Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரிட்டிஷ் ஏர் வேஸ் கணினி அமைப்பில் கோளாறு: ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி பிரிட்டிஷ் எயர் வேஸ் விமான சேவையின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் பல மணி நேர தாமத்த்தை எதிர் கொள்ள நேரிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனின் ஹித்ரோ கற்விக் விமான நிலையங்கள் உட்பட நெதர்லாந்தின் அமெஸ்ரடாம் எடின்பேர்க் கனடாவின் ரொறொன்ரோ ஜேர்மனியின் பெர்லின் மற்றும் வியன்னா ரோம் உட்பட 20 க்கும் அதிகமான விமான நிலையங்களில் பயணிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயணிகளின் விமான பயணச்சீட்டுகளை சரிபார்க்க முடியாது விமான சேவையின் கணினி கட்டமைப்பு கோளாறுக்குள்ளாகியதை தொடர்ந்து விமான பயணங்களும் நீண்ட நேரம் …

  2. இன்றைய நிகழ்ச்சியில், * அமெரிக்க அதிபர் குறித்த கருத்துக்காக வருந்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரினார் ரொட்ரிகோ துதர்த்தே; எல்லா சந்திப்புகளும் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்கிறார் அதிபர் ஒபாமா. * மூளைக்குள் நுழையும் நகரங்களின் வாகன மாசு; மூளையைத்தாக்கும் அல்சைமர் நோய்க்கான காரணியாக இது அமையலாம் என்கிறது புதிய ஆய்வு. * வைரங்களின் வாழ்வும் நிரந்தரமல்ல; தன் வைரச்சுரங்க வருமானத்தைக் காக்கப்போராடும் போட்ஸ்வானாவின் கதை.

  3. ஆண் பாலியல் தொழிலாளர்களுக்கு பணம் கொடுத்ததாக பிரிட்டனின் பிரபல எம்.பி. கீத் வாஸ் மீது குற்றச்சாட்டு 2016-09-06 14:58:49 பிரிட்டனின் பிரபல நாடாளுமன்ற உறுப்பினரான கீத் வாஸ், ஆண் பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்புகொண்டமை தொடர்பாக சர்ச்சையில் சிக்கி யுள்ளார். கீத் வாஸ் ஆண் விபசாரிகளுக்கு கீத் வாஸ் பணம் கொடுத்தார் என பிரிட்டனின் சண்டே மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 59 வயதான கீத் வாஸ், பிரித்தா னிய நாடாளுமன்றத்தில் மிக நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் ஆசிய வம்சா வளி நாடாளுமன்ற உறுப்பினராவார். இவரின் பெற்றோர் இந்தியாவின் கோவாவை சேர்ந்தவர்கள். 1956 ஆம் ஆண்டு யேமனின் ஏடன் நகரில் கீ…

  4. ‘என்னைக் கேள்வி கேட்க ஒபாமா யார்?’ : சர்ச்சைப் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த பிலிப்பைன்ஸ் அதிபர் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ. | கோப்புப் படம். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், ஒபாமா குறித்து தான் தெரிவித்த கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், போதை மருந்து வலைப்பின்னலை அழிப்பதாக சபதம் மேற்கொண்டு கடுமையான நடவடிக்கைகளில் சில ஜனநாயக முறைகளற்ற விதத்தில் சட்டவிரோத கொலைகள், என்கவுண்டர்களுக்கு உத்தரவிட்டவர். இது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியது. கடந்த ஜூன் 30-ம் தேதி ரோட்ரிகோ அதிபராக பதவியேற்றது முதல் சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். …

  5. உலகில் எழுத்தறிவற்றோரின் தொகை ஒரு பில்லியன்.! செப்­ெடம்பர் 08 ஆம் திக­தியை சர்­வ­தேச எழுத்­த­றிவு தின­மாக அனுஷ்­டிக்க வேண்­டு­மென 1965 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆறாம் திகதி “யுனெஸ்கோ” பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது. முத­லா­வது எழுத்­த­றிவு தினம் 1966 ஆம் ஆண்டு அனுஷ்­டிக்­கப்­பட்­டது. எழுத்­த­றிவு தினத்தின் அரை­நூற்­றாண்டு நிறைவை இவ்­வாண்டு (2016) எழுத்­த­றிவு தினம் குறிக்­கின்­றது. தனி மனி­தர்­க­ளுக்கும் சமூ­கங்­க­ளுக்கும் எழுத்­த­றிவின் முக்­கி­யத்­துவம் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது தான் இத்­தி­னத்தின் நோக்கம். உலக நாடு­களின் கல்வி அமைச்­சர்கள் கலந்து கொள்ளும் இவ்­வாண்­டுக்­கான பிர­தான நிக…

