Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பூங்காவில் கத்தி குத்து மேற்கொண்ட நபரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரவித்துள்ளது. அதேவேளை கத்தி குத்து தாக்குதலுக்குள்ளாகி சுமார் நான்கு பேர் வரையில் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தலைநகரிலிருந்து தெற்கே 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வில்லேஜுஃப் நகரில் உள்ள பூங்காவிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு , சந்தேக நபரையும் பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/art…

    • 0 replies
    • 353 views
  2. மன்னிப்பு கோரினார் திருத்தந்தை! மக்கள் சந்திப்பின் போது பெண் ஒருவரின் கையைத் தட்டிவிட்டதற்காக திருத்தந்தை பிரான்சிஸ் மன்னிப்புக் கோரியுள்ளார். இத்தாலியிலுள்ள சென்ட் பீற்றர் சதுக்கத்தில் புத்தாண்டின் முதல் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு முன்னர் மக்களை திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்தார். இதன்போது திருத்தந்தையை கண்ட உற்சாகத்தில் அவரின் கையை பெண்மணி ஒருவர் இழுத்திருந்தார். இதன் காரணமாக நிலைதடுமாறி விழப்போன திருத்தந்தை பிரான்சிஸ் பெண்ணின் கையைத் தட்டிவிட்டிருந்தார். இந்தநிலையிலேயே தற்போது குறித்த விடயம் தொடர்பாக திருத்தந்தை பிரான்சிஸ் மன்னிப்புக் கோரியுள்ளார். http://athavannews.com/மன்னிப்பு-கோரினார்-திருத/

  3. “புதிய மூலோபாய ஆயுதத்தை” அறிமுகப்படுத்த வடகொரியா தீர்மானம் வட கொரியாவின் தலைவர் அணுசக்தி திட்டங்களை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும், எதிர்காலத்தில் ஒரு “புதிய மூலோபாய ஆயுதத்தை” அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த அவர், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு இன்னும் இடம் இருப்பதாகவும் அணுவாயுதக் களைவு குறித்து முடக்கப்பட்டுள்ள பேச்சை, அரசியல் நலன்களுக்காக அமெரிக்கா இழுத்தடிப்பதாகவும் குற்றம் சாட்டினார். அமெரிக்காவுடனான அதிகரித்துவரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த வாரம் நான்கு நாட்கள் தொழிலாளர் கட்சி அதிகாரிகளின் கூட்டத்திற்கு கிம் ஜோங் உன் தலைமை தாங்கினார். இதன்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை…

  4. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன், புத்தாண்டில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதன் தொடர்பில் பிளவுபட்ட தம் நாட்டை ஒன்றிணைக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். சுமார் 2 வாரங்களுக்கு முன் தேர்தல் வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்தில் அதிகப் பெரும்பான்மையைப் பெற்ற ஜோன்சன், தம் புத்தாண்டு உரையில் அவ்வாறு கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக பிரிட்டன் வாக்களித்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள தருணத்தில் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவது தம் முதல் பணி எனத் ஜோன்சன், சொன்னார். பிரெக்சிட் உடன்பாட்டிற்கு முதற்கட்ட ஒப்புதலைப் பெற்றுள்ளார் அவர். இனி நாடாளுமன்றம் அதனை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளைத் தொடங்கும். அதன்பின் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ப…

    • 0 replies
    • 667 views
  5. முன்னர் அங்கொன்று இங்கொன்றாக தமிழ் பெயர்களில் ஸ,ஷ,ஜ,ஹ,ஶ்ரீ போன்ற எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும். இப்பொழுதல்லாம் அந்த எழுத்துக்கள் இல்லாத தமிழர்கள் பெயரே இல்லை எனலாம். எங்கிருந்து இந்த மோகம் வந்தது அல்லது ஏன் வந்தது என்பதுதான் தெரியவில்லை. கந்தசாமி,சண்முகம், குமாரசாமி, கமலா விமலா, பத்மினி போன்ற பெயர்கள் எல்லாம் பழசாகிவிட்டன போலும். யேர்மனியர்கள் இந்த பெயர் விடயத்தில் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களில் பலர் பழையதையே விருப்பத்துடன் தொடர்ந்து கொண்டு செல்கிறார்கள். எங்காவது கலப்புத் திருமணங்கள் நடக்கும் பட்சத்தில் புதுப் பெயர்கள் வந்து சேர்ந்து கொள்வது இயல்பு. ஒவ்வொரு வருட இறுதியிலும் அந்த ஆண்டு பிறந்த குழந்தைகளுக்குச் சூட்டப்பட்ட பெயர்களில் எந்தப் பெயர்…

