உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26870 topics in this forum
-
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/former-maldives-leader-abdulla-yameen-jailed-for-money-laundering/
-
- 0 replies
- 381 views
-
-
ஜேர்மனிய அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற பழங்கால நகைகள் கொள்ளை! ஜேர்மனியில் உள்ள அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற பழங்கால நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள சக்சொனி மாகாணத்தின் தலைநகர் ட்ரஸ்டனில் ‘கிரீன் வோல்ற்’ என்ற அருங்காட்சியகம் செயற்பட்டு வருகின்றது. அங்கு ஐரோப்பிய நாடுகளின் பழங்கால பொக்கிஷங்கள், அரிய கலை பொருட்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அதிகாலை முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 2 பேர் அருங்காட்சியகத்தின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் பழங்கால நகைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து …
-
- 2 replies
- 621 views
-
-
ஜனாதிபதி ட்ரம்பின் உல்லாச விடுதிக்குள் நுழைந்த சீனப் பெண்ணுக்கு நேர்ந்த கதி! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின், உல்லாச விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீனப் பெண்ணுக்கு 8 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஃபுளோரிடாவில் உள்ள Mar-a-Lago உல்லாச விடுதிக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடிக்கடி செல்வது வழக்கம். கடந்த மார்ச் மாதம், 33 வயது மதிக்கத்தக்க ஸாங் யூஜிங் (Zhang Yujing) என்ற சீனப் பெண் உல்லாசத் தலத்திற்குள் நுழைந்தார். பாதுகாப்பு அதிகாரிகளின் பார்வையில் சிக்கிய ஜாங்கிடம் பல கைத்தொலைபேசிகளும், நச்சுநிரல் கொண்ட தம்ப் டிரைவ் எனப்படும் கையட்டக்கச் சேமிப்பகமும் (thumb drive) வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அந்தப் பெண் உளவாளி என…
-
- 0 replies
- 793 views
-
-
-
- 2 replies
- 1.5k views
- 2 followers
-
-
வோசிங்டனின் தலைநகர காவல்துறையின் கட்டளை பீடத்தின் ராடரில் மர்மபொருள் ஒன்று தென்பட்டதை தொடர்ந்து நேற்று வெள்ளை மாளிகையில் பரபரப்பு தோன்றியதுடன் உடனடியாக பாதுகாப்பு பல மடங்காக அதிகரிக்கப்பட்டது. நசனல்மோலிற்கு தெற்கு பகுதியின் வான்பரப்பில் மர்ம பொருள் ஒன்று காணப்படுவதை ராடரில் அவதானித்த அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். பாதுகாப்பு தரப்பினர் உடனடியாக அந்த மர்மபொருளை இடைமறிப்பதற்காக விமானங்களையும் அனுப்பினர். ஆரம்பகட்ட மதிப்பீடுகள் அனுமதிக்கப்படாத விமானமொன்று வோசிங்டனின் வான்பரப்பில் நுழைந்துள்ளது என தெரிவித்ததை தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக வெள்ளை மாளிகையின் பாதுகாப்பை அதிகரித்தனர். அமெரிக்காவின் பாத…
-
- 0 replies
- 513 views
-
-
சுதந்திர ஸ்கொட்லாந்து மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் : ஸ்ரேர்ஜன் சுதந்திர ஸ்கொட்லாந்து விரைவான காலத்தில் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையக்கூடும் என ஸ்கொட்டிஷ் முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் கூறியுள்ளார். 2020 இல் ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் குறித்த புதிய வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்திய ஸ்ரேர்ஜன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதையும் கடுமையாக எதிர்த்துள்ளனர். பிரெக்ஸிற் நிகழ்ந்தால் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைவதற்கான வழியை ஸ்கொட்லாந்து தேடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் ஆதரவுடன் அமைக்கப்படும் தொழிற்கட்சி அரசாங்கம் 2020 இல் இரண்டு வாக்கெடுப்புகளுக்கு வழிவகுக்கும் என…
-
- 0 replies
- 406 views
-
-
