Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. எகிப்து தலைநகரில் கோர விபத்து – அமைச்சர் பதவி விலகல்! எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள பிரதான ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தை அடுத்து போக்குவரத்து அமைச்சர் ஹிஷாம் அரஃபாத் ராஜினாமா செய்துள்ளார். ரயில் எஞ்சின் தடுப்பொன்றில் மோதியதில் இன்று (புதன்கிழமை) குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, ரயில் நிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவத்துடன், தீ பரவியுள்ளது. குறித்த அனர்த்தத்தில் 50 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் மீட்கப்பட்ட பல உடல்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 பேர் சிகிச்சைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாக சுகாதார …

  2. தென்னாப்பிரிக்காவில் பொதுத்தேர்தல் அறிவிப்பு! தென்னாப்பிரிக்காவில் எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி சிரில் ரமபோசா அறிவித்துள்ளார். 1994 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை முடிவுற்ற பிறகு, ஜனநாயகப்பூர்வமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நாடாளுமன்ற கீழ் சபையில் (தேசிய சபை) பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவ்வகையில் மே 8 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி தேசிய சபை கலைக்கப்பட்டது. அதன் பின்னர் தேர்தல் நடைமுறைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில், மே 8 ஆம் திகத…

  3. படத்தின் காப்புரிமை Getty Images புதன்கிழமை இரவு விருந்தை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் உச்சி மாநாட்டை நடத்தவுள்ளனர். வியட்நாம் தலைநகர் ஹனோயில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை ஒழிப்பது பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிம் ஜாங்-உன்னுடன் கூட்டம் நடத்துவதற்கு முன், வியட்நாம் பிரதமர் மற்றும் பிற அரசியல்வாதிகளை டிரம்ப் சந்திப்பார். …

  4. வியட்நாமுடன் பாரிய வர்த்தக ஒப்பந்தங்கள்!- ட்ரம்ப் தெரிவிப்பு வியட்நாமுடன் பாரிய வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்-னுடனான இரண்டாம்கட்ட சந்திப்பிற்காக, அமெரிக்க ஜனாதிபதி விட்நாம் சென்றடைந்துள்ளார். இந்நிலையில், வட கொரிய தலைவருடனான சந்திப்பிற்கு முன்னர் ஜனாதிபதி ட்ரம்ப், இன்று (புதன்கிழமை) வியட்நாம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். மேலும் தெரிவித்த ட்ரம்ப், ”நாம் வியட்நாமுடன் பல பாரிய வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திடவுள்ளோம். வியட்நாமின் உபசரிப்பை நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். வடகொரிய தலைவ…

  5. எதிர்பார்ப்புமிக்க இரண்டாம்கட்ட ட்ரம்ப் – கிம் சந்திப்பு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இடையிலான வரலாற்று முக்கியம்வாய்ந்த எதிர்பார்ப்புமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு ஆரம்பமாகவுள்ளது. இருநாட்டு தலைவர்களும் வியட்நாமை வந்தடைந்துள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) மாலை இருவருக்கிடையிலான சந்திப்பு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அணுவாயுத பாவனையை முற்றாக கைவிடுவதற்கு வடகொரியாவை வலியுறுத்துவதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக விளங்குகிறது. வடகொரிய தலைவருடனான சந்திப்பிற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி, வியட்நாம் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தொடர்ந்து பிரதமருடன் இருதரப்பு சந்திப்பொன்றை முன்னெடுக…

  6. வாட்ஸ் அப் தளத்தில் வைரலாகப் பரவிவரும் இந்திய விமானப்படைத் தாக்குதல் ஒரு வீடியோ கேமில் இருந்து எடுத்தது ! கோடிக்கணக்கான இந்தியர்கள் கடந்த இரு நாட்களாக தமது விமானப்படையின் வீரப் பிரதாபங்கள் என்கிற ஒப்பனையோடு ஒரு கானொளியினைப் பார்த்தும் அதனை மீண்டும் மீண்டும் தரவேற்றியும் வருகிறார்கள். எனது வேலைத்தளத்தில்க் கூட எல்லா இந்தியர்களுமே, "பயங்கரவாதிகளைத் துரத்தித் துரைத்திக் கொன்றோம், அவர்கள் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்க, லேசர் முறையில் ஏவப்படும் ஏவுகணைகள் அவர்களைத் துவசம் செய்ய, அவர்களது கட்டிடங்கள் எல்லாம் தூள் தூளாக நொருங்குகிறதைப் பார்த்தோம், இது மிகப்பெரிய வெற்றி" என்று சொல்லிவருகிறார்கள். ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வாறு போலித் தேசியவாதத்தால் கட்டுப்பட்…

