உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
என்ன நினைக்கிறது உலகம்?- என்னாகும் கிரேக்கத்தின் எதிர்காலம்? கிரேக்க நாளிதழ் கிரேக்கத்தின் தற்போதைய சூழல், பொருளாதாரப் பேரழிவைவிட மோசமான நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்று மரியாதைக்குரிய பல வரலாற்றாசிரியர்களும், அறிவுஜீவிகளும் எச்சரித்திருக்கிறார்கள். கிரேக்கம் வெளிநாடுகளின் மேற்பார்வையில் இருக்கின்ற, திவாலான ஒரு தேசம். கிரேக்கத்தின் அரசு நிறுவனங்கள் கதறிக்கொண்டிருக்கின்றன; கிரேக்க சமூகமோ விரக்தியின் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. கிரேக்கத்தின் ஒட்டுமொத்த நெருக்கடி இது. அதேசமயம், சர்வதேச அளவிலும் நிலைமை குழப்படியாகத்தான் இருக்கிறது. சமீபத்திய எந்த ஒரு வரலாற்றுக்கும் மாறாக, தற்போது ஒர…
-
- 0 replies
- 332 views
-
-
ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக பதவியேற்றார் அந்தோனியோ குத்தேரஸ் ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்றார். வாஷிங்டன்: ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறு கட்டங்களாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 13 வேட்பாளர்கள் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டனர். அவர்களில் 7 பேர் பெண்கள். இதில் இறுதி கட்டமாக 10 வேட்பாளர்கள் க…
-
- 6 replies
- 841 views
-
-
கத்தார்: வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான கடுமையான சட்டத்தை மாற்ற அரசு முடிவு கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறவும்,வேறு பணிகளுக்கு செல்லவும் அவர்கள் பணி புரியும் நிறுவனத்தின் அனுமதியை வாங்க வற்புறுத்தும் தொழிலாளர் ஆளெடுப்பு குறித்த சட்ட அமைப்பினை அந்நாடு நிறுத்த முடிவு செய்துள்ளது. 2022 கால்பந்து உலகக்கோப்பைக்காக கத்தாரில் உள்கட்டமைப்பை உருவாக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தற்போது அமலில் உள்ள ''கஃபாலா'' அமைப்புக்கு பதிலாக அதிக நெகிழ்வுத்தன்மையுள்ள மற்றும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் புதிய ஒப்பந்த அடிப்படையிலான சட்டம் கொண்டுவரப்படும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, வர…
-
- 0 replies
- 275 views
-
-
வெடிகுண்டு மிரட்டல்: 530 பேருடன் ஜெர்மனி சென்ற விமானம் நியூயார்க்கில் அவசரமாக தரையிறக்கம் அமெரிக்காவில் இருந்து ஜெர்மனி நாட்டுக்கு 530 பேருடன் சென்ற லுப்தான்ஸா விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து நியூயார்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நியூயார்க் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகர விமான நிலையத்தில் இருந்து லுப்தான்ஸா நிறுவனத்துக்கு சொந்தமான தடம்எண்: 441 என்ற விமானம் ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகருக்கு சுமார் 530 பேருடன் புறப்பட்டு சென்றது. நடுவானில் சுமார் ஆயிரம் மைல் தூரத்தை அந்த விமானம் …
-
- 1 reply
- 313 views
-
-
பிரிட்டனில் பயங்கரவாதத் தடை சட்டங்களின் கீழ் தீவிர வலதுசாரி இயக்கத்திற்கு தடை விதிப்பு ஒரு பிரிட்டீஷ் நவ நாஜீக்கள் இயக்கம் பிரிட்டனில் பயங்கரவாதத் தடை சட்டங்களின் கீழ் தடை செய்யப்படவிருக்கும் முதல் தீவிர வலதுசாரி இயக்கமாகியுள்ளது. இந்த குழுவிற்கு தடைவிதிக்க நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த குழுவில் சேருவதோ அல்லது ஆதரவு தெரிவிப்பதோ கிரிமினல் குற்றமாகும். ஐக்கிய ராஜ்ஜியத்தில் தீவிர வலதுசாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒரு நிறுவனமானது தடை செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூட், நேஷனல் ஆக்ஷன் என்ற இந்த அமைப்பு, இனவெறித் தன்மை கொண்ட்து, யூத எதிர்ப்பு சித்தாந…
-
- 0 replies
- 273 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * துருக்கியில் சனிக்கிழமையன்று கொல்லப்பட்ட நாற்பத்து நான்கு பேரின் இறுதிச் சடங்குகள் இன்று நடந்தன. இருநூறுக்கும் அதிகமான குர்து ஆதரவாளர்கள் கைது. * சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்து ஓராண்டு. ஆனாலும் அங்கு ஏதாவது மாறியுள்ளதா? * வயதான பசுக்களுக்கு ரஷ்யாவில் ஓய்வு இல்லம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார் ஒரு பெண்மணி.