  6. அமெரிக்க தேர்தல் வெற்றி வாய்ப்பு கருத்துக்கணிப்பில் ஹில்லறியை முந்தும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி வாய்ப்புக்கான கருத்துக்கணிப்பில் முதல் தடவையாக குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகிக்கத் தொடங்கியிருக்கிறார். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடக்கம் பிரகாசமான வெற்றி வாய்ப்போடு அனைத்து கருத்துகணிப்புகளிலும் முன்னிலை வகித்த ஹில்லறி கிளின்ரன் தற்போது பின்னடைவை எதிர்கொள்வதாக சில கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகை அவதானிப்பு அறிக்கையாளர்கள் (White House Watch Report) கடந்த வாரம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் 40 வீதமானவர்களின் ஆதரவோடு டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகிப்பதாகவு…

  7. இன்றைய நிகழ்ச்சியில், * இஸ்லாமிய அரசு என்று அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியில் இருக்கும் நூற்றுக்கணக்கான யசிடி குழந்தைகளுக்கு குண்டு தயாரிக்கும் பயிற்சி; அவர்களிடமிருந்து தப்பி வந்த சிறுமி,, பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி. * சீனாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் கருத்தொற்றுமை சாத்தியமா? மோசமான பொருளாதாரம், பயங்கரவாத அச்சுறுத்தல், அகதிகள் பிரச்சனை, வர்த்தக உறவு சிக்கல்கள் தீர்க்கப்படுமா? * பிறக்கும்போதே அகதியாக பிறக்கும் அவலம்; சர்வதேச முகாம்களே வீடுகளாக வாழும் ஆயிரக்கணக்கான சிரியாவின் போர்க்கால குழந்தைகள்.

  8. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்த திட்ட வரைவு அடுத்த வாரம் வெளியிடப்படும் பிரித்தானியா. ஐரோப்பிய ஒன்றியத்திருந்து விலகுவதற்கான திட்டவரைபையும் அதனைத் தொடர்ந்து ஒன்றியத்துடனான உறவை பிரித்தானியா எவ்வாறு பேணும் என்கிற விபரங்களையும் தமது அரசு அடுத்த வாரம் வெளியிடும் என்று பிரித்தானிய பிரதமர திரேசா மே தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மக்களின் குடியேற்றம் வதிவிட உரிமை மற்றும் வர்த்தகம் தொடர்பான புதிய விதிகளை தயாரித்து வருவதாகவும் ஒன்றியத்திலிருந்து விலகும் விவகாரங்களுக்கான அமைச்சர் டேவிட் டேவிஸ் வெளியிடுவார் என்றும் திரேசா மே கூறினார். பிரித்தானியாவில் குடியேறுவதற்கு புள்ளிகளின் அடிப்படையில் அன…

  9. ஐ எஸ் அமைப்பால் குண்டு தயாரிக்க பயிற்றுவிக்கப்படும் குழந்தைகள் யாசிடி பிரதேசங்களை இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு கைப்பற்றியபின், யாசிடி மக்கள் பலவிதமான கொடூரங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான யாசிடி ஆண்கள் வெட்டிக்கொல்லப்பட்டனர். யாசிடி பெண்கள் கடத்தப்பட்டு பலவந்தமாக அடிமைகளாக்கப்பட்டனர். யாசிடி குழந்தைகள் பிடிக்கப்பட்டு கடும்போக்கு மதப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் பிடியில் இருக்கும் நூற்றுக்கணக்கான யாசிடி குழந்தைகளுக்கு பலவந்தமாக குண்டு தயாரிக்கும் பயிற்சியளிக்கப்படுவதாக அவர்களிடமிருந்து தப்பி வந்த சிறுமி பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவ…

  10. ஆசிய குடியேறிகள் மீதான தாக்குதல்: பாரிஸில் சீன மக்கள் போராட்டம் ஆசிய குடியேறிகள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் நகரில் நூற்றுக்கணக்கான சீன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறந்த போலிஸ் பாதுகாப்பு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த போராட்டக்காரர்கள், ''அனைவருக்கும் பாதுகாப்பு'' என்ற வாசகம் அடங்கிய டி ஷர்ட்டுகளை அணிந்திருந்தனர். கடந்த மாதம் ஸாங் சோலின் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த போராட்டம் அதிகரித்துள்ளது. மூன்று திருடர்கள் அவரை தாக்கியதை தொடர்ந்து சோலின் உயிரிழந்தார். கடந்த காலங்களைக் காட்டிலும், ஆசிய வம்சாவளியை சேர்ந்தவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையானது அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். …

