உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
இங்கிலாந்து சிரேஷ்ட தூதரை பணி நீக்கம் செய்த நியூஸிலாந்து. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரலாற்றைப் பற்றிய புரிதலை கேள்விக்குள்ளாக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக ஐக்கிய இராச்சியத்திற்கான அதன் மிக மூத்த தூதரை நியூஸிலாந்து பணிநீக்கம் செய்துள்ளது. செவ்வாயன்று லண்டனில் நடந்த ஒரு நிகழ்வில், இங்கிலாந்துக்கான உயர் ஸ்தானிகர் பில் கோஃப், ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை 1938 ஆம் ஆண்டு மியூனிக் ஒப்பந்தத்துடன் ஒப்பிட்டார். இது அடால்ஃப் ஹிட்லர் செக்கோஸ்லோவாக்கியாவை இணைக்க அனுமதித்தது. சர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒப்பந்தத்தை விமர்சித்ததை நினைவு கூர்ந்த கோஃப், பின்னர் அமெரிக்கத் தலைவரைப் பற்றி கூறினார்: “ஜனாதிபதி ட்ரம்ப் சர்ச்சி…
-
- 0 replies
- 325 views
-
-
Published By: RAJEEBAN 02 MAR, 2025 | 12:13 PM துருக்கியுடன் நாற்பது வருடகாலமாக போரிட்ட குர்திஸ் போராளிகள் அமைப்பான பிகேகே யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது. சிறையில் உள்ள அதன் தலைவர் அப்துல்லா ஒகலான் ஆயுதங்களை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்து இரண்டு நாட்களின் பின்னர் அந்த அமைப்பு யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிகேகே அமைப்பிற்கு நெருக்கமான பிராட் செய்தி நிறுவனம் அமைப்பு யுத்த நிறுத்த அறிவிப்பை முதலில் வெளியிட்டுள்ளது. 1999 முதல் துருக்கியின் சிறையில் வாடும் பிகேகே அமைப்பின் தலைவரை மேற்கோள்காட்டி இந்த யுத்த நிறுத்த அறிவிப்பு குறித்து செய்தி வெளியிட்டுள்ள பிராட் செய்தி நிறுவனம் சமாதான ஜனநாயக சமூகத்தினை ஏற்படுத்துவதற்காக பிகேகே தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று யுத…
-
- 3 replies
- 410 views
- 1 follower
-
-
செர்பிய நாடாளுமன்றத்தில் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு! செர்பிய நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று (04) எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புகை குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து மிகப்பெரிய பதற்றமான நிலை ஏற்பட்டது. இந்தக் குழப்பத்திற்கு மத்தியில், ஒரு சட்டமன்ற உறுப்பினர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் செர்பியாவின் கடுமையான அரசியல் நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது. அங்கு ஒரு ஜனநாயக அரசாங்கம் பல மாதங்களாக ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் செர்பியாவின் நோவி சாட் நகர ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்ததையடுத்து,…
-
- 0 replies
- 197 views
-
-
ஜப்பானில் வேகமாக பரவும் காட்டுத்தீ – 1200 பேர் வெளியேற்றம் ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே சுமார் 100 வீடுகள் காட்டுத்தீயில் சேதமடைந்தன. இதில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. அதேபோல் 5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி 1,200 பேர் அங்கிருந்து வெளியேறினர். இதனையடுத்து ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். https://athav…
-
- 0 replies
- 217 views
-
-
பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு,லாட்வியாவில் நேட்டோ பயிற்சியின் போது பயிற்சி பெறும் ஸ்வீடன் நாட்டு வீரர்கள் . கட்டுரை தகவல் எழுதியவர்,ஜெர்மி போவன் பதவி,சர்வதேச ஆசிரியர், பிபிசி செய்திகள் 36 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் நடந்த வாக்குவாதத்திற்கு முன்பே டொனால்ட் டிரம்புக்கும் விளாதிமிர் ஜெலன்ஸ்கிக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக இருந்தது. முன்னதாக, ஜெலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்று அழைத்திருந்த அதிபர் டிரம்ப், யுக்ரேன் போரைத் தொடங்கியது அவர் தான் என்றும் தவறான தகவலைக் கூறினார். மேலும் ஜோ பைடனின் ஆட்சியில் வலுப்பெற்ற அமெரிக்க-யுக்ரேன் கூட்டணி தற்போது உடைந்துவிட்டது. இந்த கூட்டணியில் ஏற்பட்டுள்ள முறிவு, ஐரோப்பிய நேட்டோ உறுப்பினர்களுக்…
