Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ட்ரம்ப் ஆட்சியில் ஆசியா மற்றும் ஏனைய பிராந்தியங்களில் ஏற்படக் கூடிய உள்ளார்ந்த தாக்கங்கள் தொடர்பாக விளங்கிக் கொள்வதில் வெளியுறவு அரசியல் ஆய்வாளர்கள் இடர்பாடுகளை எதிர்கொண்டு ள்ளனர். ட்ரம்ப் வழக்கத்திற்கு மாறான ஜனாதிபதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது மட்டுமன்றி, இவரது தேர்தல் கருத்தியல்கள் பல ஆண்டுகளாக அமெரிக்காவின் வரலாற்றில் பின்பற்றப்படும் இருகட்சி ஒருமித்த ஆட்சிக்கும் அமெரிக்காவின் உலகத் தலைமைத்துவத்திற்கும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. ‘பூகோளமயமாக்கல் என்கின்ற தவறான எண்ணக்கருவிற்குள் அமெரிக்கா தொடர்ந்தும் சரணடைவதற்கு நாம் அனுமதியோம். நான் அமெரிக்காவின் ஜனாதிபதியான பின்னர், (பூகோள) ஒன்றுபட்ட தேசத்தைக் கட்டியெழுப்பும் யுகத்தை முடிவிற்குக் கொண்டு வருவ…

  2. பள்ளத்தில் குப்புற விழுந்த கார்! பெண் பலியான பரிதாபம்..! அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சான் ஆண்டோனியோ நகரில் சில வாரங்களாக கடுமையான மழை பெய்து வருவதால் சாலையில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. அங்குள்ள ஒரு முக்கிய சாலை ஒன்று மழை வெள்ளத்தால் பாதிப்படைந்து உடைந்ததில் 12 அடி அளவுக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியே போகும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மிக கவனமாக ஓட்டி சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக Dora Linda Nishihara (69) என்ற பெண் தன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கார் அந்த 12 அடி பள்ளத்தில் குப்புற விழுந்தது. பின்னாடியே வந்த இன்னொரு காரும் அதே பள்ளத…

  3. பொது இடத்தில் சிறுமியிடம் அத்து மீறிய பொலிசார்! பிரித்தானியா நாட்டின் Liverpool பெருநகரில் பெரிய வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில் பொலிஸ் குழுவினர் 2 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியை தரதரவென கைது செய்து இழுத்து கொண்டு செல்வது போல காட்சி உள்ளது. இந்த வீடியோ காட்சியை எடுத்து இணையத்தில் விட்டுள்ள Melissa என்னும் நபர் கூறுகையில், சம்பவம் நடந்த வணிக வளாகம் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக இயங்ககூடியதாகும். அங்கு 13லிருந்து 15 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி இருந்தனர். அப்போது அங்கு வந்த பொலிசார் அவர்கள் போதை மர…

  4. ஆளும் கட்சி தலைவராக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் தேர்வு ஜெர்மன் நாட்டின் ஆளும் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சியின் தலைவராக அதிபர் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெர்லின்: ஜெர்மனி நாட்டில் தற்போதையை அதிபராக இருப்பவர் ஏஞ்சலே மெர்கல். 62 வயது பெண்மணியான இவர் 2005-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபராக இருந்து வருகின்றார். இந்நிலையில் அடுத்த வருடம் ஜெர்மனியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே ஜெர்மனியின் அதிபராக தொடர்ந்து 4-வது முறையாக பணியாற்ற தயாராக உள்ளதாக ஏஞ்சலே மெர்கல் தெரிவித்து இருந்…

