உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26883 topics in this forum
-
பாரீஸ் நகரில் வரலாறு காணாத மழை! பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒரே நாளில் மட்டும் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால், 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் திடீரென புயல் தாக்கியது. சுமார் இரண்டு மணி நேரம் வெளுத்த மழை 54 மில்லி மீட்டர் அளவுக்கு பதிவாகியுள்ளது. இது ஒரு மாதத்தில் பெய்யும் சராசரி மழையின் அளவாகும். இதன் காரணமாக அந்நகரில் உள்ள 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நகரின் முக்கிய சாலைகள் வெள்ளத்தால் மிதக்கின்றன. கடந்த 1995-ம் ஆண்டு 47.4 மி.மீ அளவுக்கு மழை பெய்ததே அதிகபட்சமாக இருந்தது. பாரீசின் புறநகர் பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததாக அந்நாட்…
-
- 20 replies
- 1.3k views
-
-
கத்தாருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? படத்தின் காப்புரிமைJULIAN HERBERT/GETTY IMAGES ஒரு மாதம் முன்பு ஒரு செவ்வாய்க்கிழமை காலை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கம்போல் தனது போனை எடுத்து, டிவிட்டரை திறந்தார்…. அன்று அவர் டிவீட் செய்த செய்தி என்ன? போலி செய்தி ஊடகங்கள்? "மோசடி ஹிலாரி" அல்லது ஜனநாயக கட்சி?… இல்லை. மத்திய கிழக்கில் இருக்கும் சிறிய நாடு கத்தார். "செளதி அரேபியப் பயணம் நன்றாக இருந்தது… அதற்கு நன்றி சொல்லலாம்" என டிரம்ப் டிவீட் செய்கிறார், "தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பது குறித்து கடுமையான முடிவு எடுக்கப் போவதாக சொன்னார்கள்.. அவர்கள் சொல்லும் அனைத்தும் கத்தாரை சுட்டிக்காட்டுகிறது". கத…
-
- 0 replies
- 632 views
-
-
சவூதி அரேபியாவிற்கு பிரித்தானியா ஆயுதங்களை வழங்கியமை சட்ட ரீதியானதே குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சவூதி அரேபியாவிற்கு பிரித்தானியா ஆயுதங்களை வழங்கியமை சட்ட ரீதியானதே என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரித்தானிய அரசாங்கம், சவூதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்திருந்தமை தொடர்பில் இரகசியமான ஆதாரங்களை பரிசீலனை செய்து நீதிமன்றம் இந்த தீர்ப்பை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய அமைச்சர்கள் சட்டவிரோதமான முறையில் சவூதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. சவூதி அரேபியா, ஏமனுடன் யுத்தம் செய்து வருவதாகவும் அதனால் ஆயுதங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் தெர…
-
- 0 replies
- 282 views
-
-
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலால் அமர்நாத் யாத்திரிகர்கள் 7 பேர் பலி காஷ்மீரில் தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலில் அமர்நாத் யாத்திரிகர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமர்நாத் குகைக் கோயிலில் பனி லிங்கத்தை தரிசிக்க ஆயிரக் கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். யாத் திரையை சீர்குலைக்க தீவிரவாதி கள் தாக்குதல் நடத்த கூடும் என்று ஏற்கெனவே உளவுத் துறையினர் எச்சரித்திருந்தனர். இதையடுத்து அமர்நாத் யாத்திரைக்கு வழக்கத் துக்கு மாறாக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் பாது காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது நேற்றிரவு த…
-
- 0 replies
- 292 views
-
-
