உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
டிரம்ப் – ஜனாதிபதி தேர்தல் – ரஸ்ய தலையீடு – முல்லரின் அறிக்கை சமர்ப்பிப்பு.. April 19, 2019 டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஸ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரித்த ரொபர்ட் முல்லரின் 400 பக்க அறிக்கை அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸ் அவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகை வழக்குரைஞரிடம், தலையீடு குறித்து விசாரித்த ரொபர்ட் முல்லரை நீக்கச் சொன்னதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை தம் பதவியை சிறுமைப்படுத்தும் முயற்சி என ஜனாதிபதி டிரம்ப் கருதினாலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப…
-
- 0 replies
- 716 views
-
-
பாலியல் தளங்கள் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது பிரித்தானியாவில் பாலியல் தளங்கள், ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது. ஜூலை 15 ஆம் திகதி முதல் இத்தகைய காணொளிகளைப் பார்ப்பவர்களின் வயது எல்லை பரிசீலிக்கப்படும் திட்டமானது கடுமையானமுறையில் நடைமுறைக்குவரும் என்று டிஜிட்டல் கலாசாரத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறுவர்களைப் பாதுகாக்கும் சமூகத்திட்டத்தின் அங்கமாக இத்திட்டம் கொண்டுவரப்படுகின்றது. பொருத்தமற்ற உள்ளடக்கத்திலிருந்து சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இலக்காக உள்ளது. ஆபாசத் தளங்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் வயது எல்லையைச் செயற்படுத்த மறுக்கும் தளங்கள் …
-
- 7 replies
- 1.6k views
-
-
புதிய வகையான ஆயுதம் சோதனை, வட கொரியா அறிவித்தது.. April 18, 2019 புதிய வகையான ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் யில் இது குறித்த தெளிவான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை எனினும், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாகவும் இந்த சோதனையை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மேற்பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் கலந்து கொண்ட மாநாடு தோல்வி அடைந்த பின்னர் வட கொரியா மேற்கொண்டுள்ள முதல் ஆயுத பரிசோதனை இதுவென்பது குறிப்பிடத்தக்…
-
- 0 replies
- 592 views
-
-
பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா... தன்னைத் தானே சுட்டுக்கொண்டார் பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா தன்னைத் தானே சுட்டுக்கொண்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையில் குண்டு பாய்ந்துள்ள நிலையில் தலைநகர் லீமாவிலுள்ள காசிமிரோ உல்லோவா மருத்துவமனையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரேசிலியக் கட்டுமான நிறுவனமான Odebrecht இடமிருந்து கையூட்டுப்பெற்றதாக அலன் கார்சியா குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பாக அவரைக் கைதுசெய்ய பொலிஸார் சென்றவேளையிலேயே அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா குறித்த இந்தக…
-
- 1 reply
- 588 views
-
-
போர்த்துக்கல்லில் கோர விபத்து – 28 ஜெர்மனிய சுற்றுலாப் பயணிகள் பரிதாப உயிரிழப்பு! போர்த்துக்கல் தீவான மடெய்ரா (Madeira) என்ற தீவில், ஜெர்மனிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து இன்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடியிருப்புக்கள் உள்ள தாழ்ந்த பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து அப்பகுதி மேயர் பிலிப் சௌஷா தெரிவிக்கையில், “இந்த கோர விபத்தை என்னால் விபரிக்க முடியவில்லை. இந்த மக்களுடைய துன்பங்களை என்…
-
- 0 replies
- 678 views
-
-
எகிப்தில் ஜனாதிபதியின் பதவி நீடிப்பு சட்ட திருத்தங்களுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் April 17, 2019 எகிப்து ஜனாதிபதி அப்துல் பதா அல்-சீசீ, 2030 ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிக்க வழிவகுக்கும் சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அப்துல் பதா அல்-சீசீயின் இரண்டாவது, நான்காண்டு பதவிக்காலம் 2022ஆம் ஆண்டில் முடிவடையவுள்ள நிலையில் இவ்வாறு பதவியில் நீடிக்க வழிவகுக்கும் சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த சட்டத்திருத்தம் அவரின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டு காலமாகவும், அவர் மூன்றாவது முறை போட்டியிடவும் வழிவகை செய்யும் அதேவேளை சட்டத்திருத்தம் குறித்து கருத்து கேட்கும் வாக்கெடு…
-
- 0 replies
- 400 views
-
-
