Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான 3 ஆவது சந்திப்பு தற்சமயம் இடம்பெறுகின்றது. வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-யுன் உடனான சந்திப்பிற்காக வட மற்றும் தென் கொரிய எல்லையின் இராணுவமயமற்ற பிராந்தியத்திற்கு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானில் கடந்த 2 தினங்கள் இடம்பெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற டொனால்ட் ட்ரம்ப், அங்கிருந்து தென்கொரிய செல்லும் வழியில், வடகொரிய தலைவரை சந்திப்பதாக அறிவித்திருந்தார். இதற்கமைய, இருவருக்கும் இடையிலான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமானது. இதன்போது முக்கியத்துவமிக்க பல விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. hirunews

  2. படத்தின் காப்புரிமைAFP சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் சாலைகளில் நடத்திய போராட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூடான் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அரசு செய்தி முகமை வெளியிட்ட செய்தியின்படி போராட்டத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 181 பேர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்களில் குறைந்தது 5 பேர் இறந்துள்ளதாக சூடான் அரசுக்கு எதிர்தரப்பினர் சார்பான மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிபர் ஒமர் அல் பஷீர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட நிகழ்வுக்கு பிறகு சூடான் கொந்தளிப்பில் இருந்து வருகிறது. சூடானை 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஒமர் அ…

    • 0 replies
    • 312 views
  3. கிழக்கு லண்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு! கிழக்கு லண்டனில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நியூஹாமின் ஈஸ்ட் ஹாமிலுள்ள ரொன் லெய்டன் வே மற்றும் வேக்ஃபீல்ட் வீதி பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, அண்மைக்காலமாக பிரித்தானியாவில் இவ்வாறான கத்திக்குத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கிழக்கு-லண்டனில்-கத்திக-2/

  4. வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்துள்ளார். ராணுவம் விலக்கப்பட்ட இந்த பகுதியில் நடைபெறும் சந்திப்புக்கு, ட்விட்டரில் திடீரென கிம்மை சந்திக்க டிரம்ப் அழைப்பு விடுத்தமையே காரணம். "அமைதிக்காக அவர்கள் இருவரும் கைக்குலுக்குவர்," என தென் கொரிய அதிபர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வடகொரியா எந்த ஒரு கருத்தும் முன்னதாக தெரிவிக்கவில்லை. வடகொரியா அணு ஆயுத பயன்பாட்டை கைவிடுத்தல் குறித்தான நின்று போன பேச்சுவார்த்தை இந்த சந்திப்பின் மூலமாக மீண்டும் தொடரும் என நம்பப்படுகிறது. ஒரே வருடத்தில் டிரம்பும் கிம்மும் மூன்றாவது முறையாக சந்தித்துக் கொள்கின்றனர். ட்விட…

    • 0 replies
    • 438 views
  5. ஜேர்மனிய குடியுரிமை சட்டத்தில் மாற்றம்! ஜேர்மனிய குடியுரிமை சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஜேர்மனிய நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டத்தில் மூன்று சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்புகளில் சேரும் இரட்டைக் குடியுரிமை கொண்டோரின் குடியுரிமை பறிக்கப்படும். எதிர்வரும் நாட்களில் வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளில் சேரும் இரட்டைக் குடியுரிமை கொண்டோர் தங்கள் ஜேர்மன் குடியுரிமையை இழக்க நேரிடலாம். இந்த விதி இரட்டைக் குடியுரிமை கொண்ட வயது வந்தோருக்கு மட்டுமே, இதனால் சிறுவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். பலதார மணம் புரிவோருக்கு ஜேர்மன் குடியுரிமை வழங்கப்ப…

  6. டுபாய் ஆட்சியாளரின் 6-வது மனைவி பிரித்தானியாவில் மாயம்? டுபாய் ஆட்சியாளரின் 6-வது மனைவி பிரித்தானியாவில் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டுபாய் ஆட்சியாளரின் 6-வது மனைவியும் ஜோர்தான் அரசரின் மகளுமான இளவரசி ஹயாவே இவ்வாறு மாயமாகியுள்ளதாக கூறப்படுகின்றது. டுபாய் ஆட்சியாளரும் பெரும் செல்வந்தருமான ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூம் என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளவரசி ஹயா விவாகரத்து கோரியதாக கூறப்படுகிறது. விவாகரத்து கோரிய நிலையில் அவர் ஜேர்மனியில் தஞ்சம் கோரியதாகவும், தனது பிள்ளைகள் இருவருடன் ஜேர்மனிக்கு தப்பியதாகவும், ஜேர்மன் தூதரக அதிகாரி ஒருவரே இதற்கு உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து இளவரசி ஹயாவின் கணவரும் செல்வாக்…

