Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தீவிரவாதத்தினை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு, ஒரு டொலர் கூட கிடைக்காது: அமெரிக்கா தீவிரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு டொலர் கூட நிதியுதவி அளிக்காது என ஐ.நா.விற்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், “தொடர்ந்தும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா ஒரு டொலர் கூட கொடுக்காது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தொடர்ந்து அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்று குவித்து வருகின்றனர். இதனால்தான் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஒரு டொலர் கூட கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறது. அமெரிக்காவிற்கு எதிராகச் செயற்…

  2. பிரான்சில் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சம் – ஈபிள் கோபுரம் மூடப்படுகின்றது December 7, 2018 பிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கெதிரான மஞ்சள் ஜக்கெட் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சம் காரணமாக நாளை சனிக்கிழமை ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரான்ஸ் முழுவதும் 89,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும், தலைநகர் பாரீஸில் ராணுவ வாகனங்கள் நிறுத்தப்படும் எனவும் அந்நாட்டு பிரதமர் எய்ட்வார் பிலிப் அறிவித்துள்ளார். மேலும், பாரீஸின் செம்ப்ஸ்-எலைசீஸ் பகுதியிலுள்ள கடைகள் மற்றும் உணவகங்களை மூடுமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளதுடன் சில அருங்காட்சியகங்களும் மூடப்படும் என தெரிவிக்கப்ப…

  3. மிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார் சீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றுள்ளார். பெய்ஜிங்: சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி இன்று நடைபெற்றது. இதில் மிஸ் வேர்ல்டு 2018 போட்டி நடந்தது. இதில், மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார். கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வன…

  4. மலேசிய நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பெண் சபாநாயகரானார்! உலகின் முதன்முறையாக தமிழ்ப் பெண்ணொருவர் நாடாளுமன்ற சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மலேசிய நாடாளுமன்றத்தில் எஸ்.தங்கேஸ்வரி என்ற பெண் முதன்முறையாக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக மலேசியாவின் பெராக் பிராந்தியத்தின் சட்டமன்ற சபாநாயகராகவும் செயற்பட்டு வந்துள்ளார். அத்துடன் கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் Hutan Melintang பகுதிக்கான பாரிஸன் நேஷனல் கட்சியின் சார்பில் வேட்பாளராகவும் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/மலேசிய-நாடாளுமன்றத்தில்/

  5. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

  6. ஏமனில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பம் December 7, 2018 ஏமனில் சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருகின்ற நோக்கிலான அமைதிப் பேச்சுவார்த்தை, ஏமன் அரசுப் பிரதிநிதிகள் மற்றும் ஹவுத்தி கிளர்ச்சிக் குழு இடையில் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஆரம்பமாகியுள்ளது. இதுவொரு முக்கிய திருப்புமுனை என ஐநா சிறப்பு தூதர் மார்ட்டின் கிரிபித்திஸ் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில், கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் ஆயிரக்கணக்கான குடும்பங்களை மீண்டும் இணைய வகை செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவத…

  7. கனடாவில் கைதுசெய்யப்பட்ட சீனாவின் அதிகாரி சீன நாட்டின் தொலைத் தொடர்பு குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்வான்ஜவ் கனடாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சீனத் தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவெய் நிறுவன அதிபரின் மகள், கனடாவில் வைத்து கடந்த முதலாம் திகதி வான்கூர் நகரில் கைதுசெய்யப்பட்டார். எனினும் இது பற்றிய தகவல்களை கனடா நீதித்துறை அமைச்சகம் தற்போதுதான் வெளியிட்டுள்ளது. ஈரான் மீதும், வடகொரியா மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகளை சீனாவின் ஹுவாவெய் நிறுவனம் மீறியதாக அமெரிக்கா கருதுகிறது. இது தொடர்பிலான விசாரணைகளை அமெரிக்கா நடத்தி வருகின்ற நிலையில்தான் மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டுள்ளார் என ஊகிக்கப்படுகிறது. எனினும் இவரது க…

