Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கொவிட்-19 தடுப்பூசிக்கான முதல் மருத்துவ பரிசோதனையை ஆரம்பித்தது ஜேர்மனி! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான தடுப்பூசிக்கான முதல் மருத்துவ பரிசோதனையை ஜேர்மன் உயிர் மருந்து தயாரிப்பு நிறுவனமான க்யூர்வாக் (CureVac) ஆரம்பித்துள்ளது. டூபிங்கன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இந்த சோதனையில், 18 முதல் 60 வயதுக்குட்பட்ட 100 இற்க்கும் மேற்பட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். முதல் சோதனை முடிவுகள் இரண்டு மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜேர்மன் செய்தி வலைத்தளமான ஃபோகஸ் தெரிவித்துள்ளது. தடுப்பூசிக்கு மனித சகிப்புத்தன்மையையும், அதற்கு மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் விஞ்ஞானிகள் கண்டறிய முயற்சிக்கின்றனர் என்று சோதனைக்கு பொறுப்பான பேராசிரிய…

  2. ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவாவில் உள்ள கொயின்டிரின் விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என ஜெனிவா பொலிஸாருக்கு காலை 9.30 மணியளவில் தொலைபேசி வாயிலாக எச்சரிக்கை தகவலொன்று வந்துள்ளது. இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு விரைந்து சென்று பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர், மேலும் பயணிகளையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு, விமான நிலையத்தில் ஏதேனும் வெடிகுண்டு உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர்.ஆனால், வெடிகுண்டுகள் ஏதேனும் தென்படவில்லை, இந்நிலையில் தங்களுக்கு வந்த அ…

  3. கொண்டாடுவோம்! இது வீரத்தின் திருநாள். ஒரு வெடிகுண்டுத் தாக்குதலை விடவும் தற்கொலைப்படைத் தாக்குதலை விடவும் வலிமையானது இந்தத்தாக்குதல். வீரம் செறிந்தது இந்த நடவடிக்கை. மாவீரன் ஸய்தி ! முன்தாதர் அல் ஸய்தி - உண்மையிலேயே ஒரு மாவீரன்தான். அமெரிக்க வல்லரசின் இராணுவம், அதன் உளவுத்துறைகள், அதிபரின் சிறப்புப் பாதுகாப்புப் படைகள்..‏ இவர்களெல்லாம் மூடர்கள் என்றோ முன்யோசனை அற்றவர்கள் என்றோ நாம் சொல்லிவிட முடியாது. அமெரிக்க சிப்பாய்களின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்யும் பொருட்டு, சமீபத்தில் இராக்கில் குழந்தைகளுக்கான பொம்மைத் துப்பாக்கிகளின் விற்பனையைக் கூடத் தடை செய்திருக்கிறது அமெரிக்க இராணுவம். நான்கு ஆண்டுகளாக அமெரிக்க இராணுவம் இராக்கை சலித்து வி…

  4. அமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை அமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிககை விடுத்து உள்ளனர். பதிவு: ஜூலை 07, 2020 12:17 PM நியூயார்க் மிக அரிய வகை மூளையைத் தின்னும் அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என அமெரிக்காவின் புளோரிடா மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். நெக்லேரியா பவுலேரி என்ற இந்த மிக நுண்ணிய அமீபாவால் ஹில்ஸ்பாரோ கவுன்டியில் உள்ள ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏரியில் நீந்தும் போது மூக்கு வழியாக, தண்ணீர் மூலம் உடலில் நுழைந்துள்ளது இந்த மிக நுண்ணிய அமீபா இது ஒரு செல் மட்டுமே உடையது. இந்த அமீப…

  5. தென்னாபிரிக்காவில் தேவாலயமொன்றில் இடம்பெற்ற மோதல்: 5 பேர் உயிரிழப்பு! தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பேர்க்கிற்கு அருகிலுள்ள பழங்கால தேவாலயத்தில் இடம்பெற்ற மோதலையடுத்து 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தேவாலயத்தில் இன்று (சனிக்கிழமை) காலை அங்கிருந்தவர்களை ஆயுதம் தாங்கிய குழுவினர் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த தேவாலயத்தின் தலைமை தொடர்பாக தொடர்ந்துவந்த பிரச்சினையின் ஒரு கட்டமாக ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில் தாக்குதல் நடத்த முனைந்த ஆண்கள் குழுவொன்றின் 40 பேரை கைதுசெய்துள்ளதாகவும் மேலும் 6 பேர் காயமடை…

