உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26870 topics in this forum
-
எனது தாயின் வாழ்வுடன் விளையாடிய அதேசக்திகள் எனது மனைவியின் வாழ்க்கையுடனும் விளையாடுகின்றன- இளவரசர் ஹரி உருக்கம் எனது தாயின் வாழ்வுடன் விளையாடிய அதேசக்திகள் எனது மனைவியின் வாழ்க்கையுடனும் விளையாடுகின்றன என பிரிட்டிஸ் இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்கிலேயின் தனிப்பட்ட கடிதமொன்றை மெயில் ஞாயிறுபதிப்பில் வெளியிட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே ஹரி இதனை தெரிவித்துள்ளார். ஹரி மெயிலிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளார். மெயிலின் ; இந்த நடவடிக்கையை ஹரி தனது மனைவிக்கு எதிரான ஈவிரக்கமற்ற நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார். தனது தாய்க்கு எதிராக மேற்கொள்ளப்பட…
-
- 0 replies
- 557 views
-
-
ஹொங் கொங்கில் ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு – இளைஞர் படுகாயம் ஹொங் கொங்கில் பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதில் முதல் தடவையாக ஒரு இளைஞர் படுகாயடமந்துள்ளார். இன்று தாய்ஹா வீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பெற்றோல் குண்டு தாக்குதலை நடத்த முற்பட்ட இளைஞர் மீதே பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவரை மருத்துவகிசிச்சைக்காக பொலிஸார் எடுத்துச்செல்லும் காணொளிகள் வெளியாகியுள்ளன. இதேவேளை கறுப்பு உடையணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இரும்புதடிகளால் பொலிசாரை தாக்குவதை காணொளிகளும் வெளியாகியுள்ளன. சீனா மக்கள் குடிய…
-
- 0 replies
- 342 views
-
-
உலக மக்களின் நலனுக்காக ஐ.நாவில் ஆவேச கேள்விகளால் அரசியல்வாதிகளை துளைத்தெடுத்த கிரேட்டா தன்பெர்க். இந்த பூவுலகு மீது பேரன்பு கொண்ட அனைவரும் கேட்க வேண்டிய உரை.
-
- 0 replies
- 284 views
-
-
ஆளில்லா உளவு விமானங்களைத் துல்லியமாகக் தாக்கி அழிக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு! ஆளில்லா உளவு விமானங்களைத் துல்லியமாகக் தாக்கி அழிக்கும் நவீன கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ரேதியான் என்ற ஆயுதத் தயாரிப்பு நிறுவனம் இந்த நவீன கருவியினை தயாரித்துள்ளது. அத்துடன், குறித்த அதிநவீன கருவியினை 16.28 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்க இராணுவம் கொள்வனவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆளில்லா உளவு விமானங்கள் வரும் திசையைக் கண்டறிந்து குறிப்பிட்ட தொலைவுக்கு முன்னரே மின் காந்த அலைகளை செலுத்துவதன் மூலம் அவற்றை வீழ்த்த முடியும் என கூறப்படுகின்றது. இதன் மூலம் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்படும் என அமெரி…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஈரான் விவகாரம் – எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும் என சவுதி எச்சரிக்கை ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சவுதி அரசாங்கத்திற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான அரம்கோ மீது கடந்த 14ஆம் திகதி வான்வழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக, எண்ணெய் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் எ…
-
- 0 replies
- 323 views
-
-
மேசைக்கு கீழே பொறிஸ்ஜோன்சனின் கை சில்மிசம் செய்தது- பல வருடங்களிற்கு முன்னர் பாதிக்கப்பட்ட பெண் பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சன் இருபது வருடங்களிற்கு முன்னர் இரு பெண்களுடன் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார். சார்லொட் எட்வேர்டஸ் என்ற பத்தி எழுத்தாளர் 20 வருடத்திற்கு முன்னர் பொறிஸ்ஜோன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என சண்டேடைம்ஸில் எழுதியுள்ளார். 1999 இல் நான் ஸ்பெக்டேட்டர் சஞ்சிகையின் ஆசிரியராகயிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். மதிய உணவின் பின்னர் நான் இதனை எனது சக ஊழியரிடம் தெரிவித்துள்ளேன்,அதற்கு பொறிஸ்ஜோன்சன் தன்னிடமும் அவ்வாறு நடந்துகொண்டார் என …
-
- 0 replies
- 831 views
-
-