ஹொங்கொங் உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கம் வெற்றி பெற்றுள்ளது! ஹொங்கொங்கில் அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கம் அதிக இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படும் ஹொங்கொங்கில் ஜனநாயக உரிமை கோரி கடந்த 6 மாதங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த போராட்டத்தில் அரங்கேற்றப்பட்ட வன்முறை சம்பவங்களால் ஹொங்கொங்கில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டத்துக்கு மத்தியில் ஹொங்கொங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூராட்சி மன்ற தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. 18 மாவட்டங்களில் உள்ள 452 மாவட்ட மன்றங்கள் சார்பாக 1,090 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். …
-
- 0 replies
- 431 views
-
-
இலங்கையில்.. இரு தேசக் கோட்பாட்டை வலியுறுத்தியது கொன்சர்வேற்றிவ் கட்சி கொன்சர்வேற்றிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் இரு தேசக் கோட்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. பழமைவாதக் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரு சர்வதேசப் பொறிமுறையை உருவாக்குவதற்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது. மேலும் சைப்பிரஸ் மற்றும் பலஸ்தீனியத்துடன் ஒப்பிட்டு இலங்கையில் இரு தேசக் கோட்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. கொன்சர்வேற்றிவ் கட்சியின் பிரித்தானியத் தமிழர்களுக்கான செய்தித் தொடர்பாளர் இது பற்றிப் பேசுகையில், “இலங்கையைப் பலஸ்தீனத்துடன் ஒப்பிடுவதன் மூலம் கட்சி மேலிடம் இவ்விடயத்தில் தாம் கொண்டுள்ள எண்ணப்பாட்டை வெளிப்படுத்தியுள்…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஜூலியன் அசாஞ் சிறையில் இறக்கக்கூடும் : மருத்துவர்கள் எச்சரிக்கை விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ் மனச்சோர்வு உள்ளிட்ட உடல் மற்றும் உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகுந்த உடனடி சிகிச்சை இல்லாமல் அவர் சிறையில் இறக்கக்கூடும் என 60 மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 60 மருத்துவர்களால் பிரித்தானிய உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் அசாஞ் குறித்து கடுமையான கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்க ரகசியங்களை வெளியிட்டது உட்பட 18 குற்றச்சாட்டுகளுக்காக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதை எதிர்த்து வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள வழக்க…
-
- 0 replies
- 552 views
-
-
ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 900 பேர் அந்நாட்டு பாதுகாப்பு படைகளிடம் சரணடைந்திருப்பதாகவும், அதில் 10 பேர் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த 12ஆம் தேதி நடவடிக்கையின்போது, 13 பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 93 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனர். இதேபோல, கடந்த இருவாரங்களில் மொத்தம் 900 பேர் சரணடைந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சரணடைந்தவர்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், அவர்களது குடும்பத்தினரும் அடக்கம். அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த பெண்கள், …
-
- 1 reply
- 645 views
-
-
ஹொங்கொங் தேர்தல்: வரலாறு காணாத அளவில் மக்கள் வாக்களிப்பு! ஹொங்கொங்கில் நடைபெற்றுவரும் மாவட்ட சபைத் தேர்தலில் மக்கள் வரலாறு காணாதவாறு வாக்களிப்பில் ஆர்வம் செலுத்தியுள்ளனர். இதன்படி, வாக்குப் பதிவு ஆரம்பமாகி சுமார் 5 மணி நேரத்திலேயே 56 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் 7.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையில் 4.1 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 2015ஆம் ஆண்டு தேர்தலின் போது 36 சதவீத வாக்குப் பதிவே இடம்பெற்றிருந்த நிலையில் இம்முறை மக்கள் இரட்டிப்பாக வாக்களித்துள்ளனர். கடந்த ஐந்து மாதங்களாக அமைதியின்மை, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்ப…
-
- 1 reply
- 553 views
-
-