  6. இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ரானை படிக்க மறுத்த 7 வயது சிறுவனை கம்பால் அடித்தும், நெருப்பால் சுட்டும் கொடுமைப்படுத்தி, கொலை செய்த 33 வயது தாயார் ஒருவருக்கு ஆயுள் தனடனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. (கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுவனும், சிறுவனைக் கொன்ற தாயும்) இங்கிலாந்தின் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள Cardiff Crown Court என்ற நீதிமன்றத்தில் நேற்று ஒரு பரபரப்பான தீர்ப்பு அளிக்கபட்டது. Sara Ege, என்ற 33 வயது பெண் ஒருவர், தன்னுடைய 7 வயது சிறுவனை குர்ரான் படிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். விளையாட்டு பருவத்தில் இருந்த அந்த சிறுவன், குர்ரான் படிப்பதில் கவனம் செலுத்தவில்லை என்ற காரணத்தால், அந்த சிறுவனை கம்பால் அடித்தும், நெருப்பால் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார் அந்த தாய். …

    • 0 replies
    • 1.4k views
  7. சட்டவிரோதமாக தங்கியவர்களுக்கு குடியுரிமை தரப் போகிறதாம் அமெரிக்கா! Jan 30 2013 01:22:12 சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருவதாகக் கருதப்பட்ட 2,40,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு க்ரீன் கார்டு வழங்குவது குறித்து அமெரிக்கா தீவிரமாக பரிசீலித்து வருகிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செனட்டர்கள் இந்த மாற்றம் அவசியம் எனக் கருதியதால் இதற்கான முதற்கட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து மட்டும் 60 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கும் குடியுரிமை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக குடியேற…

  8. குடியேறிகள் தொடர்பாக ஹங்கேரியின் வாக்கெடுப்பு ஆபத்தான விளையாட்டு' அகதிகளை ஏற்றுக் கொள்வது தொடர்பாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துவதன் மூலம் ஹங்கேரி அரசு ஆபத்தானதொரு விளையாட்டை மேற்கொண்டுள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்டின் ஷூல்ஸ் எச்சரித்திருக்கிறார். ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்டின் ஷூல்ஸ் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே குடியேறிகளை பகிர்ந்து கொள்வதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள "கோட்டா முறையை" ஏற்று கொள்வதா, மறுப்பதா என்பது தொடர்பாக ஹங்கேரி மக்கள் இன்று வாக்களிக்கின்றனர். இந்த கோட்டா முறைக்கு எதிராக பரப்புரை மேற்கொண்ட ஹங்கேரி பிரதமர் விக்டோர் ஒர்பான், ஐரோப்பிய சட்டங்களின் சட்டபூர்வ தன்மைக்கு சவால் விடுத்து…

  9. ஜேர்மனியில் ஹிட்லரின் படங்களைப் பகிர்ந்து கொண்ட 29 பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்! ஜேர்மனியில் வலதுசாரி கருத்துக்களைப் பரப்பிய, 29 பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடோல்ஃப் ஹிட்லரின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டதற்காகவும், கறுப்பின மக்கள் சுட்டுக் கொல்லப்படுவது மற்றும் எரிவாயு அறைகளில் அகதிகளைக் காட்டும் வன்முறை நவ-நாஜி பிரச்சாரங்களுக்காகவும் இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என்.ஆர்.டபிள்யூ உட்துறை அமைச்சர் ஹெர்பர்ட் ரியால் ஒரு விசாரணையைத் தொடங்கி, இந்த சம்பவத்தை ‘என்.ஆர்.டபிள்யூ பொலிஸாருக்கு அவமானம்’ என்று முத்திரை குத்தியுள்ளார். 34 பொலிஸ் நிலையங்கள் மற்றும் தனியார் வீடுகளில் 200க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ச…

  10. மதம் சார்ந்து சமூகம் சார்ந்து.. தம்மை புனிதர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் மனிதர்கள்.. உண்மையில் இறை நம்பிக்கைக்காகவாவது பாத்திரமாக இருந்து.. தம்மை தம்மளவில் புனிதர்களாக வைத்திருப்பது அவர்களின் மனச்சாட்சிக்கு அழகு..! முடியாதவர்கள் அதில் இருந்தும் விலகி குடும்ப வாழ்வில் இணைந்து கொள்வதும் அழகு. இவ்வளவு காலமும் மக்கள் முன்னால் தன்னை மதப் புனிதராகக் காட்டிக் கொண்ட.. பிரிட்டனின் (ஸ்காட்லாந்துக்குரிய) மதிப்புக்குரிய கிறிஸ்தவ மதத் தலைவரான Cardinal Keith O'Brien தனது சக பாதிரிமாரோடு தவறான பாலினத்தொடர்பு.. வைத்திருந்த குற்றச்சாட்டினை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டு தன்னை அதில் இருந்தும் மன்னிக்கக் கேட்டுள்ளார். இவர் வெளிப்படையாக தன்னை ஒரு மதப் புனிதராகக் காட்டிக்கொண்டாலும் உள்…