-
- 0 replies
- 306 views
-
-
"ஒரே சீனா கொள்கைக்கு" அமெரிக்கா கட்டுப்படக் கூடாது என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்; அவரின் அந்த அறிக்கை சீனாவில் பெரும் எதிர்ப்பை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ஒரே சீனா கொள்கையை ஒப்புக் கொண்டால் அதற்கு மாறாக, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் ஏற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில், தைவான் அதிபர் சாய் இங்-வென்னின் தொலைப்பேசி வாழ்த்துச் செய்தியை ஒப்புக் கொள்ளும் டிரம்பின் முடிவுக்கு சீனா ராஜீய ரீதியாக கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. சீனா, தைவானை தனது நாட்டின் பிரிந்து நிற்கும் ஒரு பகுதியாகவே கர…
-
- 0 replies
- 378 views
-
-
ரஷியா உதவியதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை முட்டாள் தனமானது: டொனால்டு டிரம்ப் எனது வெற்றிக்கு ரஷியா உதவியதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பது முட்டாள் தனமானது என டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவரது இந்த வெற்றிக்கு ரஷியா உதவியதாக அமெரிக்காவின் ‘சி.ஐ.ஏ.’ உளவுத்துறை ரகசிய அறிக்…
-
- 0 replies
- 294 views
-
-
லண்டன் - ஆஸ்திரேலியா: இடைநில்லா விமானச் சேவை - குவாண்டாஸ் நிறுவனம் அறிவிப்பு பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருடன் இணைக்கும் 14,498 கிமீ தூரம் கொண்ட 17 மணிநேர இடைநில்லா விமானச் சேவையை குவாண்டாஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. லண்டன்: லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை இணைக்கும் விமான சேவையினை குவாண்டாஸ் நிறுவனம் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 14,498 கிமீ தூரத்தை கடந்து செல்லும் இடைநில்லா விமானச் சேவை நீண்ட காலமாக பல்வேறு நிறுவனங்களும் அறிவித்து பின…
-
- 8 replies
- 678 views
-
-
தமிழக அரசியலில் ஒரு பெரும் வெற்றிடம் உண்டாகியுள்ளது. ஆளுமையோ, தலைமைத்துவ கம்பீரமோ இல்லாத, கூழைக் கும்பிடு போட்டவாறே ஊழலில் திளைத்த பன்னீர் நீண்டகாலம் தாக்குப் பிடிக்கப் போவதில்லை. ஏற்கனவே முதல் கல், செங்கோட்டையனால் வீசப்பட்டு விட்டது. விரைவிலேயே, சசிகலா, செங்கோட்டையன், பன்னீர் என்று மக்கள் மத்தியில் ஜனரஞ்சக புகழ் இல்லாதோரின் உள்வீட்டூ சண்டைகள் ஒருபுறமும் மறுபுறம் பதவி ஆசை காட்டி, ஆட்சியை பிடிக்கும் நோக்கில், திமுகவின் பழுத்த நரி கருணாநிதியும் குடும்பம் நடாத்தப் போகும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் ஒருபுறமும், மோடியின் பாஜக, இலட்டு மாதிரி 39 பாராளுமன்ற அப்படியே அமத்த என்று இன்னுமொரு பக்கமாக காய் நகர்த்த, அதிமுக என்ற பேரியக்கத்தின் தொண்டர்கள் அமைதியாக ந…
-
- 18 replies
- 1.8k views
- 1 follower
-
-
