உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
இன்று உலக மனநல தினம் ஒக்டோபர் 10 ஆம் திகதி உலக மனநல தினமாக அனுஷ்ட்டிக்கப்படுகின்றது. இது உலக மக்கள் அனைவரையும் மனநலம் குறித்து வெளிப்படையாக பேசத்தூண்டும் நோக்குடன் மனநல ஆரோக்கியத்திற்கான உலக சம்மேளனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வருடாந்த நிகழ்வாகும். ஒவ்வொரு வருடமும் இந்நாள் ஒருகுறிப்பிட்ட அம்சத்தின்மீது கவனம் செலுத்திவருகிறது. இந்த வருடம் உலக மனநல தினம், மாறிவரும் உலகில் இளைய தலைமுறையினரின் மனநல ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்துகிறது. இன்றைய இளைஞர்கள் பிரச்சினை மிகுந்த ஒரு சமூகத்தில் வளர்ந்து வருகின்றனர். இணையத்தில் பெரும்பாலான நேரத்தை செலவிடும் அவர்கள் இணைய துஷ்பிரயோகங்களை அனுபவிப்பதுடன் வன்முறை அல்லது சோகம் நிறைந்த உள்ளடக்கங்களை அதிகமாக பார்க்கவேண்டிய நில…
-
- 0 replies
- 601 views
-
-
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சில மணி நேரங்களில் கரையை கடக்கவுள்ள மைக்கேல் சூறாவளி மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 130 மைல்கள் வேகத்தில் வீசும் இந்த புயல் இன்னும் சற்று நேரத்தில் கரையை கடக்கவுள்ளது. புளோரிடாவில் 3,70,000 பேருக்கும் அதிகமான மக்கள் அவர்களை இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும், உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. மைக்கேல் சூறாவளியானது மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளியாக மாறியுள்ளதாக தனது அண்மைய அறிக்கையில் மியாமியை மையமாக கொண்ட தேசிய சூறாவளி மையம் (என்ஹெச்சி) தெரிவித்துள்ளது. மிகவும் வேகமாக காற்று வீசும் என்றும், உயிருக்கு ஆபத்து விளைவிக…
-
- 4 replies
- 734 views
-
-
2018 சமாதானத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு (VIDEO) 2018ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், சமாதானம், இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றது. அவ்வகையில், 2018ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்று அறிவிக்கப்பட்டது. கொங்கோ நாட்டை சேர்ந்த டென்னிஸ் முக்வேஜா மற்றும் ஈராக் நாட்டை சேர்ந்த நாதியா முராத் ஆகியோருக்கு சமாதான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கொங்கோவை சேர்ந்த மருத்துவரான டென்னிஸ் முக்வேஜா, போரின…
-
- 0 replies
- 809 views
-
-
மக்ரோனின் சீர்திருத்தங்களை எதிர்த்து பாரிஸ் வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்! பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் திட்டமிடப்பட்ட சமூக சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் பாரிஸ் நகர வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமரசத்திற்கு இணங்காத CGT போன்ற தொழிலாளர் சங்கங்களின் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது கொள்கைகளை நிலைநிறுத்தும் வகையில் பிரான்ஸ் முழுவதும் ஆதரவலைகளை தேடும் நோக்கில் ஆர்ப்பாட்டங்களை வியாபிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மக்ரோனின், பிரான்ஸ் பொது சேவை மற்றும் வரவு-செலவுத் திட்ட சீர்திருத்தங்கள், மருத்துவமனை, பல்கலைக்க…
-
- 0 replies
- 827 views
-
-
