உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26883 topics in this forum
-
அகதிக் குழந்தைகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் ஜெர்மனியில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சுவர் ஜெர்மனியின் மியூனிக் நகரில் மிகப்பெரிய சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஜேர்மனியின் மியூனிக் நகரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ளுர் அகதி முகாம் ஒன்று உள்ளது. இந்த முகாமிலுள்ள 160 குழந்தைகள் தமது பிரதேசத்துக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையிலேயே இந்த சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அகதிமுகாம் குறித்த பகுதியில் வந்ததன் பின்னர் கூச்சல் அதிகரித்து விட்டதாகவும் இதனால் தமது வீடுகளின் பெறுமதி குறைந்து விட்டதாகவும் தெரிவித்து தமது வசதிக்காக சுவர் கட்டப் போவதாக நீதிமன்றில் மியூனிச் நகர மக்கள் முறையிட்டனர். …
-
- 0 replies
- 279 views
-
-
டொனால்ட் டரம்பின் வெற்றியால் வெளிநாடுகளில் குடியேற விரும்பும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - கனேடிய குடிவரவுத்துறை இணையத்தளம் திணறியது 2016-11-10 09:59:57 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வென்றதையடுத்து அமெரிக்கர்கள் பலர் வெளிநாடுகளில் குறிப்பாக, கனடாவில் குடியேறுவது குறித்து யோசித்துவருதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி குறித்து இம்மக்கள் கொண்டுள்ள அச்சமே இதற்குக் காரணம். கனடாவில் குடியேறுவது தொடர்பாக விபரங்களை இணையத்தளங்களில் தேடும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்ததாம். இந்நிலையில், இவ்வருட அமெரிக்க ஜனாதிபத் தேர்தல் பெறுபேறுகள…
-
- 0 replies
- 252 views
-
-
அமெரிக்காவில் ஜனாதிபதியாக போட்டியிடுவதென்றால் நினைத்த மாத்திரத்தில் நான் ஜனாதிபதியாக போட்டியிட போகிறேன் என்று அறிவிக்க முடியாது. நாடு முழுவதும் நான் என்ன என்ன செய்யப் போகிறேன் மற்றவர் சொல்வது சரியா பிழையா அமெரிக்க அரசியல் பொருளாதாரம் உலக அரசியல் உலக பொருளாதாரம் என்று அக்கு வேறு ஆணி வேறாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.யார் அமெரிக்காவுக்கு நல்லதைச் செய்வார்கள் யாரை போட்டியிட வைக்கலாம் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். இன்று 2016 கார்த்திகையில் நடக்கப் போகும் ஜனாதிபதி தேர்தலுக்கு யாரை தெரிவு செய்யலாம் என்ற தேர்தல் ஐயோவா என்ற மாநிலத்தில் தொடங்குகிறது.இரவு 8 மணிக்கு வாக்களிக்கும் நேரம் முடிவடைகிறது. 8 மணி ஒரு நிமிடத்திற்குள் முடிவை அறிவித்…
-
- 33 replies
- 1.9k views
-
-
2016 அமெரிக்க தேர்தல் முடிவு - டொனால்ட் டிரம்ப்பின் வாழ்க்கை குறிப்பு தேர்தலில் அதிபர் பதவிக்காகப் போட்டியிட முடிவெடுக்க நீண்ட காலத்துக்கு முன்பே, டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் மிக பிரபலமான , சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்ட கோடீஸ்வரர். ஆரம்ப கட்டங்களில் அவர் வெல்வது அபூர்வம் என்று கருதப்பட்டது. ஆனால் இப்போது அவர்தான் அடுத்த அமெரிக்க அதிபர். குடிவரவுப் பிரச்சனையில் அவருடைய சர்ச்சைக்குரிய நிலைப்பாடு மற்றும் சினத்தைத் தூண்டிய பிரசார பாணி ஆகியவை மட்டுமல்லாது, அவரது கடந்த கால பிரபல்யமும் அவர் குறித்த அவநம்பிக்கை உருவாவதற்குக் காரணமாக அமைந்தது. ஆனால் , குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தேர்தலில் மூத்த குடியரசுக் கட்சி வேட்பாளர்களையெல்லாம் ஓரங்கட்டி…
-
- 2 replies
- 592 views
-
-
மன வேதனையை ஏற்படுத்தியுள்ள தோல்விக்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் : சற்றுமுன்னர் ஹிலாரி உருக்கம் (காணொளி இணைப்பு) தேர்தல் தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை. மனவேதனையை ஏற்படுத்தியுள்ள இந்த தோல்விக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என ஹிலாரி கிளின்டன் சற்றுமுன்னர் உருக்கமாக தெரிவித்தார். தேர்தலில் தோல்வியை தழுவிய கிளின்டன், நியூயோர்க் நகரில் சற்றுமுன்னர் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு தனது வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன். டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி என்பதை நீங்கள் அனைவரும் திறந்த மனதுடன் ஏற்றக் கொள்ள வேண்டும் …
-
- 0 replies
- 465 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * ஹிலரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப். * பெரு வர்த்தகர், கோடீஸ்வரர் தற்போது அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபர்; இந்த இடத்துக்கு டொனால்ட் ட்ரம்ப் எப்படி வந்தார்? ஆராய்கிறது பிபிசி * டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறக்கூடும்?