பரிஸில் 850 வருடங்கள் பழைமையான கட்டிடத்தில் தீ பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 850 வருடங்கள் பழைமையான குறித்த கட்டிடம் ஐரோப்பிய கட்டிட கலையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வானுயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், சற்றுமுன்னர் இந்த தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொளுந்துவிட்டு எரிந்துவரும் நிலையில், தீயை அணைக்க மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். தீ ஏற்பட்ட சில நிமிடங்களில் கூரை சரிந்து விழுந்துள்ளது. பின்னர் ஏனைய பகுதிகள் கட்டிம் கட்டிமாக எரிந்து சாம்பலாகியுள்ளது. தீ விபத்தினால் பரிஸின் பெரும்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. 1…
-
- 14 replies
- 1.7k views
-
-
பின்லாந்து தேர்தலில் இடதுசாரிக்கட்சி வெற்றி April 15, 2019 பின்லாந்தில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் அந்நாட்டின் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக் கட்சியின் தலைவர் அன்ரி றின்னே (Antti Rinne ) இதனை அறிவித்துள்ளார். தேர்தலில் எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகவாதிகள் தரப்பினர் 17.7 சதவிகித வாக்குகளையும் யூரோ செப்டிக் பின்ஸ் கட்சி 17.5 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 99.5 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பிரதமர் ஜூஹா சிபிலா மற்றும் அவருடன் கூட்டிணைந்துள்ள வலதுசாரி தேசிய கூட்டணி ஆகியன 13.8 சதவிகித வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 512 views
-
-
ஜப்பானில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்: கடும் சட்டத்திற்கு தயார் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்த ஜப்பான் ஆலோசனை நடத்திவருகின்றது. ஜப்பானில் அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஷ்பிரயோகங்களை நிறுத்தும் வகையில் இவ்வாறு கடும் சட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளுக்கு பெற்றோர் வழங்கும் உடல்ரீதியான தண்டனைகளை ஜப்பான் அனுமதிக்கின்றது. ஆனால், அண்மைய காலமாக பதிவாகிய இரு மோசமான சிறுவர் துஷ்பிரயோக சம்பங்களைத் தொடர்ந்து சட்ட நடைமுறையை அமுல்படுத்த திர்மானிக்கப்பட்டுள்ளது. உடல்ரீதியான தண்டனைகளை தடைசெய்யும் சட்டத்தை கொண்டுவருவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரு…
-
- 0 replies
- 639 views
-
-
வீதியில் அழுத சிறுமியின் ஒளிப்படத்திற்கு சர்வதேச விருது! அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் சிறுமி அழுது கொண்டிருக்கும் ஒளிப்படத்திற்கு உலக பத்திரிக்கை ஒளிப்பட விருது கிடைத்துள்ளது. கடந்த வருடம் ஜுன் மாதம் 12ஆம் திகதி, மெக்ஸிகோ – அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக அமெரிக்க எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள் சிலரைக் கைது செய்தனர். கைதான பெண் ஒருவர் தன் மகளை அங்கேயே விட்டுவிட்டு அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களின் வாகனத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் அக்குழந்தை இரவு முழுவதும் அதே இடத்தில் அழுது கொண்டு இருந்தது. இக்காட்சியை அந்நாட்டு ஒளிப்பட கலைஞர் ஜோன் தன் கேமராவில் படமாக்கினார். உலகெங்கிலுமிருந்து சுமார் 4738 கலைஞர்கள…
-
- 0 replies
- 571 views
-
-
சூடானில் போராட்டத்தில் 16 பேர் பலி – ராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலகல் : April 14, 2019 சூடானில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அந்நாட்டு ராணுவ ஆட்சித்தலைவர் பதவி விலகியுள்ளார். சூடானில் அங்கு கடந்த 1993-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த 75 வயதான உமர் அல் பஷீர் உள்நாட்டுப்போரின்போது, போர்க்குற்றம் செய்ததாக சர்வதேச நீதிமன்றில் வழக்கு பதிவாகி, குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் அங்கு கடந்த டிசம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதனால் அவரை பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வந்தநிலையில் கடந்த 11ம் திகதி …
-
- 0 replies
- 571 views
-
-
இணையத்தில் வெறுப்பு பேச்சுகள் காட்டுத் தீ போல பரவுகின்றது April 14, 2019 இணையத்தில் வெறுப்பு பேச்சுகள் காட்டுத் தீ போல பரவுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு உரையாற்றிய அவர் இணையத்தில் வெறுப்பு பேச்சுகள் காட்டு தீ போல பரவி வருகிறது. நமது கவனம் பாதிக்கப்பட்டவர்கள் மீது செல்ல வேண்டும். இந்த சூழ்நிலைக்கு மிகப் பெரிய முதலீடு தேவைப்படுகிறது. சமூக ஒற்றுமையை முதலீடு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாதம் மற்றும் தீவிர அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் செயல்பட வேண்டும் எனவும் சர்வதேச …