ஹிட்லர் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அமெரிக்க புலனாய்வு பிரிவு! சர்வாதிகாரி ஹிட்லர் ஓரினச்சேர்க்கை உறவுமுறையை விரும்பினார் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்க புலனாய்வு அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் சர்வாதிகாரி என அழைக்கப்பட்டாலும் இவர் இளம் வயதில் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகியுள்ளார். 1943 ஆம் ஆண்டு ஹிட்லர் குறித்து அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டது. அமெரிக்க புலனாய்வு அமைப்பு இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது. அதில், 1910 ஆம் ஆண்டு முதல் 1913 வரை ஹிட்லர் ஆஸ்திரியாவின் Vienna வில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர் விடுதியில் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு, தனது 20 வயதில் ஜேர்மனிக்கு தன…
-
- 1 reply
- 663 views
-
-
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் ராஜினாமா ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் நிக்கி ஹேலியின் (Nikki Haley) ராஜினாமாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.நா. பாதுகாப்பு சபையின் தற்காலிக தலைவராக அவர் பணியாற்றியதன் பின்னர் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். ஆனாலும் வெள்ளைமாளிகை அதிகாரபூர்வமாக இந்த செய்தியை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. தூதரக சமூகத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் வெளிப்படையான ஆதரவாளரும், இஸ்ரேலின் மீது ஐ.நா.வின் நிலைப்பாட்டை அடிக்கடி விமர்சித்தும் வரும் ஹேலி, கடந்த வாரம் தனது ராஜினாமா பற்றி ஜனாதிபதியுடன் முதன்முறையாக கலந்தாலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தை த…
-
- 0 replies
- 366 views
-
-
செளதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோஜி இஸ்தான்புலில் உள்ள தமது நாட்டு தூதரகத்திற்கு திருமண ஆவணமொன்றை வாங்குவதற்காக சென்றார். ஆனால், அவர் அங்கிருந்து திரும்ப வரவே இல்லை என்கிறது துருக்கி காவல்துறை. இஸ்தான்புல் அதிகாரிகள் ஜமால் தூதரகத்திலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள். ஆனால், அவர் தூதரகத்திலிருந்து கிளம்பிவிட்டார் என்கிறது செளதி. ஒரு காலத்தில் செளதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்தவர், பின் செளதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார். அதற்கு பிறகு அவர் செளதியிலிருந்து வெளியேறினார். யார் இந்த ஜமால்? சரி யார் இந்த ஜமால். ஒரு ஊடகவியலாளர் காணாமல் போனது உலக அளவில் தலைப்பு செய்தியாக மாற என்ன காரணம்? இஸ்லாமியர்களின் புனித நகரமான மதி…
-
- 0 replies
- 428 views
-
-
சுவீடனில் ஏரி ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த 8 வயது சிறுமி, வைக்கிங் சகாப்தத்திற்கு முந்தைய காலகட்டத்தின் வாள் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். விடோஸ்டர்ன் ஏரியில், சகா வனசெக் என்ற சிறுமி இதனை கண்டுபிடித்தார். முதலில் இந்த வாள் 1000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்பட்டது. ஆனால், உள்ளூர் அருங்காட்சியத்தில் இருக்கும் நிபுணர்கள், இது 1500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என நம்புகிறார்கள். வறட்சியின் காரணமாக, ஏரியில் தண்ணீரின் அளவு மிகக்குறைவாக இருந்ததினால் இந்த ஆயுதத்தை சகா கண்டுபிடித்திருக்கக்கூடும். "தண்ணீரில் திடீரென ஏதோ ஒன்றை உணர்ந்து, அதனை தூக்கிப் பார்த்தேன். அதற்கு கைப்பிடி இருந்தது. உடனே நான் போய் என் அப்பாவிடம் கூறினேன்" என ரேடியோ ஒன்றுக்கு சகா பேட்டி …
-
- 7 replies
- 1.6k views
-
-
பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி புவி வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவைவிட குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனை நோக்கி அனைத்து நாடுகளும் பயணிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அதற்கு எதிராக புவி வெப்பம் அதிகரிப்பதாக எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது புவி வெப்ப அதிகரிப்பு 3 டிகிரி செல்சியஸ் அளவை நோக்கி செல்வதாக கூறுகிறார்கள். பருவநிலை மோசமாக பாதிப்படையாமல் இருக்க வேண்டுமென்றால் புவி வெப்ப அதிகரிப்பு 1.5 செல்சியஸுக்கும் குறைவாக இருக்க வேண்டும். இப்போதுள்ள சூழ்நிலை தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும். ஆனால், இப்போதும் இதிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அறிவியலாள…
-
- 0 replies
- 587 views
-
-
மலேசிய மக்களில் வெறும், 7 சதவீதம் தான், இந்தியர்கள். ஆனால், அங்கு செயல்படும் கேங்ஸ்டர் அல்லது தாதாக்களில் பெரும்பான்மையானவர்கள் இவர்கள் தான். குறிப்பாக சொல்வதென்றால், தமிழ் வம்சாவளியினர். எஸ்டேட் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள், கேங்ஸ்டராக மாறியதற்கு பின்னணியில் உள்ள வரலாறு என்ன? பொருளாதாரத் தட்டின் கீழ்நிலையிலேயே இந்தியர்கள் இன்னும் இருக்க, மலேசிய அரசின் பாரபட்ச கொள்கை ஒரு காரணமா?மலேசிய போலீசின், நிழலுலக குழுக்கள் கண்காணிப்பு பிரிவின் கணக்குப்படி, மலேசியாவில் மொத்தம், 106 ரகசிய குழுக்கள் இயங்குகின்றன. இவற்றுக்கு, 576 கிளைகளும், அதில், 9,042 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். அவற்றில், மக்கள் தொகையில், 23.2 சதவீதம் - ஏறக்குறைய 70 லட்சம் - உள்ள சீ…
-
- 2 replies
- 1.6k views
-
-
நேரம் வந்துவிட்டது.. வேகமாக நெருங்கும் பேரழிவு.. 2030க்கு நாள் குறித்த ஐநா! நியூயார்க்: 2030ல் உலகம் மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.ஐநாவின் இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change) அமைப்பு நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 400 பக்கம் உள்ள அந்த அறிக்கை, மனித குலத்திற்கே மிகப்பெரிய எச்சரிக்கை விடுக்க கூடியது.மனிதர்கள் தற்போது இருக்கும் வாழ்க்கை முறையை கடைபிடித்தால், 2030ல் கண்டிப்பாக உலகம் நீரில் மூழ்கிவிடும் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. பூமியின் வெப்பநிலை வெகுவேகமாக உயரும் என்றும் கூறியுள்ளது. இப்போது என்ன ? கடந்த 10 வருடங்களில் பூமியின் வெப்ப…
-
- 1 reply
- 549 views
-
-
காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட இன்டர்போலின் இயக்குநர் பதவி விலகல் October 8, 2018 1 Min Read சர்வதேச காவற்துறை அமைப்பின் (இன்டர்போல்) இயக்குநர் மெங் ஹாங்வேயை (Meng u;ongwei) பதவி விலகலுக்கான கடிதத்தினை கையளித்துள்ளார். சர்வதேச அளவிலான பொருளாதார, போதை மற்றும் குற்றவியல் குற்றங்களை தடுக்க உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச காவற்துறையின் தலைவராக சீனாவை சேர்ந்த மெங் ஹாங்வே கடந்த 2016-ம் ஆண்டு பொறுப்பேற்ற அவர் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் 29-ம் திகதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அவர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரை விசாரணைக்காக சீன…
-
- 0 replies
- 492 views
-
-