-
- 0 replies
- 289 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்த குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலரியை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றிருக்கிறார். எதிர்பாராத திருப்பமாக ஒஹியோ, ஃப்ளோரிடா, வடக்கு கரோலினா, ஐயோவா உள்ளிட்ட மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றதுதான் அவரது முக்கிய வெற்றிக்கு அடிகோலி இருக்கிறது. 2004-க்கு பிறகு குடியரசுக் கட்சியின் வேட்பாளர் இத்தகைய வெற்றியைப் பெற்றிருப்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். ட்ரம்ப் அதிபராக இருக்கும் நிலையில், பொருளாதாரத்தில் வல்லரசாக விளங்கும் அமெரிக்கா என்னவாகும்? அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக ட்ரம்ப் செய்துள்ள செலவுகளின்படி, அவரது தனிநபர் மதிப்பீடு நிச்சய…
-
- 0 replies
- 495 views
-
-
ஒரு பெண்ணை அதிபராக்க ஏன் தயங்குகிறது அமெரிக்கா? அமெரிக்க தேர்தல் முடிவுகளை உலகமே மிகுந்த ஆவலோடு கவனித்தது. குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலரி கிளின்டன் இருவரும் போட்டியில் இருந்தனர். அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் அதிபராவார் என்று கருத்துக் கணிப்புகள் பலவும் தெரிவித்து வந்தன. இது உலகம் முழுக்கவே பெரும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. காரணம்... பெண்கள் சுதந்திரமாக பல பணிகளில் ஈடுபடுவது, பல துறைகளில் ஆண்களுக்கு நிகராக போட்டிப் போடுவது என்று பலவற்றிலும் அமெரிக்கா முன்னோடியாக இருந்தாலும்... ஒரு பெண் அந்நாட்டின் அதிபராக முடியாத சூழலே நிலவி வந்ததுதான். இத்தகைய சூழலில்தான், உலகம் முழுவதும் நன்கு பரிட்சயமா…
-
- 3 replies
- 572 views
-
-
அனைத்து எதிர்பார்ப்புக்களையும் கணிப்புக்களையும் மீறி, வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப். அதற்கான முக்கிய காரணங்கள்: விளம்பரம் டிரம்பின் வெள்ளை அலை முடிவுகள் தலைகீழாக மாறின. ஒஹியோ, ஃபுளோரிடா, வட கரோலினா ஆகிய அனைத்தும் டிரம்புக்கு ஆதரவாக மாறின. அதுதான், ஹிலரி கிளிண்டனின் பாதுகாப்பு அரணைத் தகர்த்தெறிந்தது. மத்திய மேற்கு பிராந்தியம் ஹிலரிக்கு பெருமளவில் கை கொடுக்கும் என்று நம்பினார்கள். பல பதிற்றாண்டுகளாக அந்தப் பிராந்தியம், ஜனநாயக் கட்சிக்கு ஆதரவாகவே இருந்தன. கறுப்பினத்தவர் மற்றும் வெள்ளையின உழைக்கும் வர்க்கம் அவர்கள் பக்கம் இருந்தது. அந்த வெள்ளையின உழைக்கும் வர்க்கம், குறிப்பாக கல்லூரிப் படிப்பு இல்லாத ஆண்களும் பெண்களும், இந்த முறை …
-
- 2 replies
- 652 views
-
-
“நான் மிகவும் பெருமையடைகிறேன்” பேஸ்புக்கில் பதிவிட்ட ஹிலாரி.! அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இந்நிலையில், ஹிலாரி கிளிண்டன் தனது பேஸ்புக் பக்கத்தில் “இந்த குழுவை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன். இன்று இரவு எது நடந்தாலும் எனக்காக செயற்பட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்” என ஒரு பதிவை இட்டுள்ளார். http://www.virakesari.lk/article/13335
-
- 1 reply
- 432 views
-
-
அனைத்து அமெரிக்கர்களுக்கும் நானே ஜனாதிபதி : ஹிலாரிக்கும் நன்றி தெரிவிப்பு : வெற்றியின் பின்னர் டொனால்ட் அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஜனாதிபதியாக எனது சேவையை வழங்குவேன். இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக போராடிய ஹிலாரி கிளிண்டன் வேற்றுமைகளை மறந்து எம்மோடு கைகோர்க்க வேண்டும். நாட்டுக்காக பல சேவைகளை செய்துள்ள அவருக்கு என வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து, அமெரிக்காவின் 45 ஆவது புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் , தனது ஆதரவாளர்களிடையே ஆற்றிய வெற்றி உரையில் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் தனது ஆதரவாளர்களிடையே…