கொங்கோவில் விமான விபத்து – 18 பேர் உயிரிழப்பு! கொங்கோவில் இடம்பெற்ற விமான வித்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கொங்கோவின் கிழக்குப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 19 பேருடன் சென்ற சிறியரக விமானம் நிலைதடுமாறி கீழே விழுந்து நொறுங்கியது. கிழக்கு பகுதியில் உள்ள வடக்கு கிவு மாகாணத்துக்குட்பட்ட கோமா நகரில் இருந்து சென்ற குறித்த விமானம் பேனி நகரை நோக்கி செல்ல ஆம்பித்த சில நிமிடங்களில் கோமா நகரின் அருகாமையில் மேப்பன்டோ என்ற இடத்தில் வீழ்ந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 18 பேரின் உடல்களை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ள நிலையில் அதில் சென்றவர்களில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், விமானம் கீழே விழுந…
-
- 0 replies
- 450 views
-
-
தம்மைத் தாமே நிர்வகிக்கும் தங்களது பிராந்தியத்தை உருவாக்க எதியோப்பியாவின் சிடாமா மக்கள் வாக்களித்துள்ளனர். எதியோப்பியாவின் பிரதமர் அபி அஹ்மட் தலைமையிலான சீர்திருத்தங்களின் கீழ் எதியோப்பியாவின் பல இனக் குழுமங்கள் மேம்பட்ட சுயாட்சியை வலியுறுத்துகின்ற நிலையிலேயே தம்மைத் தாமே நிர்வகிக்கும் தங்களது பிராந்தியத்தை உருவாக்க சிடாமா மக்கள் வாக்களித்துள்ளனர். கடந்த புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் 98.5 சதவீதமான மக்கள் தம்மைத் தாமே நிர்வகிக்கும் தங்களது பிராந்தியத்தை உருவாக்க ஆதரவளித்துள்ளதாக எதியோப்பியாவின் தேர்தல் சபை நேற்று தெரிவித்துள்ளது. இந்த வாக்கெடுப்பில் 99.7 சதவீதமானோர் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எதியோப்பியாவின் 105 மில்லியன் பேரைக் கொண்…
-
- 1 reply
- 415 views
-
-
ஹாங்காங் சிறப்பு அதிகார மண்டலத்தில் இன்று மாவட்டம்தோறும் உள்ள கவுன்சில்களுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து காவல்துறை ஆணையர் கிறிஸ் டாங் தொலைக்காட்சி மூலம் பேட்டியளித்தார். ஹாங்காங்கில் கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக போராட்டங்கள் வெடித்துள்ளன. வேலைவாய்ப்பின்மை, ஊழலுக்கு எதிராக தலைவிரித்தாடும் வன்முறைப் போராட்டங்களை ஒடுக்க சீனா தனது படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. இந்நிலையில் தேர்தல்கள் நடத்தப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.வாக்காளர்கள் சுமார் 41 லட்சம் பேர் 452 கவுன்சில்களுக்கு வாக்களிக்க உள்ளனர். https://www.polimernews.com/dnews/89989/ஹாங்காங்கி…
-
- 0 replies
- 242 views
-
-
உலகெங்கும் பல நாடுகளில் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக வீதிக்கு வந்து கடந்த இரண்டு வாரங்களாக போராடி வருகின்றனர். இரானில் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து போராடி வருகிறார்கள் மக்கள். மக்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய 100 தலைவர்களை இரான் அரசாங்கம் கைது செய்துள்ளது. இது இரானின் நிலை என்றால், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇரான் போராட்டம் கொலம்பியாவில் வலதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக வெடித்த போராட்டத்தில், மூன்று பேர் வியாழக்கிழமை கொல்லப்பட்டனர். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஏறத்தாழ 2 லட்சம் மக்கள் வியாழக்கிழமை வீதியில் இறங்கி போராடினர். படத்தின் காப்புர…
-
- 0 replies
- 754 views
-
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்பினாலும், தேவைப்படும்போது எதிர்த்துப் போராட அஞ்ச மாட்டோம் என சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார். அமெரிக்கா-சீனா இடையே முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டிருப்பதாக அதிபர் டிரம்ப் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி அறிவித்திருந்தார். ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னும் எழுத்து வடிவம் பெறவில்லை. சீனா இன்னும் பல விஷயங்களில் இறங்கிவர மறுப்பதால் பேச்சுவார்த்தையை முடிவடையாமல் இருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், பெய்ஜிங்கில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சந்திப்பின்போது பேசிய சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்காவுடன் வர்த்தகப் போரை தொடங்க தாங்கள் ஒருபோதும் விரும்பியதில்லை என்றும், ஆனால் அதற்காக தங்கள் நாடு அச்சப்படுகிறத…