வாஷிங்டன் போஸ்டின் செய்தியாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக துருக்கி அதிகாரிகள் கூறியுள்ளதால் அச்சம் எழுந்துள்ளது. சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால், கடந்த செவ்வாய்க்கிழமை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்துக்கு சென்றதையடுத்து காணாமல் போனார். முதல் கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளதாக துருக்கி அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், இதனை மறுத்துள்ள சௌதி அரேபியா, அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ளது. ஜமால் கொல்லப்பட்டிருப்பது உண்மை என்றால், அது 'மிகவும் கொடூரமான மற்றும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியாத' செயலாக இருக்கும் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கூறியுள்ள…
-
- 0 replies
- 280 views
-
-
ஜனாதிபதி ட்ரம்பின் மற்றுமொரு வெற்றி: உச்ச நீதிமன்ற நீதியரசராக கவனோக் பதவியேற்றார்! அமெரிக்க சட்டத்தில் இறுதி முடிவை எடுக்கும் உச்ச நீதிமன்ற நீதியரசராக ப்ரெட் கவனோக் (வயது-53) பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்க செனட் சபையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற அவர் நேற்று (சனிக்கிழமை) மாலை உச்ச நீதிமன்ற நீதியரசராக பதவியேற்றுக்கொண்டார். உச்சநீதின்றத்தில் இடம்பெற்ற பதவியேற்பு விழாவில், பிரதம நீதியரசர் ஜோன் ரொபேர்ட்ஸ் முன்னிலையில், அமெரிக்க அரசியலமைப்பின் மீது சத்தியம் செய்து அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். செனட் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இந்த நியமனத்தை உறுதிசெய்வதற்கான 50 வாக்குகள் அவருக்கு கிடைக்கப்பெற்றன. எதிராக 48 வாக்குகள் கிடைக்…
-
- 3 replies
- 730 views
-
-
அமெரிக்காவின் செயலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி Report us Steephen 10 hours ago ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை அமுல்படுத்தப்படும் தினம் நெருங்கி வரும் வேளையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பாரியளவில் அதிகரித்து வருவதாக வர்த்தக கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச எரிபொருள் சந்தையின் பிரதான தரகு நிறுவனமான பிரேண்ட் நிறுவனத்தின் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை கடந்த புதன் கிழமை பாரியளவில் அதிகரித்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 86.74 அமெரிக்க டொலராக உயர்வடைந்தது. இந்த விலை இன்று 86.9 டொலராக அதிகரித்துள்ளது. கடந்த சி…
-
- 1 reply
- 673 views
-
-
சௌதி அரேபியாவின் வரலாற்றில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதுள்ள சௌதி பிரிட்டிஷ் பேங்க் மற்றும் அலவ்வால் பேங்க் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய வங்கியின் தலைவராக சௌதி அரேபியாவின் பிரபல பெண் தொழிலதிபர் லுப்னா அல் ஒலயன் நியமிக்கப்பட்டுள்ளார். பழமைவாதத்தை காலங்காலமாக கடைபிடித்துவரும் சௌதி அரேபியா, கடந்த ஓராண்டாக பெண்களுக்கான உரிமைகளை சமூகத்தின் பல நிலைகளில் வழங்கி வருகிறது. குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் சௌதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் வாகனம் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தங்களது குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில் குழுமத்திற்கு தலைமை வகித்து வரும் ஒலயன், சௌதி அரேபிய…
-
- 0 replies
- 352 views
-
-