  7. பாக்ஹூசில் ஐஎஸ் இன்னமும் ஆதிக்கம் செலுத்தும் கடைசி பகுதி. Published : 25 Feb 2019 18:37 IST Updated : 25 Feb 2019 18:50 IST சிரியாவில் தங்கள் பயங்கரவாத அமைப்புக்கு பாலியல் அடிமைகளாக கடத்திச் சென்ற பெண்களில் 50 பேர்கள் கொல்லப்பட்டு அவர்கள் தலைகள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் குகைகளில் கண்டெடுக்கப்பட்டதாக பிரிட்டனின் ஸ்பெஷல் ஏர் சர்வீஸ் (SAS)பகீர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறவிடாதீர் ஏற்கெனவே டெய்லி மெய்ல் …

  8. படத்தின் காப்புரிமை EPA Image caption போப் பிரான்சிஸ் சிறார் மீதான பாலுணர்வு நாட்டம் குறித்து ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்காக வத்திகானில் நடைபெற்ற மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய போப் பிரான்சிஸ், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் "சாத்தானின் கருவிகளாக" இருந்ததாக கூறிய போப், ஒவ்வொரு வழக்கும் "மிகுந்த தீவிரத்தோடு" எடுத்துக்கொள்ளப்பட்டு, விசாரிக்கப்படுமென்று உறுதியளித்தார். அதுமட்டுமின்றி, தற்…

  9. இந்தியாவின் மிரட்டலுக்கு அடிப்பணிய போவதில்லை: பாகிஸ்தான் இந்தியாவின் மிரட்டலுக்கு ஒருபோதும் அடிப்பணிய போவதில்லை என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி (Shah Mehmood Qureshi) தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர், “பாகிஸ்தான் அமைதியான நாடு, நாம் அமைதியை விரும்புகின்றோம். ஆனால் இந்தியா எம்மை அச்சுறுத்தி மண்டியிட வைக்க நினைத்தால் அந்த மிரட்டலுக்கு நாம் ஒரு போம் அஞ்சபோவதில்லை. இதனை தெளிவாக இந்தியாவுக்கு கூறி கொள்ள விரும்புகின்றேன். போர் தொடுப்போம் என மிரட்டினால் அதற்கு நாம் அஞ்சப்போவதில்லை. எனவே,…

  10. ஹனோய் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ரயிலில் புறப்பட்ட கிம்யொங் உன் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் உடனான ஹனோய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன் ரயில் மூலமாக புறப்பட்டுச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ட்ரம்ப் மற்றும் கிம்யொங் உன் இருவரும் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அதன்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் உன் உறுதி அளித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. இதற்…

  11. அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின் அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த ரஷ்யா தயாரக உள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார். ஊடகவியாளர்களை இன்று (வியாழக்கிழமை) சந்தித்து கருத்து தெரிவித்த போதே, அமெரிக்காவுடனான ஆயுத போட்டியை ரஷ்யா விரும்பவில்லை என கூறினார். இதே நேரத்தில் ரஷ்யாவை குறி வைத்து அணு ஆயுத ஏவுகணைகளை ஐரோப்பிய நாடுகளில் நிறுத்த அமெரிக்க முயற்சி செய்வதாகவும் அவர் கூறினார். ஏவுகணைகளை ஏவி மொஸ்கோவை தாக்கும் வகையில் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், இதற்கு பதிலடி கொடுக்க ரஷ்யாவும் தயாராக இருக்கின்றது என கூறினார். அமெரிக்காவுக்கு அருகில், சர்வதேச கடல்பரப்பில் ரஷ…

  12. IS தீவிரவாதிகளினால், மூளைச்சலவை செய்யப்பட்டு, நன்கு படிக்கக் கூடிய 15 வயது மாணவி சிரியாவுக்கு, ஓடிப் போனார். அங்கே ஒரு ஜிகாதியை மணந்து கொண்ட அவர் 2 பிள்ளைகளுக்கு தாயானார். பிறந்த இரண்டு குழந்தைகளும் தகுந்த மருத்துவ வசதி இன்றி இறந்து விட்டதால், இனி பிறக்க இருக்கும் பிள்ளையை சிறந்த மருத்துவ வசதி கொண்ட பிரிட்டனுக்கு வந்து பெற்றுக் கொள்ள விரும்புகிறார். இந்நிலையில் மூன்றாவது பிள்ளைக்கு தாயாக உள்ள நிலையில், IS படைகள் தமது பகுதிகளை இழந்து கொண்டிருக்கும் நிலையில் மிக குறுகிய பகுதியில் சிரிய படைகளினால் சுத்தி வளைக்கப் பட்டு உள்ள நிலையில், அவரது கணவர், சிரிய படைகளிடம் சரணடைந்து விட்டார். இந்த 19 வயது பெண், பிறக்க இருக்கும் குழந்தைக்கு மருத்துவ வசதி வேண்டியும், தான…

