Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. படத்தின் காப்புரிமை Reuters பிரிட்டன் பிரதமர் தெரீசா மே புதன்கிழமை மாலையில் (ஜிஎம்டி நேரம்) தனது தலைமை மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை எதிர்கொள்ள இருக்கிறார். பிரதமர் மே-யின் அணியில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி அடைய முடியும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதாக தெரிகிறது, அமைச்சரவையின் எல்லா முக்கிய உறுப்பினர்களும் பிரதமர் தெரீசா மே-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் 172 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அறிக்கை வெளியிட்டுள்ளதாக பிபிசி கணக்கிட்டுள்ளது. …

  2. படத்தின் காப்புரிமை Reuters Image caption மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து பால்லாயிரம் பேர் அமெரிக்காவுக்கு தஞ்சம் கோரி வந்துள்ளனர். (கோப்புப்படம்) அமெரிக்க எல்லை காவல் படையினரின் காவலில் இருந்தபோது, 7 வயது சிறுமி மரணமடைந்தது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவை நோக்கி சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்த 7,500க்கும் அதிகமான தஞ்சம் கோரிகள், அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்படாததால் அமெரிக்க - மெக்சிக எல்லையில் தங்கியுள்ளனர். அவர்களில் சிலர் அமெரிக்க எல்லைக்குள் நுழையவும்…

  3. பிரான்ஸில் மீண்டும் ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடன் மோதல் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக பிரான்ஸில் மீண்டும் ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது. தலைநகர் பாரிஸில் ஐந்தாவது வாரமாக இன்று (சனிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொடிகளையும், பதாதைகளையும் ஏந்திச் சென்ற ‘எலோ வெஸ்ட்’ என்ற அமைப்பினர் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர். அத்தோடு, பொலிஸாரின் தடைகளை தாண்டி முன்னேறிச்செல்ல முற்பட்டனர். இதனையடுத்து பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக பிரான்ஸில் கடந்த 5 வார காலமாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது. கடந்த வாரம் இடம்பெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்து…

  4. படத்தின் காப்புரிமை Getty Images ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் ஆக்ராவில் உள்ள கானா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மகாத்மா காந்தியின் சிலை, புதன்கிழமையன்று, நீக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர். 2016இல் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ அந்தச் சிலையைத் திறந்து வைத்தது முதலே அதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது. காந்தி இனவெறியுடன் நடந்து கொண்டவர் என்றும் ஆப்பிரிக்கத் தலைவர்களின் சிலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது கூறப்பட்டது. …

  5. பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி பிரான்சின் ஸ்டிராஸ்போக் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஸ்டிராஸ்பேர்க் நகரின் கிறிஸ்மஸ் சந்தைக்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பகுதியி;ல் பெருமளவு மக்கள் காணப்பட்ட தருணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டவரை தங்களிற்கு நன்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் அவர் இரு தடவைகள் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்ட பின்னர் தப்பியோடியுள்ளார் என தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் நகரின் மூன்று இடங்களில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர…

  6. ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற விசாரணையில், தாம் பொய் கூறியதாக தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன்க்கு 3 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய ஜனநாயகக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்புடன் பாலியல் உறவில் இருந்ததாக கூறப்பட்ட பெண்களை சமாதானப்படுத்துவதற்காக இரகசியமாக பணம் தந்த விவகாரத்தில் தாம் ஈடுபட்டதாகவும் அதன் மூலம் நிதி தொடர்பான சட்டங்களை மீறிவிட்டதாகவும் இந்த ஆண்டு ஓகஸ்டில் ஒப்புக்கொண்டார். இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விசாரணையில் அவர் குற்ற…

  7. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி December 12, 2018 1 Min Read பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை Dec 12, 2018 @ 09:23 பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 06 மணியளவில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொன்சர்வேற்றிவ் கட்சியின் 48பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதைத் தொடர்…