  6. ரஷ்யாவில் புத்தாண்டு தினத்தன்று நிகழ்த்த திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதற்காக, அதிபர் டிரம்ப்புக்கு ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் நன்றி தெரிவித்தார். பீட்டர்ஸ்பெர்க் நகரில் தாக்குதல் நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ரஷிய பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் சந்தேகப்படும்படியாகக் கைது செய்யப்பட்ட இரு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர்களிருவரும் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்த பொருள்களைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். இந்நிலையில், சரியான நேரத்தில் தகவல் அளித்ததற்காக டிரம்ப்புக்கு அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் வெளியிட…

    • 0 replies
    • 428 views
  7. சூடானில், பாதுகாப்பு படையினர் 27 பேருக்கு மரணதண்டனை சூடானில் பாதுகாப்பு படையினர் 27 பேருக்கு மரணதண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அகமது அல் காஹிர் என்ற பள்ளி ஆசிரியர் கொலை தொடர்பாக பாதுகாப்புபடையினர் 27 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று இடம்பெற்றது. இதில் பாதுகாப்பு படையினர் 27 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்கப்பட்டன. இதனையடுத்தே அவர்கள் 27 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்கள் அதிகம் சாப்பிடக்கூடிய ரொட்டி உட்பட அத்தியாவசிய பொருட்…

  8. ஆயுத தயாரிப்பில் அமெரிக்காவை முறியடித்துள்ள ரஷ்யா: உலக நாடுகளுக்கு சவால் விடுத்தார் புடின் உலக நாடுகளை ஒட்டுமொத்தமாக வியப்பில் ஆழ்த்தும் வகையில் புதிய ஆயுத சோதனையை ரஷ்யா முன்னெடுத்துள்ளது. இந்த புதிய ஆயுதத்தை எந்த நாட்டு இராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் சவால் விடுத்துள்ளார். அத்துடன், உலகில் ஹைபர்சொனிக் ஏவுகணையை (Hypersonic Weapons) வெற்றிகரமாக ஏவிய முதல்நாடு என்ற பெருமையை கைவசப்படுத்தியதாக புடின் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் இராணுவ உயரதிகாரிகளுடனான சந்திப்புக்கு பின்னர் முக்கிய ஊடகங்களிடம் தகவல் வெளியிட்ட புடின், “உலக வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவை விட ஒருபடி மேலே சென்று புதிய ஆயுதம் ஒன்றை ரஷ்யா கைவசப்படுத்தியுள…

    • 2 replies
    • 541 views
  9. சீனாவில், 5 லட்சம் உய்குர் இன இஸ்லாமிய குழந்தைகளை, உறைவிட பள்ளிகளுக்கு அனுப்பி, அந்நாட்டு அரசாங்கம் படிக்க வைப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் ஒன்றான சிஞ்ஜியாங்கில் ((Xinjiang)), தனித்துவ அடையாளங்களோடு வாழும் உய்குர் இன மக்களில், இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் பெருமளவில் உள்ளனர். உய்குர் இன மக்களுக்கு எதிரான சீன அரசின் மனித உரிமை மீறல்கள், பன்னாட்டளவில் புகாராக எழுந்துள்ளது. சிஞ்ஜியாங் மாகாணத்தில் ராணுவ துருப்புகளை குவித்திருக்கும் சீன அரசு, 10 லட்சம் உய்குர் இன ஆண்களையும், பெண்களையும் பிரித்து, தடுப்பு முகாம்களுக்கு அனுப்பிவிட்டு, அவர்தம் குழந்தைகளை தனியாக பிரித்து வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு, பெற்றோர் இருந்த…

    • 0 replies
    • 623 views
  10. சென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடத்தில் செல்ல உதவும் தொழில்நுட்பம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைVIRGIN HYPERLOOP ONE உங்களை ஒரு பெட்டியினுள் அடைத்து, அதை சுமார் 1,123 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு குழாயின் வழியாக சீறிப்பாயவிட்டால் நீங்கள் பொதுவாக பல மணிநேரங்களில் சென்றடையும் இடத்தை இதன் மூலமாக சில நிமிடங்களில் சென்றடைய முடியும். இதுதான் ஹைப்பர்லூ…

    • 2 replies
    • 3.2k views
  11. உலகின் பிரபலமான இளம்பெண்ணாக மலாலா ஐ.நாவினால் தெரிவு December 28, 2019 கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாயைதெரிவு செய்து ஐ.நா கௌரவித்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு பெண்களின் கல்விக்காக போராடிய மலாலா தலீபான் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார். அதன்பின்னர் அவர் சர்வதேச அளவில் பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுக்க தொடங்கினார். 2014-ம் ஆண்டு அவருக்கும், இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2017-ம் ஆண்டு ஐ.நா.வின் அமைதிக்கான தூதரானார். மலாலா யூசுப்சாயின் அயராத உழைப்பு, கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவு…