  11. மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் 2016-09-04 20:39:41 மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதல் காரணமாக தலையில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத் தாக்குதலில் மலேஷியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் மற்றொரு சிரேஷ்ட அதிகாரியும் காயமடைந்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவு…

    • 19 replies
    • 1.4k views
  12. இது எங்கள் நாடு; ஒபாமா வந்த போது கத்திய சீன அதிகாரி பீஜிங்: ஜி20 மாநாட்டிற்காக ஒபாமா சீனா வந்திறங்கிய போது, அமெரிக்க அதிகாரிகளிடம் இது எங்கள் நாடு என சீன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் ஜி20 மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து அந்த நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க வந்த ஒபாமாவை, அந்நாட்டி…

  13. ஒபாமா சீனாவில் இறங்கியபோது ஏற்பட்ட நெறிமுறை சிக்கல்களால் சர்ச்சை ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகை நெறிமுறை சிக்கல்களை சந்தித்திருப்பது, அமெரிக்க ஊகடங்களில் எதிர்மறை கருத்துக்களை தூண்டியுள்ளது. வழக்காமாக வரக்கூடிய சுழலும் படிகள் மூலம் சிவப்பு கம்பள விரிப்பில் வந்தடையும் வழியில் அதிபர் ஒபாமா விமானத்தைவிட்டு கீழிறங்கவில்லை. ஆனால், விமானத்தின் நடுவில் கீழ் பகுதி வழியில் இருக்கும் வாயில் மூலம் கீழே இறங்கினார். செய்தியாளர்கள் அவரை நெருங்கி அணுகுவது சீன பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்டது. ஒபாமா, சீன அதிபர் ஷி ஜீன்பிங்கை சந்தித்த இடத்திற்கு நெருங்கி செல்வதற்கு அமெரிக்காவின் ரகசிய உளவு சேவை நிறுவனப் பணிய…

  14. பிரம்மாண்ட விழாவில் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப் வாடிகனில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கன்னிகாஸ்த்ரீ ஒருவர் அன்னை தெரசாவின் புகைப்படத்தைத் தூக்கிப் பிடித்துச் செல்லும் காட்சி. | படம்: ஏ.பி. அன்னை தெரசாவுக்கு இன்று வாடிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. போப் பிரான் சிஸ் முறைப்படி அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதை முன்னிட்டு ரோம் நகரில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இந்த விழாவில் 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், உலகம் முழுவதிலிருந்தும் பேராயர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல…

  15. ஜெர்மனி: மெர்கலின் பலத்தை சோதிக்கும் பிராந்திய தேர்தலில் இன்று வாக்கெடுப்பு ஜெர்மனியின் வடகிழக்கு மாநிலமான மெக்லென்பர்க் மேற்கு போமெரானியாவின் (அல்லது மெக்லென்பர்க் வோர்போமேர்ன்) பிராந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு வரயிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னால் சான்சலர் ஏங்கெலா மெர்கல் மக்களிடம் கொண்டிருக்கும் பலத்தை சோதனை செய்யும் முக்கிய தேர்தலாக இது பார்க்கப்படுகிறது. ஜெர்மானிய சான்சலர் அகதிகளை தாராளமாக அனுமதிக்கும் கொள்கையை அறிவித்து சரியாக ஓராண்டு ஆகியுள்ளது. இந்த முடிவுக்கு விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஏங்கலா மெர்க்கலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சியானது, குடியேறிகளுக்கு எதிரான…

  16. ஜமாத் தலைவர் மிர் காசிமை தூக்கிலிட்டது வங்கதேசம் மிர் காசிம் அலி. | கோப்புப் படம். வங்கதேசத்தில் செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் மிர் காசிம் அலி நேற்று தூக்கிலிடப்பட்டார். சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் கஷிம்புர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். மிர் காசிமின் குடும்பத்தினர் 22 பேரை மட்டும் சிறை அதிகாரிகள் அவரைச் சந்திக்க அனுமதித்தனர். கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெறுவதற்காக கடந்த 1971-ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தின்போது மதவாத ஜமாத் கட்சியினர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அல்-பதார் என்ற ராணுவப்படையை உருகாக்கி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் …

