உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26694 topics in this forum
-
அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து பிரிந்தது: கடல் மட்டம் உயரும் அபாயம் அண்டார்டிகாவின் மேற்கில் இருந்து மிகப்பெரிய அளவிலான பனிப்பாறை உடைந்து தனியாகப் பிரிந்து சென்றுள்ளது. இதுவரை பிரிந்து சென்ற மிகப்பெரிய பனிப்பாறைகளில் இதுவும் ஒன்றாகும். இதன் சுற்றளவு 5,800 சதுர கிலோமீட்டர்களாகும். எடை சுமார் ட்ரில்லியன் டன் வரை இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியான ”லார்சன் C” என்ற பனி அடுக்கு 12 சதவீதம் அளவிற்கு குறைந்துவிட்டது. இந்த பனிப்பாறையை ஜரோப்பிய செயற்கைக்கோள்களின் மூலமாக அறிவியலாளர்கள் கடந்த சில தினங்களாக தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். இதனி…
-
- 1 reply
- 709 views
-
-
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரான்ஸ் வந்திருக்கிறார்! அமெரிக்க தேர்தலில் ரஷ்யத்தலையீடு இருந்த சர்ச்சை குறித்து அவரது ஆதரவு வாக்காளர்களின் கருத்தென்ன? கீழைத்தேசங்களில் வர்த்தகத்தை விரிவாக்க விரும்பும் ஐரோப்பிய திட்டத்துக்கு சீனாவின் புதிய பட்டுப்பாதை உதவியா? உபத்திரமா? மற்றும் சேர்ந்து விளையாடும் சிறாரும் முதியோரும்! முதியோர் இல்லத்துக்கு மத்தியில் சிறுவர் பராமரிப்பு நிலையம் அமைக்கும் வித்தியாசமான முயற்சி குறித்த சுவாரஸ்யமான செய்தித்தொகுப்பு! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 219 views
-
-
சீனா: நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர் லியு சியாபோ மரணம் சீனாவில் நடைபெற்று வரும் ஜனநாயக படுகொலையை தோலுரித்து காட்டியதற்காக நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர் லியு சியாபோ புற்றுநோய் முற்றிய நிலையில் இன்று மரணம் அடைந்தார். பீஜிங்: சீனாவில் ஜனநாயகம் தொடர்பான ‘சார்ட்டெர் 8’ என்ற நூலை கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான லியு சியாபோ (61), என்பவருக்கு சீன அரசு 11 வருட சிறைத் தண்டனை விதித்தது. கடந்த 2010-ம் ஆண்டு அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனால் சீனாவுக்கும் நோபல் பரிசை அளித்துவரும் நார்வே நாட்ட…
-
- 2 replies
- 545 views
-
-
சவூதி அரேபியாவில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர் உட்பட 11 பேர் உயிரிழப்பு சவூதி அரேபியாவில் உள்ள நஜ்ரான் என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில் புலம்பெயர்நத தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் இந்தியா மற்றும் பங்களாதேசைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்ப http://globaltamilnews.net/archives/32672
-
- 0 replies
- 454 views
-
-
ரஷ்ய வழக்கறிஞரை தான் சந்தித்தது குறித்து தந்தைக்கு தெரியாது என்கிறார் டொனால்ட் ட்ரம்பின் மகன்! ஹிலரி கிளிண்டனை பற்றி தகவல் சேகரிக்க நடந்த சந்திப்பால் தொடரும் சர்ச்சை, மொசூல் நகரெங்கும் மழலைகளின் அழுகுரல்! பாதுகாப்பு தேடி வெளியேறும் குடும்பங்கள் அனாதையான குழந்தைகளையும் முதியவரையும் அரவணைத்து ஆறுதல்! மற்றும் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தால் தமக்கு வேலைவாய்ப்பு உருவாகவில்லை; செல்வம் பெருகவில்லை என கசகிஸ்தானில் கவலை அதிகரித்துள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 233 views
-
-
