உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
சிரியாவில் மோதல் – 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. அரசுப் படைகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி ஆதரவுக்குழுவுக்கும் இடையே நடந்துவரும் மோதலால் பதற்றம் நிலவி வருகிறது. சிரியாவில் அரசுக்கு ஆதரவான படைகளுக்கும், முன்னாள் அதிபர் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் முதல் மோதல் நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். அங்குள்ள கடற்கரையை ஒட்டியுள்ள 3 கிராமங்களுக்குள் நேற்று அரசு படைகள் திடீரென நுழைந்தன. பின்னர் கண்ணில் பட்ட ஆசாத்தின் ஆதரவாளர்களை கண்மூடித்தனமாக சுட்டனர். இந்த பயங்கர சம்பவத்தில் சுமார் 70 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இஸ்லாமியக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக் குழு…
-
- 3 replies
- 525 views
- 1 follower
-
-
தென்கொரிய இராணுவத்தின் போர் பயிற்சியை குழப்பும் நோக்கில் வடகொரியா ஏவுகணை தாக்குதல்! அமெரிக்கவுடன் இணைந்து தென்கொரிய இராணுவம் நேற்று ஆரம்பித்த போர் பயிற்சியை குழப்பும் நோக்கில் வடகொரியா கடலுக்கு அடியில் பல பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென்கொரிய இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. தென்கொரிய அரசாங்கம் நேற்று பயிற்சியை ஆரம்பித்த சில மணிநேரங்களின் பின்னர் வடகொரியா இவ்வாறு ஏவுகளைகளை ஏவி தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்கள் வருடாந்த கூட்டு ராணுவ பயிற்சியை நேற்று ஆரம்பமானது. 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு நாடுகளின் படைகளும் தங்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் திறன்களை வெளிப்படுத்தவுள்ளன. எனினும…
-
- 0 replies
- 233 views
-
-
படக்குறிப்பு,நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல்கள் 10 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வட கடல் பகுதியில் திங்கட் கிழமை காலையில் இரண்டு கப்பல்கள் நடுக்கடலில் மோதிக் கொண்டன. இரண்டு கப்பல்களும் கிழக்கு யார்க்ஷர் கடற்கரையில், பிரிட்டனில் உள்ள கிரிம்ஸ்பீ பகுதிக்கு அருகே மோதிக் கொண்டன. ஸ்டெனா இம்மாகுலேட் கப்பல் ஜெட் எரிபொருளை எடுத்துச் சென்ற போது, வட கடலில் சோலாங் சரக்கு கப்பலால் மோதி விபத்துக்கு விபத்துக்குள்ளானது. எண்ணெய் எடுத்துச்சென்ற கப்பல் மற்றும், வேதிப்பொருட்களுடன் சென்ற சோலாங் என இரண்டிலும் ஏற்பட்ட தீ இரண்டாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது. பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த தரவுகளின்படி, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டெனா இம்மாகுலேட் என்ற டேங்கர் …
-
- 1 reply
- 214 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் செய்தியாளர், பிபிசி உலக சேவை 34 நிமிடங்களுக்கு முன்னர் வட கொரிய அரசாங்கத்துக்காக வேலை செய்பவர்கள் என கருதப்படும் ஹேக்கர்கள், வரலாற்றிலேயே மிக அதிக அளவாக 1.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,000 கோடி) அளவுக்கான கிரிப்டோவை கொள்ளையடித்த நிலையில், அதில் குறைந்தது 300 மில்லியன் டாலர் பணத்தை மீட்க முடியாத வகையில் அவர்கள் மாற்றியுள்ளனர். லாசரஸ் குரூப் எனும் பெயரில் அறியப்படும் இந்த ஹேக்கர்கள், கிரிப்டோ வர்த்தக நிறுவனமான பைபிட்-ஐ (ByBit) ஹேக் செய்து, அதிலிருந்த ஏராளமான கிரிப்டோ கரன்சியை கொள்ளையடித்துள்ளனர். அப்போதிலிருந்து, ஹேக்கர்கள் அந்த கிரிப்டோகரன்சியை பணமாக மாற்றும் முயற்சியை தடுப்பதற்கு தொட…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
போலந்தில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி - டொனால்ட் டஸ்கின் அதிரடி அறிவிப்பு! போலந்து நாட்டில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். அனைத்து வயது வந்த போலந்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். போர் நிலைமை ஏற்படுமாயின் ஒவ்வொரு ஆணும் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான மாதிரி திட்டம் தயாரிக்கப்படும் எனவும் ,இதன் மூலம் நாட்டு இராணுவத்தின் தயார்நிலை உறுதி செய்யப்படும்" எனவ…
-
-