  12. சோமாலிய கார் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 60 ஆக உயர்வு! Published by J Anojan on 2019-12-28 15:49:03 Share சோமாலியாவின் தலைநகர் மொகதீஷுவில் இன்று காலை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் தொகை 60 ஆக அதிகரித்துள்ளதாக 'Sky News' சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இந்த தாக்குதல் காரணாக மேலும் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளமையினால் உயிரிழப்புகள் அதிரிக்கக்கூடும் எனவும் அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் காரணமாக பொது மக்களும், பல்கலைக்கழக மாணவர்களுமே அதிகாக பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மொகதீஷுவில் …

  13. அமெரிக்காவின் எதிரிநாடுகளுடன் சீனா கூட்டுப் பயிற்சி: மறைமுக தாக்குதலுக்கு முயற்சியா? அமெரிக்காவின் எதிரிநாடுகளான ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இணைந்து கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட சீனா தயாராகி வருகின்றது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக நீடித்துவந்த வர்த்தக போர் அண்மையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சில நாட்களிலேயே சீனா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் சீனா இத்தகைய அறிவிப்பை நேற்று (வியாழக்கிழமை) சீன கடற்படை செய்தித் தொடர்பாளர் குவின் வெளியிட்டார். ரஷ்யாவுடன் வல்லரசு நாடு என்ற பிரச்சினை, சீனாவுடன் வர்த்தக போர், ஈரானுடன் அணுசக்த…

  14. நைஜீரியாவில் 11 கிறிஸ்தவர்களை தலையை துண்டித்து படுகொலைசெய்துள்ளதாக ஐஎஸ் ஆதரவு அமைப்பொன்று அறிவித்துள்ளதுடன் இது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. கடந்த ஒக்டோபரில் தங்கள் தலைவர் அபு பக்கர் அல்பக்தாதி கொல்லப்பட்டமைக்கு பழிவாங்குவதற்காகவே இதனை செய்துள்ளதாக ஐஎஸ் ஆதரவு அமைப்பான ஐஎஸ்டபில்யூஏபீ தெரிவித்துள்ளது. நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் கைதுசெய்யப்பட்டவர்களையே தலையைதுண்டித்து படுகொலைசெய்துள்ளாக ஐஎஸ் ஆதரவு அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட வீடியோவில் 11 பேர் வரிசையாக நிற்பதை காணமுடிகின்றது. முதலில் ஒருவர் சுட்டுக்கொல்லப்படுவதையும் பின்னர் ஏனையவர்களின் தலைகள் துண்டிக்கப்படுவதையும் காணமுடிகின்றது. இதன் பின்னர் அந்த வீடியோவில் தோன…

    • 0 replies
    • 350 views
  15. நோர்வே இளவரசியின் முன்னாள் கணவன் தற்கொலை! நோர்வே நாட்டின் இளவரசி மார்த்தா லூயிஸின் முன்னாள் கணவரான டென்மார்க்கை சேர்ந்த பிரபல நாவலாசிரியர் அரி பென், தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் தனியாக வாழ்ந்து வந்த அரி பென் நேற்று முன்தினம் (புதன்கிழமை) தற்கொலை செய்து கொண்டதாக அவரது செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், அரி பென் எப்படி தற்கொலை செய்து கொண்டார்? இந்த விபரீத முடிவுக்கு காரணம் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை. அரி பென்னின் மறைவுக்கு நோர்வே மன்னர் ஹரால்ட் மற்றும் ராணி சோன்ஜா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரி பென், பல ஆண்டுகளாக எங்கள் குடும…

  16. துருக்கி நோக்கி படையெடுக்கும் சிரிய அகதிகள்: தனியாக சமாளிக்க முடியாது என்கிறார் எர்டோகன் சிரியாவிலிருந்து வரும் அகதிகளின் புதிய அலையை எங்கள் நாட்டால் சுமக்க முடியாது என துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல்லில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து சுமார் 30 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் துருக்கியை நோக்கி வந்திருக்கிறார்கள். இதில் சிரியாவின் வடக்கில் இட்லிப் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 80,000 பேர் துருக்கி எல்லையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். சிரிய அகதிகளின் இந்தப் புதிய அலையை துருக்கியால் மட்டும…

