உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26694 topics in this forum
-
சுவிட்சர்லாந்தில் உணவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி சுவிட்சர்லாந்தின் பேசல் நகரத்திலுள்ள உணவு விடுதியில் நடத்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். ஒருவர் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து போலீஸார் தரப்பில், "பேசல் நகரிலுள்ள உணவு விடுதியில் இரு நபர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.15 மணிக்கு வந்து துப்பாக்கியால் பலமுறை சுட ஆரம்பித்தனர். இதில் உணவு விடுதியிலிருந்த வாடிக்கையாளர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட பிறகு, அந்த நபர்கள் ரயில்வே நிலையத்தை நோக்கிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களின் உள் நோக்கம் இதுவரை தெரியவில்லை இது தொடர்பா…
-
- 0 replies
- 384 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தெற்கு சூடான்,, இனப்படுகொலையை நெருங்குவதாக ஐநா எச்சரிக்கை; அரச படைகளும் ஆயுதக்குழுக்களும் காரணம் என்று குற்றச்சாட்டு. * வடக்கு வசிரிஸ்தானை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது பாகிஸ்தான் இராணுவம்; அல்கயீதா, தாலிபனுக்கு எதிரான மிகப்பெரும் தாக்குதலுக்குப்பின்னுள்ள நிலவரம் குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித் தொகுப்பு. * காதலுக்குத் தூது சென்ற புறாக்கள், காற்றின் மாசை குறைக்கும் ஆய்வுக்கு உதவுமா? உதவும் என்கிறார்கள் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்.
-
- 0 replies
- 389 views
-
-
http://tamil.adaderana.lk/news.php?nid=88914 உத்தரப் பிரதேச மாநிலமான லக்னொவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புபட்டிருந்ததாக கூறப்பட்டு பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட சைஃபுல்லா தேச துரோகி என்று கூறி, அவரது தந்தை சடலத்தை வாங்க மறுத்துள்ளார். "பொலிஸார் எங்களிடம் வந்து உடலை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் ஒரு சேத விரோதியின் உடலை வாங்க மறுத்துவிட்டோம்," என கான்பூரில் வசித்து வரும் சைஃபுல்லாவின் தந்தை சர்தாஜ் தெரிவித்தார். "சைஃபுல்லா சேத விரோதியாக இருந்தால் எங்களுக்கு அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை," எனவும் அவர் தெரிவித்தார். தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டுள்ள சைஃபுல்லாவின் தந்தை சர்தாஜுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவர…
-
- 0 replies
- 549 views
-
-
பொய்ச் செய்திகளை வெளியிடுவதில் இந்திய ஊடகங்களுக்கு உலக அளவில் 2வது இடம்! பெரும்பாலான தேசிய ஊடகங்களின் பொய்ச் செய்திகள், பொய்ப் பிரச்சாரங்களின் காரணமாக இந்திய ஊடகங்களின் நம்பகத்தன்மை முற்றிலுமாக சீரழிந்துள்ளதாக உலக பொருளாதார மன்றம் எடுத்த ஆய்வில் தெரிவித்துள்ளது. ஊடக நெறிமுறைகளையோ, சமூக பொறுப்போ இல்லாமல் கடந்த சில வருடங்களாகவே இந்திய ஊடகங்கள் செயல்பட்டு வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களின் எழுச்சி காரணமாக ஊடகங்களின் இந்த போலி தன்மை வெளிப்பட்டு விட்டதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. பத்திரிக்கையாளர்கள் என தங்களை கூறிக்கொண்டு, ஆதாயத்திற்காக அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர…
-
- 1 reply
- 672 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சிஐஏ எப்படி புலனாய்கிறது? செல்பேசி, கணினி முதல் இணையத்தொடர்புள்ள தொலைக்காட்சிவரை சிஐஏ உலகம் முழுவதும் ஊடுறுவியிருப்பதாக சொல்கிறது விக்கிலீக்ஸ். * வாகனப்புகையை குறைத்து வானத்தை மீண்டும் நீலமாக்க முயல்கிறது சீனா; மாசடைந்த பனிமூட்டத்தை தடுக்கும் அதன் முயற்சி வெற்றிபெறுமா? * சர்வதேச மகளிர் தினத்தில் அயர்லாந்து பெண்கள் ஆர்பாட்டம்; உலகின் கடுமையான கருக்கலைப்பு சட்டத்தை மாற்றியமைக்க கோரிக்கை.
