உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26887 topics in this forum
-
இன்றைய (05-01-2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பதவி விலகும் அமெரிக்க அதிபர் ஒபாமா அதை மூட விரும்புகிறார்; ஆட்சிக்கு வரும் டொனால்ட் ட்ரம்போ அதை தொடர விரும்புகிறார். குவாண்டனமோ முகாமின் இன்றைய நிலவரம் என்ன? அதன் எதிர்காலம் என்னவாகும்? * மாதவிடாய் காலத்தில் மகளிருக்கு விடுப்பளிக்க ஜாம்பியாவில் புதுசட்டம்; அது தவறாக பயன்படுத்தப்படலாம் என்று முதலாளிகள் கவலை. * கணினி யுகத்திலும் மியன்மாரில் நீடிக்கும் தட்டச்சு இயந்திர ஆட்சி; அதை அழியவிடாமல் பாதுகாக்க தட்டச்சு பணியாளர்கள் தீவிர முயற்சி.
-
- 0 replies
- 228 views
-
-
நாட்டில் உள்ள சகலரும் உறுப்பு தானம் செய்யக்கூடிய வகையில் பிரான்சில் புதிய சட்டம் நாட்டில் உள்ள சகலரும் உறுப்பு தானம் செய்யக்கூடிய வகையில் பிரான்சில் புதிய சட்டம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டம் ஜனவரி முதலாம் முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி, ஒருவர் தன் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முடிவெடுத்திருந்தால், அவர் இறந்த பின்னர் அதனை எளிதாக செயல்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்புக்களை தானம் செய்ய விருப்பம் இல்லை என்றால், அவர்கள் அதற்குரிய படிவத்தில் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாத அனைவருமே உறுப்பு தானம் செய்பவராகவே கருதப்பட்டு இறந்தபின்னர் அவர்களின் உடல் உறுப்புகள் எடுக்கப்படும் என த…
-
- 0 replies
- 346 views
-
-
போயிங் 747-8 விமானத்தில் என்ன விசேஷம்? பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் – ரிஷியின் சர்வதேச புலனாய்வு
-
- 1 reply
- 391 views
-
-
எலிசபெத் மகாராணியைச் சுட முயன்ற அவரது அரண்மனைக் காவலருக்கு மன்னிப்பு இங்கிலாந்து மகாராணியாரை அவரது அரண்மனைக் காவலர் ஒருவரே தவறுதலாக துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் சில வருடங்களுக்கு முன் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. தூக்கம் வராத இரவுகளில் இங்கிலாந்தின் எலிசபெத் மகாராணியார் தனது பக்கிங்ஹாம் அரண்மனைத் தோட்டத்தில் உலாவருவது வழக்கம். சில வருடங்களுக்கு முன் இதேபோன்ற ஒரு தூக்கம் வராத அதிகாலைப் பொழுதில் சுமார் 3 மணியளவில் எலிசபெத் மகாராணியார் தோட்டத்தில் நடந்து சென்றுள்ளார். இருளில் ஒரு உருவம் நடந்து செல்வதைக் கண்ட ஒரு அரண்மனைக் காவலர் ஒருவர் திடுக்கிட்டார். உடனே, தன்வசமிருந்த துப்பாக்கி…
-
- 0 replies
- 434 views
-
-
விண்வெளி ஆய்வு நிலையத்துக்குச் செல்லும் முதல் கறுப்பினப் பெண் உலக வரலாற்றில் முதன்முறையாக, கறுப்பினப் பெண் ஒருவரை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்ப நாஸா திட்டமிட்டுள்ளது. நாஸாவின் விண்வெளி வீரர்களுக்கான பாடத் திட்டத்தின் 20வது வகுப்பில், கடந்த 2009ஆம் ஆண்டு சேர்த்துக்கொள்ளப்பட்டவர் ஜெனட் எப்ஸ். இவர் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையின் தொழில்நுட்ப வல்லுனராகப் பணிபுரிந்தவர். இவர் அடுத்த ஆண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு, பிரபல விண்வெளி ஆய்வாளரான அன்ட்ரூ ஃபியுஸ்டல்லின் உதவியாளராகச் செல்லவுள்ளார். “சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் ஒவ்வொருவரும் புதிதாக ஏதோவொரு விடயத்தைக் கண்டுபிடித்துவிடுகின…
-
- 0 replies
- 303 views
-
-
வெள்ளத்தில் மிதக்கும் மலேசியா : 23000 பேர் பாதிப்பு தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மலேசியாவில் இதுவரை சுமார் 23000 பேர் இடம் பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள இரண்டு மாநிலங்களில் இவ்வருடம் அதிகளவிலான மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து சுமார் 23 ஆயிரம் பேர் இதுவரை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கெலண்டன் பகுதியில் இருந்து 10,038 பேரும், அதன் அருகில் உள்ள டெரென்கனு பகுதியில் இருந்து 12,910 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு தரவுகள் தெரிவிக்க…
-
- 0 replies
- 550 views
-
-