    • 8 replies
    • 837 views
  17. அகதிகளுக்கு மருத்துவம் வழங்கும் சட்டம் நீக்கம்: ஆஸ்திரேலிய முகாம்களில் அகதிகள் நிலை என்ன ? ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்று மருத்துவ உதவி வழங்குவதற்கு வழிசெய்த ‘மருத்துவ வெளியேற்றச் சட்டம்’ நீக்கப்பட்டுள்ளது. இந்த நீக்கம், உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட அகதிகளின் நிலைக் குறித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவு நாடுகளில் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. நவுரு முகாம்களில் உள்ள அகதிகளை, மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கலாம் என ஆஸ்திரேலியா அனுமதி வழங்கியிருந்த நிலையிலும் நவுரு அரசு அகதிகளை செ…

  18. விண்வெளி படைப்பிரிவை உருவாக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு புதிதாக விண்வெளி படைப்பிரிவை உருவாக்க வகை செய்யும் மசோதாவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கடந்த 20ம் தேதி கையெழுத்திட்டார். இதுகுறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வு குயன் ((Wu Qian)) பொது சொத்தான விண்வெளியை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்துவதையே சீனா ஆதரிப்பதாகவும், அங்கு ஆயுதப் போட்டி ஏற்படுவதை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். அமெரிக்காவின் நடவடிக்கையால், விண்வெளியில் நிலவும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், ஆதலால் அதை சீனா எதிர்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.…

    • 0 replies
    • 417 views
  19. கஸகஸ்தானில் 100 பேருடன் பயணித்த விமானம் விபத்து கஸகஸ்தான் அல்மட்டி விமான நிலையத்திலிருந்து 100 பயணிகளுடன் நர்சுல்தான் நோக்கி பயணித்த விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே அருகில் இருந்த 2 அடுக்கு மாடி கட்டடம் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் இதுவரையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் விமானத்தில் பயணித்த பயணிகளில் பலர் உயிருடன் இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. அவசர உதவி மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர…

  20. தேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை: அதிர்ச்சித் தகவல் வெளியானது மெக்சிகோவிலுள்ள தேவாலயம் ஒன்றில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் அத்துமீறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பாதிரியார்களால் குறைந்தது 175 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட உள்ளக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தேவாலயத்தில் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக விசாரிக்கப்பட்டது. இதில், 175 குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளானமை தெரியவந்துள்ளது. அந்த தேவாலயத்தை உருவாக்கிய மார்சியல் மேசியல் என…

  21. ஜப்பான் பிறப்பு விகிதம் இந்த ஆண்டு மிகவும் குறைந்து காணப்படுகிறது. மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் ஒன்றான ஜப்பானில் அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 64 ஆயிரமாகும். 1899ஆம் ஆண்டு முதலான கணக்கெடுப்பில் இதுவே குறைந்தபட்சமாகும். கடந்த ஆண்டை விட 54 ஆயிரம் குழந்தைகள் இந்த ஆண்டில் குறைந்துள்ளனர். இதே போல் கடந்த ஓராண்டில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் மக்கள் தொகையில் கணிசமான அளவுக்கு சரிவு காணப்படுகிறது. https://www.polimernews.com/dnews/94517/ஜப்பானில்-பிறப்பு-விகிதம்குறைவு--மரண-விகிதம்அதிகரிப்பு

    • 0 replies
    • 298 views
  22. வடகொரியாவின் கிறிஸ்மஸ் பரிசு தயாரா? அதிர்ச்சியில் அமெரிக்கா சர்வதேசத்தின் கருத்துகளையும், அறிவுறுத்தல்களையும் செவிமடுக்காது செயற்பட்டுவரும் வடகொரியா, ஏவுகணைகளை உருவாக்குவதற்கான தளபாடங்களின் உற்பத்தியை விரிவுபடுத்துவதாகத் தெரிகின்றது. இந்த மாதம் 31ஆம் திகதிக்குள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கு ‘கிறிஸ்மஸ் பரிசாக அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக வட கொரியா எச்சரித்துள்ள நிலையில், இந்த செய்தியானது அமெரிக்காவை சற்று அச்சமடைய வைத்துள்ளது. வட கொரியாவில் பாதுகாப்புத் தளபாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருவது கடந்த 19ஆம் திகதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் …

    • 4 replies
    • 846 views
  23. பிரான்ஸ் போராட்டம்: எல் ஓபரா டி பரிஸ் அரங்கிற்கு 8 மில்லியன் வருவாய் இழப்பு! பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தினால், எல் ஓபரா டி பரிஸ் அரங்கிற்கு 8 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலுவடைந்துவரும் இந்த போராட்டத்தினால், எல் ஓபரா டி பரிஸ் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பல நிகழ்ச்சிகளுக்கு முன்னதாகவே நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சி இரத்து பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமாக இதுவரை டிசம்பர் 5 ஆம் திகதியின் பின்னர் 45 நிகழ்ச்சிகளை இரத்துச் செய்துள்ளததாகவும், இதனால் எட்டு மில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.