  11. ஒபாமா நிர்வாகத்தின் கடுமையான விமர்சகரை அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தார் டிரம்ப் அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகம் மீது தீவிர விமர்சனம் செய்து வரும் ஒரு ஒய்வு பெற்ற ராணுவத் தளபதியை, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். மைக்கேல் ஃபிளின் அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு முகமையின் இயக்குநராக கடந்த 2014-ஆண்டு வரை, இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகித்த மைக்கேல் ஃபிளின், பாதுகாப்பு தொடர்பான அம்சங்களில் டொனால்ட் டிரம்புக்கு பல மாதங்களாக ஆலோசனை வழங்கி வருகிறார். தற்போதைய ஒபாமா அரசின் நிர்வாகத்தை, பொதுவான உலக விவகாரங்களில் அதன் அணுமுறையையும், மேலும் குறிப்பாக இஸ்லாமிய அரசு என்று தங்கள…

  12. பிரதமராவதற்கு முன்பு ஸ்வீடன் நிறுவனங்களுக்கு 'தரகராக' செயல்பட்டார் ராஜிவ் காந்தி? Posted by: Mathi Published: Monday, April 8, 2013, 10:11 [iST] டெல்லி: நாட்டின் பிரதமராவதற்கு முன்பு விமானியாக பணிபுரிந்த போது ஸ்வீடன் நிறுவனங்களுக்கான தரகராக ராஜிவ்காந்தி செயல்பட்டிருக்கிறார் என்று விக்கிலீக்ஸ் அதிரடி தகவல்களை வெளியிட்டிருக்கிறது. தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ் தகவல்களின்படி 1970களில் ஸ்வீடன் நிறுவனமான சாப்-ஸ்கானியா இந்தியாவுக்கு போர் விமானங்களை விற்பனை செய்ய முன்வந்தது. இதில் ராஜிவ் காந்தி இடைத்தரகாக செயல்பட்டிருக்கிறார். இந்தியாவின் போர் விமான கொள்முதலில் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் …

  13. வெடிப்பதற்கு தயாராகியுள்ள எரிமலை – 39000 வருடங்களுக்கு பிறகு நடக்கவிருக்கும் பேரழிவு பல வருடங்களாக அமைதியாக இருந்த கேம்பி பிளக்கெரி எரிமலையானது தற்போது வெடிக்கும் நிலையில் உள்ளதாக இத்தாலிய எரிமலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் நப்லி நகரத்தை அண்மித்தப் பகுதியிலுள்ள கேம்பி பிளக்கெரி எனும் எரிமலையானது தற்போது வெடிப்பதற்கு தயாராகி ஆபத்தான நிலையை அடைந்துள்ளதாக இத்தாலிய எரிமலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எரிமலை ஆய்வியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு எரிமலையின் மக்மா தீக்குழம்பு திரவ வெளியீட்டு நிலையை கண்டுப்பிடித்துள்ள சம்பவம் இதுவாகும். இவ் எரிமலை வெடிக்குமாயின் சுமார் 5 இலட்சம் பேர் பாதிப்படையும் நிலை உள்ளதாகவும் ஆய…

  14. தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான் Digital News Team வளைகுடாவில் தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியுள்ளது. வளைகுடா கடற்பரப்பில் ஈரானின் புரட்சிகர காவல்படையினர் தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளனர் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வளைகுடாவை இரசாயனங்களால் அசுத்தப்படுத்திக்கொண்டிருந்த தென்கொரிய எண்ணெய்கப்பலை ஈரானின் புரட்சிகர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர் எனஈரானின் தொலைக்காட்சி உட்பட பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹங்குக்செமி என்ற கப்பலை ஈரானின் புரட்சிகர காவல்படையினர் பாதுகாப்பாக அழைத்துவருவதை டஸ்னிம் செய்தி முகவர் அமைப்பு காண்பித்துள்ளது. தென்கொ…

