உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
நாஜிக்களின் சித்ரவதை முகாமில் போப்பாண்டவர் அஞ்சலி நாஜிக்களால் ஒரு மில்லியனுக்கும் மேலான, பெரும்பாலும் யூதர்கள் கொல்லப்பட்ட, போலந்தின் முன்னாள் அவுஸ்விட்ச்-பெர்கன்னாவ் சித்ரவதை முகாமில் பலியானோருக்கு போப் பிரான்சிஸ் அஞ்சலி செலுத்தியுள்ளார். இறைவா! உம்முடைய மக்கள் மீது இரக்கம் வையும். அதிக அளவான இந்த கொடூரத்தை மன்னியும் என்று அந்த முகாமின் விருந்தினர் பதிவு புத்தகத்தில் பதிவையும் அவர் எழுதியுள்ளார். இந்த முகாமிலிருந்து தப்பித்தோர் மற்றும் அவர்களை காப்பாற்ற தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்த போலந்து மக்களை சந்தித்தப் பின்னர், அவர் விஷவாயு கூடங்கள் மற்றும் கல்லறைகளில் நடந்து சென்று மௌனமாக செபித்தார். போலந்து நாடு கிறிஸ்தவ மதத்தை தழுவிய…
-
- 0 replies
- 372 views
-
-
சவுதிஅரேபியாவில் ஜெட்டா நகரை சேர்ந்த பெண் அமீனா அல் ஜெப்ரி (18). இவர் இங்கிலாந்தில் உள்ள ஸ்வான்சீ நகரில் பிறந்தார்.எனவே, மேற்கத்திய பாணியில் நாகரீகமாக வளர்ந்தார். அது அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை. எனவே 16-வது வயதில், வலுக்கட்டாயமாக சவுதி அரேபியாவுக்கு அழைத்து வந்தார்.அங்கு தனது மத கொள்கைகளுக்கு ஏற்றபடி கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி கட்டாயப்படுத்தினார். இந்த நிலையில் அமீனா ஒரு சம்பவத்தில் ஆணுக்கு முத்தம் கொடுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை அவரை 4 வருடமாக வீட்டில் அடைத்து வைத்தார். தலையில் மொட்டையடித்து அவரது அழகை அலங்கோலப்படுத்தினார்.சரிவர உணவு, தண்ணீர் தராமல் கொடுமைப்படுத்தினார். பாத்ரூம் பயன்படுத்தப்படவில்லை. இதற்கிடையே அங்கிரு…
-
- 1 reply
- 412 views
-
-
பெஷாவரில் தலிபான் மற்ற ஜிஹாதிகளின் தாக்குதல்கள் நடப்பது சகஜமாக உள்ளன. பாகிஸ்தானில் உள்ள தாரா நகரில் துப்பாக்கிகள் மிக குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.இங்கு கள்ள மார்க்கெட்டில் ஆயிரகணக்கான துப்பாக்கிக்கள் விற்கபடுகின்றன.மலைகளால் சூழப்பட்ட இந்த நகரில் வசிக்கும் தொழிலாளர்கள் துப்பாக்கிகளை மிக அருமையாக தயாரிக்கும் அனுபவம் கொண்டவர்கள்.இந்நகர் பெஷாவர் நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பிற நாட்டினர் பயன்படுத்தும் நவீன துப்பாக்கிகளை பார்த்தால் கூட, எவ்வித மாற்றமும் இன்றி அதே போன்று இவர்கள் தயாரித்துவிடுவார்கள். இவர்களிடம் இருந்தே பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிகளை விலை கொடுத்து வாங்குகின்றனர், மேலும் மலை சூழ்ந்த இடம் என்பதால் தீவிரவாதிகளுக்கும் இது வசதியாக அமைந…
-
- 0 replies
- 537 views
-
-