  5. புர்கா அணிவதற்கு தடை- ஜெர்மனி சட்டப்படி கருத்து முகம் முழுவதையும் மூடிக்கொள்ளும் துணியை அணிவதற்கு தடைவிதிப்பது ஜெர்மனியில் சட்டப்படி சாத்தியமாகும் என்று சான்சிலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்திருக்கிறார். சில முஸ்லிம் பெண்கள் புர்காவை அணிவதை போல, தங்களுடைய முகம் முழுவதையும் மூடி கொள்வது ஜெர்மனி கலாசாரத்தில் பெண்களுக்கு பொருத்தமானது அல்ல என்று அவருடைய கட்சியின் மாநாட்டில் பேசியபோது தெரிவித்திருக்கிறார். இந்த கொள்கை அமலானால், புர்கா அணிவதை முற்றிலுமாக தடை செய்யாமல், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற இடங்களில் மட்டும் பெண்கள் முகத்தை மூடிக் கொள்ளும் ஆடைகள் அணிவது தடைசெய்யப்படும். இத்தகையதொரு மு…

  6. தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 22ம் திகதி நீர்ச்சத்துக்கு குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருந்துவந்தார். அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் கடந்த வாரம் சாதாரண மருத்துவ அறைக்கு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கிடையில் நேற்று மாலை திடீரென முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டிர…

  7. இன்றைய நிகழ்ச்சியில், * அலெப்போவில் போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ செய்தன. அதேவேளை, அதிபர் அசாத்தின் ஆதரவு குடும்பங்கள் இருப்பிடங்களுக்கு திரும்புகின்றன. * பள்ளிக்கல்வியில் சிங்கப்பூரின் வெற்றிக்கு காரணம் என்ன? யதார்த்தமான கேள்விகளுக்கு பதில் காணும் குழந்தைகள். * காகிதத்தில் ஆடை செய்யும் காங்கோ நாட்டுக்காரர். ஆடம்பர ஆடைகளை வடிவமைக்க பெரும் செலவு ஆகாது என்பதற்கு ஒரு உதாரணம்.

  8. பொருளாதார வளர்ச்சியில் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது பிரித்தானியா. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.6 பில்லியன் பவுண்டு எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த பிரித்தானியாவில் 3.9 மில்லியன் சிறுவர்கள் ஏழ்மையில் வாழ்ந்து வருகின்றனர். பிரித்தானியாவில் ஏழ்மையை அடியோடு ஒழிக்கும் வகையில் ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் யுனிவர்சல் அடிப்படை வருமானம் என்ற திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரபல அறிஞர் அலெக்ஸ் வில்லியம்ஸ் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இதன் அடிப்படையில் ஒட்டு மொத்த பிரித்தானியர்களும் மணிக்கு 8.45 பவுண்டும், நாள் ஒன்றுக்கு சுமார் 70 பவுண்டும் ஊதியமாக பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்…

    • 8 replies
    • 912 views
  9. கானாவில் இயங்கிய போலி அமெரிக்க தூதரகம் 10 ஆண்டுகளுக்கு பின் மூடப்பட்டது கானா தலைநகரில் சுமார் பத்து ஆண்டுகளாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகத்தை அந்நாட்டு அதிகாரிகள் மூடியுள்ளனர். அக்ரா: கானாவின் தலைநகரமான அக்ராவில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது. இந்த தூதரகம் மூலம் போலியாக பல்வேறு நாடுகளுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்திருப்பதாக அம்மாநில காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கானா மற்றும் துருக்கியைச் சேர்ந்த சைபர் கிரைம் குற்றவாள…

  10. இன்றைய நிகழ்ச்சியில், * மியான்மரில் ரொஹிஞ்சாக்களின் இனப்படுகொலை குறித்து எச்சரிக்கிறார் மலேசிய பிரதமர்.ஆனால், அவரது கருத்துக்கு எதிரான விமர்சனங்களும் எழுந்துள்ளன. * இத்தாலியில் அரசியல் யாப்பை திருத்த எடுத்த முயற்சி பிரதமரின் பதவிக்கு பாதகமாகியுள்ளது. இடைத்தேர்தல் கோருகிறது எதிர்க்கட்சி. * காபூலின் தெருக்களை பாதுகாக்க உறுதிபூண்ட பெண்களுடன் பேசலாமா. பெண் போலிஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்கிறார் அவர்.

