உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26872 topics in this forum
-
ஐரோப்பிய ஆணையத் தலைவராக முதல்முறையாக பெண்ணொருவர் தேர்வு! ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக ஜேர்மனியை சேர்ந்த உர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கல்-இன் ஆதரவைப் பெற்றுள்ள பாதுகாப்பு அமைச்சரான உர்சுலா ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள முதல் பெண்ணாவார். தற்போதைய ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன் க்ளூட் ஜுங்கர் வரும் நொவெம்பர் மாதம் 1 ஆம் திகதி பதவியிலிருந்து வெளியேறுவதையடுத்து உர்சுலா பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் அர…
-
- 0 replies
- 495 views
-
-
ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் மாயம்? ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் திடீர் என மாயமாகியுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் காரணமாக பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. கடந்த மே மாதம் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நாசவேலை தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலின் பின்னணி அறியப்படாத நிலையில், ஈரான்தான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. ஈரான் அதனை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில், ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த…
-
- 0 replies
- 528 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட்டுகளை பகிர்ந்தது தொடர்பாக, அவர் மீது கண்டனம் தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது. ''தங்கள் நிறம் குறித்த அச்சத்தை புதிய இளம் அமெரிக்கர்களிடம் டிரம்பின் இந்த கருத்துக்கள் அதிகரித்துள்ளன என்று அதிபருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜனநாயக கட்சி அதிகாரத்தில் உள்ள இந்த சபை அதிபர் டிரம்புக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆதரவாக…
-
- 0 replies
- 428 views
-
-
பாகிஸ்தான் வான்வழியாக ஏர் இந்தியா விமானங்கள் டெல்லி வந்தடைந்தன காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாலக்கோட் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக தனது வான்வழியை இந்திய விமானங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது. கிரிகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க சென்றபோது, பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த இயலாத காரணத்தால் மாற்று வழியைத் தேர்வு செய்ய நேர்ந்தது. இதற்கிடையே, கர்த்தார்பூர்-குருத்வாரா ஆகிய இடங்களுக்கு இடையே வான்வழியை திறந்து விடுவது தொடர்பாக நடந்…
-
- 1 reply
- 917 views
-
-
கனடாவின் வடிவிலான நாணயத்தை, கனடா அரசு வெளியிடுகின்றது! கனடா தினத்தை கௌரவிக்கும் விதமாக ‘கனடா’ நாட்டின் வடிவிலான நாணயம் ஒன்றை வௌியிட ‘தி றோயல் கனேடியன்’ நாணய சபை தீர்மானித்துள்ளது. றோயல் கனேடியன் நாணய அச்சக சபையின் தயாரிப்பு முகாமையாளர் எரிகா மாகா இந்த தகவலை வௌியிட்டுள்ளார். வடிவமைப்பை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு புதுமையான வடிவத்தை உருவாக்க பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக் குழுக்கள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தன. அந்த வகையில் கனடாவின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு விலங்கை அடையாளப்படுத்தும் வகையில் கலைஞரான அலிஷா கிரோக்ஸின் படைப்பில் உருவான வடிவத்தை இறுதி செய்வதற்கு அச்சக சபையின் அதிகாரிகள் தீர்மானித்தனர். http://athavannews.com/கனடாவின்-வடிவிலான-நா…
-
- 0 replies
- 536 views
-
-