-
- 0 replies
- 348 views
-
-
வைத்தியர் வேடத்தில் வந்த ஐஎஸ் தீவிரவாதிகளால் 38 பேர் பலி : ஆப்கானிஸ்தானில் சம்பவம்..! ஆப்கானிஸ்தானிலுள்ள இராணுவ வைத்தியசாலையில், தீவிரவாதிகள் வைத்தியர்களை போல உடை அணிந்து சென்று தாக்குதல் நடத்தியதால் 38 பேர் இறந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் தலை நகர் காபூலிலுள்ள, முஹம்மது தாவுத் கான் இராணுவ வைத்தியசாலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் வைத்தியர்கள் உடையில் வந்தவர்களால் நிலைகுலைந்த வைத்தியசாலை இராணுவத்தினர் மற்றும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் மீது, தீவிரவாதிகள் கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். அத்…
-
- 0 replies
- 342 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆறு நாடுகள் மீது புதிய பயணத்தடையை விதித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்; அமெரிக்க பாதுகாப்பு பலவீனமாகும் என்கிறார்கள் விமர்சகர்கள். * வடகொரியாவும் மலேஷியாவும் பரஸ்பர பயணத்தடைகளை அறிவித்து ஒன்றுக்கொன்று பதிலடி; மலேஷியாவில் கொல்லப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜாங் நாமின் நண்பர் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி. * உலகை அச்சுறுத்தும் பொதுசுகாதார ஆபத்தான காற்று மாசடைதலை சமாளிக்க நேபாளம் செய்வதென்ன? செங்கற்சூளைகளுக்கான அதன் புதிய தொழில்நுட்பம் மற்ற நாடுகளுக்கும் பயன்படுமா?
-
- 0 replies
- 313 views
-
-
மலேசியா : செளதி மன்னரை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிப்பு செளதி மன்னர் சமீபத்தில் மலேசியாவிற்கு வருகை தந்திருந்த போது அவரை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முறியடித்துவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார். செளதி மன்னர் மலேசியாவிற்கு வருவதற்கு ஒரு மாதம் முன்பு தன்னுடைய படையினர் ஏமனிலிருந்து வந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் உள்பட ஏழு பேரை கைது செய்துள்ளதாக மலேசிய காவல்துறை தலைவர் ஹாலித் அபு பக்கர் தெரிவித்தார். சுமார் இரு ஆண்டுகளாக தற்போது வரை ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து செளதி தலைமையிலான கூட்டணிப்படைகள் எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன. …
-
- 0 replies
- 417 views
-
-
