அருகில் பொருத்தப்பட்டடிருந்த வெடிபொருள் தொலைவிலிருந்து இயக்கப்படும் கருவி மூலம் வெடிக்கவைக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்மாடிகளிற்கு அருகில் கார் தீப்பற்றி எரிவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலிற்கு யார் காரணம் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் ரஸய இராணுவத்தின் உயர் அதிகா…
-
- 1 reply
- 293 views
- 1 follower
-
-
அமெரிக்காவுக்காகவும், பிரிட்டனுக்காகவும் கடந்த 30 ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு உதவுகிறோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அதிர்ச்சி பதிலை கொடுத்துள்ளார். மேற்கு நாடுகளுக்காகவே பாகிஸ்தான் இந்த வேலையை செய்து வருவதாகவும், தீவிரவாதிகளுக்கு அளித்த செயல்தான் தற்போது பாகிஸ்தானையே மோசமான நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 22 ஆம் திகதி ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பைசாரன் பள்ளத்தாக்கில் செவ்வாய்க்கிழமை இயற்கை காட்சிகளை ரசித்தபடி இருந்த அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது, திடீரென அங்கு வந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். மேலும், ஆண்களை …
-
-
- 5 replies
- 462 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 2013ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டபோது கானாவைச் சேர்ந்த கார்டினல் பீட்டர் டர்க்சன் ஒரு முக்கியப் போட்டியாளராகக் கருதப்பட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், லெபோ டிசெகோ பதவி, சர்வதேச மத நிருபர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் கத்தோலிக்க திருச்சபையின் வளர்ச்சி மட்டுமே அடுத்த போப் எங்கிருந்து வருவார் என்பதைக் கணிக்கக்கூடிய ஒரே காரணி என்றால், அடுத்த போப் ஆப்பிரிக்கராக இருப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது எனச் சொல்லலாம். ஆப்பிரிக்கா, உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் கத்தோலிக்க மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. 2022 மற்றும் 2023ஐ உள்ளடக்கிய இரண்டு ஆண்டு காலத்தில் இது 3.31% அதிகரித்துள்ளது. வாடிகனின் சமீபத்திய புள்ளிவிவரங்கள், …
-
- 1 reply
- 306 views
- 1 follower
-
-
20 APR, 2025 | 01:15 PM ரஸ்யாவிற்கு சீனா ஆயுதங்களை விநியோகிக்கின்றது என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதியின் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என சீன அதிகாரியொருவர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். உக்ரைன் தொடர்பான சீனாவின் நிலைப்பாடு எப்போதும் தெளிவானது என தெரிவித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் லின்ஜியான், சீனா யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தி மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கு முயல்கின்றது என தெரிவித்துள்ளார். சமாதான பேச்சுவார்த்தைகளையும் ஊக்குவிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி செய்தியாளர் மாநாட்டில் சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை விற்ப…
-
- 1 reply
- 253 views
- 1 follower
-
-
காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு! காசாவில் உள்ள பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று நடத்திய வான் தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவின் ராபா பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட இத் தாக்குதலில் அங்குள்ள இஸ்லாமிய பாடசாலை உட்பட அப்பகுதியிலுள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த கோர தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தனர் எனவும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தின் இக் கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகளும் கண்டம் வெளியிட்டுள்ளன. காசா – இஸ்ரேல் இடையேயான போர் ஒப்பந்தம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் க…
-
-
- 1 reply
- 374 views
-
-
உக்ரேன் போர் விவகாரம்; ட்ரம்பும் ஜெலென்ஸ்கியும் மீண்டும் மோதல்! உக்ரேனில் மூன்று வருடங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை (24) மீண்டும் மோதிக்கொண்டனர். கிரிமியா மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அங்கீகரிக்க மறுத்ததற்காக அமெரிக்கத் தலைவர் ஜெலென்ஸ்கியைக் கண்டித்துள்ளார். கடந்த வாரம் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையை எதிரொலிக்கும் விதமாக, ரஷ்யாவும் உக்ரேனும் அமெரிக்க அமைதித் திட்டத்திற்கு உடன்பட வேண்டிய நேரம் இது என்று ட்ரம்பின் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் கூறினார். “அல்லது அமெரிக்கா இந்த செயல்முறையிலிருந்து விலகிச் செல்ல வேண்டும்” என்றும் அவர் எச்சரி…
-
- 0 replies
- 412 views
-
-
23 APR, 2025 | 04:37 PM துருக்கியை தொடர்ச்சியாக பல பூகம்பங்கள் தாக்கியுள்ளதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒருசில நிமிடங்களில் மர்மரா கடலோர பகுதியில் பல பூகம்பங்கள் உணரப்பட்டுள்ளன என துருக்கியின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இஸ்தான்புலை தாக்கியுள்ள பூகம்பமே பெரியது ( 6.2) இதன் தாக்கம் பல பகுதிகளில் உணரப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்தான்புலின் புயுக்செக்மேஸ் மாவட்டத்தை மூன்று பூகம்பங்கள் தாக்கியுள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இணையத்தளம் செயல்இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சேதமடைந்த கட்டிடங்களிற்குள் செல்லவேண்டாம் என இஸ்தான்புல் அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். https://www.virak…
-
- 1 reply
- 248 views
- 1 follower
-