கத்தார் பால் தேவைக்கு ஜெர்மனியில் இருந்து பறந்து வந்த மாடுகள் சௌதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகள் கத்தாரை தனிமைப்படுத்தியுள்ள நிலையில், கத்தாரில் பால் விநியோகத்தை அதிகரிக்க மாடுகள் விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. படத்தின் காப்புரிமைREUTERS இறக்குமதி செய்யப்பட்ட உள்ள 4000 மாடுகளில், முதல்கட்டமாக 165 ஹால்ஸ்டீன் பால் மாடுகள் ஜெர்மனியில் இருந்து கத்தார் வந்து சேர்ந்துள்ளன. கத்தாரில் வாழும் 2.7 மில்லியன் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய அந்நாடு இறக்குமதி பொருட்களை நம்பியிருக்கும் நிலையில், பிற நாடுகள் விதித்திருக்கும் வான், கடல் மற்றும் நில வழி தடையின் காரணமாக கத்தாரில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 485 views
-
-
கத்தார்: சமரச தூதுவரா, சர்ச்சையின் நாயகனா? பல விடயங்களில், மத்தியஸ்தராக தன்னைக் காட்டிக் கொள்ளும் கத்தார் நாடு, அந்தத் தகுதியைப் பெற்றிருக்கிறதா?, கத்தார் ஏன் குறிவைக்கப்படுகிறது? அதன் இலக்கு என்ன? படத்தின் காப்புரிமைREUTERS பிபிசி உலக சேவைக்காக, கத்தார் குறித்து அலசும் ஜேம்ஸ் ஃப்ளெட்சரின் விரிவான ஆய்வின் அடுத்த பாகம்: இதில், முதலாவதாக, கத்தார் விவகாரங்கள் பற்றி நிபுணத்துவம் பெற்ற லீனா காதிப் பார்வையில் என்னென்ன விவரங்கள் கிடைக்கின்றன என்பதைத் தருகிறார். (பிரிட்டனுக்குச் செல்வதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் லெபனானில் வளர்ந்த லீனா காதிப், இப்போது சத்தம் சிந்தனைக் குழுவின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக…
-
- 3 replies
- 900 views
-
-
வீழ்ந்தது ஐ.எஸ் சாம்ராஜ்யம்: அல்-பக்தாதி மரணமடைந்ததாக சிரிய போர் கண்காணிப்பகம் அறிவிப்பு சிரியா மற்றும் ஈராக் நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி ராணுவத்தினரின் வான் ஏவுகணை தாக்குதலில் மரணமடைந்ததாக சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. டமாஸ்கஸ்: சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ (சிரியா மற்றும் ஈராக்கில் நாடு கடந்த இஸ்லாமிய ஆட்சி) என்ற ஆங்கில வார்த்தையின் ச…
-
- 0 replies
- 685 views
-
-
ரஷ்யா: '30 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற தயார்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES வாஷிங்டனின் தடைகளுக்கு பதிலடியாக, 30 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற தயார் என்று கூறும் ரஷ்ய அதிகாரிகள், அமெரிக்க அரசின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் தயராக இருப்பதாக அறிவித்துள்ளனர். ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி, இந்த செய்தியை லெஸ்வெஸ்டா (Izvestia) நாளிதழ் வெளியிட்டிருக்கிறது. அண்மையில் இதேபோன்ற அச்சுறுத்தல்களை வேறு ரஷ்ய அதிகாரிகளும் வெளியிட்டிருந்தனர். டிசம்பர் மாதத்தில் 35 ரஷ்ய தூதர்களை வெளியேற்றிய ஒபாமா நிர்வாகம், ரஷ்யாவின் இரண்டு புலனாய்வு அமைப்புக்களையும் மூடியது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் த…
-
- 1 reply
- 729 views
-
-
ஜி.எஸ்.டியின் தாக்கம் நடுத்தர மக்களை எப்படி பாதிப்படைய வைக்கிறது. Positive and Negative impact of GST | Socio Talk
-
- 0 replies
- 194 views
-
-
சிரியாவில் நடக்கும் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான சண்டையின் நிலவரமென்ன? ரக்காவில் முன்னேறும் குர்துப்படைகளோடு செல்லும் பிபிசி செய்தியாளர் போரின் முன்னரங்கிலிருந்து தரும் பிரத்யேக செய்திகள்!! சீனாவின் வர்த்தகத்தையும் சுற்றுலாவையும் வளர்க்கும் புதிய பட்டுப்பாதையில் பெருகும் நவீன ரயில்கள்! சீன செல்வாக்கை பெருக்குமா? சிறுபான்மையினரை அரவணைக்குமா? மற்றும் பழங்கால கருப்பு வெள்ளை புகைப்படங்களை வண்ணமயமான நவீன படங்களாக மாற்றுபவரின் கதை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 233 views