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிரேம்குமார், சந்திப்சாரி. எம்.பி.ஏ பட்டதாரிகளான இருவரும் கேளம்பாக்கம், பல்லவன் கார்டனில் தங்கி நாவலூரில் உள்ள தனியார் ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 27ம் தேதி வழக்கம்போல் இருவரும் வேலைக்கு சென்றனர். வேலை காரணமாக பிரேம்குமார் அலுவலகத்தில் இருந்தார். இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்த சந்திப்சாரி, நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் பிரேம்குமாருக்கு போன் செய்த போது அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மறுநாள் சந்திப்சாரி, பிரேம்குமாரை காணவில்லை என்று தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்த அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசியவர், “ பிரேம்குமாரை கடத்தி வ…
-
- 0 replies
- 361 views
-
-
உலக புலிகள் தினம் இன்று (ஜுலை 29). இந்தியாவின் தேசிய விலங்கான புலியைப் பற்றி இந்த நாளில் அறிந்து கொள்வோம். 20 ம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளிலும் விரவிப் பரவியிருந்த புலிகள், மனிதர்களை அதிகம் கவரும் விலங்கினமாக இருந்தது; இருக்கிறது. ஆனால் இன்று அதே மனிதர்களின் பேராசையினால் அருகிவிட்ட விலங்கினங்கள் பட்டியலில் புலி இனம் இடம்பெற்றுவிட்டது சோகம்.தனித்துவமான முகம், கவர்ந்திழுக்கும் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிற கோடுகள் என பூனை இனங்களின் பெரிய விலங்காக விளங்குவது புலி இனம். இந்த இனம் அருகி கொண்டே வருவதை கண்ட விலங்கின ஆதரவாளர்கள் ஒன்று கூடி அதன் அழிவை தடுத்து நிறுத்துவதற்கும், புலிகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டனர். அதன் விளைவாக, 2010 ம் ஆண்டில் ஜுல…
-
- 0 replies
- 673 views
-
-
சென்னை அருகே விமானப்படை விமானம் மாயமானதற்கு நாசவேலை காரணமாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு என்று மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார். புதுடெல்லி: சென்னையில் இருந்து கடந்த 22–ந் தேதி அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படையின் ஏ.என்.-32 விமானம் காணாமல் போனது. அந்த விமானத்தை தேடும் பணி இரவு பகலாக தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடலில் ஒருசில பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக மிதந்த பொருட்களும் எடுத்து ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அவை காணாமல் போன விமானத்துடன் தொடர்பு இல்லாதவை என்று தெரியவந்தது. மாயமான விமானம் பற்றி இத…
-
- 0 replies
- 451 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், *அமெரிக்காவை அனைத்து அமெரிக்கர்களுக்குமானதாக மாற்றப்போவதாக ஹிலரி கிளிண்டன் உறுதிமொழி! *துருக்கி அரசின் அதிரடிக்கைதுகள் தொடர்கின்றன!இராணுவ சதிப்புரட்சிக்கு பின் இருந்ததாக அரசு கூறும் அமைப்பின் பின்னணி என்ன? *சிரியாவிலிருந்து உயிர் தப்ப அகதியாய் கடலில் நீந்தியவர் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்கிறார்! பதக்கம் வெல்லும் கனவு கைகூடுமா?