  13. அகிம்சையை கைவிடுங்கள்.. அதிரடி தாக்குதல் நடத்துங்கள்: இந்தியாவுக்கு இஸ்ரேல் அட்வைஸ்! பயங்கரவாதத்தினால் இந்தியா, இஸ்ரேல் மட்டுமல்ல பல்வேறு உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு நாங்கள் (இஸ்ரேல்) அதிரடி தாக்குதல்களை நடத்திவருகிறோம். அந்த வகையில், தீவிரவாதம் – பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுக்கு எந்த வித நிபந்தனையுமின்றி முழுமையாக உதவ தயராக உள்ளோம் என அறிவித்துள்ளது இஸ்ரேல். ஜம்மு காஷ்மீர், புல்வாமா பகுதியில் கடந்த 14 ஆம் தேதி இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் – இ- முகமது என்ற அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 வீரர்கள் பலியானார்கள். 20க்கும் மேற்…

  14. கனடாவில் தீவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பலி February 20, 2019 கனடாவின் மொண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். வீட்டிலுள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்ததாக தெரிவிக்க்பபட்டுள்ளது. தீயணைப்பு படையினர் சென்று தீணை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் விபத்தில் அந்த வீட்டில் தங்கியிருந்த 7 குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் . ஒரு ஆணும், பெண்ணும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்த 7 குழந்தைகளும் ஒரே கு…

  15. படத்தின் காப்புரிமை RAJESH ASNANI-BBC ஜெய்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சிறைக்கைதியான ஷாக்கருல்லா, உடன் இருந்த சக சிறைக் கைதிகளால் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் சியால்கோட்டை சேர்ந்த ஷாக்கருல்லா ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்திய சிறைக் கைதிகள் நான்கு பேர் அவரை கல்லால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் புதன்கிழமை மதியம் நடைபெற்றதாக காவல்துறை கூறுகிறது. ஜெய்பூர் மூத்த காவல் அதிகாரி லக்ஸ்மன் கௌடு சிறைக்கு வெளியில் கூடிய பத்திரிகையாளர்களிடம் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். …

  16. உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் காலமானார் உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான Karl Lagerfeld தனது 85வது வயதில் இன்று(செவ்வாய்கிழமை) காலமானார். ஜேர்மன் நாட்டைப் பிறப்பிடமாக கொண்ட அவர், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Chanel & Fendi நிறுவனத்தில் உற்பத்தி இயக்குநராக இருந்த இவர் இறக்கும்வரை தனது ஆடை வடிமைப்பில் கைதேர்ந்து விளங்கினார். அதிக விருதுகளை வாங்கியுள்ள இவர் இறுதியாக பரிஸில் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர். http://athavannews.com/உலக-புகழ்பெற்ற-ஜேர்மனிய/

  17. உலகின் சிறந்த கழிவறை பேப்பர்’ என்ற கூகுள் தேடலின் போது பாகிஸ்தான் தேசிய கொடி ’உலகின் சிறந்த கழிவறை பேப்பர்’ என்ற கூகுள் தேடலின் போது பாகிஸ்தான் தேசிய கொடி தென்படுவது போன்று மாற்றப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில இந்தியர்களால் மாற்றப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் நாற்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. …

  18. சுவிஸ் அரசின் வித்தியாசமான அறிவிப்பு மின்னணு வாக்களிப்பு அமைப்பிலுள்ள குறைபாடுகளை கண்டுபிடிக்கும் இணையத்திருடர்களுக்கு பரிசு வழங்கவுள்ளதாக சுவிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இணையத்திருடர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, இணையத்தில் பதிவு செய்து கொண்டு, சுவிஸ் மின்னணு வாக்களிப்பு அமைப்புக்குள் நுழைய முயற்சி செய்யலாம். ஃபெடரல் அரசாங்கம் காகித முறை வாக்கெடுப்பிலிருந்து மின்னணு முறைக்கு மாறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்காக 250,000 சுவிஸ் ஃப்ராங்குகள் முதலீடு செய்யவுள்ளது. ஒரு இணையத்திருடரால், தான் கண்டுபிடிக்கப்படாமலே மின்னணு வாக்கெடுப்பு அமைப்பிற்குள் நுழைய முடிந்தால், அவர்களுக்கு 50,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை பரிசாக வழங்கப்படும் என…