-
-
பாரீஸ் நகரில் வரலாறு காணாத மழை! பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒரே நாளில் மட்டும் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால், 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் திடீரென புயல் தாக்கியது. சுமார் இரண்டு மணி நேரம் வெளுத்த மழை 54 மில்லி மீட்டர் அளவுக்கு பதிவாகியுள்ளது. இது ஒரு மாதத்தில் பெய்யும் சராசரி மழையின் அளவாகும். இதன் காரணமாக அந்நகரில் உள்ள 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நகரின் முக்கிய சாலைகள் வெள்ளத்தால் மிதக்கின்றன. கடந்த 1995-ம் ஆண்டு 47.4 மி.மீ அளவுக்கு மழை பெய்ததே அதிகபட்சமாக இருந்தது. பாரீசின் புறநகர் பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததாக அந்நாட்…
-
- 20 replies
- 1.3k views
-
-
கத்தாருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? படத்தின் காப்புரிமைJULIAN HERBERT/GETTY IMAGES ஒரு மாதம் முன்பு ஒரு செவ்வாய்க்கிழமை காலை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கம்போல் தனது போனை எடுத்து, டிவிட்டரை திறந்தார்…. அன்று அவர் டிவீட் செய்த செய்தி என்ன? போலி செய்தி ஊடகங்கள்? "மோசடி ஹிலாரி" அல்லது ஜனநாயக கட்சி?… இல்லை. மத்திய கிழக்கில் இருக்கும் சிறிய நாடு கத்தார். "செளதி அரேபியப் பயணம் நன்றாக இருந்தது… அதற்கு நன்றி சொல்லலாம்" என டிரம்ப் டிவீட் செய்கிறார், "தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பது குறித்து கடுமையான முடிவு எடுக்கப் போவதாக சொன்னார்கள்.. அவர்கள் சொல்லும் அனைத்தும் கத்தாரை சுட்டிக்காட்டுகிறது". கத…
-
- 0 replies
- 629 views
-
-
சவூதி அரேபியாவிற்கு பிரித்தானியா ஆயுதங்களை வழங்கியமை சட்ட ரீதியானதே குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சவூதி அரேபியாவிற்கு பிரித்தானியா ஆயுதங்களை வழங்கியமை சட்ட ரீதியானதே என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரித்தானிய அரசாங்கம், சவூதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்திருந்தமை தொடர்பில் இரகசியமான ஆதாரங்களை பரிசீலனை செய்து நீதிமன்றம் இந்த தீர்ப்பை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய அமைச்சர்கள் சட்டவிரோதமான முறையில் சவூதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. சவூதி அரேபியா, ஏமனுடன் யுத்தம் செய்து வருவதாகவும் அதனால் ஆயுதங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் தெர…
-
- 0 replies
- 280 views
-
-
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலால் அமர்நாத் யாத்திரிகர்கள் 7 பேர் பலி காஷ்மீரில் தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலில் அமர்நாத் யாத்திரிகர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமர்நாத் குகைக் கோயிலில் பனி லிங்கத்தை தரிசிக்க ஆயிரக் கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். யாத் திரையை சீர்குலைக்க தீவிரவாதி கள் தாக்குதல் நடத்த கூடும் என்று ஏற்கெனவே உளவுத் துறையினர் எச்சரித்திருந்தனர். இதையடுத்து அமர்நாத் யாத்திரைக்கு வழக்கத் துக்கு மாறாக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் பாது காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது நேற்றிரவு த…
-
- 0 replies
- 289 views
-
-