-
- 0 replies
- 465 views
-
-
விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அமெரிக்க திருப்பியனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலை யில் 145 இந்தியர்கள் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டவர்கள் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதுடன், அவர்களின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், டில்லி வந்ததன் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களுல் பெரும்பாலானோர் பஞ்சாப், அரியானா, மும்பை மற்றும் குஜராத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவி…
-
- 1 reply
- 677 views
-
-
இஸ்ரேல் பிரதமர் மீது ஊழல்குற்றச்சாட்டு – பதவிவிலக மறுப்பு November 22, 2019 இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ மீது கையூட்டு பெற்றது, மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அந்நாட்டின் அரச தலைமை சட்டத்தரணி அவிச்சாய் மண்டெல்பிட் மூன்று வௌ;வேறு வழக்குகளில் குறிப்பிட்டுள்ளார். அந்நாட்டின் மிகப் பெரும் தொழிலதிபரிடமிருந்து பரிசுப் பொருட்களை நெட்டன்யாகூ பெற்றதாகவும், தன்னை பற்றி ஊடகங்களில் நேர்மறையான செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என்னும் நோக்கில் செயல்பட்டதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தான் கனமான இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் அரசின் தலைமை சட்டத்தரணி அவிச்சாய் மண்டெல்பிட், இதன் மூல…
-
- 0 replies
- 346 views
-
-
மிக நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்து சாதனை படைத்தார் ஷின்ஷோ அபே ஜப்பானில் மிக நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற சாதனையை ஷின்ஷோ அபே படைத்துள்ளார். ஜப்பான் பிரதமராக ஷின்ஷோ அபே பொறுப்பேற்று நேற்று (புதன்கிழமை) உடன் 2,887 நாட்கள் நிறைவடைகிறது. இதன் மூலம், அந்த நாட்டில் மிக நீண்ட காலத்துக்கு பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை அபே பெற்றார். அவருக்கு முன்னதாக, கற்சுரா ராரோ என்பவரே ஜப்பானில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். 1901ஆம் ஆண்டு முதல் 1913ஆம் ஆண்டு வரை அவர் பிரதமராக இருந்தார். அவரது சாதனையை தற்போது ஷின்ஷோ அபே முறியடித்துள்ளார். அதுமட்டுமன்றி, ஜி-7 நாடுகளில் மிக நீண்ட காலம் பிரதமர் பொறுப்பை வகித்த 2ஆவது தலைவர் என…
-
- 0 replies
- 346 views
-
-
Friday, November 22, 2019 - 6:00am மேற்குக் கரையில் அமைக்கப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகள் சட்ட விரோதமானவை அல்ல என்று அமெரிக்கா அறிவித்துள்ளது வருத்தமளிப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி துஜாரிக் கூறியதாவது: மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் அமைத்துள்ள யூதக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது. எனினும், அந்தக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கும், ஜெனீவா ஒப்பந்தத்துக்கும் எதிரானவை என்ற ஐ.நாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. …
-
- 0 replies
- 315 views
-
-
இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதியான மசூத் அசாரை ஐநா.பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் தீவிரவாதியாக அறிவித்து தடை விதித்தது. இதையடுத்து இந்தியர்கள் சிலரையும் இந்த பட்டியலில் சேர்க்க பாகிஸ்தான் அரசு முயற்சித்து வருகிறது. சீனாவின் துணையுடன் கடந்த வாரம் 2 இந்தியர்களை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் படி பாகிஸ்தான் கோரியுள்ளது. பலூசிஸ்தான், பெஷாவர் ஆகிய இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அந்த இருவர் மீதும் வழக்குகள் பதிவாகியிருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அண்மையில் ஆந்திராவைச் சேர்ந்த அங்காரா அப்பாஜி என்பவர் காபூலில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்த நிலையில் அவர் லாகூரில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் அரசு அவரையும் தடை செய…