-
- 5 replies
- 634 views
- 1 follower
-
-
ட்ரம்பின் முன்மொழிவுக்கு மாறாக காசாவை கட்டியெழுப்ப அரபுத் தலைவர்களின் $53 பில்லியன் டொலர் திட்டம்! எகிப்திய தலைநகர் கெய்ரோவில் செவ்வாயன்று (04) நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் 53 பில்லியன் அமெரிக்க டொலர் (£41.4 பில்லியன்) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமெரிக்கா காசாவை “கையகப்படுத்தி” இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் யோசனைக்கு போட்டியாக இந்த ஒப்புதல் வந்துள்ளது. கெய்ரோவில் நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட 53 பில்லியன் டொலர் திட்டம், காசாவின் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்களை அவர்களின் பிரதேசத்தில் தங்க அனுமதிக்கும். இந்த திட்டம் குறித்து கருத்து வெளிய…
-
- 0 replies
- 207 views
-
-
ஜெர்மனியில் பாதசாரிகள் மீது கார் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு! மேற்கு ஜெர்மனியின் மன்ஹெய்ம் (Mannheim) நகரில், பாதசாரிகள் மீது வாகனம் ஒன்று மோதியதில் 83 வயது பெண் ஒருவரும் 54 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஐவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஜெர்மனிய புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதான ஜெர்மன் நபரை பொலிஸார் கைது செய்தனர். விசாரணைகளில் அவர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர் என்று கண்டறியப்படவில்லை. எனினும், “மனநோய்க்கான உறுதியான அறிகுறிகளைக்” கொண்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் திங்கட்கிழமை (03) ஜெர்மனிய நேரப்படி பிறப்கல் 12:15 மணிக்கு (GMT 11:15 …
-
- 3 replies
- 343 views
-
-
Published By: RAJEEBAN 04 MAR, 2025 | 03:07 PM ஹமாசிற்கு எதிரான அழுத்தங்களை அதிகரிப்பதற்காக இஸ்ரேல் காசாவிற்கான நரக திட்டமொன்றை உருவாக்கிவருகின்றது என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேல் பாலஸ்தீனிய பகுதியிலிருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளாமல் ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிககளை விடுதலை செய்வதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்காக காசா மீதான முற்றுகையை தீவிரப்படுத்துவதற்கான திட்டமொன்றை உருவாக்கி வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை தடுத்து நிறுத்தியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அரசாங்கம் அதற்கு அப்பாலும் சென்று காசாவில் உள்ள 2.2 மில்லியன் மக்களையும் அந்த பகுதியையும் த…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,AUSTRALIAN RED CROSS LIFEBLOOD கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்ஜி பதவி, பிபிசி செய்திகள் 4 மார்ச் 2025, 06:04 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் உலகில் மிக அதிக அளவில் ரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் காலமானார். அவர் தனது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார். ஜேம்ஸ் ஹாரிசன், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று தனது தூக்கத்திலேயே இயற்கை எய்தினார் என்று அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை (மார்ச் 03) அன்று தெரிவித்தனர். அவருக்கு வயது 88. ஆஸ்திரேலியாவில் அவர் 'தங்கக் கை மனிதர்' என்று அழைக்கப்படுகிறார். ஜேம்ஸ் ஹாரிசனின் ரத்தத்தில் Anti-D எனப்ப…
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது 44 நிமிடங்களுக்கு முன்னர் யுக்ரேன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது. பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமரால் நடத்தப்படும் இந்த உச்சி மாநாடு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றாலும், இதற்கு முன்னதாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு இதற்கான முக்கியத்துவத்தை கூட்டியிருக்கிறது. யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில், ஐரோப்பிய நாடுகளின் வாய்ப்புள்ள பங்களிப்பு என்ன? மற்றும் அமெரிக்காவுடன் இந்த நாடுகளின் உறவு என்னவாக இருக்கும் என்பவை விவாதிக்கப்பட வாய்ப்புள்ள அம்சங்களா…