  8. புற்றுநோய் எதிர்ப்பு கண்டுபிடிப்பு: அமெரிக்கா- ஜப்பானுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2018ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஜேம்ஸ் அலிசன் மற்றும் ஜப்பானின் தசுக்கு ஹொன்ஜோ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான நோய் எதிர்ப்பு அமைப்பை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான கண்டுபிடிப்பில் ஈடுபட்டவர்களுக்கே மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போது இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டது. லேசர் தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய அமெரிக்காவின…

  9. ரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ! ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற கலகலப்பான பேஷன் ஷோ ஒன்று குறித்து அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பல விதமான பிஜாமா ஆடைகளை அணிந்து கொண்டு வயதானாலும் இளமை தோற்றத்துடன் கெட் வோக்கில் நடைபயிலும் வயதான பெண்கள் இவர்கள். இந்த பேஷன் ஷோவில் கலந்து கொண்ட மொடல்கள் மட்டுமன்றி பார்வையாளர்களும் பெரும்பாலும் முதியவர்களாகவே இருந்தனர். அத்துடன் 50 வயதுக்கும் மேற்பட்ட பல மொடல்களும் இந்த நிகழ்வில் தமது ஆடை அணிகலன்களை வௌிப்படுத்தினர். நிகழ்வில் கலந்து கொண்ட 50 வயது மதிக்கத்தக்க மொடலான மாகரிட்டா ரைசாக்கோவ்ஸ்கயா கூறுகையில் “நான் இரண்டாவது முறையாக இந்த கெட்வோக்கில் கலந்து கொள்கிறேன். கடந்த வருடம் இடம்ப…

  10. அமெரிக்காவில் பனிப்பொழிவு: வட கரோலினாவில் மூவர் உயிரிழப்பு அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் வீசிய சக்திவாய்ந்த பனிப் புயல் மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்ததுடன், நூறாயிரக்கணக்கானோர் இருளில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், வட கரோலினா மாநிலத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காரொன்றின் மீது மரம் முறிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஆறொன்றினுள் இருந்து கண்டெடுக்கப்பட்ட காரின் சாரதியை தேடும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அத்துடன், வட கரோலினா ஏரிகளில் அமைக்கப்பட்டிருந்த பல படகு வீடுகளும் பனிப்புயலின் எதிரொலியாக இடிந்து விழுந்துள்ளன. இதேவேளை, அமெரிக்காவின் தென்கிழக்கு பிராந்…

  11. தீவிரவாதத்தினை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு, ஒரு டொலர் கூட கிடைக்காது: அமெரிக்கா தீவிரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு டொலர் கூட நிதியுதவி அளிக்காது என ஐ.நா.விற்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், “தொடர்ந்தும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா ஒரு டொலர் கூட கொடுக்காது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தொடர்ந்து அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்று குவித்து வருகின்றனர். இதனால்தான் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஒரு டொலர் கூட கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறது. அமெரிக்காவிற்கு எதிராகச் செயற்…

  12. பிரான்சில் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சம் – ஈபிள் கோபுரம் மூடப்படுகின்றது December 7, 2018 பிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கெதிரான மஞ்சள் ஜக்கெட் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சம் காரணமாக நாளை சனிக்கிழமை ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரான்ஸ் முழுவதும் 89,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும், தலைநகர் பாரீஸில் ராணுவ வாகனங்கள் நிறுத்தப்படும் எனவும் அந்நாட்டு பிரதமர் எய்ட்வார் பிலிப் அறிவித்துள்ளார். மேலும், பாரீஸின் செம்ப்ஸ்-எலைசீஸ் பகுதியிலுள்ள கடைகள் மற்றும் உணவகங்களை மூடுமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளதுடன் சில அருங்காட்சியகங்களும் மூடப்படும் என தெரிவிக்கப்ப…

  13. மிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார் சீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றுள்ளார். பெய்ஜிங்: சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி இன்று நடைபெற்றது. இதில் மிஸ் வேர்ல்டு 2018 போட்டி நடந்தது. இதில், மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார். கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வன…