-
- 0 replies
- 584 views
-
-
338 உறுப்பினர்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு அனிதா முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மக்கள் சேவை மற்றும் கொள்முதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கனடா அமைச்சரவையில் இந்தியர்கள் 4 பேருக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடம் அளித்துள்ளார். மொத்தம் 37 அமைச்சர்கள் கனடாவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள். அவர்களில் டொரான்டோ பல்கலைக் கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராக இருந்த அனிதா ஆனந்த் உள்பட 7 பேர் புதுமுகங்கள். 338 உறுப்பினர்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு அனிதா முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மக்கள் சேவை மற்றும் கொள்முதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கனடா அமைச்சரவையில் இந்த துறை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இ…
-
- 1 reply
- 744 views
-
-
பிரித்தானியாவுக்குச் செல்லவிருந்த சரக்குக் கப்பலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 25 அகதிகளை, குறித்த கப்பல் நேற்று நெதர்லாந்தை விட்டுச் சென்ற சிறிது நேரத்தில் நெதர்லாந்து அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், குறித்த கப்பலானது விரைவாக விளார்டிங்கனுக்கு திரும்பியதாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளன. சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு இரண்டு அகதிகள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஏனைய 23 பேரும் மருத்துவ சோதனையொன்றை துறைமுகத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் பொலிஸாரால் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக பிராந்திய அவசர சேவைகளின் திணைக்களத்தில் பிரசுரிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில், அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியாத நிலையியில்…
-
- 0 replies
- 394 views
-
-
பிரான்ஸ் வீதிகளில் படுத்துறங்கும் 700 சிறார்கள் குறித்து அரசுக்கு எச்சரிக்கை! பிரான்ஸின் வீதிகளில் படுத்துறங்கும் சுமார் 700 க்கும் மேற்பட்ட இருப்பிடமற்ற சிறார்கள் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மனுஃபெஸ்ரோ (manifesto) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்தத் தகவலை இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாள் இரவிலும் இல்-து-பிரான்ஸிக்குள் பாதுகாப்பற்ற முறையில் 700 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படுத்துறங்குவதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அவர்களுக்கு முறையான தங்குமிடங்களை அரசாங்கம் துரிதமாக ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வருடத்தில் மொத்தமாக எட்டு சிறுவர்கள் வீதிகளி…
-
- 5 replies
- 674 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images பல தீவுகளின் தொகுப்பாக உள்ள பப்புவா நியூ கினியின் ஓர் அங்கமாக உள்ள பூகன்வில் எனும் தீவுக்கூட்டம் சுதந்திரமான தனி நாடாக வேண்டுமா என்பது குறித்த மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இப்போது பப்புவா நியூ கினியின் ஒரு மாகாணமாக பூகன்வில் உள்ளது. சுதந்திரமான தனி நாடாக மக்கள் வாக்களித்தால் இந்த தீவுக்கூட்டம் உலகின் புதிய நாடாகும் வாய்ப்புள்ளது. சுமார் மூன்று லட்சம் மக்கள்தொகை மற்றும் 10,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பூகன்வில் தனி நாடாக உருவானால் உலகிலேயே மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாக அமையும். சனிக்கிழமை தொடங்கவுள்ள கருத்தறியும் வாக்கெடுப்பில் பங்கேற்க சுமார் 2,07,000 பேர் தகுதி பெற்றுள்ளனர். …
-
- 0 replies
- 723 views
-