காஷ்மீர் வழியாக உள்ளே இந்தியாவுக்குள் நுழைவோம்.. பாக்.குடன் சேர்ந்து அடிப்போம்.. சீனா மிரட்டல்! இந்திய படைகள் சீன எல்லைக்குள் புகுந்துள்ளதாகவும், இந்திய படைகள் திரும்ப செல்லாவிட்டால், காஷ்மீருக்குள் சீன ராணுவம் நுழையும் என்று அந்த நாட்டு அரசு மீடியா மிரட்டியுள்ளது. டோக்லாம் பகுதியில் திபெத் மற்றும் பூட்டானுடன் சிக்கிம்மை இணைக்கும் வகையில் சீனா சாலை அமைப்பதை இந்திய படைகள் தடுத்து வருகின்றன. இந்திய பாதுகாப்புக்கு இந்த சாலை அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இந்திய படைகள் தீரத்தோடு முன்னோக்கி நகர்ந்துள்ளன. பூடானுக்கு ஆதரவாக இந்திய படைகள் சீன எல்லைக்குள் அத்துமீறி பலமுறை நுழைந்து வருவதாக சீனா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்திய படைகள் பின்நகர வேண்டும் என சீனா…
-
- 29 replies
- 1.8k views
-
-
முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா என்ற பங்களா வீட்டில் தீ விபத்து:- மராட்டிய மாநிலம் தெற்கு மும்பையில் ரிலையன்ஸ் குழும தலைவர் தொழிலதிபர் முகேஷ் அம்பானியில் பங்களா உள்ளது. ஆண்டிலியா என்று அழைக்கப்படும் இந்த பங்களா 27 மாடிகளை கொண்டது. சுமார் 600 பணியாளர்கள் வீட்டில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று இரவு வீட்டின் மேல்தளத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினை அடுத்து, தீயணைப்பு படையினர் 7 வாகனங்களில் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்தார்களா? என்ற தகவல்களும் வெளியாகவில்லை. …
-
- 0 replies
- 524 views
-
-
ஹிலாரி பற்றிய தகவல்களுக்காக ரஷ்யரைச் சந்தித்தார் ட்ரம்ப்பின் மகன் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், கடந்தாண்டில், ரஷ்ய சட்டத்தரணியொருவரைச் சந்தித்தார் என்ற செய்தி, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது வேட்பாளராக இருந்த ஹிலாரி கிளின்டனைச் சேதப்படுத்தும் வகையிலான தகவல்கள் உள்ளன என, அந்தச் சட்டத்தரணி கூறியதைத் தொடர்ந்தே, இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையால் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியின் அடிப்படையில், ட்ரம்ப் கோபுரக் கட்டடத்தில் வைத்து, கடந்தாண்டு ஜூன் 9ஆம் திகதி, இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குடியரசுக் கட்சியின் வேட்பாளராக, டொனால்ட் ட்ரம்ப…
-
- 0 replies
- 392 views
-
-
மொசூல் நகரை ஐஎஸ் அமைப்பிடமிருந்து மீட்டுவிட்டதாக இராக்கிய அரசு அறிவிப்பு! ஆனால் அதற்கு பொதுமக்கள் கொடுத்த விலையென்ன? பிபிசியின் நேரடித்தகவல்கள்; அறுபது நாடுகளுக்கு பயன் தரக்கூடிய பட்டுப்பாதையை மீண்டும் திறக்கும் சீனாவின் பெரும் திட்டம் குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் செல்லப்பிராணிகள் அலுவலகம் வருவதை ஊக்குவிக்கும் தாய்லாந்து நிறுவனங்கள் குறித்த வித்தியாசமான செய்தித்தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 343 views
-
-
ஜி-20 மாநாட்டை எதிர்த்து நடத்த போராட்டத்தில் ஹீரோவான பீட்சா டெலிவரி நபர் ஜி-20 போராட்டத்தின் இடையே பிட்சா டெலிவரிகாக செல்லும் நபரை புகைப்படம் எடுக்க சூழ்ந்துள்ள புகைப்படக்காரர்கள் ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் ஜி- 20 மாநாட்டில் உலகத் தலைவர்களின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைத்துக் கொண்டிருந்தனர். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்து விட்டது. ஆனால் இந்தப் போராட்ட நிகழ்வில் பதிவான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவின் விவரம்: …
-
- 0 replies
- 276 views
-
-
லண்டன் கம்டன் லொக் சந்தை((Camden Lock Market )) யில் தீ விபத்து : பிரித்தானியாவின் லண்டனில் தீ விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வடக்கு லண்டனின் கம்டன் லொக் சந்தை (Camden Lock Market ) யில் இவ்வாறு தீ விபத்து இடம்பெற்றுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் 70 தீயனைப்புப் படைவீரர்களும் பத்து தீயனைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீ மிகவும் வேகமாக பரவியதாக நேரில் கண்ட சாட்சியொருவர் தெரிவித்துள்ளார். தீ விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரையில் பதிவாகவில்லை, எனினும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது http://globaltamilnew…