  14. மலேசிய நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பெண் சபாநாயகரானார்! உலகின் முதன்முறையாக தமிழ்ப் பெண்ணொருவர் நாடாளுமன்ற சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மலேசிய நாடாளுமன்றத்தில் எஸ்.தங்கேஸ்வரி என்ற பெண் முதன்முறையாக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக மலேசியாவின் பெராக் பிராந்தியத்தின் சட்டமன்ற சபாநாயகராகவும் செயற்பட்டு வந்துள்ளார். அத்துடன் கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் Hutan Melintang பகுதிக்கான பாரிஸன் நேஷனல் கட்சியின் சார்பில் வேட்பாளராகவும் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/மலேசிய-நாடாளுமன்றத்தில்/

  15. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

  16. ஏமனில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பம் December 7, 2018 ஏமனில் சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருகின்ற நோக்கிலான அமைதிப் பேச்சுவார்த்தை, ஏமன் அரசுப் பிரதிநிதிகள் மற்றும் ஹவுத்தி கிளர்ச்சிக் குழு இடையில் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஆரம்பமாகியுள்ளது. இதுவொரு முக்கிய திருப்புமுனை என ஐநா சிறப்பு தூதர் மார்ட்டின் கிரிபித்திஸ் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில், கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் ஆயிரக்கணக்கான குடும்பங்களை மீண்டும் இணைய வகை செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவத…

  17. கனடாவில் கைதுசெய்யப்பட்ட சீனாவின் அதிகாரி சீன நாட்டின் தொலைத் தொடர்பு குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்வான்ஜவ் கனடாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சீனத் தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவெய் நிறுவன அதிபரின் மகள், கனடாவில் வைத்து கடந்த முதலாம் திகதி வான்கூர் நகரில் கைதுசெய்யப்பட்டார். எனினும் இது பற்றிய தகவல்களை கனடா நீதித்துறை அமைச்சகம் தற்போதுதான் வெளியிட்டுள்ளது. ஈரான் மீதும், வடகொரியா மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகளை சீனாவின் ஹுவாவெய் நிறுவனம் மீறியதாக அமெரிக்கா கருதுகிறது. இது தொடர்பிலான விசாரணைகளை அமெரிக்கா நடத்தி வருகின்ற நிலையில்தான் மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டுள்ளார் என ஊகிக்கப்படுகிறது. எனினும் இவரது க…

  18. படத்தின் காப்புரிமை Reuters ஏழு கடற்படையினர் பயணித்த இரண்டு விமானங்கள் மோதி கடலுக்குள் விழுந்து பின்னர், காணாமல் போன சம்பவத்தில், 5 கடற்படையினரை தேடும் பணியும், மீட்பு நடவடிக்கையும் ஜப்பானில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவரின் உடல் நிலை சீராக உள்ளது என்று ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இன்னொருவரின் நிலைமை பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை. கேசி-130 மற்றும் ஃஎப்/எ-18 ரக விமானங்கள் விபத்திற்குள்ளாயின என்று ஹிரோஷிமாவுக்கு அருகிலுள்ள இவாகுனி கடற்படை அதிகாரிகள் கூறுகின்றனர். …

  19. ஏவுகணை தயாரிப்பை அமெரிக்கா தொடர்ந்தால் நாமும் தொடர்வோம் – ரஷ்யா அதிரடி அறிவிப்பு அமெரிக்கா குறைந்த தூர ஏவுகணை தயாரிப்பை மேம்படுத்தத் தொடங்கினால், ரஷ்யாவும் அவ்வாறே செயற்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். அமெரிக்கா சோவியத் யூனியன் இடையே 1987-ஆம் ஆண்டு குறுகிய தூர அணு ஆயுதப் படை ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 500 முதல் 5 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய அணு ஆயுதம் தாங்கிய அல்லது சாதாரண ஏவுகணைக்கு அந்த ஒப்பந்தத்தின் படி தடை விதிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்கா – ரஷ்யாவிடையே பனிப்போர் நிலவும் சூழலில் அதைக் கைவிடுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார். இருநாட்டு உறவிலும் சுமூக நிலை ஏற்படுத்தும் பொரு…