-
-
- 6 replies
- 586 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிரிகோர் அட்டானேசியன் பதவி, பிபிசி ரஷ்ய சேவை 54 நிமிடங்களுக்கு முன்னர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு யுக்ரேன் மீது ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சர்வதேச சட்டங்களை மீறிய குற்றத்திற்காக ரஷ்யாவை உலக அளவில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக நடத்தி வந்தன. தற்போது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நிலைமையை தலைகீழாக மாற்றியுள்ளார். ரஷ்யாவுடன் மீண்டும் உறவை நிறுவியுள்ள டிரம்ப், ரஷ்யாவை தாக்குதலை தொடங்கிய நாடு என்று அழைக்கவும் அல்லது யுக்ரேனை போரில் பாதிக்கப்பட்ட நாடாக அறிவிக்கவும் மறுத்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று, டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி இடையே நடந்த காரசாரமான…
-
- 1 reply
- 300 views
- 1 follower
-
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஜெலென்ஸ்கியை “சர்வாதிகாரி” என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்பீர்களா என்று ட்ரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தான் இப்படி கூறியதை நம்ப முடியவில்லை என்று கூறினார். அதேநேரம் அவர், ஜெலென்ஸ்கியை “மிகவும் துணிச்சலானவர்” என்றும் அழைத்தார். உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ட்ரம்ப் இந்த விடயங்களை பேசினார். மூன்று ஆண்ட…
-
-
- 29 replies
- 1.4k views
- 1 follower
-
-
மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார் – வெள்ளை மாளிகையில் கருத்து மோதல். யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி.வோன்ஸ்க்கும் இடையிலான சந்திப்பின் போது கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது கருத்து மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யுக்ரைன் ஜனாதிபதியை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பும் ரத்தானது. இரு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. இந்த சந…
-
-
- 13 replies
- 969 views
- 2 followers
-
-
Published By: RAJEEBAN 03 MAR, 2025 | 11:01 AM காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்வதை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளதை ஐநாவும் ஏழு அராபிய நாடுகளும் கடுமையாக கண்டித்துள்ளன. காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல்தடைவிதித்துள்ளது. ஹமாஸ் உணவுப்பொருட்கள் உட்பட மனிதாபிமான உதவிகளை திருடி அவற்றை விற்பனை செய்து தன்னை நிதிரீதியாக பலப்படுத்துகின்றது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு யுத்தநிறுத்தத்தை நீடிப்பதற்கான அமெரிக்காவின் யோசனையை நிராகரித்துள்ளது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். எனினும் இஸ்ரேலிய பிரதமரின் இந்த கருத்தினை மலினமான பயமுறுத்தும் நடவடிக்கை என தெரிவித்துள்ள ஹமாஸ் பேச்சாளர் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரான சதி என தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
மன்னர் சார்லஸ்ஸை சந்தித்த உக்ரேன் ஜனாதிபதி! உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ் இருவருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் இங்கிலாந்தின் சாண்ட்ரிங்ஹாமில் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு உக்ரைன் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் குறித்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த ஐரோப்பியத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின்னரே உக்ரைன் ஜனாதிபதி இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்துள்ளார். இதேவேளை, இரு தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் மிகச் சிறந்த மட்டத்தில் இருந்ததாக வ…
-
- 1 reply
- 241 views
-
-
உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவர, ஐரோப்பிய தலைவர்கள் 4 அம்ச திட்டம்! பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) உக்ரேனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வரவும் ரஷ்யாவிடம் இருந்து நாட்டை பாதுகாக்கவும் நான்கு அம்ச திட்டத்தை அறிவித்துள்ளார். அத்துடன், ஐரோப்பிய தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை (02) உக்ரேன் அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் முன்வைக்க ஒப்புக்கொண்டதாகவும் கெய்ர் ஸ்டார்மர் கூறினார். இது ரஷ்யாவைத் தடுப்பதற்கு அவசியமானது என்று கெய்வ் கூறும் பாதுகாப்பு உத்தரவாதங்களை வொஷிங்டன் வழங்குவதற்கான ஒரு முக்கிய படியாகும். லண்டனில் நடந்த உச்சிமாநாட்டில், ஐரோப்பிய தலைவர்கள் உக்ரேனிய ஜனாதிபதிக்கு வலுவான ஆதரவை வழங்கினர் மற்றும் அவரது தேசத்திற்கு மேலும் உதவுவதாக உறுதியளித்த…
-
- 0 replies
- 226 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனுக்கு நேட்டோ படையை அனுப்புவதை அமெரிக்கா நிராகரித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனாதன் பீல் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த அதிகாரிகள் சிலரை விடவும், பிரிட்டனின் ஓய்வுபெற்ற உயர்மட்ட ராணுவ அதிகாரிகளை விடவும், பிரிட்டனின் ஆயுதப் படைகளின் திறன்களில் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. யுக்ரேனுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்குமா என்று பிரிட்டன் பிரதமருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த போது டிரம்பிடம் கேட்கப்பட்டது. "பிரிட்டனிடம் நம்ப முடியாத அளவுக்கு வீரர்கள் மற்றும் ராணுவ பலம் உள்ளது. அவர்களால் தங்களைக் கவனித்துக் கொள்ள முடியும்," என்று டிரம்ப் அக்கேள்விக்கு…
-
- 1 reply
- 546 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் ஆட்சி மொழியாக ஆங்கிலம் அறிவிப்பு! ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார். ஆங்கில மொழியை முதல் மொழியாகப் பேசுவோரில் 3-ல் 2 பங்கினர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் பரவலாகப் பேசப்படும் ஆங்கில மொழி அமெரிக்க ஆங்கிலம் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான். காலபோக்கில் ஆங்கில ஒலிப்பு முறை மற்றும் எழுத்தில் மாற்றம் ஏற்பட்டது. இந்தநிலையில், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக ஆங்கிலத்தை மாற்றும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று கையெழுத்திட்ட…
-
- 0 replies
- 252 views
-
-
02 MAR, 2025 | 10:35 AM அமெரிக்காவில் முட்டை விலை அதிகரித்துள்ளதை தொடர்ந்து முட்டை கடத்தலில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவது, முட்டை விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மெக்சிக்கோவிலிருந்து எல்லை வழியாக முட்டை கடத்தலில் ஈடுபட முயல்பவர்களிற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 2024ம் ஆண்டின் பின்னர்முட்டை விலைகள் 158 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க சுங்க எல்லை பாதுகாப்பு பிரிவு இந்த வருடம் துறைமுகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட அல்லது தடு…
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர் மற்றும் ஹாரியட் வைட்ஹெட் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று, பின்லாந்து நாட்டை எஸ்டோனியாவுடன் இணைக்கும் கடலுக்கு அடியில் செல்லும் முக்கிய மின்சார கேபிள் ஒன்று சேதமடைந்திருந்ததை ஃபிங்ரிட் (Fingrid) என்ற மின்சார நிறுவனத்தின் தொழிலாளர்கள் கண்டறிந்தனர். இதனால் அதன் அண்டை நாடுகளுக்கு மின்சார விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன. "இது எவ்வாறு ஏற்பட்டது என்று அறிய நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். யாரேனும் செய்த நாசவேலையா என்பது முதல் தொழில்நுட்ப கோளாறா என்பது வரை அனைத்து விதமான சாத்தியக்கூறுகள் பற்றியும் விசாரணை நடந்து வருகின்றது. இதுவரை நாங்கள் எந்த முடிவுக்கும் வரவில…
-
- 0 replies