-
- 0 replies
- 551 views
-
-
சவுதி தாக்குதலில் பலியான தனது மகளை பார்த்து அழும் தந்தை ”எனது தங்கை எந்தத் தவறும் செய்யவில்லை. அவள் அப்பாவி. சூழ்நிலை என்னவாக இருந்தாலும் இதற்கான பதிலடியை அல்லா கொடுப்பார்” ஏமனின் தலைநகர் சனாவில் பள்ளி ஒன்றில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுமியின் சகோதரி கூறிய வார்த்தைகள் இவை. தென் மேற்கு ஆசிய நாடான ஏமனில் கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்கு மேலாக ஷியா-சன்னி பிரிவுகளுக்கு இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா (சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடு) ஆதரவாக செயல்படுகிறது. ஹவுத்தி (ஷியா பிரிவினர்) கிளர்ச்சிப் படைக்கு ஈரான…
-
- 0 replies
- 664 views
-
-
எல்லைக் கதவை உடைத்துக்கொண்டு 350 அகதிகள் மெக்சிகோவிற்குள் நுழைவு April 13, 2019 குவாத்தமாலாவில் இருந்து திரண்டு வந்த அகதிகளில், சுமார் 350 பேர் வன்முறையினை மேற்கொண்டுள்ளதுடன் எல்லைக் கதவை உடைத்துக்கொண்டு மெக்சிகோவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், குவாத்தமாலா மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகளாக ஊடுருவி வருகின்றனர். இதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மெக்சிகோ இதனை தடுத்து நிறுத்தா விட்டால் மெக்சிகோ எல்லை முழுவதையும் மூடி விடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர…
-
- 0 replies
- 509 views
-
-
சுற்றுலா சென்ற இடத்தில் ஜேர்மனி பெண் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை! தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஜேர்மனி பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த Miriam Beelte என்கிற 26 வயதுடைய இளம்பெண் தாய்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் கோசிசிங் பகுதியில் உள்ள தீவில், அவருடைய உடல் நிர்வாணமாக இரு சிறியபாறைகளுக்கு நடுவில் கண்டெடுக்கப்பட்டது. அவருடைய உடல் முழுவதும் இரத்தக்கறைகள் படிந்தவாறு, அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் சிதைக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உடலை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளன…
-
- 0 replies
- 558 views
-
-
அவுஸ்திரேலியாவில் தேர்தல் திகதி அறிவிப்பு அவுஸ்திரேலியாவில் மே மாதம் 18 ம் திகதி நாடாளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவுள்ளன ஆளுநர் நாயகம் சேர் பீட்டர் கொஸ்கிரோவை இன்று காலை சந்தித்த பிரதமர் ஸ்கொட் மொறிசன் தேர்தலிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார் இதன் பின்னர் காலை 8.29 மணியளவில் 45 நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான சம்பிராதாய பூர்வ நிகழ்வு இடம்பெற்றது இதன் பின்னர் ஆளுநர் நாயகம் காலை 8.30 மணிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை வெளியிட்டார் இதன் பின்னர் உரையாற்றியுள்ள பிரதமர் ஸ்கொட் மொறிசன் வலுவான பொருளாதாரத்தை உருவாக்ககூடியவர் யார் என்ற தெரிவையே மே 18 ம் திகதி வாக்காளர்கள் மேற்கொள்ளப்போகின்றனர் என குறிப்பிட்டுள்ளார் 2013 இல…
-
- 0 replies
- 421 views
-
-
ஒமர் அல் பஷீர் : 30 ஆண்டுகள் அதிகாரத்திலிருந்த சூடான் அதிபரை ராணுவம் கைது செய்தது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionராணுவத்தை உற்சாகப்படுத்தும் ஆர்ப்பாட்டகாரர்கள் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக சூடானின் அதிபராக இருந்த ஒமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரத்தில் இ…
-
- 1 reply
- 867 views
- 1 follower
-
-
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அதிரடி கைது! ஈக்குவெடார் தூதரகத்திற்குள் புகுந்த லண்டன் போலீஸ் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விக்கிலீக்ஸ் இணையதளத்தில், அமெரிக்காவின் ராணுவம் மற்றும் ராஜாங்க ரகசிய தகவல்கள் பலவற்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் வெளியிட்ட ஆயிரக்கணக்கான ரகசிய தகவல்கள், அமெரிக்காவின் ராஜதந்திர நடவடிக்கைகள் பலவற்றை அம்பலமாக்கியது. சர்வதேச நாடுகள் மத்தியில் அமெரிக்காவின் முகத்திரையை கிழிக்க உதவியது. 2012 முதல் தஞ்சம் இந்த நிலையில் ஸ்வீடன் நாட்டில் ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் துன்புறுத்தல் புகார் பதிவு செய்யப்பட்டது. இவரை க…
-
- 11 replies
- 2.3k views
- 1 follower
-
-