  8. படத்தின் காப்புரிமை Reuters ஏழு கடற்படையினர் பயணித்த இரண்டு விமானங்கள் மோதி கடலுக்குள் விழுந்து பின்னர், காணாமல் போன சம்பவத்தில், 5 கடற்படையினரை தேடும் பணியும், மீட்பு நடவடிக்கையும் ஜப்பானில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவரின் உடல் நிலை சீராக உள்ளது என்று ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இன்னொருவரின் நிலைமை பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை. கேசி-130 மற்றும் ஃஎப்/எ-18 ரக விமானங்கள் விபத்திற்குள்ளாயின என்று ஹிரோஷிமாவுக்கு அருகிலுள்ள இவாகுனி கடற்படை அதிகாரிகள் கூறுகின்றனர். …

  9. ஏவுகணை தயாரிப்பை அமெரிக்கா தொடர்ந்தால் நாமும் தொடர்வோம் – ரஷ்யா அதிரடி அறிவிப்பு அமெரிக்கா குறைந்த தூர ஏவுகணை தயாரிப்பை மேம்படுத்தத் தொடங்கினால், ரஷ்யாவும் அவ்வாறே செயற்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். அமெரிக்கா சோவியத் யூனியன் இடையே 1987-ஆம் ஆண்டு குறுகிய தூர அணு ஆயுதப் படை ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 500 முதல் 5 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய அணு ஆயுதம் தாங்கிய அல்லது சாதாரண ஏவுகணைக்கு அந்த ஒப்பந்தத்தின் படி தடை விதிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்கா – ரஷ்யாவிடையே பனிப்போர் நிலவும் சூழலில் அதைக் கைவிடுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார். இருநாட்டு உறவிலும் சுமூக நிலை ஏற்படுத்தும் பொரு…

  10. படத்தின் காப்புரிமை Getty Images Image caption உலகில் நான்கில் ஒரு குழந்தை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கிறது இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் கடுமையான அபாயத்தில் உள்ள 15 நாடுகளில், 9 தீவுகள் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 2018 உலக ஆபத்து அறிக்கை, 172 நாடுகளில் பூகம்பம், சுனாமி, சூறாவளி மற்றும் வெள்ளம் போன்ற ஆபத்துகள் குறித்து ஆய்வு செய்தது. அப்படி இயற்கை பேரிடர்கள் வந்தால் எவ்வாறு அதனை அந்நாடுகள் எதிர்கொள்ளும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள ரூர் பல்கலைக்கழகம், போசம் மற்றும் மேம்ப…

    • 1 reply
    • 882 views
  11. படத்தின் காப்புரிமை EPA சில வாரங்கள் வன்முறை போராட்டங்களுக்கு வழிவகுத்த எரிபொருளுக்கான வரி விதிப்பை இடைநிறுத்துவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டங்கள் பிரான்சிஸின் முக்கிய நகரங்களில் கணிசமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. "மஞ்சள் ஜாக்கெட்" என்று அறியப்படும் இந்த போராட்டங்கள் அரசின் மீதான மக்களின் கோபத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளன. இந்த போராட்டம் தொடங்கியதில் இருந்து 3 பேர் கொ…

  12. மனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் : ஐ.நா எச்சரிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பெரிய காலநிலை மாற்ற மாநாடு போலந்தில் ஆரம்பித்துள்ள நிலையில் உடனடி நடவடிக்கையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சுமார் 200 நாடுகள் கலந்துகொண்டுள்ள இம்மாநாடு 2C (3.6F) க்கு கீழே காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு பரிஸ் காலநிலை உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் கிட்டத்தட்ட 200 நாடுகளின் பிரதிநிதிகள் பசுமை இல்ல வாயு வெட்டுகளை கண்காணிப்பதற்கான ஒரு விதிமுறை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்களென தெர…

  13. G20 உச்சிமாநாட்டின் முக்கிய தீர்மானங்கள். உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளின் தலைவர்கள் கலந்துகொண்ட G20 உச்சிமாநாடு கடந்த சனிக்கிழமை நிறைவுபெற்றது. ஆர்ஜென்டீனாவில் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள் கீழே: உலக வர்த்தக அமைப்பு உலக வர்த்தக அமைப்பின் (WTO) சீர்திருத்தத்திற்காக அனைத்து G20 தலைவர்களும் அழைப்பு விடுத்தனர். அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் ஜப்பான், ஒசாகாவில் நடைபெறவுள்ள இவ்வமைப்பின் மாநாட்டின்போது இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்படும். எவ்வாறிருப்பினும் அமெரிக்காவின் எதிர்ப்பு காரணமாக கூட்டிணைவு இறுதி அறிக்கையில் பாதுகாப்புவாதம் குறிப்பிடபடவில்லையென பேச்சுவார்த்தையாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக வர்த்தக…