- 32 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுகோய்-57 மற்றும் எஃப்-35 போர் விமானங்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,சௌதிக் பிஸ்வாஸ் பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா தனது விமானப்படையை நவீனமயமாக்குவதில், ஒரு முக்கியமான முடிவினை எடுக்க வேண்டியதாக இருக்கின்றது. அமெரிக்காவிடம் இருந்து போர் விமானங்களை வாங்குவது இதற்கு தீர்வாகுமா? கடந்த மாதம் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார். அப்போது, அமெரிக்கா தனது நெருங்கிய கூட்டாளிகளுக்கு மட்டுமே வழங்கக் கூடிய எஃப்-35 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்க தயாராக இருப்பதாக டிரம்ப் அறிவித்தார். எஃப்-35 என்பது மேம்பட்ட சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்…
-
- 1 reply
- 254 views
- 1 follower
-
-
கனடாவின் பிரதமராகும் போட்டியில் மார்க் கார்னி வெற்றி! கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராவதற்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கியாளர் மார்க் கார்னி (Mark Carney) வெற்றி பெற்றுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பின்னர் இவர், கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வ முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (09) தெரிவித்தன. கனடாவில் அரசியல் மற்றும் பொருளாதாரம் ஒரு கொந்தளிப்பான நேரத்தில் கார்னி பொறுப்பேற்பார். தற்சமயம் கனடா நீண்டகால நட்பு நாடான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தகப் போரின் மத்தியில் உள்ளது மற்றும் விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். 59 வயதான கார்னி, முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்டை தோற்கடிக்க 86% வாக்குகளைப் பெற்றார், இத…
-
- 1 reply
- 256 views
- 1 follower
-
-
ஜேர்மன் விமான நிலையத்தில் சுமார் 300 விமானங்கள் இரத்து! ஜெர்மனி முழுவதும் திங்கட்கிழமை (10) திட்டமிடப்பட்ட பரந்த வேலைநிறுத்தங்களுக்கு முன்னதாக தரைவழி ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததால், ஞாயிற்றுக்கிழமை (09) ஹாம்பர்க் விமான நிலையத்தில் சுமார் 300 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. ஜெர்மன் தொழிற்சங்கமான வெர்டி இந்த நடவடிக்கை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், காலையில் 10 விமானங்கள் சேவையை மேற்கொண்ட பின்னர், விமான நிலைய ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததால் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ஹாம்பர்க் விமான நிலையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் 144 வருகைகள் மற்றும் 139 புறப்பாடுகள் இரத்து செய்யப்பட்டன. இதனால் 40,000 க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்…
-
- 0 replies
- 220 views
-
-
அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு அடிபணியப்போவதில்லை – கனடாவின் புதிய பிரதமர் கனடா மீது 25 சதவீத வரி விதிப்பை அமுல்படுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அழுத்ததிற்கு ஒருபோதும் கனடா அடிபணியப் போவதில்லை என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை இராஜினாமா செய்வதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்த நிலையில் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார். லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் கனடாவின் பிரதமராகப் பதவி வகித்தார். அவர் பதவி விலகியதைத் தொடர…
-
- 0 replies
- 422 views
-
-
ட்ரம்பின் முன்மொழிவுக்கு மாறாக காசாவை கட்டியெழுப்ப அரபுத் தலைவர்களின் $53 பில்லியன் டொலர் திட்டம்! எகிப்திய தலைநகர் கெய்ரோவில் செவ்வாயன்று (04) நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் 53 பில்லியன் அமெரிக்க டொலர் (£41.4 பில்லியன்) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமெரிக்கா காசாவை “கையகப்படுத்தி” இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் யோசனைக்கு போட்டியாக இந்த ஒப்புதல் வந்துள்ளது. கெய்ரோவில் நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட 53 பில்லியன் டொலர் திட்டம், காசாவின் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்களை அவர்களின் பிரதேசத்தில் தங்க அனுமதிக்கும். இந்த திட்டம் குறித்து கருத்து வெளி…