-
- 0 replies
- 408 views
-
-
ஜி-20 மாநாட்டில் ட்ரம்ப் எதற்காக அலைந்தார் தெரியுமா? சமீபத்தில் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில் நடந்து முடிந்த ஜி-20 மாநாட்டில் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டுக்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தங்குவதற்கு சரியான ஓட்டல் அறை கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளார் என்று செய்தி வந்துள்ளது. உலகின் முன்னணி நாடுகள் பலவற்றும் இந்த ஜி-20 மாநாட்டில் பங்கேற்று, உலகளவில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். குறிப்பாக இந்த பயணத்தின் போது ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை நேரில் சந்தித்து இரு நாட்டு உறவைப் பற்றி பேசினார். இந்நிலையில் இந்தப் பயணத்தின் போது தங்குவதற்கு அதிபர் ட்ரம்ப்பின் அலுவலப் பணியாளர…
-
- 0 replies
- 444 views
-
-
அமெரிக்கா விலகினாலும் பருவநிலை மாற்றம் உடன்படிக்கையை செயல்படுத்த ஜி-20 மாநாட்டில் முடிவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபருவநிலை மாற்றத்திற்கு எதிராக டிரம்பின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் நடைபெற்ற ஆர்பாட்டம் பருவநிலை மாற்றம் தொடர்பாக எட்டப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா பின்வாங்குவதை ஜி-20 குழுவில் உள்ள பிற 19 நாடுகளும் ஒப்புக்கொண்டன. அதே நேரத்தில், தாங்கள் பாரிஸ் உடன்பாட்டை செயல்படுத்துவதை முன்னெடுத்துச்செல்வது என்ற உறுதிமொழியை புதுப்பித்துக் கொண்டனர். ஹாம்பர்க்கில் முந்தைய நாளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது முட்டுக்கட்டையான இந்த விவகாரம், இறுதியில்…
-
- 0 replies
- 337 views
-
-
லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது: 35 பேர் பலி - 85 பேரை மீட்டது கடலோர காவல்படை லிபியாவில் அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்ளிட்ட 35 பேர் கடலில் மூழ்கினர். அவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காரபுல்லி: வளைகுடா நாடுகளில் இருந்து உள்நாட்டு போர் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடலை கடந்து செல்வதற்கு முக்கிய இடமாக லிபியா உ…
-
- 0 replies
- 305 views
-
-
ஜி20 மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் இருக்கையில் இவாங்கா டிரம்ப் வழக்கத்துக்கு மாறாக சனிக்கிழமை, ஜி20 உச்சி மாநாட்டில் தனது தந்தை டொனால்டின் இருக்கையில் சில நிமிடங்கள் இவாங்கா டிரம்ப் அமர்ந்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜி20 கூட்டத்தின்போது, அமெரிக்க அதிபர், இந்தோனேஷிய அதிபருடனான சந்திப்புக்காக வெளியே சென்றிருந்தார். அதிபர் டிரம்ப்பின் அதிகாரப்பூர்வ ஆலோசகராக அவரது மகள் இவாங்கா டிரம்ப் உள்ளார். ஆனால், ஜி20 உச்சி மாநாட்டில் நாட்டின் அதிபர் இல்லாதபோது, அவருக்கு பதிலாக உயர் பதவியில் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கமாக இருந்துள்ளது. உச்சி மாநாட்டில் இருந்து பிபிசி செய்தியாளர் கூறுகையில், ஜி20 நாடுகளின் தலைவர்களுடன் இவாங்கா நின்றது போல இதற…
-
- 0 replies
- 321 views
-
-