  17. சீனாவின் ஹாங்சௌவில் ஜி20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு உலகின் மிக பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டிற்காக சீனாவின் ஹாங்சௌ நகரில் குழுமியுள்ளனர். உலகப் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் அவர்களின் நிகழ்ச்சிநிரலில் முக்கியமானதாக இருக்கும். நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதில் ஏற்படும் மந்தமான போக்கு சிறிய நாடுகளை அச்சுறுத்துவதாக அமையும் என்று ஐநா செயலாளர் நாயகம் பான் கி மூன் எச்சரித்துள்ளார். இந்த உச்சி மாநாட்டை முன்னிட்டு பருவகால மாற்றம் பற்றிய பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ள அமெரிக்காவையும், சீனாவையும் பாராட்டிய அவர், ஜி 20 நாடுகள் இந்த நாடுகளின் முன்மாதிரியை பின்பற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். …

  18. `நிரந்தர புனிதராகும் அன்னை தெரஸாவை சந்தித்த நிமிடங்கள்' இந்தியாவின் கொல்கத்தா மாநகரில் 19 ஆண்டுகளுக்கு முன்னதாக மறைந்த அன்னை தெரஸா, செப்டம்பர் 4 ஆம் நாள் வத்திக்கானில் நடைபெறுகின்ற பிரமாண்ட திருவழிபாட்டில் கத்தோலிக்கத் திருச்சபையின் புனிதராக அறிவிக்கப்படுகிறார். ஐம்பது ஆண்டுகள் ரோம் நகரில் பிபிசியின் செய்தியாளராகப் பணியாற்றியவர் டேவிட் வில்லே. ரோமின் ஃபியுமுசினோ விமான நிலையத்தில் ஒரு மணிநேரம் அன்னை தெரஸாவை சந்தித்து உரையாடிய நினைவுகளை, உணர்வுகளாகப் பதிவு செய்கிறார். கொல்கத்தாவின் “குப்பத்து மக்களின் புனிதர்” என்று அறியப்பட்ட அன்னை தெரஸா மிகவும் அடக்கமான, எளிமையான, நவீன கால பன்னாட்டுப் பயணி என்பதை அவரைப் பார்த்தவுடனே அறிந்து கொள்ள முடிந்தது…

  19. ஒரே மாதத்தில் 950 கோடி நிதி சேகரித்த ஹிலாரி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் ஆகஸ்ட் மாதம் 143 மில்லியன் டாலர் (சுமார் 950 கோடி இந்திய ரூபா) தேர்தல் நிதி திரட்டினார். இது தொடர்பாக ஜனநாயகக் கட்சி அதிபர் தேர்தல் பிரசாரக் குழு மூத்த அதிகாரி ராபி மூக் தெரிவித்ததாவது, ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் நிதிக்காக 23 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் நிதி அளித்துள்ளனர். சராசரியாக ஒவ்வொரு ஆதரவாளரும் 50 டாலர் தேர்தல் நிதி அளித்துள்ளார். இந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தமாக 143 மில்லியன் டாலர் தேர்தல் நிதி திரட்டப்பட்டது. ஹிலாரியை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கச் செய்ய ஜனநாயகக் கட்சியின் அனைத்துத் தொண்டர்களும் மிகவும் முனைப்பாகச் …

  20. நேதாஜி விமான விபத்தில்தான் இறந்தார்: உறுதிப்படுத்தும் ஜப்பான் அரசு ஆவணம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த விவரங்கள் கொண்ட, ஜப்பான் அரசின் 60 ஆண்டு பழமையான ஆவணம் ஒன்று இணையதளத்தில் வெளி யாகியுள்ளது. அதில், 1945 ஆகஸ்ட் 18-ம் தேதி தைவான் விமான விபத் தில் நேதாஜி இறந்து விட்டார் என்றே உறுதியாக கூறப்பட்டுள்ளது. நேதாஜியின் இறப்பு தொடர் பான முடிவுகள், அப்போதைய சூழ்நிலைகள் மற்றும் ஆதாரங்கள் குறித்த தகவல்களை திரட்டி, தொகுத்தளித்துவரும் பிரிட்டனைச் சேர்ந்த ‘போஸ்ஃபைல்ஸ்’ இணைய தளம் மூலம் இந்த ஆவணம் பொது மக்கள் பார்வைக்கு வெளியானது. ‘நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இறப்புக்கான காரணம் மற்றும் அவரின் இதர விவகா…