சுவிசில் பூமிஅதிர்வு நேற்று (06.03.2017) இரவு 21 மணி 12 நிமிடமளவில் சுவிற்சர்லாந்தின் கிளாறோஸ் பகுதியில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி தென் சுவிற்சர்லாந்து மற்றும் கிழக்கு, வடக்கு சுவிற்சர்லாந்துப் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இது றிக்றர் அளவுகோலில் 4.6 அளவில் பதிவாகியுள்ளது. எவ்வித உயிர் சேதமும் ஏற்படாதபோதிலும் பல பகுதிகளிலும் சிறு அளவிலான பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள சுவிசின் பிரபல சஞ்சிகையான பிளிக் அடுத்த பெரும் அதிர்வு எப்போ என கேள்வியை எழுப்பியுள்ளது. சுவிற்சர்லாந்தின் ஏதோ ஒரு பகுதியில் ஆண்டுதோறும் நில அதிர்வு இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை சு…
-
- 0 replies
- 583 views
-
-
'மலேசியர்கள் நாட்டை விட்டுச் செல்ல தடை!'- வட கொரியா அதிரடி வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் (Half-brother) கிம் ஜோங் நம், மலேசியாவில் கொல்லப்பட்டார். இதையடுத்து, பல்வேறு அதிரடி அறிவிப்புகளை மலேசியா மற்றும் வட கொரியா அரசுகள் வெளியிட்டன. இதையொட்டி, மலேசியர்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து உத்தரவிட்டுள்ளது வட கொரியா. மேலும், மலேசிய அரசும் வட கொரியத் தூதரக அலுவலகத்தில் வேலை செய்து வரும் அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, கிம் ஜோங் நம் கொல்லப்பட்டது தொடர்பாக மலேசிய அரசின் விசாரணையை விமர்சனம் செய்திருந்தார், மலேசியாவில் இருக்கும் வட கொரியத் தூதர். இதற்கு, மலேசிய…
-
- 0 replies
- 461 views
-
-
மீண்டுமொரு பயணத்தடை ஆணையில் டிரம்ப் கையெழுத்து பிரதானமான முஸ்லீம் நாடுகள் சிலவற்றிலிருந்து வருவோரை அமெரிக்காவுக்குள் வரவிடாமல் தடுக்கும் புதிய நிர்வாக ஆணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக அதிபரின் அலுவலகம் கூறுகிறது. இது குறித்து அவர் வெளியிட்ட முந்தைய ஆணை அமெரிக்க நீதிமன்றங்களால் தடை செய்யப்பட்டது. இந்தத் தடை ஆறு நாடுகளிலிருந்து புதிய விசா கோருவோரை பாதிக்கும். முந்தைய பட்டியலில் இடம்பெற்ற இராக், இப்போது புதிய பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது. அதன் பிரஜைகள் மீது அதிகரிக்கப்பட்ட சோதனைகளுக்கு அமெரிக்கா உடன்பட்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது. அமெரிக்காவை பய…
-
- 1 reply
- 382 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இராக்கின் மொசூல் நகரில் முற்றும் மோதல்; உயிரைப்பணயம் வைத்து வெளியேறும் அகதிகளை சமாளிக்கத் திணறும் அதிகாரிகள்; பிபிசியின் நேரடிச் செய்தி. * ஒட்டுமொத்த உலக பொது சுகாதாரத்தையும் பாதிக்கும் மோசமான அச்சுறுத்தலாக மாறியுள்ள காற்றின் மாசு; பிரிட்டனின் தடுப்பு நடவடிக்கைகள் மற்ற நாடுகளுக்கு பயன்படுமா? * சமைக்காத இறைச்சியை விரும்பிச் சாப்பிடும் எத்தியோப்பியர்கள்; ஆரோக்கியத்துக்கு ஆபத்து என்று எச்சரிக்கும் சுகாதார அதிகாரிகள்; ஒரு சுவையான செய்தித்தொகுப்பு.