நாட்டை விட்டு வெளியேறுங்கள் - பாகிஸ்தான் உத்தரவு சர்வதேச தொண்டு நிறுவனங்களை தங்கள் செயல்பாடுகளை முடித்துக் கொண்டு 60 நாள்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டிருக்கிறது. பாகிஸ்தானின் இப்புதிய உத்தரவால் பாதிக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமான ´ஆக்சன் எய்ட்´ (Action Aid), ´´பாகிஸ்தானின் பொதுச் சமூகம் மீதான சமீபத்திய தாக்குதல்கள் குறித்து கவலைகளை இம்முடிவு அதிகரிக்கிறது´´ எனக் கூறியுள்ளது. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ´ஆக்சன் எய்ட்´ நிறுவனத்துக்கு உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தை பீபீசி பார்த்தது. அதில் அந்நிறுவனம் பாகிஸ்தானின் தொண்டு நிறுவன வேலையை தொடர, பதிவு செய்வதற்கா…
-
- 0 replies
- 564 views
-
-
கூகுள் நிறுவன தலைமை பொறுப்பில் அடுத்த தமிழர்.. யார் இந்த பிரபாகர் ராகவன்? October 5, 2018 புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக சென்னையைச் சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் பிச்சை என்பவரை கடந்த 2015-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் நியமனம் செய்தது. இந்நிலையில், 7 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக மதிப்பை கொண்ட கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்த பிரபாகர், சென்னை ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்த பின் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை…
-
- 0 replies
- 869 views
-
-
ரொறன்ரோ மேயர் தேர்தல்: ஒரே நாள் பிரசார நடவடிக்கையில் முன்னணி வேட்பாளர்கள்! ரொறன்ரோ மேயர் வேட்பாளருக்கான தேர்தல் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தலுக்கான முன்னணி வேட்பாளர்களான ஜோன் ரோறி மற்றும் முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர். அந்தவகையில் கிழக்கு யோர்க்கிலுள்ள ஜவானி பேக்கர்ஸ் உணவகமொன்றில் ரொறொன்ரோவின் மேயர் ஜோன் ரோறி காலை 9 மணிக்கு தனது பிரசார நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார். அதேவேளை, முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் பழைய நகர மண்டபத்தில் 9:30 மணியளவில் பிரசார நடவடிக்கையை மேற்கொ…
-
- 0 replies
- 477 views
-
-
பிரிட்டனில் சமீபத்தில் பார் மற்றும் உணவு விடுதிகளில் ஊழியர்களுக்கு டிப்ஸ் வழங்குவதை தடை செய்வதற்கான சட்டங்கள் குறித்த விவாதங்களின் அரசியல் கட்சிகள் ஈடுபட்டன. பிரிட்டன் போன்று வேறு எந்த நாடும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாது. 17ஆம் நூற்றாண்டில் 'டிப்ஸ்' வழங்கும் கலாசாரத்தை உருவாக்கியது பிரிட்டன் மக்கள்தான் என நம்பப்படுகிறது. உண்மையில் அடித்தட்டு வர்க்க மக்களுக்கு சிறிய சன்மானமாக வழங்குவதில் இருந்து இது தொடங்கப்பட்டது. எனினும், பல்வேறு நாடுகளில், பல்வேறு முறைகளில் டிப்ஸ் வழங்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. ஆனால், சில நாடுகளில் ஒருவருக்கு டிப்ஸ் வழங்குவது என்பது அவர்களை அவமதிக்கும் செயலாக கருதப்படுகிறது. அமெரிக்கா அமெரிக்காவில் நகைச்சுவையாக இப்ப…
-
- 0 replies
- 351 views
-
-
2018ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வன்புணர்வை ஒரு போர்க் கருவியாக பயன்படுத்துவதற்கு எதிரான செயற்பாட்டாளர் நடியா முராத் மற்றும் டெனிஸ் முக்வேகய் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் பாலியல் வன்புணர்வுக் குற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமானவர்கள் என்று நோபல் பரிசுக் குழுவின் தலைவர் பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன் தெரிவித்தார். யாசிதி சமூகத்தைச் சேர்ந்தவரான நடியா முராத் ஐ.எஸ். குழுவினரால் கொடுமைப்படுத்தப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளானவர். டெனிஸ் முக்வேகய் காங்கோ நாட்டைச் சேர்ந்த பெண் நலவியல் மருத்துவர். இவர் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவருகிறார். மதிப்புக்குரிய நோபல் அமைதிப் பரிசுக்கு இந்த ஆண்டு தனிநபர்கள் மற்றும் அமைப…