  21. உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவ் காலமானார் உஸ்பெகிஸ்தானின் அதிபர் இஸ்லாம் கரிமோவ் காலமானார் என்பதை அந்நாட்டு அரசாங்க தொலைக்காட்சியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் வாழ்ந்த மிகக் கடுமையான சர்வாதிகாரிகளில் ஒருவர் என்று விமர்சகர்களால் வர்ணிக்கப்பட்டவரான அதிபர் கரிமோவின் மரணம் உஸ்பெகிஸ்தானில் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறுண்டதை அடுத்து சுதந்திர உஸ்பெகிஸ்தானின் அதிபராக இஸ்லாம் அப்துகனியேவிச் கரிமோவ் தேர்தெடுக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் மட்டுமே முன்னாள் கம்யூனிஸத் தலைவரான அவரை எதிர்த்து, எதிர்கட்சியைச் சேர்ந்த ஒருவர் இயல்பாக தேர்…

  22. இன்றைய நிகழ்ச்சியில், * இருநூறு கோடி பேருக்கு ஸீகா வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்திருப்பதாக எச்சரிக்கை; இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் ஆப்ரிக்க நாடுகளிலும் கருவிலுள்ள சிசுக்களுக்கு கூடுதல் ஆபத்து. * சிரியாவிலிருந்து தப்ப முயன்ற மூன்று வயது ஆலன் குர்தி கடலில் உயிரிழந்து ஓராண்டு நிறைவு; உலகநாடுகள் அகதிகளுக்கு தம் கதவுகளை திறந்து வைக்கவேண்டுமென அலனின் தந்தை உருக்கமான வேண்டுகோள். * மூளையை பாதிக்கும் அல்சைமர்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியுமென புதிய நம்பிக்கை; இதற்கான மருந்தின் பரிசோதனை முடிவுகள் உற்சாகமளிப்பதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு.

  23. மதராசிப் பட்டணத்தில் சைவமாக இருங்கோ மக்கா. நட்சத்திர கோட்டல்களுக்கு வினயோகிக்க கொண்டுவரப்பட்ட கெட்டுப்போன, நாத்தமடித்த ஆட்டிறைச்சி மாநகர சுகாதார அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மாமூல் வாங்குபவர்கள் கூட மனச்சாட்சிக்கு விரோதமாக நடக்க முடியாத நிலையில் இருந்திருக்கிறது இறைச்சி நிலைமை. நட்சத்திர கோட்டல் இந்த நிலை என்றால், நடைபாதை சாப்பாட்டுக் கடைகள் நிலை? மூலம்: http://www.vikatan.com/now/16548?type=vik_now_self சென்ட்ரலில் 1000 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் சென்னை சென்ட்ரலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கெட்டுப்போன ஆயிரம் கிலோ ஆட்டிறைச்சியை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். இந்த இறைச…

  24. பதினொரு ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ள முதலாவது புயல் கரையை கடந்துள்ளது. ஃபுளோரிடாவின் வளைகுடா கடலோரத்தில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய ஹெர்மைன் என்ற இந்த புயலால் ஏற்பட்டுள்ள உயிர் ஆபத்து பற்றி ஆளுநர் ரிக் ஸ்காட் எச்சரித்திருக்கிறார். அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகளில் ஏற்கெனவே மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடலோரத்தில் வாழும் மக்கள் உள்பகுதிக்கு இடம்பெயர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பள்ளிக்கூடங்களையும், அரசு அலுவலகங்களையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தேசிய பாதுகாப்பு படைப்பிரிவினர் நிவாரணப் பணிகளுக்காக அணிதிரட்டப்பட்டுள்ளனர். http://www.bbc.com…

  25. பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தற்கொலை தாக்குதல்: 11 பேர் பலி பாகிஸ்தானின் வட பகுதியில் இருக்கும் நீதிமன்றம் ஒன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். மார்தான் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் டஜன்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பெஷாவரில் நடத்தப்பட்ட இன்னொரு சம்பவத்தில், கிறிஸ்தவ சுற்றுப்புறப் பகுதி ஆயுததாரிகளால் தாக்குதலுக்கு உள்ளானதாக ராணுவம் தெரிவிக்கிறது. இந்த தாக்குதல் மிக விரைவாக முடியடிக்கப்பட்டது என்றும், நான்கு ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என்றும் ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்தத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் தாலிபன் இயக்கத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.