-
- 0 replies
- 441 views
-
-
சிரியாவில் மகப்பேற்று வைத்தியசாலை மீது விமான குண்டுத்தாக்குதல் 2016-07-29 21:36:20 சிரியாவில் சேவ் த சில்ரன் அமைப்பின் உதவியுடன் நடத்தப்படும் மகப்பேற்று வைத்தியசாலையொன்றின் மீது விமான குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் என தாக சேவ் த சில்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது தெரியவில்லை என அவ்வமைப்பு கூறியுள்ளது. நோயாளிகளின் உறவினர்களே கொல்லப்பட்டுள்ளனர் இந்த வைத்தியசாலையை நிர்வகிக்கும் சிரியா ரீலிவ் அமைப்பு தெரிவித்துள்ளது. இத்லிப் மாகாணத்திலுள்ள இந்த வை…
-
- 0 replies
- 224 views
-
-
ராமாயணத்திலே லட்சுமணன் காயமடைந்து உயிருக்கு போரடிய போது, அனுமார் சஞ்சிவினி மூலிகை சஞ்சீவினி மலையில் இருந்து கொண்டுவந்து லட்சுமணனின் உயிரை காப்பாற்றுவார். ராமாயணத்தில் குறிப்பிடப்படும் சஞ்சிவினி மூலிகை தற்போது இருப்பதற்கான உறுதியான ஆதரங்கள் இல்லை. இந்நிலையில் சீனா எல்லையில் உள்ள இயம மலை பகுதியில் சஞ்சிவினி மூலிகையை கண்டுபிடிக்க ரூ 25 கோடியை உத்தரகாண்ட் அரசு ஒதுக்கியுள்ளது. இது குறித்து அம்மாநில மாற்று மருத்துவத்திற்கான அமைச்சர் சுரேந்திர சிங் நேகி கூறுகையில் “ நாம் முதலில் முயற்சி செய்யவேண்டும். உற்ய்தியுடன் முயற்சி செய்தால் கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.வரும் ஆகஸ்ட் மாதம் முதல் விஞ்ஞானிகள் சஞ்சிவினி மூலிகையை தேடும…
-
- 1 reply
- 570 views
-
-
பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து : உளவுத்துறை எச்சரிக்கை! பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவின் முன்னால் பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர், சுதந்திர தினத்தன்று உரையாற்றும் பிரதமர்கள் அனைவரும் குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்து உரையாற்றுவது வழக்கம். ஆனால் மோடி அதை கடைப்பிடிக்காமல் அந்த கூண்டுக்கு வெளியே உரையாற்றினார். இந்நிலையில் வரும் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்து பேச வேண்டும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகள் தவிர, ஹிஜ்புல் முஜாஹுதீன், லஷ்கர் - இ - தொய்பா, ஜெயிஸ் - இ - முகம…
-
- 0 replies
- 309 views
-
-
ஒரு பக்கம் விமானங்கள் மாயமாவது, கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுவது என பல விபத்துகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஆல்கஹால் அருந்திவிட்டு விமானத்தை ஓட்டும் முன்பே பிடிபட்ட விமானிகளை பற்றி தெரியவந்துள்ள விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் உள்ள விமானிகளிடம், விமானம் ஓட்டச் செல்லும் முன் செய்யப்படும் மருத்துவ பரிசோதனையில், கடந்த மூன்று வருடங்களில் 122 விமானிகள் குடித்துவிட்டு வந்தது தெரியவந்ததாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்திய விமான நிலையங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், மும்பை விமான நிலையத்தில்தான் அதிகபட்சமாக 34 விமானிகள் பிடிபட்டுள்ளனர். அதன்பின் டெல்லியில் 31 பேரும், கொல்கத்தாவில் 18 பேரும…
-
- 0 replies
- 339 views
-
-
கடமைக்குத் திரும்பினார் அங்கெலா மேர்க்கெல் ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், தனது விடுமுறையை இடைநிறுத்திவிட்டு, தனது கடமைக்காக மீளத் திரும்பியுள்ளார். ஜேர்மனியில் அதிகரித்துள்ள தாக்குதல்களைத் தொடர்ந்தே, அவர் இவ்வாறு திரும்பியுள்ளார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்புச் சம்பந்தமான கூட்டமொன்றைத் தலைமை தாங்கிய மேர்க்கெல், அதன் பின்னதாக விடுமுறையில் காணப்பட்டார். அதுவரை, உள்விவகார அமைச்சரான தோமஸ் டி மெய்ஸியாரேயே, நாட்டின் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். பிரான்ஸில் தேவாலயமொன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் இரண்டு பாதிரியார்கள் கொல்லப்பட்ட நிலையில், அந்த இடத்துக்கு பிரான்ஸ் ஜனாதிபதி பொஸ்வா ஒலாண்டோ சென்றிரு…