  14. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார் பரக் ஒபாமாவுக்கு முன்னர் அமெரிக்காவை ஆட்சி செய்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) காலமானர்.அந்நாட்டின் ஜனாதிபதியாக கடந்த 1989 முதல் 1993 ஆம் ஆண்டுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார். இவரது மகனான ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், அந்நாட்டின் அதிபராக 2001 முதல் 2008 ஆம் ஆண்டுவரை இருமுறை அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார். வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்துவந்த ஜோர்ஜ் ஹெச்.டபிள்…

  15. பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான ‘ஒபக்’ அமைப்பில் இருந்து விலகப்போவதாக கத்தார் அறிவித்துள்ளது கச்சா எண்ணெய் சந்தையில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் தூதரக உறவைத் துண்டித்தன. இதனால் மிகப்பெரிய பின்னடைவையும், பொருளாதார பாதிப்பையும் கத்தார் சந்தித்தது. இதன் பிறகு ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு பிரச்சினையின் தீவிரத்தை தணித்தன. இந்நிலையில், எண்ணெய் வள நாடுகளான அரபு நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப…

  16. படத்தின் காப்புரிமை Getty Images சீனாவில் இறக்குமதியாகும் அமெரிக்க கார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 40 சதவீத வரிகளை 'நீக்கவதற்கும் குறைப்பதற்கும்' சீனா முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எந்த வித மேற்கொண்ட தகவல்களும் இல்லாமல் டிரம்ப் இதனை டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இதற்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை. இந்த முடிவு உறுதி செய்யப்பட்டால் அமெரிக்க - சீன வர்த்தக போரால் தடுமாற்றத்தில் இருந்த கார் உற்பத்தித்துறை இதை பெரிதும் வரவேற்கும். …

  17. டியாகோ ஆர்குடாஸ் ஒர்டிஸ் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images சில நிமிடங்கள் பெய்த மழைக்கு சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலைமையும், சில மணிநேரங்களுக்கு மழை பெய்தால் வீடே வெள்ளத்தில் தத…

  18. அமெரிக்க வான் தாக்குதலில் தலிபான்களின் சிரேஸ்ட தலைவர் பலி… December 3, 2018 அமெரிக்கா மேற்கொண்ட வான் தாக்குதல் ஒன்றின் போது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலிபான்கள் அமைப்பின் சிரேஸ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமையேற்று வழிநடத்தி வந்தவரும், ஹெல்மண்ட் மாகாணத்தின் தலிபான் மாற்று நிர்வாகத்தின் தலைவராகவும் இருந்தவருமான முல்லா அப்துல் மனன் என்பவரே சனிக்கிழமை இரவு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது செல்வாக்கு, அனுபவம், ஈர்ப்பு மிக்கவராக இருந்த அவரது மறைவு தலிபான்களுக்கு இழப்பாக அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக, அரச படைகளின் மீதான தாக்குதல் அதிகர…

  19. அவுஸ்திரேலியாவில் இலகுவாக குடியேறும் வகையில் புதிய விசா நடைமுறை! அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தமது பெற்றோர்களை அந்நாட்டுக்குள் அழைப்பதற்கான புதிய விசா நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது. தற்காலிக பெற்றோர் விசா அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்விசா தொடர்பான சட்டமூலமான Migration Amendments (Family Violence and Other Measures) Bill இனை கடந்த 2016ம் ஆண்டு அப்போது ஆட்சியிலிருந்த லிபரல் முன்மொழிந்திருந்த நிலையில் தற்போது குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள தங்களது குடும்பங்களைச் சந்தித்துக்கொள்ள இப்புதிய நடைமுறை விசா வழியேற்படுத்தும் என குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோல்மன் குறிப்ப…