-
- 1 reply
- 284 views
-
-
#Election2016 - ஹிலரி கிளின்டனைத் தேர்ந்தெடுத்தது 12 பேர் கொண்ட அமெரிக்க டவுன் அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷையர் மாகாணத்தின் கீழ் வரும் டிக்ஸவில் நாட்ச் கிராமத்தில் 12 பேர்தான் உள்ளனர். எப்போது அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கெடுப்பை நள்ளிரவிலேயே நடத்தி முடிவை அறிவிக்கும் கிராமம் இது. இந்த முறை 12 பேரில் எட்டு பேர் வாக்களிக்க, நான்கு ஓட்டுகளுடன் ஹிலரி முதலிடத்திலும், இரண்டு ஓட்டுகளுடன் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது இடத்திலும், ஒரு ஓட்டுடன் கேரி ஜான்ஸன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். எப்போதும் இக்கிராமத்தில் அதிக ஓட்டுகளைப் பெறுபவர் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2000, 2004, 2008 தேர்தல்களில் அப்படித்தான் நடந்தது. இம்முறை ஹிலரி தேர்வா…
-
- 17 replies
- 1.7k views
-
-
சோகத்தில் ஹிலாரி கட்சி ஆதரவாளர்கள். | படம்: ஏஎஃப்பி அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிருப்தி அடைந்த அமெரிக்கர்கள் பலர் கனடாவுக்கு குடிபெயர்வதை பரிசீலித்து வருகின்றனர். அதிபர் தேர்தலில் கருத்துக் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி ட்ரம்ப் முன்னிலை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இந்நிலையில், அமெரிக்க பங்குச்சந்தை சரிவு கண்டுள்ளது. நியூயார்க் பங்குச்சந்தையின் டோ பீச்சர்ஸ் 450 புள்ளிகள் சரிந்தது. அமெரிக்க பங்குச்சந்தை மட்டுமல்லாமல் இந்திய பங்குச்சந்தை, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு ஆசிய பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டது. கனடாவுக்கு இடம்பெயர ஆர்வம் காட்டும் அமெரிக்கர்கள்: இதற்கிடையில், ட்ரம்ப் வெற்றி வாய்ப்பு நெருங்க ஆரம்…
-
- 0 replies
- 685 views
-
-
ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைச் செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராகி உள்ளார் என்று ஏபி செய்தி முகமை தகவல்கள் தெரிவித்துள்ளன. வெற்றி பெற்றார் டொனால்ட் டிரம்ப் பல மாதங்களாக நடந்த பிரச்சாரத்தில் ஹிலரிக்கு ஆதரவாக தென்பட்ட பல முக்கிய ஊசல் நிலை மாநிலங்களில் பலவற்றை வென்றதன் மூலம் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதியானது. ஃபுளோரிடா, ஒஹையோ, வடக்கு கரோலினா போன்ற கடும் போட்டி இருந்த மாநிலங்களில் பெற்ற வெற்றி டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியை சாத்தியமாக்கியது. டிரம்பின் வெற்றி குறித்து மேலும் படிக்க: வெற்றிக்கு மிக அருகில் டொனால்ட் டிரம்ப் http://www.bbc.c…
-
- 0 replies
- 357 views
-
-
‘கருப்புப் பணத்தை ஒழிப்போம்’ என்ற வாக்குறுதியை வழங்காத ஒரு கட்சி நிச்சயம் இந்தியாவில் இருக்காது. ஒரு மேடையிலாவது இந்த கோஷத்தை முழங்காத ஒரு இந்திய அரசியல்வாதி இருக்கமாட்டார். ஆனால், நாடு விடுதலை அடைந்த 1947-ல் இருந்து, ஒவ்வொரு நாளும், இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு அரசியல் கட்சியின் பிரசங்கி, கருப்புப் பணம் மீட்பு பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார். ஏழை இந்தியக் குடியானவன் தன் வாழ்நாள் முழுவதும் இந்தக் கோஷத்தை ஏதோ ஒரு இடத்தில் கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஆனால், அதற்கான ஆக்கப்பூர்வ முயற்சிகள் இந்திய மசாலா சினிமாக்களைத் தவிர வேறு எங்கும் எதிலும் எப்போதும் நடந்ததே இல்லை. காலம்காலமாக இப்படி ஒலித்துக் கொண்டிருந்த கோஷத்தை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி. கொஞ்சம…