-
- 0 replies
- 217 views
-
-
போகிமான் கோ விளையாடிய கனேடிய இளைஞர்கள்; சர்வதேச சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்காவில் கைது போகிமான் கோ (Pokemon Go) எனும் ஸ்மார்ட்போன் கேம் விளையாட்டில் தீவிரமாக கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் சர்வதேச விதிகளை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவைச் சேர்ந்த இவ்விருவரும் போகிமான்களைத் தேடிக் கொண்டு படகொன்றின் மூலம் ஏரியொன்றில் சென்று கொண்டி ருந்தனர். இதன்போது இவர்கள் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்துவிட்டனராம். கனேடிய எல்லையிலுள்ள அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மொன்டனாவிலுள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினர் இவ்விரு இளைஞர்க…
-
- 0 replies
- 294 views
-
-
சிரியாவில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் அலெப்போ நகரை விட்டு மக்கள் வெளியேற சிரியா ராணுவத்துடன் சேர்ந்து மனிதநேய பாதைகளைத் திறக்க உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.அலெப்போ நகரிலிருந்து போராளிகளும் வெளியேற வேண்டும் என்று ரஷியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கி ஷொய்கு தெரிவித்துள்ளார்.போராளிகள் வசமிருந்த அலெப்போ நகரரின் கிழக்கு பகுதிக்கு செல்லும் அனைத்து பாதைகளையும் சிரியா ராணுவம் துண்டித்துவிட்டதாக அறிவிப்பு வெளியான அடுத்தநாள் ரஷியாவின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பு தொண்டு நிறுவனங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆனால், சிரியாவுக்கான ஐ.நா தூதர் ஸ்டெப்பன் டி மிஸ்டுரா, இதுகுறித்து தன்னிடம் ஆலோசிக்கவில்லை என்கிறார். பொதுமக்களுக்…
-
- 0 replies
- 264 views
-
-
குடியேறிகளுக்கு கட்டுப்பாடு வருமா?: ஜெர்மன் சான்சலர் பதில் ஜெர்மனியில் சமீபத்தில் தஞ்சம் கோரி வந்தவர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், குடியேறிகளை வரவேற்கும் தன்னுடைய கொள்கையை கைவிட முடியாது என ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கல் கூறியுள்ளார். ஜெர்மனியில் குடியேறிகளாக வந்த இருவர், இஸ்லாமிய அரசு என அழைத்துக் கொள்ளும் அமைப்பின் பெயரில் தாக்குதல் ஒன்றை நடத்தியதன் மூலம், அவர்களுக்கு ஆதரவளித்த நாட்டை கேலி செய்துள்ளனர் என்று மெர்கல் கூறியுள்ளார். ஜெர்மனியில் பாதுகாப்பை உறுதிசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக கூறியுள்ளார். ஆனால், ஜெர்மனியின் வெளிப்படையான கலச்சாரத்தை தீவிரவாதிகள் குறைத்து மதிப்பீடு செய்வதை அனுமதிக்க முடியாது என மெர்கல் கூறியுள…
-
- 1 reply
- 428 views
-
-
3500 அடி மலை உச்சியின் பாறை சரிவில் காரை நிறுத்திய சவூதி இளைஞர் - பொதுவாக சவூதி விமான பைலட்டுகள் உலகிலேயே துணிச்சல் மிக்க விமானிகளாக அறியப்படுகின்றனர். அதுபோல் பல சவூதி இளைஞர்களும் தங்களுடைய வாகனங்களை கொண்டு பல அசட்டுத் துணிச்சல் சாகசங்களில் ஈடுபடக் கூடியவர்' என்பது பரவலாக அறியப்பட்டதே. இப்படி சாகசம், துணிச்சல் என்ற பெயரில் உயிரோடு விளையாடும் இளைஞர்கள் பிடிபட்டால் ஜெயில் தண்டனை அல்லது கட்டாய ராணுவ சேவையில் தள்ளப்படுவார்கள். அதிலும் இன்றைய காலம் நயாப் பைசாவுக்கும் புண்ணியமில்லாத 'சோஷியல் மீடியா லைக்குகளுக்கு' அலையும் காலமிது. அதன் படி சவூதி இளைஞர் ஒருவர் 3500 அடி உயர ஒருவர் ஃபிபா மலையுச்சியின் சரிவான பாறையில் கொண்டு போய் தன்னுடைய காரை நிறுத்த…