-
- 0 replies
- 304 views
-
-
படத்தின் காப்புரிமைAFP ஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய அமெரிக்க நிறுவனங்களின் தரவுகள் சீன உளவாளிகளால் திருடப்பட்டதாக ப்ளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது. சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட சிறிய சிப்புகளை, சர்வர் சர்க்யூட் போர்டுகளில் பொருத்தி தரவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ப்ளூம்பர்க் கூறுவது முற்றிலும் தவறானது என்று அதனை ஆப்பிள், அமேசான் மற்றும் சூப்பர் மைக்ரோ நிறுவனங்கள் மறுத்துள்ளன. இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் ஜோர்டன் ராபர்ட்சன் மற்றும் மைக்கெல் ரிலே ஆகியோர் ஓர் ஆண்டு முழுவதும் விசாரணை நடத்தி இது தொடர்பான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். பல ஆய்வு நிறுவனங்கள் மற்றும் 20 பெரிய நிறுவனங்களுக்கு சீனா இந்த தரவுகள…
-
- 0 replies
- 333 views
-
-
அமெரிக்க இராணுவம் இல்லையென்றால்... 2 வாரங்கள் கூட பதவியில் இருக்க முடியாது: டிரம்ப் எச்சரிக்கை. அமெரிக்க இராணுவம் இல்லையென்றால், 2 வாரங்கள் கூட பதவியில் இருக்க முடியாது என சவுதி அரேபியா மன்னரை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். மிஸ்ஸிசிப்பி மாநிலம் சவுத்எவன் நகரில் நடந்த கட்சி கூட்டத்தில் உறியற்ரிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். மேலும் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானை மிகவும் பிடிக்கும், ஆனால் அமெரிக்கா தான் அவரை பாதுகாக்கின்றது என தெரிவித்தார். அமெரிக்கா இல்லாமல், அவரால் இரு வாரம் கூட பதவியில் இருக்க முடியாது என்று சவூதி மன்னர் சல்மானை அவர் எச்சரித்தார். சவுதி அரேபியாவுடன் டிரம்ப் நட்பு பாராட்டி வந்த நிலையில், அவர் இவ்வாறு பேச,…
-
- 0 replies
- 459 views
-
-
பிரித்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்! இந்தக் காலத்தில் இப்படியுமா? Report us Vethu 9 hours ago பிரித்தானியாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தின் செயற்பாடு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் வளர்ந்து பிரித்தானியாவில் வாழைப்பழம் செய்கையில் ஈடுபட்டு வரும் தமிழ் குடும்பம் ஒன்று பிரபல்யம் அடைந்துள்ளது. பிரித்தானியா கொவன்றி பிரதேசத்தில் Radford பகுதியில் வாழும் நபர் ஒருவர் பாரிய வாழைப்பழ செய்கையில் ஈடுபட்டுள்ளார். Radford சாலையில் வசிக்கும் சின்னையா செந்தில்செல்வன் தனது வீட்டின் பின்னாலுள்ள தோட்டத…
-
- 81 replies
- 7.2k views
-
-
இளைய தலைமுறையினரின் மூளை வளர்ச்சிக்கு எமனாகும் கஞ்சா: கனேடிய ஆய்வு கஞ்சா புகைப்பது, மதுஅருந்துவதைவிட இளைய தலைமுறையினரின் மூளை வளர்ச்சிக்கு பெரும்தீங்கு விளைவிக்கக் கூடியதென மொன்றியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சிந்தனை திறன், ஞாபகசக்தி மற்றும் நடத்தைமீது இளவயது மதுபாவனை செலுத்தும் தாக்கத்தைவிடவும் கஞ்சா அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. மதுஅருந்துதல் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருள் பாவனை காரணமாக இளைஞர்களின் கவனம்செலுத்தும் திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் கற்றல் செயல்திறன் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது. ஆனாலும் கஞ்சாபுகைத்தல், மதுஅருந்துவதைவிட அதிக அளவில் தாக்கத்த…
-
- 1 reply
- 514 views
-