  19. தொழிலாளர் கட்சியில் இருந்து 7 எம்.பி.க்கள் விலகல் பிரெக்சிட் விவகாரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் திடீரென கட்சியில் இருந்து விலகியுள்ளனர். பிரெக்சிட் விவகாரம் மற்றும் யூதர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகிய விவகாரங்களில் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரிமி கார்பின் செயல்பாடுகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை தெரிவித்தே இவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். அத்துடன் இவர்கள் இனி அணியாக செயற்பட தீர்மானித்துள்ளதுடன், தொழிலாளர் கட்சி மற்றும் பிற கட்சிகளின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். புதிய அரசியல் கட்சியை தொடங்குவதற்காக தங்களுடன் இணையும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். இதையடுத்து, தொழிலாளர் கட்சியில் இர…

  20. இந்தியா-பாகிஸ்தான் எல்லை முறுகல்: சவுதி பாகிஸ்தானுக்கு உதவி பாகிஸ்தான் சவுதி அரேபியாவுக்கு நெருக்கமான நாடு எனவும், பாகிஸ்தானுடன் தமது உறவு தொடரும் எனவும் சவுதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவித்துள்ளார். சவுதி அரேபிய இளவரசர் சல்மான், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின்போது பாகிஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற முஹம்மது பின் சல்மான், ஜனாதிபதியைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்னர் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய ‘நிஷான் இ பாகிஸ்தான்’ விருதினை சவுதி இளவரசருக்கு வழங்கி கெளரவித்துள்ளார். இந்த சந்திப்பின் பின…

  21. ட்ரம்பை பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கை தொடர்பாக ஆய்வு! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவு மற்றும் நீதித்திணைக்களத்தின் உயரதிகாரிகள் கலந்தாலோசித்துள்ளனர். இவற்றினடிப்படையில், டொனால்ட் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுமாறு, செனட்சபையின் நீதிக்குழுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் அந்தப் பதவிக்குத் தகுதியற்றவராகக் காணப்படும் பட்சத்தில், அவரைப் பதவியிலிருந்து அகற்றுவதனை அரசியலமைப்பின் உறுப்புரைகள் அனுமதிப்பதாக, 2017 ஆம் ஆண்டில் அந்நாட்டு துணை சட்டமா அதிபர் ரொட் ரொசென்ஸ்ரைன் தெரிவித்ததாக, அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இடைக்காலத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இந்…

  22. பாகிஸ்தான் இராணுவ தொடரணி மீது தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்! பாகிஸ்தான் இராணுவ தொடரணியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அதில் அகமது தார் என்ற தீவிரவாதி மேற்கொண்ட, தற்கொலைத் தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் பாகிஸ்தானிலும் அரங்கேறியுள்ளதாக ‘தி பலுசிஸ்தான் போஸ்ட்’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் இராணுவ தொடரணியை இலக்கு வைத்தே இந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா…

  23. 2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு சவுதி அரேபியாவில் சிறைகளிலுள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாகிஸ்தான் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய சவுதி இளவரசர் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளார். சவுதியின் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானின் பாகிஸ்தான் விஜயத்தையடுத்தே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மானுடன் நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்து பேசினார். இதன்போது, சவுதி சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சவுதி இளவரசரிடம் அவர் விடுத்தார். அத்துடன் ஏழைத் தொழிலாளர்களாக சவுதிக்கு சென்ற இவர்களின் குடும்பத்தினர் சிறைக…

  24. ஹேக்கர்கள் கைவரிசை : பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடங்கியது புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு இடையிலான பூசல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்பில் இவ்விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பதை அறிந்துகொள்ள உலக நாடுகள் ஆவலுடன் உள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து இந்த இணையதளத்தை பிறர் தொடர்புகொள்ள முடியாத நிலை நேற்று ஏற்பட்டது. இந்த முடக்கத்துக்கு இந்தியாவை பாகிஸ்தான் பத்திரிகைகள் குற்றம்சாட்டும் நிலையில், ‘உள்நாட்டில் இருப்பவர்களுக்கு வெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.