- 475 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 28 FEB, 2025 | 11:36 AM cbs news அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோபைடனின் காலத்தில் விமானதாக்குதல் இராணுவநடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தளர்த்தியுள்ளார். வான்தாக்குதல்கள் விசேட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க தளபதிகள் உத்தரவிடுவது தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள டிரம்ப் யாரை இலக்குவைக்கலாம் என்ற பட்டியலை விரிவுபடுத்தியுள்ளார். அமெரிக்க அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளதுடன் இது பாரிய கொள்கை மாற்றம் என குறிப்பிட்டுள்ளனர். அமைதியான ஆனால் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த மாற்றம் ஜோபைடன் காலத்தின் உத்தரவுகளை செயல் இழக்கச்செய்துள்ளது. மேலும் டிரம்…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
26 FEB, 2025 | 05:08 PM அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. மெக்சிகோ கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பலகட்டங்களாக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் அமெரிக்காவில் குடியேறியவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’…
-
-
- 12 replies
- 723 views
- 1 follower
-
-
எதிரிகளுக்கு எச்சரிக்கை’ – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை February 28, 2025 11:18 am வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. எதிரிகளுக்கு எச்சரிக்கை என்ற பெயரில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது. இந்த ஏவுகணை சோதனையை கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மேற்பார்வையில் நடத்தப்பட்டதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் கொரிய கூட்டுப் படைத் தலைவர்களும் ஏவுகணை சோதனையை உறுதிப்படுத்தினர். ஏவுகணை கண்காணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரியாவின் பாதுகாப்பு சூழலுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை எச்சரிப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை 1,587 கிலோமீட்டர் பயணம் செய்து 130 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு அதன் இலக்கை அடைந்ததா…
-
- 0 replies
- 335 views
-
-
27 FEB, 2025 | 03:23 PM கனடா கடந்தவருடம் மிக அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளது இவர்களில் அனேகமானவர்கள் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டு;ள்ளது. இது தொடர்பில் ரொய்ட்டர் மேலும் தெரிவித்துள்ளதாவது. கனடா கடந்த வருடம் அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளது,ஒருதசாப்தகாலத்திற்கும் மேற்பட்ட காலத்தில் அதிகளவானவர்கள் வெளியேற்றப்பட்டமை கடந்த வருடத்திலேயே. ரொய்ட்டர் பெற்றுக்கொண்டுள்ள தரவுகள் இதனை வெளிப்படுத்துகின்றன. கடந்தவருடம் ஒக்டோபர் மாதம் வரை கனடா நாடுகடத்தியவர்களின் எண்ணிக்கையை வைத்துபார்க்கும்போது 2015ம் ஆண்டின் பின்னர் கடந்த வருடமே கனடா அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளமை புலனாகின்றது. நாடு கடத்துவதற்காக அதிகளவு நிதியை கனடா அரசாங்கம் கடந்த வருட…
-
- 0 replies
- 383 views
- 1 follower
-
-
அமெரிக்காவுக்குள் நுழையும் சீன கப்பல்களுக்கு 1.5 மில்லியன் டொலர் வரி? அமெரிக்க துறைமுகங்களுக்குள் நுழையும் சீனக் கப்பல்கள் மற்றும் சீனத் தயாரிப்புக் கப்பல்களுக்கு 1.5 மில்லியன் டொலர்கள் வரை வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் முன்மொழிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகளாவிய கப்பல் கட்டுதல், கடல்சார் மற்றும் தளவாடத் துறைகளில் சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கம் குறித்த கவலைகளின் ஒரு பகுதியாக அமெரிக்கா இதைச் செயல்படுத்தத் தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் போது ஜனவரி 16 அன்று வெளியிடப்பட்ட அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அறிக்கை, சர்வதேச அளவில் போட்டியிடும் அரசுக்கு சொந்தமான…
-
- 0 replies
- 192 views
-