-
- 0 replies
- 265 views
-
-
பாதுகாப்பான தேசம்தானா அமெரிக்கா? - சுட்டுக் கொல்லப்பட்ட பொறியாளரின் மனைவி உருக்கத்துடன் கேட்கிறார் அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலம் ஒலாத்தேவில் இந்திய இளம் பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32) கடந்த 22-ம் தேதி இனவெறித் தாக்குதலுக்கு பலியானார். ‘எங்கள் நாட்டை விட்டு ஓடிவிடுங் கள் தீவிரவாதிகளே’ என்று கத்திக்கொண்டே ஸ்ரீநிவாஸை கொடூரமாக சுட்டுக் கொன்றிருக் கிறார் அமெரிக்க முன்னாள் கடற்படை வீரர் ஆடம் புரின்டோன். சம்பவம் நடந்து 10 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், அமெரிக்காவில் இந்தியர் மீது அடுத்த தாக்குதல். தெற்கு கரோலினாவின் லேன்காஸ்டர் கவுன்ட்டியில் ஹர்னிஷ் படேல் என்ற இந்தி…
-
- 1 reply
- 334 views
-
-
நான்கு புதிய ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது வடகொரியா வட கொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் நான்கு ஏவுகணைகளை ஜப்பான் கடலில் செலுத்தியதாக அதன் அண்டை நாடுகள் தெரிவித்துள்ளன. தென் கொரியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு ஏவுகணைகள் முன்று ஏவுகணைகள் டோக்கியோவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் தரை இறங்கியது என ஜப்பானிய பிரதமர் ஷின்சு அபே தெரிவித்துள்ளார். மேலும், இது வட கொரியாவின் புதிய அச்சுறுத்தலுக்கான தெளிவான செய்முறை என அபே தெரிவித்துள்ளார். சீனாவுடனான வடக்கு எல்லையில் உள்ள தளத்திலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டன என்றும் அவை பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணம் செய்தன என்றும் தென் கொரிய ராணு…
-
- 0 replies
- 275 views
-
-
ஜெர்மன் அதிகாரிகள் நாஜி முறைகளை கடைப்பிடிப்பதாக துருக்கி அதிபர் கூறிய குற்றச்சாட்டிற்கு எதிர்ப்பு ஜெர்மனிய அதிகாரிகள் நாஜி நடைமுறைகளை கடைபிடிப்பதாக, துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் கூறிய குற்றச்சாட்டை ஜெர்மனிய அரசியல்வாதிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். எர்துவானின் அந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, ஜெர்மனியில் உள்ள துருக்கி வாக்காளர்களுக்கு மத்தியில் துருக்கி அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டுவருவதற்கான ஆதரவு திரட்டும் பிரசார பேரணிகள், பல நகரங்களில் ரத்து செய்யப்பட்டன. "எர்துவான் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வழி தெரியாமல் அடம்பிடிக்கும் குழந்தை போல்" நடந்து கொள்வதாக சான்செலர் ஏங்கலா மெர்கலின் கிறி…
-
- 0 replies
- 356 views
-
-
அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு; ஒரு வாரத்தில் இரண்டாவது இந்தியர் மீது தாக்குதல் அமெரிக்காவில் உள்ள சியாட்டில் புறநகர் பகுதியில் சீக்கிய மதத்தை சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய துப்பாக்கித்தாரியை போலீஸார் தேடி வருகின்றனர். படத்தின் காப்புரிமைJEWEL SAMAD / AFP / GETTYIMAGES இந்த தாக்குதலில் கையில் குண்டு பாய்ந்த சீக்கிய நபருக்கு 39 வயதாகிறது. அவர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. ''சொந்த நாட்டிற்கு திரும்பிச்செல்'' என்று துப்பாக்கித்தாரி அந்த சீக்கிய நபரை பார்த்து கூச்சலிட்டவாறு துப்பாக்கியால் சுட்டதாக சியாட்டல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஓலெத் துப்பாக்கிச்சூடு : …
-
- 0 replies
- 313 views
-
-