  20. படத்தின் காப்புரிமை Getty Images Image caption உலகில் நான்கில் ஒரு குழந்தை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கிறது இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் கடுமையான அபாயத்தில் உள்ள 15 நாடுகளில், 9 தீவுகள் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 2018 உலக ஆபத்து அறிக்கை, 172 நாடுகளில் பூகம்பம், சுனாமி, சூறாவளி மற்றும் வெள்ளம் போன்ற ஆபத்துகள் குறித்து ஆய்வு செய்தது. அப்படி இயற்கை பேரிடர்கள் வந்தால் எவ்வாறு அதனை அந்நாடுகள் எதிர்கொள்ளும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள ரூர் பல்கலைக்கழகம், போசம் மற்றும் மேம்ப…

    • 1 reply
    • 892 views
  21. படத்தின் காப்புரிமை EPA சில வாரங்கள் வன்முறை போராட்டங்களுக்கு வழிவகுத்த எரிபொருளுக்கான வரி விதிப்பை இடைநிறுத்துவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டங்கள் பிரான்சிஸின் முக்கிய நகரங்களில் கணிசமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. "மஞ்சள் ஜாக்கெட்" என்று அறியப்படும் இந்த போராட்டங்கள் அரசின் மீதான மக்களின் கோபத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளன. இந்த போராட்டம் தொடங்கியதில் இருந்து 3 பேர் கொ…

  22. மனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் : ஐ.நா எச்சரிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பெரிய காலநிலை மாற்ற மாநாடு போலந்தில் ஆரம்பித்துள்ள நிலையில் உடனடி நடவடிக்கையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சுமார் 200 நாடுகள் கலந்துகொண்டுள்ள இம்மாநாடு 2C (3.6F) க்கு கீழே காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு பரிஸ் காலநிலை உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் கிட்டத்தட்ட 200 நாடுகளின் பிரதிநிதிகள் பசுமை இல்ல வாயு வெட்டுகளை கண்காணிப்பதற்கான ஒரு விதிமுறை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்களென தெர…

  23. G20 உச்சிமாநாட்டின் முக்கிய தீர்மானங்கள். உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளின் தலைவர்கள் கலந்துகொண்ட G20 உச்சிமாநாடு கடந்த சனிக்கிழமை நிறைவுபெற்றது. ஆர்ஜென்டீனாவில் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள் கீழே: உலக வர்த்தக அமைப்பு உலக வர்த்தக அமைப்பின் (WTO) சீர்திருத்தத்திற்காக அனைத்து G20 தலைவர்களும் அழைப்பு விடுத்தனர். அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் ஜப்பான், ஒசாகாவில் நடைபெறவுள்ள இவ்வமைப்பின் மாநாட்டின்போது இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்படும். எவ்வாறிருப்பினும் அமெரிக்காவின் எதிர்ப்பு காரணமாக கூட்டிணைவு இறுதி அறிக்கையில் பாதுகாப்புவாதம் குறிப்பிடபடவில்லையென பேச்சுவார்த்தையாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக வர்த்தக…

  24. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார் பரக் ஒபாமாவுக்கு முன்னர் அமெரிக்காவை ஆட்சி செய்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) காலமானர்.அந்நாட்டின் ஜனாதிபதியாக கடந்த 1989 முதல் 1993 ஆம் ஆண்டுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார். இவரது மகனான ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், அந்நாட்டின் அதிபராக 2001 முதல் 2008 ஆம் ஆண்டுவரை இருமுறை அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார். வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்துவந்த ஜோர்ஜ் ஹெச்.டபிள்…

  25. பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான ‘ஒபக்’ அமைப்பில் இருந்து விலகப்போவதாக கத்தார் அறிவித்துள்ளது கச்சா எண்ணெய் சந்தையில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் தூதரக உறவைத் துண்டித்தன. இதனால் மிகப்பெரிய பின்னடைவையும், பொருளாதார பாதிப்பையும் கத்தார் சந்தித்தது. இதன் பிறகு ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு பிரச்சினையின் தீவிரத்தை தணித்தன. இந்நிலையில், எண்ணெய் வள நாடுகளான அரபு நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.