  11. இத்தாலியின் பிரதமர் பதவி விலகினார் இத்தாலியின் பிரதமர் மேட்டியோ ரென்சி இன்று பதவி விலகியுள்ளார். இத்தாலி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகவும் மற்றும் தற்போதைய அரசியலமைப்பில் மேம்பாடுகளை கொண்டுவரும் நோக்கில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்த திட்டம் தொடர்பில் நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரதமர் மேட்டியோ ரென்சி பெரும் தோல்வியடைந்ததால் இம்முடிவினை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் மேட்டியோ ரென்சி பரிந்துரைத்த மாற்றங்களில் மத்திய அரசை வலுப்படுத்தி, செனட் சபையின் பலத்தினை குறைக்கும் விதமாக அமைந்திருந்தமையால் இந்த திட்டத்திற்கு பலரும் தங்களின் எதிர்ப்பினை வெளிகாட்டியமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari…

  12. நியூஸிலாந்து பிரதமர் திடீரென பதவி விலகல் நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ திடீரென பதவி விலகியுள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த அறிவித்தலை விடுத்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/

  13. "மேக் இன் இந்தியா" திட்டத்தில் மேற்கொண்ட சிறந்த பணிக்கும், புதிய படைபாற்றலுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் புகழப்பட்ட இளம் பொறியாளர் அபிநவ் வர்மா, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 2,000 ரூபாய் போன்று போலி நோட்டுகளை அச்சிட்டதாக வியாழக்கிழமை கைது செய்யப்பட்டிருக்கிறார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 42 லட்சம் போலி 2000 ரூபாய் நோட்டுக்களுடன் அபிநவ் வர்மா அந்த மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவின் 30 சதவீத தரகு கட்டணம் பெற்று கொண்டு, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2,000 ரூபாய் போலி நோட்டுக்களை வழங்கி கொண்டிருந்த அபிநவ் வர்மா, அவருடைய சகோதரி விஷாகா வர்மாவோடும், லுதியானாவை தல…

  14. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயற்பாட்டை சீனப்பத்திரிகை ஒன்று விமர்சனம் செய்துள்ளது. சீனாவில் இருந்து வெளிவரும் Global times என்னும் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், அதற்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2000ம் ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என்றும் கடந்த 8ம் திகதி அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா முழுவதும் வாழும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர். இதற்கிடையில் இதுவரை இப்பணப் பிரச்சினையால் 40 பேருக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடியின் இந்த அறிவிப…

  15. தன்னை கேலி செய்த நிகழ்ச்சியை கடுமையாக சாடிய டிரம்ப் அமரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், நையாண்டி நிகழ்ச்சியான "சாட்டர்டே நைட் லைவ்" என்ற நிகழ்ச்சியில் அலெக் பால்ட்வின் என்ற நடிகர் தன்னை போன்று நடித்தது மிக மோசமாக இருந்தது என அந்நிகழ்ச்சியை கடுமையாக சாடியுள்ளார். அந்த நிகழ்ச்சி "பார்க்கதக்கதன்று" மற்றும் "முற்றிலும் ஒருதலை பட்சமானது" என்று டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் டிரம்ப். டிரம்ப் வெளியுறவு கொள்கைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக டிவிட்டரில் அதிக கவனம் செலுத்துவதாக சமீபத்திய நிகழ்ச்சியில் சித்தரிக்கப்பட்டது. முன்னதாக முக்கிய பிரசார நன்கொடையாளரின் வீட்டில் நடைபெற்ற "கதாநா…

  16. ஹிட்லருக்கு பயந்து ஒளித்து வைக்கப்பட்டிருந்த கார் புதையல் இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் சர்வாதிகாரி அடல்ப் ஹிட்லருக்கு பயந்து பிரான்ஸ் மக்கள் ஒளித்து வைத்திருந்த பழைமையான கார்கள் தற்போது கிடைத்துள்ளது. பாரிஸ்: இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் நாட்டுக்குள் ஹிட்லர் தலைமையிலான நாஜிப்படைகள் நுழைந்தபோது அங்கு வாழ்ந்த செல்வந்தர்கள் தங்களுடைய கார்கள் நாஜிக்களின் பார்வையில் சிக்கினால் அவற்றை பறிமுதல் செய்து விடுவார்கள் என அஞ்சியுள்ளனர். நாஜிக்களிம் கையில் சிக்காமல் இருப்பதற்காக தங்களது விலையுயர்ந்த கார்களை மத…