  15. ஓடுபாதையில் இருந்து விலகி நேபாள விமானம் ஆற்றில் இறங்கியது: விமானிகள் உள்பட 9 பேர் காயம் நேபாள நாட்டில் பசுமைமிக்க மலைகள் சூழ்ந்த ஏராளமான சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக அன்னபூர்னா பகுதியில் மலை ஏறும் பயிற்சி அளிக்கப் படுகிறது. இதனால் அங்கு வெளிநாட்டு பயணிகள் குவிகிறார்கள். இந்நிலையில் நேபாள நாட்டிலுள்ள சுற்றுலா தலமான பொக்காரா என்ற இடத்திலிருந்து நேபாள ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 3 விமானிகள், 8 ஜப்பான் நாட்டினர் உள்பட 21 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் காலை 8.30 மணி அளவில் ஜோம்சோம் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது விமானம் எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று அருகேயுள்ள காளி-கண்டகி ஆற்றில் இறங்கியது. இந்த விபத்தில…

    • 0 replies
    • 380 views
  16. மியான்மர் இராணுவத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் மீது பிரித்தானியா, கனடா பொருளாதாரத் தடை 22 Views மியான்மர் இராணுவத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் மீது பிரித்தானியா மற்றும் கனடா நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. கடந்த வாரம் மியான்மர் இராணுவ அதிகாரிகள் மீதும் அவர்கள் குடும்பத்தினர் மீது அமெரிக்க பொருளாதாரத் தடையை விதித்தது இந்த நிலையில் பிரித்தானியாவிலும், கனடாவும் மியான்மரின் 9 இராணுவ அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதுகுறித்து பிரித்தானியா வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ நாங்கள் எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து மியான்மர் மக்களுக்கு நீதி கிடைக்க இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடு…

  17. டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளில் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிப் பயன்பாடு நிறுத்தம்! டென்மார்க்கில் இரண்டு வாரங்களுக்கு அஸ்ட்ரா செனேகாவின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவது இடைநிறுத்தப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர். இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு கடுமையான இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என்பதன் அடிப்படையில் இது இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்படக்கூடிய கடுமையான பக்கவிளைவுகள் குறித்த அறிக்கைகளுக்கு டென்மார்க் மருந்துகள் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என டென்மார்க் சுகாதார ஆணையத்தின் இயக்குநர் சோரன் ப்ரோஸ்ட்ரோம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த விளைவுகள் கு…

  18. அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு; ஒரு வாரத்தில் இரண்டாவது இந்தியர் மீது தாக்குதல் அமெரிக்காவில் உள்ள சியாட்டில் புறநகர் பகுதியில் சீக்கிய மதத்தை சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய துப்பாக்கித்தாரியை போலீஸார் தேடி வருகின்றனர். படத்தின் காப்புரிமைJEWEL SAMAD / AFP / GETTYIMAGES இந்த தாக்குதலில் கையில் குண்டு பாய்ந்த சீக்கிய நபருக்கு 39 வயதாகிறது. அவர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. ''சொந்த நாட்டிற்கு திரும்பிச்செல்'' என்று துப்பாக்கித்தாரி அந்த சீக்கிய நபரை பார்த்து கூச்சலிட்டவாறு துப்பாக்கியால் சுட்டதாக சியாட்டல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஓலெத் துப்பாக்கிச்சூடு : …

  19. மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் மீது தாக்குதல்! மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற்றும் ரொக்கெட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மத்திய நகரமான மக்வே அருகிலுள்ள ஒரு விமானத் தளத்தில் மூன்று குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாகவும் குண்டு வெடிப்புக்குப் பின்னர் குறித்த பகுதியில் பாதுகாப்பு சோதனைகள் முடுக்கிவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர், மக்வேயின் வடகிழக்கில் மெய்க்டிலாவில் உள்ள நாட்டின் முக்கிய விமானத் தளத்தில் ஐந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவ சதித் திட்டத்துக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் மேற்…