பாகிஸ்தானுடன் இணைந்து காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா முன்வர வேண்டும் என மலேசியப் பிரதமர் துன் மகாதீர் மொஹமத் வலியுறுத்தி உள்ளார். ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74ஆவது பொதுப் பேரவையில் உரையாற்றிய அவர், ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்தார். காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐ.நாவின் தீர்மானம் உள்ள போதிலும், அப்பகுதி வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஆக்கிரமிப்பின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்றாலும், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தவறானது என்று மகாதீர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். எனவே அமைதியான வழிமுறைகளின் மூலம் காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இல்லையெ…
-
- 0 replies
- 450 views
-
-
சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணம் தென்னிந்தியா அளவுக்குப் பரந்து விரிந்தது. இங்கே, உய்குர் இன முஸ்லிம் மக்கள் லட்சக்கணக்கில் வாழ்கின்றனர். இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இஸ்லாமிய மக்கள் நினைத்த மாத்திரத்தில் தொழுகை நடத்தி விட முடியாது. தலையில் தொப்பி அணிந்துகொள்ள முடியாது. குரான் படிக்கக் கூடாது, முஸ்லிம் மக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜானுக்கு நோன்பு இருத்தல் கூடாது, பெண்கள் தலையில் பர்தா அணியக் கூடாது, இஸ்லாம் மத சம்பந்தப்பட்ட துண்டு பத்திரிகை அச்சடித்துவிடக் கூடாது. இப்படிப் பல 'கூடாது'களை சீன அரசு முஸ்லிம் மக்களுக்குக் கட்டுப்பாடாக விதித்துள்ளது. மீறுபவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள். சந்தேகம் ஏற்பட்டால் எந்தக் கேள்வியும் கிடையாது. பிடித்து முகாம்களில் அடைத்துவி…
-
- 0 replies
- 731 views
-
-
பாரிய தாக்குதலின் பின்னர் நூற்றுக்கணக்கான சவுதிஅரேபிய படையினரை உயிருடன் பிடித்துள்ளோம்- யேமன் கிளர்ச்சியாளர்கள் தெரிவிப்பு சவுதிஅரேபியாவின் எல்லைப்புறநகர் ஒன்றின் மீது தாக்குதலை மேற்கொண்டு அதிகாரிகள் உட்பட பெருமளவு சவுதிஅரேபிய படையினரை உயிருடன் கைதுசெய்துள்ளதாக யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். சவுதிஅரேபியாவின் நஜ்ரான் பிராந்தியத்தின் எல்லை நகரின் மீது தாக்குதலை மேற்கொண்டு படையினரையும் பெருமளவு இராணுவவாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிரிகளின் மூன்று பிரிகேட்களை வீழ்த்தியுள்ளோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் இராணுவத்தினரிற்கு எதிராக மேற்கொண்ட…
-
- 0 replies
- 351 views
-
-
அரை நிர்வாணமாக அநாகரிகமான முறையில் செயற்பட்ட இளவரசரின் உறவினர் கைது! பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதையில் அரை நிர்வாணமாக அநாகரிகமான முறையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேகனின் உறவினரான 28 வயது Thomas Dooley என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டுள்ள சந்தே நபருக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேகன் மெர்க்கலின் உறவினர் ஒருவர் கைது போதையில் அரை நிர்வாணமாக அநாகரிகமான முறையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய…
-
- 0 replies
- 641 views
-
-
அமெரிக்க தடையையும் மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவோம் – துருக்கி அறிவிப்பு அமெரிக்க தடையையும் மீறி ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை துருக்கி தொடர்ந்தும் வாங்கும் என அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார். ஈரானுடன் உறவை முறித்து கொள்வது என்பது எங்களால் முடியாத ஒன்று என்றும் ஈரானிடமிருந்து தொடர்ச்சியாக தாங்கள் கச்சா எண்ணெய்யை வாங்கவுள்ளதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். எனினும் அமெரிக்க அச்சுறுத்தல் காரணமாக தனியார் நிறுவனங்கள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அஞ்சுவதாகவும் எர்டோகன் குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவின் அச்சுறுத்தலை மீறியும் துருக்கி தொடர்ந்து ஈரானுக்கு தனது ஆதரவை அளித்து வருகின்றது. அமெரிக்க ஜன…
-
- 0 replies
- 402 views
-
-
உலகின் பெரும்பாலான தற்கொலை குண்டு தாக்குதல்கள் தமிழ் புலிகளால்தான் நடத்தப்பட்டது என்பது குறித்து யாரும் ஆராயவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐக்கிய நாடுகள் பொது சபையில் பேசியுள்ளார்.