அமெரிக்காவில் மேலும் ஒரு இந்தியர் சுட்டுக் கொலை அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் வியாழன்று இரவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்னிஷ் பட்டேல் என்பவரை மர்ம நபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்தார். இந்தச் சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹர்னிஷ் பட்டேல் தெற்கு கரோலினாவில் சொந்தமாக கடை வைத்து நடத்தி வருகிறார். அவர் வியாழன்று இரவில் கடை முடிந்து வீடு திரும்பிய போது, அவரின் வீட்டு வாசலில் வைத்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹர்னிஷ் தெற்கு கரோலினா பகுதியில் அவரது சமூகத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் முக்கியமான நபராக இருந்து வந்துள்ளார். …
-
- 0 replies
- 530 views
-
-
10 இலட்சம் கார்களை திரும்ப பெறும் பென்ஸ் நிறுவனம்..! பிரிட்டனிலிருந்து முதல் கட்டமாக சுமார் 75 ஆயிரம் மெர்ஸிடிஸ்-பென்ஸ் கார்களையும், உலக நாடுகளிலிருந்து 10 இலட்சம் பென்ஸ் கார்களையும் திரும்பப் பெறுவதாக குறித்த கார் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் விற்பனையான பென்ஸ் கார்களில் சுமார் 51 வரையான கார்கள் தீ பிடித்துள்ளதாக எழுப்பப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து உலகமெங்கிலும் விற்கப்பட்ட சுமார் 10 இலட்சம் கற்களை அந்நிறுவனம் திரும்ப பெறுவதாக அறிவித்தது. மேலும் குறித்த தீ பிடிப்பு சம்பவங்களால் எவ்வித உயிர் சேதங்களும் இடம்பெறாத நிலையில், முதல் கட்டமாக 75 ஆயிரம்கற்களை பென்ஸ் நிறுவனம் திரும்ப பெறுவதற்கு முடிவு செய்துள்ளதாக அந்நிறுவன ச…
-
- 0 replies
- 360 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சீன நாடாளுமன்றத்தின் வருடாந்த கூட்டத்தையொட்டி தலைநகர் பீஜிங் வரும் பாதிக்கப்பட்ட மக்களை அச்சுறுத்தும் பாதுகாப்புப்படையினர்; நீதி கேட்டுவரும் ஆயிரக்கணக்கானவர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து பேட்டியெடுக்க முயன்ற பிபிசி செய்தியாளருக்கும் தடை. * செல்வந்த அமெரிக்காவின் அதிகம் அறியப்படாத மறுபக்கம்; அமெரிக்காவின் வறிய மக்கள் வாழும் பகுதிக்கு சென்ற பிபிசி செய்தியாளரின் நேரடி படப்பிடிப்பு. * உலகிலுள்ள மொத்த சிவப்புக்கல் இரத்தினங்களில் சுமார் சரிபாதி மொசாம்பிக் நாட்டில் இருந்தாலும் அவற்றால் அந்நாட்டின் பொருளாதாரம் பயன்பெற்றிருக்கிறதா?
-
- 0 replies
- 280 views
-
-
இந்தியப் பொறியியலாளர் இனவெறிக் கொலை; அமெரிக்காவில் அதிர்ச்சி! அமெரிக்காவின் கன்ஸாஸ் மாகாணத்தில், மதுபான விடுதியொன்றுக்குச் சென்ற இரண்டு இந்தியர்கள் மேல் அமெரிக்கர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவர் அமெரிக்காவில் பொறியியலாளராகப் பணியாற்றுகிறார். இவரும் இவரது நண்பர் ஆலோக்கும் நேற்று மேற்படி மதுபான விடுதிக்குச் சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒருவர், ஸ்ரீனிவாஸையும் நண்பரையும் திட்டத் தொடங்கினார். “இது எமது நாடு... நீ உடனடியாக வெளியேறு” என்று கூறிக்கொண்டே திடீரென தனது துப்பாக்கியை எடுத்து இருவர் மீதும் சுடத் தொடங்கினார். இதில் இருவர் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த…
-
- 3 replies
- 788 views
-
-
ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கும் அமெரிக்கர்களுக்கு விசாவை கட்டாயமாக்க முயற்சி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், விசா பெற வேண்டிய நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஆணையம், இரண்டு மாதங்களில் இந்த நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளாகிய பல்கேரியா, க்ரோஷியா, சிப்ரஸ், போலந்து மற்றும் ரூமானியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய விசா தேவை; ஆனால் அமெரிக்க குடிமக்கள் விசா இல்லாமல் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும். கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் ஆனையம் நடவடிக்கை எடுக்க வேண…