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள்-ராணுவம் மோதல் : அப்பாவி மக்கள் 76 பேர் பலி அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தியதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு தான் இந்த கொடூர தாக்குதலை அரங்கேற்றியது. அதனை தொடர்ந்து, அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதில் அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்கள் விரட்டியடிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. ஆனாலும் தலீபான் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க முடியவில…
-
- 0 replies
- 322 views
-
-
ரஷ்யாவிடமிருந்து ஆயுத கொள்வனவு – துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை! துருக்கி மீது பொருளதார தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு கவன்களை துருக்கி கொள்வனவு செய்ததை அடுத்தே ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார். துருக்கியின் வான் எல்லையை பாதுகாக்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து அதி நவீன எஸ்-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களை கொள்வனவு செய்ய துருக்கி அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்தால் எப்-35 ரக போர் விமான தயாரிப்பில் துருக்கிக்கு அளித்துவரும் முன்னுரிமையை ரத்து செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்…
-
- 3 replies
- 956 views
-
-
எத்தகைய நிலைமையிலும் எண்ணெய் ஏற்றுமதியை தொடர்வோம் - ஈரான் ஈரான் எத்தகைய நிலைமையின் கீழும் தனது எண்ணெய் ஏற்றுமதிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் ஜாவத் ஸரிப் தெரிவித்துள்ளார். அவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை பிரித்தானிய வெளிநாட்டுச் செயலாளர் ஜெரேமி ஹன்ட்டுடன் தொலைபேசி மூலம் மேற்கொண்ட உரையாடலின் போது இவ்வாறு தெரிவித்ததாக ஈரானிய வெளிநாட்டு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட் டுள்ளது. பிரித்தானிய கடற்படையினரால் மத்தியதரைக் கடலிலுள்ள பிரித்தானிய பிராந்தியமான கிப்ரால்டருக்கு அப்பால் அண்மையில் கைப்பற்றப்பட்ட ஈரானிய கிர…
-
- 1 reply
- 690 views
-
-
ஹொங்ககொங் அரசின் தலைவரை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் ஹொங்ககொங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹொங்ககொங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்டத்துக்கு எதிராக கடந்த ஒரு மாதமாக ஹொங்ககொங்கில் தீவிர போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து, அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஹொங்ககொங் அரசின் தலைவர் கேரி லாம் அறிவித்தார். எனினும், அந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்தன. இந்தப் போராட்டங்களின் போது, பொலிஸார் அடக்குமுறையைக் கையாண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்…
-
- 0 replies
- 298 views
-
-
ஒளிப்படங்களுக்காக சிங்கங்களை சுட்டுக் கொன்ற கனேடியத் தம்பதி! தென்னாப்பிரிக்காவில் ஒரு சஃபாரி பூங்காவில் ஔிப்படம் எடுக்கச் சென்ற கனடா நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் இரண்டு வளர்ந்த சிங்கங்களை சுட்டுக் கொன்றுள்ளனர். குறித்த கனேடியத் தம்பதியினர் உயிரிழந்த சிங்கத்தின் பின்னால் அமர்ந்து கொண்டும், முத்தமிட்டுக்கொண்டும் ஔிப்படம் எடுத்துள்ளனர். டெரன் மற்றும் கரோலின் கார்டர் என்ற பெயர்களை கொண்ட குறித்த தம்பதி லெஜீலியா சஃபாரிஸ் வழியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது இந்தச் செயலை செய்துள்ளனர். ஔிப்படம் எடுப்பதற்காக அங்கிருந்த இரண்டு சிங்கங்களை சுட்டுக் கொன்றுள்ளதுடன், அந்த ஔிப்படங்களை பேஸ்புக் வலைத்தளத்திலும் பதிவேற்றியுள்ளனர்.அவர்கள் கிழக்கு கனடாவின் அல்பேர்ட்…
-
- 1 reply
- 640 views
-
-
துபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்டமிட்டதாக இந்தியர்கள் 14 பேர் பிடிபட்டு உள்ளனர் என்று தகவல் தெரியவந்துள்ளது. 14 பேரையும் ஒருவாரத்துக்கு முன் விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி உள்ளதாக துபாய் அரசு தகவல் தெரிவித்துள்ளது http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=510356
-
- 1 reply
- 711 views
-
-
ட்ரம்ப் பெண்களுக்கு எதிரான இனவெறி பதிவுகளுக்கு எதிராக குற்றச்சாட்டு! ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க காங்கிரஸின் பெண் உறுப்பினர்களுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்தினையடுத்து அவருக்கு எதிராக இனவெறி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அண்மையில் அமெரிக்க ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட ருவிட்டர் பதிவில், “வெளி நாடுகளில் இருந்து வந்து ஜனநாயக கட்சியில் இணைந்து காங்கிரஸ் உறுப்பினர்களாக இருக்கும் பெண்கள், உலகத்திலேயே சக்தி மிகுந்த நாட்டின் அரசு எப்படி செயல்பட வேண்டுமென எமக்கு வகுப்பெடுக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் அந்த பதிவில் நேரடியாக காங்கிரஸ் பெண்களின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், ரஷிதா டலீப், ஒகாஸியோ கோர…
-
- 0 replies
- 401 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images இரண்டாவது காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிகக் குறைந்த வேகத்தில் செல்கிறது. 1990களுக்குப் பிறகு சீனாவில் பொருளாதார வளர்ச்சி வேகம் இவ்வளவு குறைவாக இருப்பது இப்போதுதான் என்பதை அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் சீனாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டைவிட 6.2 சதவீதம் வளர்ந்துள்ளது. வளர்ச்சியைத் தூண்டும் வகையில் செலவீடுகளை ஊக்குவித்து, வரிக் குறைப்புகளையும் அறிமுகப்படுத்தியது சீனா. …
-
- 0 replies
- 348 views
-
-
அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினருக்கு கிரீன்கார்டு வழங்க விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்கும் மசோதா, பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இது, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்தியா உள்பட பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக எச்1பி விசாவில் செல்கின்றனர். குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப (ஐடி) ஊழியர்கள் போன்ற உயர்திறன் கொண்ட பணியாளர்கள், அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்கு, அந்நாட்டின் நிரந்தர குடியுரிமை அட்டையான, ‘கிரீன் கார்டு’ பெற வேண்டும். ஆனால், தற்போதைய அமெரிக்க சட்டத்தின்படி, பிறநாட்டை சேர்ந்தவர்கள் 7 சதவீதம் பேர் மட்டும் கிரீன்கார்டு பெற முடியும். இதனால், பல ஆண்டுகளுக்கும் மே…
-
- 6 replies
- 850 views
-
-
சுவீடனில் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு! சுவீடனில் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். விமானம் ஒன்றை பரசூட்டின் உதவியுடன் தரையிறக்கும்போதே நிலை தடுமாறி ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. கிழக்கு சுவீடன் நாட்டின் உமெயா எனும் பிரதேசத்திற்கு வெளியில் உள்ள ஆற்றிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் சேத விபரங்கள் குறித்து சரியான தகவல்கள் வெளியாகவில்லை. http://athavannews.com/சுவீடனில்-விமானம்-ஆற்றுக/
-
- 0 replies
- 292 views
-
-
நேபாள வெள்ளத்தில் சிக்கி 43 பேர் பலி! நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காணாமல்போயுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த அனர்த்தத்தினால் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. வீடுகள் மற்றும் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலையும் எழுந்துள்ளது. வெள்ளம் ஒருபுறம் இருக்க, ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற…