-
- 0 replies
- 521 views
-
-
இன்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று இந்த முடிவை எடுத்திருப்பது ஏன், இதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்று சென்னைப் பல்கலைக் கழக பொருளாதார பேராசிரியர் இராம சீனுவாசன் அவர்களிடம் கேட்டோம். கருப்பு பண முதலைகளுக்கு ஆப்பு ! “இது உண்மையில் வரவேற்கத்தக்கது தான். இதன் மூலம் கருப்புப் பணமும், கள்ள நோட்டுகளும் குறைக்கப்படும். பொதுவாக கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கும், கள்ள நோட்டுகள் அடிப்பவர்களுக்கும் 500, 1000 ரூபாய் தாள்கள் தான் வைத்திருப்பார்கள். அதே போல் தீவ…
-
- 2 replies
- 653 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * ஆரம்பமானது அமெரிக்கத் தேர்தல்; இந்த தேர்தலில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள் என்ன? எந்தெந்த மாநிலங்கள் முடிவை நிர்ணயிக்கும்? பிபிசியின் பிரத்யேக கண்ணோட்டம். * அமெரிக்கத் தேர்தலில் யார் வென்றாலும் ஐ எஸ் அமைப்புக்கு எதிரான போரே அவர்களின் முக்கிய சவலாக இருக்குமா? இராக்கில் நடக்கும் ஐ எஸ் எதிர்ப்புப் போரின் இன்றைய நிலவரம் குறித்த நேரடித்தகவல்கள். * உலகம் சுற்றும் எண்பத்தோரு வயது ஓவியக்கலைஞர்; தென் ஆப்ரிக்காவின் இறகு ஓவியக்கலைஞர் எஸ்தர் மஹ்லாங்குவுடன் சுவாரஸ்யமானதொரு சந்திப்பு.
-
- 0 replies
- 305 views
-
-
இன்று உலகின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் முதலாளிகளில் ஒருவராக அறியப்படுபவர் ட்ரம்ப் அமெரிக்காவின் பழம்பெரும் கட்சி குடியரசுக் கட்சி. அது Grand Old Party (GOP) என்றே அழைக்கப்படுகிறது. நமது காங்கிரஸ் கட்சியைப் போல மாபெரும் தலைவர்கள் வளர்த்த கட்சி. ஆபிரகாம் லிங்கனின் கட்சி. ஐசனோவரின் கட்சி. சோவியத் அரசை வீழ்த்தியவர்களில் முன்னணியில் நின்ற ரொனால்ட் ரீகனின் கட்சி. ட்ரம்பை எப்படி இந்தக் கட்சி தேர்ந்தெடுத்தது? அமெரிக்க அதிபர் பதவிக்கு ஆசைப்படுபவர்களுக்கு நான்கு விஷயங்களில் கொஞ்சமாவது புரிதல் இருக்க வேண்டும்: சட்டங்கள் எவ்வாறு கொண்டுவரப்படுகின்றன, ராணுவம் எப்படிச் செயல்படுகிறது, அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகள் எத்தகையவை, மைய அரசு எவ்வ…
-
- 0 replies
- 486 views
-
-
நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். இது பற்றி தொழிலதிபர்களிடம் கருத்து கேட்டப்போது, கவின்கேர் சி.கே.ரங்கநாதன்: இது ஒரு கிரேட் மூவ். இதை வரவேற்கிறேன். ஒரே இரவில் இதன் மூலம் கருப்புப் ப்ணம் ஒழிந்துவிடும்! தீவிரவாதிகள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது போல, கறுப்புப் பண பேர்வழிகள் மீது இந்த தாக்குதலை தொடுத்திருக்கிரார்கள்'' கொடிசீயா இளங்கோ: ''எதிர்காலத்துக்கு மிகவும் தேவையான நடவடிக்கை இது. இதை உறுதியாக அமல்படுத்த வேண்டும். அப்போது…
-
- 0 replies
- 354 views
-
-
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இருமுறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மோதலில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியருகே உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் இந்தியப் படையினரும் மேற்ற்கொண்டு வரும் நிலையில் இருதரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுத…
-
- 0 replies
- 185 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று ஆரம்பம் அமெரிக்காவின் 58ஆவது ஜனாதிபதி தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. இந்தத் தேர்தலில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்குமிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஹிலாரி கிளின்டன் இராஜாங்கச் செயலாளராக கடமையாற்றிய போது தனது உத்தியோகபூர்வ தகவல் பரிமாற்றத்துக்கு தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தியது தொடர்பான விசாரணை அண்மையில் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்தமை மேற்படி தேர்தலில் அவருக்கு பாதகமான பெறுபேற்றைத் தரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்…