காலநிலை மாற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் – ஜெர்மன் அதிபர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காலநிலை மாற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜெர்மன் அதிபர் அன்ஜலா மோர்கல் தெரிவித்துள்ளார். ஜீ20 மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காலநிலை மற்றும் வர்த்தக விடயங்கள் தொடர்பிலான ஜீ20 தலைவர்கள் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேசம் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளமை அனைவருக்கும் தெரிந்த விடயமே என தெரிவித்துள்ள அவர் பேதங்களை களைந்து அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அகுறிப்பிட்டுள்ளார். h…
-
- 0 replies
- 276 views
-
-
பாரிசில் காவல்துறை அதிரடி நடவடிக்கை :குடியேற்றவாசிகள் வெளியேற்றம்! பிரான்ஸ் தலைநகர் பாரிசின் லாச்சப்பல் பகுதியில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த குடியேற்றவாசிகளை காவல்துறையினர் வெளியேற்றியுள்ளனர். குடியேற்றவாசிகளை கையாளும் விவகாரம் கைமீறிப் போய்விட்ட நிலையில், மத்திய அரசு இது தொடர்பில் காத்திரமான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென பாரிஸ் மாநகர சபை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோரியிருந்த நிலையில் இந்ந நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. பாரிஸ் 18 வட்டாரத்தின் போர்த்து லாசப்பல் பகுதியின் வீதியோரங்களிலும், பொது இடங்களிலும் தற்காலிக கூடாரங்கள் அமைந்திருந்த குடியேற்றவாசிகளே இவ்வாறு காவல்துறையினரால…
-
- 1 reply
- 481 views
-
-
ஃபிரான்ஸ் அதிரடி: பெட்ரோல், டீசல் கார்களுக்கு வருகிறது ஒட்டுமொத்த தடை படத்தின் காப்புரிமைREUTERS வரும் 2040 ஆம் ஆண்டிற்குள், பெட்ரோல் அல்லது டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் எந்தவொரு கார் விற்பனையையும் ஃபிரான்ஸ் தடைவிதிக்க உள்ளது. இதனை ஒரு புரட்சி என்று சூழலியல்துறை அமைச்சர் அழைத்துள்ளார். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் மீதான திட்டமிடப்பட்ட தடையை நிகோலஸ் ஹுயுலோ அறிவித்துள்ளார். 2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியீடு இல்லாத நாடாக ஃபிரான்ஸ் உருவாக திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஃபிரெஞ்சு சந்தையில் ஹைபிரிட் கார்களின் சந்தை 3.5% ஆக உள்ளது. அதில…
-
- 0 replies
- 260 views
-
-
அந்தமானில் வசிக்கும் ஜாரவா பழங்குடி இன மக்களைக் காட்டும் விடியோ காட்சிகளை அகற்றும்படி யூ டியூப் இணைய தளத்தை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஜாரவா இனத்தவர் மற்றும் பிற பழங்குடியினரின் ஆட்சேபத்துக்குரிய வீடியா படங்கள் விவகாரத்தை தேசிய பழங்குடியினர் ஆணையம் (என்சிஎஸ்டி) தன்னிச்சையாக விசாரணைக்கு ஏற்றுள்ளது. உலகில் அழியும் நிலையில் உள்ள பழங்குடி இனங்களில் ஒன்று ஜாரவா. வெளி உலகத் தொடர்பு இல்லாமல் இன்னும் எஞ்சியிருக்கும் கடைசி இந்திய ஆதிவாசி இனங்களில் இதுவும் ஒன்று. விடியோ பகிர்வு இணைய தளமான யூ டியூபில் உள்ள 20 விடியோக்கள் ஜாரவாக்களை பாதுகாக்க உதவும் சட்ட விதிகளை மீறுவதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜாரவா இனத்தவர் மற்றும் பிற பழங்குடியினரின் ஆட்சேப…
-
- 1 reply
- 574 views
-
-
முதல் சந்திப்பு: ட்ரம்பும் புதினும் கை குலுக்கி மகிழ்ச்சிப் பரிமாற்றம் G20 உச்சி மாநாட்டின்போது முதன்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துக் கை குலுக்கி தனது மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். விரைவில் இருவரும் தனியாக சந்தித்து இருநாடுகளுக்கும் இடையில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவுள்ள நிலையில், இன்று இருவருக்கும் இடையில் நிகழ்ந்த இந்த முதல் சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் G20 மாநாடு இன்று ஆரம்பமானது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர…
-
- 1 reply
- 523 views
-
-