-
- 1 reply
- 757 views
-
-
துருக்கி : ஊடகங்கள் மீதான பிடி இறுகுகிறது இருவாரங்களுக்கு முன்னதாக தோல்வியில் முடிந்த இராணுவ சதிப்புரட்சியை அடுத்து எதிரிகளை ஒடுக்கி வருகின்ற துருக்கிய அரசாங்கம், நூற்றி முப்பதுக்கும் அதிகமான தொடர்பு ஊடக நிறுவனங்களை மூடியுள்ளது. தோல்வியில் முடிந்த சதியின் பின்னணியில் இருந்ததாக கூறப்படும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட, தடைசெய்யப்பட்ட மதகுருவான பெத்துல்லா குலனுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக பல பிரசுர நிறுவனங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மீது தொண்ணூறு, பிடி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை இராணுவத்தை மீள்கட்டமைப்பு செய்வதற்கான கூட்டம் ஒன்றுக்கு சற்று முன்னதாக இரு உயர…
-
- 1 reply
- 284 views
-
-
பீஜிங், சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் அதில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் தொடர்ந்த வழக்கில், ஐ.நா. சட்ட திட்டத்தின்படி செயல்படும் சர்வதேச தீர்ப்பாயம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், ‘‘தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை’’ என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீர்ப்பை சீனா நிராகரித்து விட்டது. இந்த நிலையில் ரஷியாவுடன் தென் சீனக்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடப்போவதாக சீனா அறிவித்துள்ளது. இந்த பயிற்சிகள் வரும் செப்டம்பர் மாதம் நட…
-
- 0 replies
- 452 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * துருக்கியில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறதா? தோல்வியில் முடிந்த இராணுவ சதியைத்தொடர்ந்து நூற்றி முப்பத்தியோரு ஊடகங்களை அதிகாரிகள் மூடியதால் அதிகரிக்கும் அச்சம். * "அமெரிக்க அதிபராக வருவதற்கு அதிகபட்ச தகுதியுடையவர் ஹிலரி கிளிண்டன்"; அங்கீகரித்து, ஆதரவளித்து பாராட்டினார் அதிபர் ஒபாமா. * ரியோ ஒலிம்பிக் போட்டிகளையொட்டி அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள்; பயங்கரவாத தாக்குதலே தனது மிகப்பெரிய கவலை என்கிறார் பாதுகாப்புப்படையின் தலைவர்.
-
- 0 replies
- 580 views
-
-
ஆணாதிக்க சிந்தனை கொண்டவையா அமெரிக்க ஊடகங்கள்? அமெரிக்க வரலாற்றில் ஒரு பெரிய அரசியல் கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட நியமனம் செய்யப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை அண்மையில் ஹிலரி கிளிண்டன் பெற்றார். ஆனால், இது குறித்த செய்திகளை தாங்கி வெளிவந்த அமெரிக்காவின் பல்வேறு நாளிதழ்களிலும், முதல் பக்கத்தில் ஹிலரிக்கு பதிலாக அவரது கணவர் கிளிண்டன் இடம் பெற்றுள்ளது ஏன்? செய்தித்தாள்களின் முன்பக்கத்தில் பில்கிளிண்டனுக்கே முக்கியத்துவம் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகும் பல நாளிதழ்களும், ஹிலரி கிளிண்டனின் புகைப்படங்களுக்குப் பதிலாக, அவரது கணவரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான பில் கிளிண்டன் அல்லது அமெரிக்க அதிபர் பதவிக…
-
- 0 replies
- 490 views
-
-
இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் ஐ.எஸ். ஆதரவு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.துபாய் - கோழிக்கோடு இடையே இண்டிகோ விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இண்டிகோ விமானம் இன்று துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் திடீரென எழுந்து நின்று ஐ.எஸ். ஆதரவு கோஷமிட்டதால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கோழிக்கோடு சென்ற விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் வந்து சம்மந்தப்பட்ட நபரை கைது செய்தனர். தொடர்ந்து அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=162435&category=…