-
-
- 2 replies
- 479 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 09 MAR, 2025 | 08:56 PM வெள்ளை மாளிகைக்கு வெளியே இனந்தெரியாத நபர் ஒருவர் மீது இரகசிய சேவை பிரிவினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயுதமோதலின் பின்னரே அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்கொலை செய்யும் நோக்கத்துடன் இந்தியானாவிலிருந்து வோசிங்டனிற்கு நபர் ஒருவர் பயணம் செய்வது குறித்து தகவல் கிடைத்ததாகவும், அந்த நபரை பாதுகாப்பு பிரிவினர் நெருங்கியபோது அவரிடம் துப்பாக்கி இருந்ததாகவும் துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டதாவும், அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் இடம்பெற்றவேளை டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருக்கவில்லை…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் பலி March 8, 2025 12:40 pm உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்ந தாக்குதல் உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல குடியிருப்பு கட்டிடங்களும் நிர்வாக கட்டிடமொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா மீதான தடைகள் மற்றும் வரிகளை வலுவாக பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதையடுத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://oruvan.com/russian-strike-kills-11-in-town-near-donetsk-ukraine-says/
-
- 1 reply
- 231 views
- 1 follower
-
-
சிரியா கலவரத்தில் பலி 1000+ ஆக அதிகரிப்பு மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மட்டும் பொதுமக்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ஆசாதுக்கு ஆதரவாக இருந்த அலவைட் சிறுபான்மை பிரிவினருக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை (06) அன்று அந்த நாட்டின் தற்போதைய அரசு ஆதரவாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தியது இந்த கலவரத்துக்கு காரணமாக அமைந்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இதற்கு பதில் தாக்குதலை ஆசாத் ஆதரவாளர்கள் கொடுத்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு டிசெம்பரில் துருக்கி ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (எச்டிஎஸ்) கிளர்ச்சி படை சிரியாவை கைப்…
-
- 0 replies
- 224 views
-
-
உக்ரைனை சமாளிப்பது கடினம்; ரஷ்யாவை சமாளிப்பது எளிது; டிரம்ப் கருத்து உக்ரைனை சமாளிப்பது மிகவும் கடினம் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரில் அமைதி ஏற்படுத்துவது குறித்து பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இதில் உக்ரைனை சமாளிப்பது கடினம் என்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் அமைதியை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். போர் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், உக்ரைன் கிடைக்கும் வாய்ப்பில் வேலையை முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் “அவர்கள் உக்ரைனை தொடர்ந்து தாக்குகிறார்கள். இந்த விஷயத்தில் உக்ரைனை சமாளிப்பது எனக்கு மிகவும் கடினம் இருக்கிறது”. ரஷ்யாவிடம் அனைத்து வாய்ப்புகளும் உள்ளன, அவர்களிடம் சிறப்பான நிலைமை இருந்த போதிலும், அவர்களை …
-
- 0 replies
- 271 views
-
-
மீண்டும் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட் – விமான சேவைகள் முடக்கம்! March 8, 2025 8:30 am தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த ராக்கெட் வெடித்துச் சிதறியதையடுத்து, அதன் பாகங்கள் எரிந்து கொண்டு விண்ணில் இருந்து விழுந்ததால் விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. முன்னதாக கடந்த ஜனவரி 16 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் 7 ராக்கெட் வெடித்துச் சிதறிய நிலையில், ஸ்டார்ஷிப் 8-ஐ உள்ளூர் நேரப்படி (அமெரிக்கா) கடந்த வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தெற்கு டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில், 9.30 நிமிடங்களில் ராக்கெட்டுடனான தொடர்பை கட்டுப்பாட்…