  17. பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு இறுதி மரியாதை க்யூபாவின் கிழக்கு நகரான சாண்டியாகோவில் நடந்த நிகழ்ச்சியில், அதிபர் ராவுல் காஸ்ட்ரோ தனது மறைந்த சகோதரர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதி மரியாதையை வழிநடத்திச் சென்றார். அந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் மற்றும் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். கடந்த வாரம் தனது 90 ஆவது வயதில் மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோவால் முன்னஎடுக்கப்பட்ட புரட்சியின் சோஷிலிச கொள்கைகளுக்கு மரியாதை வழங்கப்போவதாக ராவுல் காஸ்ட்ரோ சூளுரைத்தார் ஃபிடல் காஸ்ட்ரோவின் வேண்டுகோளுக்கு இணங்க புராதனச் சின்னங்கள் மற்றும் சாலைகளுக்கு அவரின் பெயர் சூட்டுவதை க்யூபா தடை செய்யும் எனவும் அவர் அறிவித்தார். மே…

  18. தைவானுடன் ட்ரம்ப் நெருங்குவதால் சீனா கோபமா?- அறிந்திட 5 தகவல்கள் இடது: அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் | இடது: தைவான் அதிபர் சாய் இங் வென் தைவான் அதிபர் சாய் இங் வென்னுடன், அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் பேசியது, சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அமெரிக்கா உடனான உறவில் பாதிப்பு இல்லை என சீனா கூறியுள்ளது. இது தொடர்பான 5 தகவல்கள்: * சீனாவின் ஒரு பகுதிதான் தைவான் என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. அதன்படி, தைவானுடனான தூதரக உறவை அமெரிக்க பல ஆண்டுகளுக்கு முன்பே முறித்துக் கொண்டது. அரசியல், சமூக பிரச்சினைகள் உட்பட பல்வேறு காரணங்களால் சீனாவ…

  19. அமெரிக்காவிலிருந்து பயங்கரவாதத்தை விரட்ட அனைத்தையும் செய்வேன்: டொனால்டு ட்ரம்ப் ஆவேசப் பேச்சு ஓஹியோ மாகாணத்தில் பேசும் டொனால்டு ட்ரம்ப். | படம்: ஏஎப்பி. அமெரிக்கா ஒன்று படவேண்டுமென்றால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும், இதற்காக அனைத்தையும் செய்வேன் என்று டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். மதவெறியையும், தவறான எண்ணங்களையும் ஒரு போதும் இனி அனுமதிக்க முடியாது என்றார் ட்ரம்ப். சின்சினாட்டியில் மக்கள் முன் உரையாற்றிய ட்ரம்ப் கூறியதாவது: பயங்கரவாதத்தை அமெரிக்காவிலிருந்து விரட்ட நம் அதிகாரத்தின் கீழ் உள்ள அனைத்தையும் செய்வோம். மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். இவர்கள் யார், இவ…

  20. இராக், சிரியாவில் ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டால் ஐரோப்பாவில் தாக்குதல்கள் நிகழலாம் என்று யூரோபோல் எச்சரிக்கை சிரியா மற்றும் இராக்கில் இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் குழுவினர் தோற்கடிக்கப்பட்டால் ஐரோப்பிய இலக்குகளை குறிவைத்து அந்த குழு தாக்குதல்களை முடுக்கிவிடும் என்று யூரோபோல் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காவல் முகமை எச்சரித்துள்ளது. இராக், சிரியாவில் ஐ.எஸ் தோற்கடிப்பட்டால் ஐரோப்பாவில் தாக்குதல்கள் நிகழலாம் என்று யூரோபோல் எச்சரிக்கை அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு போராளிகள் மீண்டும் ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சிப்பார்கள் என்றும், கார் குண்டு மற்றும் கடத்தல் என மத்திய கிழக்கு நாடுகளில் ப…