காஷ்மீர் வழியாக உள்ளே இந்தியாவுக்குள் நுழைவோம்.. பாக்.குடன் சேர்ந்து அடிப்போம்.. சீனா மிரட்டல்! இந்திய படைகள் சீன எல்லைக்குள் புகுந்துள்ளதாகவும், இந்திய படைகள் திரும்ப செல்லாவிட்டால், காஷ்மீருக்குள் சீன ராணுவம் நுழையும் என்று அந்த நாட்டு அரசு மீடியா மிரட்டியுள்ளது. டோக்லாம் பகுதியில் திபெத் மற்றும் பூட்டானுடன் சிக்கிம்மை இணைக்கும் வகையில் சீனா சாலை அமைப்பதை இந்திய படைகள் தடுத்து வருகின்றன. இந்திய பாதுகாப்புக்கு இந்த சாலை அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இந்திய படைகள் தீரத்தோடு முன்னோக்கி நகர்ந்துள்ளன. பூடானுக்கு ஆதரவாக இந்திய படைகள் சீன எல்லைக்குள் அத்துமீறி பலமுறை நுழைந்து வருவதாக சீனா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்திய படைகள் பின்நகர வேண்டும் என சீனா…
-
- 29 replies
- 1.8k views
-
-
முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா என்ற பங்களா வீட்டில் தீ விபத்து:- மராட்டிய மாநிலம் தெற்கு மும்பையில் ரிலையன்ஸ் குழும தலைவர் தொழிலதிபர் முகேஷ் அம்பானியில் பங்களா உள்ளது. ஆண்டிலியா என்று அழைக்கப்படும் இந்த பங்களா 27 மாடிகளை கொண்டது. சுமார் 600 பணியாளர்கள் வீட்டில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று இரவு வீட்டின் மேல்தளத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினை அடுத்து, தீயணைப்பு படையினர் 7 வாகனங்களில் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்தார்களா? என்ற தகவல்களும் வெளியாகவில்லை. …
-
- 0 replies
- 521 views
-
-
ஹிலாரி பற்றிய தகவல்களுக்காக ரஷ்யரைச் சந்தித்தார் ட்ரம்ப்பின் மகன் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், கடந்தாண்டில், ரஷ்ய சட்டத்தரணியொருவரைச் சந்தித்தார் என்ற செய்தி, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது வேட்பாளராக இருந்த ஹிலாரி கிளின்டனைச் சேதப்படுத்தும் வகையிலான தகவல்கள் உள்ளன என, அந்தச் சட்டத்தரணி கூறியதைத் தொடர்ந்தே, இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையால் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியின் அடிப்படையில், ட்ரம்ப் கோபுரக் கட்டடத்தில் வைத்து, கடந்தாண்டு ஜூன் 9ஆம் திகதி, இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குடியரசுக் கட்சியின் வேட்பாளராக, டொனால்ட் ட்ரம்ப…
-
- 0 replies
- 389 views
-
-
மொசூல் நகரை ஐஎஸ் அமைப்பிடமிருந்து மீட்டுவிட்டதாக இராக்கிய அரசு அறிவிப்பு! ஆனால் அதற்கு பொதுமக்கள் கொடுத்த விலையென்ன? பிபிசியின் நேரடித்தகவல்கள்; அறுபது நாடுகளுக்கு பயன் தரக்கூடிய பட்டுப்பாதையை மீண்டும் திறக்கும் சீனாவின் பெரும் திட்டம் குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் செல்லப்பிராணிகள் அலுவலகம் வருவதை ஊக்குவிக்கும் தாய்லாந்து நிறுவனங்கள் குறித்த வித்தியாசமான செய்தித்தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 339 views
-
-
ஜி-20 மாநாட்டை எதிர்த்து நடத்த போராட்டத்தில் ஹீரோவான பீட்சா டெலிவரி நபர் ஜி-20 போராட்டத்தின் இடையே பிட்சா டெலிவரிகாக செல்லும் நபரை புகைப்படம் எடுக்க சூழ்ந்துள்ள புகைப்படக்காரர்கள் ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் ஜி- 20 மாநாட்டில் உலகத் தலைவர்களின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைத்துக் கொண்டிருந்தனர். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்து விட்டது. ஆனால் இந்தப் போராட்ட நிகழ்வில் பதிவான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவின் விவரம்: …
-
- 0 replies
- 272 views
-
-