  7. மத்திய கிழக்கிற்கு அதிநவீன போர்விமானங்களை அனுப்பியது அமெரிக்கா ஈரானுடனான பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா தனது அதிநவீன எவ்22 ஸ்டெல்த் போர் விமானங்களை கட்டாரிலுள்ள தனது தளத்திற்கு அனுப்பியுள்ளது. அமெரிக்க விமானப்படையின் மத்திய கட்டளைப்பணியகம் இதனை அறிவித்துள்ளது. கட்டாரில் உள்ள உடெய்ட் விமானப்படை தளத்திற்கு போர் விமானங்கள் சென்றுள்ளன என அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. கட்டாரிற்கு அனுப்பபட்டுள்ள விமானங்களின் எண்ணிக்கையை அமெரிக்க விமானப்படை வெளியிடாத அதேவேளை விமானப்படையினால் வெளியிடப்பட்டுள்ள படத்தில் ஐந்து விமானங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க படையினரையும் அமெரிக்காவின் நலன்களையும் பாதுகாப்பதற்காகவே முதல் தடவை…

  8. கொங்கோ சுரங்க விபத்தில் 43 பேர் பலி கொங்கோவிலுள்ள தாமிரச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய ஆப்பிரிக்க - கொங்கோவில் ஜாம்பியாவின் தெற்கு எல்லைப்பகுதியின் அருகாமையில் தனியாருக்கு சொந்தமான மிகப்பெரிய தாமிரம் மற்றும் கோபால்ட் கனிமம் வெட்டி எடுக்கும் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த சுரங்கத்திலிருந்து கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் நிரந்தர அடிப்படையிலும் ஒப்பந்த அட்டிப்படையிலும் பல நூற்றுக்கணகான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கபோல் இந்த சுரங்கத்தில் பணிகள் நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக சுரங்கத்துக்குள் மண்சரிவு ஏற்பட்டதில் பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். …

  9. ஈரான் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை - ட்ரம்ப் ஈரான் பிரச்சினைக்கு தீர்வுகான காலக்கெடு எதுவும் இல்லை. நிறைய அவகாசம் இருக்கிறது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வல்லரசு நாடுகளுடன் ஈரான் ஏற்படுத்திய அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதால் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் உருவானது. இந்த மோதல் நாளுக்கு நாள் முற்றி விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இரு நாடுகளும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், மாநாட்டுக்கு மத்தியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் ஈரான் பிரச்சினை குறித்த…

  10. படத்தின் காப்புரிமை BRENDAN SMIALOWSKI அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்கள் சிலவற்றுக்கு இந்தியா விதித்துள்ள புதிய வரிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள அதிபர் டிரம்ப், இந்தியா அதனை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமையை திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூன் மாதத் தொடக்கத்தில் 28 அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா புதிய வரிகளை விதித்தது. இன்று ஜப்பானின் ஒசாகாவில் ஜி20 மாநாடு தொடங்க உள்ள நிலையில்…

  11. அமேரிக்காவில் 2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் டொனல்ட் டிரம்பை எதிர்த்து யார் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவர் என்பதை தீர்மானிக்கும் உட் கட்சிப் போட்டியில் இந்திய தமிழ்த் தாய்க்கும், ஜமைக்கா வம்சாவளி தந்தைக்கும் மகளாக பிறந்த கமலா (ஆங்கிலத்தில் கமாலா என உச்சரிப்பர்) ஹாரிஸ் போட்டியிடுகிறார். அண்மையில் நடந்த போட்டியாளர்களுக்கு இடையான இரெண்டாம் தொலைகாட்சி விவாததில் இவர் சிறப்பாக வாதாடினார் என்கிறனர் அரசியல் நோக்கர்கள். https://www.theguardian.com/commentisfree/2019/jun/27/kamala-harris-second-democratic-debate

  12. கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம் - இரு விமானிகள் பலி கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம் - இரு விமானிகள் பலி ரஷ்யாவில் விமானம் அவசரமாக தரையிறங்கியபோது கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவரும் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் பிரியாத்தியா பிராந்தியத்திலுள்ள நில்நியான்கார்ஸ்க் நகர விமான நிலையத்தில் இருந்து பிராந்திய தலைநகர் யூலன்-ஊடேவுக்கு நேற்று அதிகாலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 43 பயணிகளும், 2 விமானிகளும் இருந்தனர். விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென என்ஜின் செயலிழந்தது. அதனை அறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை நில்நியான்கார்ஸ்க் வி…