-
- 1 reply
- 834 views
-
-
சவுதி அரேபியா சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களை வழங்க தீர்மானம் ! சவுதி அரேபியா முதல் முறையாக சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களை வழங்க தீர்மானம் செய்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெட்ரோலிய கச்சா எண்ணெய் வளம் தவிர்த்து சுற்றுலாத் துறையின் மூலமும் வளர்க்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவர சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் திட்டமிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை முதல் முறையாக சவுதி அரேபியா வழங்குகிறது. இதுகுறித்து சவுதி அரேபியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் அகமது அல் காதீப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''சவுதி அரேபியாவை சர்வதேச சுற்றுலாவுக்…
-
- 0 replies
- 349 views
-
-
டயனா கண்ணிவெடிகள் ஊடாக நடந்த பகுதியில் இளவரசர் ஹரி- தாயின் பாரம்பரியத்தை பின்தொடர்ந்தார். ஆபிரிக்க நாடுகளிற்கான தனது பத்து நாள் சுற்றுப்பயத்தினை மேற்கொண்டுள்ள இளவரசர் ஹரி தனது தாயார் இளவரசி டயனா அங்கோலாவில் கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட அதே பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார். தனது மனிதாபிமான நடவடிக்கைகளிற்காக உலகின் பாரட்டுகளை பெற்ற இளவரசி டயனா கண்ணிவெடி ஒழிப்பிற்காக குரல்கொடுத்து வந்ததுடன் 22 வருடங்களிற்கு அங்கோலாவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள குவாம்போ நகரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கோலாவின் 27 வருட யுத்தத்தில் மிகக்கடுமையான மோதல் இடம்பெற்ற அந்த நகரம் நிலக்கண்ணிவெடிகள் நிறைந்ததாக காணப்பட்டது. டயான தற்பாதுகாப்பு கவசங…
-
- 0 replies
- 360 views
-
-
பாடசாலையொன்றில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த 300 பேர் மீட்பு- நைஜீரியாவில் சம்பவம் நைஜீரிய காவல்துறையினர் பாடசாலையொன்றில் மிகமோசமான விதத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் உட்பட 300 பேரை மீட்டுள்ளனர். நைஜீரியாவின் கடுனா நகரில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட பாடசாலையின் உரிமையாளர் தான் இஸ்லாமிய சீர்திருத்த பள்;ளியை நடத்துவதாக தெரிவித்துள்ள போதிலும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் உட்பட பலர் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து குறிப்பிட்ட பாடசாலைக்கு சென்ற காவல்துறையினர் 13 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் உட்பட பல சிறுவர்களையும் இளைஞர்களை…
-
- 0 replies
- 432 views
-
-
இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் September 26, 2019 இந்தோனேசியாவில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 5.16 மணியளவில் சீரம் பகுதியில் ரிக்டரில் 6.5 அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதன்பின்னர் காலை 6.46 மணியளவில் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் ரிக்டர் அளவில் 6.8 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் காலை 7.39 மணியளவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள சில கட்டிடங்கள் மற்றும் வீ…
-
- 0 replies
- 454 views
-
-
சாட் நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து : 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! சாட் நாட்டில் சட்ட விரோதமாக செயற்படுத்தப்பட்டு வந்த தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொவ்ரி ஃபவ்டி பகுதிகளில் 30இற்கும் அதிகமானோர் நேற்று முன்தினம் சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்து தங்கத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் மேற்பரப்பில் இருந்த மண் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில் தகவலறிந்த மீட்புக் குழுவினர் இன்று (வியாழக்கிழமை) சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கச் சுரங்கம் மண் ச…
-
- 0 replies
- 419 views
-
-
பயணத்தின் முடிவில் பயணச் சீட்டை பெறும் புதிய முறை சுவிஸ்லாந்தில் அறிமுகம்! சுவிஸ்லாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் முன்பு பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் எதிர்வரும் காலங்களில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Post Price Ticketing முறையை அறிமுகம் செய்யும் முதல்நாடு என்ற பெருமையை இதன்மூலமாக சுவிஸ்லாந்து பெற்றுள்ளது. பண நெருக்கடியோ அல்லது பயணத்தின் இடைநடுவில் உலகின் வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டாலோ அது பற்றி கவலை கொள்ளாமல் இந்த புதிய முறையின் ஊடாக பயணத்தின் முடிவில் பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும். 2020 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த திட்டம் அமுலுக்கு வரவுள்ள நிலையில், அது எந்த மாதத்தில் இருந்து செயற்பாட்டில் இருக்கும் என்ற…
-
- 0 replies
- 564 views
-
-