  20. பாக்தாத்: சிறைச்சாலைகளில் விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடத்தி சிறைக்கைதிகளாக உள்ள 1000க்கும் மேற்பட்ட அல்-கொய்தா தீவிரவாதிகளை விடுவித்துள்ளது ஜிஹாத் அமைப்பு. ஈராக்கின் தாஜி மற்றும் அபு கரிப் நகரங்களில் உள்ள 2 சிறைச்சாலைகளில் சாதாரணக் கைதிகளோடு இணைந்து, ஆயிரக்கணக்கான அல்-கொய்தா தீவிரவாதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று முந்தினம் இரவு அச்சிறைகளின் மீது தாக்குதல் நடத்திய ஜிஹாத் அமைப்பினர். இதில் சுமார் ஆயிரம் கைதிகள் தப்பி ஓடியதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று ஜிஹாத் அமைப்பினர் ட்வீட்டரில் வெளியிட்டுள்ள தகவலில் ‘தாங்களே சிறைச்சாலைகள் மீது தாக்குதல் நடத்தி சுமார் ஆயிரம் அல்-கொய்தா தீவிரவாதிகளை விடுவித்து சென்றோம்' என தெரிவித்துள்ளனர். கைதிகள் தப்பியோடி…

  21. சென்னை, ஜூலை 31 (டி.என்.எஸ்) பசுமை வீடுகள் கட்டுவதற்காக ரூ.1260 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வீட்டு வசதி என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத அடிப்படைத் தேவையாகும். மேலும், ஒரு வீட்டின் உரிமையாளர் என்ற நிலை ஒருவருக்கு பொருளாதாரப் பாதுகாப்பு அளிப்பதோடு சமுதாயத்தில் கவுரவமாகவும் வாழ்வதற்கு வழி ஏற்படுத்துகிறது. முதல்வர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றவுடன், கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கென வீடுகள் கட்டுவதற்காக “முதல்வரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்” என்ற ஒரு புதுமையான திட்டத்தினை துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்படி சூ…

  22. நேட்டோ படைகளின் ஆபத்தை எதிர்கொள்ள 20 இராணுவப் பிரிவுகளை ஆரம்பிக்க ரஷ்யா திட்டம்! நேட்டோவின் வளர்ந்து வரும் அச்சுறுத்தல் காரணமாக, ரஷ்யா தனது நாட்டின் மேற்கு பகுதியில் புதிதாக 20 இராணுவப் பிரிவுகளைத் தொடங்கவுள்ளது. உயர் இராணுவ அதிகாரிகளுடன் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டத்தின்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொய்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்ய எல்லைகள் அருகே அமெரிக்காவின் போர் விமானங்கள் பறப்பதும், நேட்டோவின் போர்க் கப்பல்கள் நிறுத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. நேட்டோ கூட்டணி படைகள் அடிக்கடி போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் சர்வதேச பாதுகாப்பு நடைமுறையை தகர்க்கின்றன. மேலும், பொருத்…

  23. முகக் கவச, கட்டுப் பாடுகளை... நீக்கியது இத்தாலி! எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என இத்தாலிய அரசாங்கம் மக்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவடைந்து வரும் நிலையில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஆஸ்டா பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அரசின் இந்த தளர்வுகள் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வடமேற்கு இத்தாலியில் ஒரு சிறிய பகுதியைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் பாதுகாப்பான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் க…

  24. வீரகேசரி நாளேடு - தென் ரஷ்யாவில் பொலிஸ் நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் பலியானதுடன் 50 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இன்குஷெதியா குடியரசின் பிரதான நகரான நஸ்ரனிலுள்ள பொலிஸ் நிலையத்திலேயே இக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதலானது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. பொலிஸ் நிலையத்தின் வளாகத்தில் உத்தியோகத்தர்கள் கூடியிருந்த வேளையில், தற்கொலை குண்டுதாரி எரிபொருள் நிரப்பப்பட்டிருந்த வாகனத்தை பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலின் அருகிலுள்ள மதில் மீது மோதி வெடிக்க வைத்துள்ளார். இக் குண்டு வெடிப்பையடுத்து பொலிஸ் நிலைய வளாகத்திலிருந்த கார்கள் பலவும் தீப்பற்றி எரிந்தத…

  25. சிரியாவுக்கு எதிராக ஒருதலைப்பட்ச இராணுவ நடவடிக்கை கூடாது: ரஷ்ய அதிபர் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 செப்டம்பர், 2013 - 09:43 ஜிஎம்டி Facebook Twitter Google+ பகிர்க நண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக ரஷ்ய அதிபர் புடின் சிரியாவுக்கு எதிராக மேற்குலகம் ஒருதலைப்பட்சமாக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் சிரியாவின் அரசு தனது நாட்டு மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால், ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் அதன் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், அப்போதும் ரஷ்யா நிச்சயம் எதிர்க்கும் என்று தான் கூறவில்லை என புடின் கூறினார். உலகின் மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.