பாலியல் தாக்குதலி்ல் ஈடுபட்டவர்களுக்கு பாடம் கற்பித்த தடகள வீராங்கனை பூனியா 2017ம் ஆண்டின் புத்தாண்டு தினத்தன்று பெங்களுருவில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் சம்பவங்கள் மிகவும் வருந்தத்தக்கதாகவும், அதே போன்று நிழகவிருந்த ஒரு சம்பவத்தை தான் தடுத்ததாகவும், இந்திய ஒலிம்பிக் வீராங்கனை கிருஷ்ணா பூனியா தெரிவித்துள்ளார். தடகள வீராங்கனை கிருஷ்ணா பூனியா ராஜஸ்தானின் சூறு மாவட்டத்தில் 2017 ஜனவரி 1ம் தேதி, ரயில்பாதை அருகில் மூன்று இளைஞர்கள் இரண்டு பதின்ம வயது பெண்களை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ய முயன்றனர். அதை கண்ட பூனியா, ''அவர்களை துரத்தி, ஒரு நபரை பிடித்து விட்டேன். பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை புகார் அளிக்கச் செய்தேன், …
-
- 1 reply
- 627 views
-
-
பெங்களூரு நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார்கள் எழுந்தன, அது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தி்ருந்தனர். இந் நிலையில், பெங்களூரு நகரில் இரவில் தனியாக நடந்து செல்லும் பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பாலியல் தாக்குதல் நடத்தும் சி்சிடிவி காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. சிலர் உதவ முன்வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. http://www.bbc.com/tamil/india-38506261
-
- 0 replies
- 534 views
-
-
நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்து: 100 பேர் காயம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது. ப்ரூக்லன் ரெயில் நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு…
-
- 0 replies
- 337 views
-
-
இன்றைய (04-01-2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * காயமுற்ற பாலஸ்தீனரை இஸ்ரேலிய இராணுவ சிப்பாய் ஆட்கொலை செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பு. இஸ்ரேலை உலுக்கிய பரபரப்பான வழக்கின் பின்னணி என்ன? * யேமென் உள்நாட்டுப்போரில் கண்ணிவெடிகளுக்கு பலியாகும் பொதுமக்களின் கண்ணீர் கதைகள். போரின் முன்னரங்கிலிருந்து பிபிசியின் பிரத்யேகச் செய்தித்தொகுப்பு. * வீடியோ கேம்கள் எப்படி உருவாகின்றன? அதில் பாத்திரமாக மாறுவது எப்படி? ஆக்ஸ்போர்டிலிருந்து பிபிசி செய்தியாளர் தரும் சுவாரஸ்யமான தகவல்கள்.
-
- 0 replies
- 485 views
-
-
இலங்கையர்கள் செலுத்திச் சென்ற கப்பல் வானுவாட்டுவில் தடுத்து வைப்பு புதிய உரிமையாளரிடம் கையளிப்பதற்காக இலங்கையர்கள் செலுத்தி வந்த கப்பல் ஒன்றை நியூஸிலாந்தின் வானுவாட்டு சுங்க அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அந்தக் கப்பலை புதிதாக ஒருவர் வாங்கியிருப்பதாகவும், அவரிடம் கையளிப்பதற்காகவே தாம் அந்தக் கப்பலைச் செலுத்தி வந்ததாகவும் இலங்கைச் சிப்பந்திகள் சுங்க அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். எனினும், குறித்த கப்பலின் முன்னாள் உரிமையாளர் யார் என்ற விபரத்தை சிப்பந்திகள் தெரிவிக்காததால் அந்தக் கப்பலை சுங்க அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். குறித்த கப்பலை ஜப்பானில் இருந்து செலுத்தி வருவதாகவும், ஜேபிஓ காவ…
-
- 0 replies
- 419 views
-
-
மக்களிடம் உண்மை பேசுமாறு சக அதிகாரிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரிட்டன் தூதர் அறைக்கூவல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான திட்டம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பமான சிந்தனைகளுக்கு சவால் விடும் வகையில் செயலாற்ற வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரிட்டனின் தூதரான இவான் ரோஜர்ஸ், தனது சக ராஜிய அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். பதவி விலகிய ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரிட்டனின் தூதரான இவான் ரோஜர்ஸ் எதிர்பாராத வகையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஒரு கடிதம் மூலம் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 3) அறிவித்த இவான் ரோஜர்ஸ் தனது சக பணியாளர்களை மக்களிடம் உண்மையை பேசுமாறும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியே…
-
- 0 replies
- 309 views
-
-