  13. ரியூனிசியத் தலைநகரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள். ரியூனிசியாவின் தலைநகரான ரியூனிஸின் மத்திய பகுதியில் இன்று காலை இரண்டு தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு தூதரகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தலைமையகத்திற்கு அருகே இரட்டை தற்கொலைகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. முதல் தாக்குதல் காலை 11 மணியளவில் தூதரகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரின் வாகனமொன்றைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்க பயங்கரவாத எதிர்ப்பு தலைமையகத்தின் கார் நிறுத்துமிடத்தில் இரண்டாவது வெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் பொலிஸ் அதிகாரி…

  14. வெடி குண்டு மிரட்டல்- லண்டனில் அவசரமாக தரையிறங்கியது இந்திய விமானம் எயார் இந்தியாவிற்கு சொந்தமான விமானமொன்று சற்றுமுன்னர் வெடி குண்டு மிரட்டல் காரணமாக லண்டனில் அவசரஅவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மும்பாயிலிருந்து அமெரிக்கா சென்றுகொண்டிருந்த ஏஎல் 191 என்ற விமானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டனில் தரையிறங்கியுள்ளது என எயர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் போர்விமானங்களிற்கு அதிவேகத்தில் பயணம் செய்து எயர் இந்திய விமானத்தை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக பிரிட்டிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட விமானம் தனியான இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்…

  15. எந்­த­வொரு நாட்­டு­டனும் போரை நாட­வில்லை பதற்­ற­நி­லைக்கு அமெ­ரிக்­காவே காரணம் : ஈரான் ஈரா­னா­னது அமெ­ரிக்­கா­வு­ட­னான போரொன்றை ஒரு­போதும் நாட­வில்லை என ஈரா­னிய ஜனா­தி­பதி ஹஸன் ரோஹானி நேற்று தெரிவித்தார். அமெ­ரிக்­கா­வுக்கும் ஈரா­னுக்­கு­மி­டையே பதற்­ற­நிலை அதி­க­ரித்­துள்ள நிலையில் ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றில் கலந்து கொண்டு உரயாற்று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். ''ஈரா­னா­னது பிராந்­தி­யத்தில் பதற்­ற­நி­லையை அதி­க­ரிப்­பதில் ஆர்வம் காட்­ட­வில்லை என்­ப­துடன் அந்­நாடு எந்­த­வொரு நாட்­டு­டனும் போரில் ஈடு­ப­டு­வதை நாட­வில்லை" என அவர் கூறினார். ஈரான் கடந்த வாரம் அமெரிக்கப் போர் விமா­ன­மொன்றை சுட்டு வீழ்த்­தி­யது முதற் கொண்டு இரு நாடு…

  16. அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை நிறைவிற்கு கொண்டுவர சீனா விருப்பம்? அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை நிறைவிற்கு கொண்டுவர சீனா விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘வர்த்தக போர் காரணமாக சீனாவின் ஏற்றுமதி அளவு கனிசமாக குறைந்துள்ளது. இதனால் அந்நாட்டு பொருளாதாரம் அதாள பாதாளத்திற்கு சென்று விட்டது. இந்தநிலையில், பொருளாதார சரிவிலிருந்து மீடு வர சீனா, அமெரிக்காவுடன் மீண்டும் சுமுகமான வர்த்தகம் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது’ என குறிப்பிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்று…

  17. எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள படங்கள் உங்கள் மனதை புண்படுத்தலாம். அமெரிக்காவுக்கு செல்லும்போது ரியோ கிராண்டே நதியில் தந்தை - மகள் மூழ்கியதை அடுத்து, இதுபோன்று உயிரை பணயம் வைத்து எல்லையை கடக்க வேண்டாம் என்று எல் சல்வேடார் அரசாங்கம் மக்களை எச்சரித்துள்ளது. தந்தையும் அவரது 23 மாத மகளும் அந்த நதியில் மூழ்கியவாறு வெளியான புகைப்படம் தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "இதனை நான் வெறுக்கிறேன்" என்று இந்தப் புகைப்படம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். முறையான ஆவணங்கள் இல்லாத குடியேறிகளை தடுக்க, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகள் கடுமையான கொள்கைகளை அமல்படுத்தியுள்ளதை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பலர…

    • 0 replies
    • 583 views
  18. US has tools to prosecute Sri Lanka dual citizens for torture, crimes: DOJ official இரட்டை குடியுரிமை கொண்டு குற்றங்கள் புரிந்தவர்களை தண்டிக்க முடியும் - அமெரிக்க நாட்டு சட்ட அமைச்சு The United States has tools to prosecute Sri Lanka defence officials who are dual citizens for crimes including torture, a Department of Justice official told a congressional hearing aimed tightening laws to prosecute those engaging in mass atrocities and war crimes. "Jurisdiction Congress has given us allows to prosecute U.S. citizens who have committed acts of torture abroad," David Rybicki, deputy assistant attorney general, criminal division, Department of Justice (DOJ) told Re…