-
- 0 replies
- 433 views
-
-
அமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவிவிலகியுள்ளார். July 14, 2019 அமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலெக்ஸ் அகோஸ்டா திடீரென பதவிவிலகியுள்ளார். 50 வயதான அலெக்ஸ் அகோஸ்டா மத்திய அரசின் சட்டத்தரணியாக இருந்து அரசியலுக்கு வந்தவராவார். அங்குள்ள 66 வயதான ஜெப்ரி எப்ஸ்டீன் என்னும் பெரும் கோடீஸ்வரர் 2008ஆம் ஆண்டு சிறுமிகளை கடத்தி வன்புணர்வுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 45 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரலாம்’ எனும் நிலை காணப்பட்ட போது அப்போது அர ச சட்டத்தரணாக இருந்த அலெக்ஸ் அகோஸ்டா, ஜெப்ரியுடன் ரகசிய பேரம் நடத்தி தண்டனை குறைப்புக்கு வழி செய்தார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
-
- 0 replies
- 834 views
-
-
பாகிஸ்தானை புறக்கணித்த சர்வதேச ஊடகங்கள்! பிரித்தானியாவில் நடைபெற்ற ‘ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு’ என்ற மாநாட்டில் பாகிஸ்தான் அமைச்சரின் உரையை சர்வதேச ஊடகங்கள் புறக்கணித்துள்ளன. லண்டனில் ‘ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பிரித்தானியா, கனடா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். குறித்த மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஊடகவியலாளர் ஒருவர் பாகிஸ்தானில் ஊடக சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் கருத்துரிமை தணிக்கைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் கோஷம் எழுப்பினார். மேலும், சுதந்திரமாக கருத்துக்களை தெரிவித்ததற்காக பாகிஸ்தான் அவரது தனது டுவிட்டர் கணக்கை முடக்கிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனா…
-
- 0 replies
- 513 views
-
-
சட்டவிரோதக் குடியேறிகளை அமெரிக்கா நாளை கைது செய்யஉள்ளது அதிபர் ட்ரம்ப் நாளை தனது கொள்கையின் ஒரு முக்கிய அம்சமாக ட்டவிரோதமாக வசிக்கும் குடியேறிகளை கூறுவதுண்டு. அதின் ஒரு அம்சமாக நாளை நாடு தழுவிய கைதுகளும் நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கும் ஆரம்பமாக உள்ளன. இதில் அமெரிக்காவில் பிறந்த பிள்ளைகள் பெற்றோர் இடமிருந்து பிரிக்கப்படவும் கூடும். இவ்வாறு திட்டமிட்டு பிள்ளைகளை பெறுகிறார்கள் என ட்ரம்ப் கூறுவதும் உண்டு. இந்த அரச நடவடிக்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்ப்பாட்டங்களும் நடக்க உள்ளன. பெரும்பாலும் மெக்சிகோ, மத்திய அமெரிக்க பகுதிகளிலிருந்து வந்துள்ள சுமார் 12 மில்லியன் கள்ளக் குடியேறிகள் அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக வசித்து வருகின…
-
- 0 replies
- 533 views
-
-
ஆபத்தான விளையாட்டில் தலையிட வேண்டாம் – பிரித்தானியாவுக்கு ஈரான் எச்சரிக்கை July 13, 2019 ஈரானுடனான உறவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியா தனது இரண்டாவது போர்க்கப்பலை வளைகுடாவுக்கு அனுப்பும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. தற்போது, மத்திய தரைக்கடல் பகுதியில் நிற்கும் எச்.எம்.எஸ் டன்கன் என்ற போர்க்கப்பல் அடுத்த வாரம் எச்.எம்.எஸ் மென்ட்ரோஸ் என்ற போர்க்கப்பலுடன் பாதுகாப்பு பணியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த புதன்கிழமை பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரித்தானியாவின் போர்க்கப்பலான எச்.எம்.எஸ் மெண்ட்ரோஸ் , மூன்று ஈரானிய படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டதனைத்…
-
- 1 reply
- 693 views
-
-