பீய்ஜிங் டக்ஸிங்: சீனாவின் மிகப்பெரிய புதிய ‘ஸ்டார்ஃபிஷ்’ விமான நிலையம் திறப்பு! சீனாவின் புதிய மற்றும் மிகப் பாரிய விமான நிலையம் அதன் கதவுகளை வாடிக்கையாளர்களுக்காக திறந்துள்ளது. சுமார் 11 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த பிரம்மாண்ட கட்டிடம் சீனா மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70 வது ஆண்டு நிறைவு விழாவின் போது இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் பீய்ஜிங்கில் நட்சத்திர மீன் வடிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள டக்ஸிங் விமான நிலைய கட்டிடம் ஜனாதிபதி ஷி ஜின்பிங் தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதாக சீனா டெய்லி என்ற தேசிய ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. குறித்த விமான நிலையம் சுமார் 7 லட்சம் சதுர மீட்டர்கள் அல்ல…
-
- 0 replies
- 482 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images இந்தோனீசியாவில் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வதைத் தடை செய்யும் சட்ட முன் வரைவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து இந்தோனீசியா நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த அவர்கள் மீது போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். படத்தின் காப்புரிமை Getty Images சர்ச்சைக்குரிய மசோதா திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொண்டால் ஓராண்டு சிறைத் தண்டனை. திருமணத்திற்கு வெளியே இன்னொர…
-
- 0 replies
- 697 views
-
-
தனது அரசியல் எதிராளியை வீழ்த்த வெளிநாட்டு நபர் ஒருவரிடம் உதவி கோரியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவிநீக்கம் செய்வது குறித்த முறையான விசாரணை ஒன்றை அந்நாட்டின் ஜனநாயக கட்சியினர் துவக்கியுள்ளனர். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினரும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசி, அதிபர் டிரம்ப் 'இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்' என்று கூறுகிறார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சியினரின் முயற்சிகளை ''குப்பை'' என்று வர்ணித்துள்ளார். அதிபர் டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஜனநாயக கட்சியினர் மத்தியில் பலத்த ஆதரவு இருந்தாலும், குடியரசு கட்சியின் கட்டுப்…
-
- 0 replies
- 512 views
-
-
எரிவாயு நிரப்பு ஊழியரிடம் இனவெறியுடம் செயற்பட்ட கனேடியர் கைது! கனடாவின் சாஸ்கடூன் நகரில் எரிவாயு நிரப்பு நிலையத்தின் புதிய ஊழியர் மீது இனவெறித் தாக்குதல் மேற்கொண்டதாக 45 வயது மதிக்கத்தக்க வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் இனவெறியை தூண்டும் வகையில் அமைந்திருந்ததாக அதனை நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர். ஹிதாயத் உல்லா என்பவர் வாமன் வீதியில் உள்ள எரிவாயு நிரம்பு நிலையத்தில் வழமையான காலை பணிகளை மேற்கொண்டிருந்த போது, அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ‘சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லும் படியும், இங்கு இருப்பதற்கு தகுதியற்றவன்’ என்று வன்முறையான வகையில் நடந்து கொண்டுள்ளா…
-
- 0 replies
- 556 views
-
-
போயிங் விமான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒன்றரை லட்சம் டொலர் இழப்பீடு! கடந்த காலங்களில் போயிங் 737 மெக்ஸ் விமானங்களால் நேர்ந்த உயிரிழப்புகளுக்கு இழப்பீடுகளை வழங்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி இரண்டு வெவ்வேறு விமான விபத்துக்களின் போது உயிரிழந்த 346 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சத்து 44 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்க தயாராக இருப்பதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் தயாரிப்பில் உருவான ‘‘போயிங் 737 மெக்ஸ்’’ ரக விமானங்கள் 5 மாத இடைவெளியில் எத்தியோப்பியா மற்றும் இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின. இந்தோனேஷியாவில் நேர்ந்த விபத்தில் …
-
- 0 replies
- 264 views
-
-
பாகிஸ்தான் ஊடகவியலாளரால் ட்ரம்ப் – இம்ரான்கான் செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு! காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவர் ஆவேசத்துடன் எழுப்பிய கேள்விகளால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோர் கூட்டாக பங்கு பற்றிய செய்தியாளர் மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர், நாட்டின் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு பல முக்கிய சந்திப்புகளையும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். இந்தநிலையில் நேற்று (திங்கட்கிழமை) நியூயோர்க்கில் இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இருவரும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இதன்போது, ப…
-
- 0 replies
- 911 views
-
-
சவுதி இளவரசரின் அன்புக் கட்டளையால் தனி விமானத்தில் அமெரிக்கா சென்ற இம்ரான்கான்! பாகிஸ்தானில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் இம்ரான்கான் பலவிதமான சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். இதனால் அவர் வெளிநாட்டு பயணங்களுக்காக பொது மக்கள் பயணிக்கும் சாதாரண பொது விமான சேவைகளையே பயன்படுத்தி வருகின்றார். இந்த நிலையில் இரண்டு நாட்கள் சுற்று பயணமாக பிரதமர் இம்ரான்கான் சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தார். அவருடன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, நிதி ஆலோசகர் ஹபிஸ் ஷாயிக் உட்பட உயர்மட்ட அதிகாரிகளும் சென்றிருந்தார்கள். பிரதமர் இம்ரான்கான், சவுதியின் பட்டத்து இளவரசர் மொஹம்மட் பின் சல்மானை நேரில் சந்தித்து பல்வேறு விவகாரங்…
-
- 0 replies
- 445 views
-