டொனால்ட் ட்ரம்ப் விளாடிமிர் புட்டின் நேருக்கு நேர் சந்திப்பு! ஜி 20 மாநாட்டில் நிகழும் உரையாடல் உலகை பாதிக்குமா? புதன் கிரகத்துக்கான ஏழாண்டு பயணம் அடுத்த ஆண்டு துவங்குமென அறிவிப்பு! சூரியனுக்கு மிகஅருகிலுள்ள கிரகத்தின் புதிர்கள் புரிபடுமா? மற்றும் விமானபயணத்தை சாமானியருக்கும் சாத்தியமாக்கிய ஜம்போ ஜெட்டுகளின் விற்பனையில் பெரும் சரிவு! கேள்விக்குள்ளாகும் உலகின் பிரம்மாண்ட விமானங்களின் எதிர்காலம் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 303 views
-
-
ஜி20 உச்சி மாநாடு: வன்முறையில் வாகனங்களுக்கு தீ வைப்பு ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க்கில் ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலகத்தலைவர்கள் ஒன்று கூடியுள்ள நிலையில், போலீஸார் மற்றும் மாநாட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களிடையே இரண்டாவது நாளாக மோதல் வெடித்துள்ளது. இந்த உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முதல் முறையாக நேரில் சந்திக்கிறார்கள். http://www.bbc.com/tamil/global-40531714?ocid=socialflow_facebook
-
- 1 reply
- 1k views
-
-
இரண்டாம் உலகப்போரின் போது பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்ட இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ; இணையத்தில் வெளியான முதலாவது வீடியோ தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களை இரண்டாம் உலகப்போர் நடந்த போது, ஜப்பான் இராணுவத்தினர் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் கடந்த 50 ஆண்டுகள் நிலுவையில் உள்ளன. இந்த விடயத்தில் தென்கொரியா அரசு சமாதானமாகப் போனாலும், மக்கள் இது தொடர்பாக அவ்வப்போது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. பாலியல் அடிமைகளாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக ஜப்பான் நிதி மூலம் பல்வேறு உதவிகளை அளிப்பதாக, கடந்த ஓராண…
-
- 0 replies
- 415 views
-
-
”வெல்கம் டூ நரகம்” உலக தலைவர்களை வரவேற்ற ஜி-20 எதிர்ப்பு போராட்டக்காரர்கள் ஜெர்மனியில் இன்று தொடங்கும் ஜி-20 மாநாட்டுக்கு வரும் உலக தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து “வெல்கம் டூ நரகம்” என்ற பதாகைகளை பிடித்து லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தியுள்ளனர். பெர்லின்: ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்…
-
- 0 replies
- 365 views
-
-
நாளை வெள்ளிக்கிழமை துவங்கும் ஜி20 மாநாட்டை ஒட்டி ஹாம்பர்க் நகரில் பாதுகாப்பை பலப்படுத்தியது ஜெர்மனி!வன்முறை வெடிக்கலாமென காவல்துறை எச்சரிக்கை!! ஐஎஸ் ஆதரவாளர்களின் தாக்குதல்கள் ஐக்கிய ராஜ்ஜியத்தில் அதிகரிக்கலாமென அச்சம்! அந்த அமைப்பின் மத்திய கிழக்கு தோல்வியைத் தொடர்ந்து இப்படி நடக்கலாமென எச்சரிக்கை!! மற்றும் எதிர்கால கார்கள் எப்படி இருக்கப்போகின்றன? டீசலை கைவிட்டு மின்சார கார்களை நோக்கி திட்டமிடும் வால்வோ நிறுவன முயற்சி குறித்த ஒரு முன்னோட்டம்!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 179 views
-
-
இந்திய-சீனா எல்லை மோதல் நிலையின் பின்னணி என்ன? நான்கு வாரங்களாக, இந்தியாவும், சீனாவும் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் 3,500 கிலோமீட்டர் (2,174 மைல்) நீள எல்லையின் ஒரு பகுதியில் மோதல் நிலையில் ஈடுபட்டுள்ளன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இவ்விரு நாடுகளும் எல்லை பிரச்சனை தொடர்பாக 1962 ஆம் ஆண்டு போர் ஒன்றை நடத்திய பின்னரும், பல பகுதிகளில் சர்ச்சைகள் நிலவுகின்றன. அவ்வப்போது இந்த இடங்களில் பதட்டங்கள் எழுகின்றன. கடந்த மாதம் இந்த மோதல் தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு தரப்பும் தங்களுடைய படைப்பிரிவுகளை பலப்படுத்திர் கொண்டு, எதிர் தரப்பை பின்வாங்க அழைப்பு விடுத்துள்ளது. மோதல் நிலை தொடக்கம் இந்தியாவில் டோக்லாம்…
-
- 0 replies
- 400 views
-