    • 0 replies
    • 299 views
  19. குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டி, அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றி விற்கும் சம்பவங்கள் பிலிப்பைன்ஸில் நடந்துள்ளது. அந்நாட்டில் மூன்றில் இரண்டு குழந்தைகள் இவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பெரும் வணிகமாகவே அந்நாட்டில் நடந்துள்ளது. மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களிடம் இந்த காணொளிகளை விற்றுள்ளனர். பிழைப்பதற்கு பணம் வேண்டும். அதற்காகதான் இப்படி செய்கிறோம் என்கிறார்கள் அம்மக்கள். ஆறு மாத குழந்தைக…

  20. ஹனா ஜெராஸ்யோன் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images பழமைவாய்ந்த நகரமான ஆக்சம் கிறிஸ்தவர்களின் புனித இடமாக கருதப்படுகிறது. இறைவனால் மோசேயிடம் ஒப்படைக்கப்பட்ட 10 கட்டளைகள் துறவிகள் பாதுகாப்பின…

    • 8 replies
    • 1.1k views
  21. மலே­சி­யாவில் நஞ்­சேற்­றத்தால் 75 மாண­வர்கள் சுக­வீனம்: 400 பாட­சா­லைகள் மூடல் மலே­சிய மாநி­ல­மான ஜொஹொரில் பாட­சா­லை­களில் மாண­வர்­க­ளுக்கு சுக­வீனம் ஏற்­பட்­டி­ருப்­பது அவ­தா­னிக்­க­ப்பட்­ட­தை­ய­டுத்து அங்­குள்ள 400க்கும் மேற்­பட்ட பாட­சா­லைகள் மூடப்­பட்­டுள்­ளன. அந்த மாநி­லத்தில் தொழிற்­சா­லைகள் அமைந்­துள்ள வல­ய­மான பஸிர் குடாங் பிராந்­தி­யத்­தி­லுள்ள 15 பாட­சா­லை­களில் கல்வி கற்கும் மாண­வர்கள் 75 பேர் சுவாசப் பிரச்­சி­னைகள், வாந்தி ஏற்­பட்­ட­தை­ய­டுத்து வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். இத­னை­ய­டுத்து அந்தப் பிராந்­தி­யத்­தி­லுள்ள பாட­சா­லை­களை நாளை வியா­ழக்­கி­ழமைவரை மூட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் அந்தப் பிர…

  22. ஈரான் மீதான அமெரிக்காவின் போரில் பிரித்தானியா இணைந்துகொள்ளாது: ஹண்ட் ரான் மீதான யுத்தத்தில் இணையுமாறு அமெரிக்க பிரித்தானியா கோரிக்கை விடுக்குமென தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டாலும் பிரித்தானியா அதை ஏற்றுக்கொள்ளாது எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவிவரும் பதற்றம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. ஈரானுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பதற்றம் குறித்து கருத்து தெரிவித்த ஹண்ட், அமெரிக்கா எங்களது நெருங்கிய நட்பு நாடு, அவர்களோடு நாங்கள் எந்நேரமும் தொடர்பில் இருக்கிறோம், அவ…

  23. சவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு ஒன்றரை கோடி கட்டணம்! வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்த குடியுரிமை பெறுவதற்கு 8 லட்சம் ரியால்களை (இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்) கட்டணமாக செலுத்தும் சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரபு நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா மசகு எண்ணெய் விநியோகத்தை தவிர்த்து வேறு பல முறைகளில் வருமானத்தை பெருக்கும் நோக்கில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தற்போது, பல்வேறு நாடுகளை சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஒரு தொகை கட்டணம் வசூல் செய…

  24. முன்பு இருந்தது போன்ற மதப்பிடிப்பு தங்களுக்கு இல்லை என்று அரபு மக்கள் அதிகளவில் கூறிவருவதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய துல்லியமான கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் உரிமைகள், குடிபெயர்தல், பாதுகாப்பு மற்றும் பாலினம் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து அரபு மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. பிபிசி அரபு மொழி சேவைக்காக, அரபு பரோமீட்டர் ஆராய்ச்சி நிறுவனம் 25,000க்கும் மேற்பட்ட மக்களிடம் நேர்காணல் நடத்தியது. 2018-19ல் பத்து நாடுகள் மற்றும் பாலத்தீன எல்லைப் பிரதேசங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இங்கே அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் தங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.