இஸ்தான்புல்லில் குண்டு வெடிப்பு Istanbul Besiktas stadium hit by explosion caption The attack appears to have targeted riot police At least one explosion has been heard outside Istanbul's Besiktas sports stadium, Turkish media and witnesses say. There are reports of several people wounded, in what appears to have been an attack on riot police. Ambulances and police were seen rushing to the scene, and TV footage showed a fire burning outside the stadium. Turkey has seen a recent spate of militant attacks in major cities that have left dozens of people dead. The blast on Saturday happened two hours after a football …
-
- 2 replies
- 444 views
-
-
கோஹினூர் வைரம் -- ஆறு கட்டுக்கதைகள் உலகிலேயே விலை மதிக்க முடியாத வைரமாக கோஹினூர் வைரம் நம்பப்படும் நிலையில், "உலகின் மிகவும் பிரபலமற்ற வைரம்" என்ற தலைப்பில் வெளியான புத்தகத்திலுள்ள கோஹினூர் வைரம் பற்றிய ஆறு கட்டுக்கதைகளை உங்களுக்கு அறிய தருகின்றோம். கோஹினூர் வைரம் உலகிலுள்ள வைரங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக விளங்குகிறது. மொகலாய அரசர்கள், இரானியப் படையினர், ஆப்கன் ஆட்சியாளர்கள், பஞ்சாப் மகாராஜாக்கள் ஆகியோரின் கைகளை கடந்து வந்துள்ள கோஹினூர் வைரம், பல நூற்றாண்டுகளாக கைப்பற்றப்படுகின்ற மற்றும் சூழ்ச்சியால் அடையக்கூடிய ஒரு பொருளாக இருந்து வந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்த 105 காரட் ரத்தினக்…
-
- 0 replies
- 658 views
-
-
சிரிய போரும் மனித உரிமை மீறல்களும்! கோப்புப் படம்: ஏஎஃப்பி டிசம்பர் 10 - சர்வதேச மனித உரிமைகள் தினம் * சவுதி அரேபியாவில் நடந்த ’வாய்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்தச் சிறுமி அரேபிய மொழியில் பாடல் ஒன்றை பாடுகிறாள், சுற்றியுள்ள அனைவரும் மௌனமாகின்றனர். அந்தச் சிறுமியின் குரலும், அந்தப் பாடலின் வரியும் பல கேள்விகளை நம் முன் வைக்கிறது. இதோ அந்தப் பாடல்..... நான் இங்கு வந்திருப்பது எங்கள் திருவிழாக்களைக் கேட்டு என் நாடு என்னை போலவே மிக சிறியது எங்கள் நிலம் எரிந்து கொண்டிருக்கிறது வெடிகுண்டு சத்தத்தால் எங்கள் புறாக்கள…
-
- 1 reply
- 528 views
-
-
ஐரோப்பாவில் இனி விமானிகளுக்கு உளவியல் மதிப்பீடு சோதனை கட்டாயம் ஐரோப்பாவில் உள்ள வணிக ரீதியான விமானிகளை ஓட்டும் விமானிகள் விமான நிறுவனத்துடன் இணைந்து பறப்பதற்குமுன் கட்டாயமாக தங்களுடைய உளவியல் மதிப்பீடு சோதனையை செய்திருக்க வேண்டும் என்று இஏஎஸ்ஏ எனப்படும் ஐரோப்பிய விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, ஜெர்மன்விங்ஸ் விமானி ஒருவர் வேண்டுமென்றே விமானத்தை தரையில் மோதி பேரழிவை ஏற்படுத்தினார். இந்த சம்பவத்தில் 150 பேர் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்தே, ஐரோப்பிய விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பெரும்பாலான விமானிகள் உளவியல் மதிப்பீடு சோதனையை மேற்கொள்கின…
-
- 1 reply
- 296 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மாறி வரும் போர் முன்னரங்கில் இருந்து கிளர்ச்சிக்காரர்கள் பின்வாங்கிக்கொண்டிருக்க அலெப்போவில் போர் நிறுத்ததுக்கு மீண்டும் கோரிக்கை. * கொடிய போரின் பிடியில் சிக்கிய குழந்தைகள்.யேமன் போரின் மனிதநேய நெருக்கடியின் விளைவு. * அழிவுப் பாதையில் உலகின் உயரமான விலங்கினம். ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி.