-
- 0 replies
- 306 views
-
-
பிரித்தானியாவில் வாழும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் ஆங்கிலம் பேசத் திணறுவதாக ஆய்வறிக்கையொன்றில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வெளியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 16 வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் எனவும், 51.6 சதவீதமானோர் ஆங்கிலம் தங்கள் முக்கிய மொழியாகக் கருதுவதாகவும், 38.4 சதவீதமானோர் தங்களால் நன்றாகப் பேச முடியும் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை 8 சதவீதமான 7,94,332 மக்கள் தங்களால் நன்றாக ஆங்கிலம் பேச முடியாது எனத் தெரிவித்துள்ளதோடு, அதில் 1.4 சதவீதமானோர் அதாவது 1,37,876 பேர் ஆங்கில அறிவு அற்றவர்களாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த விட…
-
-
- 9 replies
- 727 views
-
-
Published By: Rajeeban 07 Mar, 2025 | 04:04 PM அணுவாயுதங்களை பயன்படுத்தி தனது ஐரோப்பிய சகாக்களை பாதுகாப்பது குறித்து ஆராயவுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஸ்ய போரில் அமெரிக்கா ஐரோப்பாவின் பக்கம் இல்லாத நிலையை எதிர்கொள்வதற்கு ஐரோப்பா தயாராகவேண்டும் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கண்டத்தில் எமது நட்புநாடுகளை பாதுகாப்பது குறித்த மூலோபாய விவாதத்தை ஆரம்பிப்பதற்கு நான் தீர்மானித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி எங்கள் அணுசக்தி பாதுகாப்பு எங்களை பாதுகாக்கின்றது அது முழுமையான இறையாண்மை என தெரிவித்துள்ளார்.எங்கள் அயலவர்களை விட பிரான்சின் அணுவாயுதங்களே எங்களை பாதுகாக்கின்றன என அ…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
Published By: Rajeeban 07 Mar, 2025 | 11:29 AM அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் காலத்தில் அமெரிக்காவிற்கு சென்ற ஆயிரக்கணக்கான உக்ரைனியர்களிற்கு வழங்கப்பட்ட விசாக்களை இரத்துச்செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனியர்களிற்கு வழங்கப்பட்ட விசாக்களை இரத்து செய்வதுகுறித்து ஆராயப்படுகின்றதா என ரொய்ட்டர் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள டிரம்ப் இது குறித்து நான் ஆராய்கின்றேன், நாங்கள் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை நிச்சயமாக அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். உக்ரைனை சேர்ந்தவர்களிற்கு விசா வழங்கியது குறித்து இரு வ…
-
- 0 replies
- 424 views
- 1 follower
-
-
அமெரிக்க காங்கிரசிற்கான உரை - உக்ரைன் ஜனாதிபதிக்கு எதிரான கடும் தொனியை குறைத்தார் டிரம்ப்,- கிறீன்லாந்திற்கு தொடர்ந்தும் எச்சரிக்கை Published By: Rajeeban 05 Mar, 2025 | 04:41 PM உக்ரைனில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும் கனிமங்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் தயார் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். அமெரிக்க காங்கிரசிற்கான உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இன்று உக்ரைன் ஜனாதிபதியிடமிருந்து மிக முக்கியமான கடிதம் கிடைத்தது என தெரிவித்துள்ள டிரம்ப் நிரந்தர சமாதானத்தை ஏற்படு;த்துவதற்காக மிகவிரைவில் பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு தயார்…
-
- 2 replies
- 284 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,NASA 6 மார்ச் 2025, 12:24 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், பூமிக்கு திரும்புவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் போயிங் தயாரித்த ஸ்டார்லைனர் பரிசோதனை விண்கலத்தில் கடந்த ஜூன் மாதம் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் எட்டு நாட்கள் தங்கியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர். ஒன்பது மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இரு விண்வெளி வ…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