-
- 0 replies
- 316 views
-
-
36 விமானங்களில் 1500 பேருடன் சவூதி மன்னரின் ஆடம்பர சுற்றுப்பயணம்..! சவூதி அரேபிய மன்னர் சல்மான்பின் அப்துல் அஜீஸ் 50 வருடங்களுக்கு பிறகு இந்தோனேசியாவிற்கு 1500 பேர்களுடன் 36 விமானங்களின் சேவைகளுடன் ஆடம்பர சுற்று பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்தோனேசியாவிற்கு 9 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள மன்னர் சல்மான், பயன்படுத்து வதற்கு தேவையான பொருட்கள் 460 டன், 800 பிரதிநிதிகள், இரண்டு பென்ஸ் சொகுசு கார்கள் மற்றும் 572 பணியாட்கள் என அனைத்தும் 36 விமானங்கள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. மன்னரின் விஜயத்திற்கு மூன்று நாட்களுக்கு முதலில் இருந்தே அவருக்கான பொருட்கள் மற்றும் பணியாளர்கள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, தலைநகர் ஜகர்த்தாவில…
-
- 0 replies
- 439 views
-
-
ரஷ்ய தூதரை சந்திக்கவில்லை என்கிறார் டிரம்பின் அட்டார்னி ஜெனரல்; சந்தித்தார் என்கிறது நீதித்துறை "ரஷிய அதிகாரிகளிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை" என அமெரிக்க அட்டார்னி ஜெனிரல் ஜெஃப் செஷன்ஸ் உறுதியளித்த போதிலும், தேர்தலின் போது ரஷிய தூதரை அவர் சந்தித்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செனட் ஆயுத சேவை கமிட்டியில் ஜெஃப் வகித்த பதவி காரணமாக கடந்த வருடம் ஜூலை மற்றும் செப்டம்பரில் ரஷ்ய தூதர் செர்கை கிஸ்லியாக்கை சந்தித்தார் என நீதித்துறை தெரிவித்துள்ளது. "எந்த நேரத்திலும் எந்தவித தேர்தல் பிரசாரம் குறித்தும் ஆலோசிக்க ரஷிய அதிகாரிகளை சந்திக்கவில்லை" என வியாழனன்று ஜெஃப் செஷன்ஸ் தெரிவித்தார் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ…
-
- 0 replies
- 448 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு முரணாக பொய் சொன்ன குற்றச்சாட்டில் டிரம்பின் இன்னுமொரு நெருங்கிய சகா மீது குற்றச்சாட்டு; அமெரிக்காவுக்கான ரஷ்யத்தூதருடனான சந்திப்பு குறித்து இரண்டாவது முறையாக சர்ச்சை. * தொலைதூரத்தீவில் ரொஹிஞ்சா அகதிகளை குடியேற்றும் வங்கதேசத்தின் சர்ச்சைக்குரிய திட்டம்; வாழவே வசதியற்ற பிரதேசம் என்று விமர்சனம். * நிறைவான தூக்கம் நினைவாற்றலை மேம்படுத்தும் என்கிற அறிவியல் உண்மைக்கு மாறாக குறைவாகவே தூங்கும் யானைகள் மிகச்சிறந்த நினைவாற்றல் கொண்டிருப்பது எப்படி?
-
- 0 replies
- 264 views
-
-
இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் இன்னாள் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங், ‘மிஷன் ஓவர்சீஸ்: டெயாரிங் ஒப்பரேஷன்ஸ் பை த இந்தியன் மிலிட்டரி’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு வெளியே - பிற நாடுகளில் - இந்திய இராணுவம் நடத்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்த மிக முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. இந்நூலில், 1988ஆம் ஆண்டு மாலைதீவில் இந்திய இராணுவம் சார்பாக நடத்தப்பட்ட ‘காக்டஸ்’ இராணுவ நடவடிக்கை, 2000ஆம் ஆண்டு சியரா லியோனில் நடத்திய ‘குர்கி’ இராணுவ நடவடிக்கை என்பவற்றுடன், 1987ஆம் ஆண்டு இலங்கையில் ‘பவன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை குறித்தும் பல புதிய தகவல்…
-
- 0 replies
- 532 views
-