  21. அமெரிக்காவில் வேலையில்லா சதவிகிதம் 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தகவல் அமெரிக்காவில் வேலையில்லா சதவிகிதம் என்பது ஒன்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் 4.6 சதவிகிதத்திற்கு குறைந்துள்ளது. அமெரிக்காவில் வேலையில்லா சதவீதம் 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தகவல் இதன் காரணமாக இந்த மாதம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் சுமார் 1,78,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் ஒரு வலுவான பொருளாதாரத்தை உ…

  22. மோடி: சர்க்காரா... ரிப்பேரா? (வீடியோ) கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்று தெரிவித்து, கடந்த மாதம் 8-ம் தேதி, பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு, இந்தியாவில் எந்த சாமான்ய மக்களும் எதிரிகள் அல்ல. 60 சதவீதம் அளவுக்கு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு, குறைந்தது, அதற்கு ஈடாகவோ அல்லது சற்றுகுறைந்த விகிதத்திலோ மாற்று கரன்சிகளை அச்சடித்து, வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட பின்னர் அல்லவா இந்த அதிரடி நடவடிக்கையை பிரதமர் மேற்கொண்டிருக்க வேண்டும்? பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மற்ற துறை அமைச்சர்களுக்கே அன்றைய தின…

  23. இன்றைய நிகழ்ச்சியில், * கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறுகிறார்கள். அங்கு மக்கள் அனுபவித்த கொடுமைகள் குறித்து அவர்களிடம் பிபிசி பேசியது. * நைஜீரியாவில் பெரும்பாலும் குழந்தைகள் உட்பட ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பட்டினியால் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐநா எச்சரிக்கை. * பிபிசியின் நூறு பெண்கள் தொடரில் இன்று ஹொங்காங்கின் பிரபலம் ஒருவர் பேசுகிறார். இரண்டாயிரத்து பதினான்காம் ஆண்டு சீன எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணி போராளி அவர்.

  24. இந்தியாவில் வீட்டில் சேமித்து வைத்திருக்கும் பணம், வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பணம், வருமான வரி கட்டிய பணத்தில் தங்கம் வாங்கியிருந்தால், வரி விதிக்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட வருமான வரி சட்டம் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அளித்த விளக்கம்: புதிய வருமான வரிசட்டத்தில், நகைகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. வருமான வரி சட்டம் 1961 ன் கீழ் பழைய வரிகளே தொடரும். வருமானத்துறை சோதனையின் போது, கூடுதல் தங்கத்திற்கு 60 சதவீத வரி விதிக்கப்படும். முன்னர் 30 சதவீதமாக இருந்த வரி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய சட்டத்தின்படி திருமணமான பெண்கள் 62.5 பவுன் நகை வைத்திருக்கலாம். திருமணமாகாத ப…

  25. ஓய்வு பெற்ற தளபதியை பாதுகாப்பு செயலராக நியமித்தார் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நடைபெறுகின்ற முதலாவது பேரணியில், ஓய்வு பெற்றிருக்கும் ஜேம்ஸ் மேட்டிஸை புதிய பாதுகாப்பு செயலராக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார். இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பரந்த அளவிலாக போர்க்கள அனுபவம் பெற்றவர் 'பைத்தியக்கார நாய்' என்று அறியப்படும் முன்னாள் சிறப்புப் படை வீரரான மேட்டிஸ், தன்னுடைய போர் தந்திர சிந்தனை, கடுமையான மொழி பயன்பாடு மற்றும் இரானிடம் நம்பிக்கையின்மை ஆகிய பண்புகளால் பிரபலமானவர். இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பரந்த அளவிலாக போர்க்கள அனுபவம் பெற்றவர். தளபதி ஜார்ஜ் பேட்டனை போல செயல்படுகிற மற்றும் நம்மில் சிறந்தவர் ஜேம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.