-
- 1 reply
- 573 views
-
-
மகாத்மா காந்தியின்... பேரன், கனுபாய் காந்தி காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி(87) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி. இவர்தான் உப்பு சத்தியாகிரகத்தின்போது காந்தியின் தடியை பிடித்துக்கொண்டு முன்னால் சென்ற சிறுவன். இது வரலாற்றில் பதிவான புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது. பின்னர் அமெரிக்கா சென்று படித்தார். அங்கேயே அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றினார். ஓய்வுக பெற்றதற்கு பின்னர் தன்னுடைய மனைவி சிவலட்சுமியுடன் கடந்த 2014ம் ஆண்டு இந்தியா திரும்பினார். இங்கு வந்த பின்னர் இருவரும் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்தனர். இந்த நிலையில் உடல் நலம் …
-
- 0 replies
- 369 views
-
-
அமெரிக்கா தேர்தல் 2016: டிரம்ப் வெற்றிக்கு மும்பையில் சிறப்பு யாகம்.. ஹிலாரிக்காக இலங்கையில் வழிபாடு.மும்பை: உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர், துணை அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று அமெரிக்காவில் நடைபெறுகிறது. ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். வெற்றிகாக வாக்காளர்களை கவர இருவரும் போட்டி போட்டு பிரச்சாரம் செய்துள்ளனர். ஹிலாரியே இப்போது முன்னணியில் இருக்கிறார் என்றாலும் யாரை அதிபர் பதவியில் அமரவைப்பது என்பது அமெரிக்க வாக்காளர்களின் கைகளில் இருக்கிறது. குடியரசுக்கட்சி வேட்பாளரான டிரம்பின் சின்னம் யானை. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரியின் சின்னம் கழுதை. இந்த தேர்தலில் யானையா?…
-
- 0 replies
- 362 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மின்னஞ்சல் விவகாரத்தில் ஹிலரி மீது குற்றமில்லையென எஃப்பிஐ அறிவிப்பு; ஒட்டுமொத்த அமெரிக்க கட்டமைப்பும் ஹிலரியை பாதுகாப்பதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு. * நாட்டின் சிறுபான்மையினரை பாதுகாக்க மியன்மார் அரசு தேவையான அளவு முயல்கிறதா? மியன்மாரின் ரோஹிங்ஞா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவம் வன்முறை நிகழ்த்துவதாக கூறப்படும் கிராமங்களில் பிபிசியின் பிரத்யேக படப்பிடிப்பு. * சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் மரபணு பாதிப்பு குறித்த விரிவான ஆய்வின் முடிவுகள் தரும் அதிர்ச்சித்தகவல்கள்; இவை மாற்ற முடியாத நிரந்தர பாதிப்புக்கள் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
-
- 0 replies
- 339 views
-
-
“நீங்கள் எங்களின் மிகப் பெரிய நண்பர்” தெராசா மேயிடம் மோடி தெரிவிப்பு: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர இன்று அவரை சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் இந்தியா-இங்கிலாந்து தொழில்நுட்ப மாநாட்டை தெரசா மே ஆரம்பித்து வைத்துள்ளார். அந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார். தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய பிரிட்டன் பிரதமர் தெரசா மே, இந்திய முதலீடுகள் காரணமாக பிரிட்டன் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாகவும், இந்தியா – பிரிட்டன் இடையே சிறந்த நட்புறவு உள்ளது எனவும் தெரிவித்தார். தொழில் நுட்ப மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, அறிவியல் என்பது உலகளாவிய…
-
- 0 replies
- 495 views
-