லண்டன் கம்டன் லொக் சந்தை((Camden Lock Market )) யில் தீ விபத்து : பிரித்தானியாவின் லண்டனில் தீ விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வடக்கு லண்டனின் கம்டன் லொக் சந்தை (Camden Lock Market ) யில் இவ்வாறு தீ விபத்து இடம்பெற்றுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் 70 தீயனைப்புப் படைவீரர்களும் பத்து தீயனைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீ மிகவும் வேகமாக பரவியதாக நேரில் கண்ட சாட்சியொருவர் தெரிவித்துள்ளார். தீ விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரையில் பதிவாகவில்லை, எனினும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது http://globaltamilnew…
-
- 0 replies
- 406 views
-
-
ஜி-20 மாநாட்டில் ட்ரம்ப் எதற்காக அலைந்தார் தெரியுமா? சமீபத்தில் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில் நடந்து முடிந்த ஜி-20 மாநாட்டில் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டுக்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தங்குவதற்கு சரியான ஓட்டல் அறை கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளார் என்று செய்தி வந்துள்ளது. உலகின் முன்னணி நாடுகள் பலவற்றும் இந்த ஜி-20 மாநாட்டில் பங்கேற்று, உலகளவில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். குறிப்பாக இந்த பயணத்தின் போது ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை நேரில் சந்தித்து இரு நாட்டு உறவைப் பற்றி பேசினார். இந்நிலையில் இந்தப் பயணத்தின் போது தங்குவதற்கு அதிபர் ட்ரம்ப்பின் அலுவலப் பணியாளர…
-
- 0 replies
- 440 views
-
-
அமெரிக்கா விலகினாலும் பருவநிலை மாற்றம் உடன்படிக்கையை செயல்படுத்த ஜி-20 மாநாட்டில் முடிவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபருவநிலை மாற்றத்திற்கு எதிராக டிரம்பின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் நடைபெற்ற ஆர்பாட்டம் பருவநிலை மாற்றம் தொடர்பாக எட்டப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா பின்வாங்குவதை ஜி-20 குழுவில் உள்ள பிற 19 நாடுகளும் ஒப்புக்கொண்டன. அதே நேரத்தில், தாங்கள் பாரிஸ் உடன்பாட்டை செயல்படுத்துவதை முன்னெடுத்துச்செல்வது என்ற உறுதிமொழியை புதுப்பித்துக் கொண்டனர். ஹாம்பர்க்கில் முந்தைய நாளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது முட்டுக்கட்டையான இந்த விவகாரம், இறுதியில்…
-
- 0 replies
- 333 views
-
-
லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது: 35 பேர் பலி - 85 பேரை மீட்டது கடலோர காவல்படை லிபியாவில் அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்ளிட்ட 35 பேர் கடலில் மூழ்கினர். அவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காரபுல்லி: வளைகுடா நாடுகளில் இருந்து உள்நாட்டு போர் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடலை கடந்து செல்வதற்கு முக்கிய இடமாக லிபியா உ…
-
- 0 replies
- 303 views
-
-
ஜி20 மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் இருக்கையில் இவாங்கா டிரம்ப் வழக்கத்துக்கு மாறாக சனிக்கிழமை, ஜி20 உச்சி மாநாட்டில் தனது தந்தை டொனால்டின் இருக்கையில் சில நிமிடங்கள் இவாங்கா டிரம்ப் அமர்ந்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜி20 கூட்டத்தின்போது, அமெரிக்க அதிபர், இந்தோனேஷிய அதிபருடனான சந்திப்புக்காக வெளியே சென்றிருந்தார். அதிபர் டிரம்ப்பின் அதிகாரப்பூர்வ ஆலோசகராக அவரது மகள் இவாங்கா டிரம்ப் உள்ளார். ஆனால், ஜி20 உச்சி மாநாட்டில் நாட்டின் அதிபர் இல்லாதபோது, அவருக்கு பதிலாக உயர் பதவியில் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கமாக இருந்துள்ளது. உச்சி மாநாட்டில் இருந்து பிபிசி செய்தியாளர் கூறுகையில், ஜி20 நாடுகளின் தலைவர்களுடன் இவாங்கா நின்றது போல இதற…
-
- 0 replies
- 318 views
-