-
- 1 reply
- 286 views
-
-
தீவிரவாதிகளை ஒடுக்க பிரான்ஸில் புதிய பாதுகாப்புப் படை தீவிரவாத தாக்குதல்களிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற தேசிய பாதுகாப்பு படை ஒன்று உருவாக்கப்படும் என்பதை பிரஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே தங்களிடம் உள்ள படையினரை கொண்டு இந்த புதிய படை ஆரம்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைகள் செப்டம்பரில் தொடங்க உள்ளது. போலிஸ் உதவிப் படைவீரருக்கு அதிக அளவிலான தன்னார்வலர்கள் சேரும்படி விடுக்கப்பட்ட கோரிக்கையை தொடர்ந்து அதிபரின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. பிரஞ்சு புரட்சி தொடங்கிய போது, கடைசி பிரஞ்சு தேசிய பாதுகாப்பு படை குழு அமைக்கப்பட்டது. 1872ல் அது கலைக்கப்பட்டது குறிப்பிடத்…
-
- 0 replies
- 297 views
-
-
குடியேறிகளின் ஆபத்தான கடல் பயணத்தை தடுக்க இத்தாலி புதிய முயற்சி வடக்கு மற்றும் மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து வரும் குடியேறிகள் ஐரோப்பாவிற்கு செல்ல மத்திய தரைக்கடலில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதை தடுக்க, இத்தாலி அரசு பன்முக ஊடக பிரசாரத்தை தொடங்கியுள்ளது. குடியேறிகள், மக்களை சட்டவிரோதமாக பயணம் மேற்கொள்ள வைக்கும் நபர்கள் பற்றியும் ஆபத்தான முறையில் ஒரு பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு கடந்து செல்வது குறித்துமான ஆபத்தான தங்களது அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ள இணையம், தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் சமூக வளைதலங்களை பயன்படுத்தி வருகிறது. 1.5 மில்லியன் டாலர் மதிப்பிலான இத்திட்டம் குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்…
-
- 0 replies
- 169 views
-
-
ஜேர்மனி நாட்டில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் இருந்து தப்பிய நோயாளி ஒருவர் வணிக வளாகம் ஒன்றிற்குள் புகுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடமேற்கு ஜேர்மனியில் உள்ள Bremen நகரில் மனநல மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது.பொலிசாரிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக 19 வயதான அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த மருத்துவமனையில் கடந்த ஞாயிறு அன்று அனுமதிக்கப்பட்டார். ஆனால், நேற்று காலை நேரத்தில் மருத்துவமனையில் அந்த மனநோயாளி தப்பிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. மனநோயாளி தப்பியபோது அவரை பிடிப்பதற்காக மருத்துவர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். அப்போது, ‘என்னை நெருங்கினால் கொன்றுவிடுவேன்’ என மனநோயாளி மருத்துவரை கடுமையாக எதிர்த்துள்ளார்.சி…
-
- 0 replies
- 263 views
-
-
சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சறுக்கு விளையாட்டின்போது மகனின் கண் முன்னால் ஆழமான பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர் தனது மகன் மற்றும் தந்தையுடன் சுவிஸில் உள்ள Plateau du Couloir என்ற பகுதியில் நேற்று பனிச்சறுக்கு விளையாட சென்றுள்ளார். அதிகாலையில் சென்ற அவர்கள் மூவரும் உற்சாகமாக விளையாடி விட்டு சில மணி நேரங்களுக்கு பிறகு கீழே இறங்கியுள்ளனர்.சுமார் 3,500 அடி உயரத்தில் மூவரும் வந்துக்கொண்டு இருந்தபோது, 52 வயதான நபரின் பனிச்சறுக்கு சாதனத்தில் இருந்து ஒரு கம்பி கீழே விழுந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியுற்ற அவர் அந்த கம்பியை எடுப்பதற்காக திரும்ப அந்த இடத்திற்க…
-
- 0 replies
- 303 views
-