-
- 0 replies
- 341 views
-
-
சாலமன் தீவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை ஆஸ்திரேலியா அருகில் உள்ள சாலமன் தீவுப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 8-ஆக பதிவாகியுள்ள நிலையில், அங்கு சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சாலமான்: ஆஸ்திரேலியாவுக்கு மேலே பாப்புவா தீவுக்கு அருகில் உள்ளது சாலமன் தீவு. சாலமன் தீவுப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 8-ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி சுமார் 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 8-ஆ…
-
- 0 replies
- 513 views
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிலநடுக்கம்- ரிக்டரில் 6.9-ஆக பதிவு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 6.9-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியா: அமெரிக்காவின் மேற்கு பகுதியில் பசுபிக் பெருங்கடலை ஒட்டியுள்ளது கலிபோர்னியா மாகாணாம். கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.9-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் பெர்ண்டேல் பகுதியில் இருந்து கடல் பகுதிக்கு…
-
- 0 replies
- 503 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மாறி வரும் போர் முன்னரங்கில் இருந்து கிளர்ச்சிக்காரர்கள் பின்வாங்கிக்கொண்டிருக்க அலெப்போவில் போர் நிறுத்ததுக்கு மீண்டும் கோரிக்கை. * கொடிய போரின் பிடியில் சிக்கிய குழந்தைகள்.யேமன் போரின் மனிதநேய நெருக்கடியின் விளைவு. * அழிவுப் பாதையில் உலகின் உயரமான விலங்கினம். ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி.
-
- 0 replies
- 411 views
-
-
இராக்கில் ஐ.எஸ் நிலைகள் என்று கருதி தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதலில் 63 பேர் பலி இராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் வசமுள்ள நகர் மீது நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதல் ஒன்றில் தவறுதலாக டஜன் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இராக்கில் ஐ.எஸ் நிலைகள் என்று கருதி தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதலில் 63 பேர் பலி இந்த தாக்குதலில் 63 பேர் பலியாகி இருப்பதாகவும், அதில் பாதி பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று சிரியா எல்லைக்கு அருகே உள்ள அல் கயிமிலிருந்து மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ் குழுவின் தலைமையகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கருதி ஒரு மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தவறாக முடிந்துவிட்டதாக…
-
- 0 replies
- 317 views
-
-
அகதிகள் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடு பின்பற்றப்படும் – ஜெர்மன் அதிபர் அகதிகள் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடு பின்பற்றப்படும் என ஜெர்மன் அதிபர் அன்ஜலா மோர்கல் அறிவித்துள்ளார். மோர்கலின் கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலை இலக்கு வைத்து அகதிக் கோரிக்கையாளர் விவகாரம் உள்ளிட்ட சில விடயங்களில் கடுமையான அணுகுமுறைகளை பின்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக கௌரவக் கொலை, இரட்டைக் குடியுரிமை, அகதிகளுக்கான புகலிடம் வழங்குதல், பலவந்த திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கடுமையான அணுகுமுறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் விசேட தீர்மானமொன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.மு…
-
- 0 replies
- 393 views
-
-