பிஜி தீவுக்கு அருகாமையில் பெரும் பூமியதிர்ச்சி; சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு பிஜி தீவுகளில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் 7.2 ரிக்டர் அளவில் பெரும் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பசுபிக் கடற்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பிஜியின் நாடி தீவில் இருந்து சுமார் 227 கிலோமீற்றர் தொலைவில், பத்து கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/15041
-
- 3 replies
- 439 views
-
-
தனது இரட்டை சகோதரனை காப்பாற்றிய 2 வயது சிறுவன்
-
- 1 reply
- 370 views
-
-
தாவூத்தின் 15 ஆயிரம் கோடி சொத்துக்களை பறிமுதல் செய்தது யு.ஏ.இ., அரசு புதுடில்லி : நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு பறிமுதல் செய்துள்ளது. நிழலுலக தாதா: மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில், 257 பேர் கொல்லப்பட்டனர்; 1,000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம், சவுதி அரேபியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் பாகிஸ்தான் அரசிடம் தஞ்சம் அடைந்தான். கராச்சி நக…
-
- 0 replies
- 437 views
-
-
விற்பனையில் சாதனை புரிந்த சர்வாதிகாரி ஹிட்லரின் சுயசரிதை புத்தகம் சர்வாதிகாரி ஹிட்லரின் சுயசரிதையை விளக்கும் மெயின் காம்ப் புத்தகம் ஜெர்மன் நாட்டில் அதிக அளவில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. பெர்லின்: உலகப்புகழ் பெற்ற ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர். முதல் உலகப் போரில் போரிட்ட இவர் 1918,ல் போர் முடிந்த பிறகு, ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். படிப்படியாக வளர்ந்து தலைமை இடத்தை பிடித்தவர், அரசை எதிர்த்து 1923,ல் திடீர் புரட்சியில் ஈடுபட்டார். புரட்சி தோல்வியில் முடிந்ததால் கைது செய்யப்பட்டார். சிறையில் இரு…
-
- 0 replies
- 476 views
-
-
இன்றைய (03-01-2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இஸ்தான்புல் தாக்குதலாளி அடையாளம் கிடைத்தது என்கின்றன துருக்கி ஊடகங்கள்; அவரைத்தேடும் பணியில் துருக்கி படையினர் தீவிரம்; * வங்கதேசத்தில் விவாகரத்துகள் அதிகரிக்க என்ன காரணம்? விவாகரத்து பெற்ற பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் சவால்கள் குறித்து பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள்; * ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியில் மீன் இருப்பு குறைவது ஏன்? பாதிக்கப்படும் கென்ய மீனவர்களுக்கு மாற்று வழி என்ன என்பதை ஆராயும் பிபிசியின் பிரத்யேக செய்தி உள்ளிட்ட பல செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 842 views
-
-
கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு சேவையை சீர்திருத்த பரிந்துரை பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு சேவைகளை சீர்திருத்தி அமைக்க ஜெர்மனி உள்துறை அமைச்சர் தாமஸ் டு மஸ்யார் பரிந்துரைத்திருக்கிறார். தற்போது ஜெர்மனியின் 16 பிராந்திய மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற உள்நாட்டு உளவு தகவல்களில், பெர்லின் மத்திய அரசு அதிக கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்று ஜெர்மனி செய்தித்தாள் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் டு மஸ்யார் தெரிவித்திருக்கிறார். மத்திய காவல் துறை ஆற்றும் பணியை விரிவாக்கவும், தஞ்சக் கோரிக்கையில் தோல்வியடைந்தோருக்கு, நடுவண் அரசால் நடத்தப்படுகின்ற புறப்பாடு …
-
- 0 replies
- 172 views
-
-
இரவு கேளிக்கையகத்தில் 39 பேரை கொன்றவர் தொடர்ந்து தலைமறைவு புத்தாண்டு இரவில் இஸ்தான்புல் இரவு கேளிக்கையகத்தில் 39 பேரை கொலை செய்த துப்பாக்கிதாரி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இஸ்தான்புல் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு வெளிநாட்டவர் உள்பட, பலரை இது தொடர்பாக காவல் துறையினர் காவலில் வைத்துள்ளனர். கிர்கிஸ்தானை சேர்ந்த 28 வயதான யாக்ஹி மஷராபோவை சந்தேக நபராக முன்னதாக சில துருக்கி ஊடகங்கள் இனம் கண்டிருந்தன. அவருடைய பாஸ்போர்ட் வடிவ புகைப்படமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. ஆனால், அதிகாரிகள் இதனை உறுதி செய்யவில்லை. மஷராபோவிடம் சுருக்கமான விசாரணை மேற்…
-
- 1 reply
- 510 views
-
-