  20. பிரான்ஸ் அதிபர் மக்ரோங் தலைமையில் அவசர பாதுகாப்பு கூட்டம் நடக்க இருக்கிறது. அந்நாட்டில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக மூன்றாவது வாரமாக நடைபெறும் போராட்டத்தில் போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இப்போது நிலவும் அமைதியற்ற நிலையை எதிர்கொள்ள அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்படலாம் என்கிறார் அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர். படத்தின் காப்புரிமை Getty Images ஏன் மோதல்கள்? எரிபொருள் விலை உயர்வ…

  21. ஜெர்மனிய அதிபருடன், மோடி சந்திப்பு! ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் மோடி ஜெர்மன் ஜனாதிபதி அஞ்சலா மேர்கலை இன்று (சனிக்கிழமை) சந்தித்து பேசினார். அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடியை அர்ஜென்டினாவின் ஜனாதிபதி மௌரிசியோ மக்ரி இன்று காலை வரவேற்றார். அதன்பின் அவருடன் நடந்த ஆலோசனையில் விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல், விண்வெளி, ராணுவம், எண்ணெய் மற்றும் வாயு மற்றும் …

  22. இஸ்லாமியர்களிடம் மன்னிப்புக் கோரியது ஜேர்மன் அரசாங்கம்! ஜேர்மன் தலைநகர் பேர்லினில் இந்த வார ஆரம்பத்தில் நடைபெற்ற ஜேர்மன் இஸ்லாமிய மாநாட்டில் உணவு பறிமாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக அதிகாரிகள் மன்னிப்பு கோரியுள்ளனர். குறித்த மாநாட்டில் பன்றி இறைச்சி கொண்டு தயாரிக்கப்பட்ட வொசேஜுகளை பரிமாறியதற்காக ஜேர்மன் உள்விவகார துறை அமைச்சகம் மன்னிப்புக் கோரியுள்ளது. பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்பதை மனதில் வைத்தே உணவுத் தெரிவுகள் அமைந்ததாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், குறித்த இஸ்லாமிய மாநாட்டில் பரிமாறப்பட்ட சொசேஜுகளில் பன்றி இறைச்சி மற்றும் ரத்தம் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த விடயம் இஸ்லாமிய மத உணர்வுக…

  23. ரஷ்ய ஆண்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு உக்ரேன் தடை மொஸ்கோ உக்ரேன் மீது படையெடுப்பு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து 16 வயது முதல் 60 வயதிற்குட்பட்ட ரஷ்ய ஆண்கள் தமது நாட்டிற்குள் நுழைவதற்கு உக்ரேன் தடை விதித்துள்ளது. ரஷ்யர்களை தமது நாட்டில் தனிப் படைகள் உருவாக்குவதை தடுக்கும் நோக்குடன் இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்ய பீரங்கிகள் தமது நாட்டின் எல்லையில் முற்றுகையிட்டுள்ளதற்கான ஆதாரங்கள் தம்மிடமுள்ளதாகவும் உக்ரேனிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டில் மொஸ்கோவால் கைப்பற்றப்பட்ட கிரைமியா தொடர்பாக இரண்டு நாடுகளுக்குமிடையே நீண்டகாலமாக இடம்பெற்றுவந்த மோ…

  24. அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் சீரற்ற காலநிலையால் குறித்த பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 24 ஆம் திகதி உருவான காட்டுத்தீ அங்கு நிலவி வரும் வறட்சியான காலநிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்று ஆகியவற்றால் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் குறித்த தீயால் 22 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் காட்டுத்தீ பரவிவரும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள…

  25. புட்டினுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ளார். November 30, 2018 உக்ரைன் நாட்டு கப்பல்களை ரஸ்யா கைப்பற்றிய பிரச்சனையை மையப்படுத்தி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார் . உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஸ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில் அண்மையில் கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஸ்ய ராணுவம் கைப்பற்றியதில் இருந்து மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்த விவகாரத்தில் ரஸ்யாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் உக்ரைனுக்கு அதிக ஆதரவு வழங்குமாறு ஐரோப்பிய நாடுகளை வல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.