பிரெக்ஸிற்றிற்கு ஒக்டோபர் 31 வரை கால நீடிப்பு! ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் திட்டத்திற்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிவரை கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரெக்ஸிற் கால நீடிப்பு தொடர்பாக பிரசல்ஸில் நேற்று (புதன்கிழமை) ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூடி ஆராய்ந்தனர். இதன்போது ஒக்டோபர் 31 வரை காலநீடிப்பை வழங்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் குறிப்பிட்டுள்ளார். ஐந்து மணிநேர நீண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டது. பிரெக்ஸிற் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றில் பிரதமர் தெரேசா மே முன்வைத்த முன்மொழிவுகள் யாவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டதைப் போன்று க…
-
- 0 replies
- 734 views
-
-
பிரெக்ஸிற்: நியாயமான தாமத காலத்தை வழங்க மேர்கல் தயார்! ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு தமது வெளியேற்றத்தை ஒழுங்கான முறையில் செயற்படுத்துவதற்காக பிரித்தானியாவுக்கு நியாயமான அளவு கால நீடிப்பு வழங்கப்பட வேண்டுமென ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்கல் வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-யால் முன்வைக்கப்பட்டுள்ள ஜூன் 30 வரையிலான தாமதத்தை விட நீண்டதாகவே காலநீட்டிப்பு அமையுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இருதரப்பினரும் இணைந்து பிரெக்ஸிற் தீர்வொன்றை எட்டுவதற்கு போதிய அளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமென தமது அரசாங்கம் எண்ணுவதாகவும் மேர்கல் கூறினார். பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் ஜெர்மனி…
-
- 2 replies
- 707 views
-
-
இஸ்ரேல் தேர்தல்: 5-வது முறையாக பிரதமரானார் பெஞ்சமின் நேதன்யாகு! இஸ்ரேலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பெஞ்சமின் நேதன்யாகு 5-வது முறையாக மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டில் ‘கென்னெசெட்’ என்றழைக்கப்படும் 120 இருக்கைகள் கொண்ட பாராளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.இதில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் பிரதமராக 4 முறை பதவி வகித்துள்ள பெஞ்சமின் நேதன்யாகு, இந்த முறையும் வெற்றிபெற்று ஐந்தாவது முறையாக அரியணை ஏறுவதில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளார். பெஞ்சமின் நேதன்யாகு 13 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்த காலத்தில் இஸ்ரேல் நாட்டின் இறையா…
-
- 0 replies
- 362 views
-
-
ஒழுங்கான பிரெக்ஸிற்றை உறுதிப்படுத்தவே தாமதத்தை அடைய விரும்புகிறேன்: பிரதமர் மே பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காகவே பிரெக்ஸிற்றை ஜூன் 30 வரை பிற்போடுவதற்கு தாம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். இன்று பிரஸ்ஸல்ஸில் இடம்பெறும் அவசர உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள பிரதமர் மே செய்தியாளர்களிடம் கூறியதாவது; ‘ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒழுங்கான முறையில் இயன்றவரை வெகுவிரைவாக வெளியேறுவதையே நான் விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளிலேயே நான் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளேன். பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காகவே பிரெக்ஸிற்றை மேலும் பிற்…
-
- 0 replies
- 771 views
-
-
ஜாலியன்வாலாபாக் படுகொலை: ஒரு நூற்றாண்டு துயரத்திற்கு வருத்தம் கோரியது பிரிட்டன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜாலியான்வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரீசா மே வருத்தம் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 13ஆம் தேதியுடன் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து நூற…
-
- 0 replies
- 470 views
- 1 follower
-
-
இம்ரான் கான் - 'திருப்பித் தாக்குவதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழி இருந்திருக்காது' 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இது சோதனை காலம். கடந்த பிப்ரவரி மாதம், தமது நாட்டு பிராந்தியத்தில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது…
-
- 0 replies
- 649 views
- 1 follower
-
-
பாலகோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறிய இடத்திற்கு ஊடகங்களை அனுமதித்தது பாகிஸ்தான் - BBC Exclusive 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்ட பாலகோட் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப்படை அழித்ததாகக் கூறிய பகுதிக்கு இன்று (புத…
-
- 0 replies
- 427 views
- 1 follower
-