காலநிலை மாற்ற கொள்கையின் எதிர்ப்பாளர் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் தலைமைப் பதவிக்கு தேர்வு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளுக்கு பகிரங்கமாக எதிர்ப்புக் குரல் எழுப்பிய ஒருவரை, நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் தலைமைப் பதவிக்கு அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார். எண்ணெய் வளம் மிக்க ஓக்லஹோமா மாநிலத்தின் முதன்மை அரச வழக்கறிஞரும், புதைபடிவ எரிபொருள் துறையின் நெருங்கிய கூட்டாளியாக பார்க்கப்படும் ஸ்காட் ப்ரூயிட், காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கையில் நம்பிக்கையற்றவர் ஆவார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக ஜனநாயகக் கட்சியின் நியமனத்தை ப…
-
- 0 replies
- 266 views
-
-
ஒபாமா, ட்ரம்ப்பைவிட மோடிக்கு தான் மவுசு! டைம் இதழ் நடத்தும் இந்த ஆண்டின் சிறந்த நபரை (Person of the Year 2016) தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில், மோடி முன்னிலையில் உள்ளார். ஒபாமா, புதின், ட்ரம்ப் உள்ளிட்டோரை விட அதிக வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார் மோடி. இன்றைய நிலவரப்படி, 18% வாக்குகள் பெற்று மோடி முதல் நிலையிலும், 5% பெற்று ஒபாமா இரண்டாவது நிலையிலும் உள்ளனர். யார் இந்த ஆண்டின் சிறந்த நபர் என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும். இந்நிலையில் இன்று நிலவரப்படி, 18% வாக்குகள் பெற்று மோடி முன்னிலை வகிக்கிறார். எனவே உலகின் 2016 சிறந்த நபராக மோடி தேர்வாக வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளது. http://www.vikatan.com/news/…
-
- 1 reply
- 494 views
-
-
பாகிஸ்தானில் 47 பேருடன் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து இஸ்லாமாபாத்: 47 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்த சம்பவம் பாகிஸ்தானின் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனத்தின், PK661 என்ற பயணிகள் விமானம், இன்று மாலை வடக்கு பாகிஸ்தானின், சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் அபோதாபாத் மாவட்டத்தில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. இதனால் பரபரப்பு நிலவிய நிலையில், அம்மாவட்டத்தின், பிப்லியன் பகுதி அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.Read more at: http://tamil.oneindia.com/news/internation…
-
- 2 replies
- 402 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தை பெரும் பூகம்பம் தாக்கியதில் சுமார் நூறு பேர் கொல்லப்பட்டனர். இடிபாடுகளில் அகப்பட்டுள்ளவர்களை தேடும் பணி தொடர்கிறது. * ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரில் பெரும் கொடுமையை அனுபவிக்கும் பகுதிகளுக்கு பிபிசி குழு ரகசியமாக சென்று சேகரித்த தகவல்கள். * விமான பயண உணவுகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு பிபிசி குழு சென்று தயாரித்த செய்திக்குறிப்பு.
-
- 0 replies
- 326 views
-
-
இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் : 25 பேர் பலி இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியை இன்று அதிகாலை தாக்கிய நிலநடுக்கத்துக்கு 25 பேர் பலியாகினர். இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் பலரை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. குறித்த நிலநடுக்கமானது 6.5 அலகு ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள் வாழும் நாடான இந்தோனேசியாவில் இன்று அதிகாலை தொழுகைக்காக பலர் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலர் தங்களது வீடுகளைவிட்டு வெளியில் ஓடி, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சுனாமி தாக்கலாம் என்ற அச்சத்தில் தங்களது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல பலர் தயக்கம…
-
- 1 reply
- 511 views
-