சவுதியில் ஊதியம் கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு கிடைத்தது சிறையும் கசையடியும் கடந்த ஆண்டு தங்களுடைய ஊதியம் வழங்கப்படாதபோது, போராட்டங்கள் நடத்திய வெளிநாட்டு தொழிலாளர்கள் பலருக்கு சிறை தண்டனையும், கசையடிகளும் வழங்கப்பட்டிருப்பதாக சவுதி அரேபியாவிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கசையடி தண்டனை (கோப்புப்படம்) 45 நாட்கள் முதல் 4 மாதங்கள் வரையிலான சிறை தண்டனையை மெக்காவிலுள்ள நீதிமன்றம் ஒன்று சுமார் 50 தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளதாக சவுதிதி செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன. சிலருக்கு 300 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் சவுதி பொருளாதாரம் பாதிக்கப்பட்டபோது, பல மாதங்க…
-
- 0 replies
- 247 views
-
-
பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது ஏன்? அமைச்சரின் கருத்தால் ஆர்வலர்கள் ஆத்திரம் பெங்களூரு நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தொல்லை குறித்த விசாரணையில், கண்காணிப்பு காணொளி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பெங்களூரு பெண் காவலரிடம் அழுது கொண்டு உதவி கோரும் இளம்பெண் கட்டுக்கடங்காத ஆண்களின் கூட்டத்தால், இருட்டில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதை அழுது கொண்டும், பெண் காவல்துறையினரின் அரவணைப்பிலும் புகார் அளிக்கின்ற பெண்களின் புகைப்படங்களை நகர செய்தித்தாள் ஒன்று வெளியிட்டிருந்தது. சமூக ஊடகங்களின் அறிக்கைகளை தவிர வேறு எந்த புகார்களையும் இது தொடர்பாக காவல்துறை பெறவில்லை என…
-
- 2 replies
- 513 views
-
-
என்ன நினைக்கிறது உலகம்?- புத்தாண்டு என்ன தரும் பாலஸ்தீனத்துக்கு? கத்தார் ஊடகம் - அல்ஜசீராவில் வெளியான தலையங்கம் பாலஸ்தீனப் பிரச்சினை இந்த ஆண்டும் பரவலாகப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017 இறுதியில்கூட பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடியப்போவதில்லை. இவ்விஷயத்தில் தீர்வு காண்பதற்காக உலக நாடுகள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கப்போகின்றன. அதேசமயம், இந்த முறை வெளியுறவு தொடர்பான விஷயங் களை விட, பாலஸ்தீனத்தின் உள்விவ காரங்களே பிரதானமாகப் பேசப்பட விருக்கின்றன. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ.) தலைவரும், பாலஸ்தீன அதிபருமான மஹ்மூத் அப்பாஸ் சுட்டிக் காட்டியி…
-
- 0 replies
- 257 views
-
-
சீனாவில் இருந்து லண்டனுக்கு நேரடி ரயில் சேவை : 12 ஆயிரம் கிலோ மீற்றரை 18 நாட்களில் கடக்கும் ஐரோப்பாவுடனான தனது வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்காக, ரயில் சேவை மூலம் நேரடியாக லண்டனுக்கே பொருட்களை அனுப்பத் தொடங்கியுள்ளது சீனா. இதன்படி, பொருள் வர்த்தகத்தில் முன்னணியில் விளங்கும் சீனாவின் யிவு நகரில் இருந்து முதன்முறையாக ரயில் ஒன்று பொருட்களுடன் லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளது. சுமார் 12 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவை பதினெட்டே நாட்களில் இந்தத் ரயில் கடந்து விடும் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின்போது குறித்த ரயிலானது கஸகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் ஃப்ரான்ஸ் வழியாக லண்…
-
- 11 replies
- 759 views
-
-
போதையில் விமானத்தை ஒட்ட வந்த விமானி கைது!!!!
-
- 4 replies
- 705 views
-
-
பிரேசிலில் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் 60 பேர் உயிரிழந்துள்ளனர் பிரேசிலில் அமேசான் மாகாணத்தில் உள்ள மனாஸ் நகரில் சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட ஏற்பட்டுள்ள மோல்களில் 60 பேர்; கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் எனதகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சிறைச்சாலையில் போதை பொருள் விற்பனையாளர்கள் கைது செய்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்று திடீரென சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல், பெரும் கலவரமாக மாறியதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த சிறப்பு பாதுகாப்பு படையினர், கைதிகள்மீது தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும் ; இருதரப்பினரும் சரமாரியாக தாக்க…
-
- 2 replies
- 476 views
-