அமெரிக்காவுடனான எந்த வகையான போருக்கும் தாம் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவால் சீனா மீது விதிக்கப்பட்டுள்ள வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கும் வரி விதிப்புகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரிவிதிப்பு மூலமாகவோ வர்த்தக போர் மூலமாகவோ அல்லது எவ்வித போர் மூலமாகவோ அதற்காக எதிராக இறுதி வரை போராட தாம் தயாராகவுள்ளதாக அமெரிக்காவின் வொஷிங்டனிலுள்ள சீன தூதுரகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சீனாவும் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 10 முதல் 15 வீத வரி விதிப்பதாக நேற்று அறிவித்தது. இதனிடையே, சீனாவில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களுக்கான நிதியை 7.2 வீதமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. htt…
-
-
- 1 reply
- 350 views
- 1 follower
-
-
ஹமாஸுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை! காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “இறுதி எச்சரிக்கை” விடுத்துள்ளார். பணயக்கைதிகள் தொடர்பாக ஹமாஸுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்திய சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்தது. வொஷிங்டன் இதுவரை அந்தக் குழுவுடன் நேரடி ஈடுபாட்டைத் தவிர்த்து வருகிறது. மேலும் பயங்கரவாத அமைப்புகளாக அது பட்டியலிடும் நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு கொள்வதற்கு எதிரான நீண்டகால அமெரிக்கக் கொள்கை உள்ளது. இது குறித்து ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், பணயக்கைதிகள் அனைவரையும் இப்போதே விடுவித்து விடுங்கள், நீங்கள் கொலை செய்தவர்களின் அனைத்து இறந்த உடல்களையும் …
-
- 1 reply
- 389 views
-
-
உக்ரேனுக்கான இராணுவ உதவியை இடைநிறுத்திய ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உக்ரேனுக்கான இராணுவ உதவியை இடைநிறுத்தியுள்ளார். உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் கடந்த வாரம் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது, ஒரு காலத்தில் நட்பு நாடுகளாக இருந்த இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசலை மேலும் ஆழமாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட உதவியின் நோக்கம், அளவு மற்றும் இடைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து வெள்ளை மாளிகை உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கான ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையின் கோரிக்கைக்கு ஜெலென்ஸ்கியின் அலுவலகமோ அல்லது வொஷிங்டனில் உள்ள உக்ரேனிய தூதரகமோ உடனடியாக பதிலளிக்கவில்லை. …
-
- 5 replies
- 384 views
- 1 follower
-
-
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு முக்கியமான தற்காப்பு மற்றும் தாக்குதலுக்கான உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ராணுவ உதவியை தற்காலிகமாக நிறுத்தி அமெரிக்கா அதிரடி காட்டியது. போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஆனாலும் டிரம்பின் இந்த செயல் போரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2024 வரை உக்ரைனுக்கு வழங்கிய உதவிகளை விரிவாகப் பார்க்கலாம். நிதி, மனிதாபிமானம், ராணுவம் ஆகியவற்றில் உக்ரனைக்கு அமெரிக்கா அதிக உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ராணு…
-
- 3 replies
- 372 views
- 1 follower
-
-
Published By: Rajeeban 06 Mar, 2025 | 10:52 AM தென்கொரிய போர்விமானங்கள் தவறுதலாக வீடுகள் மீது வீசிய குண்டுகள் காரணமாக 7 பேர் காயமடைந்துள்ளனர். போர்விமான ஒத்திகையின் போது பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது விமானங்கள் தவறுதலாக குண்டுகளை வீசியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர், நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. வடகொரியா எல்லைக்கு அருகில் உள்ள பொச்சியோன் என்ற நகரத்தின் குடியிருப்புகள் மீது விமானப்படையின் கேஎவ் 16 விமானங்கள் தவறுதலாக குண்டுகளை வீசியுள்ளன. இதில் ஒரு குண்டு வெடித்துள்ளது, ஏனைய குண்டுகளை பாதுகாப்பாக அகற்றும் நடவடிக்கைகளில் குண்டு செயல்இழக்கவைக்கும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இருவருக…
-
- 1 reply
- 220 views
- 1 follower
-