பேஸ்புக் நிறுவனத்திற்கு 500 கோடி ரூபா அபராதம் சட்டவிரோதமாக பேஸ் புக் பயனாளர்களின் இரகசிய தகவல்களை திருடியதற்காக பேஸ் புக் நிறுவனத்திற்கு 500 கோடி ரூபா அபராதம் கோரப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் சர்வதேச ரீதியில் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய வலைத்தளமாக கருதப்படுகிறது. இந்நிலையில் பேஸ்புக் பயனார்களின் இரகசிய தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா எனும் அரசியல் ஆலோசனை நிறுவனத்துக்கு திருடிக் கொடுத்தாக அந்நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்தோடு பேஸ்புக் நிறுவனத்துக்கு சுமார் 500 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் சமூகவளைத்தளங்களில், தொழிநுட்ப நிறுவனம் என்ற அடிப்படையில் பாரிய தொகை அபாரதம் செலுத்த இருப்பது …
-
- 0 replies
- 448 views
-
-
உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் தற்போது இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் எட்டே ஆண்டுகளில் அதாவது 2027-ம் ஆண்டுக்குள் இந்தியா, உலக மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; உலக மக்கள் தொகை தற்போது 770 கோடியாக உள்ளது. 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை மேலும் 200 கோடி அதிகரித்து விடும். அதாவது 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை 970 கோடியாக அதிகரித்து விடும். அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் உலக மக்கள் தொகை ஆயிரம் கோடியை கடந்து விடும். மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் உலக அளவில் இந்தியாவிலும், நைஜிரியாவிலும் தான் மிக …
-
- 4 replies
- 821 views
-
-
‘பிக் பென்’ கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு 160 ஆண்டுகள் நிறைவு பிரித்தானியாவின் புகழ்பெற்ற ‘பிக் பென்’ கோபுரம் முதன்முதலாக ஒலி எழுப்பி இன்றுடன்(ஜுலை 11) 160 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. எனினும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாட ‘பிக் பென்’ கோபுரம் ஒலி எழுப்பாது. அங்கு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதே அதற்கு காரணமாகும். 2017ஆம் ஆண்டு ஆரம்பமான சீரமைப்புப் பணிகள், 2021ஆம் ஆண்டே நிறைவடையும். 96 மீட்டர் உயரமுள்ள கோபுரம் நீண்ட காலம் நல்ல நிலையில் நீடிக்க சீரமைப்புப் பணிகள் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. பிரித்தானியப் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வடக்கு முனையில் அமைக்கப்பட்டுள்ள எலிசபெத் கோப…
-
- 1 reply
- 492 views
-
-
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆப்கான் அரசாங்கத்தின் அமைச்சர்கள் அதிகாரிகள்- பிபிசி விசாரணை ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவது பிபிசி மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்ந்தும் உலக அறிக்கைகளில் பெண்களிற்கு ஆபத்தான நாடாக பதிவாகிவருகின்றது. இந்த பின்னணியிலேயே பிபிசி இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் என்னை தொடர்ச்சியாக துன்புறுத்தினார் ஒரு நாள் என்னை அலுவலகத்தில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என அமைச்சர் கீழ் முன்னர் பணிபுரிந்த பெண்மணியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ள அந்த பெண்மணி எனினு…
-
- 1 reply
- 1.3k views
-
-
பாதுகாப்பை உறுதிப்படுத்த சர்வதேச இராணுவ கூட்டமைப்பை ஸ்தாபிக்க அமெரிக்கா திட்டம் வளைகுடா கடல் பரப்பினூடான சுதந்திரமான கப்பல் பயணங்களை உறுதி செய்வதற்கு ஈரான் மற்றும் யேமனிய கடற்கரைகளுக்கு அப்பாலுள்ள கடல் பிராந்தியத்தைப் பாதுகாப்பதற்கு சர்வதேச இராணுவக் கூட்டமைப்பொன்றை உருவாக்க அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க சிரேஷ்ட கடற்படை ஜெனரல் ஒருவர் தெரிவித்தார். முக்கிய வர்த்தகப் பாதைகளை உள்ளடக்கிய அந்தப் பிராந்தியத்திலான சுதந்திரமான கடற்பயணத்தை உறுதிப்படுத்தத் தாம் விரும்புவதாக கடற்படை ஜெனரலான ஜோசப் டன்போர்ட் தெரிவித்தார். கடந்த மாதம் அந்தப் பிராந்தியத்தில் எண்ணெய் தாங்கிக் கப்பல்க…
-
- 0 replies
- 498 views
-